venerdì 24 settembre 2010

இலங்கைத் தூதராலய நடமாடும் சேவை 2010

UNGA Mobile Servis 009 இலங்கை தூதராலயத்தில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யத்தேவையிருப்போர்கள் கவனத்தில் கொள்ளவும்.

இந்த மாதக் கடைசியில் "றெஜிஜோ" மாவட்டத்தில் தமிழர்கள் தமது ஆவணத்தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ஆயத்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. எனவே அதற்கான முன் ஆயத்தங்களை தமிழர்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், ஆவணங்களை மீழப் பெறத்தேவையிருப்போர்கள் முன்கூட்டி தமது தகவல்களை அறிவித்து அன்றையதினம் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றீர்கள்.

UNGA

அறிவிதல் 2010/0021

venerdì 17 settembre 2010

புலிகளின் இழப்பை புலத்திலிருந்தே தமிழழ் அரசியல் வாதிகள் மீட்டுக்கொள்ள வேண்டும்… அருகன்

cameradeideputatiaulabig22 கடந்த முப்பது வருடத்தில் இலங்கை அரசு கைக்கொள் ளாத தந்திரங்களை இப்போது கைக்கொண்டு வருகின்றது. அதுவாகில், இத்தனை வருடமும் அரசியல் வாதிகளுக்கும் சமூகத்தில் அந்தஸ்து உடையவர்கள் என்று கருதப்படுவோருக்குமே (கல்வி, சேவை, அறிவு) அவைகளில் முன்னிருப்புக்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுக்காலத்தில், புலிகள் அங்கத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. பிரதம விருந்தினராக தளபதிகள் என்று அழைக்கப்பட்டவர்களே இருத்தப்பட்டனர். சீருடை தரிக்காலிட்டாலும் இது ஒரு இராணுவ அதாவது ஆயுதக்கட்டமைப்பிலேயே கட்டப்பட்டிருந்தது. அதே போக்கை இன்று இலங்கை அரசும் கைக்கொண்டு எந்த நிகழ்ச்சியானாலும் அது இராணுவ தலையீடில்லாமலும் பௌத்த தலையீடு இல்லாதமலும் இடம்பெற மாட்டாது என்றாகிவிட்டது. இந்த “படிப்பினையினை சிங்களவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகளே???” இதன் காரணமே இராணுவத்தினர் இன்னும் தமிழழ்ப்பிரதேசங்களில் இருந்து அகற்றப்படவில்லை.

venerdì 10 settembre 2010

ஆதிக்க வெறியர்களுக்கான அச்சுறுத்தல்

ஆதிக்க வெறியர்களுக்கான அச்சுறுத்தல் இவ்வாறு தேவைப்படுகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட மக்களையெண்ணி கண்ணீர் பெருகாமல் இல்லை!!!!

martedì 24 agosto 2010

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்தது எவ்வாறு? சிங்கள இணையம் பரபரப்புத் தகவல் tamil.cnn

 

 

புதன், 25 ஆகஸ்ட் 2010 04:53

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்தது எவ்வாறு? சிங்கள இணையம் பரபரப்புத் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்திற்கு தனது எதிரணியினரான கஸ்ரோ குழுவினரே காரணம் என கே.பி.என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கூறிய போதிலும் கே.பியின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டு பிடிக்க முடிந்ததாக இராணுவத்தின் உயர் மட்டத் தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரபாகரன் உயிரிழந்து விட்டதாகவும் இதனால் யுத்தம் முடிவடைந்து விட்டது என 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இராணுவத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தனர்.

மே 16ஆம் திகதி அதிகாலை இராணுவப் பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு செல்லும் நோக்கில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, தீப்பற்றி எரிந்த அம்புலன்ஸ் வண்டியில் இருந்த சடலம் பிரபாகரனுடையது என படையினர் எண்ணியதே படையினர் யுத்தம் முடிபடைந்து விட்டதாக அறிவித்ததற்கு காரணமாகும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை நிராகரித்த கே.பி.17ஆம் திகதி பிரபாகரன் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட புலனாய்வுத்துறையினர் அன்றை தினம் மேற்கொள்ளப்பட்ட செய்மதி தொலைபேசி உரையாடல் குறித்து விசாரணை நடத்தியதுடன் பிரபாகரனின் தொலைபேசி இருந்த இடத்தை கண்டறிந்தனர்.

இதன் பின்னரே பிரபாகரன் மறைந்திருந்ததாகக் கூறப்படும் நந்திக்கடல் பகுதி மீது படையினர் தாக்குதல் நடத்தினர். செய்மதி தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அமெரிக்காவினால் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருப்பதை விடுதலைப்புலிகள் அறிந்திருக்கவில்லை.

கே.பி., பிரபாகரனுடன் தனக்கு தொலைபேசி தொடர்பிருப்பதாக காட்டி தலைமைத்துவப் பதவியை பெற முயற்சித்துள்ளதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவித்தன. என்று அந்த இணையம் தெரிவித்துள்ளது.

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்தது எவ்வாறு? சிங்கள இணையம் பரபரப்புத் தகவல்

giovedì 19 agosto 2010

சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள்!/ சிவந்தனின் நடை பயணத்திற்கு செலவாகும் பணத்தினை வன்னி மக்களுக்கு கொடுத்தால் உதவியாகும்!! (nanri inaiyankal)

 சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள்!/ சிவந்தனின் நடை பயணத்திற்கு செலவாகும் பணத்தினை வன்னி மக்களுக்கு கொடுத்தால் உதவியாகும்!!

 

ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையை நோக்கி மனம் தளராத உறுதியுடன் சிவந்தன் இன்றோடு 27 வது நாளாக நடை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

mercoledì 11 agosto 2010

இத்தாலி அரசிடம் தமிழர்கள் பலர் கடனாளிகளாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

நிகழ்கால அறியாமை எதிர்காலத்தை அழித்துவிடுகின்றமைக்கான ஆதாரங்கள் இவைதான்… 

Soldi € அண்மையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட புதிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலனைகள் சிறந்த பெறுபேறுகளை எட்டியுள்ளது. இச்சேவைமூலம், பலர் தமக்குத் தெரியாலேயே இத்தாலி அரசிடம் கடன்பட்டுள்ளமை இத்தால் வெளிக் கொணரப்பட்டுள்ளன. இக்கடன் உரிய பெறுமதியிலிருந்து கட்டப்படாத காலத்திற்கேற்ப வட்டியுடன் அதிகரித்துச் செல்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் அறியாமையால் ஒவ்வொரு தனிநபரும் தாம் தமது எதிர்காலத்திற்காக சேமித்துக்கொண்டிருக்கும் ஓய்வூதியப்பணத்தினை இத்தாலி அரசிடம் அடைமானம் அவைப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. எனவே மேலும் இது தொடர்பாக விபரம் அறியாதவர்கள் தம்முடைய நிலைகளை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

domenica 8 agosto 2010

உங்களுக்குத் தெரியுமா உங்கள் நிலை!!!!!?????

உங்களுக்குத் தெரியுமா உங்கள் நிலை!!!!!?????
இத்தாலியில் அவ்வப்போது பல சட்டமாற்றங்கள் இடம்பெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. எனினும் பல வெளிநாட்டவர்கள் அச்சட்ட மாற்றங்களை குறிப்பாக தமிழர்கள் அவற்றை அறியாதிருப்பது ஒருவகை, அறிந்தும் வெளிப்படுத்தாதது இன்னொரு வகை, வெளிவந்தவற்றை அரைகுறையாக அல்லது மாற்று விபரமாக வெளியிடுவது பிறிதொரு வகை… இது இப்படி இருக்க இவ்வாறான சட்டமாற்றங்களின் பாதிப்புகளை உணராமலேயே பலர் காலத்தைக்கடத்துகின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதிலும் பார்க்க நன்மைகளைக்கூட பெற்றுக்கொள்ளாது சட்டம் மாற்றத்திற்குள்ளாகிழவிடுகின்றது. எனவேதான் அவ்வப்போது என்னால் முடிந்தளவு எனது இணைய வாசகர்களுக்காகவும் என்னிடம் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முனைவோர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் எனது சேவைகளை மேற்கொண்டு வருகின்றேன். இந்தவகையில், தற்போது புதிய நடவடிக்கையினை எடுத்துள்ளேன். அதுவாகில், பல வருடங்களாக இத்தாலியில் தொழில் புரிந்தும் தாம் எவ்வளவு தொகை தமது ஓய்வூதியப்பணத்தை அரசிடம் வழங்கியுள்ளார்கள் என்பதனையும் அதுதொடர்ர்பாக எடுக்க வேண்டிய மற்றைய ஒழுங்குகளையும், இன்னும் தொழில் வழங்குனர் தொடர்பான பரிசீலனைகளையும் பெற்று அதற்கேற்ப உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் பலருக்குப்புரியாது போய்விடுகின்றது. எனவே இது தொடர்பான பரிசீலனைகளை மேற்கொள் தேவை ஏற்படின் தொடர்பு கொள்ளவும்…

அலுவலக மெயில் தொடர்புகளுக்கு arugan@live.com;

அரசாங்க அலுவல்களுக்கு மட்டும். :- maximin.francis@PostaCertifica.gov.it

venerdì 6 agosto 2010

தமிழன் என்கிற காரணத்தால் பிணமாக ஆக்கப்பட்டேன் ! குற்றுயிர் போல் வாழும் ஒரு அப்பாவியின் குமுறல்

 

”தமிழனாக பிறந்த ஒரே ஒரு காரணத்தாலேயே நான் கடந்த இருபது வருட காலமாக குறை உடலும் குற்றுயிரும் உடையவர் போல் வாழ்ந்து வருகின்றேன்.

” இப்படிக் கண்ணீரும் கம்பலையுமாக கூறினார் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிப் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட 11 ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிப்பிள்ளை பிள்ளையான் தம்பி (வயது 35 ). நான்கு பக்கமும் முற்புதர்கள் சுற்றியிருக்க நடுவில் சிறிய குடிசையில் வயதான தாயுடன் ஏதோ வாழ்ந்து வருகிறார் இவர்.

15 வயதுச் சிறுவனாக 1990 ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையின் வசந்தம் தொலைந்து போனது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தில் இராணுவத்தினர் அவரை இடுப்புக்கு கீழ் சுட்டார்கள். அவர் சிகிச்சைக்காக அம்பாறை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டார். அவரது உயிர்தான் காப்பாற்றப்பட்டது.

ஆனால் இடுப்புக்கு கீழ் அவருக்கு உணர்வு இல்லாத நிலை. இரண்டு கால்களும் இயக்கம் இழந்து விட்டன. அவர் கிட்டத்தட்ட வாழ்க்கையில் எல்லாவற்றையுமே இழந்து விட்டார். வாழ்க்கையையே தெலைத்து விட்டார். அன்று முதல் இன்று வரை அம்மாவில்தான் தங்கி வாழ்கின்றார். மலசலத்தைக் கூடக் கட்டிலில் படுத்திருந்தவாறே கழிக்க வேண்டியவராக உள்ளார்.

வயது போன தாயார்.... தாயாரை பராமரிக்க வேண்டிய வயதில் மகன். ஆனால் தாயார் தொட்டாட்டு வேலைகளைச் செய்தும், பிச்சை எடுத்தும் மகனைக் காப்பாற்றி வருகின்றார் இவருக்கு பெரிய அபிலாஷை எதுவும் இல்லை. ஒரு இடத்தில் அமர்ந்து இருந்து நிரந்தர தொழில் செய்து அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

ஆனால் எமது சமுதாயமும், சட்டமும் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. சுயதொழில் செய்ய வேண்டும் என்கிற உந்துதலால் நிறுவனம் ஒன்றின் மூலமாக மூன்று டயர் மோட்டார் சைக்கிள் ஒன்றை பெற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராசா இவரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்துகொண்டு சுயதொழில் முயற்சி ஒன்றை இவர் ஆரம்பிக்கும் வகையில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்து உதவினார்.

புஷ்பராசாவின் ஆசிர்வாதத்துடன் ஐஸ்பழம் விற்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால் இவரால் சுத்தமாக இருக்க முடியாது என்று காரணம் காட்டி அதிகாரிகள் இத்தொழிலில் ஈடுபட விடாமல் தடை போட்டு விட்டனர். பக்கத்து ஊர் சந்தை ஒன்றில் புகையிலை வியாபாரத்தைத் தொடங்கினார்.

ஆனால் அவ்வியாபாரத்தில் ஈடுபடுகின்றமைக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. இவர் மூன்று டயர் மோட்டார் வண்டியில் வீதியால் பயணிக்கும்போதெல்லாம் பொலிஸார் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் கேட்கின்றார்கள். வாகன அனுமதிப் பத்திரம் இல்லை என்று காரணம் காட்டி இவரை ஒரு முறை நீதிமன்றம் வரை இவரைக் கொண்டு போனார்கள்.

தமிழன் என்கிற காரணத்தால் பிணமாக ஆக்கப்பட்டேன் ! குற்றுயிர் போல் வாழும் ஒரு அப்பாவியின் குமுறல்

NANRI - TAMILCNN

giovedì 5 agosto 2010

நாடுகடந்த அரசு இலங்கை அரசின் சதிவலைக்குள்… - அருகன்.

நாடுகடந்த அரசு இலங்கை அரசின் சதிவலைக்குள்… - அருகன்.

இந்த சாணக்கியமான வரிகள் முடிவிற்கு வரும் முன்னரே பலர் இதன் தலைப்பை வைத்து ஒரு முடிவிற்கு வந்திருப்பார்கள்… அது தமிழர்களின் குணம்! எனவே, அதில் தப்பில்லை… பகுத்தறிவாளன் நிச்சயம் பகுத்தாய்ந்தே ஆவான். தமிழர்களில் அதிகமானோர் பகுத்தறிவாளர்களே ஆனால் அவர்கள் தம்மை இந்த அரசியலிலோ அல்லது போராட்டத்திலோ இருந்து ஒதுக்கிக்கொண்டதும், ஒதுக்கப்பட்டதுமான விளைவே இன்றைய தமிழீழத்தின் நிலை இவ்வாறு காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மைகள்.

இப்போது உட்செல்வோர் தொடரட்டும்…

நடந்து முடிந்தவற்றைச் சொல்லி மார்தட்டுவதிலும் பார்க்க, நடந்து முடிந்தவற்றைப்பற்றிய மீழ்பார்வையில் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளே தற்போது தமிழர்களுக்கு அதிகம் இருக்க வேண்டும்.

அந்த வகையில், நாடுகடந்த அரசினை மக்கள் மலைபோல் நம்பியிருந்தனர்… ஆனால் அதன் அறிக்கைகளும், செயற்பாடுகளின் ஸ்தம்பித்த நிலையும், செயற்பாடுகளை மேற்கொள்ளும் போக்கும் பலத்த சந்தேகங்களை எழுப்பத்தான் செய்கின்றது. இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று இன்றுவரை நாம் நினைத்திருந்தவர்கள் வெறும் பொம்மைகளே என்றும், எமக்காக செயற்படுவோர்கள் என்று கருதியவர்கள் அடிப்படைச் சூத்திரதாரிகள் என்பதும் மெல்ல, மெல்ல வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களுக்கு நாடுகடந்த அரசு விடுகின்ற அறிக்கைகள் மேலும் மேலும் அவ்வாறானவர்களை திடப்படுத்துவதாகவும், அவர்கள் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கின்றது. இவ்வாறான செயற்பாட்டிற்கு புலத்து ஊடகங்களும், திடீர் இணையங்களும் பெரும் ஆதரவளிப்பது “தேசியத் தலைவரின்” இத்தனை கால போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமைகின்றது.

