mercoledì 6 gennaio 2010

பெரிய பேய்கள் சேர்ந்து சின்ன பேய்களுக்கு நரகத்தின் வாசலுக்கு வழிதேடினராம் - அருகன்.

sarath_sammanthan “தமிழர்களுக்கான சாதகமான முடிவைத்தரப்போவது யார்? (1)


“பெரிய பேய்கள் சேர்ந்து சின்ன பேய்களுக்கு நரகத்தின் வாசலுக்கு வழிதேடினராம்.

அதற்காக கருத்தரங்கும், கூட்டங்களும் வைத்து பல நாட்களுக்குப்பின்னர் ஒருமாதிரி முடிவுக்கு வந்தனராம்.

எமனிடம் போய் தஞ்சமடைவதாக முடிவுகட்டி, நாம் நரகத்திற்குப்போகவேண்டும் வழிதெரியாது தவிக்கின்றோம் என்று கேட்டனராம்,

அதற்கு அவர், நரகம் எப்படி இருக்கும்? என்று கேட்டாராம்

சாவும், சவக்காடுமாக இருக்கும். கொடுமையும், பற்கடிப்பும் இருக்கும். அழுகையும், நோய்வாயும் இருக்கும் … என்று இழுத்துச் சென்றவர்களை பார்த்து எமன் நினைத்தாராம், இருக்கும் இடம் அதுதான் என்று தெரியாமல் அந்த இடத்திற்கே வழிகேட்கின்றனரே…  இப்போதுதானே அந்த கடைசி யுத்தத்தையும் வெற்றிகரமாக முடித்து இவர்கள் கேட்டதிலும் பார்க்க அதிகமாக கொடுத்தும் இதுதான் நரகம் என்று தெரியாத அளவிற்கு அவர்களுக்கு இயபாக்கம் அடைந்து விட்டது. இனி இவர்கள் மோட்சத்தை நினைப்பதே கஸ்டம் என்பாடு கொண்டாட்டம்தான் என்று எண்ணியவாறு…

சரி கவலை வேண்டாம் …

எனக்கு சற்று அவகாசம் கொடுங்கள் நீங்கள் கேட்பதிலும் அதிகப்படியான நரநரகத்தையே காட்டுகின்றேன் “பலருக்கு நரகத்தில் இருந்து, இருந்து அதன் அகோரம் தெரியாது போய்விடும்.

எனவே, நான் நரநரகத்தையே காட்டுகின்றேன்” அது எனக்கு மட்டுமே தெரிந்த வழியாக்கும்.

கடந்த பலவருடங்களாக அதற்கான பயிற்சியை மேற்கொண்டு, தவம்புரிந்து வழியைக்கண்டுபிடித்துள்ளேன். அவற்றை உங்களுக்கு காட்டுகின்றேன்.

எனினும், எனக்கு நீங்கள் அடிமையென்று பட்டயம் எழுதித்தரவேண்டும். என்றதற்கு, மாடுமாதிரி தலையையாட்டிய போய்கள் சின்னப்பேய்களைளய்லாம் எமனுக்குப்பட்டயம் எழுதிக்கொடுத்தனராம்…”

எப்படி இருக்கின்றது… இதுதான் இன்றைய தமிழர்களின் நிலை.

நிரந்தர வாழ்விற்கு வழிகேட்டால் பஸ்சைஓடவிடமுடியுமா?, கைதியை வெளியில் விடமுடியுமா? ஆமியை அகற்றமுடியுமா? ரோட்டுபோடமுடியுமா என்று … வாக்கியானம் பேசுவதற்கு கூட்டமைப்பு போட்டகுழப்பம் கொஞ்சமல்ல…

பொன்செக்காவால் தமிழீழம் கிடைப்பதற்கேற்ப யாப்பை மாற்ற முடியுமா என்று கேட்டு எழுத்தில் அதற்கான உறுதி இருந்து ஆதரவைக் கொடுத்தால் கூட்டமைப்பின் கூட்டம் பாராட்டக்கூடியதே!!!

