lunedì 29 agosto 2011

ஊமை நாடகம் போடும் அம்மையாரை யாரும் கேள்வி கேட்டதாக இல்லையே!!!

மிஸ்டர் சீமான்! நீங்கள் கூடவா அம்மையாரை கேள்விகேட்க தயங்குகின்றீர்கள்? ஊங்கள் ஆரவாரங்கள் எங்கே? இத்தனை மக்கள் வீதிகளில் போராடுகின்றபோது, அம்மையார் ஒருவார்த்தையும் சொல்லாதிருப்பது உங்கள் யாருக்கும் வியப்பாக இல்லையா? புல வழக்கறிஞர்கள் வீதிக்கு வந்திருக்கின்றார்களே அதற்கு அம்மையார் பதில் வழங்காதிருப்பது வெறுப்பாக இல்லையா? ஒரு தன்னைத் தீக்கிரையாக்கியுள்ளாளே இதற்கும் அம்மையார் பதில் தராது இருப்பது வேதனை தரவில்லையா?... இதே விடயத்தை முன்னாள் முதல்வர் செய்திருந்தால் எத்தனை வாங்கு வாங்கியிருப்பீர்கள்!!!! ஆம்மையாரின் மௌனத்தை கலைக்க எந்த ஊடகமும் முன்வராதது ஏன்? ஆம்மையாரின் தியாணத்தைக்களைக்க எந்தத்தலைவரும் முன்வராதது ஏன்? துமிழகத்தின் தமிழ் அரசியல் வாதிகள் கூட தமது பதவிகளை இரானாமா செய்வதாக பூச்சாண்டி காட்டதாதது ஏன்???
என்ன சார் இன்னுமா புரியவில்லை இந்த நாடகங்கள் எதற்கென்று!!!  

domenica 28 agosto 2011

“எனது கால் என்பதற்காக, அது சேற்றில் மிதிபட்டால் வாசமா அடிக்கும்…”

800PX-~1சட்டத்தரணிகள் சட்டத்தைப்பயன்படுத்துவதை விடுத்து உயிரை பறித்துவருகின்றார்கள். மூவரின் உயிரைக்காக்கவென்று பலரின் உயிரை பலிகொடுக்க முன்வந்துள்ளார்கள் தமிழகத்துத்தமிழர்களும் புலத்தில் சில தமிழர்களும். என்ன கொடுமையப்பா?  தமிழகத்தின் முதல்வரின் வாசலில் போய்க்கேட்கவேண்டிய விடயத்தை உலகம் கேட்கப் பேசினால் தம்மை திடப்படுத்தலாம் என்ற நோக்கில் பலரின் உயிரை பலிகொடுத்துவருகின்றார்கள். சட்டத்தரணிகளும், நீதிபதிகளும், இணைந்து நாட்டில் இல்லாதொழிக்க வேண்டியசட்டதீர்மானத்தை மக்கள் பலிப் போராட்டமாக வெளிக்காட்டுகின்றனர். இப்போதெல்லாம் மக்கள் போராட்டத்திற்கும், உண்ணா போராட்டத்திற்கும் மதிப்பில்லாது ஆக்கிவிட்டார்கள். நிகழ் வரலாற்றில் போராட்டங்கள் வெண்றதிலும் பார்க்க தேல்வி கண்டமையே அதிகம். அதன் கருத்து போராட்டம் செயலிழந்தது என்றல்ல போராட்ட முறைகளும் அதை நடாத்துபவர்களும் முறையற்றுச் செயற்படுகின்றார்கள் என்பதே!
ஒரு போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்றால் அதன் போக்குகள் சரியான முறையில் அமையவேண்டும். ஆனால் இப்போது நடக்கின்ற போராட்டங்கள் எல்லாம் நிதியடிப்படையினைக் கொண்டும் பதவி அடிப்படையினைக் கொண்டுமே இடம்பெறுகின்றது. இதில் நீதிக்கும் நேர்மைக்கும் இடம் எங்கே இருக்கப்போகின்றது. இப்போது இந்த மூவருக்காகவும் தனது உயிரை தீக்கிரையாக்கிய பெண்மணிக்கு என்ன பின்னணியில் என்ன நடந்ததோ என்ற விடயங்கள் பற்றியும் அறிந்தாகவேண்டும்.
எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை, அதுவாகில் “எனது கால் என்பதற்காக, அது சேற்றில் மிதிபட்டால் வாசமா அடிக்கும்…”  அமேரிக்கா சதாமிற்கு மரணதண்டனை வழங்கும் போது சரி என்று பட்ட ஒரு விடயம் பலருக்கு தவறாகவே பட்டது. அதற்காக சதாமிற்காக எமது இரத்தம் கொதிக்கவில்லையே! அப்போது துக்குக்கு எதிரான எமது போராட்டம் எங்கே போய்த் தொலைந்தது?
மிருக வதைச்சட்டத்திற்கு இடமுண்டு அதுவே மனிதனுக்கு நடக்கும் போது, எமக்கு வேண்டியவர்கள் என்றால் அது தவறாகக்காணப்படுகின்றது. ஏன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! இத்தனை வழக்கறிஞர்களும் இணைந்து தமது சிறப்பம்சத்தால் விடுவிக்கப்பட வேண்டிய தூக்குதண்டனை சட்டத்தை மக்களிடம் திசை திருப்புவதன் நோக்கமாவது, தவறான விடயத்தையும் மக்கள் போராட்டத்தால் சரியாக்கி விடலாம் என்ற கட்டத்திற்கு தள்ளப்பட்டு விடாதா? இம்மூவரின் குற்றங்கள் நிரூபிக்கப்படா விட்டால் எவ்வாறு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக்கூடும் என்று எனக்குப்புரியவில்லை? சட்டத்தால் எடுத்த முடிவை மக்களால் மாற்ற முடியுமானால், சட்டத்தரணி எதற்கு நீதிபதி எதற்கு அரசாங்கம் எதற்கு தீர்ப்புகள்தான் எதற்கு???...
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களே! நீங்கள் செய்ய வேண்டியது போராட்டமல்ல அம்மையாரின் அலுவலகத்தின் விடுக்கப்படும் கோரிக்கையும் அம்மையாரின் பதிலிலுமே தங்கியிருக்கின்றது. இது இப்படி இருக்க எதற்கு இந்த மறைமுக விளையாட்டுக்கள். இதைப்புரிந்து கொள்ளாத மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகின்றார்கள். இதில் மனித நேயம், கருணை ம னுஎன்ற போர்வையில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களும் விதிவிலக்கல்ல!!!         