சரி ஆதாரத்தோடே உற்று நோக்குவோம். இரண்டு வருடங்களை அண்மிக்கப்போகும் முள்ளிவாய்க்கால் பேரவலம், ஆழிப்பேரவலத்திலும் பார்க்க மிக வேகமாகவே ஓய்ந்து போனது… போர்க்குற்றங்கள் தொடர்பாக புலத்து தமிழர்களின் ஆதங்கத்தை இலங்கை தமிழ் தலைமைகள் முறியடிப்பது தெரிந்தும் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் கண்டனங்களும் அணுவளவேனும் நகர மறுக்கின்றது.

“தமிழ்வின்” போன்ற இணையங்கள் இப்போதெல்லாம் அதிகம் இலங்கை அரசியல் வாதிகளின் அல்லது இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்ற தமிழ் பிரமுகர்களைப்பற்றியே அதிகம் எமுதித்தள்ளுகின்றனர். இதன்மூலம் தேசியப்பற்றாளர்கள் மழுங்கடிக்கப்படுகின்றனர். ஆனால் தேசியத்திற்காக தன்னுயிரை கொடுக்க முன்வந்த போது தெரியாத இளையோனை அவனிடம் கிடைக்கப்போகும் பல்லாயிரம் நிதிக்குப்பின்னர் கண்தெரிகின்ற அவலமும் இருக்கத்தான் செய்கின்றது.

நாடுகடந்த அரசினை ஆரம்பித்த கேபி தற்போது நாடுகடந்த அரசைப்பற்றிப்பேசாது அவ்வரசிற்கு முரணான செவயற்பாடுகளை மேற்கொள்வதும், பேச்சுக்களை வெளியிடுவது தெரிந்தும் நாடுகடந்த அரசின் அங்கத்தவர்கள் வாளாவிருப்பதும், கேபிக்கும் தமக்கும் தொடர்பில்லை என்ற விமர்சனங்களும், எதை வெளிக்காட்டுகின்றன… சிங்கள பிரதி அமைச்சரின் செயலை அனைத்து தமிழ் ஊடகங்களும் தூக்கிப்பிடித்து அதை ஒரு முன்பக்கச் செய்தியாக்க முனையும் போது இலங்கை அரசானது தனது சாணக்கியக்காய்களை தமிழர்களுக்கு எதிராக அதிக வேகமாக நகர்த்தி செய்கின்றதை நாடுகடந்த அரசின் அறிவாளிகள் எவ்வாறு கைக்கொண்டனர்??? தேசப்பற்றாளர்களின் ஒவ்வொரு அடிகளையும் நாடுகடந்த அரசின் பெயரில் மற்றும் ஒருசில அமைப்புக்களின் முனைப்பால் முறியடிப்பதனைப்பார்க்கும் போது, நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்கள் விழித்துக்கொள்ளாது இன்னமும் தூங்கிக் கொள்வது சாத்தியமா?

எமது புலத்து போராட்டங்கள் அனைத்தும் கேபியின் வாக்குமூலத்தால் சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டதை இன்னமும் தமிழர்கள் உணரவில்லைப் போலும். இத்தனை காலமும் கருணாவை ஒரு பொருட்டாக மகிந்த தன்னருகே வைத்திருந்ததை இப்போதும் நாம்புரிந்து கொள்ளாவிடில், எம்மால் எதையுமே புரிந்து கொள்ள முடியாது போய்விடும். இதில் இருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கேபி புலிகள் அமைப்பில் இருந்து விலகியதாக அவர் கொடுத்த வாக்கு மூலம் மற்றும் கருணா பிள்ளையான் போன்றோர் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்ததன் காலத்தின் நினைவுகள் எதனை தெளிவு படுத்துகின்றது???? இதன் பின்னர் போர்மீது போர்தொடுத்து தோல்வி கண்ட இலங்கை அரசு ஒரே பிடியில் புலிகளை முடக்கியதன் பின்னணி!!! இத்தனை காலமும் சர்வதேசத்திற்கு தண்ணிகாட்டி பிடிபடாத கேபி இப்போது மட்டும் எப்படி பிடிபட்டார் என்று யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லையே!!! இன்றுள்ள இந்த நிலைக்காக நாம் இழந்த தளபதிகளைச் சற்று எண்ணிப்பார்த்தாக வேண்டும்.

இன்றுவரை காத்திரமான ஒரு செயற்பாட்டை எங்கள் நாடுகடந்த அரசு வெளிக்காட்டவில்லை! ஆனால் இலங்கை அரசானது தனது போர்க்குற்றங்களை முறியடிப்பதற்கு புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளை வைத்தே சீர்செய்து வருகின்றது. அதே புலிகளின் பலிகளை வைத்தே போர்க்குற்றத்தை வெளிக்காட்ட நாம் முனைந்து கொண்டிருக்கின்றோம். எங்கள் அடிப்படைத்தவறு தமிழர்களின் ஒற்றுமையின்மை என்றே எல்லாரும் நினைத்து வருகின்றார்கள் ஆனால் அது வல்ல உண்மை!!! ஆரம்ப காலத்தில் புலிகளின் பலத்தை அளவுக்கு மீறி வெளிக்காட்டி சிங்கள அரசை பலமடையச் செய்தோம், இப்போது, தமிழர்களின் செயற்பாட்டை மழுங்கடித்து சிங்கள அரசை பிரபல்யப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். அதுவே எமது இழப்பிற்குக்காரணம். ஒரே தளம், ஒரே தலைமை, இத்தனையும் அறிவும் ஆற்றலும் உடைய ஜனநாயகத்தால் கட்டப்பட வேண்டும். ஆழுக்கொரு அரசியல், ஆழுக்கொரு தலைமை, ஆழுக்கொரு கட்சி… ஆனால் கொள்கைமட்டும் ஒன்றாம்!!!

இலங்கை அரசு போரில் மட்டும் வெற்றி பெறவில்லை, தமிழர்களைப் போலியாக்குவதிலும் வெற்றி கண்டுகொண்டிருக்கின்றது. இலங்கை அரசு பயிற்சிகளையும் மண்டைச் சலவையினையும் முன்னாள் புலிகளுக்கு வழங்கி ஒரு பலத்த இறுக்கமான தமிழ்க் கட்டமைப்பை தனது ஆட்சிக்குள் உருவாக்கிவருகின்றது. ஆனால் தமிழர்கள் புலத்தில் செயலற்று, பயிற்சியற்ற செயற்பாடுகளால் இலங்கை அரசிற்கு தெரிந்தோ தெரியாமலோ சர்வதேச ரீதியில் பலத்த ஆதரவையே வழங்கி வருகின்றார்கள். ஓவ்வொரு தடவையும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற மிகப்பலமான சந்தர்ப்பங்களை நாமே நாசமாக்கி வருகின்றோம். எமது ஊடகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் சிங்கள அரசை அதாவது மகிந்த அரசை முறியடிப்பதில் அக்கறை காட்டும் அளவிற்கு தமிழர்களின் இழப்புக்கள் மீதும், உரிமைகள் மீதும் அக்கறைகாட்டத்தவறியே வருகின்றனர். இலங்கை அரசு தமிழர்கள் தொடர்பாக வெளியிடும் தகவல்கள் ஒருபுறமும், தமிழர்கள் வெளியிடும் தகவல்கள் மறுபுறமாகவும் ஒன்றுக்கொன்று முரணானதாகக் காணப்படுகின்றமை கேலிக்கிடமாக உள்ளது.

கேபியிடம் நிதி மற்றும் கப்பல்கள் போன்ற சொத்துக்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்ற போதிலும் கேபி அதற்கு முரணான பதிலைக்காட்டி தமிழர்களை கோமாளியாக்குவதனை என்னவென்பது? கருணாவின் சர்வதேச வாக்குமூலத்திலும் பார்க்க கேபியின் சர்வதேச வாக்குமூலம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதனை மகிந்த அறிவுபூர்வமாகத் தெரிந்த காரணத்தாலேயே கருணாவிற்கு பிரதி அமைச்சும் சர்வதேச குற்றவாளியாக்கப்பட்ட கேபிக்கு விடுதலையுடனான பாதுகாப்பும் வழங்கியிருக்கின்றது.

ஒரு வேளை கேபி பிடிபடாது இருந்தால் கருணாவிற்கு மீண்டும் அமைச்சுப்பதவியே கிடைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை அதை வைத்து அவர் தமிழர்களுக்கு என்ன செய்யப்போகின்றார் என்பது வேறு விடயம். சரி நாடு கடந்த அரசின் செயற்பாட்டிற்கு வருவோம், முன்னாள் எம்பியும் தற்போதைய நாடுகடந்த அரசின் அதிகாரியுமான ஜெயானந்த மூர்த்தி மற்றும் செயற்பாட்டாளர் ருத்திர குமார் போன்றோரின் தகவல்கள் அவ்வப்போது வெளிப்படுகின்ற போதிலும் மற்றோரின் மூச்சுக்காற்றுக்கூட தமிழர்களை வந்தடையவில்லையே?

மேலும் சில நாடுகளில் இன்னமும் நாடுகடந்த அரசின் அங்கத்தவர்கள் தெரிவு இடம் பெறவில்லையே? மேலும் நாடுகடந்த அரசின் அங்கத்தவர்களான தமிழீழ மக்கள் தமது சிக்கல்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக அவ்வமைப்பின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள நினைத்தால்???? அதற்கான பதிலும் செயற்பாடுகளும்???? இதில் இருந்து விளங்கிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் நாடுகடந்த அரசு இலங்கை அரசிற்கு எதிராக செயற்படுவதிலும் பார்க்க தமிழர்களின் செயற்பாட்டை ஸ்தம்பிக்கச் செய்கின்றது என்பதே உண்மை என்ற எனது கருத்தினை இந்த நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்கள் விரைவில் முறியடித்துக்காட்டியே ஆகவேண்டும். கேபியின் இன்றைய போக்கு நாளைய தமிழர்களுக்கு எவ்வாறு வரலாற்றைக்காட்டப்போகின்றது என்பதனை அடுத்துவரும் பகுதிகளோடு இணைந்திருங்கள்… அன்பன் அருகன்

domenica 1 agosto 2010

மணலாற்றில் நடந்தது என்ன? நெஞ்சை உறையவைக்கும் உண்மை - TamilWin.com

 

மணலாற்றில் நடந்தது என்ன? நெஞ்சை உறையவைக்கும் உண்மை

[ ஞாயிற்றுக்கிழமை, 01 ஓகஸ்ட் 2010, 03:12.29 AM GMT +05:30 ]

கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப் புலிப் போராளிகளை பிரித்து (பெண் போராளிகள் உட்பட) தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. அப் போராளிகுழுவில் இருந்து ஒரு தொகுதியினரை பல குழுக்களாக பிரித்து கள சேவைக்காகவும்தேடுதல் வேட்டைக்காகவும் அவர்கள் பயன் படுத்தி வந்தனர்.

இக் குழுவில் யுத்தகளமுனையில் விழுப்புண் அடைந்து இராணுவத்தால்கைது செய்யப்பட்ட போராளிகளும் அடங்குவர்.இத் தருணத்தில் இராணுவத்தின் கட்டளைக்கு அடி பணியாத கொள்கையில் உறுதி கொண்ட போராளிகள் சிலரை இராணுவ சீருடை அணிவித்து அவர்களை நய வஞ்சகமாக கொலை செய்து விட்டு,இது புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலாக தமிழ் ஊடகங்கள் வாயிலாக செய்திகளை மெதுவாக கசியவிடுகிறது.

மணலாற்றில் நேற்றைய தினத்திற்கு முன்பு கொல்லப்பட்டவர்களும் காயப்பட்டவர்களும் மேற்படி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திர வதைகலுக்கு உள்ளாகி வந்த விடுதலைப் புலிப் போராளிகளே. இத்தகவல்சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசிய விடப்பட்ட புலனாய்வு செய்தியாகும். ஜி.எஸ் .பி வரி சலுகை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சில முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்தது. அதில் இலங்கை அரசாங்கமானது நீண்ட காலமாக இருந்து வரும் அவசர கால சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக விடுத்திருந்தது.

இதை கருத்தில் கொண்டே மேற்கண்ட மணலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது. அதாவது, இலங்கைத் தீவில் இன்னும் பயங்கர வாதம் ஒழியவில்லை ஆகையால் அவசர கால சட்டத்தை நீக்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து உலக நாடுகளையும் நம்ப வைக்கும் ஒரு சதித் திட்டமாகும். அரசாங்கத்தின் இச்செயலானது அரச சார்பற்ற நிறுவனங்கல் மற்றும் ஊடகவியலாளர்களின் பிரசன்னம் மற்றும் செயல்பாடுகளை மட்டுறுத்தும் நோக்கமாகவே அறிய முடிகிறது. தமிழர்களுக்கெதிராக தமிழர்களைக் கொண்டே தமிழ் ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே ராஜபக்ஷே அரசாங்கத்தின் சாதுர்யமாகும்.

மணலாற்றில் நடந்தது என்ன? நெஞ்சை உறையவைக்கும் உண்மை - TamilWin.com

lunedì 28 giugno 2010

ஆயுதப்போராட்டத்தின் அடுத்த கட்ட பரினாமத்திற்கு உந்துகோலாக "மிஸ்டர் மகிந்த" அரசு அத்திவாரமிட்டு கொடுத்துள்ளது.

anna-sinthanai-nerudal 2010ல் புலிகள் சிதைவுற்று இருப்பதென்னவோ உண்மையே! ஆனால் அது தற்காலகச் சிதைவேயொழிய நிரந்தரமானவையல்ல! "ஒரு முனைப்போரால்" இத்தைகாலமும் புலிகள் தமிழர்களுனக்காகப் போராடியது வரலாறாக இருக்கின்றபோது, இனி சர்வதேச ரீதியில் "பல்முனைப்போரால்" இலங்கை அரசு திணறும் அளவிற்கு “அறிவுத் தாக்குதல்“ நடக்கத்தான் போகின்றது. அது ஆயுதத்தாக்குதலிலும் பார்க்க மிகக்கோரமான தாக்குதலாக இலங்கைச் "சிங்கள அரசு" சந்திக்கத்தான் போகின்றது.

"புலிக்கு காட்டிலும் போர்க்களத்திலும் வேலை இருக்கோ இல்லையோ இனி நாட்டிலும் அரசியலிலும் வேலை அதிகமாகவே இருக்கு" என்பதனை இலங்கை அரசு மிக தெளிவாகப் புரிந்து கொள்ளத்தான் போகின்றது. புலி பாய்ந்ததையும் பதுங்கியதையும் பார்த்த இலங்கை அரசு அவர்களின் தந்திரத்தையும் சர்வதேசத் தாக்குதலையும் பார்க்கும் படி இலங்கை அரசே தூண்டி விட்டிருக்கின்றது.
புலிகளை சர்வதேசத்திற்கு மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தியதே இலங்கை அரசுதான் என்றால் அது மிகையில்லை… அமேரிக்கா குண்டு வெடிப்பிற்கும் புலிகளுக்கும் முடிச்சுப் போட்ட அந்தக்காலத்து "சந்திரிக்கா" அம்மையாரே புலிகளின் சிறப்பையும், புலிகளையும் அவர்களின் போக்கையும் சர்வதேசத்திற்கு அறிமுகம் செய்துவைத்தார்.
அப்போது புலிகளின் ஆயுதப்பலமே தமிழீழத்தை பெற்றெடுக்கப் போதுமானதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இலங்கையினை அண்மித்த நாடுகளின் திடமற்ற போக்குகள்… மற்றும் புலிகளின் "உரிமைப்போரை" மற்றைய நாட்டுத் தீவிரவாத போருடன் ஒப்பிட்டமை, போன்ற விடயமே புலிகளை அழிப்பதற்கு அயல்நாடுகள் கங்கணம் கட்டியது.

