lunedì 28 giugno 2010

ஆயுதப்போராட்டத்தின் அடுத்த கட்ட பரினாமத்திற்கு உந்துகோலாக "மிஸ்டர் மகிந்த" அரசு அத்திவாரமிட்டு கொடுத்துள்ளது.

anna-sinthanai-nerudal 2010ல் புலிகள் சிதைவுற்று இருப்பதென்னவோ உண்மையே! ஆனால் அது தற்காலகச் சிதைவேயொழிய நிரந்தரமானவையல்ல! "ஒரு முனைப்போரால்" இத்தைகாலமும் புலிகள் தமிழர்களுனக்காகப் போராடியது வரலாறாக இருக்கின்றபோது, இனி சர்வதேச ரீதியில் "பல்முனைப்போரால்" இலங்கை அரசு திணறும் அளவிற்கு “அறிவுத் தாக்குதல்“ நடக்கத்தான் போகின்றது. அது ஆயுதத்தாக்குதலிலும் பார்க்க மிகக்கோரமான தாக்குதலாக இலங்கைச் "சிங்கள அரசு" சந்திக்கத்தான் போகின்றது.

"புலிக்கு காட்டிலும் போர்க்களத்திலும் வேலை இருக்கோ இல்லையோ இனி நாட்டிலும் அரசியலிலும் வேலை அதிகமாகவே இருக்கு" என்பதனை இலங்கை அரசு மிக தெளிவாகப் புரிந்து கொள்ளத்தான் போகின்றது. புலி பாய்ந்ததையும் பதுங்கியதையும் பார்த்த இலங்கை அரசு அவர்களின் தந்திரத்தையும் சர்வதேசத் தாக்குதலையும் பார்க்கும் படி இலங்கை அரசே தூண்டி விட்டிருக்கின்றது.
புலிகளை சர்வதேசத்திற்கு மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தியதே இலங்கை அரசுதான் என்றால் அது மிகையில்லை… அமேரிக்கா குண்டு வெடிப்பிற்கும் புலிகளுக்கும் முடிச்சுப் போட்ட அந்தக்காலத்து "சந்திரிக்கா" அம்மையாரே புலிகளின் சிறப்பையும், புலிகளையும் அவர்களின் போக்கையும் சர்வதேசத்திற்கு அறிமுகம் செய்துவைத்தார்.
அப்போது புலிகளின் ஆயுதப்பலமே தமிழீழத்தை பெற்றெடுக்கப் போதுமானதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இலங்கையினை அண்மித்த நாடுகளின் திடமற்ற போக்குகள்… மற்றும் புலிகளின் "உரிமைப்போரை" மற்றைய நாட்டுத் தீவிரவாத போருடன் ஒப்பிட்டமை, போன்ற விடயமே புலிகளை அழிப்பதற்கு அயல்நாடுகள் கங்கணம் கட்டியது.

அந்தவகையில் ஆயுதப்போராட்டத்தின் அடுத்த கட்ட பரினாமத்திற்கு உந்துகோலாக "மிஸ்டர் மகிந்த" அரசு அத்திவாரமிட்டு கொடுத்துள்ளது. அதாவது, ஆயுதப் போராட்டம் வஞ்சகங்களால் நசுக்கப்பட்ட போதிலும், அது புலிகளுக்கு ஒரு பாடத்தைக்கற்றுக் கொடுத்திருக்கின்றது. அந்த கற்கையின் முறைப்படி அடுத்த கட்ட நகர்வுகளை எடுத்து, முன்பிலும் பார்க்க பலத்துடன் பக்க ஆதரவுடன் மாற்று வடிவப்போர் தொடங்கும். ஆயுதத்தால் அடித்த அடியிலும் பார்க்க இலங்கை அரசு கதிகலங்கக்கூடிய பாரிய இடியாக அது இலங்கை அரசின் தலையைத் தாக்கப்போகின்றது.

