domenica 3 gennaio 2010

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சேதமடைந்த அரச கட்டிடங்கள் மற்றும் வீடுகள் புனரமைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகின்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமையும் புதன்கிழமையும் 1,200 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்ததுடன், இதுவரை 12 ஆயிரம் பேர் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியபோது முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். முகாம்களிலுள்ள ஏனையோரையும் கட்டம் கட்டமாக குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இன்று திங்கட்கிழமை ஏ9 வீதியின் மேற்குப் பக்கமாக ஒட்டுசுட்டான் உதவி அரசாங்க அதிபர் பகுதியுள்ள கிராமங்களிலும் எதிர்வரும் புதன்கிழமை மாந்தை கிழக்கிலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். மேலும் 1,200 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சேதமடைந்த அரச கட்டிடங்கள் மற்றும் வீடுகள் புனரமைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகின்றது. புனரமைக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் கட்டம் கட்டமாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள்

Nessun commento:

Posta un commento