சாதாரணமாக தற்போதைய அரசு மேற்கொண்டுவரும் விடயங்களை மேற்கொள்வதற்காக, இத்தனைநாட்களும் தமிழர்களையும் புலிகளையும் விடாமுயற்சியாக தாக்கி அழித்த ஒருவருக்குப்போய் வால்பிடித்துநிற்கின்ற குரங்குக்கூட்டம் போல், கூட்டமைப்பு தொங்கிக் கொண்டு இருக்கினம்.

1994ம் ஆண்டுவரை வவுனியா வில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் … போன்ற அமைப்புக்கள் இயங்கும் போது ஒதுங்கியிருந்து பதுங்கியிருந்து வேடிக்கையும் வெட்டுப்பேச்சும் பேசியவர்கள் இப்போது, புலிகள் பலம் குறைந்தது என்றதும் தாம்தான் தமிழர்களின் மக்கள்பிரதிநிதி என்று கங்கணம் கட்டுகின்றனர்.

ஒரு தமிழன் சரியோ, பிழையோ, தெரிந்தோ தெரியாமலோ தேர்தலில் நிற்கின்றான் அவனுக்கு வாக்குப்போட்டு தமிழர்களின் ஒற்றுமையினைக்காட்டுவோம் என்றில்லை சிங்களவனின் காலுக்குள் போய் புகுந்து கொள்கின்றனர்.

கண்ணுக்குத்தெரியாத கடவுளைவிட கண்ணுக்குத் தெரிகின்ற பேய் நல்லம் என்று, அதிகாரமுள்ளவனை பற்றிக் கொண்டு அதே கோரிக்கையினைக் கேட்பதைவிட்டுவிட்டு, ஆட்சிமாற்றம் வேண்டுமாம் ஆட்சிமாற்றம்….

தமிழர்களின் பலத்தை ஒரு தமிழனுக்கு காட்டவேண்டியதுதானே! என்ன அரசியல் செய்கின்றனர்.

தமிழர்கள் அணைவரும் நிதானமாக யோசித்து தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வேண்டும். அதாவது, சிவிஜிலிங்கத்தை ஆதரித்தாலும் சரி மகிந்தவை ஆதரித்தாலும் சரி, சரத்தை ஆதரித்தாலும் சரி வெல்லப்போவது, மகிந்தவே… காரணம் தெரியுமா ஆரம்ப காலத்திலிருந்தே பலம் பொருந்திய கட்சியாக இருந்த ஐ.தே.கட்சியை அன்னப்பறவையாக்கியது சரத்தல்ல மகிந்தவே!!! அதிகாரியாக இருந்த சரத்தை அரசியல் வாதியாக மாற்றியது றணிலல்ல… மகிந்தவே!!!

இது தேர்தலின் பின்னால் மக்கள் வெளிப்படையாகப் புரியப்போகின்றனர்.

இந்த நுட்பம் கூடத்தெரியாத கூட்டமைப்பினர், எப்படி நாளை இலங்கையின் அதிபரானால் ஆட்சிநடத்தப்போகின்றனர். இல்லை தமிழீழம் கிடைத்தால் அதை எப்படி கட்டிக்காக்கப்போகின்றனர்.

இதைவிட சிங்களவன் கொடுப்பதை வாங்கித்திண்டுகொண்டு பேசாமல் இருக்க வேண்டியதுதானே!

போராட்டம் நடந்த போது, பேசாமல் இருந்த எதிர்க்கட்சியினர், புலிகளை அழித்தொழித்தாகிவிட்டது என்றதும் நாட்டை அபிவிருத்தியில் கொண்டு செல்லாது, குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். முட்டாள் தனமான தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும், மகிந்த மட்டும் புலிகளை அழிப்பதற்கு போர் தொடுக்கவில்லை, ஜே.ஆர், பிரேமதாசா, டிங்கிரிபண்டா விஜயதுங்க, இவர்கள் ஐ.தே கட்சிக்காரர்களே… ஏன்! அப்போது அவர்கள் தமிழர்களுக்கு உரிமை வழங்கினார்களா?