அந்தவகையில் ஆயுதப்போராட்டத்தின் அடுத்த கட்ட பரினாமத்திற்கு உந்துகோலாக "மிஸ்டர் மகிந்த" அரசு அத்திவாரமிட்டு கொடுத்துள்ளது. அதாவது, ஆயுதப் போராட்டம் வஞ்சகங்களால் நசுக்கப்பட்ட போதிலும், அது புலிகளுக்கு ஒரு பாடத்தைக்கற்றுக் கொடுத்திருக்கின்றது. அந்த கற்கையின் முறைப்படி அடுத்த கட்ட நகர்வுகளை எடுத்து, முன்பிலும் பார்க்க பலத்துடன் பக்க ஆதரவுடன் மாற்று வடிவப்போர் தொடங்கும். ஆயுதத்தால் அடித்த அடியிலும் பார்க்க இலங்கை அரசு கதிகலங்கக்கூடிய பாரிய இடியாக அது இலங்கை அரசின் தலையைத் தாக்கப்போகின்றது.

இலங்கை அரசின் சூழ்ச்சிக்குள் சில தமிழர்கள் விலைபோனதன் காரணமே புலிகளின் தோல்விக்கு முக்கிய பின்னணி எனலாம். ஏரித்திரியா போன்ற பல இடங்களில் இருந்து உட்புகவேண்டிய தொடர்புகள் அறுபட்டதன் காரணம் வன்னிப்பேரவலத்தை மக்களும், புலிகளும் சந்திக்க நேர்ந்தது. அந்த வஞ்சகங்கள் திடமாகவும் தலைநிமிர்ந்தும் இன்று நடைபோடலாம் அரசில் ஆட்சியிலும் அமரலாம் அதில் மாற்றமில்லை. ஆனால், வன்னிப்பேரவலத்தின் ஆத்மாக்களின் சாபமும், அவர்களின் ஓலமிட்ட அழுகுரலும், மரண வேதனைகளும் அவர்களை நிம்மதியான வாழ்வை பெற்றுக்கொடுக்கத்டையா இருக்கும்.

இருள் ஒன்று, பகல்கொண்ட விடிவில் முடிவடையுமே ஒழிய, இருளோடே தொடராது… அது போல தோல்விகளையே புலிகள் சந்திக்காதவர்கள் இல்லை, தோல்விகளில் தோய்ந்து தோய்ந்தே புலிகளில் பலம் ஓங்கி உலகெல்லாம் ஒலித்தது. புலிகளை முன்பிருந்ததிலும் பார்க்க பலமாகக்கொணரக்கூடிய வல்லமை தமிழர்களுக்கு இன்னும் இருக்கின்றது. சிங்கள இனம் பெருந்தொகையினராக இருக்கலாம், சிங்கள இனம் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் குரல் ஓசையிலும் பாக்க சிறுபான்னையாக இருக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல்கொடுத்தால் உலகத்தின் மனித நடமாட்டம் இல்லாத பனிப்பாறைகள் மட்டும் எதிரொலிக்கும்…

இன்னமும் தமிழர்கள் புலிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை இழக்கவில்லை, தலைவன் இருக்கிறானோ இல்லையோ அவன் திட்டத்தை வல்லுவாக வகுக்கக்கூடியவன் என்பதனை இந்திய வல்லரசின் றோவினர் நன்கு அறிவார்கள். பெருந்தொகையான ஆயுதத்தைக் கொட்டி கொட்டி இந்தியாவிடம் கையளித்தபோதிலும், அந்த இந்தியாவையே எதிர்த்துப்போராடும் அளவிற்கு மேலும் ஆயுதம் புலிகளிடம் எங்கிருந்து, எப்படி வந்தது என்று சிந்திக்கவேண்டும். எனவே தலைவனின் இறுதித் திட்டம் விதைக்கப்பட்டிருக்காமல் அவன் இந்த பூமியை விட்டு போயிருக்க மாட்டான்.

இந்த நேரத்தில் சுதுமலை பிரகண்டனத்தை நினைவூட்டுகின்றேன்… தனது திட்டம் எத்தகையது என்பதனை அக்குவேறு ஆணிவேறாகத் தொகுக்கக்கூடியவன் என்ற வகையில் அவன் இறப்பினும் அவன் ஆழுமை நிலைக்கக்கூடியது என்பதால் புலிகளின் பலம் ஓயப்போவதில்லை!

புலிகளின் சர்வதேசப்பலத்தை வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை, போராட்டம் ஆரம்பிக்கபட்ட பின்பே சர்வதேச பலம் புலிகளுக்கு அதிகரித்தது. நாமறியாமல் புலிகளுக்கு சர்வதேசத்தின்  பல விடயங்கள் இன்னமும் இயங்கியே வருகின்றன. விளக்கெண்ணையினை கொழுத்திவிட்டு இருக்கின்ற இந்தியக்கடல் எல்லைக்குள் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியாதளவிற்கு அவர்களுடைய போக்குவரத்து இருந்ததென்றால் அவர்களின் செயற்பாட்டையும் திட்டத்தையும் அணுகுமுறையினையும் என்ன வென்பது.       

இன்று புலிகளின் பிளவு தமிழர்களின் பின்னடைவென்பதனை சிங்கள அரசு கைகொட்டிச் சிரிக்கின்றது. தமிழ்க்குழந்தைகளின் சின்னஞ்சிறு சிரசில் சிங்கள இராணுவத்தின் பாதரட்சைகள் பதியும் அளவிற்கு கோரதாண்டவம் நடைபெற்ற போதிலும் சர்வதேசத்தின் கண்கள் தூங்கியே இருந்தது. ஆனால் அந்த வடு உயிரோட்டம் உள்ள தமிழர்களின் நெஞ்சில் அணையா கொதிக்குழம்பாய் எரிமலைதீப்பிளம்பாய் முட்டி நிற்கின்றது. அதன் வெடிப்பு காலம் வரும்போது பிரதிபலிப்பு என்னவென்பதனை இலங்கை அரசு புரிந்து கொள்ளத்தான் போகினக்றது.

"சிங்கள அரது எதை எமது பலவீகனம் என்று கருதியுள்ளதோ அதுவே தற்போது எமது பலம்."

அதாவது, தமிழர்கள் ஆளாளுக்காளஆ பிரிந்திருக்கின்றார்கள்! புலிகள் உட்பிளவில் சரிந்திருக்கின்றார்கள்!! அமைப்புக்கள் சிதைவடைந்து கிடக்கின்றன!!! இலங்கையில் இருந்த தமிழீழப் போராட்த்தை புலத்தில் ஓடவைத்துவிட்டோம் என்று வீராப்பு கொட்டுகின்றன!!! தமிழர்களுக்கிடையிலான ஒற்றுமையினையும் சமரச தொடர்புகளையும் செயலிழக்கச் செய்து விட்டதாக பகற்கனவு காணுகின்றது!!!… ஆகால் அது வே தமிழர்களின் பெரும் பலத்தை உருவாக்கக்காரணமாக அமையப்போகின்றது. இன்று இணையங்கள், அமைப்புக்கள், தமிழர்களின் செயற்பாடுகள் போன்றன சர்வதேசத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ஒரு நெல்விதையில் இருந்து பெறப்படுகின்ற நெல்மணிகள் அந்த ஒன்றை விட அதிகமானது, ஒரு மூட்டை நெல்லை விதைத்து ஒவ்வொரு நெற்கதிரும் கொடுக்கின்ற பலனைப்பார்க்கும் போது ஏராளமான நெல்மணிகள் பலமூட்டைகளில் சேர்க்கப்படுகின்றதைப்போல், ஆங்காங்கே சர்வதேச அரசியலில் கால்பதிப்பதற்கு இன்றுள்ள நிலை எமக்குச் சாதகமாகவே இருக்கின்றது…

ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது தமிழர்களின் அனைத்து சிதறுண்ட பாகங்களும் இணையும் அது இலங்கை அரசின் பலத்திலும் அதிகமாக சக்திவாய்ந்ததாக உருவெடுக்கும். அந்த சந்தர்ப்பம் மிக விரைவில் வெளிப்படும்.    

இயேசு கிறீஸ்துவை ஒழித்துக்கட்டினால் அவருடைய போதனை ஒழிந்து விடும் என்று அன்றைய அரசு நினைத்தே அவரை சிலுவையில் அறைந்தனர். ஆனால் அந்தச்சிலுவையே உலகத்தின் பெரும் சமயத்தின் சின்னமானது!!! அவருடைய மரணத்தின்பின்னர் 12 அப்போஸ்தலருடன் புறப்பட்ட பயணம் 120 சீடர்களாகி... இன்று உலகத்தையே ஆட்கொள்ளவில்லையா? அது எப்படி சாத்தியமானதோ அப்படியே தமிழர்களின், புலிகளின் திட்டம் ஒருபோதும் தவிடுபொடியாகாது. பன்னிரெண்டு பேர்கொண்ட அந்த திட்டம் உலகையே ஆட்கொண்டதென்றால், உலகையே ஆட்கொண்டுள்ள தமிழர்களாலா இலங்கையை ஆட்சியெச்ய முடியாது???

சிங்கள இராணுவம் தமிழினத்தின் மேல் சிந்திய இரத்தக்கறை, சரித்திரத்தில் அழிவா வடுவை அந்த இனத்திற்கே கொண்டு சேர்த்திருக்கின்றது. சூழ்ச்சியை சூழ்ச்சியாலேயே வெல்லமுடியும். தந்திரத்தை தந்திரத்தாலே வெல்லமுடியம்… ஆனால் பலம்பொருந்திய எதிரியை பலத்தால் அழிப்பதிலும் பார்க்க சாணக்கியத்தால் அழிப்பதே தலைசிறந்தது. சிங்களவர்கள் அடித்த அடியில் புலி அடியோடு பலி என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சுணாமிபோல், பூமியே அதிரும்படி சர்வதேசத்தாக்குதலை எதிர்பாராத நேரத்தில் சிங்களம் சந்திக்கப்போகின்றது... உட்கசப்புகள் நிகழ்ந்தமையால் ஏற்பட்ட பின்னடைவு அதே சர்வதேசத்தில் இருந்து இனித்தாக்கப் போகின்ற தாக்கத்தால் சிங்கள அரசே நிலைகுலையும் அளவிற்கு பலமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகின்றது என்பது மறைக்கப்பட்ட செயற்பாடுகள்.

இறுதி யுத்தம் என்று இலங்கை அரசால் வர்ணிக்கப்படுகின்ற தமிழர்களின் அவலம் அந்த அரசிற்கே அவமானம் என்பதனை உணர மறுக்கின்றது. ஒரே தேசத்திற்குள் இருக்கும் இனத்தை தீவிரவாதம் என்ற போர்வையில் லட்சக்கணக்கான தமிழர்களை நீங்காத பாதிப்பிற்குள் கொண்டுசென்றமை சிறப்பான செயலோ? ஒரு நாட்டில் குடிமக்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாத வகையிலே குற்றச் செயல்களைக் கழையவேண்டுமே ஒழிய, இயலாமை காரணத்தால் ஒரு எதிர்ப்பை சமாளிக்க ஒரு தேசத்தையே அழித்து அதில் தனது கொடியை ஏற்றுவது ஒரு சிறப்பான விடயமோ???

இன்றுவரை தமிழர்களுக்காக போராடிய புலிகளும் சரி, மற்றைய முன்னைய போராட்ட அமைப்புக்களும்சரி தமது உரிமைக் கோரிக்கைகளுக்காக  இலங்கை அரசை எதிர்த்ததே ஒழிய சிங்கள மக்களை அழித்ததாகச் சரித்திரத்தில் இடமே இல்லை! அந்தவகையில் புலிகளின் பால் மனிதாபிமானம் செறிந்தே கிடக்கின்றன. புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சர்வாதிகாரப்போக்கையும் தவறான ஆட்சியாளர்களையும் எதிர்த்திருந்ததே ஒழிய சாதாரண சிங்கள குடிமக்களை அழிப்பதற்கு கங்கணம் கட்டவில்லை. சில சிங்களக்காடையரின் போக்கில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நீங்காப்பகையினை ஏற்படுத்த மேற்கொண்ட ஆரம்ப செயற்பாடே இன்று சிங்கள மக்களையே தமிழர்கள் அரக்கரைப்போன்று பார்க்கத்தோன்றியுள்ளது…

பொறுத்திருங்கள் மாற்றம் விரைவில் வநற்தே தீரும்... அருகன்.

giovedì 17 giugno 2010

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின் பக்கங்களும்...” தொடர் பக்கங்கள்....பாகம்2

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… – பாகம்1 (பாகம் ஒன்றை வாசிப்பதற்கு இதனை அழுத்தவும். )

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின்  பக்கங்களும்...” தொடர் பக்கங்கள்....பாகம்2

015 சிங்களவர்களின் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்பதற்கும், அவர்கள் இலங்கையினை ஆண்டார்கள் என்பதற்கும் சான்றுகள் உள. ஆயினும் சிங்களவர்கள் தமது வரலாற்றைத் தக்கபடி நிலைநாட்டிக்கொண்டார்கள். தமிழர்கள் நாமோ, அதனை அன்னியன் கையில் கொடுத்துவிட்டோம்.

martedì 15 giugno 2010

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். - பாகம்1

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன்.

vaddu “இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக்கொண்டுசென்ற தமிழர்களின் பக்கங்களும்...” தொடர் பக்கங்கள். 

முன்னோட்டங்கள்…

ஒரு இனத்தின் வரலாற்றையே அதிரடியாய் மாற்றிய பெருமை சிங்கள அரசையே சார்ந்து நிற்கின்றது… ஒரு இனத்தையே அழிவு கொடுத்து அடியோடு இடிந்து விட்டநிலையில் தமிழ்ச்சமுகம் ஏங்கிநிற்கின்றது. தமிழ் மொழி எங்கெல்லாம் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், தீக்களிப்புக்கள் என்றெல்லாம் எமது ஆதங்கங்களைக்காட்டியும் இழப்புக்கள் அதிகரித்ததேஒழிய நிறுத்துப்படவும்இல்லை நிரந்தரத்தீர்வும் வரவில்லை… !!!

giovedì 27 maggio 2010

தமிழர்கள் தமது தேசியத்தை வென்றெடுக்க, அமைப்புக்களின் போக்கு மட்டுமல்ல தனி ஒருவரின் போராட்டமும் அவசியப்படுகின்றது… அருகன்

02bbn தமிழர்கள் தமது தேசியத்தை வென்றெடுக்க, அமைப்புக்களின் போக்கு மட்டுமல்ல தனி ஒருவரின் போராட்டமும் அவசியப்படுகின்றது… அருகன்

ஏற்கனவே இலங்கை அரசு வெளிவிவகார அமைச்சரைத் தெரிவு செய்தபோது, அதன் பிரதிபலிப்பு எவ்வாறு அமையும் என்பதனையும், அதன்தெரிவிற்கான காரணத்தையும் மேலோட்டமாக விபரித்திருந்தமை, பல இணையங்களில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஆதாரம்…  -  தற்போதைய வெளிவிவகார அமைச்சரும் ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வும் [ புதன்கிழமை, 05 மே 2010, 03:37.38 PM GMT +05:30 ] ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்) என்று சொன்னதுமே, விடுதலைப்புலிகளின் சமாதானப் பேச்சுக்களே நினைவில் வரும். அத்தனைதூரம் புலிகளின் ஒவ்வெரு பேச்சுக்களிலும் அரசு சார்பில் தலைமைதாங்கியவராவார்.

