giovedì 27 maggio 2010

தமிழர்கள் தமது தேசியத்தை வென்றெடுக்க, அமைப்புக்களின் போக்கு மட்டுமல்ல தனி ஒருவரின் போராட்டமும் அவசியப்படுகின்றது… அருகன்

02bbn தமிழர்கள் தமது தேசியத்தை வென்றெடுக்க, அமைப்புக்களின் போக்கு மட்டுமல்ல தனி ஒருவரின் போராட்டமும் அவசியப்படுகின்றது… அருகன்

ஏற்கனவே இலங்கை அரசு வெளிவிவகார அமைச்சரைத் தெரிவு செய்தபோது, அதன் பிரதிபலிப்பு எவ்வாறு அமையும் என்பதனையும், அதன்தெரிவிற்கான காரணத்தையும் மேலோட்டமாக விபரித்திருந்தமை, பல இணையங்களில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஆதாரம்…  -  தற்போதைய வெளிவிவகார அமைச்சரும் ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வும் [ புதன்கிழமை, 05 மே 2010, 03:37.38 PM GMT +05:30 ] ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்) என்று சொன்னதுமே, விடுதலைப்புலிகளின் சமாதானப் பேச்சுக்களே நினைவில் வரும். அத்தனைதூரம் புலிகளின் ஒவ்வெரு பேச்சுக்களிலும் அரசு சார்பில் தலைமைதாங்கியவராவார்.

இதில் புலிகளின் சார்பில் ஈடுபட்டோரில், (அமரர்) திரு அன்ரன் பாலசிங்கம் மற்றும் (அமரர்) சு.ப. தமிழ்ச்செல்வன் போன்றோர் தம்முடைய நிலையில் இனி வாய்பேச முடியாது என்பதனை நன்கு உணர்ந்த இலங்கை அரசானது, பேச்சுக்களில் ஈடுபட்ட இன்னும் இரு முக்கியஸ்தர்கள் என்ற வகையில் எதிர்கொள்ள வேண்டியவர்களாகக் காணப்படுகின்றமைக்கு, சர்வதேசத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று இருக்கின்றபோது,

உள்நாட்டில் மிஞ்சியுள்ள தற்போதைய பிரதி அமைச்சரும், சர்வதேசத்தின் பார்வைக்கு முன்னாள் புலிகளின் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவருமான கருணா என்கின்ற திரு.வி.முரளிதரன் அவர்களை ஒருவாறு தனது கட்டுப்பாட்டுக்குள் ஏற்கனவே கொணர்ந்த போதிலும், புலத்தில் மிஞ்சியுள்ள ஒருவராகவும் சட்டத்தரணியாகவும் காணப்படுவதோடு மட்டுமல்லாது, புலத்தில் தனது நிலையினைக் காலூன்ற, மக்களின் பலத்தினை அரணாகக்கொண்டு இன்று நாடுகடந்த அரசை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு வி.உருத்திரகுமார் அவர்களை ஒரு வழிபண்ணவேண்டும் என்ற புதிய புலத்தின் அரசியல் போர் உத்திகளுக்காக இலங்கை, அரசால் தெரிவாகியிருக்கும் ஒரு புத்திஜீவியும் பழுத்த அரசியல் அனுபவசாலியுமான “ஜீ. எல். பீரிஸ்” என்ற இந்த மனிதரை நியமித்துள்ளது.

உள்நாட்டில், பலம்பொருந்தி ஆயுத அரசியலில் 2009 வரை கால்பதித்திருந்த புலிகளை, அடியோடு அழித்துவிட்டோம் என்று ஆணவம் கொண்டிருந்த போதிலும், “புலம்பெயர்ந்த புலிகளாக” “புலிகள் பெயர்ந்து தமிழர்களாக” உருவாக்கப்பட்ட கட்டமைப்பை எப்படி மண்ணோடு மண்ணாக்குவது என்ற முனைப்பு ஒருபுறமிருக்க… சர்வதேசத்தால் தனது முன்னைய புலிகளுடனான அனுபவத்தை வைத்து காய்களை பக்குவமாக நகர்த்துவதற்காகவே இவர் இந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றே இன்னொருபுறம் எண்ணத்தோன்றுகின்றது.

புலத்தின், மற்றும் புலிகளின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகளும் மனக்கசப்புகளும் இலங்கை அரசை மேலதிகமாக மூச்சுவிட வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. கடந்த ஐந்தாம் மாதத்தில் இருந்து இந்த வருடம் ஐந்தாம் மாதம் வரையிலான ஒருவருடத்தில், இலங்கை அரசானது பல சர்வதேச அரசியல், உள்நாட்டு ஜனநாயக நகர்வுகளை மேற்கொண்டிருந்த போதிலும், தமிழர்களின் சார்பில் கட்டப்பட்ட கட்டமைப்பை ஒரு முழுவடிவத்திற்கு கொண்டுவருவதில் ஏற்பட்ட தமிழர்களின் பின்னடைவு, இலங்கை அரசின் சர்வதேச அரசியலில் அவர்களை முன்னடைய வைத்துள்ளது.

(இதில் புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது வேற்று நபர்களுக்கோ அமைப்புகளுக்கோ சார்பாகவோ, பாதகமாகவோ அன்றி,தமிழர்களுக்கான ஒரு பலமிக்க கட்டமைப்பு, மற்றும் ஒரு பலமிக்க, நம்பகத்தனமான தலைமைத்துவம் அவசியம் என்பதனை இத்தால் வலியுறுத்துகின்றேன். அந்தத்தலைமைத்துவம் இன்னாராகத்தான் (xxx) இருக்கவேண்டும் என்று புலிகளின் ஆதரவாளர்கள் சொல்வது போலன்றி, யாராகவும் இருக்கலாம் என்பதே எனது ஆணித்தனமான கருத்தாகவும் உள்ளது...)

