domenica 31 gennaio 2010

புலிகளின் தலைவர் பிரபாகரன் பத்திரமாக உள்ளார் – அருகன்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் பத்திரமாக உள்ளார் – அருகன்.

vp1228_thumb பிரபாகரனின் பெற்றோர், மற்றும் பல முக்கிய புலி உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள் பிரபாகரனின் தந்தையின் மரணம் மட்டும் மறைவாக இருந்து, காலப்போக்கில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரசியல் வித்தகராக தனது காய்களை நகர்த்திய மகிந்தா தொடர்பில் ஒரு முக்கிய சந்தேகம் எளாமல் இல்லை. அரசினால், இறுதிக்கட்ட போரில் யார் கைது செய்யப்பட்டனர், யார் யார் கொலை செய்யப்பட்டனர், யார் யார் தற்கொலை செய்து கொண்டனர்… என்பன போன்ற பல விடயங்கள் சந்தேகத்திற்குள்ளானவையல்ல மாறாக வெளியிடப்படாதவை.

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ் - Arugan

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்

Arugan நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அதற்கான அடையாளங்களை நாம் நிர்ணயித்தாக வேண்டாமா???

தவறித்த வறுவது தவறல்ல, தவறியபின் தவறியதே தவறு…

ஏதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஆவணத்துடன், தமிழீழ அரசிற்கான ஆவணத்தைத்தயார்படுத்தியிருக்க வேண்டும். அது “நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்” என்றொன்று (http://govtamileelam.org/gov/) இணையத்தின் மூலம் முன்கூட்டியே பதியப்பட்டு அது வாக்காளர் பட்டியலாக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இருக்கும் நாட்டில் அங்கிகரிக்கப்பட்ட ஆவணம் அல்லது வேறு அங்கிகரிக்கக்கூடிய ஆவணத்தினூடாக இவற்றை உறுதி செய்தபின்னர்… இச்சான்றுதழ் தற்காலிகமாக வழங்கப்படல் வேண்டும். அதனை தேர்தல் கண்காணிப்பாளர்கள் இனங்காணக்கூடியதாக அடையாளக்குறியீட்டுடன் Barcod ( TamilEelam -  )உருவாக்கப்படல் வேண்டும். இணையத்தின் மூலம் விண்ணப்பங்களை நிரப்பி விண்ணப்பதாரி (தமிழீழ பிரஜை) பதிலுக்கு இச்சான்றிதழை Tamil Eelamபெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்க வேண்டும.

 

 

மாதிரி அடையாளச் சான்றிதழ்

Tamil_Eela_Card 

அதன் பின்னரே இத்தேர்தல்கள் நடைபெறல் வரவேற்கத்தக்கது. இலங்கை அரசு மேற்கொண்ட தவறுகளை நாமும் விடலாமா???- Arugan

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ் - Arugan

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்

நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அதற்கான அடையாளங்களை நாம் நிர்ணயித்தாக வேண்டாமா???

தவறித்த வறுவது தவறல்ல, தவறியபின் தவறியதே தவறு…

ஏதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஆவணத்துடன், தமிழீழ அரசிற்கான ஆவணத்தைத்தயார்படுத்தியிருக்க வேண்டும். அது “நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்” என்றொன்று இணையத்தின் கூலம் முன்கூட்டியே பதியப்பட்டு அது வாக்காளர் பட்டியலாக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இருக்கும் நாட்டில் அங்கிகரிக்கப்பட்ட ஆவணம் அல்லது வேறு அங்கிகரிக்கக்கூடிய ஆவTamil Eelamணத்தினூடாக இவற்றை உறுதி செய்தபின்னர்… இச்சான்றுதழ் தற்காலிகமாக வழங்கப்படல் வேண்டும். அதனை தேர்தல் கண்காணிப்பாளர்கள் இனங்காணக்கூடியதாக அடையாளக்குறியீட்டுடன் Barcod ( TamilEelam -  )உருவாக்கப்படல் வேண்டும். இணையத்தின் மூலம் விண்ணப்பங்களை நிரப்பி விண்ணப்பதாரி (தமிழீழ பிரஜை) பதிலுக்கு இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்க வேண்டும.

மாதிரி அடையாளச் சான்றிதழ்

Tamil_Eela_Card 

அதன் பின்னரே இத்தேர்தல்கள் நடைபெறல் வரவேற்கத்தக்கது. இலங்கை அரசு மேற்கொண்ட தவறுகளை நாமும் விடலாமா???- Arugan

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்

Tamil Eelam நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அதற்கான அடையாளங்களை நாம் நிர்ணயித்தாக வேண்டாமா???

தவறித்த வறுவது தவறல்ல, தவறியபின் தவறியதே தவறு…

ஏதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஆவணத்துடன், தமிழீழ அரசிற்கான ஆவணத்தைத்தயார்படுத்தியிருக்க வேண்டும். அது “நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்” என்றொன்று இணையத்தின் கூலம் முன்கூட்டியே பதியப்பட்டு அது வாக்காளர் பட்டியலாக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இருக்கும் நாட்டில் அங்கிகரிக்கப்பட்ட ஆவணம் அல்லது வேறு அங்கிகரிக்கக்கூடிய ஆவணத்தினூடாக இவற்றை உறுதி செய்தபின்னர்… இச்சான்றுதழ் தற்காலிகமாக வழங்கப்படல் வேண்டும். அதனை தேர்தல் கண்காணிப்பாளர்கள் இனங்காணக்கூடியதாக அடையாளக்குறியீட்டுடன் Barcod ( TamilEelam -  )உருவாக்கப்படல் வேண்டும். இணையத்தின் மூலம் விண்ணப்பங்களை நிரப்பி விண்ணப்பதாரி (தமிழீழ பிரஜை) பதிலுக்கு இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்க வேண்டும.

மாதிரி அடையாளச் சான்றிதழ்

Tamil_Eela_Card 

அதன் பின்னரே இத்தேர்தல்கள் நடைபெறல் வரவேற்கத்தக்கது. இலங்கை அரசு மேற்கொண்ட தவறுகளை நாமும் விடலாமா???- Arugan

sabato 30 gennaio 2010

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்

Tamil Eelam நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அதற்கான அடையாளங்களை நாம் நிர்ணயித்தாக வேண்டாமா???

தவறித்த வறுவது தவறல்ல, தவறியபின் தவறியதே தவறு…

ஏதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஆவணத்துடன், தமிழீழ அரசிற்கான ஆவணத்தைத்தயார்படுத்தியிருக்க வேண்டும். அது “நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்” என்றொன்று இணையத்தின் கூலம் முன்கூட்டியே பதியப்பட்டு அது வாக்காளர் பட்டியலாக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இருக்கும் நாட்டில் அங்கிகரிக்கப்பட்ட ஆவணம் அல்லது வேறு அங்கிகரிக்கக்கூடிய ஆவணத்தினூடாக இவற்றை உறுதி செய்தபின்னர்… இச்சான்றுதழ் தற்காலிகமாக வழங்கப்படல் வேண்டும். அதனை தேர்தல் கண்காணிப்பாளர்கள் இனங்காணக்கூடியதாக அடையாளக்குறியீட்டுடன் Barcod ( TamilEelam -  )உருவாக்கப்படல் வேண்டும். இணையத்தின் மூலம் விண்ணப்பங்களை நிரப்பி விண்ணப்பதாரி (தமிழீழ பிரஜை) பதிலுக்கு இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்க வேண்டும.

மாதிரி அடையாளச் சான்றிதழ்

 

அதன் பின்னரே இத்தேர்தல்கள் நடைபெறல் வரவேற்கத்தக்கது. இலங்கை அரசு மேற்கொண்ட தவறுகளை நாமும் விடலாமா???- Arugan

venerdì 29 gennaio 2010

இத்தாலியில் வதிவிட விசாவுள்ளவர்கள் அறியவேண்டிய முக்கிய தகவல்-

இத்தாலியில் வதிவிட விசாவுள்ளவர்கள் அறியவேண்டிய முக்கிய தகவல்-

இந்த வருடத்திற்கான காஸ் போணஸ் ஆரம்பித்து விட்டது. எனவே தமிழர்கள் இதனை கவனத்தில் கொண்டு அதற்கான அலுவல்களைப் பார்க்கும்படி அறிவுறுத்துப்படுகின்றீர்கள். தற்போதைய தொழில் சிக்கலில் சிக்குண்டவர்களுக்கு அரசிடம் இருந்து மீழப் பெறக்கூடிய நிதிகளை தாமதமின்றி பெற்று தங்களை வழப்படுத்தும்படி வேண்டப்படுகின்றீர்கள். இதனை தங்கள் தமிழ் நண்பர்களுக்கும் அறிவியுங்கள். அன்பன் அருகன்.

mercoledì 27 gennaio 2010

கூட்டமைப்பினர் விட்ட கூத்தில தமிழ் மக்கள் ஏலம் போடப்பட்டுள்ளனர்….

mahinda-sarath-004-150x150 கூட்டமைப்பினர் விட்ட கூத்தில தமிழ் மக்கள் ஏலம் போடப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு தமிழர்கள்தான் எதிரி… தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டும் அவருக்கு ஆதரவு வழங்காத கூட்டமைப்பு இருந்தால் என்ன இறந்தால் என்ன!!! சாணக்கியத்தனமில்லாது, இன்னுவரை தமிழர்கள் இழந்த இழப்புக்களுகஇக இலங்கை அரசல்ல கூட்டமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும். கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தையும் கோட்டைவிட்டு கும்பிடுபோடப்போகின்றார்கள் முட்டாள்தனமாக… பாவம் சிவாஜிலிங்கம் அவர்கள்… தன்னை தமிழர்களுக்காக அர்ப்பணித்ததில் சுயநலம் இருந்தாலும் தமிழர்களால் அவர் ஒதுக்கப்பட்டதில் புலிகளும் அவரைக் கைவிட்டதாகவே தெரிகின்றது. அவர்கள் கூட இவருக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதே மனவருத்தமாக இருக்கின்றது. புலதடவை எனது ஆக்கங்களில் எழுதிய ஆக்கபூர்வமான தகவல்களை சற்Nனும் கண்காணித்திருந்தால் மக்கள் சற்றேனும் மூச்சு விடகூடியதாக இருந்திருக்கும். இனி தமிழ் கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றார்கள்… இனி மகிந்தவின் வாலைப்பிடிக்கப்போகின்றார்களா??? அல்லது காலில் இருந்து மிதிபடப்போகின்றார்களா??? தலைநிமிர்ந்து தமிழனை வெல்லவைக்க முடியாவிட்டாலும், அவருக்கான ஆதரவையே கொடுத்து, தமிழர்களின்பலத்தை காட்டி மகிந்தவை பயமுறுத்தியிருக்க முடியும் அதைக்கூட செய்யாதவர்கள் இனி என்னள செய்யப் போகின்றார்கள். அரசு சாதாரணமாக மேற்கொள்கின்ற விடயத்தை ஒப்பந்தம் செய்கின்றார்களாம்… என்ன முட்டாள்தனம்.  

ஒரு மணியளவில் ராஜபக்ச 60 லட்சம் வாக்குகள் (58.8%) பெற்றிருந்தார்.

Anuradapura_Swarnamali சிறிலங்க அதிபர் தேர்தலில் பொன்சேகாவை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்ச 58.8% வாக்குகளைப் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட உள்ளது.
நேற்று நடந்த சிறிலங்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. துவக்கம் முதலே ராஜபக்ச முன்னிலை வகித்தார். மதியம் ஒரு மணியளவில் ராஜபக்ச 60 லட்சம் வாக்குகள் (58.8%) பெற்றிருந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா 41 லட்சம் வாக்குகள் (40.8%) வாக்குகள் பெற்றுள்ளார்.
சிறிலங்க அதிபர் தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பதால், அதிபர் மகிந்தா ராஜபக்ச விரைவில் வெற்றி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

martedì 26 gennaio 2010

வீரகேசரியின் இன்றைய முக்கிய செய்திகள்.

வீரகேசரியின் இன்றைய முக்கிய செய்திகள்.

நிலைமை குறித்து எமது செய்தியாளர்களிடம் கேட்ட போதுநாட்டில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில மாவட்டங்களின் தற்போதைய .........

domenica 24 gennaio 2010

பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று விசுவசியுங்கள்….Arugan

Thirumavalavan பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று விசுவசியுங்கள்….

கிறீஸ்தவ மதத்தின் தெய்வமாக பூஜிக்கப்படும் “இயேசு” மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்பது நம்பிக்கையல்ல விசுவாசம்.

கண்களால் காணக்கூடியது நம்பிக்கை, காணமுடியாதது ஆனால் உண்மை என்பது விசுவாசம்.

தம்பி இருக்கிறார் என்று நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் உறுதியாகச் சொல்லி வருகிறார்களாம்... இவர்கள் புலிகளின் தளபதிகள் போலும்... இறுதிக்கட்டப் போரில் பிரபாகரனுடன் இணைந்திருந்து தப்பியவர்கள் போலும்... யாரைப் பேக்காட்டுகின்றார்கள்... அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்... அதற்காக இவர்கள் சொல்லை வேதவாக்காக ஆதாரமில்லாமல் கொக்கரிப்பதை வைத்து அரசியல் நடத்துகின்றனர்.