இதில் புலிகளின் சார்பில் ஈடுபட்டோரில், (அமரர்) திரு அன்ரன் பாலசிங்கம் மற்றும் (அமரர்) சு.ப. தமிழ்ச்செல்வன் போன்றோர் தம்முடைய நிலையில் இனி வாய்பேச முடியாது என்பதனை நன்கு உணர்ந்த இலங்கை அரசானது, பேச்சுக்களில் ஈடுபட்ட இன்னும் இரு முக்கியஸ்தர்கள் என்ற வகையில் எதிர்கொள்ள வேண்டியவர்களாகக் காணப்படுகின்றமைக்கு, சர்வதேசத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று இருக்கின்றபோது,

உள்நாட்டில் மிஞ்சியுள்ள தற்போதைய பிரதி அமைச்சரும், சர்வதேசத்தின் பார்வைக்கு முன்னாள் புலிகளின் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவருமான கருணா என்கின்ற திரு.வி.முரளிதரன் அவர்களை ஒருவாறு தனது கட்டுப்பாட்டுக்குள் ஏற்கனவே கொணர்ந்த போதிலும், புலத்தில் மிஞ்சியுள்ள ஒருவராகவும் சட்டத்தரணியாகவும் காணப்படுவதோடு மட்டுமல்லாது, புலத்தில் தனது நிலையினைக் காலூன்ற, மக்களின் பலத்தினை அரணாகக்கொண்டு இன்று நாடுகடந்த அரசை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு வி.உருத்திரகுமார் அவர்களை ஒரு வழிபண்ணவேண்டும் என்ற புதிய புலத்தின் அரசியல் போர் உத்திகளுக்காக இலங்கை, அரசால் தெரிவாகியிருக்கும் ஒரு புத்திஜீவியும் பழுத்த அரசியல் அனுபவசாலியுமான “ஜீ. எல். பீரிஸ்” என்ற இந்த மனிதரை நியமித்துள்ளது.

உள்நாட்டில், பலம்பொருந்தி ஆயுத அரசியலில் 2009 வரை கால்பதித்திருந்த புலிகளை, அடியோடு அழித்துவிட்டோம் என்று ஆணவம் கொண்டிருந்த போதிலும், “புலம்பெயர்ந்த புலிகளாக” “புலிகள் பெயர்ந்து தமிழர்களாக” உருவாக்கப்பட்ட கட்டமைப்பை எப்படி மண்ணோடு மண்ணாக்குவது என்ற முனைப்பு ஒருபுறமிருக்க… சர்வதேசத்தால் தனது முன்னைய புலிகளுடனான அனுபவத்தை வைத்து காய்களை பக்குவமாக நகர்த்துவதற்காகவே இவர் இந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றே இன்னொருபுறம் எண்ணத்தோன்றுகின்றது.

புலத்தின், மற்றும் புலிகளின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகளும் மனக்கசப்புகளும் இலங்கை அரசை மேலதிகமாக மூச்சுவிட வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. கடந்த ஐந்தாம் மாதத்தில் இருந்து இந்த வருடம் ஐந்தாம் மாதம் வரையிலான ஒருவருடத்தில், இலங்கை அரசானது பல சர்வதேச அரசியல், உள்நாட்டு ஜனநாயக நகர்வுகளை மேற்கொண்டிருந்த போதிலும், தமிழர்களின் சார்பில் கட்டப்பட்ட கட்டமைப்பை ஒரு முழுவடிவத்திற்கு கொண்டுவருவதில் ஏற்பட்ட தமிழர்களின் பின்னடைவு, இலங்கை அரசின் சர்வதேச அரசியலில் அவர்களை முன்னடைய வைத்துள்ளது.

(இதில் புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது வேற்று நபர்களுக்கோ அமைப்புகளுக்கோ சார்பாகவோ, பாதகமாகவோ அன்றி,தமிழர்களுக்கான ஒரு பலமிக்க கட்டமைப்பு, மற்றும் ஒரு பலமிக்க, நம்பகத்தனமான தலைமைத்துவம் அவசியம் என்பதனை இத்தால் வலியுறுத்துகின்றேன். அந்தத்தலைமைத்துவம் இன்னாராகத்தான் (xxx) இருக்கவேண்டும் என்று புலிகளின் ஆதரவாளர்கள் சொல்வது போலன்றி, யாராகவும் இருக்கலாம் என்பதே எனது ஆணித்தனமான கருத்தாகவும் உள்ளது...)

புலத்தில் இவ்வாறான தமிழர் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வோர், இலங்கைத் தேசியத்தை ஏலவே மாற்றி பிறிதொரு தேசியத்தில் இருப்பதால், அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையினையும் இலகுவில் எடுக்கமுடியாது போய்விட்டது. இருந்தபோதிலும் சர்வதேசத்தின் அனுசரணையுடன் இந்த முறியடிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் தேடப்படுவதென்பெது உண்மையே!

இப்போது இலங்கை அரசின் பார்வையானது, அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகடந்த கட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதாவது உள் மற்றும் வெளிச்செயற்பாட்டில் இருந்தே, இலங்கை அரசின் இதற்கெதிரான சட்டப்போக்குகளில் மாற்றம் ஏற்படப்போகின்றது. இந்த நாடுகடந்த கட்டமைப்பபானது, புலிகளின் போக்கினை வளர்த்தெடுப்பதாகவோ, அல்லது புலத்தில் இருந்து நிதிகளை வசூலிப்பதில் சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொண்டாலோ, இலங்கை அரசிற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய நடவடிக்கையாக காணப்பட்டாலோ அன்றி இந்த நாடுகடந்த அரசை இலங்கை அரசு எதிர்க்கப்போவதில்லை.

அவ்வாறான செயற்பாட்டை உற்று நோக்கிய இந்த அமைச்சர் “பீரீஸை” பொறுப்பாக அமர்த்தியதற்கான காரணம் இப்போது மக்களுக்கு தெளிவாக விளங்கியிருக்கும். ஏற்கனவே அரசின் சார்பில் அணுவளவும் குறைவுபடாத பாலிதவை வைக்கவேண்டிய இடத்தில் ஏற்கனவே வைத்துள்ளமை சற்று அரசியல் வாதிகளை சிந்திக்கவைத்திருக்கும். அத்துடன் பான் கீ மூன் தொடர்பாக எதுவும் நான் செல்லவேண்டியது இல்லை, காரணம் அவர் யார், எந்த நாட்டையுடையவர், அந்த நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள மத மற்றும் நிதி, ஒப்பந்தங்கள் தொடர்பாக உள்ள ஈடுபாடுகள் அப்பப்பா!!!...

இவ்வாறு இருக்க, ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்)  இலங்கையில் ஒரு பேராசிரியரும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதியும் ஆவார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப்பேச்சுக்களில் அரசதரப்பின் தலைவராக இவர் இருந்ததோடு, மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு கட்ட அரசவையிலும் பலமிக்க அதிகாரமுடைய அமைச்சினைக் கையாண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தற்போது அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் அதிகாரிகள், மிகத்திறனுள்ள ஒரு அரசியல் சாணக்கியமுள்ள இலங்கை அரச தலைவரை எதிர்த்தே எமது போராட்டம் தொடங்கப்போகின்றது என்பதனை நன்கு நினைவில் வைத்திருக்க வேண்டும்.

உதாரணமாக சொல்லப்போனால், முன்னைய பாராளுமன்ற அனுபவமுள்ள ஒருவரையும் இந்தக்கட்டமைப்பு உள்வாங்கியிருப்பதென்பது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகக்கொண்டாலும், இன்னும் சில சந்தேகங்கள் எழாமல் இல்லை இந்த சந்தேகங்கள் உண்மையாகிவிடக்கூடாது என்பதற்காக இந்தப்பகுதியில் அவை இணைக்கப்படப்போவதில்லை.

அத்தோடு, இத்தனை காலமும் இருந்த வெளிநாட்டு அமைச்சர்களிலும் பார்க்க தற்போதுள்ள ஜீ.எல்.பீரிஸ் அவர்களை சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அரசியல் துணுக்கு எழுதப்படுகின்றது. இதனை, அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் நடத்துனர்களும் அமைப்பாளர்களும் அறிந்து மிகப்பக்குவமாக காய்களை நகர்த்தும்படி அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

மேலும் , கடந்த தேர்தல்களில் (புலத்தில்) இடம்பெற்ற ஜனநாயகப்போக்கு வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும், சர்வதேச கணிப்பீட்டின்படி மக்கள் தொகையில் வாக்களித்தவர்களின் தொகையினை சர்வதேசக்கணிப்பாளர்கள் குறை கண்டுபிடிக்காதளவிற்கு அமைப்பதில் அதிக கவனம் செலுத்தும்படி வேண்டப்படுகின்றீர்கள்.

இலங்கை அரசின் மெளனத்தை அச்சமென்றோ, இயலாத்தன்மை என்றோ, அல்லது தமிழர்களின் போக்குச்சிறந்தது என்ற அடிப்படையிலோ, முட்டாள்தனமாக எனது எழுத்துக்கள் பாராட்டிய கருத்துக்களாக இருக்காது, எப்படி ஆரம்பத்தில் புலிகளின் நகர்வை அறியமுடியாது இலங்கை அரசு திண்டாடியதோ, அதுபோலவே இன்றுள்ள இலங்கை அரசின்போக்கு என்பதனை எச்சரிக்கையோடு, அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்துமாறு தமிழ்த்தலைவர்களை விழித்துக்கொள்ளச் சொல்கின்றேன்.

தற்போது மேய்ப்பனில்லாத ஆடுகளாக இருக்கும் தமிழர்களுக்கு ஒரே ஒரு தொடர்புச்சாதனமாக அமைந்திருப்பது இணையங்களே.அந்த இணையங்களின் சாதுரியமான கருத்துக்களை வைத்தே தமிழர்கள் சர்வதேச சாணக்கியத்தை தமிழர்கள் புரிந்து கொள்ளவும், இலங்கை அரசின் சாணக்கியத்தை முறியடிக்கவும் வேண்டும்.

உண்மையில் இலங்கை அரசு புலிகளை முடக்கிவிட்ட வீராப்பில் தூங்கிக் கொண்டாலும், அதை நாம் தூக்கமாகக் கருதக்கூடாது, அது தூங்குவதுபோல் நடிப்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆமை வேகத்தில் நாம் சென்றாலும், முயல் வேகத்தில் செல்லும் இலங்கை அரசை தமிழர்கள் சார்பால் இந்த நாடுகடந்த அரசு வெல்லவேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு சார்பில் மேற்கொண்ட பத்திரிகை மாநாடுகளில் அமைச்சர்கள் வெளியிட்ட கருத்தாவது, புலிகளும் நாடுகடந்த அரசும் ஒன்றே என்ற பாணியை கொணர முயற்சிப்பதில் இருந்து அரசு வேறுவழியில் இந்த நாடுகடந்த அரசிற்கெதிரான தனது காய்களை நகர்த்திவருகின்றது என்பது வெளிச்சம். அத்துடன், அமைச்சர் பிரிசால் வழங்கப்படுகின்ற கட்டளைகளை இலங்கைத் தூதராலயங்கள் உலகின் பல பாகங்களிலும் திடமாக மேற்கொள்வதோடு, உலக அரசுகளும் தமது நகர்வுகளை இவருடைய அழுத்தத்திலிருந்தே மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்நபர் மிகவும் முக்கிய காயாக தமிழர்களுக்கு விளங்கப் போகின்றார். இதனை எதிர்கொள்ள நாடுகடந்த அரசு அவையைப் பலப்படுத்துவதிலும், பெருமைகொள்வதிலும் பார்க்க இதற்கு “முறியடிப்பு” முகங்கொடுப்பதில் அக்கறை அதிகம் செலுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.

தமிழர்களின் பலம்பொருந்திய சிறந்த,அழிக்க முடியாத சர்வதேச கட்டமைப்பை எதிர்பார்த்து… ) நேற்றைய தினம் (24/05/2010) புலத்தில் இயங்கிவரும் ஜீ.ரீ.வி.யைப்பார்த்தபோது அதில் இதுதொடர்பாக ஒரு நிகழ்ச்சியினை நடத்தினார்கள். அதில் குறிப்பிடப்பட வேண்டிய பலமுக்கிய விடயத்தை இரத்தினச்சுருக்கமாக முன்பே குறிப்பிட்டு விட்டபோதிலும் காலந்தாழ்த்தியே தமிழர்களின் அடிகள் எடுத்துவைக்கப்படுகின்றமை எமது பின்னடைவையே காட்டுகின்றது.

இலங்கை அரசின் ஒவ்வொரு அணு அணுவான அசைவுகளையும் தமிழர்கள் உன்னிப்பாகக்கவனிக்க வேண்டிய நிலையில் இன்று தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்  இணையங்களையும், தமிழ் ஊடகங்களையும் தொடர்ச்சியாகப்பார்த்தும் நம்பியும் வருகின்ற எமக்கு சர்வதேசத்திலும் ஊடறுத்துச் செல்லக்கூடிய பொறுப்புகளை உடைய சிங்கள அரசின் அணுகு முறைகளை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது?.

புலிகள் தேசியத்தின் ஏக பிரதிநிதிகள் என்று நாம் அவர்களிடம் பொறுப்புக்களை விட்டு விட்டு உறங்கிக் கொண்டிருந்தோம்!!! அது முற்றாக சிதைவடையும் மட்டும் எமது உறக்கம் கலையவில்லை!!! பின்னர் கூட்டமைப்பிடம் எமது நம்பிக்கையினை வைத்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்றோம்… இப்போது நாடுகடந்த அரசு என்ற மாபெரும் சரித்திரத்தில் சர்வதேச அளவில் இருக்கின்ற போதில் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று மக்களோ (தமிழர்களோ) எல்லாவற்றையும் நாம் பார்த்துவிடுவோம் என்று (நாடுகடந்த அரசு ) அமைப்பாளர்களோ நினைத்துவிடக்கூடாது!!! இங்கேதான் எனது உறுதியான கருத்தைத்தெரிவிக்க முனைகின்றேன்… ஒவ்வொரு தமிழர்களும் தமது பங்களிப்பு வாக்குப்போடுவது என்றோ, நிதி உதவி வழங்குவது என்றோ நின்றுவிடக்கூடாது!!! அதையுந்தாண்டி பல விடயங்களை நாம் கால் வைக்கவேண்டும்.

நாடுகடந்த அரசை 18ம் திகதி அமைக்கவேண்டும் என்று உறுதி கொண்ட அமைப்பாளர்களுக்கு அதனை ஆணித்தனமாக நடாத்துவதற்கு அடியில் இருந்து நுனிவரை இழுபாடாகத்தான் இருக்கின்றது. அந்த இழுபாட்டில் பிஞ்சுபோவது தமிழர்களேயன்றி வேறுயாருமல்ல! 17,18ம் திகதி நடத்தியாகவேண்டும் என்ற வைராக்கியம் முக்கியமா? தமிழர்களுக்கு நிரந்தர விடிவு அவசியமா? ... இதில் அமைப்பாளர்களுக்கு 18ம் திகதி பிடிவாதமே அவசியப்பட்டது. அதனால்தான் சில நாடுகளில் தேர்தல் நடைபெறாமலே அவையைக்கூட்டிவிட்டார்கள்... ம்... ம்... சரி மீண்டும் தூங்கச்செல்வோம்...

