mercoledì 13 gennaio 2010

கவிதைத்துளி - எண்ணங்களின் விம்பங்கள்

எண்ணங்களின் விம்பங்கள்

ஆதிமனிதன்

ஆதி மனிதன் அலங்கோலமாய்
ஆடையின்றி அவனியில்த் திரிந்த காலம் !
அப்போது
அவன் பாதிமனிதன்

ஜாதி மனிதன் ஜோதியிழந்தான்
ஜாடிக்கேற்ற மூடியில்லை
இப்போது
இவன் அவனிலும் பாதி

அறியாமல் ஆடையிழந்தான்
அரைகுறையாய்த் தேடி அலைந்தான்
அரைதனிலே அரையாவண்ணம்
இலையணிந்தான்
அவன் அறியாதவன்

தெரிந்து கொண்டே தொடைதெரிய
தெரிவார்க்கும் எரியும் வண்ணம்
வறுமைகாட்டி வறுமைகாட்டி
வறுமைகாட்டாத் தங்க வளையல்பூட்டி
ஆடைவிலக்கி ஜாடைபோட்டாள்
கோடைப்பெண்ணிவள்

கணவன் காணும் கன்னியழகைக்குயவன்
கைக்களிமண்ணாய்க்
கண்டவர்
கையளையக்
கன்னியவள் கண்டதென்னவோ?

அம்பெடுத்துக் கண்ணில்
வைத்தான் குறிபார்க்க
ஆதிமனிதன்
அன்பெடுத்து கண்ணில் வைத்தான்
இறைவன்

கண்ணெடுத்து அம்பாய்த்தைத்தாள்
காயமில்லா வடுத்தோன்ற
கலிகாலத்துக் கன்னியவள்
வீடில்லை வீதியில்லை
வனம்வளர்த்து மரந்தந்த வளையுண்டு
அவனுக்கு
அவன் ஆதிமனிதன்

வீடுண்டு வீதியுண்டு
விலைமகளாம் வரியுண்டு வழியுண்டு
இவளுக்கு
இவள் விலைமகள்

நாளுக்கொரு நாய் வாழ்க்கை
நல்ல பேய்க்கும் . . . .
நரகந்தான் நகரம்
மலரிழந்த சரமாய் நம் கலாசாரம்
மதியிழந்த பாரைப் போல் நம் பண்பாடு

பாமரராய் வாழ்ந்தபோது பார்த்திருந்த பண்பாடு
பணம் பொருளைக் கண்ட பின்பு
பாழாய்ப் போவது பெருங்கேடு

தமிழைத்தரணி மறந்துவிட்டால்
தாரமில்லாத் தபுதாரன்
தறிகெட்டுத் தடுமாறும் தனிமனிதன்

பண்புதன்னை இழந்து விட்டால்
பாவம்பெண்மை பரிதாபம்

பாதிமனிதனாய்ச் சிறப்பதிலும்
ஆதிமனிதனாய் இறப்பதே மேல்!!

தழும்புகளின் தடம்

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும் . .

குருதியிட்ட  கோரத்தின்
வேதனையால்
அருவி விட்ட கண்ணீரால்
வேயப்பட்ட
கவிதையிலும் காயமிருக்கும். . .

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . .

சட்டைகள் இல்லை அங்கே
தோட்டாச்
சன்னங்களை ஆடையாக்கினோம்
உணவுகள் இல்லை விசச்
சைனட்
குப்பிகளை அன்னமாக்கினோம்!!

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . .

வீடுகளில்லை எலிகளின்
வளைகளைக்
கூடுகளாக்கினோம்!!

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். .. .

களுத்துகளில் பொன்னகையில்லை
எழுத்துக்களின்
பதாகைகளை அணிகலமாக்கினோம்!!

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்

உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . . .

உதடுகளில் புன்னகையில்லை
எம் உடல்களில்
புண் நகைகள் கொண்டோம்!!

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்

ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . . .

செங்கரத்தால் வைக்கவேண்டிய
பொட்டுக்களை
பெண்களின் நெற்றியில்
சுடுகலத்தால் சூட்டிக் கொண்டோம்!!

ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . .

அந்தி வானம்

ஓ காதலியே!
சாலையெங்கும் சவக்காலையாய்க்
காட்சியளிக்கிறதே

அருகனின் கல்லறைகளும் கற்பந்தரித்து
கண்ணீர் வடிக்கிறதே

புரையோடி விட்ட தேசத்தில்
கறைபடிந்துவிட்ட குருதிகளால்
கிறுக்கப்பட்ட சித்திரங்களும்
சின்னச் சின்னப் புத்தகமாய்
பக்கங்களைத் தந்தது

இப்போது உள்ள கவிஞர்கள் போதுமடி
இப்பூமியில் புதைக்கப்பட்டவரிலும்

விதைக்கப்பட்ட கவிகளே அதிகம். . . !

என் கல்லறையில்
பொறிக்கப்படும் குறிகளில்
உன் பெயராவது
விலக்கப்படட்டும்

உனக்குத் தெரியுமா
உன் விழிகளின்
கதவு திறக்கப்படும் போது
என் மதிகளில் மங்கிய மறியல் தெரிகிறது

உனக்காய்ப் பூக்கும்
கவிதைகளில்கூட
காமச் சொற்கள் களைந்து விடுகின்றன

நிர்வாணமான எனது கவிதைகளுக்கு
உன் மூச்சுத்தான் அதற்கு வெட்கமூட்டியது
உன்பார்வை சுடிதாரானது
உன் பேச்சுத்தான் அதற்குப் பவுடர் போட்டது
உன் மகிழ்வில் அது மழலையானதே!