திருமாவளவன் இப்போது பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார்... கருணாநிதியை தமிழர்களுக்காக பதவிவிலகச் சொன்னவர் திருமாவளவன். இன்னும் பதவியிலேயே இருக்கின்றார்... இதற்கிடையில் தீக்குளிப்பாம் உண்ணாவிரதமாம். எல்லாம் பதவியாசையப்பு பதவியாசை... தன் கணவன் இறந்ததே தெரியாத பார்வதியம்மாள் சொன்னாவாம் தன் மகன் வருவான் என்று சொன்னதாக… இது ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளும் மக்கள் மத்தியில்,  சமாதானம் வந்தால்தான் என்ன வராவிட்டால்தான் என்ன!!!
புலிகள் பணம் வாங்கியதால்தான் மகிந்த தேர்தலில் வென்றாராம். அப்படியென்றால் தமிழர்களை வைத்து புலிகள் அப்போதும் சரி இப்போதும் சரி பகடைக்காயாக பந்தாடுகின்றார்கள் என்பதையே இணையங்கள் வெளிக்காட்டுகின்றன.  
கேபி, தயாமாஸ்டர், ஜோர்ச் மாஸ்டர், இறுதியாக வாக்குமூலம் அளித்த வைத்தியர்கள், புலிகள் சார்பில் பணம் வாங்கியவர்கள், தமிழ் எம்பி மார்கள், இப்படி எல்லாரும் புலிகள் தரப்பில் இருந்து மாறிக்கொண்டு போகின்றனரே!!!
புpரபாகரன் வந்து பதில் தருவார் அப்போது, யார் இருப்பார்கள் யார் இருக்கமாட்டார்கள் என்பது யாருக்குத் தெரியும். இப்போது பசிக்கிறது உண்ணாவிட்டால் உயிர்போகும்… உரிமை முக்கியமா உணவுமுக்கியமா????
பிரபாகரனைக் கொண்டதாக மார்தட்டிய சரத் பொன்செகா ஏன் பிரபாகரன் மரணத்தை நிராகரிக்கவில்லை… அது ஒன்று போதுமே மகிந்தவை தேற்கடிக்க… பிரபாகரன் உயிருடன் இருப்பதை யோ மரணித்ததையோ விவாதிப்பதல்ல தற்போது தமிழர்களின் தேவை பேய் ஆண்டால் என்ன பிசாசு ஆண்டால் என்ன தமிழர்களுக்கு விடிவு வரப்போவதில்லை. குhரணம் 20 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்ட சரத்திற்குப்பின்னால் வால்பிடித்துக்கொண்டு தமிழர்கள் போவதில் இருந்து தெரியவில்லையா? முகிந்தவின் ஆட்சி கூடாது என்ற சந்திரிக்கா இரண்டு முறை அதே கட்சியின் சார்பில்தானே பதவியில் இருந்த அப்போது வைக்காத ஒரு தீர்வையா இப்போது மகிந்தவிடம் எதிர்பார்க்கின்றா? அப்போது சந்திரிக்காவைப்பற்றி வசைபாடிய தமிழர்கள் இப்போது அவவின் குரல் தலைப்புச் செய்தியாம். 
பலவிடயங்கள் தொகுக்கப்படாத கட்டுரையாகவே இருக்கின்றது. புலிகளின் உத்தியோக பூர்வஇணையத்தளம் என்று ஒன்று வெளிவந்துள்ளது… ஆனால் நாடுகடந்த அரiசின் குழு அதை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை. அதே போல் அக்குழுவும் உத்தியோ பூர்வ இணையத்தளம் அது தான் என்பதனை வெயியிடவும் இல்லை. இதில் ஆளாளுக்கு பூச்சாண்டி காட்டுகீனம்.
துற்போது புலிகள் அமைப்பு பலவீனமானது மட்டுமல்ல சிதறடிக்கப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் உள்ளனர் அவர்கள் எப்படியும் ஒரு கட்டுக்குள் வந்து ஒரு சாதனையினை நிகழ்த்தும் மட்டும் மக்களை குழப்பாமல் இணையங்கள் சும்மா இருந்தாலே மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். தேர்தலிலும் முக்கியமான ஒன்று தேய்ந்து போன புலிகள் அங்கத்தவர்களையும் மக்களையும் தேற்றுவதே சிறப்பானது. ஆதற்கு தமிழர்களும் தமிழ் அமைப்புக்களும் என்ன செய்ய வேண்டும். புpரபாகரன் உயிருடன் இருந்தால் என்ன செய்வாரோ அதை செய்யுங்கள்.  
“இருக்கிறதை எடுத்துச் சாப்பிடாமல் இல்லாதனை நினைத்து வாடிச்சுதாம் குரங்கு அப்போது இருந்ததை காகம் வந்து கொத்திக்கொண்டு போச்சுதாம் …” இது தான் தமிழரின் வருங்காலக்கதை….

அடுத்த ஜனாதிபதி யார்? - வீரகேசரி

mahinda-sarath-004-150x150 அடுத்த ஜனாதிபதி யார்? ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 14,088,500 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

martedì 19 gennaio 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச் செயலகம் 2010….????!!!!!

அனைத்து ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்
எமது இயக்கத்தின் அனைத்து அதிகாரபூர்வ அறிக்கைகள், வெளியீடுகள் யாவும் எமது அதிகாரபூர்வ இணையத்தளமான lttepress.com இணையத்தளத்திணூடக மட்டுமே வெளிவரும் என்பதை தெரிவிப்பதோடு.Ltte 2010
மேலும் 19.05.2009ன் பின்பு எமது தாயகத்தில் ஏற்பட்ட சோகமான அனர்த்தத்தின்

domenica 17 gennaio 2010

அருகனின் பாடல் வரிகள் 2003ற்கு முன்னர் புனையப்பட்டது.

அருகனின் பாடல் வரிகள் 2003ற்கு முன்னர் புனையப்பட்டது.

கடவுள் வாழ்த்து

பல நதியின் திசைகள் கடலைச் சேரும்
பல பூக்களின் மென்மை மாலையில் கூடும்
ஸ்வரங்களின் சங்கமம் வரங்களில் ஆகும்
வந்தவை யாவும் இறைவனின் வாழ்த்துக்கள் ஆகும்.. . ஆ. .ஆ. .
01
இசையின் ஓசைகள் அசையும் - அது
அசையும் போது இதயம் அசையும்
அதை ஒதுக்காதே என்றும் வெறுக்காதே

ஓடுகின்ற குருதியில் ஒருதுளியேனும்
பாடுகின்ற பாடலில் ஆடிவந்து சேரும்
வாழுகின்ற வாழ்க்கையில் வலிவந்து சேரும்
பாடலதைக் கேட்க அது எங்கோ ஓடும்.

யார் தந்த பாடலிது
அவன்தந்த பாடலுக்கு
அள்ளித் தெளித்தேன்
ஆயிரம் ஆயிரம் பூவிது
02
மனிதம் மண்ணிலே பிறக்கும் - அது
பிறக்கும் முன்னே இசை அங்கு இருக்கும்
அது காற்றோடும் பெரும் கடலோடும் சென்று கலக்காதோ

இசை யோடு இறைவன் இணைந்துதான் இருப்பான்
இதயத்தின் உள்ளே உறைந்துதான் கிடப்பான்
இசை யோடு இறைவன் இணைந்துதான் இருப்பான்
இதயத்தின் உள்ளே உறைந்துதான் கிடப்பான்

இனம் மொழி வேறின்றி
காலை மாலை ஏதன்றி
பேதமில்லையே
இசையிலே மிதப்பேன்

****************************************+

பல்லவி
சோதரா என் சோதரா
நீ தானடா
இசைக் கண்ணைத்தந்த தாயும் நீயடா
நீ அண்ணன் இல்லை அன்னை
நான் உன் சேயடா
நான் உன் சேயடா
அனுபல்லவி

சிறுபிள்ளை எனக்காக நீதந்த உன்கைகள் கழுவாமல் நழுவித்தான் போனாயே
இசை என்னும் நதி நீயே அதில் நானும் நீராட
நீரின்றி கானல் நீராய்ப் போனாயே
புதுப்பாடல், புதுமேடை, புது இராகம், புதுத்தாளம்
நான் தந்தேன் கேட்காமல் நீயெங்கோ போனாயே
(1)
உலகெங்கும் அசைகின்ற காற்றை நீ குழல் ஊதி
அமிர்தத்தில் தேன் போல தந்தாயே
அதை நானும் ருசி பார்த்தேன் உன்னாலே
பார்க்காமல் நீ எங்கோ போனாயோ
உன்பிள்ளை உருவாக்கும் இசை வெள்ளம் உன்காதில்
சேர்ந்தாலே அதில் மோட்சம் காணுவேன்
இசைதந்த இறை நீயே
உனை இன்று நினைக்காமல்
என் பாடல் அரங்கேற்றம் வீணையா?
என்றும் வீண் ஐயா  (சோதரா. )
(2)
இசை என்னும் தோட்டத்தில் ஒருபூவாய் நான் பூக்க
நீர் விட்டு நீஎன்னைக் காத்தாயே
அதில் தோன்றும் வாசத்தில் நீ வந்து சுவாசிக என்பாடல் உனை இன்று அழைக்காதோ
நீரின்றித் தான் வாழும் நிலங்கொண்ட மரம்போல நீயின்றி நான் வாழத்தேவையா
இருகைகள் சேர்த்தெடுத்து
ஒரு கோடி வந்தனங்கள்
உன்பாதம் நான் தந்தேன் ஏற்றிடு
என்னைக் காத்திடு

 

என்ன சுகம்

வா பெண்ணே உன்னைத் தீண்டுகிறேன்
நிலை தாண்டுகிறேன்
தாமதம் ஏனடியோ!
உன்னை என்னை
தீசுடுமே அதில் நோய் வருமே
வா பெண்ணே வா . . . . . . . . . .
(1)
சுமை வந்தால் வந்து சுகந் தந்தாய்
இதமாக இதழாலே (2)
சொல்லு பெண்ணே சொல்லால் என்னைச் சொல்லி
சுவைத்தாயே மொழியாலே (2)
கடல் மீது அலைபோலே உன்காதல் என்னில் மோத
கரைபோல கரைந்தேனே நான் (2)
காணாமலே தான்போக
வா பெண்ணே
(2)
உந்தன் நெஞ்சில் கொஞ்சம் மஞ்சம் கொண்டேன்
மதிமறந்தேனே சுகமாக
எந்தன் கண்ணைக்கண்டு கையால் மெல்ல மறைத்தாயேநீ
வெட்கிச் சிரித்தாயடி
தூங்காமல் தீண்டாமல் விழி பேசும் போது (தான் )
தாங்காமல் தவித்தாளே
கண்ணை மூடினாளே மாது
வா பெண்ணே
(3)
சின்ன விரல் எந்தன் தலை கோதும்
அசைந்தேனே அதற் கிசைவாக
எரி மலைக் காத்தாய் மூச்சு என்னைச் சேரும்
அதில் எரிந்தேனே நான் மெழுகாக
பூவாநீ புயலாநீ என்ன மாயங்கள் செய்தாய்நீ
பாலாநீ பழமாநீ எந்தன் நாவிலே விழுந்தாய்நீ
வா பெண்ணே

 

(03)

ஆ. ஆ. . . ஆ. . . .

அம்மா உந்தன் பிள்ளை தான் -உன்
அன்பிற்கு ஏங்கும் முல்லை நான்

தேசம் விட்டு தேசம் வந்து வேதனையில் வாடுது பார்
வேதனையில் நானிருக்க ஆறதலாய் யார் வருவார்
இன்பமும் துன்பமும் உன் பெயர் சொல்லுதம்மா
(1)
சிட்டுச் சிட்டுக் குருவிக்கெல்லாம் தாய்ப் பாசம் புரிஞ்சிருக்கு
சிந்தையுள்ள மனிதருக்கு பாசம் புரியவில்ல
விக்கி விக்கி அழுதாலும் வேதனைகள் தீரவில்ல
தாய் மடியைப் போல ஒரு தாகம் தீரவில்ல

ஆண்டவனுக்குச் சோகம் இல்லை
அதனால தாயும் இல்ல
தாயே உந்தன் சேயைப் போல
சோகம் கண்டதில்லை  - ஆனாலும்
கண்கள் மீது  கண்ணீர் வந்தில்ல

 

04
வான் நின்று சூரியன்

வான் நின்று சூரியன் வந்து நடை போடுதோ!
வடிவான சந்திரனும் வெட்கப்பட்டு தலை நாணுதோ!
புரியாத பூவுலகம் புதிர் போடுதோ 2
என் மன்னன் என்முன்னே தோன்ற!
நிலவொன்று கால் கொண்டு தினம் நடமாடுதோ
நிலம் இன்று உடல்கொண்ட நிலவொன்றைத் தான் தாங்குதோ!
தூங்காமல் இதயந்தான் தடம் மாறுதோ! 2
என் மங்கை என்முன்னே தோன்ற!
(1)
பெண்-
மலை போன்ற தோள் உன்னில் யார் தந்தது
தோள் மீது சாய்ந் தாடிச்  சுகங்கண்டது
பனி போன்ற பார்வை தேன் யார் தந்தது
தேன் போன்று சுவை பார்க்க மான் வந்தது.
ஆண்-
கருங் கூந்தல் சிறையாகி ஏன் நின்றது
கவி நெஞ்சம் சிலையாகி ஏன் சென்றது
கரையாத நீள் வானம் ஏன் பெய்தது
அதில் நானும் நீராட ஏன் வந்தது.
கவி மானும் கலை மானும் கலைக் கூடமோ
கண்ஜாடை தானங்கு புதுப் பாடமோ
(2)
ஆண்-
மயில் கூட்டம் உந்தன் நடை பார்க்க தான் வந்தது
அவை நாணி முகங் கோணி வாடி நின்றது
முகில் கூட்டம் உந்தன் கூந்தல் பார்க்க வந்தது
மழையாகி மண்ணில் சோகம் தீர்த்து சென்றது
பெண்-
புயல் வந்து புதுப் பாதை ஏன் சென்றது
உனைக் கண்டு பயந்தோடி தான் சென்றது
தையல் நெஞ்சம் தடுமாறி ஏன் நின்றது
தாளம் பூவின் மணம் வந்து சேதி சொன்னது
வானும் மண்ணும் காதல் கொள்ள மழை தூவுமோ
நானும் நீயும் காதல் கொள்ள மலர் தூவுமோ!

 

05
பல்லவி
நீதான் எந்தன் பௌர்ணமி
நீதான் கண்ணில் ஓர் மணி
நீதான் எந்தன் பௌர்ணமி
அனுபல்லவி
சென்றாய் அந்த நாள் முதல்
கண்டேன் இங்கு தான் இருள்
சரணம்-1
மேகம் காண்கிறேன் மறைவாய்த் தெரிகிறாய்
ஓளியைத் தேடினேன் இருளாய்த் தெரிகிறாய்
காதில் மோதிடும் கவிதை கேட்குதே
கானல் நீரதாய்த் தேட ஓடுதே
மாதத்தில் ஒருமுறை நீவந்தால் -என்
மனமது மகிழும் தெரியாதா
மேகத்தைப் போலே நானிருப்பேன் -எந்தன்
தாகத்தைத் தீர்க்க வருவாயா
கண்ணே யுன்னைக் கண்டால் எந்தன்
கண்ணில் மின்னல் மோதுதே
பூவே யுன்னைக் கண்டால் நெஞ்சம்
எங்கும் பூக்கள் பூக்குதே
சரணம்-2
அல்லி மலரைப்போல் நானே இருக்கிறேன்
மெல்ல வெளியில் வா தானாய் மலருவேன்
புனலில் அலையாய் நான் கடலில் மிதக்கிறேன்
உன்னைக் கண்டாலே அலையாய் அடிக்கிறேன்
நான் படும் பாடு தெரியாதா -பெரும்
பாரங்கள் இருக்குத் தீராதா
பறக்கத்தான் நினைத்தேன் சிறகில்லையே -என்
கனவுகள் உனக்கு விறகில்லையே
என்னை எரித்தால் என்ன? புதைத்தால் என்ன?
இந்த நிலவின் ஒளியைத் தேடுவேன்
என்னை வெறுத்தால் என்ன மிதித்தால் என்ன
வேதம் போல உன்னை ஓதுவேன்

 

சின்னச் சின்னச் சிரிப் பொலி

தன்னன னானன . . . . . . . . . .
சின்னச் சின்னச் சிரிப் பொலியில்
சின்னச் சின்னச் சிரிப்பொலியில்
பூஜைகள் செய்தேன் - அதை
வண்ண வண்ண பூக்கள் போல
பாக்களில் தந்தேன்
1
மாட்டுக்கொட்டில் மாட்டுக்கொட்டில் உந்தன் மாளிகை ஆ. . ஆ. . . ஆ.
மாட்டுக்கொட்டில் மாட்டுக்கொட்டில் உந்தன் மாளிகை
எந்தன் மனமிருக்கு வந்து சென்றால் வண்ணமாளிகை
எந்தன் மனமிருக்கு வந்து சென்றால் வண்ணமாளிகை
சுமைசுமந்து சோர்ந்திருந்தால் சொன்ன வார்த்தைகள்
சுமைசுமந்து சோர்ந்திருந்தால் சொன்ன வார்த்தைகள்
சொற்க வழிதனை அமைத்துவிடும் தெய்வவார்த்தைகள்

2
அல்லி முல்லை மல்லி எல்லாம் வாடிடும் பூக்கள் ஆ. . ஆ. . . ஆ. . .
அல்லி முல்லை மல்லி எல்லாம் வாடிடும் பூக்கள்
அள்ளித்தந்து சொல்லிக்கொள்வோம் ஆயிரம் பாக்கள் .
அள்ளித்தந்து சொல்லிக்கொள்வோம் ஆயிரம் பாக்கள் .
அள்ள அள்ளக் குறையாத அற்புத வார்த்தை
அள்ள அள்ளக் குறையாத அற்புத வார்த்தை
ஆண்டவனில் அடிகளிலே அடியேனின் வாழ்க்கை

3

யாழினிமை தேனினிமை சொன்னவர் யாரு ஆ. . ஆ. . . ஆ. . .
யாழினிமை தேனினிமை சொன்னவர் யாரு
உந்தன் பேரினிமை பேரினிமை கண்டவர் யாரு
உந்தன் பேரினிமை பேரினிமை கண்டவர் யாரு
பூமிக்கொரு சாமிவந்த சரித்திரங் கேளும்
பூமிக்கொரு சாமிவந்த சரித்திரங் கேளும்
இந்தப் பூவுலகம் புனிதமாகும் வரந்தரக்கேளும்

 

7)

மடி கொடு மடி கொடு நிலவே
மனந் தினம் தவிக்குது தினமே!
இடங் கொடு இடங்கொடு மலரே
இதயங்கள் கிடக்குது மூடியே!