இலங்கை அரசின் சூழ்ச்சிக்குள் சில தமிழர்கள் விலைபோனதன் காரணமே புலிகளின் தோல்விக்கு முக்கிய பின்னணி எனலாம். ஏரித்திரியா போன்ற பல இடங்களில் இருந்து உட்புகவேண்டிய தொடர்புகள் அறுபட்டதன் காரணம் வன்னிப்பேரவலத்தை மக்களும், புலிகளும் சந்திக்க நேர்ந்தது. அந்த வஞ்சகங்கள் திடமாகவும் தலைநிமிர்ந்தும் இன்று நடைபோடலாம் அரசில் ஆட்சியிலும் அமரலாம் அதில் மாற்றமில்லை. ஆனால், வன்னிப்பேரவலத்தின் ஆத்மாக்களின் சாபமும், அவர்களின் ஓலமிட்ட அழுகுரலும், மரண வேதனைகளும் அவர்களை நிம்மதியான வாழ்வை பெற்றுக்கொடுக்கத்டையா இருக்கும்.

இருள் ஒன்று, பகல்கொண்ட விடிவில் முடிவடையுமே ஒழிய, இருளோடே தொடராது… அது போல தோல்விகளையே புலிகள் சந்திக்காதவர்கள் இல்லை, தோல்விகளில் தோய்ந்து தோய்ந்தே புலிகளில் பலம் ஓங்கி உலகெல்லாம் ஒலித்தது. புலிகளை முன்பிருந்ததிலும் பார்க்க பலமாகக்கொணரக்கூடிய வல்லமை தமிழர்களுக்கு இன்னும் இருக்கின்றது. சிங்கள இனம் பெருந்தொகையினராக இருக்கலாம், சிங்கள இனம் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் குரல் ஓசையிலும் பாக்க சிறுபான்னையாக இருக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல்கொடுத்தால் உலகத்தின் மனித நடமாட்டம் இல்லாத பனிப்பாறைகள் மட்டும் எதிரொலிக்கும்…

இன்னமும் தமிழர்கள் புலிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை இழக்கவில்லை, தலைவன் இருக்கிறானோ இல்லையோ அவன் திட்டத்தை வல்லுவாக வகுக்கக்கூடியவன் என்பதனை இந்திய வல்லரசின் றோவினர் நன்கு அறிவார்கள். பெருந்தொகையான ஆயுதத்தைக் கொட்டி கொட்டி இந்தியாவிடம் கையளித்தபோதிலும், அந்த இந்தியாவையே எதிர்த்துப்போராடும் அளவிற்கு மேலும் ஆயுதம் புலிகளிடம் எங்கிருந்து, எப்படி வந்தது என்று சிந்திக்கவேண்டும். எனவே தலைவனின் இறுதித் திட்டம் விதைக்கப்பட்டிருக்காமல் அவன் இந்த பூமியை விட்டு போயிருக்க மாட்டான்.

இந்த நேரத்தில் சுதுமலை பிரகண்டனத்தை நினைவூட்டுகின்றேன்… தனது திட்டம் எத்தகையது என்பதனை அக்குவேறு ஆணிவேறாகத் தொகுக்கக்கூடியவன் என்ற வகையில் அவன் இறப்பினும் அவன் ஆழுமை நிலைக்கக்கூடியது என்பதால் புலிகளின் பலம் ஓயப்போவதில்லை!

புலிகளின் சர்வதேசப்பலத்தை வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை, போராட்டம் ஆரம்பிக்கபட்ட பின்பே சர்வதேச பலம் புலிகளுக்கு அதிகரித்தது. நாமறியாமல் புலிகளுக்கு சர்வதேசத்தின்  பல விடயங்கள் இன்னமும் இயங்கியே வருகின்றன. விளக்கெண்ணையினை கொழுத்திவிட்டு இருக்கின்ற இந்தியக்கடல் எல்லைக்குள் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியாதளவிற்கு அவர்களுடைய போக்குவரத்து இருந்ததென்றால் அவர்களின் செயற்பாட்டையும் திட்டத்தையும் அணுகுமுறையினையும் என்ன வென்பது.       

இன்று புலிகளின் பிளவு தமிழர்களின் பின்னடைவென்பதனை சிங்கள அரசு கைகொட்டிச் சிரிக்கின்றது. தமிழ்க்குழந்தைகளின் சின்னஞ்சிறு சிரசில் சிங்கள இராணுவத்தின் பாதரட்சைகள் பதியும் அளவிற்கு கோரதாண்டவம் நடைபெற்ற போதிலும் சர்வதேசத்தின் கண்கள் தூங்கியே இருந்தது. ஆனால் அந்த வடு உயிரோட்டம் உள்ள தமிழர்களின் நெஞ்சில் அணையா கொதிக்குழம்பாய் எரிமலைதீப்பிளம்பாய் முட்டி நிற்கின்றது. அதன் வெடிப்பு காலம் வரும்போது பிரதிபலிப்பு என்னவென்பதனை இலங்கை அரசு புரிந்து கொள்ளத்தான் போகினக்றது.