புலத்தில் இவ்வாறான தமிழர் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வோர், இலங்கைத் தேசியத்தை ஏலவே மாற்றி பிறிதொரு தேசியத்தில் இருப்பதால், அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையினையும் இலகுவில் எடுக்கமுடியாது போய்விட்டது. இருந்தபோதிலும் சர்வதேசத்தின் அனுசரணையுடன் இந்த முறியடிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் தேடப்படுவதென்பெது உண்மையே!

இப்போது இலங்கை அரசின் பார்வையானது, அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகடந்த கட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதாவது உள் மற்றும் வெளிச்செயற்பாட்டில் இருந்தே, இலங்கை அரசின் இதற்கெதிரான சட்டப்போக்குகளில் மாற்றம் ஏற்படப்போகின்றது. இந்த நாடுகடந்த கட்டமைப்பபானது, புலிகளின் போக்கினை வளர்த்தெடுப்பதாகவோ, அல்லது புலத்தில் இருந்து நிதிகளை வசூலிப்பதில் சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொண்டாலோ, இலங்கை அரசிற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய நடவடிக்கையாக காணப்பட்டாலோ அன்றி இந்த நாடுகடந்த அரசை இலங்கை அரசு எதிர்க்கப்போவதில்லை.

அவ்வாறான செயற்பாட்டை உற்று நோக்கிய இந்த அமைச்சர் “பீரீஸை” பொறுப்பாக அமர்த்தியதற்கான காரணம் இப்போது மக்களுக்கு தெளிவாக விளங்கியிருக்கும். ஏற்கனவே அரசின் சார்பில் அணுவளவும் குறைவுபடாத பாலிதவை வைக்கவேண்டிய இடத்தில் ஏற்கனவே வைத்துள்ளமை சற்று அரசியல் வாதிகளை சிந்திக்கவைத்திருக்கும். அத்துடன் பான் கீ மூன் தொடர்பாக எதுவும் நான் செல்லவேண்டியது இல்லை, காரணம் அவர் யார், எந்த நாட்டையுடையவர், அந்த நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள மத மற்றும் நிதி, ஒப்பந்தங்கள் தொடர்பாக உள்ள ஈடுபாடுகள் அப்பப்பா!!!...

இவ்வாறு இருக்க, ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்)  இலங்கையில் ஒரு பேராசிரியரும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதியும் ஆவார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப்பேச்சுக்களில் அரசதரப்பின் தலைவராக இவர் இருந்ததோடு, மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு கட்ட அரசவையிலும் பலமிக்க அதிகாரமுடைய அமைச்சினைக் கையாண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தற்போது அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் அதிகாரிகள், மிகத்திறனுள்ள ஒரு அரசியல் சாணக்கியமுள்ள இலங்கை அரச தலைவரை எதிர்த்தே எமது போராட்டம் தொடங்கப்போகின்றது என்பதனை நன்கு நினைவில் வைத்திருக்க வேண்டும்.

உதாரணமாக சொல்லப்போனால், முன்னைய பாராளுமன்ற அனுபவமுள்ள ஒருவரையும் இந்தக்கட்டமைப்பு உள்வாங்கியிருப்பதென்பது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகக்கொண்டாலும், இன்னும் சில சந்தேகங்கள் எழாமல் இல்லை இந்த சந்தேகங்கள் உண்மையாகிவிடக்கூடாது என்பதற்காக இந்தப்பகுதியில் அவை இணைக்கப்படப்போவதில்லை.

அத்தோடு, இத்தனை காலமும் இருந்த வெளிநாட்டு அமைச்சர்களிலும் பார்க்க தற்போதுள்ள ஜீ.எல்.பீரிஸ் அவர்களை சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அரசியல் துணுக்கு எழுதப்படுகின்றது. இதனை, அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் நடத்துனர்களும் அமைப்பாளர்களும் அறிந்து மிகப்பக்குவமாக காய்களை நகர்த்தும்படி அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

மேலும் , கடந்த தேர்தல்களில் (புலத்தில்) இடம்பெற்ற ஜனநாயகப்போக்கு வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும், சர்வதேச கணிப்பீட்டின்படி மக்கள் தொகையில் வாக்களித்தவர்களின் தொகையினை சர்வதேசக்கணிப்பாளர்கள் குறை கண்டுபிடிக்காதளவிற்கு அமைப்பதில் அதிக கவனம் செலுத்தும்படி வேண்டப்படுகின்றீர்கள்.

இலங்கை அரசின் மெளனத்தை அச்சமென்றோ, இயலாத்தன்மை என்றோ, அல்லது தமிழர்களின் போக்குச்சிறந்தது என்ற அடிப்படையிலோ, முட்டாள்தனமாக எனது எழுத்துக்கள் பாராட்டிய கருத்துக்களாக இருக்காது, எப்படி ஆரம்பத்தில் புலிகளின் நகர்வை அறியமுடியாது இலங்கை அரசு திண்டாடியதோ, அதுபோலவே இன்றுள்ள இலங்கை அரசின்போக்கு என்பதனை எச்சரிக்கையோடு, அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்துமாறு தமிழ்த்தலைவர்களை விழித்துக்கொள்ளச் சொல்கின்றேன்.