அவர்கள் காலத்தில் தானே தமிழர்கள் அதிகமாகத் துன்புறுத்தப் பட்டார்கள். தற்போதைய அரசு கட்சிக்காரர்கள் பதவியில் இருந்ததிலும் பார்க்க இவர்களே அதிககாலம் இலங்கையை ஆண்டவர்கள். சந்திரிக்காவின் காலத்தில் சந்திரிக்கா செய்யாததை அவருக்குப்பின்வந்தவர் செய்து விட்டார் என்றதும் அம்மையார் அடுத்த கட்சிக்குத்தாவிவிட்டா… அப்போது புலிகளின் ஆதரவாளர்கள் அவவுக்காக எத்தகைய கேவலமான பாடல்களைளய்லாம் எழுதினார்கள். மறந்து விட்டார்கள் போலும். அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள். புலிகளை அங்கிகரித்து மாலையா போட்டார்கள். புலிகளின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கினார்களா? அவர்களும் புலிகளை அழிக்கவே போர்தொடுத்தனர். என்ன மகிந்தவின் காலத்தில் அது நிறைவேறியிருக்கின்றது. அதுகும் மகிந்தவின் வீரத்திலோ அல்லது, அவர் சகோதரரின் தந்திரத்திலோ இப்போர் ஒரு முடிவுக்கு வரவில்லை. பல வழிகளில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள், ஆயுதங்கள் இருந்தும் ஆட்பலம் இருந்தும் செத்த பாம்பாகிவிட்டிருந்தார்கள். அதற்கான பல காரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம். 

முதலில் இருந்து வருவதிலும் பார்க்க முக்கியமாதில் இருந்து வருவதே மேல்… தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மரணம், சுப தமிழ்ச்செல்வனின் மரணம், அமைச்சர் கருணாவின் பிரிவு, கிழக்கின் போராளிகள் ஆதரவின்மை, அத்துடன் புலிகளுக்குள் ஏற்பட்ட தலைமையில் சீர்கேடுகள் போன்றவற்றால் புலிகள் இறந்து கொண்டிருந்த வேளை, சந்தர்ப்பம் பார்த்து காய்களை நகர்த்தியதுதான் மகிந்தவின் அதிஸ்டம்.

கருணா மகிந்தவை ஒட்டிக்கொண்டு இருக்கின்றார் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் கருணாவும் நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் அதுவல்ல உண்மை!!! உண்மை எதுவென்றால், போர்குற்ற நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டால், அப்போது இலங்கையையும் மகிந்த ஆட்சியினையும் காக்கப்போவது கருணாவின் வாக்குமூலமே அதற்காகத்தான் கருணாவிற்கு இத்தனை ஆராதனை. போர்க்குற்ற பேச்சுக்கள் மறைந்து போகும் பட்சத்தில், சமாதானத்திற்கான பரிசு மகிந்தாவிற்கு கிடைக்கும் போது, கருணா தன்னைப்பலப்படுத்தாவிட்டால், பிரபாகரனின் கதிதான் கருணாவிற்கும் என்பதுதான் உண்மை.

ஆரம்பத்திலேயே கூறிய விடயம்தான் மகிந்தவுடையதும் சிங்கள ஆட்சியாளர்களின் எண்ணமும் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பதே தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் நாளைய ஆட்சியில் தமிழன் இலங்கையை ஆழுவான் என்பதே!!!

தமிழர்கள் சிங்களவர்களுக்கு வாக்குப்போட வேண்டும், சிங்களவர் தமிர்களுக்கு வாக்குப்போடக்கூடாது என்ற சூட்சுமத்தை பின்பற்றுகின்றனர் சிங்களவர்கள். ஆனால் தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்குப்போடவும் கூடாது, அடங்கிப் போகவும் கூடாது. இந்த விடயத்தில் எல்லாரும் கருணாவை தூற்றுவதைப்போல் என்னால் தூற்ற முடியவில்லை. காரணம் தன்னைக்காத்துக்கொள்ள கருணாவிற்கு புலிகளை விட பெரிய பாதுகாப்பு இருந்திருக்காது, அதனால்தான் வேறு எந்த தமிழ்க்கட்சியுடனும் அவர் சேராது, அரசுடன் இணைந்திருக்கின்றார்.

