domenica 8 maggio 2011

இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு…

Patente Italianoஇத்தாலி வாழ் தமிழ் மக்களின் தேவைகள் கருதியும், பொருளாதார நிலை கருதியும் காலத்திற்குக்காலம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நாம் தற்போது, இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த முறைதயார்ப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றோம்.
சாரதி கல்வி நிலையத்தில் கற்றுக்கொள்வதற்கு மக்கள் மொழிச்சிக்கல் மற்றும் பணவிரயம், நேரச்சிக்கல் போன்ற பல நெருக்கடிகளைச்சந்திக்கின்றார்கள். இவ்வாறான சிரமங்களிற்குள்ளாகும் பலருக்காகவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை நாம் எடுத்துள்ளோம்.

sabato 7 maggio 2011

தாயை இழந்த எத்தனையோ செல்வங்கள் எமது தேசத்தில் இன்று… அவர்களுக்கு யார் தாய்??? – Arugan

100_3819

ஈழம் என்ற சொல்தொடர்பாகவும் அது காலம்காலமாய் எம் தேசத்தை குறித்த சொல் என்றும் வரலாற்று ஆதாரங்களுடன் ஏற்கனவே பல ஆக்கங்களிலும் நாவலிலும் தெரிவித்திருந்தேன். அதை இப்போது மீட்டுவது அவசியப்படுகின்றது.

lunedì 2 maggio 2011

இத்தாலிய தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான நடவடிக்கைகள்.

cartaidentitapic29தற்போதைய இத்தாலிய அரசின் ஆட்சியால் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு மிக இறுக்கமான நடவடிக்கைகள்.

கடந்த காலங்களில் வழங்கிவந்த இத்தாலி அடையாள அட்டை 5வருடம் என்றும் சில காலத்திற்கு முன்னரிருந்து சில பிரதேசங்களில் 10 வருடமாகவும் செல்லுபடியாகும் காலம் வழங்கப்பட்டு வந்தது. இது இத்தாலி மக்களுக்கும் பொருந்தும். ஆனால் தற்போது நடவடிக்கை மாற்றமடையவுள்ளது. அதுவாகில், இத்தாலியின் விசாக்களுக்கு ஏற்ப ஒரு வருடமோ அல்லது 2 வருடமோ சாதாரண விசாக்களின் அடிப்படையில் வழங்கப்படுவதோடு நிரந்தர விசாக்களையுடையோருக்கு 5வருடமாகவும் வழங்கப்படவுள்ளது.

இது எவ்வாறு தமிழர்களைப்பாதிக்கும்?