தற்போது மேய்ப்பனில்லாத ஆடுகளாக இருக்கும் தமிழர்களுக்கு ஒரே ஒரு தொடர்புச்சாதனமாக அமைந்திருப்பது இணையங்களே.அந்த இணையங்களின் சாதுரியமான கருத்துக்களை வைத்தே தமிழர்கள் சர்வதேச சாணக்கியத்தை தமிழர்கள் புரிந்து கொள்ளவும், இலங்கை அரசின் சாணக்கியத்தை முறியடிக்கவும் வேண்டும்.

உண்மையில் இலங்கை அரசு புலிகளை முடக்கிவிட்ட வீராப்பில் தூங்கிக் கொண்டாலும், அதை நாம் தூக்கமாகக் கருதக்கூடாது, அது தூங்குவதுபோல் நடிப்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆமை வேகத்தில் நாம் சென்றாலும், முயல் வேகத்தில் செல்லும் இலங்கை அரசை தமிழர்கள் சார்பால் இந்த நாடுகடந்த அரசு வெல்லவேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு சார்பில் மேற்கொண்ட பத்திரிகை மாநாடுகளில் அமைச்சர்கள் வெளியிட்ட கருத்தாவது, புலிகளும் நாடுகடந்த அரசும் ஒன்றே என்ற பாணியை கொணர முயற்சிப்பதில் இருந்து அரசு வேறுவழியில் இந்த நாடுகடந்த அரசிற்கெதிரான தனது காய்களை நகர்த்திவருகின்றது என்பது வெளிச்சம். அத்துடன், அமைச்சர் பிரிசால் வழங்கப்படுகின்ற கட்டளைகளை இலங்கைத் தூதராலயங்கள் உலகின் பல பாகங்களிலும் திடமாக மேற்கொள்வதோடு, உலக அரசுகளும் தமது நகர்வுகளை இவருடைய அழுத்தத்திலிருந்தே மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்நபர் மிகவும் முக்கிய காயாக தமிழர்களுக்கு விளங்கப் போகின்றார். இதனை எதிர்கொள்ள நாடுகடந்த அரசு அவையைப் பலப்படுத்துவதிலும், பெருமைகொள்வதிலும் பார்க்க இதற்கு “முறியடிப்பு” முகங்கொடுப்பதில் அக்கறை அதிகம் செலுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.

தமிழர்களின் பலம்பொருந்திய சிறந்த,அழிக்க முடியாத சர்வதேச கட்டமைப்பை எதிர்பார்த்து… ) நேற்றைய தினம் (24/05/2010) புலத்தில் இயங்கிவரும் ஜீ.ரீ.வி.யைப்பார்த்தபோது அதில் இதுதொடர்பாக ஒரு நிகழ்ச்சியினை நடத்தினார்கள். அதில் குறிப்பிடப்பட வேண்டிய பலமுக்கிய விடயத்தை இரத்தினச்சுருக்கமாக முன்பே குறிப்பிட்டு விட்டபோதிலும் காலந்தாழ்த்தியே தமிழர்களின் அடிகள் எடுத்துவைக்கப்படுகின்றமை எமது பின்னடைவையே காட்டுகின்றது.

இலங்கை அரசின் ஒவ்வொரு அணு அணுவான அசைவுகளையும் தமிழர்கள் உன்னிப்பாகக்கவனிக்க வேண்டிய நிலையில் இன்று தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்  இணையங்களையும், தமிழ் ஊடகங்களையும் தொடர்ச்சியாகப்பார்த்தும் நம்பியும் வருகின்ற எமக்கு சர்வதேசத்திலும் ஊடறுத்துச் செல்லக்கூடிய பொறுப்புகளை உடைய சிங்கள அரசின் அணுகு முறைகளை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது?.

புலிகள் தேசியத்தின் ஏக பிரதிநிதிகள் என்று நாம் அவர்களிடம் பொறுப்புக்களை விட்டு விட்டு உறங்கிக் கொண்டிருந்தோம்!!! அது முற்றாக சிதைவடையும் மட்டும் எமது உறக்கம் கலையவில்லை!!! பின்னர் கூட்டமைப்பிடம் எமது நம்பிக்கையினை வைத்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்றோம்… இப்போது நாடுகடந்த அரசு என்ற மாபெரும் சரித்திரத்தில் சர்வதேச அளவில் இருக்கின்ற போதில் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று மக்களோ (தமிழர்களோ) எல்லாவற்றையும் நாம் பார்த்துவிடுவோம் என்று (நாடுகடந்த அரசு ) அமைப்பாளர்களோ நினைத்துவிடக்கூடாது!!! இங்கேதான் எனது உறுதியான கருத்தைத்தெரிவிக்க முனைகின்றேன்… ஒவ்வொரு தமிழர்களும் தமது பங்களிப்பு வாக்குப்போடுவது என்றோ, நிதி உதவி வழங்குவது என்றோ நின்றுவிடக்கூடாது!!! அதையுந்தாண்டி பல விடயங்களை நாம் கால் வைக்கவேண்டும்.

நாடுகடந்த அரசை 18ம் திகதி அமைக்கவேண்டும் என்று உறுதி கொண்ட அமைப்பாளர்களுக்கு அதனை ஆணித்தனமாக நடாத்துவதற்கு அடியில் இருந்து நுனிவரை இழுபாடாகத்தான் இருக்கின்றது. அந்த இழுபாட்டில் பிஞ்சுபோவது தமிழர்களேயன்றி வேறுயாருமல்ல! 17,18ம் திகதி நடத்தியாகவேண்டும் என்ற வைராக்கியம் முக்கியமா? தமிழர்களுக்கு நிரந்தர விடிவு அவசியமா? ... இதில் அமைப்பாளர்களுக்கு 18ம் திகதி பிடிவாதமே அவசியப்பட்டது. அதனால்தான் சில நாடுகளில் தேர்தல் நடைபெறாமலே அவையைக்கூட்டிவிட்டார்கள்... ம்... ம்... சரி மீண்டும் தூங்கச்செல்வோம்...