ஆரம்பத்தில் இருந்து எனது எழுத்துக்களில் வருகின்ற விடயம் கருணாவின் பிரிவுகூட பிரபாகரனின் திட்டம் போலும்.    …       

“தமிழர்களுக்கான சாதகமான முடிவைத்தரப்போவது யார்? (2)


ஒருவர் தன்னை திடமாக்கிக்கொள்வதற்கு, தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப்பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்தை நல்ல விதமாக கொண்டு செல்வதற்கு, அக்குடும்பம் ஆரம்பத்தில் பட்டபாடுகளை எடுத்துச் சீர்திருத்த வேண்டும்.

ஒரு அமைப்பு தம்மை நிலைத்துக்கொள்வதற்கு, கடந்த செயற்பாடுகளை சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். இப்படியே பார்க்கும் போது, தமிழர்களாகிய நாம் எம்மைத்திடப்படுத்துவதற்கு, எமது உரிமைகளை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்வதற்கு, எமது கடந்தகால தவறுகளைச் சீர் செய்தாகவேண்டும். 

அந்த வகையில் எமது தவறுகளையும் சிறப்புக்களையும் நினைவு கூருவதோரு, நடக்கப்போகும் பாதைகளில் திடமான கால்களைப்பதிக்க ஒரு நல்ல நண்பன் தேவைப்படுகின்றான். அதனடிப்படையிலேயே இப்பகுதி வெளிவருகின்றது…

இன்றைய அரசியலிலிருந்தே எமது பார்வையினைச் செலுத்தினால் முதலாவது வினாவாக முன்நிற்பது?... சரத் யார்?

சரத் யார்… கடந்த காலத்தில் ஏறக்குறைய 20 000க்கும்  மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை அழித்தொழித்த தளபதி…

மகிந்த யார்?... விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கங்கணம் கட்டிய ஆறு நிறைவேற்று அதிகாரங்கொண்ட இலங்கைத் தலைவர்களுள், அதனை வெற்றிகண்டவர்.

கூட்டமைப்பினர் யார்? … இத்தனைகாலமும் மக்களின் தூண்டுதலுக்குக்காரணமாக இருந்தவர்கள்… இதற்கு மேலதிக விளக்கம் பின்னுள்ள பகுதிகள் விளக்கும்.

இப்படியே பார்க்கும் போது, பல வினாக்கள் எழுகின்றது,

ஆஃதாவது,

தமிழர்கள் சார்பில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் நிற்கின்றார். யாருடன் இணைந்து நிற்கின்றார்… சிரிக்கவேண்டாம் பொறுத்து பதில் சொல்லுங்கள். அதே தேர்தலில் தன்னை நிறுத்திக்கொண்ட ஒரு சிங்களவருடன் இணைந்து வாக்குக்கேட்கின்றறார். நல்ல அரசியல் தந்திரம்… “அரசனை நம்பி புருசனைக்கைவிட்டமாதிரி…”

இந்த சிவாஜிலிங்கம் யார்? பாராளுமண்ற உறுப்பினராக இருந்தபோதிலும் புலத்திலேயே தன்னை காத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு, அரச தேர்தலுக்காக அதற்காக மேற்கொள்ளப்பட்ட வழக்கு தள்ளபப்பட்டதும் இலங்கைக்குள் கால்பதித்தவர். இதில் கேவலம் ஒன்றும் இலவ்லை தமிழ் எம் பீக்கள் பெரும்பாலும் தமது தேர்தல் தொகுதிக்கு சேவை செய்வதிலும் பார்க்க புலத்திலே தேய்த்துக்கொள்வதிலேயே காலத்தையும் பதவிகளையும் பாழாக்கியவர்களே!!! இதில் அவரைக்குற்றஞ்சொல்லி என்ன… இதற்கு ஆயிரம் சாக்குப்போக்குகள் இருக்கின்றது. அதுபோலவே இத்தேர்தலில் தான் நிற்பதற்கும் ஆயிரம் சாக்குப்போக்குகளைத்தேடி வைத்துள்ளவர் அவரின் வருடிகள்…

கூட்டமைப்பின் பக்கம் திரும்புவோம்.