புயலொன்று அடித்தது சொன்ன வார்த்தை தொலைந்தது
இடியொன்று விழுந்தது இன்ப மெல்லாம்  முடிந்தது

சரியா விதி சரியா
வழி இதுதான்
சொல்லும் முடிவா!. . . .

நிலத்தினில் நிழல் விழும் போதும்
கரத்தினில் உனை ஏந்தப் போதும்
கடலினில் நதி விழப் போகும்
கானலாய் என்னுயிர் மாறும்

 

8)

அன்பே உன்னில் சாய்ந்து தூக்கம்
போனதே இன்று -அட
தூக்கம் போனதே இன்று
கண்ணே உன்னைக்காண
காதல் தோன்றுதே இன்று -அட
காதல் தோன்றுதே இன்று
தீயா தீயா
நீயா நீயா
மெய்யா மெய்யா
அது
மெய்யா மெய்யா
காதல் காதல் காதல் காதல் கண்களில் மோதல்  -இரு
உள்ளங்கண்டதே ஊடல்
மேகம் மேகம் மோதும் சில மேளச் சத்தங்கள் கேட்கும் (-உடன்
மேகம் பொய்கையில் சேரும் )
பூக்கள் பூக்கும்
காதல் பார்க்கும்
நாளும் நாளும்
தானே வாழும்
நானும் நீயும் நீயும் நானும்.
பெண்ணே உன்னைத் தேடி
நெஞ்சம் நோகுதே வாடி - என்
மஞ்சம் நோகுதே வாடி
பூவை வண்டு தேடும்
கண்டு கொள்ள நீ வாடி - தேனை
உண்டு கொள்ள நீ வாடி
பூவா நீயா
பூவா நீயா
தேனா நீயா
நீதான் தேனா

giovedì 14 gennaio 2010

தேசிய தலைவர் பிரபாகரனின் உயிரோடு நலமாக…

"தம்பி உயிரோடு நலமாக இருக்கிறான்: என்னை வந்து பார்ப்பதாக சொல்லிச்சென்றான்"

14 January, 2010 by admin

"தம்பி உயிரோட நலமாக இருக்கிறான். அவன் என்னை சந்திப்பதாக சொல்லியே சென்றான்" - என்று தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா தெரிவித்துள்ளார் என விடுதலை சிறுத்தைகள் அணி தலைவர் தொல் திருமாவளவன் விகடனுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் சஞ்சிகைக்கு திருமாவளவன் வழங்கியுள்ள விரிவான செவ்வி வருமாறு:-

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு திருவிழா-

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு திருவிழா-

தமிழ்த் தைத் திருவிழா

!cid_image004_png@01CA9469

கல்தோன்றாக்  காலத்து முன்தோன்றிய மூத்ததமிழுக்கு வணக்கம்!.

மாறிவரும் மாபெரும் உலகத்தில் மென்மேலும் மெருகுடன் விளங்கும் முத்தமிழுக்கும் வணக்கம்!

தமிழர்களின் பண்பாட்டிலே மனிதர்களின் பண்பையே வெளிக்காட்ட வழிகாட்டிய மூதாதையத் தமிழர்க்கும் வணக்கம் !

தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் -இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!. . . . . .

இப்படி முழங்கும் பாவேந்தர் அவர்கள் இன்னொன்றையும் இதில் இனிதாகவே திணித்துஞ் சொன்னார்

“தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்” மேலும் வாசிக்க »

mercoledì 13 gennaio 2010

கவிதைத்துளி - எண்ணங்களின் விம்பங்கள்

எண்ணங்களின் விம்பங்கள்

ஆதிமனிதன்

ஆதி மனிதன் அலங்கோலமாய்
ஆடையின்றி அவனியில்த் திரிந்த காலம் !
அப்போது
அவன் பாதிமனிதன்

ஜாதி மனிதன் ஜோதியிழந்தான்
ஜாடிக்கேற்ற மூடியில்லை
இப்போது
இவன் அவனிலும் பாதி

அறியாமல் ஆடையிழந்தான்
அரைகுறையாய்த் தேடி அலைந்தான்
அரைதனிலே அரையாவண்ணம்
இலையணிந்தான்
அவன் அறியாதவன்

தெரிந்து கொண்டே தொடைதெரிய
தெரிவார்க்கும் எரியும் வண்ணம்
வறுமைகாட்டி வறுமைகாட்டி
வறுமைகாட்டாத் தங்க வளையல்பூட்டி
ஆடைவிலக்கி ஜாடைபோட்டாள்
கோடைப்பெண்ணிவள்

கணவன் காணும் கன்னியழகைக்குயவன்
கைக்களிமண்ணாய்க்
கண்டவர்
கையளையக்
கன்னியவள் கண்டதென்னவோ?

அம்பெடுத்துக் கண்ணில்
வைத்தான் குறிபார்க்க
ஆதிமனிதன்
அன்பெடுத்து கண்ணில் வைத்தான்
இறைவன்

கண்ணெடுத்து அம்பாய்த்தைத்தாள்
காயமில்லா வடுத்தோன்ற
கலிகாலத்துக் கன்னியவள்
வீடில்லை வீதியில்லை
வனம்வளர்த்து மரந்தந்த வளையுண்டு
அவனுக்கு
அவன் ஆதிமனிதன்

வீடுண்டு வீதியுண்டு
விலைமகளாம் வரியுண்டு வழியுண்டு
இவளுக்கு
இவள் விலைமகள்

நாளுக்கொரு நாய் வாழ்க்கை
நல்ல பேய்க்கும் . . . .
நரகந்தான் நகரம்
மலரிழந்த சரமாய் நம் கலாசாரம்
மதியிழந்த பாரைப் போல் நம் பண்பாடு

பாமரராய் வாழ்ந்தபோது பார்த்திருந்த பண்பாடு
பணம் பொருளைக் கண்ட பின்பு
பாழாய்ப் போவது பெருங்கேடு

தமிழைத்தரணி மறந்துவிட்டால்
தாரமில்லாத் தபுதாரன்
தறிகெட்டுத் தடுமாறும் தனிமனிதன்

பண்புதன்னை இழந்து விட்டால்
பாவம்பெண்மை பரிதாபம்

பாதிமனிதனாய்ச் சிறப்பதிலும்
ஆதிமனிதனாய் இறப்பதே மேல்!!

தழும்புகளின் தடம்

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும் . .

குருதியிட்ட  கோரத்தின்
வேதனையால்
அருவி விட்ட கண்ணீரால்
வேயப்பட்ட
கவிதையிலும் காயமிருக்கும். . .

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . .

சட்டைகள் இல்லை அங்கே
தோட்டாச்
சன்னங்களை ஆடையாக்கினோம்
உணவுகள் இல்லை விசச்
சைனட்
குப்பிகளை அன்னமாக்கினோம்!!

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . .

வீடுகளில்லை எலிகளின்
வளைகளைக்
கூடுகளாக்கினோம்!!

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். .. .

களுத்துகளில் பொன்னகையில்லை
எழுத்துக்களின்
பதாகைகளை அணிகலமாக்கினோம்!!

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்

உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . . .

உதடுகளில் புன்னகையில்லை
எம் உடல்களில்
புண் நகைகள் கொண்டோம்!!

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்

ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . . .

செங்கரத்தால் வைக்கவேண்டிய
பொட்டுக்களை
பெண்களின் நெற்றியில்
சுடுகலத்தால் சூட்டிக் கொண்டோம்!!

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . .

அந்தி வானம்

ஓ காதலியே!
சாலையெங்கும் சவக்காலையாய்க்
காட்சியளிக்கிறதே

அருகனின் கல்லறைகளும் கற்பந்தரித்து
கண்ணீர் வடிக்கிறதே

புரையோடி விட்ட தேசத்தில்
கறைபடிந்துவிட்ட குருதிகளால்
கிறுக்கப்பட்ட சித்திரங்களும்
சின்னச் சின்னப் புத்தகமாய்
பக்கங்களைத் தந்தது

இப்போது உள்ள கவிஞர்கள் போதுமடி
இப்பூமியில் புதைக்கப்பட்டவரிலும்

விதைக்கப்பட்ட கவிகளே அதிகம். . . !

என் கல்லறையில்
பொறிக்கப்படும் குறிகளில்
உன் பெயராவது
விலக்கப்படட்டும்

உனக்குத் தெரியுமா
உன் விழிகளின்
கதவு திறக்கப்படும் போது
என் மதிகளில் மங்கிய மறியல் தெரிகிறது

உனக்காய்ப் பூக்கும்
கவிதைகளில்கூட
காமச் சொற்கள் களைந்து விடுகின்றன

நிர்வாணமான எனது கவிதைகளுக்கு
உன் மூச்சுத்தான் அதற்கு வெட்கமூட்டியது
உன்பார்வை சுடிதாரானது
உன் பேச்சுத்தான் அதற்குப் பவுடர் போட்டது
உன் மகிழ்வில் அது மழலையானதே!

இப்போதும் உன்மகிழ்விற்காய்
நான் மரணிக்கத் தயார்தான்
உன்னால் பெற்றெடுக்கப்பட்ட
மழலை மாய்ந்துவிடும் என்றுதான்
மதி மயங்குகிறது

மெதுவாகத் தெரிகிறது
எனக்காய் நீ தோண்டிவிட்ட புதைகுழியினை
பெதுவாக நான்  தாண்டிவிட்டேன் என்று

விதி என்று சொல்லி
விளையாட்டுக்காட்டாதே என்
வாழ்வின் ஓரங்களில்
உனது விம்பங்கள் இன்னமும் தெரிகிறது.

ஓ காதலியே!
சாலையெங்கும் சவக்காலையாய்க்

காட்சியளிக்கிறதே
அருகனின் கல்லறைகளும் கற்பந்தரித்து
கண்ணீர் வடிக்கிறதே

நீ ஏன் நானாக இல்லை?

கடந்த காலத்தை உன்னிடம் நான் கேட்டேன்
நிகழ் காலத்தில் என்னிடமேன் மௌனமானாய் ?
சந்தைக்கு வந்த சகதி உந்தன் அங்கம் என்று
சங்கதிகள் ளெந்தன் செவிகளுக் கெட்டியது.

சங்கடமானேன் பெண்ணே,
நானும் சாதாரணமானவன் தானே!
சங்கதிகள் சஞ்சலத்தை உண்டுபண்ணுது
சமாதிக்குள்ளே சமாதானத்தை தேடுது.

நீ என்னிடம் மறைக்கும் எள்ளளவும்
வெள்ளமாய் என்னை அடித்துச் செல்லுது எங்கோ
வேஷமாய் அதுதினம் கோஷம் போட்டு
நேசத்தில் புகுந்து நாசஞ் செய்கிறது இங்கே!

எனக்கு நானே கோது செய்து முட்டைக்குள் இருந்தேன்
உனக்கு நான் வேண்டும் என்று அந்த முட்டையை உடைத்தாய்
அப்போது அதன் வலி தெரியவில்லை
இப்போது அதில் இருந்து குருதி வடிகிறது.

காயத் தீ வலியிலும்
காதல் தீ வலி கனக்கிறது  . . . .

என் காதலை பிறர் காமத்தோடு ஒப்பிட்டுவிடாதே
அது என் காதலை காட்டும் கண்ணாடி விம்பம்
நீ உன் காதலை ஏய்த்தாலும் -தினம்
அது வந்து என் காதில் சேதி சேர்க்கும்

ஆழ்ந்த காயத்திற்கு அமைதி தந்தது -உந்தன்
அதரத்தின் ஒளடத அன்பு முத்தம்

அவை அத்தனையும் என்னைப் பித்தனாக்கும்
ஆயினும் நீ யென்னைப் பித்தனாக்கி விடாதே!

நீ ஆயிரஞ் செய்கையை அப்படியே-என்னிடம்

மறைக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது
மதி யேனோ உன்னை மன்னிக்கிறது -ஏன்
விதி என்னை மட்டும் தண்டிக்கிறது?

மரணத்திற்கு மார்பைக் கொடுக்கிறேன் - அது
முதுகின் பின்னால் ஓடுகிறது!
காதலுக்கு முதுகைக் கொடுக்கிறேன் -தினம்
மார்பில் வந்து ஏன் ?மோதுகிறது !

காதல் காயங்களை இலவசமாய் -இங்கே
வழங்குங்கள் என்று இரஞ்சிக் கேட்டேனா?!
என்னைமட்டும் ஏன்? காயங்கள் உறங்கும்
சவக்கிடங்காய் சரித்திரஞ் சித்தரிக்கிறது!?

பார்வையால் நெஞ்சைத் துண்டாக்கிய பெண்களே
பறக்கும் போது ஏன்? ஆண்களின் சிறகுகளைச் சிதைத்தீர்!
அவன் இறக்கும் போது, அன்றாவது அவனை
அவனிடமே ஒப்படைத்து விடுங்கள்,

என்றாவது அவன் அமைதியாகட்டும்!!!!

ஓரு உடலம் காதலால் சடலமானது! 