முதலில் நாடுகடந்த அரசின் தற்போதைய பின்னடைவுகளுக்கு, அவர்களுடைய முயற்சி ஒரு காரணமல்ல, சாதாரண அமைப்பை நடத்துவதற்கே அதிகமான நிதிகளும், ஆர்வமான செயற்பாடுகளும் தேவைப்படும் போது, ஒரு நாட்டையே ஆட்சி செய்வதற்கு வெறும் வாக்குகளை மட்டும் போட்டால் போதுமா? நிதிகளுக்கும் ஆதரவிற்கும் எங்கு போவது??? இதற்கு நிதியை சட்டபூர்வமாக பெற்றுக்கொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன அதில் எந்த வழிகளிலும் இலங்கை அரசு எதிர் நடவடிக்கைகளை எடுக்காத வகையில் மேற்கொள்ள வழிகள் இருக்கின்றன. இதற்கு மக்கள் ஒவ்வொரு தனி மனிதர்களாகவும் போராட்டத்தில் குதிக்க வேண்டும் (கவனம் தமிழர்களே!!!).

இந்த வகையில் நாடுகடந்த அமைப்பாளர்களின் அடுத்த கட்டநடவடிக்கை நிதி சேகரிப்பாகவே அமையப்போகின்றது. அது வரைக்கும் அவர்கள் எந்த அறிக்கையோ அல்லது எந்த நடவடிக்கையோ எடுக்கப்போவதில்லை!!! இலங்கை அரசிற்கு வரி வசூலிப்பதற்கு உரிமை இருக்கின்றது... ஆனால் இந்த நாடுகடந்த அரசிற்கு...????

இலங்கை அரசு போர்க்குற்றத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்று இப்போது ஆதாரத்தோடு நிரூபித்தாலும் அதன் போக்கு பற்றி இந்த போர் இடம்பெற்ற போதே ஆணித்தனமாக விபரித்திருந்தேன் என்பதனை எனது இணையத்தின் வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். எனவே, இன்று இலங்கை அரசு எடுதஇதுவைக்கும் ஒவ்வொரு அடிகளிற்கும் பத்தடி வேகமாக ஒவ்வொரு தமிழர்களும் காய்களை நகர்த்தவேண்டும்.
கடந்த காலத்தில் எமது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததில் இருந்து எமது போக்கானது இலங்கை அரசை கூண்டில் ஏத்தவேண்டும் என்ற பிடிவாதத்தில் நிற்கின்றோமே ஒழிய தலைவரின் எண்ணத்திலிருந்து பின்நோக்கியே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதனை மறந்து விட்டோம். சிங்களவர்களை அழிப்பதோ, அல்லது இலங்கை அரசை இல்லாது ஒழிப்பதோ தலைவருக்கு ஒரு பெரும் காரியம் இல்லை என்பதனை கடந்த காலத்தில் பலத்த பாதுகாப்பிலும் தலைநகரில் விமானத்தாக்குதலை நடாத்திக்காட்டியதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதாபிமானம், சர்வதேசம், போர்நீதி போன்ற பல்வேறு காரியத்தோடும், இலங்கை அரசிடம் இருந்து நீதியான உரிமைகள் வேண்டுவதற்காகவும் பொறுமையினை கடைப்பிடித்தாரே ஒழிய எந்த சிங்கள இனத்தவரையும் வெறுத்ததோ அல்லது எதிரியாக நினைத்ததோ இல்லை! சிங்கள இன வெறியர்களின் போக்கையே கண்டித்து இப்போர் பலமாக நடைபெற்றது என்றால் அது மிகையல்ல!

இன்று தமிழர்களின் ஒவ்வொரு அடிகளின் படிகளிலேயே தமிழீழம் கட்டப்படுகின்ற அத்திவாரம் உண்டென்பதனை அடுத்து வரும் பகுதிகள் மேலும் தெளிவு படுத்தம்.

இதில் ஒரு சாணக்கியத்தைச் சொல்லியே ஆக வேண்டும்... புலிகளை அழித்தது போல் நாடுகடந்த அரசை அழிப்பதற்கு இலங்கை அரசு வண்முறையினைக் கையாளப்போவதில்லை! அதனை சர்வதேசத்தை வைத்தே அழுத்தங்கொடுக்கப்போகின்றது என்பதே அசைக்க முடியாத எனது எண்ணம்... – அருகன்.    (25/05/2010)

lunedì 24 maggio 2010

இத்தாலி றெஜியோ மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உணர்வுபூர்வ நினைவு… - Windows Live

இத்தாலி றெஜியோ மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உணர்வுபூர்வ நினைவு… - Windows Live