இவர்கள் புலிகளின் அரசியல் திட்டத்தில் தம்மை கட்டிக்கொண்ட பொம்மைக்குட்டிகள்… புலிகளின் தலைமை சிதைவடைந்ததும் மழைநீரில் கரைந்த மணற்கட்டியானார்கள்.

புலத்தில் இருக்கும் புலிகளின் ஆதரவாளர்களும் அவர்கள் இலங்கை அரசியலில் ஒரு முக்கிய புலிகளின் கருவியென்றே எண்ணியிருந்தார்கள். புலிகளின் பின்னடைவின்போது, அடித்தார் பார் குத்துக்கரணம் மிஸ்டர் கிசோர்… அடித்த அடியில கூட்டமைப்பிற்கே ஒரு கலக்கம் வந்தது… இதுக்கிடையில மனோகணேசனும் சும்மாயில்ல புலிகள் இருக்கும் மட்டும் தானும் ஒரு முக்கிய தேசபக்தர் என்று காட்டிக்கொண்டவர், மக்களை உயர்த்தும் நிலைவரும்போது, குரங்கு போல தாவித்திரிகின்றார். நாட்டின் நலத்தையோ அல்லது, தேச மக்களின் சுகத்தையோ யாரும் நோக்கியதாகத்தெரியவில்லை.


ரணிலின் பக்கம் பார்த்தால் போர் உச்ச கட்டத்தில் இருக்கும் போது, வாயையும் அதையும் பொத்திக்கொண்டு… இந்தியாவிற்குச் சென்ற போது, எதிர்க்கட்சியின் நிலை மறந்து தேசத்தை காக்கும் செயலில் அரசு ஈடுபட்டிருக்கின்றது எல்லாம் விரைவில் முடிவிற்கு வரும் என்று பெருமை பாராட்டியவர் இப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு முன்நிற்பதை விட்டு மகிந்தவின் பதவிக்கு ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்றார். எப்படியாவது ஒரு முறையென்றாலும் தானும் அதிபர் பதவியில் வந்தாக வேண்டும் என்பது அவர் லட்சியமாகும். அதற்காக புலிகளை வால்பிடித்துப்பார்த்தார் முடியவில்லை, இப்போது புலிகளின் வாலைப்பிடித்துப்பார்க்கின்றார்.

தமிழர்கள் கிட்டத்தட்ட வக்கோல் பட்டறை நாய் மாதிரித்தான். இப்போது ஆட்சிமாற்றம் எதற்கு, துன்பத்தில் இருக்கின்ற மக்களுக்கு ஆறுதல் தேவை. துணையிளந்தவர்களுக்கு ஆதரவு தேவை, சொத்துக்களை அழந்து, சொந்தங்களை இழந்து புரையோடிப்போனதமிழர்களுக்குத் தெம்புதேவை மீண்டும் எமக்கொரு சந்தர்ப்பம் கிடைக்கும் அதுவரை எம்மைத்திடப்படுத்த யார் பதவியில் வந்தாலும் அவர்களுக்கு வாலைப்பிடித்து எமது காலைத்திடப்படுத்தவேண்டுமேயொழிய, அவர்கள் காலைப்பிடித்து எமது வாலைத்திடப்படுத்தக்கூடாது…

“தமிழர்களுக்கான சாதகமான முடிவைத்தரப்போவது யார்? (3)

வட்டுக்கோட்டைத் தீர்மானமாம் வட்டுக்கோட்டை...

தொடரும்.    அருகன்.

Nessun commento:

Posta un commento