"சிங்கள அரது எதை எமது பலவீகனம் என்று கருதியுள்ளதோ அதுவே தற்போது எமது பலம்."

அதாவது, தமிழர்கள் ஆளாளுக்காளஆ பிரிந்திருக்கின்றார்கள்! புலிகள் உட்பிளவில் சரிந்திருக்கின்றார்கள்!! அமைப்புக்கள் சிதைவடைந்து கிடக்கின்றன!!! இலங்கையில் இருந்த தமிழீழப் போராட்த்தை புலத்தில் ஓடவைத்துவிட்டோம் என்று வீராப்பு கொட்டுகின்றன!!! தமிழர்களுக்கிடையிலான ஒற்றுமையினையும் சமரச தொடர்புகளையும் செயலிழக்கச் செய்து விட்டதாக பகற்கனவு காணுகின்றது!!!… ஆகால் அது வே தமிழர்களின் பெரும் பலத்தை உருவாக்கக்காரணமாக அமையப்போகின்றது. இன்று இணையங்கள், அமைப்புக்கள், தமிழர்களின் செயற்பாடுகள் போன்றன சர்வதேசத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ஒரு நெல்விதையில் இருந்து பெறப்படுகின்ற நெல்மணிகள் அந்த ஒன்றை விட அதிகமானது, ஒரு மூட்டை நெல்லை விதைத்து ஒவ்வொரு நெற்கதிரும் கொடுக்கின்ற பலனைப்பார்க்கும் போது ஏராளமான நெல்மணிகள் பலமூட்டைகளில் சேர்க்கப்படுகின்றதைப்போல், ஆங்காங்கே சர்வதேச அரசியலில் கால்பதிப்பதற்கு இன்றுள்ள நிலை எமக்குச் சாதகமாகவே இருக்கின்றது…

ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது தமிழர்களின் அனைத்து சிதறுண்ட பாகங்களும் இணையும் அது இலங்கை அரசின் பலத்திலும் அதிகமாக சக்திவாய்ந்ததாக உருவெடுக்கும். அந்த சந்தர்ப்பம் மிக விரைவில் வெளிப்படும்.    

இயேசு கிறீஸ்துவை ஒழித்துக்கட்டினால் அவருடைய போதனை ஒழிந்து விடும் என்று அன்றைய அரசு நினைத்தே அவரை சிலுவையில் அறைந்தனர். ஆனால் அந்தச்சிலுவையே உலகத்தின் பெரும் சமயத்தின் சின்னமானது!!! அவருடைய மரணத்தின்பின்னர் 12 அப்போஸ்தலருடன் புறப்பட்ட பயணம் 120 சீடர்களாகி... இன்று உலகத்தையே ஆட்கொள்ளவில்லையா? அது எப்படி சாத்தியமானதோ அப்படியே தமிழர்களின், புலிகளின் திட்டம் ஒருபோதும் தவிடுபொடியாகாது. பன்னிரெண்டு பேர்கொண்ட அந்த திட்டம் உலகையே ஆட்கொண்டதென்றால், உலகையே ஆட்கொண்டுள்ள தமிழர்களாலா இலங்கையை ஆட்சியெச்ய முடியாது???

சிங்கள இராணுவம் தமிழினத்தின் மேல் சிந்திய இரத்தக்கறை, சரித்திரத்தில் அழிவா வடுவை அந்த இனத்திற்கே கொண்டு சேர்த்திருக்கின்றது. சூழ்ச்சியை சூழ்ச்சியாலேயே வெல்லமுடியும். தந்திரத்தை தந்திரத்தாலே வெல்லமுடியம்… ஆனால் பலம்பொருந்திய எதிரியை பலத்தால் அழிப்பதிலும் பார்க்க சாணக்கியத்தால் அழிப்பதே தலைசிறந்தது. சிங்களவர்கள் அடித்த அடியில் புலி அடியோடு பலி என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சுணாமிபோல், பூமியே அதிரும்படி சர்வதேசத்தாக்குதலை எதிர்பாராத நேரத்தில் சிங்களம் சந்திக்கப்போகின்றது... உட்கசப்புகள் நிகழ்ந்தமையால் ஏற்பட்ட பின்னடைவு அதே சர்வதேசத்தில் இருந்து இனித்தாக்கப் போகின்ற தாக்கத்தால் சிங்கள அரசே நிலைகுலையும் அளவிற்கு பலமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகின்றது என்பது மறைக்கப்பட்ட செயற்பாடுகள்.

