sabato 27 febbraio 2010

“Realm InforTex” கணனி உயர்கல்வி கற்பதற்கான நிறுவனம்

கணனி உயர்கல்வி கற்பதற்கான நிறுவனம்

realminfortex ok “UNGA”புதிய தலைமுறை ஒன்றியத்தின் ஆங்கத்தவரின் ஆதரவுடனும் ஒத்துளைப்புடனும்  தூண்டுதலுடனும் 27ம் திகதி மாசிமாதம் 2010ம் ஆண்டு றெஜியோ எமிலியாவில் புதியதோர் செயற்பாட்டினை தமிழர்கள் ஆரம்பித்துள்ளார்கள். கணனி உயர்கல்வி கற்பதற்கான நிறுவனம் பிரதான வீதியருகாமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மற்றைய நாடுகளைப்போல், இத்தாலியிலும் உயர்தரத்தை அடைய வேண்டிய இச்செயற்பாடு மேலும் பல இடங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது.

மேலும் ஒன்றியமானது இந்நிறுவனத்தினூடாக கணனி அடிப்படைக்கல்வியினை இலவசமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

இணையத்தள அமைப்புக்கள், கணனி திருத்தல்கள் போன்று மேலும் பல்வேறு விடயங்களை இங்கு பூர்த்தி செய்து கொள்ளலாம். உயர் கல்வி தொடர்பாகவும் மேலதிக விபரங்களுக்கும் - 3894325782 (இத்தாலி)

 

புதிய கணனி மற்றும் இத்தாலி இலவச வகுப்புக்கள்.

 

Logo[PNG File]2 நீண்ட நாட்களாக இத்தாலியில் பல முக்கிய சிறப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் UNGA “புதிய தலைமுறை ஒன்றியமான” எமது அமைப்பு தமிழர்களுக்காக மட்டுமல்ல, அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் ஏற்ற வகையில் கணனி வகுப்புக்களையும், இத்தாலி வகுப்புக்களையும் ஆரப்பிக்கவுள்ளது.

இத்தாலி மொழிரீதியில் வெளிநாட்டவர்களை பரிட்சயமாக்கும் நோக்குடனும் கணனியினைக் கையாளும் முறையில் சிக்கணத்தையும், விரைவையும், கணனி அறிவினைப் பெருக்கும் நோக்குடனும் சிறப்பு வகுப்புக்களை மேற்கொள்ள இத்தாலி அரசுடன் இணைந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரும்பப்படுவோர்களுக்கு உளவியல் மற்றும் மனிதவள வகுப்புக்களும் சாரதி (Driving license – Patente di guida) பத்திரத்திற்கான வகுப்புக்களும் நடைபெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருகின்ற மாதத்தில் (பங்குனி) இருந்து இவ்வருடத்தின் புதிய 2ம் கட்ட வகுப்புக்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. வகுப்புகள் வழமைபோல் வரையறுக்கப்பட்டன. எனவே, விருப்புடையோர் முன்கூட்டியே தமது பதிவினை உறுதிப்படும்படி வேண்டப்படுகின்றீர்கள். 

முன்னுரிமை – வேலையின்றி இருப்போர், புதிதாக இத்தாலிக்குள் பிரவேசித்தோர், … 

விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள –அழுத்தவும்  (xxxx)இணையபயன்பாட்டில்மட்டும்.

தொடர்புகளுக்கு – 3276269984 – 3341854230 – 3456707845


வகுப்புகள் நடைபெறும் இடம் Viale Timavo, 51 – Reggio Nell’Emilia    

மின்னஞ்சல் தொடர்புகளுக்கு    -     arugan@hotmail.com

மேலதிக விபரங்களுக்கு         -     www.thesiyam.org 

அல்லது                      -     http://arugan.spaces.live.com

இலவச வகுப்புக்களுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் ஆ4 (A4) படிவத்தில் வடிவமைக்கப்படவேண்டும்.

image

giovedì 18 febbraio 2010

ஈழத்துச் சிறுவர்களுக்காக எமது உயிரைப் பணயம் வைத்தோம்

அப்போது இறுதிக்கட்டப் போர் உச்ச கட்டத்தில் இருந்த போது, உலகத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தீக்குளிப்பென்றெல்லாம் இலங்கை அரசிற்கெதிரான போராட்டங்களை மேற்கொண்டபோது, தமிழ் ஈழச்சிறுவர்களுக்காக எமது UNGA ஒன்றியத்தால் நாம் மட்டுமே இலங்கை அரசிற்கெதிரான மாற்று வழியைப்பிரயோகித்தோம். அதனை அப்போது வெறுத்தவர்கள் இப்போது அவ்வழியை தலையில் தூக்கிவைக்கின்றனர். இதில் மனவருத்தம் என்ன வெண்றால், இத்தனை இழப்புக்களின் பின் என்பதுதான் ...

உண்மை இதுதான்

ஈழத்துச் சிறுவர்களுக்காக எமது உயிரைப் பணயம் வைத்தோம்

இலங்கை அரசு இத்தாலியில் நடத்திய மாபெரும் நிகழ்வில் பல வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டதை அறிந்த நாம் அந்நிகழ்ச்சியை ஊடறுத்து, ஈழத்துத் தமிழ்ச் சிறுவர்களின் அவலங்களை சடுதியாக அரங்கேற்றி இங்கு கூடியிருந்த வெளிநாட்டு மக்கள்மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இதன் DVD பிரதியை அதில் பங்குபற்றிய ஏராளமானோர்கள் வாங்கிச் சென்றார்கள். அதன்பிரதியை தங்களுக்கு அனுப்புகின்றேன். இதில் பங்குபெற மற்றைய தமிழர்கள் பயத்தில் பின்வாங்கிய போதும் நாம் தூதராலயத்தில் இத்தகைய செயலை அரங்கேற்றினோம். இப்படி வேதனையோடா தமிழழ்ச்சிறுவர்கள் அலங்கோலப்படுகிறார்கள் என்று கண்கலங்கினர் அனைவரும். என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பிரதி மனித உரிமை அமைப்புக்களுக்கும் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வில் விடுத்த வேண்டுகோளின் சாராம்சம்

ஈழத்துத் தமிழ்ச் சிறார்கள் கொல்லப்படுவதையும் மருத்துவ சவதியின்றி அல்லல்படுவதையும் அத்தியாவசியத் தேவைகளில் இருந்து விலக்கப்படுவதையும்>போரின்மூலம் தமிழ்ச் சிறுவர்கள் பாதிக்கப்படுவதையும்> வைத்திய வசதியின்றி அழிவதையும்> தவிர்க்க தாங்கள் நல்லதொரு வழியினை உருவாக்கவும்> அழிவிலிருந்து மீட்ட தமிழ்ச் சிறுவர்களுக்கு ஆரோக்கியமான திடமான ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் உறுதிதருமாறு எமது ஒன்றியத்தின் சிறுவர் சார்பில் பணிவன்புடன் வேண்டுகின்றோம். என்று தொடர்கிறது...

http://arugan.spaces.live.com/blog/cns!2D4751275AC842ED!1269.entry

http://www.youtube.com/watch?v=HS6BP3TGnyo

image

மலரும் (மா) தமிழீழம்!?. - Arugan

image imageமுப்பது வருடத்திற்கும் மேலான எமது போராட்டம் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதனை 2008ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு அனுப்பிய அருகனின் திட்டமும், நடக்கவிருக்கும் போராட்டத்தின் முடிவு பற்றியும் அப்போதே தெளிவுபடுத்தியிருந்த நாவலும்.   