sabato 27 agosto 2011

“அசை போடுவதற்கு ஒரு செய்தி கிடைச்சாச்சு”… அருகன்….

Blind_Justice_svg_medஈழத் தமிழர்களுக்கு இதுவே ஒரு பொழுது போக்காகிவிட்டது…. அதுவாகில் அவ்வப்போது சிலர் ஊளையிடும் போது தாமும் சேர்ந்து ஊளையிடுவது, அது சரியோ பிழையோ என்று கூட எண்ணிப்பார்ப்பதில்லை. “ஊரோடு சேர்ந்து ஓடு” என்பது பழமொழியே தவிர நடைமுறையல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
ஜே. அம்மையார் வந்தால் தமிழர்களுக்கு என்ன நடக்கும் என்பதனைப்புரிந்து கொள்ளாமலே முன்னாள் முதல்வரை வீட்டுக்கு அனுப்பினர் தமிழகத்தாரும், சீமான் குழுவினரும்…

lunedì 8 agosto 2011

இத்தாலியில் வீட்டுக்கடன் எடுத்தவர்கள் கவனத்திற்கு…

இத்தாலியில் வீட்டுக்கடன் எடுத்தவர்கள் கவனத்திற்கு

இத்தாலியில் வீட்டுக்கடன் எடுத்தவர்கள் வேலைச்சிக்கல் காரணமாக கட்டுப்பணத்தை கட்ட முடியாதவர்களுக்காக மேலும் சிலகாலவரையறை வழங்கப்பட்டு உள்ளது என்பதனை அறிந்து கொள்க. அதுவாகில் இந்த கால எல்லையானது வருகின்ற 2012ம் ஆண்டு தை மாதம் வரை மீணஇடும் நீடிக்கப்பட்டுள்ளது என்பதே இதன் தகவல்.... எனவே அதற்கான விண்ணப்பத்தையும் மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துங்கள். 

venerdì 5 agosto 2011

சங்கிலியன் சிலை “திறந்து” வைக்கப்பட்டதல்ல, “புனர்மைக்கப்பட்ட” என்ற பதமே பயன்படுத்த வேண்டும்…

224405_10150403412698902_823993901_10465615_3603573_nசில தமிழர்களுக்கும், சில ஊடகங்களுக்கும் பொறுமையே இல்லை என்பதனை கடந்த காலங்கள் நிரூபித்தே வருகின்றன…  அதுவாகில் சங்கிலியன் தொடர்பாக எத்தனை போடுபோட்டார்கள்!!! கடைசியில்  நடந்துள்ள முக்கிய தவறை திருத்த முன்னர மறுக்கின்றார்கள். அதுவாகில் சங்கிலியன் சிலை “திறந்து” வைக்கப்பட்டதல்ல, “புனர்மைக்கப்பட்ட” என்ற பதமே பயன்படுத்த வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டி அதனைத் திருத்த யாரும் “தலைவர்கள், தேசியவாதிகள், தமிழ்பற்றாளர்கள்… முன்வராதது ஆச்சரியத்தைத்தருகின்றது.

எதையுமே முழுமையாக முடிக்கும் பழக்கம் எமது உறவுகளிடம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இதில் ஒரு வேடிக்கையும் இருக்கத்தான் செய்கின்றது… அந்த சிலை திரை நீக்கம் செய்த போது கூட்டமைப்புச் செல்லவில்லையாம். காரணம்  டக்ளஸ் திறந்துவைப்பதாலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தது. “தமிழீழத்தை” “சிங்களவனிடம்” இருந்தே பெறப்போகின்றோம்… அதில் தன்மானம் தெரியவில்லையாம், தமிழன் ஒருவன் திறந்து வைத்தால் செல்லமாட்டார்களாம்… அந்த தமிழனை மட்டுமல்ல எந்தத்தமிழனையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே என்றும் தமிழர்களின் உண்மை நிலை.