முதலில் நாடுகடந்த அரசின் தற்போதைய பின்னடைவுகளுக்கு, அவர்களுடைய முயற்சி ஒரு காரணமல்ல, சாதாரண அமைப்பை நடத்துவதற்கே அதிகமான நிதிகளும், ஆர்வமான செயற்பாடுகளும் தேவைப்படும் போது, ஒரு நாட்டையே ஆட்சி செய்வதற்கு வெறும் வாக்குகளை மட்டும் போட்டால் போதுமா? நிதிகளுக்கும் ஆதரவிற்கும் எங்கு போவது??? இதற்கு நிதியை சட்டபூர்வமாக பெற்றுக்கொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன அதில் எந்த வழிகளிலும் இலங்கை அரசு எதிர் நடவடிக்கைகளை எடுக்காத வகையில் மேற்கொள்ள வழிகள் இருக்கின்றன. இதற்கு மக்கள் ஒவ்வொரு தனி மனிதர்களாகவும் போராட்டத்தில் குதிக்க வேண்டும் (கவனம் தமிழர்களே!!!).

இந்த வகையில் நாடுகடந்த அமைப்பாளர்களின் அடுத்த கட்டநடவடிக்கை நிதி சேகரிப்பாகவே அமையப்போகின்றது. அது வரைக்கும் அவர்கள் எந்த அறிக்கையோ அல்லது எந்த நடவடிக்கையோ எடுக்கப்போவதில்லை!!! இலங்கை அரசிற்கு வரி வசூலிப்பதற்கு உரிமை இருக்கின்றது... ஆனால் இந்த நாடுகடந்த அரசிற்கு...????

இலங்கை அரசு போர்க்குற்றத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்று இப்போது ஆதாரத்தோடு நிரூபித்தாலும் அதன் போக்கு பற்றி இந்த போர் இடம்பெற்ற போதே ஆணித்தனமாக விபரித்திருந்தேன் என்பதனை எனது இணையத்தின் வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். எனவே, இன்று இலங்கை அரசு எடுதஇதுவைக்கும் ஒவ்வொரு அடிகளிற்கும் பத்தடி வேகமாக ஒவ்வொரு தமிழர்களும் காய்களை நகர்த்தவேண்டும்.
கடந்த காலத்தில் எமது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததில் இருந்து எமது போக்கானது இலங்கை அரசை கூண்டில் ஏத்தவேண்டும் என்ற பிடிவாதத்தில் நிற்கின்றோமே ஒழிய தலைவரின் எண்ணத்திலிருந்து பின்நோக்கியே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதனை மறந்து விட்டோம். சிங்களவர்களை அழிப்பதோ, அல்லது இலங்கை அரசை இல்லாது ஒழிப்பதோ தலைவருக்கு ஒரு பெரும் காரியம் இல்லை என்பதனை கடந்த காலத்தில் பலத்த பாதுகாப்பிலும் தலைநகரில் விமானத்தாக்குதலை நடாத்திக்காட்டியதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதாபிமானம், சர்வதேசம், போர்நீதி போன்ற பல்வேறு காரியத்தோடும், இலங்கை அரசிடம் இருந்து நீதியான உரிமைகள் வேண்டுவதற்காகவும் பொறுமையினை கடைப்பிடித்தாரே ஒழிய எந்த சிங்கள இனத்தவரையும் வெறுத்ததோ அல்லது எதிரியாக நினைத்ததோ இல்லை! சிங்கள இன வெறியர்களின் போக்கையே கண்டித்து இப்போர் பலமாக நடைபெற்றது என்றால் அது மிகையல்ல!

இன்று தமிழர்களின் ஒவ்வொரு அடிகளின் படிகளிலேயே தமிழீழம் கட்டப்படுகின்ற அத்திவாரம் உண்டென்பதனை அடுத்து வரும் பகுதிகள் மேலும் தெளிவு படுத்தம்.

இதில் ஒரு சாணக்கியத்தைச் சொல்லியே ஆக வேண்டும்... புலிகளை அழித்தது போல் நாடுகடந்த அரசை அழிப்பதற்கு இலங்கை அரசு வண்முறையினைக் கையாளப்போவதில்லை! அதனை சர்வதேசத்தை வைத்தே அழுத்தங்கொடுக்கப்போகின்றது என்பதே அசைக்க முடியாத எனது எண்ணம்... – அருகன்.    (25/05/2010)

lunedì 24 maggio 2010

இத்தாலி றெஜியோ மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உணர்வுபூர்வ நினைவு… - Windows Live

இத்தாலி றெஜியோ மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உணர்வுபூர்வ நினைவு… - Windows Live

தாம் செய்தவை அனைத்தையும் நியாயப்படுத்த இலங்கை அரசு நாடுநாடாக ஓடித்திரிகின்றது. ஆனால் தமிழர்கள் நாம் ஆயிரம் ஆதாரத்தைக்காட்டியும் உலகம் மௌனித்து இருப்பது ஏனோ?ஆண்டாண்டு காலமாக ஆண்டபரம்பரையாக இருந்த நாம் இன்று அடிமைப்பட்டு சிங்களவனின் காலில் மிதிபட்டே காலத்தைக்கடத்த வேண்டுமா? தமிழ் இராணுவக்கட்டமைப்பு (விடுதலைப் புலிகள்) எந்த இராணுவ சிப்பாய்களையும் போர்ச்சட்டத்திற்கு முரணாக கொடுமைப்படுத்தியதாகவோ, அல்லது தகாத முறையில் அணுகியதாகவோ சரித்திரத்தில் இடமில்லை… சிறைப்படுத்தப்பட்ட இராணுவத்தினரை தகுந்தமுறையில் சர்வதேச நிறுவனங்கள் ஊடாக அரசிடம் மீண்டும் கையளித்தமை இன்னும் வரலாற்றில் இருந்து அகலவில்லை. ஆனால் பொதுமக்களையும் விடுதலைப்புலிகள் என்று “கொஞ்சம் வாட்டசாட்டமாக இருந்தால் போதும்” தகாதமுறையில் போர்க்குற்றத்தை இலங்கை அரசு மனிதாபிமானமற்ற முறையில் கையாண்டிருக்கின்றது. போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, பொது அமைப்புக்களையும் சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் போர்ப்பிரதேசங்களில் இருந்து வெளியேற்றியமையிலிருந்தே சிங்கள அரசின் கபடத்தனம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்டப்பட்டும் அனைத்து நாடுகளும் மௌனித்திருந்தது ஏன்? இன்று வெளிக்காட்டப்படும் கோர கொடுமைவாய்ந்த படுகொலையினை மனிதஉரிமை அமைப்பின் சட்டபூர்வ இணையத்தில் பிரசுரித்திருந்தும் இலங்கை அரசு தமிழர்களின் பால் தொடர்ந்தும் அடக்குமுறையினைக்கையாழ்வது தமிழர்களின் கண்ணீருக்குப்பதிலாக இரத்தத்தையே வரவழைக்கின்றது. பிஞ்சென்றும், பூவென்றும், காயென்றும், காய்ந்த சருகென்றும் பார்க்காமல் கொடுரமான முறையில் வெட்டியும் சூட்டும் கொல்லப்பட்ட தமிழர்களிற்கு சாட்சியம் இருந்தும், வல்லரசுகளின் துணையுடன் நடைபெற்ற அனைத்துக்கொடுமைகளையும் மூடீயே மறைக்கப்பார்க்கின்றன. யாரிடம் போவோம், யாரை நம்புவோம், நம்பியோரெல்லாம் நம்மை நயவஞ்சகத்தால் எமது வரலாற்றையே நாசமாக்கிவிட்டார்களே!!! எம்மிடம் இப்போது இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் “நாடுகடந்த அரசே” அதற்கும் பலவழிகளில் சூழ்ச்சிகளையும் உட்புpசல்களையும் ஏற்படுத்தி சிதைக்கப்பார்க்கின்றனர். தமிழீழம் கிடைப்பது உறுதி…!!! அதன் தேவைக்கும் மேலான அதிக உயிரை நாம் கொடுத்துவிட்டோம். இனி இருக்கும் உயிரில் சிறு பயிரைக்கூட நாம் இழக்காது எமது தமிழீழத்தை பெற்றெடுக்கவேண்டும். எமது தமிழர்களின் ஒற்றுமையின்மையே எமது பலவீனமேஒழிய தமிழர்கள் எந்தவகையிலும் பலத்தை இழக்கவில்லை!!! நம்பி எமது தலைமைத்துவம் இழந்த இழப்புகளையெல்லாம் ஒன்றிணைந்து புலத்தில் வாழும் தமிழர்கள் கட்டியெழுப்பவேண்டும். இந்த நம்பிக்கைத்துரோகங்களால், உண்மையான தமிழ் ஈழப்பற்றாளரையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கவைத்த கேவலமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை மாறவேண்டும். இனி சிங்கள இனவெறியர்களால் ஒரு தமிழனும் கொல்லப்படாத வகையில் எமது போக்கு அமையவேண்டும். புலிகள் இருந்த காலத்தில், தமிழர்களைக் கண்டு உயர் சிங்களச்சிப்பாய்களே அஞ்சிய காலம்போய், சாதாரண சிங்களவர்களே ஏழனமாய்ப்பார்க்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோமே இதை யாரிடம் சொல்லி தீர்ப்பது?போதும் போதும் சிங்களக்காடையரின் சித்திரவதைகள்… கண்களில் அணல் பறக்கும் கொடுமையினை மேற்கொண்டிருக்கின்றது சிங்களம் என்பதனைத்தெரிந்தும் அரசுடன் இணைந்திருக்கும் எந்தத்தமிழ் அரசியல் சில்வண்டுகளும் ஆடியதாகவோ, அசைந்ததாகவோ, இரைந்ததாகவோ காணவில்லை! தமிழ் அரசியல் வாதிகள் எந்த ஒரு சிறு பகுதியைக்கூட அசைக்கமுடியாதளவிற்கு அங்கும் பலத்த பிளவுகளைக் கொண்டிருக்கின்றபோது, எப்படி இலங்கை அரசு தமிழர்களை தரத்தோடு பார்க்கக்கூடும். எமது தமிழ்க்கட்டமைப்புக்குலைந்து விட்டதென்று சிங்கள காடையரிலும் பார்க்க, தமிழ் அரசியல் வாதிகளே பெரிதும் மகிழ்ச்சிகொண்டுள்ளார்கள் போலிருக்கின்றது. தாயகத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் இணைந்து பாரிய உரிமைப்போராட்டத்தை காலதாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும். போர் நிறைவு பெற்றாச்சு, ஆனால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைப்பதில் எந்த தமிழ் அரசியல் வாதிகளுக்கும் அதிகாரம் இல்லை. இதில் அரச தலைவர் எப்படி தமிழர்களை சமமாகன மதிக்கப்போகிழன்றார்?. அமைக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்குழுவில் எத்தனை தமிழர்கள் நியமிக்கப்பட்டார்கள்? இலங்கை அரச அதிகாரத்தில் எந்த தமிழன் சர்வதேசத்தில் எங்கள் நிலையினை எடுத்துக்காட்டக்கூடிய நிலையில் இருக்கின்றனர்??? இவ்வாறான தகாத நிலையினை நிச்சயம் நாடுகடந்த அரசு சர்வதேசத்திற்கு எடுத்துகாட்டியே ஆகவேண்டும். இப்பொது வெளிவந்திருக்கும் தமிழினக்கொடுமைக்கான புகைப்படமானது தமிpழர்களின் உள்ளக்கொதிப்பை மேலும் அதிகரித்திருக்கின்றது என்றால் அதுமிகையில்லை. எழுதும் போதே இரத்தம் கொதிப்பதனால் வருகின்ற வார்த்தைகளை இணையத்தில் போடமுடியாத அளவிற்கு மேலோங்கி வருகின்றபோதிலும் மக்கள் அதன் பிரதிபலிப்பு எது என்பதனை நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள். தமிழர்களுக்கு இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகளுக்க நீதிவேண்டும்… இலங்கை அரசிற்கு எதிராக அரசில் அங்கம் வகிக்கும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் முழங்கியே ஆகவேண்டும்…. – அருகன்

venerdì 14 maggio 2010

தமிழர்களின் "சாகடிக்கப்பட்ட சரித்திரத்தை" வெளிக்கொணர ஒரு சந்தர்ப்பம்...

தமிழர்களின் "சாகடிக்கப்பட்ட சரித்திரத்தை" வெளிக்கொணர ஒரு சந்தர்ப்பம்...

Arugan கடந்த கால தமிழினப்பேரழிவுகளுக்ககெதிராக எமது UNGA ஒன்றியமானது பல்வேறு பிறநாட்டு அமைப்புக்களுடனும், அரசுடனும் இணைந்து ஏராளமான விழிப்புணர்வுகொண்ட அனால் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தமை யாவருக்கும் தெரிந்திருக்கும் என்பதில் அர்த்தமில்லை!!!.

காரணம், தமிழின அமைப்புக்கள் தாம் நினைப்பதை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றார்களே ஒழிய, சரியான திட்டங்களின் மூலம் தமிழினத்திற்கெதிரான “இலங்கை அரசின் போக்கை கண்டிக்க” தம்மைத்தவிர பிறரால் வழங்கப்படுகின்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், அரசியல் சாணக்கியத்தையும் பயன்படுத்துவோரையோ அல்லது பயன்படுத்தத்தகுதியுடைய அமைப்புக்களை முன்நிறுத்தியதோ அல்லது அவர்களுடன் பேச்சுக்களை நடத்தியதோ கிடையாது.

தம்முடைய கருத்திற்கு எதிராக மிகச்சிறந்த கருத்துக்கள் கிடைத்தாலும், அதனை முதலில் நிராகரித்து “மாற்றுக்கருத்துக்காரர்கள்” என்று ஓரங்கட்டிவிடுவார்கள். இவ்வாறான காரணங்கள் எம்மை எமது இனத்திற்குள்ளே பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தியதோடு, பெரும் அழிவையும் மீளமுடியாத அளவிற்கு இழப்பையும் ஏற்படுத்தியது என்றால் அது வரலாறு.

அந்தவகையில் தமிழர்களுக்கான எத்தனையோ மேம்பாடுடைய திட்டங்களை மேற்கொண்ட எமது UNGA ஒன்றிய அமைப்புப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். “அடிப்படையில் இருக்கின்ற நாற்றத்தைக்களைந்தால்த்தான் வீடு முழுதும் சுத்தமாக வாய்ப்புண்டு. வீட்டைத்துப்பரவு செய்வதாகச்சொல்லி வாசல்ப்படிகளை அழுக்காக வைத்திருந்தால் உள்ளே வருகின்றவர்கள் அதிலிருந்து பல நாற்றத்தை மீண்டும் மீண்டும் உள்ளே கொண்டர்ந்துவிடுவார்கள் இல்லையா... இப்போது தமிழர்களுக்காதரவாக கோரிக்கை விடுவது மட்டும் எமது போராட்டமல்ல அதனைத்தீர்த்துவைக்கவும் நாம் துணைநிற்கவேண்டும். அப்போதுதான் வீழ்ந்த தமிழர்கள் எழுந்து கொள்வார்கள் என்ற சாணக்கியத்தை நாம் ஆரம்பத்தில் இருந்து கையாள்வதோடு, இலங்கை அரசின் தவறுகளை அடிப்படையில் இருந்து களைய எத்தணிக்கின்றோம்.”  எனினும் தமிழர்களின் தொடர்பாக நாம் எடுக்கும் எந்தக்காரியத்தையும் அவர்களின் நீதியான நியாயமான உரிமைகள் கிடைக்குமட்டும் ஓயப்போவதில்லை! என்ற நோக்கில் வருகின்ற 23ம் திகதி எமது மக்களின் பேரவலத்தை இத்தாலி வாழ் அனைத்து சமூகத்திற்குக் கொணரும் நோக்குடன் விழிப்புணர்வை பல இனத்தாருடன் சேர்ந்து மேற்கொள்ள விருக்கின்றோம். எனவே, இத்தாலியில் இருக்கும் தமிழின ஆதரவாளர்கள் கலந்த கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அணைத்தும்எமது http://arugan.spaces.live.com இணையத்தில் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாகனத்தரிப்பிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் மற்றும் அனைத்துத்தகவல்களும், இணைந்து செயற்படும் அரச சார்பற்ற அமைப்புகளின் பெயர்களும், அரசசார்புடைய அமைப்புக்களின் விபரங்களும் உள்ளடங்கிய குறிப்பிடப்பட்ட விளம்பரசான்றிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  (இங்கே அழுத்தவும்)

மேலதிகத்தகவல்கள் தேவைப்படுவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.  - 00393204031624.  