தாம் செய்தவை அனைத்தையும் நியாயப்படுத்த இலங்கை அரசு நாடுநாடாக ஓடித்திரிகின்றது. ஆனால் தமிழர்கள் நாம் ஆயிரம் ஆதாரத்தைக்காட்டியும் உலகம் மௌனித்து இருப்பது ஏனோ?ஆண்டாண்டு காலமாக ஆண்டபரம்பரையாக இருந்த நாம் இன்று அடிமைப்பட்டு சிங்களவனின் காலில் மிதிபட்டே காலத்தைக்கடத்த வேண்டுமா? தமிழ் இராணுவக்கட்டமைப்பு (விடுதலைப் புலிகள்) எந்த இராணுவ சிப்பாய்களையும் போர்ச்சட்டத்திற்கு முரணாக கொடுமைப்படுத்தியதாகவோ, அல்லது தகாத முறையில் அணுகியதாகவோ சரித்திரத்தில் இடமில்லை… சிறைப்படுத்தப்பட்ட இராணுவத்தினரை தகுந்தமுறையில் சர்வதேச நிறுவனங்கள் ஊடாக அரசிடம் மீண்டும் கையளித்தமை இன்னும் வரலாற்றில் இருந்து அகலவில்லை. ஆனால் பொதுமக்களையும் விடுதலைப்புலிகள் என்று “கொஞ்சம் வாட்டசாட்டமாக இருந்தால் போதும்” தகாதமுறையில் போர்க்குற்றத்தை இலங்கை அரசு மனிதாபிமானமற்ற முறையில் கையாண்டிருக்கின்றது. போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, பொது அமைப்புக்களையும் சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் போர்ப்பிரதேசங்களில் இருந்து வெளியேற்றியமையிலிருந்தே சிங்கள அரசின் கபடத்தனம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்டப்பட்டும் அனைத்து நாடுகளும் மௌனித்திருந்தது ஏன்? இன்று வெளிக்காட்டப்படும் கோர கொடுமைவாய்ந்த படுகொலையினை மனிதஉரிமை அமைப்பின் சட்டபூர்வ இணையத்தில் பிரசுரித்திருந்தும் இலங்கை அரசு தமிழர்களின் பால் தொடர்ந்தும் அடக்குமுறையினைக்கையாழ்வது தமிழர்களின் கண்ணீருக்குப்பதிலாக இரத்தத்தையே வரவழைக்கின்றது. பிஞ்சென்றும், பூவென்றும், காயென்றும், காய்ந்த சருகென்றும் பார்க்காமல் கொடுரமான முறையில் வெட்டியும் சூட்டும் கொல்லப்பட்ட தமிழர்களிற்கு சாட்சியம் இருந்தும், வல்லரசுகளின் துணையுடன் நடைபெற்ற அனைத்துக்கொடுமைகளையும் மூடீயே மறைக்கப்பார்க்கின்றன. யாரிடம் போவோம், யாரை நம்புவோம், நம்பியோரெல்லாம் நம்மை நயவஞ்சகத்தால் எமது வரலாற்றையே நாசமாக்கிவிட்டார்களே!!! எம்மிடம் இப்போது இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் “நாடுகடந்த அரசே” அதற்கும் பலவழிகளில் சூழ்ச்சிகளையும் உட்புpசல்களையும் ஏற்படுத்தி சிதைக்கப்பார்க்கின்றனர். தமிழீழம் கிடைப்பது உறுதி…!!! அதன் தேவைக்கும் மேலான அதிக உயிரை நாம் கொடுத்துவிட்டோம். இனி இருக்கும் உயிரில் சிறு பயிரைக்கூட நாம் இழக்காது எமது தமிழீழத்தை பெற்றெடுக்கவேண்டும். எமது தமிழர்களின் ஒற்றுமையின்மையே எமது பலவீனமேஒழிய தமிழர்கள் எந்தவகையிலும் பலத்தை இழக்கவில்லை!!! நம்பி எமது தலைமைத்துவம் இழந்த இழப்புகளையெல்லாம் ஒன்றிணைந்து புலத்தில் வாழும் தமிழர்கள் கட்டியெழுப்பவேண்டும். இந்த நம்பிக்கைத்துரோகங்களால், உண்மையான தமிழ் ஈழப்பற்றாளரையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கவைத்த கேவலமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை மாறவேண்டும். இனி சிங்கள இனவெறியர்களால் ஒரு தமிழனும் கொல்லப்படாத வகையில் எமது போக்கு அமையவேண்டும். புலிகள் இருந்த காலத்தில், தமிழர்களைக் கண்டு உயர் சிங்களச்சிப்பாய்களே அஞ்சிய காலம்போய், சாதாரண சிங்களவர்களே ஏழனமாய்ப்பார்க்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோமே இதை யாரிடம் சொல்லி தீர்ப்பது?போதும் போதும் சிங்களக்காடையரின் சித்திரவதைகள்… கண்களில் அணல் பறக்கும் கொடுமையினை மேற்கொண்டிருக்கின்றது சிங்களம் என்பதனைத்தெரிந்தும் அரசுடன் இணைந்திருக்கும் எந்தத்தமிழ் அரசியல் சில்வண்டுகளும் ஆடியதாகவோ, அசைந்ததாகவோ, இரைந்ததாகவோ காணவில்லை! தமிழ் அரசியல் வாதிகள் எந்த ஒரு சிறு பகுதியைக்கூட அசைக்கமுடியாதளவிற்கு அங்கும் பலத்த பிளவுகளைக் கொண்டிருக்கின்றபோது, எப்படி இலங்கை அரசு தமிழர்களை தரத்தோடு பார்க்கக்கூடும். எமது தமிழ்க்கட்டமைப்புக்குலைந்து விட்டதென்று சிங்கள காடையரிலும் பார்க்க, தமிழ் அரசியல் வாதிகளே பெரிதும் மகிழ்ச்சிகொண்டுள்ளார்கள் போலிருக்கின்றது. தாயகத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் இணைந்து பாரிய உரிமைப்போராட்டத்தை காலதாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும். போர் நிறைவு பெற்றாச்சு, ஆனால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைப்பதில் எந்த தமிழ் அரசியல் வாதிகளுக்கும் அதிகாரம் இல்லை. இதில் அரச தலைவர் எப்படி தமிழர்களை சமமாகன மதிக்கப்போகிழன்றார்?. அமைக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்குழுவில் எத்தனை தமிழர்கள் நியமிக்கப்பட்டார்கள்? இலங்கை அரச அதிகாரத்தில் எந்த தமிழன் சர்வதேசத்தில் எங்கள் நிலையினை எடுத்துக்காட்டக்கூடிய நிலையில் இருக்கின்றனர்??? இவ்வாறான தகாத நிலையினை நிச்சயம் நாடுகடந்த அரசு சர்வதேசத்திற்கு எடுத்துகாட்டியே ஆகவேண்டும். இப்பொது வெளிவந்திருக்கும் தமிழினக்கொடுமைக்கான புகைப்படமானது தமிpழர்களின் உள்ளக்கொதிப்பை மேலும் அதிகரித்திருக்கின்றது என்றால் அதுமிகையில்லை. எழுதும் போதே இரத்தம் கொதிப்பதனால் வருகின்ற வார்த்தைகளை இணையத்தில் போடமுடியாத அளவிற்கு மேலோங்கி வருகின்றபோதிலும் மக்கள் அதன் பிரதிபலிப்பு எது என்பதனை நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள். தமிழர்களுக்கு இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகளுக்க நீதிவேண்டும்… இலங்கை அரசிற்கு எதிராக அரசில் அங்கம் வகிக்கும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் முழங்கியே ஆகவேண்டும்…. – அருகன்