இப்போதும் உன்மகிழ்விற்காய்
நான் மரணிக்கத் தயார்தான்
உன்னால் பெற்றெடுக்கப்பட்ட
மழலை மாய்ந்துவிடும் என்றுதான்
மதி மயங்குகிறது

மெதுவாகத் தெரிகிறது
எனக்காய் நீ தோண்டிவிட்ட புதைகுழியினை
பெதுவாக நான்  தாண்டிவிட்டேன் என்று

விதி என்று சொல்லி
விளையாட்டுக்காட்டாதே என்
வாழ்வின் ஓரங்களில்
உனது விம்பங்கள் இன்னமும் தெரிகிறது.

ஓ காதலியே!
சாலையெங்கும் சவக்காலையாய்க்

காட்சியளிக்கிறதே
அருகனின் கல்லறைகளும் கற்பந்தரித்து
கண்ணீர் வடிக்கிறதே

நீ ஏன் நானாக இல்லை?

கடந்த காலத்தை உன்னிடம் நான் கேட்டேன்
நிகழ் காலத்தில் என்னிடமேன் மௌனமானாய் ?
சந்தைக்கு வந்த சகதி உந்தன் அங்கம் என்று
சங்கதிகள் ளெந்தன் செவிகளுக் கெட்டியது.

சங்கடமானேன் பெண்ணே,
நானும் சாதாரணமானவன் தானே!
சங்கதிகள் சஞ்சலத்தை உண்டுபண்ணுது
சமாதிக்குள்ளே சமாதானத்தை தேடுது.

நீ என்னிடம் மறைக்கும் எள்ளளவும்
வெள்ளமாய் என்னை அடித்துச் செல்லுது எங்கோ
வேஷமாய் அதுதினம் கோஷம் போட்டு
நேசத்தில் புகுந்து நாசஞ் செய்கிறது இங்கே!

எனக்கு நானே கோது செய்து முட்டைக்குள் இருந்தேன்
உனக்கு நான் வேண்டும் என்று அந்த முட்டையை உடைத்தாய்
அப்போது அதன் வலி தெரியவில்லை
இப்போது அதில் இருந்து குருதி வடிகிறது.

காயத் தீ வலியிலும்
காதல் தீ வலி கனக்கிறது  . . . .

என் காதலை பிறர் காமத்தோடு ஒப்பிட்டுவிடாதே
அது என் காதலை காட்டும் கண்ணாடி விம்பம்
நீ உன் காதலை ஏய்த்தாலும் -தினம்
அது வந்து என் காதில் சேதி சேர்க்கும்

ஆழ்ந்த காயத்திற்கு அமைதி தந்தது -உந்தன்
அதரத்தின் ஒளடத அன்பு முத்தம்

அவை அத்தனையும் என்னைப் பித்தனாக்கும்
ஆயினும் நீ யென்னைப் பித்தனாக்கி விடாதே!

நீ ஆயிரஞ் செய்கையை அப்படியே-என்னிடம்

மறைக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது
மதி யேனோ உன்னை மன்னிக்கிறது -ஏன்
விதி என்னை மட்டும் தண்டிக்கிறது?

மரணத்திற்கு மார்பைக் கொடுக்கிறேன் - அது
முதுகின் பின்னால் ஓடுகிறது!
காதலுக்கு முதுகைக் கொடுக்கிறேன் -தினம்
மார்பில் வந்து ஏன் ?மோதுகிறது !

காதல் காயங்களை இலவசமாய் -இங்கே
வழங்குங்கள் என்று இரஞ்சிக் கேட்டேனா?!
என்னைமட்டும் ஏன்? காயங்கள் உறங்கும்
சவக்கிடங்காய் சரித்திரஞ் சித்தரிக்கிறது!?

பார்வையால் நெஞ்சைத் துண்டாக்கிய பெண்களே
பறக்கும் போது ஏன்? ஆண்களின் சிறகுகளைச் சிதைத்தீர்!
அவன் இறக்கும் போது, அன்றாவது அவனை
அவனிடமே ஒப்படைத்து விடுங்கள்,

என்றாவது அவன் அமைதியாகட்டும்!!!!

ஓரு உடலம் காதலால் சடலமானது! 

பெண்ணே!
என்னை யென்னவென்பேன் -உன்னால்
பேதையானேன் நேற்றுமுதல் !
அன்றுமுதல்தானே யுன்னைக்கண்டேன்
கடந்தகாலங்கள் மறந்துவிட்டன- நிகழ்
காலங்கடந்து ஞாலத்தில்

வாழ்வதாய் யேதேதோ நினைவு
காமங்கடந்து ஞானத்தில்-நீடு
வாழ்வதாய் யேதேதோ உணர்வு
சிரிக்கத் தோன்றவில்லை-இனி
யாரும் சிரிப்பதும் பிடிக்கவில்லை
அடிக்கடி சிரிக்கின்றேன்-ஏன்?
அப்போதெல்லாம் உன்முகத்தைத் தரிசிக்கிறேன்
உன் சம்மதம் மெனக்குச் சாதகமா பாதகமா?
கேட்கத் தோன்றவில்லை-அதைக்
கேட்காமலே கடக்கின்ற காலத்தை