பெண்ணே!
என்னை யென்னவென்பேன் -உன்னால்
பேதையானேன் நேற்றுமுதல் !
அன்றுமுதல்தானே யுன்னைக்கண்டேன்
கடந்தகாலங்கள் மறந்துவிட்டன- நிகழ்
காலங்கடந்து ஞாலத்தில்

வாழ்வதாய் யேதேதோ நினைவு
காமங்கடந்து ஞானத்தில்-நீடு
வாழ்வதாய் யேதேதோ உணர்வு
சிரிக்கத் தோன்றவில்லை-இனி
யாரும் சிரிப்பதும் பிடிக்கவில்லை
அடிக்கடி சிரிக்கின்றேன்-ஏன்?
அப்போதெல்லாம் உன்முகத்தைத் தரிசிக்கிறேன்
உன் சம்மதம் மெனக்குச் சாதகமா பாதகமா?
கேட்கத் தோன்றவில்லை-அதைக்
கேட்காமலே கடக்கின்ற காலத்தை

இரசிக்கத் தூண்டுகிறது
பூக்கள் பூத்து வாடுவது போல்-புறப்படும்
உன் புன்னகை என்னை வாடவைக்கிறது
நர்த்தனத்தில் கொலுசு போல் -நித்தம்
உன்சாரீரம் என்சரீரத்தை ஆடவைக்கிறது
இது என்ஆண்மைக்கு இழுக்கா- அல்லது
புதுக் காதலுக்குச் சிறப்பா
எனக்குப் புரியவில்லை!
போஜனம் போதுமென்று தோன்றுகிறது-வாசனைப்
பூமணம் நாற்றமென்று தோன்றுகிறது
உன்சங்கமத்தில் மட்டும் சலிப்பில்லை!
ஸ்பரிசங்கள் இல்லாத பார்வையிலும் -பல்
ஆயிரம் நிம்மதி ஆழ்ந்ததென்பதை
அவ்வப்போது இயற்கையின் படைப்பில்
இருந்து உணர்ந்து கொள்கிறேன!;
இன்றேனும் இயற்கைக்குச் சம்மதமென்றால்
இவ்வுலகிலிருந்து இழிவுடல்-எங்கோ

இளைப்பாற எனக்குச் சம்மதம!;
இருந்தும் சாவை வெறுக்கிறேன்-ஏன்?
அதன்சாராம்சம் சித்தத்திற்குப் புரியாததால். . . .
நான் புலம்புகிறேன் என்பது எனக்குத் தெரிகிறது
ஆனால் புறந்தள்ள விரும்பவில்லை-மேலும்
அதுகூட ஆழ்ந்தசுகத்தையே தருகிறது
சோகங்கூட ஒருவித சுகமாய்த்தோன்றுகிறது
சொல்லத்தெரியவில்லை
எல்லையில்லா வெட்டவெளியில் -புள்ளிமானாய்த்
தொhல்லையின்றி துள்ளிக்குதிக்கத் தோன்றுகிறது
துணைக்கு உன்னையும், -அங்கு
தூதுக்குத் தென்றலையும், தோதாகக்கேட்கிறது
நான்புலம்புகிறேன் ஆனால் பூரிப்படைகிறேன்!
புரிகிறது நான்பேதையாகிவிட்டேன்

இளைஞன் உருமாறினான்
இளைஞனே!
நீ காதலித்ததுண்டா - உன்
காதலுக்குக் காயங்கள் உண்டா
காயங்களில் குருதி வடிந்ததுண்டா-அந்தக்
குருதியிலும் கண்ணீருண்டா
இப்போது நீ எழுதும் எழுத்துக்களில் கவிதை இருக்கும்

அந்தக் கவிதையிலும் கண்ணீர்த்துளி கசிந்திருக்கும்
காலங்கடந்தும் ஞாலத்தில் நிஜமாய் நிலைத்திருக்கும்
காற்றுள்ள இடமெல்லாம் அது கலகஞ்செய்திருக்கும்
வானில் இருந்து வீழ்ந்த துளி உனக்கு வார்த்தை தரவில்லையா
மண்ணில் இருந்து மீண்ட பனி உனக்கு மீதந் தரவில்லையா
மரஞ்செடிகள் கவரி வீசி உனக்கு மங்கலந் தரவில்லையா
பனிமலையும் பாலைநிலமும் உனக்கு புதுவழி தரவில்லையா
உன் காதலின் வலி காவியங்களை உருவாக்கும்
உன் கண்ணீரின் துளி கற்பனைகளைச் சிலையாக்கும்
உன் எண்ணத்தின் விம்பங்கள் இளைஞரைச் சரிபார்க்கும்
உன் கற்பனையோ காலாவதியாகாத கணக்கீடுகளைச் சீர்செய்யும்
நீ உலகத்திற்காய் கவிதையை நிர்மானித்தாய்
உன் தாக்கம் அழகுபடுத்தும் மட்டும் அது நிர்வாணமாய்
காதலால் நீ பெற்றுக்கொண்டாய் கவிதையை நிவாரணமாய்
கவிதை பெற்றுக்கொண்டது கருத்தரித்த நிஜங்களாய்

கவிஞனே!
இப்போது உன் காதலில் - ஒரு
கண்ணியமிருக்கும்
இனியும் காதலிக்கத்தயாராய் -இரு
இனி எப்போதும் நீ
உனக்குச் சொந்தமில்லை -இந்த
உலகிற்கே!

தோழனே!

உன் வார்த்தைகளின் வல்லமை
உனக்குப் புரியுமா - அவற்றால்
வானத்தையும் வளைக்க முடியும்
வரலாற்றையும் பிரிக்கமுடியும்

உனக்குப் புத்தி சொல்ல
எனக்குத் தெரியாது - ஏன்னெறால்
நீதான் உலகத்தில் மேலானவன்
நீதான் உலகத்தின் மாமேதை

உன்அயர்வு நேரத்தில்
அறிவித்தல் தரும் அற்ப தொண்டன் நான்
நீ ஆண்டவனுக்குச் சமமானவன் - எனவே
உன்னை வணங்குகிறேன்

வெகுநாளாய் யாரையோ தேடுகிறாய்
விடிவு என்னவோ ஏமாற்றந்தான்
உனக்குப் புரியவில்லை - ஆயினும்
எனக்குத் தெரிகிறது ஏனென்றால்
நான் உன் தொண்டன்

யாரைத் தேடுகிறாய்
கண்ணாடி முன் நின்று உன்கண்களைத்
திறந்து பார் உன்னால் தேடப்பட்ட
திரவியம் அதுதான்

போலிப் பெயருக்குப் புகழ்
மாலை சூட்டுவதால் - நீமட்டும்
காலியாகிக் காணப்படுகிறாய்

அதனால் தான்
கானல் நீரை கண்டும் - உன்னால்
கண்ணீர் வடிக்கமுடிகிறது

கண்ணாடியில் தெரிவதுதான் நீ
கண்ணாடி முன்னாடி தெரிவது ||நான்||
நான் என்ற ஆணவம்
இப்போது நான்தான் உனக்குக் கண்ணாடி

என்னைப் பார் அங்கு தெரிவது

நீயாயிருப்பாய்
ஏனென்றால் நான் உன் தொண்டன்.

உனக்குப் புத்தி சொல்ல
எனக்குத் தெரியாது - ஏன்னெறால்
நீதான் உலகத்தில் மேலானவன்
நீதான் உலகத்தின் மாமேதை
உனக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறேன்
ஏனென்றால் நான் உன் தொண்டன்.

அறுவடைநாள் 2002

ஓடி ஓடி ஓய்ந்த கால்களுக்கு ஓருநாள் ஓய்வு
தேடித் தேடித் திரிந்த தேடலுக்கு ஒருநாள்த் தடை
கூடிமகிழ்ந்து கொண்டாட கண்கண்ட திருநாள்
திரும்பத்திரும்ப வரும் ஆனால் தினந் தினம் வருவதில்லை
விடியும் என்று காத்திருந்தோம் விடிந்ததும்
முடிந்ததே என்று ஏங்கி நின்றோம்
மாதங்களாய் எண்ணும் போது பன்னிரண்டு
காலங்களாய்ப் பார்த்தால் அவை கண்ணிரண்டு
நாட்களாய்ப்பார்த்தால் முந்நூற்றியறுபத்தைந்து
நாளடைவில் வந்து போவதோ வருடம் ஒன்று
வீறுநடை போட்டுவந்த வருடத்தில் வியப்பென்ன தெரியுமா
வெறுங்கையுடன் ஆறுநடை போட்டுச் செல்வதே !
அடியெடுத்து வைக்கும் ஆண்டில்
அப்படியும் இப்படியும் பல அடிக்கல் நாட்டப்படும்
ஆண்டுமுடியும்வரை அத்திவாரம் கேள்விக்குறிதான்
ஆண்டாண்டு உண்டு அடுப்பங்கரையில் புரண்டு
பூதவுடல் பருத்ததே பூமியில் மீதம்
புத்தாண்டு என்று புதுவாழ்த்து வாழ்த்த
பத்தாம் நாளில் பாவியுடல் புதைபட்டுப் போகுதே
உண்மை என்ன பொய் யென்ன

அரசென்ன ஆண்டி யென்ன ஆறடி மட்டும் மீதி
உடல் உருக்குலையும் ஆயினும் ஆண்மாவுக்கு......?
கடல் போல் கலக்கந் தீரும் கன்னியநடத்தையில்
கொடுப்பது வாழ்த்துத் தானே என்று கொட்டிவிடாதே
கெடுப்பதற்கும் வலுவுண்டு வண்வார்த்தையில்
நடப்பதை நினைத்து நயமாய் வாழ்த்து
நினைப்பதுங்கூட நிறைவாய் நடக்கும்

மறைவாய் நினைத்துக் குறைவாய் கூறின்
அதுவும் நடக்கும் பார்த்துப் போ. . . .
வந்தது வருடம் பார்த்துப் போ . .. .
அங்கே பள்ளமும் பதட்டத்தை ஏற்படுத்தும்
சில புட்டியும் உந்தன் முட்டியை நோகடிக்கும்
துன்பத்தைக்கண்டு துவண்டு விடாதே
இன்பத்தின் அருமை துன்பத்தின் முடிவில்தானே
பாதங்களில் பங்கம் வரும் வரையில்
பாதரட்சைகளுக்கு பாராட்டில்லையே!
இதோ ஒரு சாலையின் முடிவு
அதோ அடுத்த அடி தெரிகிறது பார்த்துப் போ. . .
இதோ கொஞசம் ஓய்வெடுத்துக் கொள்
நீ போகவேண்டிய தூரம் தொலைவில் உள்ளது
துணைக்கு நல்ல தோழனைக்கூட்டிக் கொள்

தோழன் ! யாரவன் உன் துன்பத்தில் தெரியும்
அவன் வாழ்த்துக்களுக்கும் வல்லமையுண்டு. . . !!
வாழ்த்துக்கள்!! 

தமிழர் நாமும் மனிதர்கள்தான்

எப்போது காணுவேன்
என்
இனத்தின் எல்லையிட்ட விடுதலை
வீரஞ்
செறிந்த பாரம்பரிய
தேறல்
வாடிவிட்ட சோலையோ?
உரம்
போடப் புதைக்கப்பட்ட
உயிர்,
இன்னும் போதவில்லையோ
பயிராக!
பிஞ்சு உடல்கள் கூட பலவாறு

அஞ்ச
அறுக்கப்பட்டதே!

சர்வாதிகாரத் தாண்டவத்திற்கு
சர்வ
தேசமே சாதகமா?
ஆயிர
மாயிரஞ் செம்மணிகள்
இன்னும்
அம்பலத்திற்கு வராதவைகளே
“தூங்குபவனுக்கு
மீண்டும்
தூக்கமாத்திரை
தூக்கமற்றவனுக்குத்
தினந் தோறும்
துக்கயாத்திரை”

ஈழப்பயிர்கள் இழந்து
விட்ட
உயிர்கள் வாழ மண்ணிலிட்ட
பிச்சை
மயாணங்களே!!
மனித உரிமை மீறப்படுவதை
எங்குந்
தட்டிக் கேட்பவரே
மனித
உரிமை முற்றாய் மறுக்கப்பட்டதை
எப்படி
மறைத்தீரோ

செய்நன்றி கொண்ட மகற்கு
தமிழ்  ஈழம் மலரும்  அப்போது
சிங்கள இராணுவத்தினரை
நீங்காமல் நினைவு கூருவேன் !
ஏன் தெரியுமா ?- அவர்களின்
தீராத கோரங் களும்
போராடும் தூண்டலுமே - எமை
நாடாள வைத்த தவம்

போராடி வெல்லும்படி . சிறு
நாடி நரம்பெல்லாம்
வேரோடி நின்ற வேங்கையில் ,- வீர
வேட்டைக்காய்
யாழ்க் கோட்டைக்காய்
இந்தத் தூண்டலின் வேகம் - கடல்
தாண்டி நாம் சென்று
கதிஎன்று காரணஞ்சொல்லி  - உடல்
தஞ்சமடையக் காரணமின்று
தஞ்சமடைந்த நாமங்கு
தாய் மொழியை மறந்தோமா -- நிதம்
நல்ல பல வீணை செய்து
நாமிசைத்தே வந்தோம் நலமாக

வாண் வெளியில் விரைந்து செல்லும்
வானொலிகள் வீட்டு வாசலில் ! - இரு
கைதட்டி மெட்டுப் போடும்
இசைத்தட்டுக்கள் காதோரமாக
கணக்குகளையும் வழக்குகளையும்
கம்பியூட்டரில் பார்த்தோம் - எம்
தாய்மொழியாம் தமிழ் மொழிக்கென
தனித்தள மொன்று கணனியில மைத்தோம்
எழுதியறியும் வகை யெழுத்துக்களில்
இரண்டா மிடம் இணையத்தில்
இணையற்ற தமிழுக்கின்று
நன்றாய்க் கிடைத்ததென்று - தமி
ழீழம் மலரும் - அப்போது
சிங்கள இராணுவத்தினரை
நீங்காமல் நினைவு கூருவேன்..!
ஏன் தெரியுமா ?- அவர்களின்
தீராத கோரங் களும்
போராடும் தூண்டலுமே - எமை
நாடாள வைத் த தவம்
ஈழத்து ரிசிகளும் மகான்களும்
மேதைகளும்  மரணத்தால் - எங்கள்

மேனிகளில்  மேன்மையுடன் வீற்றிருப்பார்!
அவர்கள் சென்நீர் விட்டுச் சென்றதால்
மலரும் மீழத்தில் கண்ணீர்விட்டு - அவர்

காலடியில் பணிகின்றோம்
குட்டி தேவர்கள் அவர்கள்
அப்போது அவர்கள் மேனிகளில்
நஞ்சு மாலை சுமந்ததால்
இப்போது அவர்கள் மேனிகளில் - தும்பை
மாலை சூட்டுகிறோம்
சிங்களர்க்கு அந்நாள் வெட்க மாலை
சூட்டியதால் எங்களுக்கு இந்நாள்
மேனிகளில் தங்க மாலை சூட்டினீர்
புலி வீரர் விதையாக
சிங்களப் படைவீரர் உரமாக
வளர்ந்து நின்ற மரமாக

மலரும் மெங்கள் ஈழம் - அப்போது
சிங்கள இராணுவத்தினரை
நீங்காமல் நினைவு கூருவேன் !
ஏன் தெரியுமா? -அவர்களின்
தீராத கோரங் களும்
போராடும் தூண்டலுமே - எமை
நாடாள வைத் ததவம்

தோல்வியுற்ற வாலிபம் !

வருட மொன்றாய்
வாடிப் போனபோதும்
வாலிபத்தின்
வேடிக்கையால்
வயதும் போனது !

இரவுகளின் இன்பத்
தொல்லைகள்
இல்லாத உறவுகளுக்குத்
தூபம் போட்டுத்
தொல்லையானது !

வாரத்தில் தினம்
வந்து போன
நீண்ட பல இரவுகள்
வேதனை யோடே
விடிவுகளைத் தேடியது !

கட்டிலும் மெத்தைகளும்

கைகொடுக்கும் நண்பனாய்
கண்ணீரைக் கூடத்
தேக்கிவைக்கும்
தடாகங்க ளாகியது !

வெப்பத்தின் தப்பான
வெளிப்பாட்டால்
விண்ணில் கண்சிமிட்டிக்
கொட்டிக் கிடக்குந்
தாரகை கூட கூச்சப்பட்டது !

விடிந்தபின்பு நங்கையின்றி
நகைப்போடு முடிந்துவிட்ட
மாதத்து முப்பது
இரவுகளுக்காய்
வெட்கப்பட்டேன்!

விரல்கள் வருடிவிட்ட
வேதனையால் உடல்கள் - உடன்
விதைத்துவிட்ட
வேர்வைத்துளிகள்
வெப்பத்தைத் தணித்தன!