இறுதி யுத்தம் என்று இலங்கை அரசால் வர்ணிக்கப்படுகின்ற தமிழர்களின் அவலம் அந்த அரசிற்கே அவமானம் என்பதனை உணர மறுக்கின்றது. ஒரே தேசத்திற்குள் இருக்கும் இனத்தை தீவிரவாதம் என்ற போர்வையில் லட்சக்கணக்கான தமிழர்களை நீங்காத பாதிப்பிற்குள் கொண்டுசென்றமை சிறப்பான செயலோ? ஒரு நாட்டில் குடிமக்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாத வகையிலே குற்றச் செயல்களைக் கழையவேண்டுமே ஒழிய, இயலாமை காரணத்தால் ஒரு எதிர்ப்பை சமாளிக்க ஒரு தேசத்தையே அழித்து அதில் தனது கொடியை ஏற்றுவது ஒரு சிறப்பான விடயமோ???

இன்றுவரை தமிழர்களுக்காக போராடிய புலிகளும் சரி, மற்றைய முன்னைய போராட்ட அமைப்புக்களும்சரி தமது உரிமைக் கோரிக்கைகளுக்காக  இலங்கை அரசை எதிர்த்ததே ஒழிய சிங்கள மக்களை அழித்ததாகச் சரித்திரத்தில் இடமே இல்லை! அந்தவகையில் புலிகளின் பால் மனிதாபிமானம் செறிந்தே கிடக்கின்றன. புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சர்வாதிகாரப்போக்கையும் தவறான ஆட்சியாளர்களையும் எதிர்த்திருந்ததே ஒழிய சாதாரண சிங்கள குடிமக்களை அழிப்பதற்கு கங்கணம் கட்டவில்லை. சில சிங்களக்காடையரின் போக்கில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நீங்காப்பகையினை ஏற்படுத்த மேற்கொண்ட ஆரம்ப செயற்பாடே இன்று சிங்கள மக்களையே தமிழர்கள் அரக்கரைப்போன்று பார்க்கத்தோன்றியுள்ளது…

பொறுத்திருங்கள் மாற்றம் விரைவில் வநற்தே தீரும்... அருகன்.

giovedì 17 giugno 2010

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின் பக்கங்களும்...” தொடர் பக்கங்கள்....பாகம்2

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… – பாகம்1 (பாகம் ஒன்றை வாசிப்பதற்கு இதனை அழுத்தவும். )

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின்  பக்கங்களும்...” தொடர் பக்கங்கள்....பாகம்2

015 சிங்களவர்களின் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்பதற்கும், அவர்கள் இலங்கையினை ஆண்டார்கள் என்பதற்கும் சான்றுகள் உள. ஆயினும் சிங்களவர்கள் தமது வரலாற்றைத் தக்கபடி நிலைநாட்டிக்கொண்டார்கள். தமிழர்கள் நாமோ, அதனை அன்னியன் கையில் கொடுத்துவிட்டோம்.

martedì 15 giugno 2010

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். - பாகம்1

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன்.

vaddu “இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக்கொண்டுசென்ற தமிழர்களின் பக்கங்களும்...” தொடர் பக்கங்கள். 

முன்னோட்டங்கள்…

ஒரு இனத்தின் வரலாற்றையே அதிரடியாய் மாற்றிய பெருமை சிங்கள அரசையே சார்ந்து நிற்கின்றது… ஒரு இனத்தையே அழிவு கொடுத்து அடியோடு இடிந்து விட்டநிலையில் தமிழ்ச்சமுகம் ஏங்கிநிற்கின்றது. தமிழ் மொழி எங்கெல்லாம் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், தீக்களிப்புக்கள் என்றெல்லாம் எமது ஆதங்கங்களைக்காட்டியும் இழப்புக்கள் அதிகரித்ததேஒழிய நிறுத்துப்படவும்இல்லை நிரந்தரத்தீர்வும் வரவில்லை… !!!