இணைந்து செயற்படும்

Associazione Gli angeli del mondo
Associazione Nigeriana Reggio Emilia e provincia
Associazione Bourkinabè del comune di Zonsè in Italia
Associazione cittadini del Burkina-Faso di Reggio Emilia e Emilia Romagna (A.B.R.E.E.R.)
Associazione culturale cinese
Associazione Ivoriani di Reggio Emilia
Associazione Culturale Stranieri Nord,Sud,Africa,Asia
Associazione Generazione Articolo 3 (G.A. 3)
Associazione Provinciale Senegalese
Associazione Provinciale Egiziana
Associazione studenti non comunitari di Reggio Emilia (A.S.N.O.C.R.E.)
Associazione cittadini Moldavi in Italia
Casa della Cultura Islamica di Reggio Emilia
Circolo Sociale Culturale Comunità islamica di Reggio Emilia
Comunità egiziana di Montecchio
Giovani con uno scopo
The Latter Glory Ministries International (Comunità Cristiana Evangelica Internazionale)
Lega Islamica femminile europea (L.I.F.E.)
Organizzazione di amicizia e cooperazione Italo-marocchina
TNGA - Associazione della nuova generazione Tamil (தமிழ் அமைப்பு )
UNGA - Unione della nuova generazione (பெரும்பான்மைத் தமிழர்களால் நடாத்தப்படும் ஒன்றியம். )
Centro Islamico - Moschea di Reggio Emilia
Associazione Ucraini in Italia di Reggio Emilia
Ghanian National Association
Giovani Mussulmani d’Italia - sezione di Reggio Emilia
Associazione culturale “Africa Sunrise"

அரசசார்புடைய

w2

தகவல் UNGA சார்பில் அருகன்.

mercoledì 12 maggio 2010

தமிழர்களின் கவனத்தை ஈர்க்க, புலிகளின் பெயரை பிரயோகிப்பது அரசுமட்டுமல்ல அரசியல்வாதிகளுமே!!! - அருகன்

தமிழர்களின் கவனத்தை ஈர்க்க, புலிகளின் பெயரை பிரயோகிப்பது அரசுமட்டுமல்ல அரசியல்வாதிகளுமே!!! - அருகன்

anoma-fon-80 ஷபாஸ்… மீழ்குடியேற்ற அமைச்சை ஒப்படைத்தால் அவர் மீழ் வெளியேற்றம் செய்ய எத்தணிக்கின்றாரே!!! என்ற ஐயப்பாடு எழுகின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின் மூலம் புலிகளை ஒடுக்கியாகிவிட்டுது, நாடுகடந்த அரசின் மூலம் தமிழர்களின் அரசியலையும் அபிலாஷைகளையும் புலத்தில் தள்ளியாகிவிட்டுது, முன்னாள் புலிகளின் பிரபல்யங்களை உள்ளே வைத்திருந்தால் அதன் காரணம் மீண்டும் அது அரசியல் மற்றும் கிழற்சிகள் என்று மாற்றங்களைக் கொணர்ந்தாலும் என்ற போக்கிலோ இவ்வாறான முயற்சிகைளை செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரதி அமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டியது,  மக்களின் அல்லது புலிகளின் ஆதரவாளர்களை கவரவேண்டுமென்றால், புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் அமரர் சு.ப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் அரசியல் புகலிடம் கோரவிருப்பதாக, வெளிவந்திருக்கும் செய்திக்குப்பதிலாக புலிகள் அமைப்பின் அரசியல்துறைப்பொறுப்பாளர் அமரர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்திற்கும் மற்றும் போராளிகளுக்கும்  வாழ்வாதார வசதியையும், தகுந்த பாதுகாப்பையும் வழங்கி பெருமைப்படுத்தியிருக்க வேண்டுமேயொழிய, நாட்டைவிட்டு அதிலும் எமது ஈழத்தை விட்டு வெளியேற்றியாகவேண்டும் என்ற எண்ணம் பொருத்தமாகத் தெரியவில்லையே!இந்த கோரிக்கை குறிப்பிட்ட குடும்பத்தினருடையதாகவே இருக்கட்டும்… மன உளைச்சலில் இருக்கும் தமிழர்கள் தற்போது எடுக்கும் முடிவில் தவறுகள் இருந்தாலும் இருக்கலாம் மகிழ்ச்சியில் இருப்பவர்கள் அவர்களுக்கு ஆறுதலும், ஆதரவாகவும், ஆலோசனையும் எதிர்காலத்தை எடுத்துரைப்பது அவசியமல்லவா!!!

இந்தியாவில் புகலிடம் வழங்குவதற்குப்பதிலாக இலங்கை ஏன்அவர்களுக்கு “சிறப்பிடம்” வழங்கக்கூடாது?...

“அவர்களுக்கு ஏன் சிறப்பிடம் வழங்க வேண்டும்…???” என்ற கேள்வியை தாங்கள் கேட்கலாம்!!!....

ஒன்றல்ல  பல பேச்சுக்களில் இலங்கை அரசுடன் சமமாக மதிக்கப்பட்டு சமரசத்தில் பங்காற்றிய ஒரு தேசதூதுவனின் மனைவி பிள்ளைகள், போராட்டத்தில் தமிழர்களை அழித்த சரத்பொன்சேகாவின் மனைவியிலும் பிள்ளைகளிலும் மேலானவர்கள் அல்லவா? சரத்தை இலங்கை அரசு கைது செய்ததும் அவருடைய குடும்பம் புலத்தில் புகலிடம் கேட்பதற்குத்தகுந்த காரணங்கள் இருந்த போதிலும் அவர்கள் தேர்தலில் தம்மை ஈடுபடுத்தியிருக்கும் போது, இவர்கள் மட்டும் ஏன் நாடுவிட்டு நாடுசெல்ல வேண்டும். “இலங்கை அரசு தகுந்த முறையில் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை என்றே இந்த உரிமைப்போராட்டம் இடம்பெற்றது…” அவ்வாறான போராட்டத்தை மீண்டும் தொடராது அமைச்சராகிய தாங்கள் ஏன் அதற்கு ஆவணசெய்யக்கூடாது?

இலங்கை அரசு நினைவுத்தூபிகள் அமைப்பதற்குப்பதிலாக, அந்த நிதியில் ஏன் இவர்களுக்கு "நிலையான" வாழ்வை அளிக்கக்கூடாது?

அந்தத்திட்டத்தை ஏன் அமரர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கக்கூடாது? இதே விடயம் தான் மதிப்பிற்குரிய பார்வதி அம்மாளுக்கும் நடந்ததே…!!! ஒரு பிரபல்யத்தை வைத்து அரசியல் செய்வதிலும் பல சிறப்பு வழிகள் இருக்கின்றனவே! இலங்கையின் சமாதானத்திற்காகவும் சிறுபான்மையினத்தின் உரிமைக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த பெயர் “தீவிரவாதிகள்”…ஆனால் அதன் சரியான அர்த்தத்தை அமைச்சரும் முன்னாள் தமிழீழ போராளியாகிய தாங்கள் அறியாததல்ல, 
எனவே புலிகளில் இருந்தோர் என்ற காரணத்தால் அவர்களை மாற்றுக்கண்ணோட்டத்தில் பார்க்காது, தங்கள் இலங்கையின் அதிகாரத்தைப்பயன்படுத்தி ஏன் அவர்களை தரமிக்க நிலைக்கு உயர்த்தக்கூடாது?
கடந்த காலத்தில் தமிழக முதல் அமைச்சர், தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு இந்திய பிரஜாஉரிமை வழங்கப்போவதாக சொன்னதும் அதனை எதிர்த்த தாங்கள் எப்படி அந்த குடும்பத்தை அங்கு அனுப்ப ஆவண செய்யப்போவதாக தகவல்வெளிவந்தது?... பார்வதி அம்மாளை சிகிட்சைக்கே ஏற்காத இந்திய அரசு இவர்களை ஏற்குமா என்ற கேள்வி ஏன் எழவில்லை? இவரை வைத்து தமிழகத்தில் அரசியல் இடம்பெறாது என்று என்ன நிச்சயம்… என்று இந்தியா கேள்விகேட்டால் அனுப்பப்படுகின்ற அந்தக்குடும்பம் அங்கும் இங்குமாக அங்கலாய்க்க நேரிடாதா?
அமரர் தமிழ்ச்செல்வனை நோர்வே நன்கு அறியும் அந்த நோர்வேயின் அனுசரணையுடன் அவரை நோர்வே செல்ல அனுமதியை தாங்கள் பெற்றுக்கொடுத்தால், இந்தியாவில் வாழ்வதிலும் பார்க்க அவர் குடும்பம் மிகச்சிறப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழ வழியாக அமையாதா? … … …
எனினும் தமிழ் மக்களின் கவனத்தை தாங்கள் இன்னும் ஈற்கத்தொடங்கவில்லை என்றே தெரிகின்றது. இந்தக்கருத்தை கருணா அம்மானாகப்பார்க்காது, பிரதி அமைச்சர் மதிப்பிற்குரிய வி. முரளிதரனாகப் பார்க்கும்படி ஒவ்வொரு தமிழனின் நலம் வேண்டி பணிவாகக்கேட்டுக்கொள்கின்றேன்.
நிலையில்லா  நிகழ்காலம் அவசியம்தான் -ஆனால்
நிலையான எதிர்காலத்தை நோக்கிய விழிகள்வேண்டும்
– அருகன்.   (12/05/2010)

sabato 1 maggio 2010

“புலிகளின் பெயரைக் கறைப்படுத்துவதாக எண்ணி, தேசத்திற்காக மாண்ட தமிழர்களின் தியாகத்தை மறந்து விடாதீர்கள்”

தமிழ் அமைச்சாகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைததுத் தமிழ் அரச ஊழியர்கள், மேலும்  தமிழ் அரசியற் கட்சிகள் போனறவற்றின் கவனத்திற்கு…!!

தமிழர்களுக்காக கட்டப்பட்ட இராணுவக்கட்டமைப்பு, அழிக்கப்பட் நிலையில், அப்பிரதேசங்கள் அனைத்திலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதையும், ஒரேதேசத்திற்குள் அதாவது சிங்கள பிரதேசங்களில் தமிழ் பதாகைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் பிரதேசத்தில் வலுக் கட்டாய உட்செலுத்தல்கள் இடம் பெறுகின்றமையும், தமிழர்களின் நிலத்தில் தேவையற்ற “புத்தர்” சிலைகளை அமைப்பதும், தமிழ் சரித்திரத்தை ஒதுக்கி புதிய நினைவுச்சின்னங்களை அரசுசார்பில் அதிலும், சிங்கள பண்பாட்டில் அமைப்பது போன்றன முறையற்றது என்று தமிழர்களாகிய தங்களுக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியவையல்ல!!!

venerdì 30 aprile 2010

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -9) –அருகன்

hai இந்தப்பகுதியுடன் வீண் விவாதங்களையும், அருகனை பற்றிய அலட்டல்களையும் விடுத்து, அடிகள் அனைத்தும் இடிகளாக விழும்படியும், மடியும் எங்கள் உரிமைகளின் விடிவு தெரியும்படியும், ஆழமாகச் சிந்திக்கும் பகுத்தாற்றல் தொடரும்படியும் அடியெடுத்து வைப்போமா??? கடந்த கலங்கள் அனைத்தும் அறிமுகங்கள் என்றே வைத்துக் கொள்வோம். எனினும் பலர் தொடர்ச்சியாக ஒரே விடயத்தை பல ஆக்கத்திற்கு விமர்சித்திருந்தார்கள். எனவே அவ்வாறான பொழுது போக்குகளை விடுத்து, தமிழர்களுக்கு நல்லதொரு தேசத்தை திடமாகக் கட்டியெழுப்ப எம்மாலும் முடியும் என்ன நம்பிக்கையினைக் கொள்வோம். புலிகள் மட்டுமே பலிகளுக்குச் சொந்தக்காரர்கள்… ஆனால், தமிழர்களின் விடிவிற்கு யார் வேண்டுமென்றாலும் சொந்தக்காரர்கள் ஆகலாம். நீயோ இல்லை நானோ சாதாரணமானவர்கள் என்று யார் சொன்னது? உன்னை நீயே தாழ்த்தி கேவலப்படுத்துகின்றாய்! ஊன்னில் உள்ள அரிய பொக்கிஷத்தை எப்போதாவது தூசிதட்டியது உண்டா?!!!!

giovedì 29 aprile 2010

நாடு கடந்த “அரசு” என்பது ஒரு அமைப்பேயன்றி அரசாகமுடியாது! - Windows Live

நாடு கடந்த “அரசு” என்பது ஒரு அமைப்பேயன்றி அரசாகமுடியாது! - Windows Live

தமிழர்களின் உரிமையும், உயிரும் பரிட்சித்துப்பார்ப்பதற்கு, விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்களல்ல!!! ஆயிரம் பரிட்சயத்தில் இரு முடிவினைக் கண்டெடுக்க

நாடு கடந்த “அரசு” என்பது ஒரு  அமைப்பேயன்றி அரசாகமுடியாது!

04-01-2010-2-24-19-pm_Tamil copy பல் தேசத்தில் உருவாக்கப்படும் அமைப்புக்களின் ஒன்றியமாகத் தலைமைச் செயலகம் செயற்படலாமே ஒழிய ஒரு அரசாகச் செயற்பட முடியாது. இதற்கு எந்த நாட்டிலும், எந்த மனித உரிமை சட்டத்திலும், அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பிலும் இடம் இல்லை! இப்படிப்பார்க்கும் போது தமிழ் அரசுக்கட்சி என்றால் தமிழர்களுடைய அரசு கொண்ட கட்சி என்று பொருள்படுமா?

martedì 27 aprile 2010

"சிறுதுளி பெருவெள்ளம்" ஆதரவு கரம் கொடுங்கள்தமிழ் உறவுகளே!...

இத்தாலியில் மரணமடைந்த பெண்தொடர்பக மீண்டும் ஒரு பணிவான வேண்டுதல்!!!

"சிறுதுளி பெருவெள்ளம்" ஆதரவு கரம் கொடுங்கள்தமிழ் உறவுகளே!...

“தமிழீழ” அமைப்புக்களிடமிருந்தும், தமிழ் அமைப்புக்களிடம் இருந்தும், தமிழர்களிடம் இருந்தும், மற்றும் நிறுவன உரிமையாளர்களிடம் இருந்தும் நிதி உதவி கோரப்படுகின்றது!!!  - உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தை இதனூடாகவும் காட்டவேண்டிநிற்கின்றோம். அதுவாகில், கடந்த காலத்தில் உலகத்தின் அதைத்து தமிழ் இணையங்களிலும் வெளியிடப்பட்ட "இராமர் விஜயலக்ஷ்மியின்" மரணம் (கொலை) தொடர்பாக அனைவரும் அறிந்ததே! குடும் உறவினை தொடர்பு கொள்ள ஆதரவாக இருந்த இணைய மற்றும் இணைய வாசகர்கள்அனைவருக்கும் எமது நன்றிகள்.