venerdì 14 maggio 2010

தமிழர்களின் "சாகடிக்கப்பட்ட சரித்திரத்தை" வெளிக்கொணர ஒரு சந்தர்ப்பம்...

தமிழர்களின் "சாகடிக்கப்பட்ட சரித்திரத்தை" வெளிக்கொணர ஒரு சந்தர்ப்பம்...

Arugan கடந்த கால தமிழினப்பேரழிவுகளுக்ககெதிராக எமது UNGA ஒன்றியமானது பல்வேறு பிறநாட்டு அமைப்புக்களுடனும், அரசுடனும் இணைந்து ஏராளமான விழிப்புணர்வுகொண்ட அனால் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தமை யாவருக்கும் தெரிந்திருக்கும் என்பதில் அர்த்தமில்லை!!!.

காரணம், தமிழின அமைப்புக்கள் தாம் நினைப்பதை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றார்களே ஒழிய, சரியான திட்டங்களின் மூலம் தமிழினத்திற்கெதிரான “இலங்கை அரசின் போக்கை கண்டிக்க” தம்மைத்தவிர பிறரால் வழங்கப்படுகின்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், அரசியல் சாணக்கியத்தையும் பயன்படுத்துவோரையோ அல்லது பயன்படுத்தத்தகுதியுடைய அமைப்புக்களை முன்நிறுத்தியதோ அல்லது அவர்களுடன் பேச்சுக்களை நடத்தியதோ கிடையாது.

தம்முடைய கருத்திற்கு எதிராக மிகச்சிறந்த கருத்துக்கள் கிடைத்தாலும், அதனை முதலில் நிராகரித்து “மாற்றுக்கருத்துக்காரர்கள்” என்று ஓரங்கட்டிவிடுவார்கள். இவ்வாறான காரணங்கள் எம்மை எமது இனத்திற்குள்ளே பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தியதோடு, பெரும் அழிவையும் மீளமுடியாத அளவிற்கு இழப்பையும் ஏற்படுத்தியது என்றால் அது வரலாறு.

அந்தவகையில் தமிழர்களுக்கான எத்தனையோ மேம்பாடுடைய திட்டங்களை மேற்கொண்ட எமது UNGA ஒன்றிய அமைப்புப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். “அடிப்படையில் இருக்கின்ற நாற்றத்தைக்களைந்தால்த்தான் வீடு முழுதும் சுத்தமாக வாய்ப்புண்டு. வீட்டைத்துப்பரவு செய்வதாகச்சொல்லி வாசல்ப்படிகளை அழுக்காக வைத்திருந்தால் உள்ளே வருகின்றவர்கள் அதிலிருந்து பல நாற்றத்தை மீண்டும் மீண்டும் உள்ளே கொண்டர்ந்துவிடுவார்கள் இல்லையா... இப்போது தமிழர்களுக்காதரவாக கோரிக்கை விடுவது மட்டும் எமது போராட்டமல்ல அதனைத்தீர்த்துவைக்கவும் நாம் துணைநிற்கவேண்டும். அப்போதுதான் வீழ்ந்த தமிழர்கள் எழுந்து கொள்வார்கள் என்ற சாணக்கியத்தை நாம் ஆரம்பத்தில் இருந்து கையாள்வதோடு, இலங்கை அரசின் தவறுகளை அடிப்படையில் இருந்து களைய எத்தணிக்கின்றோம்.”  எனினும் தமிழர்களின் தொடர்பாக நாம் எடுக்கும் எந்தக்காரியத்தையும் அவர்களின் நீதியான நியாயமான உரிமைகள் கிடைக்குமட்டும் ஓயப்போவதில்லை! என்ற நோக்கில் வருகின்ற 23ம் திகதி எமது மக்களின் பேரவலத்தை இத்தாலி வாழ் அனைத்து சமூகத்திற்குக் கொணரும் நோக்குடன் விழிப்புணர்வை பல இனத்தாருடன் சேர்ந்து மேற்கொள்ள விருக்கின்றோம். எனவே, இத்தாலியில் இருக்கும் தமிழின ஆதரவாளர்கள் கலந்த கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அணைத்தும்எமது http://arugan.spaces.live.com இணையத்தில் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாகனத்தரிப்பிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் மற்றும் அனைத்துத்தகவல்களும், இணைந்து செயற்படும் அரச சார்பற்ற அமைப்புகளின் பெயர்களும், அரசசார்புடைய அமைப்புக்களின் விபரங்களும் உள்ளடங்கிய குறிப்பிடப்பட்ட விளம்பரசான்றிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  (இங்கே அழுத்தவும்)

மேலதிகத்தகவல்கள் தேவைப்படுவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.  - 00393204031624.  