கட்டளை களுக்குக்
கட்டுப்படாத
தேகம்
கற்பனைக்குமட்டும்
கட்டவிழ்த்து விட்ட
கோளைத்தன மென்னவோ?

பூக்களின் மென்மை
குத்திக் குருதி சொட்டியது
முட்களின் பற்கள் பட்டு
சொற்கள் துண்டானது !
மூச்சுக்காத்தின் வெப்பம் பட்டுத்
தீயும் புண்ணானது

தூக்கமற்ற எந்தன்
இரவுகளின் நீளத்தை
தனிமையின் கோரத்தால்ச்
சபித்துக் கொள்கிறேன்

வாலிபத்தின் தாமதத்தை
வேடிக்கையோடு
வேலிபோடும்

கனம்பொருந்தி யோரையும்
கலாசாரத்தையும்
வண்மையாய்க் கண்டிக்கிறேன்!!

இதுதான் காதல்

தீப் புண் போன்று
உன்னால் வேயப்பட்ட,
என் இதயக் காயங்களை
நித்தம் கண்ணீரால்
கழு விக்கொண்டிருக்கின்றேன்
அப்போதும் கரையாமல்
குடி கொண்டிருக்கும் உன்காதல்!

என்னேடு உனக்குள்ள காதலை
என் கண்ணீரிடம் கேளு
கதைகள் பல கவிதைகளாய்ச் சொஃல்லும் !

மூடி வைத்த முத்துக்களாய் மௌனித்திருக்க
என் காதலுக்கு முடியவில்லை !
அதனால் தான் கரைந்துருகிக்
கண்கள் வழியாய்  கண்ணீராய் ஓடுதடி!

என்னால் தொல்லை வருமாயின்
என்னைத் தவிர உன்னைக் கூட
தொடமாட்டேன் என்பது உனக்குத் தெரியாதா?
காரணம் காதலடி பெண்ணே!

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
சும்மாயிருக்க , சுகமாக இருப்பது
அதுவென்றால் சுமையாக்க நானெதற்கு?!

தீப் புண் போன்று

உன்னால் வேயப்பட்ட,
என் இதயக் காயங்களை
நித்தம் கண்ணீரால்
கழு விக்கொண்டிருக்கின்றேன்
இப்போதும் கரையாமல்
குடி கொண்டிருக்கும் உன்காதல்!

கற்பனையில் கன்னி

எழுத்திற்கும் எண்ணத்திற்கும் இடையில்
எத்தனை தொலைவு!
பெண்ணிமை போல்

பேரிடி இடித்த பகுத்தறிவு ஓரடி கூட
நகராமல் மௌனமாய் இருப்பதேன்
||பென்||னின் மை விலங்கோ

தீயாய் ச்சுட்டெரித்த என் சின்னச்
சிந்தனைகள் பூவாய்த் தாழில் மலர்ந்ததென்ன
பெண்ணினிதழாய்

முத்தத்திற்கும் சத்தத்திற்கும்
நெருக்கம் போல்  - என்
எண்ணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பு
மண்ணின் மணம்போல்

ஆடம்பரமில்லா எழுத்துக்களில் கூட
ஆயிர மர்த்தங்கள் இருக்கக்கூடும்
||பெண்|| ணின் மனம்போல்

குறளைக் குறுகத்தறித்தும்
முறிந்து விட்டதா என்ன?
ஆயிர மர்த்தங்கொண்ட அமுத சுரபியை
சிப்பிக்குள் சிறுப்பித்தல்
சிறந்த சிந்தனை

||பென்|| என்றால்
அது . . .  கவிதை!
||பெண்|| னெ;றால்
அது காதல்!!.

புலம்பல்
அன்று
அமாவாசை தான்
என்மன வானில் -ஒரு
வெண்ணிலவைக்கண்டேன்

புயலடித்த தேசத்தில்
புரையோடி விட்ட
வீதியில்தான்  -அந்த
பௌர்ணமி வெளிச்சம்

புதைகுழியும் தன்
வாசலை எனக்காய்த் திறந்துகொண்டது.!
வாழச்சொல்லி பூமியும் -தன்
பாசக் கிடங்கைக் கட்டிக்கொண்டது!.

முட்டாள்த் தனமான
முடிவுகளுக்கு மட்டும்
பட்டம் சூட்டிப்
பரிசும் கொடுத்தது-இப்
பூவுலகம்!  |அப்பாவிகள்|

பைத்தியக்காரர்
என்று எள்ளி ஏளனம் செய்தது
பகுத்தறிவாளனை!
ஏட்டுச்சுரக்காய்க்கு மட்டும்
கைதட்டாம் |விவேகிகள்|

இப்போதெல்லாம் எனக்குப்
பைத்தியக்காரன்
என்று ஆயிரம் பட்டங்கள்
எனக்குள் மட்டும் பௌர்ணமி!!

அவளோடு ஓர் ஆலிங்கனம்
அடி கள்ளி இந்தக் கல்லைச் செதுக்கிச் சிலை செய்தாய்
சிறு காயந் தந்தும் வலிசெய்தாய்
அங்கம் எல்லாம் நடுக்கம் கொள்ள தங்கம் பூசி மடிதந்தாய்
பங்கமில்லாப் பந்தயத்தில் பாவி நான் தோற்று விட்டேன்
சத்தம் வந்த முத்தத் தொலி சாமத்திலுங் கேட்குதடி
சாய்ந்து கொண்ட வுந்தன் மடி தலையணையாய்த் தோன்றுதடி
உன் மூச்சுவிட்ட வெப்பத்தால் என் பேச்சுக் கூட வேகுதடி
மூடிய உந்தன் விழிகளை முத்தமிடும் போதிலே
ஆடிய எந்தன் அங்கத்திலும் அமைதி வந்து சேருதடி
பச்சையான வார்த்தைகளை உன்னிடம்
பிச்சுப் பிச்சுக் கேட்பேன் - அதைப்
பிச்சுப் பிச்சு நீசொல்ல பஞ்சில் பத்தும் தீயானேன்
உன் செல்லப் பேச்சை மெல்ல மெல்ல இரசித்தேன்
சொந்தமாக என்னைச் சொல்ல உள்ளுக்குள்ளே நானும் சிரித்தேன்
நீ பண்ணும் பூஜைக்கு பூவாய்த்தானே என்னைச் சரித்தேன்
வெப்பம் மூடிய கூட்டுக்குள்ளே வேர்வைத்துளிகள் கசியக்கண்டேன்
வெட்கம் கொஞ்சம் தடுத்துவைக்க வேதனையில் மூழ்கிவிட்டேன்
அள்ளிவந்த ஆசைகளை அப்படியே அடைத்துவிட்டேன்
கொள்ளிவைத்த தீயுடம்பால் உன்னைக் கொஞ்சம் அணைத்துவிட்டேன்
இன்னும் நேரம் நீண்டிருந்தால் என்னவாகும் என்னிலையோ
எண்ணிப்பார்க்க நீயுமில்லை உன்னுடம்பில் நீருமில்லை
நெருப்பில் பூத்த நீறைப்போல் என் நெஞ்சம் அருகிப்போனதடி
நீண்ட எந்தன் ஆசைகளும் நெருப்பாய் கொஞ்சம் காணுதடி
நெஞ்சைத் தொட்ட கைகளுக்கு மீட்டுக் கொள்ள ஆசையில்லை
ஒட்டிக் கொண்ட இதழ்களுக்கு விட்டுச் செல்ல வேளையில்லை
நீ காட்டும் அன்பிற்கு என்னிடத்தில் என்ன உண்டு 
இன்னுந்தாண்டி இன்பங்காண இதயம் ஏனோ இடிக்குதடி
இல்லை எந்தன் உயிரும் இல்லை இதயம் ஏனோ துடிக்குதடி

புலம் பெயர்ந்த ப+க்கள்
குயில் கூவும் ஓசைகள் கேட்கும் போது ஆசைகள் - கூவும்
போது கூட்டம் கூடிக் கேட்போமா
தமிழீழச் செல்வங்கள் பேசும் போது ஆசைகள் -கிள்ளை
மொழியில் பேசச்சொல்லிக் கேட்போமா
பூந் தோட்டம் நன்றாய்ப் பூக்காமல்
கம கம நறுமணம் வீசிடுமா- பிள்ளைச்
செல்வங்கள் நன்றாய்ப் பேசாமல்
சரி கம பத நிச பாடிடுமா (குயில். . . . !)
1
அம்மாவைப் பார்த்து பிள்ளைகள் இங்கே
அயஅஅய என்று அழைக்குது - அட
அயஅஅல என்றும் அழைக்குது!
அப்பாவைப் பார்த்து பிள்ளைகள் இங்கே
pயிpய என்று அழைக்குது - அட
pயிpல என்றும் அழைக்குது!
தொலைஞ்சு தமிழ் தவிக்குது -அது
தொலைவ நினைச்சு துடிக்குது! (2)
சொல்லிக் கொடுத்தா பிள்ளை மனசு
நெஞ்சில் பதிக்கும் வெள்ளை மனசு - (2)
தெரிஞ்சிருந்தும் தாய் மொழிய பிரிந்து விடாதே! - நல்ல
கதைகளோடு கவிதை சொல்ல மறந்துவிடாதே!
(குயில். . . . )
2
ஐரோப்பா வுந்தன் தாய்நாடு இல்லை
ஈழம் அங்கே இருக்குது - அது
உன்னை நம்பிச் சிவக்குது
லட்சத்தில் மூன்று தமிழ் வார்த்தை உண்டு
லட்சியமாய் எடுத்திடு - அதை
கட்சிதமாய்ப் படித்திடு
உறங்கிக் கிடக்கும் உணர்விது - அந்த
உறக்கங் கலைக்க உணவிது (2)
நெஞ்சம் முழக்கு எண்ணப் பறவை
வட்டம டிக்குஞ் சின்னப் பறவை (2)
நச்சுக் களைகளை நீ முளையிலேயே கழைந்து விடு -இல்லை
பலன் கொடுக்கும் பயிர் களையே மறந்து விடு
(குயில் . . . . )

ஆறாத வடுக்கள்

நெஞ்சம் பட்ட காயத்துக்குக்
கட்டுப் போதுமா - என்
வேதனையைத் தீர்க்க
வொரு பாட்டுப் பாடம்மா

பொல்லாத உலகமம்மா புண்பட்ட இதயமம்மா
தாய்நாடு நோகுதம்மா தீயால வேகுதம்மா
(நெஞ்சம். . . )

பிஞ்சு உள்ளங்கள் சாகுதம்மா
பிரிஞ்சு நெஞ்சங்கள் வாடுதம்மா
அஞ்சி அஞ்சியே ஓடுதம்மா
உடைஞ்ச ஓடம்போல் ஆடுதம்மா

பஞ்சங்கள் கூடி
பட்டினியால் வாடி
நிம்மதியைத் தேடி
பார் தன்னிலே ஓடி

ஏதேதோ எண்ணங்களே எண்ணுதம்மா
ஏராளம் மின்னல்களாய் மின்னுதம்மா
(நெஞ்சம். . . . )

தள்ளி உள்ளது செந்தமம்மா
தன்னந்தனிமையாக ஏங்குதம்மா
கண்ணில் வெள்ளமாய்ப் பாயுதம்மா
கார்மேகம் தூவிச்சென்ற தூறலம்மா

கண்ணிலே விம்பம்
காணவேண்டும் இன்பம்
தீரவேண்டுந் துன்பம்
கூட வேண்டும் சொந்தம்

நட்சத்திரங்கள் மாலை ஆகுமம்மா
வட்ட நிலாவின் வெண்மை தோன்றுமம்மா
(நெஞ்சம் . . . )

தமிழர் நாமும் மனிதர்கள்தான்

எப்போது காணுவேன்
என்
இனத்தின் எல்லையிட்ட விடுதலை
வீரஞ்
செறிந்த பாரம்பரிய
தேறல்
வாடிவிட்ட சோலையோ?
உரம்
போடப் புதைக்கப்பட்ட
உயிர்,
இன்னும் போதவில்லையோ
பயிராக!
பிஞ்சு உடல்கள் கூட பலவாறு
அஞ்ச
அறுக்கப்பட்டதே!
சர்வாதிகாரத் தாண்டவத்திற்கு
சர்வ
தேசமே சாதகமா?
ஆயிர
மாயிரஞ் செம்மணிகள்
இன்னும்
அம்பலத்திற்கு வராதவைகளே
“தூங்குபவனுக்கு
மீண்டும்
தூக்கமாத்திரை
தூக்கமற்றவனுக்குத்
தினந் தோறும்
துக்கயாத்திரை ”
ஈழப்பயிர்கள் இழந்து
விட்ட
உயிர்கள் வாழ மண்ணிலிட்ட
பிச்சை
மயாணங்களே!!
மனித உரிமை மீறப்படுவதை
எங்குந்
தட்டிக் கேட்பவரே,
மனித
உரிமை முற்றாய் மறுக்கப்பட்டதை
எப்படி
மறைத்தீரோ?
(செம்மணிச் சம்பவத்தின் போது வரைந்த அருகன் வடுக்களிலிருந்து .)

ஞாபகமிருக்கா?

பாசத்திற்குக் கண்ணீரால் பூட்டுப்; போட்ட - காலம்
பாழடைந்து போனது பரிதாபமாய் !
பணமென்னும் மொருகணினி இயக்கப்பட்டு
எண்ணிக்கையே கைச் சாவியானதிப்போது
கண்ணீரெல்லாம் காட்சிச் சாலைக்காகன  - கோலம்

அதோ -!!!!!!

வீதி அங்கே முடிவடைகிறது, விதியுந்தான் . . !
கணினிக் கணக்குகளுக்கினி யவசியமில்லை
காலோடு தலை மட்டும் கணக்குப் போட்டால்
அதிகபட்சம் ஆறடிக் கணக்கே போதுமானது

குருதிக் கொதிப்பில் இழைத்து விட்ட
“களைப்புகளு”(ழு)க் கெல்லா - மங்கே
இளைப்பாறல்கள்!

சூடேறிச் சுட்டுவிட்ட சுகங்களுக் கெல்லா - மிங்கே
சவங்க ளென்று பெயர்

பணங்களைப் பங்கு போட்டவ ரெல்லா - மங்கே
பிணங்களாய்ப் பட்டுப் போனார்கள்

குணங்களை மிதித்தவர் அவர்கள், இப்போ - துர்
மணங்களுக்காய் மூக்கைப் பொத்தும் உறவுகள்

நன்றிகளெல்லாம் நாய்களாகக்; கட்டப்பட்டன
பண்புகளெல்லாம் படகேறிச் சென்ற அகதி
அன்புமட்டும் முன்னாள்த் தலைவரின் சிலை
பறிபோன கலாசாரங்கள் பகிடிக் கிடமானது

விதையாகிப் புல்லாகிப் பூவாகிக் காயாகிக்
கனியாகிக் கனிச் சாறாகித் தாகந்தீர்க்கும் - மரம்

அணுவாகிக் கருவாகி உருவாகிச் சிசுவாகி
மனுவாகிக் கிழமாகி இளைப்பாறி இழியும் - உடல்

மறந்துவிடாதே யுந்தன் மானிடப் பிறவியை !
மறந்துவிடாதே யுந்தன் மாயைப் பிறவியை !

காதல் நோய்!!