இரசிக்கத் தூண்டுகிறது
பூக்கள் பூத்து வாடுவது போல்-புறப்படும்
உன் புன்னகை என்னை வாடவைக்கிறது
நர்த்தனத்தில் கொலுசு போல் -நித்தம்
உன்சாரீரம் என்சரீரத்தை ஆடவைக்கிறது
இது என்ஆண்மைக்கு இழுக்கா- அல்லது
புதுக் காதலுக்குச் சிறப்பா
எனக்குப் புரியவில்லை!
போஜனம் போதுமென்று தோன்றுகிறது-வாசனைப்
பூமணம் நாற்றமென்று தோன்றுகிறது
உன்சங்கமத்தில் மட்டும் சலிப்பில்லை!
ஸ்பரிசங்கள் இல்லாத பார்வையிலும் -பல்
ஆயிரம் நிம்மதி ஆழ்ந்ததென்பதை
அவ்வப்போது இயற்கையின் படைப்பில்
இருந்து உணர்ந்து கொள்கிறேன!;
இன்றேனும் இயற்கைக்குச் சம்மதமென்றால்
இவ்வுலகிலிருந்து இழிவுடல்-எங்கோ

இளைப்பாற எனக்குச் சம்மதம!;
இருந்தும் சாவை வெறுக்கிறேன்-ஏன்?
அதன்சாராம்சம் சித்தத்திற்குப் புரியாததால். . . .
நான் புலம்புகிறேன் என்பது எனக்குத் தெரிகிறது
ஆனால் புறந்தள்ள விரும்பவில்லை-மேலும்
அதுகூட ஆழ்ந்தசுகத்தையே தருகிறது
சோகங்கூட ஒருவித சுகமாய்த்தோன்றுகிறது
சொல்லத்தெரியவில்லை
எல்லையில்லா வெட்டவெளியில் -புள்ளிமானாய்த்
தொhல்லையின்றி துள்ளிக்குதிக்கத் தோன்றுகிறது
துணைக்கு உன்னையும், -அங்கு
தூதுக்குத் தென்றலையும், தோதாகக்கேட்கிறது
நான்புலம்புகிறேன் ஆனால் பூரிப்படைகிறேன்!
புரிகிறது நான்பேதையாகிவிட்டேன்

இளைஞன் உருமாறினான்
இளைஞனே!
நீ காதலித்ததுண்டா - உன்
காதலுக்குக் காயங்கள் உண்டா
காயங்களில் குருதி வடிந்ததுண்டா-அந்தக்
குருதியிலும் கண்ணீருண்டா
இப்போது நீ எழுதும் எழுத்துக்களில் கவிதை இருக்கும்

அந்தக் கவிதையிலும் கண்ணீர்த்துளி கசிந்திருக்கும்
காலங்கடந்தும் ஞாலத்தில் நிஜமாய் நிலைத்திருக்கும்
காற்றுள்ள இடமெல்லாம் அது கலகஞ்செய்திருக்கும்
வானில் இருந்து வீழ்ந்த துளி உனக்கு வார்த்தை தரவில்லையா
மண்ணில் இருந்து மீண்ட பனி உனக்கு மீதந் தரவில்லையா
மரஞ்செடிகள் கவரி வீசி உனக்கு மங்கலந் தரவில்லையா
பனிமலையும் பாலைநிலமும் உனக்கு புதுவழி தரவில்லையா
உன் காதலின் வலி காவியங்களை உருவாக்கும்
உன் கண்ணீரின் துளி கற்பனைகளைச் சிலையாக்கும்
உன் எண்ணத்தின் விம்பங்கள் இளைஞரைச் சரிபார்க்கும்
உன் கற்பனையோ காலாவதியாகாத கணக்கீடுகளைச் சீர்செய்யும்
நீ உலகத்திற்காய் கவிதையை நிர்மானித்தாய்
உன் தாக்கம் அழகுபடுத்தும் மட்டும் அது நிர்வாணமாய்
காதலால் நீ பெற்றுக்கொண்டாய் கவிதையை நிவாரணமாய்
கவிதை பெற்றுக்கொண்டது கருத்தரித்த நிஜங்களாய்

கவிஞனே!
இப்போது உன் காதலில் - ஒரு
கண்ணியமிருக்கும்
இனியும் காதலிக்கத்தயாராய் -இரு
இனி எப்போதும் நீ
உனக்குச் சொந்தமில்லை -இந்த
உலகிற்கே!

தோழனே!

உன் வார்த்தைகளின் வல்லமை
உனக்குப் புரியுமா - அவற்றால்
வானத்தையும் வளைக்க முடியும்
வரலாற்றையும் பிரிக்கமுடியும்

உனக்குப் புத்தி சொல்ல
எனக்குத் தெரியாது - ஏன்னெறால்
நீதான் உலகத்தில் மேலானவன்
நீதான் உலகத்தின் மாமேதை

உன்அயர்வு நேரத்தில்
அறிவித்தல் தரும் அற்ப தொண்டன் நான்
நீ ஆண்டவனுக்குச் சமமானவன் - எனவே
உன்னை வணங்குகிறேன்

வெகுநாளாய் யாரையோ தேடுகிறாய்
விடிவு என்னவோ ஏமாற்றந்தான்
உனக்குப் புரியவில்லை - ஆயினும்
எனக்குத் தெரிகிறது ஏனென்றால்
நான் உன் தொண்டன்

யாரைத் தேடுகிறாய்
கண்ணாடி முன் நின்று உன்கண்களைத்
திறந்து பார் உன்னால் தேடப்பட்ட
திரவியம் அதுதான்

போலிப் பெயருக்குப் புகழ்
மாலை சூட்டுவதால் - நீமட்டும்
காலியாகிக் காணப்படுகிறாய்

அதனால் தான்
கானல் நீரை கண்டும் - உன்னால்
கண்ணீர் வடிக்கமுடிகிறது

கண்ணாடியில் தெரிவதுதான் நீ
கண்ணாடி முன்னாடி தெரிவது ||நான்||
நான் என்ற ஆணவம்
இப்போது நான்தான் உனக்குக் கண்ணாடி

என்னைப் பார் அங்கு தெரிவது

நீயாயிருப்பாய்
ஏனென்றால் நான் உன் தொண்டன்.