இணைந்து செயற்படும்

Associazione Gli angeli del mondo
Associazione Nigeriana Reggio Emilia e provincia
Associazione Bourkinabè del comune di Zonsè in Italia
Associazione cittadini del Burkina-Faso di Reggio Emilia e Emilia Romagna (A.B.R.E.E.R.)
Associazione culturale cinese
Associazione Ivoriani di Reggio Emilia
Associazione Culturale Stranieri Nord,Sud,Africa,Asia
Associazione Generazione Articolo 3 (G.A. 3)
Associazione Provinciale Senegalese
Associazione Provinciale Egiziana
Associazione studenti non comunitari di Reggio Emilia (A.S.N.O.C.R.E.)
Associazione cittadini Moldavi in Italia
Casa della Cultura Islamica di Reggio Emilia
Circolo Sociale Culturale Comunità islamica di Reggio Emilia
Comunità egiziana di Montecchio
Giovani con uno scopo
The Latter Glory Ministries International (Comunità Cristiana Evangelica Internazionale)
Lega Islamica femminile europea (L.I.F.E.)
Organizzazione di amicizia e cooperazione Italo-marocchina
TNGA - Associazione della nuova generazione Tamil (தமிழ் அமைப்பு )
UNGA - Unione della nuova generazione (பெரும்பான்மைத் தமிழர்களால் நடாத்தப்படும் ஒன்றியம். )
Centro Islamico - Moschea di Reggio Emilia
Associazione Ucraini in Italia di Reggio Emilia
Ghanian National Association
Giovani Mussulmani d’Italia - sezione di Reggio Emilia
Associazione culturale “Africa Sunrise"

அரசசார்புடைய

w2

தகவல் UNGA சார்பில் அருகன்.

mercoledì 12 maggio 2010

தமிழர்களின் கவனத்தை ஈர்க்க, புலிகளின் பெயரை பிரயோகிப்பது அரசுமட்டுமல்ல அரசியல்வாதிகளுமே!!! - அருகன்

தமிழர்களின் கவனத்தை ஈர்க்க, புலிகளின் பெயரை பிரயோகிப்பது அரசுமட்டுமல்ல அரசியல்வாதிகளுமே!!! - அருகன்

anoma-fon-80 ஷபாஸ்… மீழ்குடியேற்ற அமைச்சை ஒப்படைத்தால் அவர் மீழ் வெளியேற்றம் செய்ய எத்தணிக்கின்றாரே!!! என்ற ஐயப்பாடு எழுகின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின் மூலம் புலிகளை ஒடுக்கியாகிவிட்டுது, நாடுகடந்த அரசின் மூலம் தமிழர்களின் அரசியலையும் அபிலாஷைகளையும் புலத்தில் தள்ளியாகிவிட்டுது, முன்னாள் புலிகளின் பிரபல்யங்களை உள்ளே வைத்திருந்தால் அதன் காரணம் மீண்டும் அது அரசியல் மற்றும் கிழற்சிகள் என்று மாற்றங்களைக் கொணர்ந்தாலும் என்ற போக்கிலோ இவ்வாறான முயற்சிகைளை செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரதி அமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டியது,  மக்களின் அல்லது புலிகளின் ஆதரவாளர்களை கவரவேண்டுமென்றால், புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் அமரர் சு.ப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் அரசியல் புகலிடம் கோரவிருப்பதாக, வெளிவந்திருக்கும் செய்திக்குப்பதிலாக புலிகள் அமைப்பின் அரசியல்துறைப்பொறுப்பாளர் அமரர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்திற்கும் மற்றும் போராளிகளுக்கும்  வாழ்வாதார வசதியையும், தகுந்த பாதுகாப்பையும் வழங்கி பெருமைப்படுத்தியிருக்க வேண்டுமேயொழிய, நாட்டைவிட்டு அதிலும் எமது ஈழத்தை விட்டு வெளியேற்றியாகவேண்டும் என்ற எண்ணம் பொருத்தமாகத் தெரியவில்லையே!இந்த கோரிக்கை குறிப்பிட்ட குடும்பத்தினருடையதாகவே இருக்கட்டும்… மன உளைச்சலில் இருக்கும் தமிழர்கள் தற்போது எடுக்கும் முடிவில் தவறுகள் இருந்தாலும் இருக்கலாம் மகிழ்ச்சியில் இருப்பவர்கள் அவர்களுக்கு ஆறுதலும், ஆதரவாகவும், ஆலோசனையும் எதிர்காலத்தை எடுத்துரைப்பது அவசியமல்லவா!!!

இந்தியாவில் புகலிடம் வழங்குவதற்குப்பதிலாக இலங்கை ஏன்அவர்களுக்கு “சிறப்பிடம்” வழங்கக்கூடாது?...

“அவர்களுக்கு ஏன் சிறப்பிடம் வழங்க வேண்டும்…???” என்ற கேள்வியை தாங்கள் கேட்கலாம்!!!....