 

 

martedì 16 febbraio 2010

இன்னும் ஈழத்தில் முடியாத வெடிவிபத்துக்கள்

அன்புகனிந்த தமிழீழ உறவுகளே, மனம் வருந்துகின்றோம்.
T.ராம்சிங்கடந்த முப்பது வருடத்தில் நடைபெற்ற போரில் ஒருவர் இறப்பது என்பது வேறு, போர் முடிந்த பின்ர் அதுசார்ந்த சதிகளால் மரணிப்பது என்பது வேறு, இதில் இரண்டாவது தன்மைவாய்ந்து இரு குடும்பத்தில் மரணம் நிகழ்ந்துள்ளது. இதற்கு யார் இந்த மனிதாபிமானமற்ற வேலையினைச் செய்தார்களோ இறைவனுக்கே வெளிச்சம். இதில் ஒரு குடும்பத்தில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. எனவே அவர்களுடைய முழுத்தகவல்களும் இங்கு காட்டப்படுகின்றது. தமிழ் உறவுகள் அவர்களுக்கு உதவ நினைத்தால் நேரடியாக தாங்களே மனமுவந்து அக்குடும்பத்திற்கு ஆதரவு வழங்கும்படி எமது  இணையம் வினாவிநிற்கின்றது.
 
ஏ.லக்ஷன்Name : T. Ramsing
Father Name : Tharmaruban

Address : 147/16, A.V Road, Arijalai, Jaffna
Age : 12
Mother Name : T. Suki
School Name : Kolumputhurai Hindu School (கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம்)
 
யாழ்ப்பாணம் இலந்தைக்குளம் பிரதேசத்தில் வெடிக்காத நிலையில் இருந்த எறிகணையொன்றை எடுத்து விளையாடியதாகக் கூறப்படும் கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், அது வெடித்ததால் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
 

இந்த சம்பவம் இலந்தைக்குளம் புளியடிச்சந்தி பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையை விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்கள் இந்த பிரதேசத்தில் கிடந்ததாக கூறப்படும் எறிகணையை எடுத்தவேளையிலேயே அது வெடித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அரியாலை ஏ.வி. பாதையைச் சேர்ந்த 9 வயதான ஏ.லக்ஷன், 10 வயதான ஆர்.ராம்சிங் என இனங்காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மேலும்  ஆறு  மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
Ramsing Motherஇவர்களில் மூவர் நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 

sabato 13 febbraio 2010

ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும் - Arugan

2008ல் வெளியான அருகனின் "மலரும் மா தமிழீழம்" என்ற நூலில் இருந்து

ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும்

clip_image001இலங்கையின் வரலாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஏராளம் சான்றுகள் ஏலவே கிடக்கின்றன, இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது வரலாற்றில் மாற்றப்படாமல் இருப்பதற்கு நாம் முயலவேண்டும் இதற்கான படிகளில் இதுவும் ஒன்று.

கிட்டத்தட்ட ஆறு தசாப்தமாக, (1948ல் இருந்து) அண்ணளவாக ஒரு தலைமுறையாக, இலங்கை அரசிடம் இருந்து அந்நாட்டு மக்களில் “சட்டத்துக்கு உட்பட்ட” சமத்துவம் வழங்கப்படாமைக்கான காரணக்குரலாக ஒலித்ததன் விம்பம், இன்று உலகத்துக்கு அம்மக்களின் வதனத்தையே காட்டியுள்ளது.

இதன் பிரதிபலிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு உலகத்தமிழர்களின் ஏக  பிரதிநிதிகளாகனது. இப்பிரதிநிதிகள், இலங்கை அரசுடன் தமிழர்களுக்கான சமவுரிமை கோரி ஆயுதம் ஏந்த நேரிட்டுள்ளது. இதற்குத் தக்கபதிலோ அல்லது வழங்கப்படாத உரிமைகளைக் கொடுக்கவோ மறுக்கும் சிங்கள ஆதிக்கத்துக்குள் பிடிபட்டிருக்கும் அரசானது, இவ்வமைப்பைப் பயங்கரவாதக்கும்பல் என்றும் சிறுவர் துஷ்பிரயோகிகள் என்றும் உலகிற்கு அறிமுகஞ்செய்ய எத்தணித்தது. அதுவே, தமிழர்கள் பக்கமான பார்வையினை உலகத்தின் கண்களுக்குத் திருப்பிய பெரிய விளம்பரமாகும்.

கிட்டத்தட்ட ஒருமுழுத் தலைமுறையினையே ஆட்கொண்டுவிட்டது இப்போராட்டம். அடுத்த தலைமுறைக்கும் இப்போராட்ட நோய் தொடருமாயின், இன்னும் ஏராளம் தமிழர்களின் உயிரைக்குடித்து, உலகத்தமிழர் தொகையில் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு தமிழீழ மக்கள் சனத்தொகையில், தற்போது சாதாரணமாகவே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, முன்பு போல் அதிகமான குழந்தைகளைப் பெறும் நிலமைகள் குறைந்து போய்விட்டது. இரு பிள்ளைகளுக்குமேல் பெறும் காலகட்டம் மாற்றமடைந்துள்ளது. அதற்கு குடும்பச்சூழல், பொருளாதாரம், வயதுமுதிர்ந்த திருமணம் போன்ற பலகாரணிகள் காரணமாகிறது. 