உனக்குப் புத்தி சொல்ல
எனக்குத் தெரியாது - ஏன்னெறால்
நீதான் உலகத்தில் மேலானவன்
நீதான் உலகத்தின் மாமேதை
உனக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறேன்
ஏனென்றால் நான் உன் தொண்டன்.

அறுவடைநாள் 2002

ஓடி ஓடி ஓய்ந்த கால்களுக்கு ஓருநாள் ஓய்வு
தேடித் தேடித் திரிந்த தேடலுக்கு ஒருநாள்த் தடை
கூடிமகிழ்ந்து கொண்டாட கண்கண்ட திருநாள்
திரும்பத்திரும்ப வரும் ஆனால் தினந் தினம் வருவதில்லை
விடியும் என்று காத்திருந்தோம் விடிந்ததும்
முடிந்ததே என்று ஏங்கி நின்றோம்
மாதங்களாய் எண்ணும் போது பன்னிரண்டு
காலங்களாய்ப் பார்த்தால் அவை கண்ணிரண்டு
நாட்களாய்ப்பார்த்தால் முந்நூற்றியறுபத்தைந்து
நாளடைவில் வந்து போவதோ வருடம் ஒன்று
வீறுநடை போட்டுவந்த வருடத்தில் வியப்பென்ன தெரியுமா
வெறுங்கையுடன் ஆறுநடை போட்டுச் செல்வதே !
அடியெடுத்து வைக்கும் ஆண்டில்
அப்படியும் இப்படியும் பல அடிக்கல் நாட்டப்படும்
ஆண்டுமுடியும்வரை அத்திவாரம் கேள்விக்குறிதான்
ஆண்டாண்டு உண்டு அடுப்பங்கரையில் புரண்டு
பூதவுடல் பருத்ததே பூமியில் மீதம்
புத்தாண்டு என்று புதுவாழ்த்து வாழ்த்த
பத்தாம் நாளில் பாவியுடல் புதைபட்டுப் போகுதே
உண்மை என்ன பொய் யென்ன

அரசென்ன ஆண்டி யென்ன ஆறடி மட்டும் மீதி
உடல் உருக்குலையும் ஆயினும் ஆண்மாவுக்கு......?
கடல் போல் கலக்கந் தீரும் கன்னியநடத்தையில்
கொடுப்பது வாழ்த்துத் தானே என்று கொட்டிவிடாதே
கெடுப்பதற்கும் வலுவுண்டு வண்வார்த்தையில்
நடப்பதை நினைத்து நயமாய் வாழ்த்து
நினைப்பதுங்கூட நிறைவாய் நடக்கும்

மறைவாய் நினைத்துக் குறைவாய் கூறின்
அதுவும் நடக்கும் பார்த்துப் போ. . . .
வந்தது வருடம் பார்த்துப் போ . .. .
அங்கே பள்ளமும் பதட்டத்தை ஏற்படுத்தும்
சில புட்டியும் உந்தன் முட்டியை நோகடிக்கும்
துன்பத்தைக்கண்டு துவண்டு விடாதே
இன்பத்தின் அருமை துன்பத்தின் முடிவில்தானே
பாதங்களில் பங்கம் வரும் வரையில்
பாதரட்சைகளுக்கு பாராட்டில்லையே!
இதோ ஒரு சாலையின் முடிவு
அதோ அடுத்த அடி தெரிகிறது பார்த்துப் போ. . .
இதோ கொஞசம் ஓய்வெடுத்துக் கொள்
நீ போகவேண்டிய தூரம் தொலைவில் உள்ளது
துணைக்கு நல்ல தோழனைக்கூட்டிக் கொள்

தோழன் ! யாரவன் உன் துன்பத்தில் தெரியும்
அவன் வாழ்த்துக்களுக்கும் வல்லமையுண்டு. . . !!
வாழ்த்துக்கள்!! 

தமிழர் நாமும் மனிதர்கள்தான்

எப்போது காணுவேன்
என்
இனத்தின் எல்லையிட்ட விடுதலை
வீரஞ்
செறிந்த பாரம்பரிய
தேறல்
வாடிவிட்ட சோலையோ?
உரம்
போடப் புதைக்கப்பட்ட
உயிர்,
இன்னும் போதவில்லையோ
பயிராக!
பிஞ்சு உடல்கள் கூட பலவாறு

அஞ்ச
அறுக்கப்பட்டதே!