ஓயாமல் கரையைத் தொடும்
அலையைப் பார்த்தேன்
ஓராயிரம் மின்னல் போல்
உன்னைப் பார்த்தேன்
ஓரமாய் என் நெஞ்சில்
ஊன்றப் பார்த்தாய்
ஓசையாய் ஆசைகளை
ஊற்றிவிட்டாய்
ஓடையில் ஆடிடும்
ஓடமாய் ஆட்டிவித்தாய்
ஓ. . பெண்ணே
ஊளச் சதைக்கல்லடி
ஓளடதங் கேட்டேன்
ஊசி தைத்த உன்பார்வைக்கே!
ஓதிச் செல்லு உன் காதலை
ஊரறியச் சேதி சொல் தூததை.!!

குறிப்பு
    ஆநுப+தி -தானேகண்டறிந்ததும்,பிறருக்குச் சொல்ல முடியாததுமான அறிவு. 
    பூஸ்பரிசம் - ஒரு குழந்தை பிரசவித்து ப+மியைத் தொடும் நிலை.
    தும்பைமாலை - போர் வென்றோருக்குச் சூட்டும் மாலை
    ஆலிங்கனம் - புணர்ச்சி ,தழுவல்

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு திருவிழா-

தமிழ்த் தைத் திருவிழா

clip_image002

கல்தோன்றாக்  காலத்து முன்தோன்றிய மூத்ததமிழுக்கு வணக்கம்!. 

மாறிவரும் மாபெரும் உலகத்தில் மென்மேலும் மெருகுடன் விளங்கும் முத்தமிழுக்கும் வணக்கம்!

தமிழர்களின் பண்பாட்டிலே மனிதர்களின் பண்பையே வெளிக்காட்ட வழிகாட்டிய மூதாதையத் தமிழர்க்கும் வணக்கம் !

தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் -இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!. . . . . .

இப்படி முழங்கும் பாவேந்தர் அவர்கள் இன்னொன்றையும் இதில் இனிதாகவே திணித்துஞ் சொன்னார்

“தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்”

ஆம் அந்தத் தாய் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீராகத்தான் இருந்தாள் இன்று பல அசுத்தங் கலந்த சாக்கடைகளும் இணைந்து இந்தச் சமூகத்தை அபகரிக்கப்பார்க்கிறது. வேகவளர்ச்சியில் சாக்கடை கலப்பது சகஜந்தான் அதை வடிகட்டிக் குடிநீராக்குவது உங்கள் பொறுப்பல்லவா?

செய்நன்றியை நற்பண்போடு வெளிக்காட்டும் பாரம்பரியப் பண்பாடு தமிழர்களுடைய சிறப்புப் பழக்க வழக்கம் என்று சொன்னால் அது குற்றமாகாது. மாறாக மாபெரும் உண்மையே !

அத்தகைய தமிழர்கள் இன்று இடப்பெயர்வுக்குள்ளாகி அந்நிய கலாசாரத்திற்கு மாறிக்கொள்வது பற்றித் தப்பாகச்சொல்லாவிட்டாலும், தமிழ்ப்பண்பாடுகளையும் பாரம்பரியத்தையும் மறந்து போய்க்கொண்டிருக்கிற போதிலும் மறக்காமல் தமிழை வளர்ப்பதிலும் ஏராளமானோர் முன்நிற்பது பெருமைக்குரியதும் பாராட்டலுக்குரிய தென்பதும் வெளிச்சம்.

அத்தகைய தமிழர்களின் கலாசாரக் களிப்பாடலிலொன்றுதான் தைமாதத் தைப்பொங்கல் பெருவிழா.

||எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு||

என்ற பெருந்தகையின் பேச்சுக்கிணங்க வாழ்பவர்தான் தமிழ்க்குடிகள் என்பதனைத் தமிழர்களின் இத்தைப் பொங்கல்த் திருவிழாவும் தெளிவு படுத்துவது திண்ணம்.

அதாவது, உலகனைத்திற்கும் ஒளிமுதற் கொண்டு மாபெரும் சக்தியாக விளங்கும் சூரியனைக் கடவுளாகக் கருதிச் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாகப் பொங்கி மகிழ்விக்கும் தமிழர்களின் நன்நாளே அந்தப் பொங்கல்த் திருவிழாவின் பெருநாளாம்
தமிழ் வருடத்தின், முதல் மாதத்தின் முதல்த் தேதிதான் அந்நாளுக்கு உரிய திருநாள்.

ஒருவரைக் கௌரவிக்கும் பொருட்டு அவரை வீட்டிற்குக் கூப்பிட்டு விருந்து கொடுப்பது நடைமுறையிலுள்ள பழக்கமானாலும் அவர் வீட்டிற்கு வரும் முன் வீட்டைத் துப்பரவு செய்து உணவினைத் தயார் செய்து அவரின் வருகையின் போது அவரை மதிப்புடன் அழைப்பது

போலவே, அதிகாலை எழுந்து விருந்தாளியான கதிரவன் வருமுன் பலத்த ஆயத்தத்துடன் எதிர் பார்த்திருக்கும் கட்சிதமான பண்டிகை ||பொங்கல்ப் பண்டிகை.||

பழம்பெரும் புலமைப்பாட்டியாம் ஒளவை

“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோனுயர்வான்”

என்று வான் சிறப்பையும் அதனால் ஏற்படும் விளைவால், விவசாயிகள் ஊடாக நாடும், நாட்டு மக்களும் சிறப்புப் பெறும் என்பதைச் சுருக்கமாகவும் சிறப்பாகவும் எடுத்துக்காட்டியபோதிலும் அவற்றிற்கு அடிப்படையாகவும், மறைமுகமாகவும் தொக்கியிருக்கும் கருப்பொருள் ஒன்று உள.

ஒளவைப் பாட்டி மட்டுமல்ல செந்நாப் புலவர் இந்த வான்சிறப்பை அற்புதமாக இரண்டு வரிகளில் ஏழே வார்த்தைகÙடாக எடுத்து இயம்புகின்ற அற்புதம் சிறப்பாக அமைந்துள்ளது.

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”

இத்தகைய வான் சிறப்பு சிறப்பாக அமைவதற்கு ,அகிலத்திற்கே அணையா விளக்காகப் பிரகாசிக்கும் பகலவனே பாலமானவன் என்பதுதானே அப்பட்டமான உண்மை.! அத்தகைய உண்மையை நன்கு உணர்ந்த எங்கள் தமிழ் மூதாதையர் இத்தகைய விழாவை அந்தப் பகலவனுக்கு வழங்குவதில் தப்பேது இருக்கமுடியும்?.

அப்பேற்பட்ட சிறப்புமிக்க மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் விழாவைப் புலம் பெயர் தேசத்தில்  தேக்கத்துடனே செய்யும் ஏக்கத்திற்கு ஆளான எம்நிலை பரிதாபத்திற்குரியதே !

“எங்கள் சொந்த மண்ணில் - அந்த
சொர்க்க பூமியில்
சந்தத்தோடும் சத்தத்தோடும்

சொந்தத்தோடும்
பொங்கிப் பாடும்
பொங்கலோ பொங்கல் - இன்னு;
மொலிக்கும் மங்கலவார்த்தை.!

புள்ளினங்கள் சப்திக்கும் - அங்கே
பூ மலர்கள் சங்கமிக்கும்
மாவிலைகள் சலசலக்கும் - தரையில்
மாக்கோலம் ஜொலிஜொலிக்கும்
நறுமணங்கள் கமகமக்கும் - பின்னர்
மத்தாப்பூக்கள் வெடிவெடிக்கும்

சின்னஞ்சிறுவர் சிரித்து விளையாட
கன்னிப் பெண்கள் அன்ன நடைபோட
அன்னையர்கள் பொங்கி இலைபோட
கதிரவன் கதிர்கள் எம்மை நாட
சலங்கை ஒலிகள் காதில் நடமாட
பொங்கி வழியும் பொங்கல்க் குடமாட

புத்தாடை தரித்து - கொத்து
பூமாலை முடித்து
வீதி யெங்கும் விழாக்கோலமாம்
சாலை யெங்கும் சந்தனமாம்

சந்தியெங்கும் மண் குடமாம்
பொங்கிவரும் பொங்கலிட்டு - பெண்கள்
பொன்னகைக்குப் போட்டியிடும்
பேரானந்தப் புன்னகையாம்.
  பொங்கல் பண்டிகை!!”

இப்படிச் சிந்தனை எனக்குச் சிறகடிக்கிறது.

இதை எண்ணும் போதே சொல்லெண்ணா மகிழ்ச்சி தாண்டவமாடும் என் நெஞ்சில். அதிகாலை சாணத்தால் தரை மெழுகி , மாக் கோலம் மண்ணிலிட்டு, மாவிலைத் தோரணங்கட்டி, சந்தனமும் குங்குமமும் தயார்படுத்தி , வாசற்படியில் அடுப்பு மூட்டி , புதுக்குடத்தில் பொங்கிப் போட ஆர்வத்துடனே ஓடித்திரியும் அந்தக் காலைக் காட்சி அட்டகாசமான கண்காட்சி.

பொங்கல்ப் பானையின் வாயினைத் தாண்டிப் பொங்கிவரும் பொங்கலைப் பார்ப்பதற்கென்றே விரைந்து வந்து வேடிக்கை பார்க்கும் அழகும் அற்புதந்தான் . அன்றாடம் அம்மாமார் அடுப்படியில் பொங்கிப் படைக்கும் அன்னத்திற்கு அண்மையில் வராத அப்பாமாரும் ஆர்வத்தோடு ஆடிப்பாடும் காட்சி அற்புதமோ அற்புதம்.

இதை இப்படியே ஐரோப்பாவில் செய்வதாகக் கற்பனை செய்தால் எல்லாம் மாறுபட்ட வாழ்வுதான். அடிக்கடி அடுப்பங்கரைக்கு அப்பாமார்தான் அதிகம் செல்வதுண்டு. அத்தோடு விறகு போட்டு அடுப்புக் கொழுத்த வேண்டும் என்ற அவசியங் கூட இங்கில்லை
வெட்கை காலங்களில் பொழுது போக்கிற்காக காடுகளில் உணவுகளைச் சுட்டு உண்பதற்கு விறகுகளைப் பயன்படுத்துவது மட்டும் உண்டு.

இயந்திர வாழ்க்கையும் சுதந்திரக் கட்டுப் பாடும் அதிகம்.

மண்சட்டி பானையில் சமைக்கும் உணவிலும் , விறகுவைத்து எரிக்கும் சமையலிலும் இருக்கும் ருசியோ ருசி அந்த நிலை இப்போது எங்கள் தேசத்திலும் சற்றுக் குறைந்து கொண்டுதான் போகிறது. எனினும் இத்தகைய சமையலில் உடல்நலம் பராமரிக்கப் படுவதாக ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டு கொண்டுள்ளார்கள்.
ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழரின் கலாசாரத்தில் வைத்தியமுறைகூட இணைக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்குள்ள பெருமையே அவற்றுள் ஒன்றுதான் இந்த தைப்பொங்கல் விழா.

உடல் ரீதியிலும் மனரீதியிலும் இத் திருவிழாக்கள் எத்தனையோ திருப்திகரங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாது மனிதநேயத்தினை வெளிக்காட்டும் மாபெரும் வெளிக்காட்டுகள் இங்கு இடம் பெறுகின்றது. குடும்ப உறவுகள் பலப்படுகிறது. தொலை தூரத்தில் வாழ்பவர்களுக்கிடையில் வாழ்த்துக்கள் என்ற பெயரில் தொடர்புகள் துரிதப்படுகிறது. பகிர்தல் ,விட்டுக் கொடுத்தல் ,புரிந்து கொள்ளல் போன்ற நற்பண்புகளைச் சீர்ப் படுத்த இப் பெருவிழாக்கள் அடிக்கடி மாறுபட்ட பெயரில் வந்து போகின்ற போதிலும் ,செய்த நன்றியை மறக்காமல் பிரதி அவரை நினைத்து அவருக்கு வழங்கப்பட வேண்டிய கௌரவத்தைச் செலுத்தும் இத்தைப் பொங்கல் திரு விழா மிகச் சிறப்புடையதுதான். அன்று காலை நடக்கும் நிகழ்வு எல்லாவற்றையும் என்றுமில்லாதவாறு பார்த்துப் பார்த்துப் புன்னகை செய்வான் ஞாயிறவன்.

||தலைவாழை அதை வெட்டி, பொங்கலை அதில் கொட்டி|| படைத்துப் போடுவார்.
புன்னகைத்துக் கொண்டிருக்கும் அன்றைய விருந்தாளிக்கு நன்றி நமஸ்கரிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. அப்போது பொங்கல்ப் பானையில் பொங்கல் பொங்கி வரும் காட்சியைக் கண்டதும் அஞ்சி அஞ்சி வெடி வெடிக்கும் சப்தம் நெஞ்சைப் பிளக்கும்.

பொங்கல் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்பு மதவேறுபாடின்றி அன்றையதினம் பரஸ்பரம் இடம் பெறும் அத்தோடு தாம் பொங்கிய பொங்கலை அன்போடு அயலாருக்குக் கொடுத்து உண்ணும் அளப்பெரிய விருந்தோம்பல் அங்கே இணைக்கப்படுகின்ற அருமையான செயற்பாடு மட்டுமன்றி ஏதோ ஒரு காரணத்தால் பிணக்கு ஏற்பட்டுவிட்ட நபர்களுக்கிடையில் இணக்கம் காணும் ஒரு கருவியாகக்கூட பலர் இவற்றைப் பயன்படுத்தியதைக்கூட அறியமுடியும் . ஒருவர் ஒருவரை மதிப்போடு வாழ்த்துச் சொல்லும் போது அவர் விரோதியாக இருந்தாலும் பதில் வாழ்த்துத் தெரிவிக்கும் கட்டாயம் இந்நாளில் ஏற்படுவதால் விரோதம் அங்கே விநோதமாக விடைபெற்றுச் சென்று விடுகின்றது. இப்பேற்பட்ட அற்புத நிகழ்ச்சியை அதே சிறப்புடன் அன்னிய தேசத்தில் அமுல்ப் படுத்தமுடியாத அபாக்கிய நிலைக்கு எம் இளைய தலைமுறை தள்ளப்பட்டு விட்டதல்லவா?!.

“தை பிறந்தால் வழிபிறக்கும்”  என்னும் வாக்கும் இதனைத்தழுவியே கைக்கொள்ளப்பட்டது. அனைத்துப் பிரச்சினைக்கும் பணம் ஒரு முக்கிய காரணம் இன்றைய நவீனத்துவத்திலும் சரி அன்றைய நாகரீகத்திலும் சரி ஒரு அரசின் அல்லது தனிமனிதனின் வளர்ச்சியிலும் பெரும் பொருள் ஈட்டக்கூடிய நடவடிக்கைகள் விவசாயம், மீன்பிடித்தொழில், மிருகவளர்ப்பு

என்பது வரலாறுகாட்டும் உண்மை. இதில் எவற்றை மேற்கொள்ள வேண்டுமாயினும் அதற்குக் கதிரவனின் கனிவான பார்வை வேண்டும்.

எப்படிப் பார்த்தாலும் தை மாதத்தில் அனைத்து விளைச்சல்களும் அறுக்கப்படும் போது அனைவரிடமும் வசதி வாய்ப்பாகக் காணப்படும் எனவேதான் அந்நாளை தை பிறந்தால் வழிபிறக்கும் என்றனர்.