அந்த பெண்ணின் உடலத்தை எதிர்பார்த்து, இலங்கை - வவுனியாவில் அவருடைய கணவனும,; 17 வயதையுடைய மகளும் எதிர்பார்த்திருக்கின்றனர். இவர்கள் சிதம்பர புரம் என்னும் இடத்தில் கற்குளத்தில் வசித்துவருகின்றனர். தற்போது உள்ள சூழலில் அவர்களால் பொருளாதார நிலைகளுக்கு முகங்கொடுக்க முடியாது என்பதனை யாரும் சொல்லித் தெரியத் தேவையிருக்காது.

எனவே, அந்த அம்மையாரின் பூதவுடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை இத்தாலியில் இருந்து மேற்கொள்ள “ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம்” UNGA சம்மதம் தெரிவித்திருந்ததையும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை இத்தாலி மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நாம் இணையங்கள் மூலம் ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தோம். எனவே, அதற்கு ஏற்படும் செலவினத்தை விருப்புடைய அன்பர்கள் தந்து உதவுமாறும், செலவு போக மேலதிக பணத்தை அந்த குடும்ப நலனுக்காக கையளிக்க ஆவணசெய்யுமாறும் தமிழ் உறவுகளை வேண்டிநிற்கின்றேன்.

இதில் மக்களால் வழங்கப்படும் எந்த உதவித்தொகையிலும் யாரும் சந்தேகப்படத்தேவையில்லை காரணம் அனைத்துத்தகவலும் இணையவாயிலாக சமர்ப்பிக்கப்படும். அதுபோலவே மீதியாக வருகின்ற பணத்தின் விபரங்களும் இணையவாயிலாக வெளியிடப்படும்.
கடந்த காலங்களில்  தமிழர்களுக்காக குரல்கொடுத்து, எமது ஒற்றுமையினைக்காட்டிய உறவுகள் இதற்கும் ஆதரவு வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.

இது தொடர்பாக நிதி ஆதரவு வழங்க முன்வருவோர் தேவைஏற்படின் கணவனுடனோ, அல்லது மகளுடனோ தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் நிதி அன்பளிப்பினை வழங்கவும், அதற்குத்தேவையான தொடர்பு இலக்கங்களையும் இதில் இணைக்கின்றேன். நேரடியாக அவர்களுக்கு உதவ முன்வருவோருக்கும் எமது நன்றிகள்!!! ஆனால் தற்போது, அந்த பெண்ணின் உடலை இலங்கைக்கு அனுபக்புவது தொடர்பான செலவினை இத்தாலியில் மேற்கொள்வதற்கான உதவியை, உறவுகள் தீர்த்துவைக்க பணிவுடன் வேண்டுகின்றோம். 

கணவனின் தொடர்புகளுக்கு
பொன்னுசாமி இராமர் (0094-0244906650 , 0094- 0779195134)
வீட்டிலக்கம் 76 கற்குளம்- 3
சிதம்பர புரம்
வவுனியா - இலங்கை

ஒன்றியத்தின் அனுமதியுடன்-நிதியை வழங்க வேண்டிய விபரம் (வழங்குவோர் தயவு செய்து தங்கள் விபரங்களை arugan@hotmail.it  or arugan@hotmail.com மெயில் மூலம் அனுபக்பிவைக்குமாறும் வேண்டப்படுகின்றீர்கள்)

வங்கிவிபரம்

image

குறிப்பு-அனைத்து ஊடகங்களும் இத்தால் தெரிவிப்பது, தங்களுடைய வாசகர்களின் அணைவுடன் இதற்கும் ஆதரவு தருமாறு மிகப்பணிவுடன் வேண்டப்படுகின்றீர்கள்- அன்பன், அருகன்.

lunedì 19 aprile 2010

நடந்து முடிந்த தேர்தலும் தமிழீழ தேசத்தின் எதிர்பார்ப்பும் அனலை நிதிஸ் ச. குமாரன்

sarath-magintha நடந்து முடிந்த தேர்தலும் தமிழீழ தேசத்தின் எதிர்பார்ப்பும்
அனலை நிதிஸ் ச. குமாரன்
கடந்த மே மாதத்துடன் முப்பது வருட ஈழத் தமிழரின் ஆயுதவழிப் போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்த சிறிலங்கா, ஜனாதிபதிக்கான தேர்தலை ஜனவரி நடாத்தினார்கள்.  மகிந்தா மீண்டும் அமோக வெற்றிபெற்ற கையுடன் நாடாளுமன்றத்திற்கான தேர்தலையும் இந்த ஆண்டே நடாத்தி நாடாளுமன்றத்தையும் தனது வசம் கொண்டுவரவேண்டும் என்ற ஆதங்கத்துடன் இந்த தேர்தலையும் ஏப்ரல் 8-ஆம் திகதி நடாத்தி அதிலும் மகிந்தாவின் கூட்டணி வெற்றிபெற்று புதிய நாடாளுமன்ற அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 

domenica 18 aprile 2010

ஆழுமை இல்லாத இடத்தில் அதிகாரம் இருப்பது பொருந்தாது

Sampanthan--hakeem அரசனை நம்பி புருசனைக்கைவிட்டமாதிரி இருக்கின்றது கூட்டமைப்பினரின் செயல். மேலும் மீசையில மண்ஒட்டாதது மாதிரி “மக்களாணை” … மக்களாணை என்கின்றார்களே, 22 பாராளுமன்ற உறுப்பினர்களை விட 13 பாராளமன்ற உறுப்பினர் அதிகமோ????
இராஜதந்திரமற்ற கூட்டமைப்பினர், எதிரியின்கையைக் குலுக்காமல் , துரோகியின்  காலில் விழாசென்றார்கள். ஆனால் பேச்சு நடத்து தயாராகும் கூட்டமைப்பினருக்கு ஒரு தகவலை  “ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்ல வெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார். “ தெரிவித்திருக்கும் இந்த கட்சித்தலைவரின் வார்த்தையில் அடையாளம் காட்டப்பட்ட பகுதியை கூட்டமைப்பினர் நன்கு உணரவேண்டும். பிரபாவுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, கடைசிவரை அரசுடன் மற்றும் எதிர்க்கட்சியுடன் இணைந்திருந்தவர்கள் இப்போது எது செய்தாலும் என்ன கிடைக்கப்போகின்றது. கூட்டமைப்பினருக்கு இன்னும் அறிவு தெளியவில்லை… விரைவில் கூட்டமைப்பின் தலைமை மாற்றப்படவேண்டும். அப்போதுதான் தகுதியான அறிவுகள் செயற்படும். "ஆழுமை இல்லாத இடத்தில் அதிகாரம் இருப்பது பொருந்தாது."

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) – Arugan (18/04/2010)

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) – Arugan

  
a-post இதுவரைக்கும் சில கருத்துக்களுக்கு பதிலோ அல்லது, பக்கச்சார்போ கொடுக்கமுடியாதவர்கள் தாம் பேச வருவதை நிதானமின்றி பேசுவதாலும், எப்படியும் எழுதலாம் என்று விளக்கமற்ற முறையிலும் விமர்சனங்களை எழுதுவது தகுந்ததல்ல. எனவே அன்பர்கள் தாம் எழுதும் கருத்தை திடமாகவும் முறையாகவும் எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இது சாதாரண விடயமாகக்கருத வேண்டாம், இந்த ஆக்கங்களை பல அரசியல் வாதிகளும் அமைப்பாளர்களும் எடுத்துக் கையாண்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதனை நினைவில்வைத்துக்கொள்ளுங்கள் அன்பர்களே!!!

முன்னைய பகுதிகளில்,
•    பிரபாகரன் மனத்திடமுள்ள ஒருமனிதன் ஆனால் அரசியல்திட்டத்தில் கோட்டைவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தோம்…
•    பிரபாகரனைப் பாராட்டிப் பாடல்கள் புனையப்பட்டபோதும், மற்றைய தலைசிறந்த போராளிகளுக்கோ, தந்தை

sabato 17 aprile 2010

பிரித்தானிய கட்சிகளுடன் புலிக்கட்சிகள் போட்டி… தமிழர்களின் உரிமை புலத்தில் விலைபோகின்றன…அருகன்

 

pflt பிரித்தானிய கட்சிகளுடன் புலிக்கட்சிகள் போட்டி… தமிழர்களின் உரிமை புலத்தில் விலைபோகின்றன…இதுதானா புது நகர்வுகள்?... என்ன புரியவில்லையா? பிரித்தாதனியாவின் தேர்தல் களத்தையும் பிரித்தானிய அரசியல் கட்சியின் சொதசொதப்பும்…

பிரித்தானியாவில், அண்ணளவாக 3லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் வாழ்கின்றார்கள். அத்தோடு தற்போதைய தமிழர்களின் துன்பவியல் சம்பவத்தால் மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியா நோக்கி நகர்ந்தோர் தொகையும் சேர்த்துப்பார்த்தால் இன்னும் அதிகம். இது இப்படி இருக்க, பிரித்தானிய அரசியல் கட்சிகள் தமிழர்கள் பக்கம் தமது பார்வையினைத்திருப்பியுள்ளார்கள்.

அவர்கள் பார்வையைத்திருப்பியதை தமிழர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக தமது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்களின் சிக்கலான பிணக்கை தொக்கலாக தூக்கிகாட்டியுள்ளார்கள். இதனை அறிந்த தமிழர்கள் ஏன் மற்றவனிடம் வாக்குகளைப்போடவேண்டும் நாமே அரசியல் கட்சியை ஆரம்பிப்போம் என்று தொடங்கிய கட்சிதான் தற்போதைய தமிழ்க்கட்சி.

இதில் ஒரு முக்கிய விடயத்தை கவனிக்க வேண்டும். உண்மையிலேயே தமிழர்கள் தேர்தல் காலத்தில் எப்படியெல்லாம் நகர்வைமேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டார்கள். ஆரம்பத்தில் எமது ஆட்சியையே சொதப்பியவர்கள் இப்போது ஆயுளையே சொதப்பப்போகின்றார்கள்.

வாக்குறுதிகளை யார்வேண்டுமென்றாலும் வழங்கலாம். அதனை நிறைவேற்றமுடியுமா? என்பதனை முதலில் பார்க்க வேண்டும். வலு முன்மூரமாக தமிழ் அழிவு நடந்த போது வேடிக்கை பார்த்த பிரித்தானியா, இப்போது தேர்தல் காலத்தில் கத்துகின்ற கத்தலில் தமிழர்களுக்கு தமிழீழம் கிடைக்கப்போகின்றதாம்.

வெள்ளைத்தோல் இங்கிலீசு கதைத்தால் அவன் அறிவாளியாம், அரசியல் வாதியாம்… தமிழர்கள் தமிழில் அதே கருத்தை தெரிவித்தால் அவர்கள் முட்டாள்களாம். நல்ல அறிவுடைய தலைமைகளைக்கொண்ட அமைப்பை வளர்த்துவைத்திருக்கின்றோம்.

கடந்த காலத்தில் தமிழர்கள் ஒன்றுகூடிய விதமும், தொகையும்… மற்றும் உண்ணாவிரத போக்கும் மட்டுமல்லாது, வீதி வழியே காவல்அதிகாரிகள் இழுத்துச்செல்லும் போதுகூட அஞ்சாத தன்மையுடைய அடங்காத்தமிழனை பக்கமாக அணைத்துவைத்திருக்க தற்போது அங்குள்ள கட்சிகள் போடும் “கானல் நீரே”  இவ்வறிக்கைகள், மற்றும் புதிக கட்சிகளின் lon-in-1உருவாக்கம்.

உங்களுக்கு நினைவிருக்கா, கடந்த காலத்தில் Mr.தொல் திருமாவளவன் போட்ட போடெல்லாம் தனது பாராளுமன்ன அவைக்கென்று, பலதடவை ஆக்கங்களை எழுதியிருந்தேன். அதுபோலவே சீமானுடைய போக்கும், அவருடைய புதிய கட்சி நகர்வும். அது இப்போது தமிழர்களுக்குப்புரிந்திருக்கும்.

ஒவ்வொரு புதிய அனுகுமுறையினையும் தமிழர்கள் இதுதான் சரியானதென்று எண்ணி எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள். நாளை நாடுகடந்த அரசிற்கெதிராக ஏதும் அசம்பாவிதம் இடம்பெற்றால் அனைவரையும் அதே வீதிப்போராட்டத்தில் தள்ளவே இப்போதைய நகர்வுகள்.

இனி அடுத்த கட்ட நகர்வு எது தெரியுமா? தமிழர்களிடம் இருந்து எவ்வாறு நிதிகளைத்திரட்டலாம் என்பதே!!! ஆதற்கு நேரடி வழிகளைப்பயன்படுத்த முடியாது, ஆயுத முனையினைக்காட்டி மிரட்ட முடியாது, ஊர்விலாசத்தைத்தாருங்கள் என்று அச்சுறுத்தமுடியாது, வேறு வழிகளை கையாளவேண்டும்.

எனவே மக்கள் கவனமாக தமது பார்வைகளை செலுத்த வேண்டும். உண்மையில் எத்தனையோ அமைப்புக்கள் தமிழர்களின் தேசிய மற்றும் அவர்களின் உரிமையினையும் வளர்ச்சியையும் நோக்கி செயற்படுகின்றது. அவ்வமைப்புக்களை ஓரங்கட்டி புதிய அமைப்புக்களை உருவாக்கி அதனூடாக தமிழர்களுக்கு விடிவு தரப்போவதாக பல அணுகுமுறைகள் நடக்கின்றதை மக்கள் அறிவார்கள்.

தமிழர்களைத் தமிழர்கள் ஓரங்கட்டுவதென்பது இன்றல்ல ஆரம்ப காலத்திலிருந்தே இடம்பெறுகின்றது. மேலும் ஒரு அமைப்பு நன்மைகருதிய செயற்பாடுகளையும் திறனுள்ள அணுகுமுறையினையும் மேற்கொண்டால் அதனை சிதைக்கச்செய்வதில் பலத்த அக்கறை காட்டுவதும் தமிழ் அமைப்புக்களே!!!