சர்வாதிகாரத் தாண்டவத்திற்கு
சர்வ
தேசமே சாதகமா?
ஆயிர
மாயிரஞ் செம்மணிகள்
இன்னும்
அம்பலத்திற்கு வராதவைகளே
“தூங்குபவனுக்கு
மீண்டும்
தூக்கமாத்திரை
தூக்கமற்றவனுக்குத்
தினந் தோறும்
துக்கயாத்திரை”

ஈழப்பயிர்கள் இழந்து
விட்ட
உயிர்கள் வாழ மண்ணிலிட்ட
பிச்சை
மயாணங்களே!!
மனித உரிமை மீறப்படுவதை
எங்குந்
தட்டிக் கேட்பவரே
மனித
உரிமை முற்றாய் மறுக்கப்பட்டதை
எப்படி
மறைத்தீரோ

செய்நன்றி கொண்ட மகற்கு
தமிழ்  ஈழம் மலரும்  அப்போது
சிங்கள இராணுவத்தினரை
நீங்காமல் நினைவு கூருவேன் !
ஏன் தெரியுமா ?- அவர்களின்
தீராத கோரங் களும்
போராடும் தூண்டலுமே - எமை
நாடாள வைத்த தவம்

போராடி வெல்லும்படி . சிறு
நாடி நரம்பெல்லாம்
வேரோடி நின்ற வேங்கையில் ,- வீர
வேட்டைக்காய்
யாழ்க் கோட்டைக்காய்
இந்தத் தூண்டலின் வேகம் - கடல்
தாண்டி நாம் சென்று
கதிஎன்று காரணஞ்சொல்லி  - உடல்
தஞ்சமடையக் காரணமின்று
தஞ்சமடைந்த நாமங்கு
தாய் மொழியை மறந்தோமா -- நிதம்
நல்ல பல வீணை செய்து
நாமிசைத்தே வந்தோம் நலமாக

வாண் வெளியில் விரைந்து செல்லும்
வானொலிகள் வீட்டு வாசலில் ! - இரு
கைதட்டி மெட்டுப் போடும்
இசைத்தட்டுக்கள் காதோரமாக
கணக்குகளையும் வழக்குகளையும்
கம்பியூட்டரில் பார்த்தோம் - எம்
தாய்மொழியாம் தமிழ் மொழிக்கென
தனித்தள மொன்று கணனியில மைத்தோம்
எழுதியறியும் வகை யெழுத்துக்களில்
இரண்டா மிடம் இணையத்தில்
இணையற்ற தமிழுக்கின்று
நன்றாய்க் கிடைத்ததென்று - தமி
ழீழம் மலரும் - அப்போது
சிங்கள இராணுவத்தினரை
நீங்காமல் நினைவு கூருவேன்..!
ஏன் தெரியுமா ?- அவர்களின்
தீராத கோரங் களும்
போராடும் தூண்டலுமே - எமை
நாடாள வைத் த தவம்
ஈழத்து ரிசிகளும் மகான்களும்
மேதைகளும்  மரணத்தால் - எங்கள்

மேனிகளில்  மேன்மையுடன் வீற்றிருப்பார்!
அவர்கள் சென்நீர் விட்டுச் சென்றதால்
மலரும் மீழத்தில் கண்ணீர்விட்டு - அவர்

காலடியில் பணிகின்றோம்
குட்டி தேவர்கள் அவர்கள்
அப்போது அவர்கள் மேனிகளில்
நஞ்சு மாலை சுமந்ததால்
இப்போது அவர்கள் மேனிகளில் - தும்பை
மாலை சூட்டுகிறோம்
சிங்களர்க்கு அந்நாள் வெட்க மாலை
சூட்டியதால் எங்களுக்கு இந்நாள்
மேனிகளில் தங்க மாலை சூட்டினீர்
புலி வீரர் விதையாக
சிங்களப் படைவீரர் உரமாக
வளர்ந்து நின்ற மரமாக

மலரும் மெங்கள் ஈழம் - அப்போது
சிங்கள இராணுவத்தினரை
நீங்காமல் நினைவு கூருவேன் !
ஏன் தெரியுமா? -அவர்களின்
தீராத கோரங் களும்
போராடும் தூண்டலுமே - எமை
நாடாள வைத் ததவம்

தோல்வியுற்ற வாலிபம் !

வருட மொன்றாய்
வாடிப் போனபோதும்
வாலிபத்தின்
வேடிக்கையால்
வயதும் போனது !

இரவுகளின் இன்பத்
தொல்லைகள்
இல்லாத உறவுகளுக்குத்
தூபம் போட்டுத்
தொல்லையானது !

வாரத்தில் தினம்
வந்து போன
நீண்ட பல இரவுகள்
வேதனை யோடே
விடிவுகளைத் தேடியது !

கட்டிலும் மெத்தைகளும்

கைகொடுக்கும் நண்பனாய்
கண்ணீரைக் கூடத்
தேக்கிவைக்கும்
தடாகங்க ளாகியது !

வெப்பத்தின் தப்பான
வெளிப்பாட்டால்
விண்ணில் கண்சிமிட்டிக்
கொட்டிக் கிடக்குந்
தாரகை கூட கூச்சப்பட்டது !

விடிந்தபின்பு நங்கையின்றி
நகைப்போடு முடிந்துவிட்ட
மாதத்து முப்பது
இரவுகளுக்காய்
வெட்கப்பட்டேன்!

விரல்கள் வருடிவிட்ட
வேதனையால் உடல்கள் - உடன்
விதைத்துவிட்ட
வேர்வைத்துளிகள்
வெப்பத்தைத் தணித்தன!

கட்டளை களுக்குக்
கட்டுப்படாத
தேகம்
கற்பனைக்குமட்டும்
கட்டவிழ்த்து விட்ட
கோளைத்தன மென்னவோ?