மனிதன் வாழப் பணம் அவசியம் .பணம் சம்பாதிக்கத் தொழில் அவசியம். எந்தத் தொழிலாக இருந்தாலும் அங்கு சூரியனின் இன்றியமையாத உதவி தேவைப் படுவதனால் தான் அத்தகைய சூரியனை நமஸ்கரிப்பதில் வருடத்தின் ஆரம்பமான முதல் மாதத்தின்

முதல்த் திகதியாம் தமிழ்த்திகதியில் தமிழர் பண்பாட்டிற்கமைய இந்தப் பொங்கல் விழா நன்றியோடு நினைவு கூரப்படுகிறது.

இங்கு கரும்பு, பால், பழம், நெல், போன்ற துணைப் பொருட்கள்  படைக்கப்படும் போது தலைவாழையில்  பொங்கலுடன் நன்றியோடு கதிரவனுக்காக இணைக்கப்படுகிறது.

இந்தப் பொங்கல் நாளுக்கு மறுநாள் உழவர்கள் தாம் தமது உழவுக்குப் பயன்படுத்திய மாடுகளுக்கான நன்றியைத் தெரிவிக்கும் நோக்குடன் “மாட்டுப்பொங்கலைச்” செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சி வீட்டில் மட்டுமன்றி வியாபாரஸ்தாபனங்கள், பாடசாலைகள் போன்றவற்றிலுங்கூட சிறப்பாக நடைபெறுகின்றது.

அத்தகைய நன்றியை ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துங்கூடப் பலர் மறக்காமல் பொங்கிப்படைக்கிறார்கள் சில ஐரோப்பிய நாடுகளில் வாழ்வோர் சூரியனைப்பார்ப்பதே அபூர்வமாக ஆகிவிடுகிறது இல்லையா?

இந்தச் சூரியன் உதிக்காமல் விட்டால் என்ன வாகும் என்று சற்று சிந்தித்தால்? . . . . ஒருவேளை இராப்பொழுது நினைவிற்கு வரும் ஓரளவு சமாளித்து விடலாம் என்று எண்ணத்தோன்றும் மாறாக இப்போது சூரியனால்  வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் வெப்பத்தைப் போன்று பலமடங்கு வெப்பத்தை ஒருநாளில் வழங்குமானால் இந்தப் பூமியின் நிலை என்னவாகும்.!!

உதாரணமாக ||கத்தானியா||வில் உள்ள ||வொல்க்கானா|| வைப் பாருங்கள் (எரிமலை) அது வெடித்துச் சிதறும் போது அதில் இருந்து வெளிவரும் நெருப்புப் பிளம்புகள் எவ்வளவு பயங்கரமானவை! அதனிலும் பல மடங்கு அதிக வெப்பத்தைக் கொண்டிருந்த போதிலும் அளவோடு பூமிக்கு வரும் கதிர்களைப் பற்றிச் சிந்திக்கத் தவறவேண்டாம்.

இந்தச் சம்பவங்களைச் சிந்திக்கும் போதுதான் கடவுள் என்றொருவரைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றுகிறது.

கண்களுக்குப் புலப்படாத கடவுளைப்பற்றிச் சிந்திப்பதிலும் பார்க்கக் கண்ணூடாகக் காணும் மனிதர்களை மனிதத்தோடு மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழர்களின் திருவிழாக்கள் தக்க காலத்திற் கொரு முறை வலம் வருகிறது.

கடவுளைப் புறக்கணிப்பதாகக் கருதவேண்டாம், புரியாதவர்களுக்கு அப்படித்தான் தோன்றும்.

“கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார் இதைத் தவிரத் தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை - இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகே நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்கிறான் “

இதனை நான் சொல்லவில்லை சுவாமி விவேகானந்தாவின் ஆழ்ந்த கருத்து இதே போன்றொரு கருத்தைத்தான் இரண்டாயிரத்தி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நம்மோடு உள்ளவரும் உரைத்தார் என்பதனையும் மறக்க வேண்டாம்
||நீங்கள் ஒருவருக் கொருவர் அன்பு செய்யுங்கள்||       

இயலாதவர்களுக்கு உதவி செய்யும் போதும், சிறைக்கைதிகளைப் பார்க்கும்போதும் பசியாய் இருப்பவருக்கு உணவு கொடுக்கும் போதும். எனக்கே செய்தீர்கள் என்கின்றார் இயேசு பெருமான்.

எனவேதான் மேலே அவ்வாறு சொன்னேன். மனிதர்களை நேயத்தோடு மதிக்கும் போது கடவுளுக்குக் கிட்ட நீங்கள் உள்ளீர்கள் என்பதனை மறக்க வேண்டாம்.

இதனைத்தான் தமிழர் கலாசாரங்களில் கலந்து தமிழ்ப் பாரம்பரியங்கள் எமக்குத் தருகின்றது. நன்மை செய்த சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதோடே நேயமான வாழ்வைக் கற்றுக் கொள்ளவும் இது எமக்கு மீட்டல் அனுபவம் அல்லவா?
ஜப்பானின் கிரோசிமா நகரை நினைத்துப் பாருங்கள் ஆதித்தனின் அற்ப அனலின் சொற்பமே இத்தனை அபாயமானதென்றால் அவன் தன் சூரியப் பிரகாசத்தை அளவுக்கதிகம் அளித்துவிட்டால் இந்தப் பிரபஞ்சமே  அழிந்து விடுமல்லவா? ““Too much of anything is good for nothing”” என்னும் ஆங்கில வார்த்தையை நினைவுறுத்திக் கேடு விளைவிக்கும் நிலைக்கு எம்மை ஆளாக்காமல்

கொடுத்துக்கொண்டிருக்கும் அக்கினிக் கதிருக்கு நன்றி சொல்லிப் பொங்குவோம் புலம்பெயர் தேசத்திலும் பொங்கலோ பொங்கல்.

தமிழர்களின் கலாசார விழுமியங்களில் ஏராளமான நற்பண்புகள் பகிர்ந்து கொள்ள ஏதுவானவை.. எனவே எங்குதான் சென்றாலும், எந்த மொழியைக் கற்றாலும், அந்நியப் பிரஜா உரிமைக்காய் ஆவல் கொண்டாலும், அழகிய தமிழையும் அதனுடைய பாரம்பரியத்தையும் கட்டிக்காப்பதில் தலையாய கடப்பாடு தாய் தந்தையர்களாகிய இன்றைய தமிழனுக்குண்டு என்பதனை நினைவில் கொள்ளுங்கள். உலகை நன்கு அறிந்து கொள்ளுங்கள் அது மிக அவசியமும்கூட எனினும், உன்னதமான தமிழை, “எந்த மொழிகளுக்கும் இல்லாத பல சிறப்பம்சம் தமிழுக்குண்டு என்பதைப்” புரிந்து கொள்ளுங்கள்.
“இன்றைய தமிழர் நாம், என்றுமே தமிழர்தாம்” என்ற அடைமொழியுடன் அத்தமிழ்ப் பண்டிகையினையும் புலம் பெயர் தேசத்திலும் படையெடுப்போம்.

“பொங்கலோ பொங்கல்.”

Arupoothiஅனைத்து உறவுகளுக்கும் மலர்ந்த உள்ளத்தோடு மலரவிருக்கும்  பொங்கல் வாழ்த்துக்களை ஆண்டவன் நாமத்தில் “அருகன்” அள்ளித் தெளிக்கின்றேன் “வாழ்க”!!
வாழ்க வளமுடன்.!!
நன்றி - வணக்கம்.

2003ம் ஆண்டு அருகனின் அநுபூதி நூலிலிருந்து...

 

 

இவ்வருடம் தமிழர்களுக்கான புது வாழ்வு மலர விரும்பி வாழ்த்துகின்றதோடு எமது இணையம் அதற்கான ஆதரவையும் வழங்கும்...

martedì 12 gennaio 2010

தமிழ் தேசியம் பரிட்சாத்த லைவ் தொலைக்காட்சி ஒலிபரப்பு

முக்கிய தலைப்புச் செய்திகள்.

dove3 லசந்த கொலை; எவரும் கைதாகவில்லை : ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்

ராஜகிரியவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க .........

மஹிந்தவும் சரத்தும் வெளிநாட்டு முகவர்கள் : ரத்மலானை கூட்டத்தில் விக்ரமபாகு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சோகாவும் மேலை நாடுகளின் முகவர்கள்..........

அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுபான்மை மக்களுக்கு நிரந்தர தீர்வு- சரத்பொன்சேகா

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வு வழங்காது, அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனூடாக நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை

234 தேர்தல் வன்முறைகள் பதிவு

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையிலும் 234 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான

காலிமுகத் திடல் வீதி ஊடாக பஸ் போக்குவரத்துக்கு அனுமதி

பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத் திடல் வரையிலான காலி வீதியில் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் பயணிப்பதற்கு நேற்று

காணாமல் போனோரை மீட்டு தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் கைது

யாழ். மாவட்டத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குழுவுடன் தொடர்புடைய பெண் ஒருவரை யாழ். மாவட்ட விசேட குற்ற புலனாய்வுப் பிரிவினர்

30 வருடங்களாக நிலவிய பயங்கரவாதம் இன்றில்லை : மட்டக்களப்பில் ஜனாதிபதி

"கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை. எனினும் மீண்டும் ஆயுதக் கலாசாரம்

ஜனாதிபதியின் 'மஹிந்த சிந்தனை-2' இன்று வெளியீடு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான 'மஹிந்த சிந்தனை 2',...........

Official Website Mahinda Rajapaksa Presidential Election Campaign 2010

Official Website Mahinda Rajapaksa Presidential Election Campaign 2010

lunedì 11 gennaio 2010

காலங்கடந்தும் கண்கள் மெல்கும் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயா அவர்களே !!!

Thiruvenkadam

 

 

 

 

 

தந்தாய்!!! நீ தந்தாய் உன் தனையனை இவ்வுலகிற்கு
தானைத்தலைவனால், தலைநிமிர்ந்ததே உன் தமிழினம்!!!
அதனால் அவ்வினம் போற்றிப்புகழ்கின்னதே உன்னை…
மரணந்தீண்டா மாவீரனைத்தந்ததால் நீயும் மாவீரன்தான்… !!!
இறப்பினும் நீவாழ்வாய் சிறப்பிலும் நீவாழ்வாய்…!!!
தள்ளாத வயதிலும் தளராத வீரத்தோடே தடுப்பு முகாமில்
தமிழர்களுக்காய் தலைகொடுத்த தெய்வம் நீ…
கூடுவிட்டு உயிர்பிரிந்தாலும் நாடுவிட்டு
நாம் நினைவுகொள்ளும் நல்தெய்வம் நீயய்யா!!!
கண்ணீர்விட்டு நாம் கலங்கும் பெருவெள்ளம்
நாளை உன்பாதத்திற்கு மலரும் ஈழம் சமர்ப்பணமாகும்.

தேசியம் ஆசிரியர் குழு-

giovedì 7 gennaio 2010

விடுதலைப்புலிகள் இரங்கல்

Imageதமிழீழ விடுதலைப் புலிகள், தலைமைச் செயலகம், விடுத்துள்ள இரங்கற் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
pirapakarn_thanthai_1pirapakarn_thanthai_2

mercoledì 6 gennaio 2010

பிரபாகரனின் தாயின் வாக்குமூலம் வெளிப்படும் மட்டும்....வேலுப்பிள்ளையின் மரணம் இயற்கையானதா???

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை காலமானார்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார். இராணுவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

இது ஒரு இயற்கை மரணம் என்றும்  அந்த தரப்பு குறிப்பிட்டுள்ளது.

வேலுப்பிள்ளை, கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருடன், பிரபாகரனின் தாயும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கடைசி ஆதாரம் இருக்கும் மட்டும் சிங்கள அரசியல் வாதிகள் தமிழரை விடப்போவதில்லை, தமிழர்களும் ஒன்று சேரப்போவதில்லை.

பெரிய பேய்கள் சேர்ந்து சின்ன பேய்களுக்கு நரகத்தின் வாசலுக்கு வழிதேடினராம் - அருகன்.

sarath_sammanthan “தமிழர்களுக்கான சாதகமான முடிவைத்தரப்போவது யார்? (1)


“பெரிய பேய்கள் சேர்ந்து சின்ன பேய்களுக்கு நரகத்தின் வாசலுக்கு வழிதேடினராம்.

அதற்காக கருத்தரங்கும், கூட்டங்களும் வைத்து பல நாட்களுக்குப்பின்னர் ஒருமாதிரி முடிவுக்கு வந்தனராம்.

எமனிடம் போய் தஞ்சமடைவதாக முடிவுகட்டி, நாம் நரகத்திற்குப்போகவேண்டும் வழிதெரியாது தவிக்கின்றோம் என்று கேட்டனராம்,

அதற்கு அவர், நரகம் எப்படி இருக்கும்? என்று கேட்டாராம்

சாவும், சவக்காடுமாக இருக்கும். கொடுமையும், பற்கடிப்பும் இருக்கும். அழுகையும், நோய்வாயும் இருக்கும் … என்று இழுத்துச் சென்றவர்களை பார்த்து எமன் நினைத்தாராம், இருக்கும் இடம் அதுதான் என்று தெரியாமல் அந்த இடத்திற்கே வழிகேட்கின்றனரே…  இப்போதுதானே அந்த கடைசி யுத்தத்தையும் வெற்றிகரமாக முடித்து இவர்கள் கேட்டதிலும் பார்க்க அதிகமாக கொடுத்தும் இதுதான் நரகம் என்று தெரியாத அளவிற்கு அவர்களுக்கு இயபாக்கம் அடைந்து விட்டது. இனி இவர்கள் மோட்சத்தை நினைப்பதே கஸ்டம் என்பாடு கொண்டாட்டம்தான் என்று எண்ணியவாறு…

சரி கவலை வேண்டாம் …

எனக்கு சற்று அவகாசம் கொடுங்கள் நீங்கள் கேட்பதிலும் அதிகப்படியான நரநரகத்தையே காட்டுகின்றேன் “பலருக்கு நரகத்தில் இருந்து, இருந்து அதன் அகோரம் தெரியாது போய்விடும்.

எனவே, நான் நரநரகத்தையே காட்டுகின்றேன்” அது எனக்கு மட்டுமே தெரிந்த வழியாக்கும்.

கடந்த பலவருடங்களாக அதற்கான பயிற்சியை மேற்கொண்டு, தவம்புரிந்து வழியைக்கண்டுபிடித்துள்ளேன். அவற்றை உங்களுக்கு காட்டுகின்றேன்.

எனினும், எனக்கு நீங்கள் அடிமையென்று பட்டயம் எழுதித்தரவேண்டும். என்றதற்கு, மாடுமாதிரி தலையையாட்டிய போய்கள் சின்னப்பேய்களைளய்லாம் எமனுக்குப்பட்டயம் எழுதிக்கொடுத்தனராம்…”

எப்படி இருக்கின்றது… இதுதான் இன்றைய தமிழர்களின் நிலை.

நிரந்தர வாழ்விற்கு வழிகேட்டால் பஸ்சைஓடவிடமுடியுமா?, கைதியை வெளியில் விடமுடியுமா? ஆமியை அகற்றமுடியுமா? ரோட்டுபோடமுடியுமா என்று … வாக்கியானம் பேசுவதற்கு கூட்டமைப்பு போட்டகுழப்பம் கொஞ்சமல்ல…

பொன்செக்காவால் தமிழீழம் கிடைப்பதற்கேற்ப யாப்பை மாற்ற முடியுமா என்று கேட்டு எழுத்தில் அதற்கான உறுதி இருந்து ஆதரவைக் கொடுத்தால் கூட்டமைப்பின் கூட்டம் பாராட்டக்கூடியதே!!!