தமிழீழ எல்லையின் அளவோடு ஒப்பிடும் போது இப்போராட்டகால நீடிப்பும், இழக்கப்பட்ட மக்கள் தொகையும், சேதமான பொருட்களும், ஈடுசெய்ய முடியாத மன உழைச்சலும் பன்மடங்கு அதிகம் என்றே சொல்லவேண்டும். இந்த வேளையில் இப்போராட்டத்திற்காக அதாவது, தமிழீழக் கொள்கைக்கென ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் என்று தமது உயிரினை அர்ப்பணித்தது மட்டுமல்லாமல், தமது தனிப்பட்ட ஆசைகள், எதிர்பார்ப்புக்கள், எதிர்காலங்கள் என்பவற்றை மண்ணுக்குள் புதைத்த ஈழமாதாவின் புதல்வர்களை கண்ணீரோடு நினைவுகூருகிறேன்.

எல்லா வளமும் நிறைந்த எமது ஈழத்தில், போர்மட்டுமே நிரந்தரம் போல் குறிப்பாக கடந்த முப்பது வருடமாக கார்மேகம் சூழ்ந்து காணப்படுகிறது.

இன்றைய பொழுதில் தமிழர்கள் எல்லாரும் சரி, தமிழ்மற்றும் தமிழ் சார்ந்த அமைப்புக்களுஞ்சரி புதியதொரு வரலாற்றுக்கட்டத்தில் அமுக்கப்பட்டுள்ளோம் என்பதனை வாழ்க்கையின் பாதை காட்டிச்செல்கிறது.

1917ம் ஆண்டுகளில் சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் சிங்களவருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதன் பிரதிபலிப்பே, இன்றைய இலங்கைச் சட்டவமைப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. ஆணால் தமிழர்களின் துர்ரதிஷ்டம் இலங்கை, சிங்களவரின் பிடிக்குள்ளும்,  ஆரம்பத்தமிழர்கள் பதவிகளின் மற்றும் பட்டங்களின் பிடிக்குள்ளும் மட்டும் சிக்குண்டமை.

அப்போதிருந்தே, தமிழர்களுக்கும், சிங்களவருக்கும் என்ற பிரிவு காட்டப்பட்டிருந்தால் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளைப்போல் காணப்பட்டிருக்கும். மாறாக முன்னுள்ளவரின் எண்ணம் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதில் இருந்தமையால் சிறுபான்மையாக இருந்த மக்களின் உரிமைகளை பிற்காலத்தில் சிங்களவர்கள் மறுத்து ஒதுக்குவார்கள் என்று நினைக்கவில்லை.

எனினும் ஆரம்பச்சட்டம், தமிழ் அரசியல் கட்சிகூட அரசாங்கத்தை அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததையிட்டுச் சாதுர்யமாகச் சட்டத்தை, சிங்களவர் மாற்றியமைக்கும் போதுகூட தமிழர்கள் அமைதிகாட்டியதன் காரணமே இன்றைய இச் சூழ்நிலை.

ஏற்கனவே கரும்புலிகளின் இரும்பொலிகள் என்ற ஆக்கத்தினுடன் பகிர்ந்து கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன் “மொழி ரீதியிலும், இனரீதியிலும் சிங்களவர் காட்டிய வேற்றுமைகள், இன்றைய கரும்புலிகளைத் தோற்றுவிக்கச் செய்தது. மூன்று பெரும் பிரிவுகளாக ஆரம்பகாலத்தில் இருந்த இலங்கையின் ஆளும் அரசுரிமை பெரும் பகுதி தமிழருக்கே உரியதும், தமிழர்களே ஆண்டு வந்ததும் மறைக்கப்பட்ட உண்மைகள்.
பிரித்தானியரின் மீழுகையின் போதாவது, இரு அரசுகளாக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். அப்பேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்திய பிரித்தானியா இப்போது கூட இதில் சிரத்தை காட்டாமல் இருப்பது சினத்திற்குரியதே.
ஆதிக்க வல்லரசின் அதிருப்தியான முடிவு, இன்று ஏராளம் எம்முயிரினை இழந்து வேதனைப்பட்டும், மரணத்தறுவாயில் சொந்தங்களைப் பார்க்கப் பொறுக்காமல் பலியாகும் மக்கள் புலி வீரராயும், புலிவீரர் புடம் போடப்பட்டுத் தரையில் கரும்புலி வீரரெனவும், கடலில் கடற் கரும்புலி வீரர் என்றும் பலம் பெற்றுத் தனக்கெனத் தாபிக்கத் துடிக்கும், தாய் மண்ணை மீட்கத் துடிக்கும், தாகத்தவர்களானதுதான் நடைமுறையில் கண்டுவிட்ட நிஜங்கள்.
வரலாறு கடந்து விட்டபோதிலும், கடந்த காலங்களைப்பார்த்தால், அங்கும் தமிழர்களுக்கிருக்கும் சாதகத்தினை தட்டிப்பறித்துக் கொண்டே இருந்தனர் சிங்களவர்.
1978ற்கு முன்னர் இருந்த தேர்தல் முறையினால் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனத் திட்டமறப்புரிந்து கொண்ட பெரும் பாண்மை சிங்களவர் அங்கும் தமக்குச் சாதகமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தினர்.
அதாவது, 1977 பொதுத் தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி.8 வேட்பாளர்களைப் பெற்றிருந்தது மொத்த வாக்குகளில் 29.7வீதத்தையும்,ஐக்கிய தேசியக்கட்சி 140 வேட்பாளர்களைப் பெற்றபோது,50.9வாக்குகளும் பெற்றிருந்தது. இதில் முக்கிய விடையம் என்னவென்றால் 6.4வீதமான வாக்குகளைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு 18 வேட்பாளர்களைக் கொண்ட காரணத்தால் எதிர்க் கட்சியாகுந் தகுதி கிடைக்கப் பெற்றது. இந்த நிலையினைக் கண்டு திடம் இழந்த சிங்களவர் அவசர அவசரமாக வீதாசார முறையைக்கையாளச் சட்டத்தை அமுல்ப்படுத்தி தமிழர்களுக்கு இருக்கும் சாதகமான சட்டத்தையே சாய்த்துவிட்டனர் இனி எந்தக் காரணத்தை வைத்துக் கொண்டும் தமிழர்கள் தலைநிமிர மாட்டார்கள் என்று இருந்தபோதுதான் தமிழர்களின் தனிப் பெரும் பிரதிநிதி தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதனை கரும்புலிகள் மூலம் உலகறியச் செய்தனர் தமிழர்.”

இப்போது இருக்கும் தமிழ் அரசியல்க் கட்சிகளும் த.ஈ.வி.பு இலங்கை அரசின், அரசியல்லாட்டத்தை தற்போதைய அரசாங்கத்துடன் இணந்து செய்யாவிடின் இலங்கையின் நிலை அதோகதிதான்! மட்டுமல்லாமல், தமிழர்களின் சுதந்திரம் தமிழர்களாலே நசுக்கப்பட்டுத் திண்டாடும் என்பதும் நிஜம்.

தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு முக்கிய ஆலோசனை ஒன்றை சொல்லமுனைகின்றேன், இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தொகையினை சற்றுக் கவனிக்கவேண்டும். இது அரசிற்கும், இலங்கை அரசியல் கட்சிகளுக்கும்தான். அதாவது, ஒவ்வொரு முறை நடைபெறும் வாக்கெடுப்புக்களில் புலம் பெயர்ந்தவர்களை கைவிடுவதால் ஏராளம் வாக்குககளை இழந்து விடுகிறார்கள். இதனால் இங்குள்ள தமிழர்களை இலங்கை அரசும், தமிழீழ விடுதலை புலிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் எம்பிக்களும், தமிழ் மந்திரிகளும் கைவிட்டுவிடுகின்றனர். மாறாக இங்குள்ளவர்களுக்கும் எப்போது வாக்கெடுப்பு நடைபெறுகிறதோ அப்போது இங்குள்ளவர்களுக்கும் பூரண உரிமைகள் கிடைக்க வாய்ப்புண்டு. 

“தமிழீழம்” என்றொரு சுயநிர்ணயப்பிரகண்டணம் செய்யப்படுமாயின், ஆகக்குறைந்த 10 வருடங்கள் தேவை தமிழீழத்தை அரசியல், பொருளாதார, நிதி, அபிவிருத்திக் சட்டக்கட்டமைப்புக்குள் கொண்டுவருவது என்பது சாதாரண மக்களால் உணரமுடியாததொன்று. இப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்திலும் திறம்பட இருக்கிறார்கள், அவர்கள் இப்போதிருந்தே தனிஆட்சிதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளும் சொல்லுவார்களேயானால் அது அவர்களுடைய அரசியல் சதுரங்கத்தைக் குறைத்து விடும். இவை பலமான அத்திவாரம் மட்டுமே.

இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் எந்த அரசியல் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கவில்லை, எந்த ஆவணங்களும் உலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இல்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்த உறுப்பினரும் தமிழீழ கடவுச் சீட்டுடன் உலகத்தை வலம் வருவதில்லை, எந்த அரசியல் அதிகாரிகளுக்குமாக ஓய்வூதியப் பணம் ஒதுக்கவில்லை, தம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், தமக்கும் பாதுகாப்பைத் தேடியுள்ளார்களே யொழிய வேறில்லை. இதுவல்ல அரசாங்கம்!. இதுவே இலங்கை அரசியல் வாதிகளின் வெற்றிப்பிடிகள். இதில் தமிழ் அரசியல் வாதிகளின் குளிர்காயல்.

அரசிற்கு நிதி மட்டும் போதாது ஆட்சிநடாத்துவதற்கு உலக அங்கிகாரம் வெளியுலகப்போக்கு, உலகரீதியிலான அரசியல் மற்றங்களும் பிரச்சனைக்கான தீர்வுகளும், நாடுகளின் நல்லுறவுகள், சிங்கள அரசுடன் ஒத்துப்போதல், ஆவண இயந்திரங்கள் போன்று பல்வேறு விடையங்கள் அவசியம்.

முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதன் மூலம் தமிழீழத்தை, இலங்கை அரசு போல் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  

இதற்கு...
எமது தமிழ் அமைப்புக்கள் முட்டைக்குள் கோட்டைகட்டிப்பழகியவர்கள். இன்று ஒரு குடும்ப வாழ்க்கையே நாடு விட்டு உலகு என்று மாறும் போது நம்மவர்கள் மட்டும் கிணற்றுத்தவளைபோல் திட்டமிட்டால் தகாது. எம்மைச் சுற்றியே போராட்டம், எம்மைச்சுற்றியே விமர்சனமும் விளக்மும், எம்மைச்சுற்றியே சர்ச்சைகளும் எதிர்ப்புக்களும், எம்மைச்சுற்றியே பாராட்டுக்கள். என்ன திட்டம் இது?

முட்டையை உடைத்துக்கொண்டு காலத்திற்கு ஏற்ப பறக்க வேண்டாமா?

“அடிதடி 14”
நாம் என்ன செய்ய வேண்டும்

இலங்கை அரசிடம் இருந்து, தமிழர்களுக்குக் கிடைக்காத உரிமைகளிற் சிலவற்றை உலகு அறியும் வகையில், இங்கு விபரிக்க முனைகிறேன்.

இப்போதெல்லாம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே போசிறது. எனினும் வாசிப்புத்தன்மையுடையோர் இன்னும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்த போதிலும் இலங்கையின் இணையத்தள நுளைவாயிலைத் திறக்கும் போது அங்கோ மும்மொழிப் பிரயோகம் இருக்கும் என்று என்னி, தமிழுக்கு தக்க நிலையினை அரசு கொடுக்கிறது என்று எண்ணிக் கொண்டு அப்பக்கத்தினைத் திறந்தேன்... தலைப்புக்களைத்தவிர மற்றையதெல்லாம் ஆங்கிலத்திலும் பெரும்பாலும் சிங்களத்திலுமே காணப்பட்டது. மூக்குடைந்து கீழே விழுந்தது போல் இருந்தது. மனதைச் சமாதானப்படுத்திப் பார்த்து தமிழ் அமைப்புக்களின் இணையத்தைத் திறந்து பார்த்தேன் தலையே உடைந்து விழுந்தது. காரணம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் காணப்பட்டன.      

எல்லா மொழிக்காரரும் தமது மொழியினை மேன்படுத்த முற்படுகின்றனர் ஆனால் தமக்குள் அது பற்றி பறைசாற்றுவதில்லை உதாரணம் மொறோக்கோ இனத்தவர், ஆனால் தமிழர்களோ தமக்குள் தமது மொழியைப் பற்றி பலமாகப் பறைசாற்றுவர் பிறநாட்டவரிடத்திலுஞ்சரி பிற மொழிக்காரரிடத்திலும் ஒதுங்கிச் செல்கின்றனர்.

