domenica 31 gennaio 2010

புலிகளின் தலைவர் பிரபாகரன் பத்திரமாக உள்ளார் – அருகன்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் பத்திரமாக உள்ளார் – அருகன்.

vp1228_thumb பிரபாகரனின் பெற்றோர், மற்றும் பல முக்கிய புலி உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள் பிரபாகரனின் தந்தையின் மரணம் மட்டும் மறைவாக இருந்து, காலப்போக்கில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரசியல் வித்தகராக தனது காய்களை நகர்த்திய மகிந்தா தொடர்பில் ஒரு முக்கிய சந்தேகம் எளாமல் இல்லை. அரசினால், இறுதிக்கட்ட போரில் யார் கைது செய்யப்பட்டனர், யார் யார் கொலை செய்யப்பட்டனர், யார் யார் தற்கொலை செய்து கொண்டனர்… என்பன போன்ற பல விடயங்கள் சந்தேகத்திற்குள்ளானவையல்ல மாறாக வெளியிடப்படாதவை.

இந்த வகையில், சரத்திற்குத் தெரியாமலே மகிந்த பல இராணுவ நகர்வினை மேற்கொண்டிருக்கின்றார் என்பது இத்தால் புலனாகின்றது. இத்தனை மேடைப்பேச்சிலும் பிரபாகரனின் மரணத்தைப்பற்றியோ அல்லது, இறுதிக்கட்டத்தின் நிகழ்வு பற்றியோ பெரிதும் வெளிவிடாத சரத்திடம் பெரும் இரகசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழர்களை ஏமாற்றவே  சரத்தினுடைய இத்தகை போலிய நாடகம் என்பது புலப்படுகின்றது. இந்தநிலையில் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடிய விடயம் என்ன வென்றால், புலிகளின் தலைவர் அரசிடம் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளார் என்பதே இப்போதுள்ள சந்தேகமாக காணப்படுகின்றது.

இதன் காரணமே பிரபாகரனின் மரணச்சான்றிதழை (பிரதியினை) இந்தியாவிடமோ, அல்லது பெற்றோரிடமோ, அல்லது அவரின் உறவினரிடமோ, அல்லது ஊடகங்களுக்கோ அறிவிக்காமை என்பது புலனாகின்றது.

தமக்கு வேண்டிய பல தகவல்களை புலிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளவே இந்தபிரபாகரனின் மரணச்சான்றிதழ் தொடர்பான  பின்னடைவு என்பதே உண்மையின் வெளிச்சம்.

மேலும் கே.பி.யின் தகவலும் மறைவாகவே இருக்கின்றன… மற்றும் பல விடயங்களை மகிந்தவின் குடும்ப அரசியலில் சிக்குண்ட இலங்கையில், அவருடைய அனுமதியின்றி எவ்வாறான தகவலும் வெளிவராது என்பது அப்பட்டமான உண்மை.

பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்வதற்குக்கூட பெற்றோரை அழைத்துச் செல்லவில்லையே!!! அது ஏன்??? அல்லது கைதான மற்றைய புலிகளின் முக்கிய உறுப்பினர்களை அழைத்துச் செல்லவில்லையே!!!??? அது ஏன்??? மேலும் அவருடைய உறவினர்கள் கூட கைது செய்யப்பட்டு விடுவிக்கவும் பட்டுள்ளனர் அவர்களைக்கூட அழைத்துச்செல்லவில்லையே!!!

இதன் காரணத்தால்தான் இவ்வாறு ஒரு சந்தேகம் எழுகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரன் அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக, மிக மறைவாக உள்ளார்.

இவ்வாறான மர்மங்கள் சரத்திற்குக்கூட மறைவாக இருந்ததன் காரணமே அரசுடன் முறன்பட நேரிட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு வேளை மகிந்த தோல்வியடைந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்??? தொடரும்…

Nessun commento:

Posta un commento