சாதாரணமாக தற்போதைய அரசு மேற்கொண்டுவரும் விடயங்களை மேற்கொள்வதற்காக, இத்தனைநாட்களும் தமிழர்களையும் புலிகளையும் விடாமுயற்சியாக தாக்கி அழித்த ஒருவருக்குப்போய் வால்பிடித்துநிற்கின்ற குரங்குக்கூட்டம் போல், கூட்டமைப்பு தொங்கிக் கொண்டு இருக்கினம்.

1994ம் ஆண்டுவரை வவுனியா வில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் … போன்ற அமைப்புக்கள் இயங்கும் போது ஒதுங்கியிருந்து பதுங்கியிருந்து வேடிக்கையும் வெட்டுப்பேச்சும் பேசியவர்கள் இப்போது, புலிகள் பலம் குறைந்தது என்றதும் தாம்தான் தமிழர்களின் மக்கள்பிரதிநிதி என்று கங்கணம் கட்டுகின்றனர்.

ஒரு தமிழன் சரியோ, பிழையோ, தெரிந்தோ தெரியாமலோ தேர்தலில் நிற்கின்றான் அவனுக்கு வாக்குப்போட்டு தமிழர்களின் ஒற்றுமையினைக்காட்டுவோம் என்றில்லை சிங்களவனின் காலுக்குள் போய் புகுந்து கொள்கின்றனர்.

கண்ணுக்குத்தெரியாத கடவுளைவிட கண்ணுக்குத் தெரிகின்ற பேய் நல்லம் என்று, அதிகாரமுள்ளவனை பற்றிக் கொண்டு அதே கோரிக்கையினைக் கேட்பதைவிட்டுவிட்டு, ஆட்சிமாற்றம் வேண்டுமாம் ஆட்சிமாற்றம்….

தமிழர்களின் பலத்தை ஒரு தமிழனுக்கு காட்டவேண்டியதுதானே! என்ன அரசியல் செய்கின்றனர்.

தமிழர்கள் அணைவரும் நிதானமாக யோசித்து தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வேண்டும். அதாவது, சிவிஜிலிங்கத்தை ஆதரித்தாலும் சரி மகிந்தவை ஆதரித்தாலும் சரி, சரத்தை ஆதரித்தாலும் சரி வெல்லப்போவது, மகிந்தவே… காரணம் தெரியுமா ஆரம்ப காலத்திலிருந்தே பலம் பொருந்திய கட்சியாக இருந்த ஐ.தே.கட்சியை அன்னப்பறவையாக்கியது சரத்தல்ல மகிந்தவே!!! அதிகாரியாக இருந்த சரத்தை அரசியல் வாதியாக மாற்றியது றணிலல்ல… மகிந்தவே!!!

இது தேர்தலின் பின்னால் மக்கள் வெளிப்படையாகப் புரியப்போகின்றனர்.

இந்த நுட்பம் கூடத்தெரியாத கூட்டமைப்பினர், எப்படி நாளை இலங்கையின் அதிபரானால் ஆட்சிநடத்தப்போகின்றனர். இல்லை தமிழீழம் கிடைத்தால் அதை எப்படி கட்டிக்காக்கப்போகின்றனர்.

இதைவிட சிங்களவன் கொடுப்பதை வாங்கித்திண்டுகொண்டு பேசாமல் இருக்க வேண்டியதுதானே!

போராட்டம் நடந்த போது, பேசாமல் இருந்த எதிர்க்கட்சியினர், புலிகளை அழித்தொழித்தாகிவிட்டது என்றதும் நாட்டை அபிவிருத்தியில் கொண்டு செல்லாது, குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். முட்டாள் தனமான தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும், மகிந்த மட்டும் புலிகளை அழிப்பதற்கு போர் தொடுக்கவில்லை, ஜே.ஆர், பிரேமதாசா, டிங்கிரிபண்டா விஜயதுங்க, இவர்கள் ஐ.தே கட்சிக்காரர்களே… ஏன்! அப்போது அவர்கள் தமிழர்களுக்கு உரிமை வழங்கினார்களா?

அவர்கள் காலத்தில் தானே தமிழர்கள் அதிகமாகத் துன்புறுத்தப் பட்டார்கள். தற்போதைய அரசு கட்சிக்காரர்கள் பதவியில் இருந்ததிலும் பார்க்க இவர்களே அதிககாலம் இலங்கையை ஆண்டவர்கள். சந்திரிக்காவின் காலத்தில் சந்திரிக்கா செய்யாததை அவருக்குப்பின்வந்தவர் செய்து விட்டார் என்றதும் அம்மையார் அடுத்த கட்சிக்குத்தாவிவிட்டா… அப்போது புலிகளின் ஆதரவாளர்கள் அவவுக்காக எத்தகைய கேவலமான பாடல்களைளய்லாம் எழுதினார்கள். மறந்து விட்டார்கள் போலும். அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள். புலிகளை அங்கிகரித்து மாலையா போட்டார்கள். புலிகளின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கினார்களா? அவர்களும் புலிகளை அழிக்கவே போர்தொடுத்தனர். என்ன மகிந்தவின் காலத்தில் அது நிறைவேறியிருக்கின்றது. அதுகும் மகிந்தவின் வீரத்திலோ அல்லது, அவர் சகோதரரின் தந்திரத்திலோ இப்போர் ஒரு முடிவுக்கு வரவில்லை. பல வழிகளில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள், ஆயுதங்கள் இருந்தும் ஆட்பலம் இருந்தும் செத்த பாம்பாகிவிட்டிருந்தார்கள். அதற்கான பல காரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம். 

முதலில் இருந்து வருவதிலும் பார்க்க முக்கியமாதில் இருந்து வருவதே மேல்… தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மரணம், சுப தமிழ்ச்செல்வனின் மரணம், அமைச்சர் கருணாவின் பிரிவு, கிழக்கின் போராளிகள் ஆதரவின்மை, அத்துடன் புலிகளுக்குள் ஏற்பட்ட தலைமையில் சீர்கேடுகள் போன்றவற்றால் புலிகள் இறந்து கொண்டிருந்த வேளை, சந்தர்ப்பம் பார்த்து காய்களை நகர்த்தியதுதான் மகிந்தவின் அதிஸ்டம்.

கருணா மகிந்தவை ஒட்டிக்கொண்டு இருக்கின்றார் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் கருணாவும் நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் அதுவல்ல உண்மை!!! உண்மை எதுவென்றால், போர்குற்ற நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டால், அப்போது இலங்கையையும் மகிந்த ஆட்சியினையும் காக்கப்போவது கருணாவின் வாக்குமூலமே அதற்காகத்தான் கருணாவிற்கு இத்தனை ஆராதனை. போர்க்குற்ற பேச்சுக்கள் மறைந்து போகும் பட்சத்தில், சமாதானத்திற்கான பரிசு மகிந்தாவிற்கு கிடைக்கும் போது, கருணா தன்னைப்பலப்படுத்தாவிட்டால், பிரபாகரனின் கதிதான் கருணாவிற்கும் என்பதுதான் உண்மை.

ஆரம்பத்திலேயே கூறிய விடயம்தான் மகிந்தவுடையதும் சிங்கள ஆட்சியாளர்களின் எண்ணமும் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பதே தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் நாளைய ஆட்சியில் தமிழன் இலங்கையை ஆழுவான் என்பதே!!!

தமிழர்கள் சிங்களவர்களுக்கு வாக்குப்போட வேண்டும், சிங்களவர் தமிர்களுக்கு வாக்குப்போடக்கூடாது என்ற சூட்சுமத்தை பின்பற்றுகின்றனர் சிங்களவர்கள். ஆனால் தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்குப்போடவும் கூடாது, அடங்கிப் போகவும் கூடாது. இந்த விடயத்தில் எல்லாரும் கருணாவை தூற்றுவதைப்போல் என்னால் தூற்ற முடியவில்லை. காரணம் தன்னைக்காத்துக்கொள்ள கருணாவிற்கு புலிகளை விட பெரிய பாதுகாப்பு இருந்திருக்காது, அதனால்தான் வேறு எந்த தமிழ்க்கட்சியுடனும் அவர் சேராது, அரசுடன் இணைந்திருக்கின்றார்.

ஆரம்பத்தில் இருந்து எனது எழுத்துக்களில் வருகின்ற விடயம் கருணாவின் பிரிவுகூட பிரபாகரனின் திட்டம் போலும்.    …       

“தமிழர்களுக்கான சாதகமான முடிவைத்தரப்போவது யார்? (2)


ஒருவர் தன்னை திடமாக்கிக்கொள்வதற்கு, தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப்பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்தை நல்ல விதமாக கொண்டு செல்வதற்கு, அக்குடும்பம் ஆரம்பத்தில் பட்டபாடுகளை எடுத்துச் சீர்திருத்த வேண்டும்.

ஒரு அமைப்பு தம்மை நிலைத்துக்கொள்வதற்கு, கடந்த செயற்பாடுகளை சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். இப்படியே பார்க்கும் போது, தமிழர்களாகிய நாம் எம்மைத்திடப்படுத்துவதற்கு, எமது உரிமைகளை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்வதற்கு, எமது கடந்தகால தவறுகளைச் சீர் செய்தாகவேண்டும். 

அந்த வகையில் எமது தவறுகளையும் சிறப்புக்களையும் நினைவு கூருவதோரு, நடக்கப்போகும் பாதைகளில் திடமான கால்களைப்பதிக்க ஒரு நல்ல நண்பன் தேவைப்படுகின்றான். அதனடிப்படையிலேயே இப்பகுதி வெளிவருகின்றது…

இன்றைய அரசியலிலிருந்தே எமது பார்வையினைச் செலுத்தினால் முதலாவது வினாவாக முன்நிற்பது?... சரத் யார்?

சரத் யார்… கடந்த காலத்தில் ஏறக்குறைய 20 000க்கும்  மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை அழித்தொழித்த தளபதி…

மகிந்த யார்?... விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கங்கணம் கட்டிய ஆறு நிறைவேற்று அதிகாரங்கொண்ட இலங்கைத் தலைவர்களுள், அதனை வெற்றிகண்டவர்.

கூட்டமைப்பினர் யார்? … இத்தனைகாலமும் மக்களின் தூண்டுதலுக்குக்காரணமாக இருந்தவர்கள்… இதற்கு மேலதிக விளக்கம் பின்னுள்ள பகுதிகள் விளக்கும்.

இப்படியே பார்க்கும் போது, பல வினாக்கள் எழுகின்றது,

ஆஃதாவது,

தமிழர்கள் சார்பில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் நிற்கின்றார். யாருடன் இணைந்து நிற்கின்றார்… சிரிக்கவேண்டாம் பொறுத்து பதில் சொல்லுங்கள். அதே தேர்தலில் தன்னை நிறுத்திக்கொண்ட ஒரு சிங்களவருடன் இணைந்து வாக்குக்கேட்கின்றறார். நல்ல அரசியல் தந்திரம்… “அரசனை நம்பி புருசனைக்கைவிட்டமாதிரி…”

இந்த சிவாஜிலிங்கம் யார்? பாராளுமண்ற உறுப்பினராக இருந்தபோதிலும் புலத்திலேயே தன்னை காத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு, அரச தேர்தலுக்காக அதற்காக மேற்கொள்ளப்பட்ட வழக்கு தள்ளபப்பட்டதும் இலங்கைக்குள் கால்பதித்தவர். இதில் கேவலம் ஒன்றும் இலவ்லை தமிழ் எம் பீக்கள் பெரும்பாலும் தமது தேர்தல் தொகுதிக்கு சேவை செய்வதிலும் பார்க்க புலத்திலே தேய்த்துக்கொள்வதிலேயே காலத்தையும் பதவிகளையும் பாழாக்கியவர்களே!!! இதில் அவரைக்குற்றஞ்சொல்லி என்ன… இதற்கு ஆயிரம் சாக்குப்போக்குகள் இருக்கின்றது. அதுபோலவே இத்தேர்தலில் தான் நிற்பதற்கும் ஆயிரம் சாக்குப்போக்குகளைத்தேடி வைத்துள்ளவர் அவரின் வருடிகள்…

கூட்டமைப்பின் பக்கம் திரும்புவோம்.

இவர்கள் புலிகளின் அரசியல் திட்டத்தில் தம்மை கட்டிக்கொண்ட பொம்மைக்குட்டிகள்… புலிகளின் தலைமை சிதைவடைந்ததும் மழைநீரில் கரைந்த மணற்கட்டியானார்கள்.

புலத்தில் இருக்கும் புலிகளின் ஆதரவாளர்களும் அவர்கள் இலங்கை அரசியலில் ஒரு முக்கிய புலிகளின் கருவியென்றே எண்ணியிருந்தார்கள். புலிகளின் பின்னடைவின்போது, அடித்தார் பார் குத்துக்கரணம் மிஸ்டர் கிசோர்… அடித்த அடியில கூட்டமைப்பிற்கே ஒரு கலக்கம் வந்தது… இதுக்கிடையில மனோகணேசனும் சும்மாயில்ல புலிகள் இருக்கும் மட்டும் தானும் ஒரு முக்கிய தேசபக்தர் என்று காட்டிக்கொண்டவர், மக்களை உயர்த்தும் நிலைவரும்போது, குரங்கு போல தாவித்திரிகின்றார். நாட்டின் நலத்தையோ அல்லது, தேச மக்களின் சுகத்தையோ யாரும் நோக்கியதாகத்தெரியவில்லை.


ரணிலின் பக்கம் பார்த்தால் போர் உச்ச கட்டத்தில் இருக்கும் போது, வாயையும் அதையும் பொத்திக்கொண்டு… இந்தியாவிற்குச் சென்ற போது, எதிர்க்கட்சியின் நிலை மறந்து தேசத்தை காக்கும் செயலில் அரசு ஈடுபட்டிருக்கின்றது எல்லாம் விரைவில் முடிவிற்கு வரும் என்று பெருமை பாராட்டியவர் இப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு முன்நிற்பதை விட்டு மகிந்தவின் பதவிக்கு ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்றார். எப்படியாவது ஒரு முறையென்றாலும் தானும் அதிபர் பதவியில் வந்தாக வேண்டும் என்பது அவர் லட்சியமாகும். அதற்காக புலிகளை வால்பிடித்துப்பார்த்தார் முடியவில்லை, இப்போது புலிகளின் வாலைப்பிடித்துப்பார்க்கின்றார்.

தமிழர்கள் கிட்டத்தட்ட வக்கோல் பட்டறை நாய் மாதிரித்தான். இப்போது ஆட்சிமாற்றம் எதற்கு, துன்பத்தில் இருக்கின்ற மக்களுக்கு ஆறுதல் தேவை. துணையிளந்தவர்களுக்கு ஆதரவு தேவை, சொத்துக்களை அழந்து, சொந்தங்களை இழந்து புரையோடிப்போனதமிழர்களுக்குத் தெம்புதேவை மீண்டும் எமக்கொரு சந்தர்ப்பம் கிடைக்கும் அதுவரை எம்மைத்திடப்படுத்த யார் பதவியில் வந்தாலும் அவர்களுக்கு வாலைப்பிடித்து எமது காலைத்திடப்படுத்தவேண்டுமேயொழிய, அவர்கள் காலைப்பிடித்து எமது வாலைத்திடப்படுத்தக்கூடாது…

“தமிழர்களுக்கான சாதகமான முடிவைத்தரப்போவது யார்? (3)

வட்டுக்கோட்டைத் தீர்மானமாம் வட்டுக்கோட்டை...

தொடரும்.    அருகன்.