இணயத்தளத்தைப்பற்றியே மேலும் முறையிட விரும்புகிறேன். அதாவது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் பல்வேறு பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்கள் எதனைப் பார்ப்பதென்றே புரியவில்லை யாருடைய தகவல் உண்மை என்று உணர முடிவதில்லை. சிறிது காலத்தின் பின்னர்   தொடங்கப்படுகின்ற இணையத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது படிப்படியாகக் குறைந்து பின்நிலைக்குச் சென்று விடுகிறது. ஒளி,ஒலி பரப்புக்களும் அவ்வாறே அமைகின்றன இவையெல்லாம் எமது ஆளுமைப்பின்னடைவையே காட்டுகிறது. இதற்கும் ஆழுமைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்க வேண்டாம் நிறையவே இருக்கிறது ஆழமாகவே கிடக்கிறது. அதாவது இலாப நோக்கத்தை முதலில் நிறுத்தி மக்களின் நன்மையினைக் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அரசு அமைக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அரச சேவைகளும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, இவையனைத்தும் முதலில் ஒரு கட்டமைப்பிற்குள் வரவேண்டும் அதனுள் எத்தனை பிரிவுகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அது தொடர்புச் சாதனமாக இருந்தாலுஞ்சரி, இணையத்தளமாக இருந்தாலுஞ்சரி, அமைப்பாக இருந்தாலுஞ்சரி, ஏன் அரசாக இருந்தாலுஞ்சரி.

இதில் யாரிடம் மக்கள் தொடர்பு மற்றும் சேவைஎண்ணம் மேலும் மக்கள் நலம் புதைந்து கிடக்கிறதோ அவற்றைத் தேடி அதிகாரப் பலமுள்ளோர், ஆயுதப்பலமுள்ளோர், பணபலமுள்ளோர் மட்டுமல்லாது ஆட்சிப்பலமுள்ளோர் கூட கைகோத்துக்கொண்டால் தப்பென்ன இருக்கிநது. இதில் மானப்பிரச்சினைக்கு இடமில்லை தந்திரத்திற்குத்தான் இடம்.

இவைபோன்று விடையங்களையும் அரச பீடத்தில் அமர்வோர் முதலில் சீர்செய்தால் தான் ஆட்சி மக்களைச் சென்றடையக்கூடியதாக இருக்கும் இல்லா விட்டால் மக்களுக்குச் சேரவேண்டியவை அனைத்தும் ஒருசில அதிகாரிகளிடம் புதைக்கப்பட்டுவிடுமல்லவா?     