பூக்களின் மென்மை
குத்திக் குருதி சொட்டியது
முட்களின் பற்கள் பட்டு
சொற்கள் துண்டானது !
மூச்சுக்காத்தின் வெப்பம் பட்டுத்
தீயும் புண்ணானது

தூக்கமற்ற எந்தன்
இரவுகளின் நீளத்தை
தனிமையின் கோரத்தால்ச்
சபித்துக் கொள்கிறேன்

வாலிபத்தின் தாமதத்தை
வேடிக்கையோடு
வேலிபோடும்

கனம்பொருந்தி யோரையும்
கலாசாரத்தையும்
வண்மையாய்க் கண்டிக்கிறேன்!!

இதுதான் காதல்

தீப் புண் போன்று
உன்னால் வேயப்பட்ட,
என் இதயக் காயங்களை
நித்தம் கண்ணீரால்
கழு விக்கொண்டிருக்கின்றேன்
அப்போதும் கரையாமல்
குடி கொண்டிருக்கும் உன்காதல்!

என்னேடு உனக்குள்ள காதலை
என் கண்ணீரிடம் கேளு
கதைகள் பல கவிதைகளாய்ச் சொஃல்லும் !

மூடி வைத்த முத்துக்களாய் மௌனித்திருக்க
என் காதலுக்கு முடியவில்லை !
அதனால் தான் கரைந்துருகிக்
கண்கள் வழியாய்  கண்ணீராய் ஓடுதடி!

என்னால் தொல்லை வருமாயின்
என்னைத் தவிர உன்னைக் கூட
தொடமாட்டேன் என்பது உனக்குத் தெரியாதா?
காரணம் காதலடி பெண்ணே!

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
சும்மாயிருக்க , சுகமாக இருப்பது
அதுவென்றால் சுமையாக்க நானெதற்கு?!

தீப் புண் போன்று

உன்னால் வேயப்பட்ட,
என் இதயக் காயங்களை
நித்தம் கண்ணீரால்
கழு விக்கொண்டிருக்கின்றேன்
இப்போதும் கரையாமல்
குடி கொண்டிருக்கும் உன்காதல்!

கற்பனையில் கன்னி

எழுத்திற்கும் எண்ணத்திற்கும் இடையில்
எத்தனை தொலைவு!
பெண்ணிமை போல்

பேரிடி இடித்த பகுத்தறிவு ஓரடி கூட
நகராமல் மௌனமாய் இருப்பதேன்
||பென்||னின் மை விலங்கோ

தீயாய் ச்சுட்டெரித்த என் சின்னச்
சிந்தனைகள் பூவாய்த் தாழில் மலர்ந்ததென்ன
பெண்ணினிதழாய்

முத்தத்திற்கும் சத்தத்திற்கும்
நெருக்கம் போல்  - என்
எண்ணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பு
மண்ணின் மணம்போல்

ஆடம்பரமில்லா எழுத்துக்களில் கூட
ஆயிர மர்த்தங்கள் இருக்கக்கூடும்
||பெண்|| ணின் மனம்போல்

குறளைக் குறுகத்தறித்தும்
முறிந்து விட்டதா என்ன?
ஆயிர மர்த்தங்கொண்ட அமுத சுரபியை
சிப்பிக்குள் சிறுப்பித்தல்
சிறந்த சிந்தனை

||பென்|| என்றால்
அது . . .  கவிதை!
||பெண்|| னெ;றால்
அது காதல்!!.

புலம்பல்
அன்று
அமாவாசை தான்
என்மன வானில் -ஒரு
வெண்ணிலவைக்கண்டேன்

புயலடித்த தேசத்தில்
புரையோடி விட்ட
வீதியில்தான்  -அந்த
பௌர்ணமி வெளிச்சம்

புதைகுழியும் தன்
வாசலை எனக்காய்த் திறந்துகொண்டது.!
வாழச்சொல்லி பூமியும் -தன்
பாசக் கிடங்கைக் கட்டிக்கொண்டது!.

முட்டாள்த் தனமான
முடிவுகளுக்கு மட்டும்
பட்டம் சூட்டிப்
பரிசும் கொடுத்தது-இப்
பூவுலகம்!  |அப்பாவிகள்|

பைத்தியக்காரர்
என்று எள்ளி ஏளனம் செய்தது
பகுத்தறிவாளனை!
ஏட்டுச்சுரக்காய்க்கு மட்டும்
கைதட்டாம் |விவேகிகள்|

இப்போதெல்லாம் எனக்குப்
பைத்தியக்காரன்
என்று ஆயிரம் பட்டங்கள்
எனக்குள் மட்டும் பௌர்ணமி!!