ஒன்றல்ல  பல பேச்சுக்களில் இலங்கை அரசுடன் சமமாக மதிக்கப்பட்டு சமரசத்தில் பங்காற்றிய ஒரு தேசதூதுவனின் மனைவி பிள்ளைகள், போராட்டத்தில் தமிழர்களை அழித்த சரத்பொன்சேகாவின் மனைவியிலும் பிள்ளைகளிலும் மேலானவர்கள் அல்லவா? சரத்தை இலங்கை அரசு கைது செய்ததும் அவருடைய குடும்பம் புலத்தில் புகலிடம் கேட்பதற்குத்தகுந்த காரணங்கள் இருந்த போதிலும் அவர்கள் தேர்தலில் தம்மை ஈடுபடுத்தியிருக்கும் போது, இவர்கள் மட்டும் ஏன் நாடுவிட்டு நாடுசெல்ல வேண்டும். “இலங்கை அரசு தகுந்த முறையில் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை என்றே இந்த உரிமைப்போராட்டம் இடம்பெற்றது…” அவ்வாறான போராட்டத்தை மீண்டும் தொடராது அமைச்சராகிய தாங்கள் ஏன் அதற்கு ஆவணசெய்யக்கூடாது?

இலங்கை அரசு நினைவுத்தூபிகள் அமைப்பதற்குப்பதிலாக, அந்த நிதியில் ஏன் இவர்களுக்கு "நிலையான" வாழ்வை அளிக்கக்கூடாது?

அந்தத்திட்டத்தை ஏன் அமரர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கக்கூடாது? இதே விடயம் தான் மதிப்பிற்குரிய பார்வதி அம்மாளுக்கும் நடந்ததே…!!! ஒரு பிரபல்யத்தை வைத்து அரசியல் செய்வதிலும் பல சிறப்பு வழிகள் இருக்கின்றனவே! இலங்கையின் சமாதானத்திற்காகவும் சிறுபான்மையினத்தின் உரிமைக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த பெயர் “தீவிரவாதிகள்”…ஆனால் அதன் சரியான அர்த்தத்தை அமைச்சரும் முன்னாள் தமிழீழ போராளியாகிய தாங்கள் அறியாததல்ல, 
எனவே புலிகளில் இருந்தோர் என்ற காரணத்தால் அவர்களை மாற்றுக்கண்ணோட்டத்தில் பார்க்காது, தங்கள் இலங்கையின் அதிகாரத்தைப்பயன்படுத்தி ஏன் அவர்களை தரமிக்க நிலைக்கு உயர்த்தக்கூடாது?
கடந்த காலத்தில் தமிழக முதல் அமைச்சர், தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு இந்திய பிரஜாஉரிமை வழங்கப்போவதாக சொன்னதும் அதனை எதிர்த்த தாங்கள் எப்படி அந்த குடும்பத்தை அங்கு அனுப்ப ஆவண செய்யப்போவதாக தகவல்வெளிவந்தது?... பார்வதி அம்மாளை சிகிட்சைக்கே ஏற்காத இந்திய அரசு இவர்களை ஏற்குமா என்ற கேள்வி ஏன் எழவில்லை? இவரை வைத்து தமிழகத்தில் அரசியல் இடம்பெறாது என்று என்ன நிச்சயம்… என்று இந்தியா கேள்விகேட்டால் அனுப்பப்படுகின்ற அந்தக்குடும்பம் அங்கும் இங்குமாக அங்கலாய்க்க நேரிடாதா?
அமரர் தமிழ்ச்செல்வனை நோர்வே நன்கு அறியும் அந்த நோர்வேயின் அனுசரணையுடன் அவரை நோர்வே செல்ல அனுமதியை தாங்கள் பெற்றுக்கொடுத்தால், இந்தியாவில் வாழ்வதிலும் பார்க்க அவர் குடும்பம் மிகச்சிறப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழ வழியாக அமையாதா? … … …
எனினும் தமிழ் மக்களின் கவனத்தை தாங்கள் இன்னும் ஈற்கத்தொடங்கவில்லை என்றே தெரிகின்றது. இந்தக்கருத்தை கருணா அம்மானாகப்பார்க்காது, பிரதி அமைச்சர் மதிப்பிற்குரிய வி. முரளிதரனாகப் பார்க்கும்படி ஒவ்வொரு தமிழனின் நலம் வேண்டி பணிவாகக்கேட்டுக்கொள்கின்றேன்.
நிலையில்லா  நிகழ்காலம் அவசியம்தான் -ஆனால்
நிலையான எதிர்காலத்தை நோக்கிய விழிகள்வேண்டும்
– அருகன்.   (12/05/2010)

sabato 1 maggio 2010

“புலிகளின் பெயரைக் கறைப்படுத்துவதாக எண்ணி, தேசத்திற்காக மாண்ட தமிழர்களின் தியாகத்தை மறந்து விடாதீர்கள்”

தமிழ் அமைச்சாகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைததுத் தமிழ் அரச ஊழியர்கள், மேலும்  தமிழ் அரசியற் கட்சிகள் போனறவற்றின் கவனத்திற்கு…!!

தமிழர்களுக்காக கட்டப்பட்ட இராணுவக்கட்டமைப்பு, அழிக்கப்பட் நிலையில், அப்பிரதேசங்கள் அனைத்திலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதையும், ஒரேதேசத்திற்குள் அதாவது சிங்கள பிரதேசங்களில் தமிழ் பதாகைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் பிரதேசத்தில் வலுக் கட்டாய உட்செலுத்தல்கள் இடம் பெறுகின்றமையும், தமிழர்களின் நிலத்தில் தேவையற்ற “புத்தர்” சிலைகளை அமைப்பதும், தமிழ் சரித்திரத்தை ஒதுக்கி புதிய நினைவுச்சின்னங்களை அரசுசார்பில் அதிலும், சிங்கள பண்பாட்டில் அமைப்பது போன்றன முறையற்றது என்று தமிழர்களாகிய தங்களுக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியவையல்ல!!!