ஈழத்hதின் பாதை திறக்கிறது…
17 ம் திகதி இரண்டாம் மாதம் 2008ம் ஆண்டு நல்லதொரு பாடத்தினை விடுதலைப்பொராட்டத்திற்குக் காட்டியுள்ளது. அதாவது, முழளழஎழ  தனது தனிநாட்டுப்பிரகண்டனத்தைபலம் பொருந்திய நாடுகளின் பின்னணைவுடன்  வெளிக்காட்டியது. இதில் தமிழர்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அலங்கை அரசிற்க்கும் நல்ல தொரு பட்டப்படிப்பை  கொடுக்கத்தவறவில்லை.
எனினும் நாம் ஒன்றைக்கவனத்தில் கொள்ளவேண்டும், அவ்வமைப்புக்கள் உலகரீதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்குள் இடம்பெறவில்லை. மேலும் அங்கு உலகப்படையின் ஈடுபாடு இருந்து வந்தது என்பது குறிப்பரிடத்தக்கது, இது தொடர்பாக மேலும் தொடரசந்தர்ப்பம் கிடைக்கும்…
எமது தாயகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது விடுதலைப்போராட்டமா அல்லது  தீவிரவாதமா என்ற கோள்விக்கு முதலில் விடைகாணவேண்டும். இந்த விடையம்பற்றி எனது ஒவ்வொரு ஆக்கத்திலும் தெளிவுபடுத்திக் கொண்டே வருகின்றேன்.
விடுதலைப்போராட்டம் என்றால் அதற்காகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடைய செயற்பாட்டை பயங்கரவாத செயல் என்னும் பட்டியலில் இருந்து களையவேண்டும்.அது உலக அளவில் இடம்பெறவேண்டும். முக்கியம் அமேரிக்காவின் பார்வை கூர்மையாக ஈழத்தை தொடவேண்டும்.
பயங்கரவாதம் என்றால்  எப்போதுமே தீர்க்க முடியாத அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கநேரிடும் அதாவது இலங்கை அரசிடம் மட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபடுகின்ற பலம் பொருந்திய அமைப்பிடமும் தான்.
புதியதொரு நாட்டுப் பிரகண்டனத்தை ஐ.ந ஏற்றுக்கொள்ளுமாயின் ஈழநாட்டுப்பிரகண்டனத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஆனால் எப்போது?, எப்போது அங்கிகாரம் உலகநாடுகளிடம் இருந்து “விடுதலைப் புலிகளுக்குக்” கிடைக்கிறதோ அதன்பின்னர் அவர்களுடைய செயற்பாடு எவ்வாறு மாற்றப்படுகிறது என்னதனைப்பொறுத்த நிர்ணயிக்கப்படும்.
எங்களுடைய மக்களின் எண்ணத்தில், தமிழீழ வி.பு. மிகப்பலம் பொருந்தியவர்கள் என்ற எண்ணம் பதிந்துள்ளது, அவர்களால் தற்போதே ஈழம் ஆளப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்ற கருத்தும் பலமாகவே இருக்கிறது. ஆனால் ஒருவிடையத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தமிழீழ வி.பு. ஆட்சிஎன்பது தமிழர்களிடம் இருந்து பெறப்படும் தொகையில் இருந்தும் பல்வேறு இலாபகரமான தொழிற்பாட்டில் இருந்தும் பல்வேறு சேவை அமைப்புக்களிடம் இருந்தும் தமது தேவைகளைப் ப+ர்த்தி செய்கின்றனர். எனினும், ஒரு அரசு பெற்றுக்கொள்ளும் வரிவீதம் இவர்களுடைய வரிவீதத்தை தனிமைப்படுத்திக்காட்டுகிறது.
மேலும், உலகளவில் இருப்போர் தேவைப்படும் நேரங்களில் ஸ்தம்பித்து நிற்பதும், எமது ஈழவிடுதலைக்கு தடைக்கற்களாக அமைகிறது. பொதுவாக எமது மக்களின் பழக்கம் எதுவென்றால், தமது பெருமைகளையும் சிறப்பென்று அவர்கள் கருதுவதையும் தமக்குள்ளே பெருமைப்படுத்திக்கொண்டே இருப்பது. வெளியுலகிற்கோ அல்லது பிற மொழியினத்தவருக்கோ தெரிவிப்பதில் பின்னடைவது. இன்னொரு வகையில் சொல்லப் போனால், இத்தாலி தேசத்தை எடுத்துக்காட்டுகிறேன். இங்கு “மொறோக்கோ” நாட்டவர் தமது மொழியினையும் தமது தேசத்தவரையும் உலகளவில் உயர்த்துவதில் பின்தங்கியதில்லை. இத்தாலியின் சட்டங்கள் இத்தாலிமொழியில் வெளியிடுவதுபோல் அவர்கள் மொழியிலும் வெளியிடப்படுகிறது. இதற்கு அவர்களுடைய மக்கள் தொகை ஒருகாரணமாக இருந்தாலும் முயற்சியும் தம்மைப் பெருமைப்படுத்தும் தன்மையுமே முன்னிற்கிறது. மாறாக எம்மவர் மத்தியில் இச்செயற்பாடு மாறுபட்டுக்காணப்படுகிறது. துமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதில் பெருமைப்படுகின்றார்களேயொழிய தமிழ் மொழி தெரியாது என்பதில் சிறுமைப்படுவதில்லை. மொழி மட்டுமே எம்மை பிரித்துக்காட்டக்கூடியது. எமது போராட்டத்தின் வெற்றி தமிழின் விரிவு படுத்தலிலே பெரிதும் தங்கியுள்ளது.
இந்த முயற்கியினை எழுத்து முறைமூலம் மட்டும் நான் வினாவவில்லை, செயற்பாட்டு மூலம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனினும், … அதன்பலனை அனுபவிப்போர் தமக்குள்ளே அது பற்றி பகிர்ந்து கொள்வதனைத் தவிர்த்துக் கொள்கின்றனர்.
த.வி.பு. தமது செயற்பாட்டில் ஒருசில உலகளவிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் உலகம் தனது பார்வையினை அவர்கள் பக்கம் திருப்பவேண்டும் அதற்கு இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தத்தேவையில்லை. என்ன செய்யவேண்டும் என்பதனை அடுத்த வரிகள் தெளிவுபடுத்தும்.
இதோ ஒரு சிறு கதை
ஒரு தேசத்திற்காக அம்மக்கள் கூட்டம் சேர்ந்து போராட்டத்திற்கு என்று அமைப்பினை உருவாக்கினர். அவ்வமைப்பும் அந்நாட்டை ஆளும் கொடியவருக்கு எதிராகத் தம்மை இழந்து போராடினர்.
பலவருடங்களாகப் போராடினர்…
உடமைகளை இழந்து போராடினர்…
உறவுகளை இழந்து போராடினர்…
உயிரினையும் இழந்து போராடினர்… முடிவு வருவதாய்த் தெரியவில்லை, அவ்வமைப்பும் பலம்பொருந்திய அரசுடன் போராடக்கூடிய அளவிற்கு வளர்ந்து விட்டது, உலகில் ஆங்காங்கே அமைப்புகளை உருவாக்கி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஊடுருவிச் சென்றது…
விடிவு வரவில்லை…
ஆரம்ப காலத்தில் ஆழும் அரசிடம் இருந்த கிடைக்காத உரிமைகளை உடைத்தெறிவதற்காக தலைமுறை தலைமுறையாக தம்மை அடைவுவைத்தனர். இப்போது ஆரம்பத்தில் இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டது. தம்மால் உருவாக்கிய அமைப்பிடம் இருந்து தம்மை விடுவிக்கத் தடயந்தேடினர், அவ்வமைப்பு பலத்திலும் பணத்திலும் பதவியிலும் பட்டத்திலும் மிதந்து கொண்டிருந்தது. மக்களோ அகதிகளாயினர் அநாதைகளாயினர் ஆதரவற்றனர்…
பணபலத்தைக் கொண்டு இவ்வமைப்பு தம்மைத் திடப்படுத்தத் தொடங்கி மிகப்பெரிய வல்லரசிடம் இருந்து உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தீவொன்றை விலைகொடுத்து வாங்கினர்
அத் தீவினை ஒரு சிற்றரசாக்கினர் அதனை தமது ஆட்சிப்பரப்பாகப் பிரகண்டனப் படுத்தினர் தம்முடைய புதிய தேசத்திற்காக அவ்வமைப்பின் தலைமைப்பீடம் தன்னுடைய சந்ததிக்காக ஒரு பிரகண்டனத்தையே ஏற்படுத்தியத.
இப்போது முன்னைய போராட்ட மக்கள் இன்னும் அவ்வமைப்பினை நம்பிக் கொண்டிருக்கின்றனர் அப்பாவிகள் வெளியுலகநடப்புத் தெரியாமல் அவ்வமைப்பினை பூஜிக்கின்றனர்.
முன்னைய காலத்தில் விஜயன் எவ்வாறு இலங்கையில் தன்னுடைய தோழர்கள் 700 பேருடன் வந்தடைந்தானோ அவ்வாறு இவ்வமைப்பும் 5000பேருடன் இத்தீவில் குடிபுகுந்தனர். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை, அவர்களுக்கென்று ஒருதேசம், அவர்களுக்கென்று ஒரு சட்டம், அவர்களுக்கென்று ஒரு சரித்திரம்.
ஏமாந்த மக்களுக்குத் தெரியும் போது இப்படித் தூபங்காட்டினர்,“ அங்கிருந்துதான் எமது படையினைத் தயாரித்து உங்களுக்கு விடுதலை அளிக்கப்போகிறோம்”
மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள்தான் உனமாகிவிட்டார்களே!!!
இம்மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணங்கள் தம்முடைய புதிய தேசத்திற்கு வருமானமகியது, இம்மக்களுக்கு தண்டணை வழங்குவதாகச் சொல்லி புதிய நாட்டின் புனரமைப்பிற்கு பணயக்கைதிகளாயினர்.
உலகநாடுகளில் புலம் பெயர்ந்த தம்முடைய அப்பாவி மக்களிடம் இருந்து தண்டப்பணம், அப்பணத்தின்மூலம் ஆங்காங்கே பல்வேறு தொழிலகங்கள், சேவை அமைப்புக்கள் என்ற பேரில் நிதிமையங்கள், ஆயுதத்தால் மக்களின் வாய்களுக்குப் பூட்டு, …
இவ்வாறு அவ்வமைப்பு விழுது விட்ட ஆலமரமாகியது அழிக்கமுடியாத ஆணிவேராகியது.
தமக்காகப் போராடிய விரர்களை அப்பாவி மக்கள் இன்னும் பூஜிக்கிறார்கள்… இது வெறும் கற்பனையல்ல பலமுள்ள அரசுகள் காலத்தை இப்படியும் மாற்றக்கூடும். (உதாரணம் கிட்லர் வரலாறு)
இது இப்படிஇருக்க “சே” என்றொரு மனிததெய்வம் நினைவிற்கு வருகிறது…
அடிமைத் தனத்திலிருக்கும் மக்களின் விடுதலைக்காக தனது உயிரைப் பணயம்வைத்து  “கூபா” தேசத்தின் காரணகர்த்தாவாகியது…
அதன் விம்பம் இன்றுவரை  “பிடெல் காஸ்றோவை” உலக கட்டுமாணத்திற்கு மாறாக நிரந்தர முதலமைச்சராக்கியது. இப்போது அவருடைய சகோதரர்…
இங்கு ஐ.நா. சபையின் விம்பத்தைப் பிரதிபலிக்க முனைகிறேன்.
தமிழர்களுடைய போhரட்டத்தின்  வெளிப்பாடு தெரிவதிலும் பார்க்க, உலகிற்கு தமிழர்களுடைய உரிமைப்பின்னடைவு தெரிய வேண்டும்  அதற்காகத்தான் இது போன்ற ஆக்கங்கள் …