“முதலில் சேவை பிறகு வாக்கு”; இதை மக்கள் எப்போது தோதல் காலத்தில் உணர்கின்றார்களே அப்போது அபேட்சகர்கள் தம்மை தமிழர்களின் பார்வைக்கேற்றவகையில் நகர்த்துவார்கள் என்பதே உண்மை. புலிகள் இயக்கத்தின் காலத்திலேயே, பேச்சுக்களை முஸ்லீம் கட்சியுடன் தலைவர் பேச்சை நடத்திவிட்டார். பிறகு என்ன சம்மந்தன் புதிதாக ஒன்றைக்கதைக்கப்போகின்றார். பிரிந்த தமிழ்க்கட்சியை மதிக்கத்தெரியாத ஐயா அவர்கள் முஸ்லீம் கட்சியுடன் பேச்சுக்களை நாடவேண்டும். காரணம் அவர்களிடம் சில பாராளுமன்ற அங்கத்தவர்கள் இருக்கின்றார்களே!!! இது தமிழ்த் தேசத்துரோகமாகப்படவில்லையோ? ஏதோ இன்றுதான் தமிழர்களின் பிரச்சனை உருவாகியது போலும், அதை பற்றி தற்போது பேசிதீர்க்கப்போவதாகவும் உள்ளது இந்த செயற்பாடுகள். தேர்தலுக்கு முதல் நடந்த அனைத்தையும் தமிழர்கள் சற்று பின்நோக்கி நினைவுபடுத்த வேண்டும். சம்மந்தன் ஐயா அவர்கள் தனக்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து தமிழர்களுக்கு என்ன செய்யப்போகின்றார் என்பதனைப்பற்றி எந்தவித அறிக்கையும் இல்லை… பேச்சுக்களை நடத்தப்போவதாக பாசாங்குகாட்டுகின்றார். அதுபோலவே பிரித்தானிய நகர்வுகளும் அமைகின்றது. புதிதாக ஒரு கட்சியை உருவாக்கி தம்மை வெளிப்படுத்துவதிலும்பார்க்க ஏன் நாடுகடந்த அரசின் ஒரு பகுதி அல்லது அதன் பிரிவு ஒவ்வொரு நாடுகளிலும் தமது கட்சியை அமைத்து தேர்தலில் பங்குபெறக்கூடாது???  இருக்கின்ற அமைப்புப் போதாது என்று மேலும், மேலும் அமைப்புக்கள்!!! ஆனால் அதனால் தமிழர்கள் அடைந்த நன்மைகள் என்ன??? - அருகன்

martedì 13 aprile 2010

இதழ் ஒன்றுக்கு உருத்திரகுமாரன் நேர்காணல்

தமிழர்கள் தோற்றுவிடவில்லை – இதழ் ஒன்றுக்கு உருத்திரகுமாரன் நேர்காணல்

[ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2010, 07:25.49 AM GMT +05:30 ]

நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கத்தின் இணைப்பாளர் உருத்திரகுமாரன் அவர்கள் இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் இது. 2009 மே 17ன் பின்னரான தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட பரிமாணம், புதிதாய் பிறப்பெடுத்திருக்கும் நாடு கடந்த அரச உருவாக்கம், கே.பி மற்றும் உருத்திரகுமாரன் மீதான தனிமனித வசைபாடல்கள் என பல்வேறு வினாக்களோடும் பயணிக்கிறது இச் சிறப்பு நேர்காணல்.

கேள்வி:  2009 மே மாதத்திற்குப் பிறகு உருவான நாடு கடந்த தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

பதில்:  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதனை உருவாக்குவதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து இவ் அரசாங்கத்தினை அமைக்கும் பணி முன்னேற்றமடைந்து வருகிறது. இவ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பதனை ஆய்வு செய்து இதனை அமைக்கும் வழிவகைகள் தொடர்பான அறிக்கையினை மதியுரைக்குழு தைத்திருநாளன்று மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தது. 15.02.2010 வரை மக்கள் கருத்துக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மீளமைக்கப்பட்ட அறிக்கை 15.03.2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் இடம் பெறுவர். இவர்களில் 115 பேர் மக்கள் மத்தியிலிருந்து இதற்கென நடாத்தப்படும் தேர்தல்கள் மூலமாக ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தல்கள் உடனடியாக நடாத்துவதற்கு கடினமான இடங்களில் 20 பேராளர்கள் முதலாவது அரசவையால் தெரிந்தெடுக்கப்படுவார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான நேரடித் தேர்தல்கள் மே மதம் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் நடாத்தப்படுகிறது. அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19  காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும்  இலங்கை அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவது ஈழத் தமிழ் மக்களிடம் புதியயொரு நம்பிக்கையையும் நாம் தோற்றுப் போய்விடவில்லை என்ற உணர்வையும் கொடுத்து வருகிறது.

கேள்வி: கே.பி. பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள். குறிப்பாக அவர் இலங்கை அரசோடு பேசிக் கொண்டு தானாக முன் வந்து கைதாகி கொழும்பில் அரசு அரவணைப்பில் இருக்கிறார் என்பது பிரதான குற்றச்சாட்டு இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:   திரு செ. பத்மநாதன் அவர்கள் (கே.பி.) மலேசியா கோலாலம்பூரில் வைத்து மலேசிய இராணுவப் புலனாய்வுத்துறையால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான நம்பகரமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட இக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம். அவர் தானாக முன்வந்து கைதாகியது என்று கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. 30 வருடங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்தில் இயங்கிய ஒரு போராளி குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமானதும் அல்ல.

இவர் இலங்கையின் கைதியாகிய பின்னர் பல்வேறுவகையான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதில் இருந்து வசதியாக வைக்கப்பட்டள்ளார் என்பது வரையிலான செய்திகள் வரை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் உண்மை பொய் குறித்த விடயங்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இருந்த போதும், இலங்கை தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று. எனவே அவர் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப்புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக்கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முதல் அறிவிப்பினை இவரே விடுத்திருந்தபடியால் எத்தயை ஏற்பாட்டின் அடிப்படையில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை இச் சந்தர்பத்தில் வெளிப்படுத்தல் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப் பொறுத்த வரையில் நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப்பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம். இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 15.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தான் விடுத்திருந்த அறிவிப்பில் இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம்.

இதற்கிடையில், திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.

இவை மட்டுமன்றி, நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப்போகிறவர்கள் திரு கே.பி யோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல. இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்ட, சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத் தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.

கேள்வி:  எல்லா தரப்புக் குழுக்களையும் ஒருங்கிணைத்து பரந்து பட்ட ஒரு தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியாதா?

பதில்:   நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு இத்தகைய நோக்கமும் உண்டு. இத் திட்டம் தொடர்பாக நாம் 16.06.2009 அன்று விடுத்த முதலாவது முன்மொழிவில், ”1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய – தமிழர் ஓர் தேசிய இனம் – வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம் – ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது” என்பதனை இம் முயற்சியின் அடிப்படைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் தமிழர் சமூகத்தின் மத்தியில் இயங்கி வரும் உருவாகி வரும் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்குரிய திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் உருவாக்கும் போது நீங்கள் குறிப்பிடும் வகையிலான இணைவு நடந்தேறும் என்றே நான் கருதுகிறேன்.

கேள்வி:  புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா?

பதில்:  மே மாத நடுப்பகுதி வரை நாளாந்தம் பெருந்தொகையான மக்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை.

நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே.

கேள்வி:  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் உலங்கிலும் உள்ள தமிழர்கள் தலைமை ரீதியாக பிளவு பட்டிருக்கிறார்கள். இது பெருங்குறை இல்லையா?

பதில்: முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டம்வரை இருந்த சூழலும் தற்போதய சூழலும் முற்றிலும் வேறுபட்டது. இப் புதிய சூழலில், புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டுள்ளதாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை இவற்றின் குறிக்கோள் ஒன்றுதான். ஆனால் அவற்றை அடையும் மூலோபாயங்களில் தான் வித்தியாசம்.

வித்தியாசமான மூலோபாயங்களைக் கொண்டு ஒரே குறிக்கோளை நோக்கி இயங்குவது நன்மை பயக்கக்கூடியதே. இதற்கு இம் முயற்சிகளிடையே ஏதோ ஓரு வகையான ஒருங்கிணைவு இருத்தல் அவசியம். இவ் ஒருங்கிணைவு ஒரு ஒருமைப்பாடு என்ற வடிவத்தில், வேற்றுமையிலும் உடன்பாடுகாணக்கூடிய ஒரு தளத்தில் இருந்தாலே போதுமானது. இத்தகைய புரிந்துணர்வு செயற்பாடுகளுக்குள்ளால் எட்டப்படக்கூடியது என்பதனை நான் திடமாக நம்புகிறேன். தற்போதைய இடைமாறு காலகட்டத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் எல்லாம் செயற்பாடு எனும் தளத்தில் இணையும்போது தெளிந்து விடும்.

கேள்வி: நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய உலகச் சூழலில் உலக நாடுகளின் கவனத்தை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை தன்பால் ஈர்க்குமா?

பதில்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முழுக்க முழுக்க ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக அமைக்கப்படுகிறது. இதன் செயற்பாடுகளும் முழுமையாய் அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கமைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஜரோப்பிய மற்றும் மேற்குலக மக்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகுந்த மதிப்புக் கொடுப்பவர்கள். இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை இந் நாடுகளால் நிராகரிக்கமுடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இலங்கை அரசு தனது ஆரவாரத்தால் உலக நாடுகளின் கவனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது திருப்பி விட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து  இலங்கை அரசு அச்சமடைந்துள்ளது என்பதனை இதன் ஊடாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவது, அது ஜரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய உலக நாடுகளாக இருந்தாலும் சரி – இந் நாடுகளின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்போதுதான் முழுமையாக வெற்றியளிக்கும்.

தற்போது இலங்கை அரசின் போக்கில் ஜரோப்பிய நாடுகள் உள்ளடங்கலான மேற்குலகம் அதிர்ப்தியடைந்திருப்பதனை உணரமுடிகிறது. இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பக்குத் துணைபுரியக்கூடிய சாதகமான ஒரு அம்சமே.

கேள்வி:  உலகின் எந்த ஒரு நாடுமே ஒரு இன விடுதலைப் போராட்டம் என்கிற அளவில் கூட ஈழ மக்களின் இறையாண்மை உணர்வுகளை புரிந்து கொள்ள வில்லையே?

பதில்:  இங்கு நாடுகள் எனும்போது அரசுகளையும் அந் நாட்டு மக்களையும் நாம் பிரித்து பார்த்தல் நல்லது. ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கு போராடும் போது அவ் இறையாண்மையின் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசம் தனிஅரசினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குரிய சூத்திரம் அரசுகளைப் பொறுத்த வகையில் நலன்கள் என்ற மந்திரக்கோலில்தான் தங்கியுள்ளது.

அதற்குரிய சமன்பாடு மிக எளிதானது. இலங்கைத்தீவு ஒரு நாடாக இருப்பதா அல்லது இரு நாடுகளாக இருப்பதா தமது நலன்களுக்கு நல்லது என்ற கணக்கிலிருந்துதான் அரசுகளின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதனால் ஈழத்தமிழ் மக்களின் இறையாண்மை உணர்வினை உலக நாடுகள் புரிந்து கொள்ள முயலவில்லை. இவ் விடயத்தில் இந்தியாவின் நிலையும் உலக நாடுகளின் நிலைப்பாட்டிற்கு காரணமாகவிருந்திருக்கிறது.

ஆனால் மக்களைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கான நியாயப்பாடுகள் உரியமுறையில் அவர்களைச் சென்றடையும் போது எமது கோரிக்கையின் நியாயத்தன்மையினைப் புரிந்து கொளகிறார்கள். ஆதரவினைத் தருகிறார்கள்.

கேள்வி:  வன்னி மீதான போரில் இந்தியாவின் பங்களிப்பு வெளிப்படையானது. தமிழர்களுக்கு எதிரான இந்தியத் தலையீடு தமிழகத்திலும் புலத்திலும் இந்தியாவின் மீது கடும் விசனத்தை உண்டு பண்ணியிருக்கும் நிலையில் இந்தியா உங்களின் கோரிக்கைக்காக உதவும் என்று நம்புகிறீர்களா?

பதில்:  ஈழத் தமிழர் தேசத்திற்கு இந்திய அரசு உதவுவது என்பது அதன் நலன்களோடு தொடர்புபட்டது. முற்றி வரும் உலக ஒழுங்கில் இந்தியாவின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திப்பதற்கான வாய்ப்பக்கள் உண்டு எனறே நாம் கருதுகிறோம். இலங்கை அரசினைத் தனது செல்வாக்கிற்கு உட்படுத்தி வைத்திருத்தல் தனது பிராந்திய மற்றும் ப+கோள நலன்களுக்கு அவசியம் என இந்தியா கருதுகிறது. அதற்காக  இலங்கை அரசுக்கு உதவியளித்து – அதனைத் தனது செல்வாக்கிற்குட்படுத்தி வைத்திருக்கும் கொள்கையை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தான் வன்னிப்போரிலும் எதிரொலித்தது.

இலங்கைத்தீவினை சீனமயப்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசு தற்போது ஈடுபட்டிருப்பதானது தற்செயலானதல்ல. அல்லது உதவி செய்யும் சீனாவின் விருப்பத்திற்கிணங்க மட்டும் நடைபெறுமொன்றுமல்ல. இந்தியாவின் தன் மீதான ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை அரசு தனது நலனின் அடிப்படையிலும்தான் சீனாவுக்குக் கதவு திறந்து விட்டுள்ளது. காலவோட்டத்தில் சீனா இந்தியாவின் செல்வாக்கினையும் மீறி இலங்கைத் தீவினை விழுங்கத்தான் முயலும். இவ்விடத்திலிருந்து இந்திய நலன்களும் ஈழத் தமிழர் நலன்களும் இணையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

கேள்வி:  இன்னமும் முகாம்களுக்குள் ஒன்றரை லட்சம் மக்கள் அடைபட்டிருக்கிறார்கள். பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் வதை முகாம்களில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களின் உயிர் பாதுகாப்பு… விடுதலை குறித்தெல்லாம் முன்னெடுப்புகளை உங்களால் செய்ய முடியாதா?

பதில்:    இவை குறித்து தற்போது எமது மதியுரைக்குழு உறுப்பினர்கள் தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் போது இவ் அரசாங்கம் இவை குறித்த நடவடிக்கைக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படும் என்பது எமது நம்பிக்கை.

புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அஞ்சி நாம் எமது வெளிநாட்டுப் பயணங்களை கைவிட மாட்டோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறதே?இது பற்றி என்ன நினைகிறீர்கள்?
சிறிலங்கா அரசு இவ்வாறு கூறுவதே புலம் பெயர் தமிழ் மக்கள் தொடர்பான அச்சம் அவர்களுக்கு உண்டு என்பதனை வெளிப்படுத்துகிறது. மேலும், புலம் பெயர் தமிழ் மக்கள் முக்கியமான அரசியல் சக்தியாக பரிமாணம் அடைந்துள்ளனர் என்பதனையும் இது காட்டுகிறது.

கேள்வி:  புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா?

பதில்:  மே மாத நடுப்பகுதி வரை நாளாந்தம் பெருந்தொகையான மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை. நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே.

கேள்வி:  இனக்கொலை, தடுப்பு முகாம்களில் மக்கள், அரசியல் கைதிகள், இதற்கெல்லாம் என்ன வேலைத் திட்டம் உங்களிடம் இருகிறது?

பதில்:  இத்தகைய விடயங்களை கையாள்வது குறித்து தொடர்பான சில விபரங்கள் மதியுரைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை குறித்த விரிவான திட்டங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டவுடன் வகுத்துச் செய்யப்படவேண்டியவை.

கேள்வி:  அமெரிக்க நீதிமன்றத்தில் நீங்கள் வாதாடும் பயங்கரவாதம் தொடர்பான வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?

பதில்:  அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புக்களாக பிரகனடப்படுத்தப்பட்ட அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒன்றாகும். அமெரிக்கச் சட்டப்படி இவ் அமைப்புக்களுக்கு பொருண்மிய உதவி வழங்குதல் குற்றமாகும். ஆயினும் இவ் அமைப்புக்களின் அரசியல் கொள்கைகளுக்கு சுயாதீனமான முறையில் ஆதரவு வழங்குவது சட்டத்திற்கு ஏற்புடையது. விளக்கமாக கூறுவதாயின், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் குறிக்கோளை, அரசியல் வேலைத்திட்டத்தை சுயாதீனமான முறையில் எடுத்துச் செல்லலாம், அமெரிக்க உச்ச நீதி மன்றத்தில் எடுத்துக்கொண்ட சாரம் என்னவெனில், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம் தொடர்பாக அவர்களுடன் இணைந்து செயல்படும் உரிமையை மறுப்பது அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரத்திற்கு முரணானது என்பதாகும். உச்ச நீதிமன்றதின் தீர்ப்பு ஜுன் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேள்வி: புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்றீர்களே? அவர்கள் ஈழப் போராட்டத்தில் அரசியல் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்களா?

பதில்: ’புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ நம் மத்தியில் உள்ள பழமொழி அல்லவா!