அவளோடு ஓர் ஆலிங்கனம்
அடி கள்ளி இந்தக் கல்லைச் செதுக்கிச் சிலை செய்தாய்
சிறு காயந் தந்தும் வலிசெய்தாய்
அங்கம் எல்லாம் நடுக்கம் கொள்ள தங்கம் பூசி மடிதந்தாய்
பங்கமில்லாப் பந்தயத்தில் பாவி நான் தோற்று விட்டேன்
சத்தம் வந்த முத்தத் தொலி சாமத்திலுங் கேட்குதடி
சாய்ந்து கொண்ட வுந்தன் மடி தலையணையாய்த் தோன்றுதடி
உன் மூச்சுவிட்ட வெப்பத்தால் என் பேச்சுக் கூட வேகுதடி
மூடிய உந்தன் விழிகளை முத்தமிடும் போதிலே
ஆடிய எந்தன் அங்கத்திலும் அமைதி வந்து சேருதடி
பச்சையான வார்த்தைகளை உன்னிடம்
பிச்சுப் பிச்சுக் கேட்பேன் - அதைப்
பிச்சுப் பிச்சு நீசொல்ல பஞ்சில் பத்தும் தீயானேன்
உன் செல்லப் பேச்சை மெல்ல மெல்ல இரசித்தேன்
சொந்தமாக என்னைச் சொல்ல உள்ளுக்குள்ளே நானும் சிரித்தேன்
நீ பண்ணும் பூஜைக்கு பூவாய்த்தானே என்னைச் சரித்தேன்
வெப்பம் மூடிய கூட்டுக்குள்ளே வேர்வைத்துளிகள் கசியக்கண்டேன்
வெட்கம் கொஞ்சம் தடுத்துவைக்க வேதனையில் மூழ்கிவிட்டேன்
அள்ளிவந்த ஆசைகளை அப்படியே அடைத்துவிட்டேன்
கொள்ளிவைத்த தீயுடம்பால் உன்னைக் கொஞ்சம் அணைத்துவிட்டேன்
இன்னும் நேரம் நீண்டிருந்தால் என்னவாகும் என்னிலையோ
எண்ணிப்பார்க்க நீயுமில்லை உன்னுடம்பில் நீருமில்லை
நெருப்பில் பூத்த நீறைப்போல் என் நெஞ்சம் அருகிப்போனதடி
நீண்ட எந்தன் ஆசைகளும் நெருப்பாய் கொஞ்சம் காணுதடி
நெஞ்சைத் தொட்ட கைகளுக்கு மீட்டுக் கொள்ள ஆசையில்லை
ஒட்டிக் கொண்ட இதழ்களுக்கு விட்டுச் செல்ல வேளையில்லை
நீ காட்டும் அன்பிற்கு என்னிடத்தில் என்ன உண்டு 
இன்னுந்தாண்டி இன்பங்காண இதயம் ஏனோ இடிக்குதடி
இல்லை எந்தன் உயிரும் இல்லை இதயம் ஏனோ துடிக்குதடி

புலம் பெயர்ந்த ப+க்கள்
குயில் கூவும் ஓசைகள் கேட்கும் போது ஆசைகள் - கூவும்
போது கூட்டம் கூடிக் கேட்போமா
தமிழீழச் செல்வங்கள் பேசும் போது ஆசைகள் -கிள்ளை
மொழியில் பேசச்சொல்லிக் கேட்போமா
பூந் தோட்டம் நன்றாய்ப் பூக்காமல்
கம கம நறுமணம் வீசிடுமா- பிள்ளைச்
செல்வங்கள் நன்றாய்ப் பேசாமல்
சரி கம பத நிச பாடிடுமா (குயில். . . . !)
1
அம்மாவைப் பார்த்து பிள்ளைகள் இங்கே
அயஅஅய என்று அழைக்குது - அட
அயஅஅல என்றும் அழைக்குது!
அப்பாவைப் பார்த்து பிள்ளைகள் இங்கே
pயிpய என்று அழைக்குது - அட
pயிpல என்றும் அழைக்குது!
தொலைஞ்சு தமிழ் தவிக்குது -அது
தொலைவ நினைச்சு துடிக்குது! (2)
சொல்லிக் கொடுத்தா பிள்ளை மனசு
நெஞ்சில் பதிக்கும் வெள்ளை மனசு - (2)
தெரிஞ்சிருந்தும் தாய் மொழிய பிரிந்து விடாதே! - நல்ல
கதைகளோடு கவிதை சொல்ல மறந்துவிடாதே!
(குயில். . . . )
2
ஐரோப்பா வுந்தன் தாய்நாடு இல்லை
ஈழம் அங்கே இருக்குது - அது
உன்னை நம்பிச் சிவக்குது
லட்சத்தில் மூன்று தமிழ் வார்த்தை உண்டு
லட்சியமாய் எடுத்திடு - அதை
கட்சிதமாய்ப் படித்திடு
உறங்கிக் கிடக்கும் உணர்விது - அந்த
உறக்கங் கலைக்க உணவிது (2)
நெஞ்சம் முழக்கு எண்ணப் பறவை
வட்டம டிக்குஞ் சின்னப் பறவை (2)
நச்சுக் களைகளை நீ முளையிலேயே கழைந்து விடு -இல்லை
பலன் கொடுக்கும் பயிர் களையே மறந்து விடு
(குயில் . . . . )

ஆறாத வடுக்கள்

நெஞ்சம் பட்ட காயத்துக்குக்
கட்டுப் போதுமா - என்
வேதனையைத் தீர்க்க
வொரு பாட்டுப் பாடம்மா

பொல்லாத உலகமம்மா புண்பட்ட இதயமம்மா
தாய்நாடு நோகுதம்மா தீயால வேகுதம்மா
(நெஞ்சம். . . )

பிஞ்சு உள்ளங்கள் சாகுதம்மா
பிரிஞ்சு நெஞ்சங்கள் வாடுதம்மா
அஞ்சி அஞ்சியே ஓடுதம்மா
உடைஞ்ச ஓடம்போல் ஆடுதம்மா

பஞ்சங்கள் கூடி
பட்டினியால் வாடி
நிம்மதியைத் தேடி
பார் தன்னிலே ஓடி

ஏதேதோ எண்ணங்களே எண்ணுதம்மா
ஏராளம் மின்னல்களாய் மின்னுதம்மா
(நெஞ்சம். . . . )

தள்ளி உள்ளது செந்தமம்மா
தன்னந்தனிமையாக ஏங்குதம்மா
கண்ணில் வெள்ளமாய்ப் பாயுதம்மா
கார்மேகம் தூவிச்சென்ற தூறலம்மா