இலங்கை அரசு தொடர்புடைய தமிழர்கள், இனி அக்கறையுடன் செயற்படவேண்டும். அரசால் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் தமிழிலும் இருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்கான பொறுப்பு அரசுடையதல்ல, அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்களுடையதே!  இதுதொடர்பாக மேலும் பலவிடையங்கள் தொடர்கின்றன… 

திட்டமிட்ட வரலாற்றுச்சிதைவு - Arugan

2008ல் வெளியான அருகனின் "மலரும் மா தமிழீழம்" என்ற நூலில் இருந்து

“அடிதடி 12”
திட்டமிட்ட வரலாற்றுச்சிதைவு

clip_image002பிந்திய வரலாறுகள்: தமிழ் அரசர்கள் யாழ்ப்பாணத்து அரசர்கள் இலங்கை அரசர்கள் என்று பார்க்கும் போது, இந்தியாவின் பங்களிப்பு தற்போதண்றி ஆரம்ப காலத்தில் இருந்தே பிரிக்கமுடியாததாக இருக்கிறது.

விஜயனின் வருகைக்கு முன் ஒரு பாரியச் சிதைவொன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. அச் சிதைவினால் இலங்கைப் பழங்குடி தமிழர்களின் அடியான நாகர், இயக்கர், கின்னரர் போன்றோர் சிதைவடைந்தும் சிறு அளவிலும் குறைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் தொகையில் சிறுமைப்பட்டிருந்த பழங்குடியினர் பெரும்பாலானோருடைய தாக்கத்திற்கு முகங் கொடுக்கமுடியாது அவர்கள் வரலாறு புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது, அச்சமுகத்தில் இருந்து விலகியிருக்கப்பட்டிருக்க வேண்டும்.

சிங்களம்

2008ல் வெளியான அருகனின் "மலரும் மா தமிழீழம்" என்ற நூலில் இருந்து

சிங்களம்

Thiravidarஇம்மொழியானது தற்போது இலங்கையில் மட்டும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் தனிமொழியாகும் எனினும் இதன் அடிப்படை ஆரிய, பாழி மொழிகளுடன் தமிழ்மொழியின் ஒரு சில இணைப்புக்களும் இணைந்ததாகும். சமயம் என்ற ரீதியில் புத்த சமயத்தைப் பார்க்கும் போது மட்டுமே, பௌத்தம் இலங்கை தவிர்ந்த ஏனைய பிரதேசத்திலும் காணப்படுகிறது. இதில் பௌத்தசமயத்திற்கும், சிங்கள மொழிக்கும் முடிச்சுப்போடமுடியாது. சிங்களவர் பௌத்தத்தைத்தழுவிக் கொண்டார்கள் அவ்வளவுதான்.

venerdì 12 febbraio 2010

இலங்கை அரசும், மகிந்த குடும்பத்தினரும் சிங்கள இனவாதிகளும் இணைந்து சர்வதேசத்தின் விழிகளில் “கூளிங்கிளாஸ்” போடப்பார்க்கின்றனர்.-அருகன்

mrsf-300_1

தலைவரின் முற்போக்குச் சிந்தனையினை தப்பாக விழங்கிக் கொண்ட எமது தலைமைத்துவங்கள் இளையோரையும், முதியோரையும் சுயமாகச் செயற்படவிடுவதில்லை!!!

தமிழ் அமைப்புக்களுக்கும், தமிழ் போராட்ட ஆர்வலர்களுக்கும் ஒரு எச்சரிக்கை!!! –

இலங்கை அரசும், மகிந்த குடும்பத்தினரும் சிங்கள இனவாதிகளும் இணைந்து சர்வதேசத்தின் விழிகளில் “கூளிங்கிளாஸ்” போடப்பார்க்கின்றனர்.

சிறுபான்மை இனத்தின் சிக்கலை ஒரு பொருட்டாக எடுக்காது, உள்ளாட்டுச்சிக்கலை (மகிந்த-சரத்)பிரபல்யப்படுத்தி அதனை அரசியலாகவும், போர்க்குற்ற; திசைதிருப்பல்களும் இடம்பெற்று வருகின்றமை மறைவாகஉள்ளஉண்மைகள்.

தமிழ் ஊடகங்களும் தமிழர்களின் சிக்கலை விட்டு, தமிழர்களின் அபிவிருத்தி, மீழ்கட்டுமாணம் போன்றவற்றை விடுத்து, சரத்தின் விவகாரத்தை தூக்கிப்பிடித்து ஒரு செய்தியில் பலதடவை சரத்… சரத் என்று முணுமுணுத்து தமிழர்களின் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கின்றனர். இதன்மூலம்மகந்தவையும் அவர் அரசையும்கீழ்ப்படுத்துpன்றோம் என்ற பாணியில் சரததை தமிழர்க் மததியில் உயர்த்திக்கொணடு போகின்றோம்.

இது அரசின், அரசியல் தந்திரம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எப்போதும் தமிழர்களை ஒன்றிணைய விடாது, தமிழர்கள் சிங்களவர்களை தாங்கியே இருக்க வேண்டும் என்பதனையே கடந்த காலத்தில் கூட்டமைப்பும் உறுதி செய்திருக்கின்றது. மேலும் வாசிக்க »

தலைவரின் முற்போக்குச் சிந்தனையினை தப்பாக விழங்கிக் கொண்ட எமது தலைமைத்துவங்கள் இளையோரையும், முதியோரையும் சுயமாகச் செயற்படவிடுவதில்லை!!!

தமிழ் அமைப்புக்களுக்கும், தமிழ் போராட்ட ஆர்வலர்களுக்கும் ஒரு எச்சரிக்கை!!! – அருகன்

vp1228_thumb இலங்கை அரசும், மகிந்த குடும்பத்தினரும் சிங்கள இனவாதிகளும் இணைந்து சர்வதேசத்தின் விழிகளில் "கூளிங்கிளாஸ்" போடப்பார்க்கின்றனர்.