கண்ணிலே விம்பம்
காணவேண்டும் இன்பம்
தீரவேண்டுந் துன்பம்
கூட வேண்டும் சொந்தம்

நட்சத்திரங்கள் மாலை ஆகுமம்மா
வட்ட நிலாவின் வெண்மை தோன்றுமம்மா
(நெஞ்சம் . . . )

தமிழர் நாமும் மனிதர்கள்தான்

எப்போது காணுவேன்
என்
இனத்தின் எல்லையிட்ட விடுதலை
வீரஞ்
செறிந்த பாரம்பரிய
தேறல்
வாடிவிட்ட சோலையோ?
உரம்
போடப் புதைக்கப்பட்ட
உயிர்,
இன்னும் போதவில்லையோ
பயிராக!
பிஞ்சு உடல்கள் கூட பலவாறு
அஞ்ச
அறுக்கப்பட்டதே!
சர்வாதிகாரத் தாண்டவத்திற்கு
சர்வ
தேசமே சாதகமா?
ஆயிர
மாயிரஞ் செம்மணிகள்
இன்னும்
அம்பலத்திற்கு வராதவைகளே
“தூங்குபவனுக்கு
மீண்டும்
தூக்கமாத்திரை
தூக்கமற்றவனுக்குத்
தினந் தோறும்
துக்கயாத்திரை ”
ஈழப்பயிர்கள் இழந்து
விட்ட
உயிர்கள் வாழ மண்ணிலிட்ட
பிச்சை
மயாணங்களே!!
மனித உரிமை மீறப்படுவதை
எங்குந்
தட்டிக் கேட்பவரே,
மனித
உரிமை முற்றாய் மறுக்கப்பட்டதை
எப்படி
மறைத்தீரோ?
(செம்மணிச் சம்பவத்தின் போது வரைந்த அருகன் வடுக்களிலிருந்து .)

ஞாபகமிருக்கா?

பாசத்திற்குக் கண்ணீரால் பூட்டுப்; போட்ட - காலம்
பாழடைந்து போனது பரிதாபமாய் !
பணமென்னும் மொருகணினி இயக்கப்பட்டு
எண்ணிக்கையே கைச் சாவியானதிப்போது
கண்ணீரெல்லாம் காட்சிச் சாலைக்காகன  - கோலம்

அதோ -!!!!!!

வீதி அங்கே முடிவடைகிறது, விதியுந்தான் . . !
கணினிக் கணக்குகளுக்கினி யவசியமில்லை
காலோடு தலை மட்டும் கணக்குப் போட்டால்
அதிகபட்சம் ஆறடிக் கணக்கே போதுமானது

குருதிக் கொதிப்பில் இழைத்து விட்ட
“களைப்புகளு”(ழு)க் கெல்லா - மங்கே
இளைப்பாறல்கள்!

சூடேறிச் சுட்டுவிட்ட சுகங்களுக் கெல்லா - மிங்கே
சவங்க ளென்று பெயர்

பணங்களைப் பங்கு போட்டவ ரெல்லா - மங்கே
பிணங்களாய்ப் பட்டுப் போனார்கள்

குணங்களை மிதித்தவர் அவர்கள், இப்போ - துர்
மணங்களுக்காய் மூக்கைப் பொத்தும் உறவுகள்

நன்றிகளெல்லாம் நாய்களாகக்; கட்டப்பட்டன
பண்புகளெல்லாம் படகேறிச் சென்ற அகதி
அன்புமட்டும் முன்னாள்த் தலைவரின் சிலை
பறிபோன கலாசாரங்கள் பகிடிக் கிடமானது

விதையாகிப் புல்லாகிப் பூவாகிக் காயாகிக்
கனியாகிக் கனிச் சாறாகித் தாகந்தீர்க்கும் - மரம்

அணுவாகிக் கருவாகி உருவாகிச் சிசுவாகி
மனுவாகிக் கிழமாகி இளைப்பாறி இழியும் - உடல்

மறந்துவிடாதே யுந்தன் மானிடப் பிறவியை !
மறந்துவிடாதே யுந்தன் மாயைப் பிறவியை !

காதல் நோய்!!

ஓயாமல் கரையைத் தொடும்
அலையைப் பார்த்தேன்
ஓராயிரம் மின்னல் போல்
உன்னைப் பார்த்தேன்
ஓரமாய் என் நெஞ்சில்
ஊன்றப் பார்த்தாய்
ஓசையாய் ஆசைகளை
ஊற்றிவிட்டாய்
ஓடையில் ஆடிடும்
ஓடமாய் ஆட்டிவித்தாய்
ஓ. . பெண்ணே
ஊளச் சதைக்கல்லடி
ஓளடதங் கேட்டேன்
ஊசி தைத்த உன்பார்வைக்கே!
ஓதிச் செல்லு உன் காதலை
ஊரறியச் சேதி சொல் தூததை.!!

குறிப்பு
    ஆநுப+தி -தானேகண்டறிந்ததும்,பிறருக்குச் சொல்ல முடியாததுமான அறிவு. 
    பூஸ்பரிசம் - ஒரு குழந்தை பிரசவித்து ப+மியைத் தொடும் நிலை.
    தும்பைமாலை - போர் வென்றோருக்குச் சூட்டும் மாலை
    ஆலிங்கனம் - புணர்ச்சி ,தழுவல்

Nessun commento:

Posta un commento