சிறுபான்மை இனத்தின் சிக்கலை ஒரு பொருட்டாக எடுக்காது, உள்ளாட்டுச்சிக்கலை (மகிந்த-சரத்)பிரபல்யப்படுத்தி அதனை அரசியலாகவும், போர்க்குற்ற; திசைதிருப்பல்களும் இடம்பெற்று வருகின்றமை மறைவாகஉள்ளஉண்மைகள்.

தமிழ் ஊடகங்களும் தமிழர்களின் சிக்கலை விட்டு, தமிழர்களின் அபிவிருத்தி, மீழ்கட்டுமாணம் போன்றவற்றை விடுத்து, சரத்தின் விவகாரத்தை தூக்கிப்பிடித்து ஒரு செய்தியில் பலதடவை சரத்… சரத் என்று முணுமுணுத்து தமிழர்களின் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கின்றனர். இதன்மூலம்மகந்தவையும் அவர் அரசையும்கீழ்ப்படுத்துpன்றோம் என்ற பாணியில் சரததை தமிழர்க் மததியில் உயர்த்திக்கொணடு போகின்றோம்.

இது அரசின், அரசியல் தந்திரம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எப்போதும் தமிழர்களை ஒன்றிணைய விடாது, தமிழர்கள் சிங்களவர்களை தாங்கியே இருக்க வேண்டும் என்பதனையே கடந்த காலத்தில் கூட்டமைப்பும் உறுதி செய்திருக்கின்றது.

இது தன்னந்தனியாக போராடிய எமது தலைவரின் கொள்கைக்கும் அவருடைய வீரத்திற்கும், இத்தனை வருட தியாக அர்ப்பணிப்பிற்கும் இழிவை ஏற்படுத்துகின்றது.

தலைவர் பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல, தப்பான ஜனநாயகத்திற்கே எதிரானவர். நம்பகத்தனமற்ற பேச்சுக்களையே நிராகரித்து வந்தவர்… நியாயமான உறுதியான தீர்வு கிடைக்கும் பட்ஷத்திலேயே தமது அமைப்பைக் கலைப்பதாக அமைப்பின் ஆரம்பத்தில் எடுத்த வாக்குறுதியென்பதனை மக்களும் அமைப்பாளர்களும் மறந்து விடக்கூடாது.

இன்றைய இலங்கை அரசும் ரசிய் வாதிகளும் மிகத்தந்திரமான முறையில் காய்களை நகர்த்தி, தமிழீழப் போராட்டத்தையே நாடுகடத்திவிட்டார்.

இதனை அறியாத எமது போராட்ட அமைப்பாளர்களின் தொனியும் தப்பினோம் பிழைத்தோம் என்றும், ஏனோதானோ என்றும் வட்டுக்கோட்டை,  நாடுகடந்த போராட்டம் என்றும் புலம்பெயர்ந்த மக்களை வைத்து போர்வை போர்க்கப்பார்க்கின்றனர். அதற்கு தலைவரை காரணம் காட்டுகின்றனர். “போராட்டம் புலம்பெயர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக” உண்மைதான்!!! ஆனால் அது எவ்வாறு???

30வருட போராட்டத்தின் வேகத்திலும்பார்க்க தற்போதைய போராட்டத்தில் விவேகமும் காணப்படவேண்டும் என்பதே தலைவரின் உட்கருத்து. தலைவரின் முற்போக்குச் சிந்தனையினை தப்பாக விழங்கிக் கொண்ட எமது தலைமைத்துவங்கள் இளையோரையும், முதியோரையும் சுயமாகச் செயற்பட விடாது, முன்பு போல மற்றைய அமைப்புக்களையும் புறந்தள்ளியே ஒவ்வொரு செயற்பாட்டையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வெற்றிகண்டவர்கள் சிங்கள பேரினவாதிகளே!!! அத்துடன் அடிக்கடி எனது எழுத்துக்களின் உறுதிப்படுத்தும் இன்னொரு விடயம் “தமிழர்களின் போராட்டத்தில் உரிமைகளை முழுமையாகவும், தனிநாட்டையும் பெற்றுக்கொண்டவர்கள் முஸ்லீம் மக்களே” இவர்கள் தம்மை போராட்டத்தில் ஈடுபடுத்தாமலும், இழப்புக்களைச் சந்திக்காலலும் தியாகங்களை றே;கொள்ளாமம் தம்மை இலங்கை அரசில் திடப்படுத்துpக்கொண்டனர்.

இலங்கை அரசின் ஆட்சியைத்தீர்மானிப்பது தமிழர்கள் என்ற நிலை போய் முஸ்லீம்மக்கள் போதும் என்ற நிலைமாறிவருகின்றமை தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க பின்டைவென்பதனை அப்போதே தலைவர் திடமாகப்புரிந்தார்.

முஸ்லீம் கட்சி, தலைவரைச் சந்தித்த காலம் போய், தமிழ்க்கட்சிகள் முஸ்லீம் கட்சிகளை கெஞ்சி வால்பிடிக்கும் அளவிற்கு நிலை மாறிவிட்டதனை யாரும் மறுக்க முடியாது. இது பிளவினை ஏற்படுத்தவோ அல்லது போராட்டத்தை தூண்டுவிக்கவோ எழுதப்படவில்லை. மாறாக உண்மையின் தரிசனத்தைப் படம்போட்டுக் காட்டமுனைகின்றேன் அவ்வளவுதான்.

தலைவரின் ஒவ்வொரு பின்னடைவிலும் அவர் உறுதியாகச் சொன்ன வார்த்தைகள் தமிழர்களால் மறக்க முடியாதவை. அதாவது, “இவை தற்காலப் பின்னடைவே” எமது தற்போதைய திடமற்ற தலைவர்களை ஒருமுறை காதுகொடுத்துக் கேட்கச்சொல்கின்றேன்… அந்த காதுகளுக்கிடையில் மெல்லிய தலைவரின் திடமான குரல் ஒலிக்கும். அதனை உற்றுக்கேளுங்கள் அதன்பின்னர் தங்கள் அடிகளை எடுத்துவையுங்கள். தங்கள் தடத்தில் தற்போது சிங்களம் குளிர்காய்கின்றது.

“பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்குச் சீவன் போகுது” என்றில்லாமல் பூனை எப்படித்தான் விளையாடினாலும், பூனையினைக் களைக்கவைத்து காரியத்தை சாதிக்கும் கணனிகற்ற சுண்டெலியாக நாம் மாறவேண்டாமா???

சிங்களம் தம்முடைய குழப்பத்தில் தமிழர்களின் தடத்தையும், திடத்தையும் சர்வதேசத்தின் மத்தியில் குலைக்கனப்பார்க்கின்றனர். அதே குழப்பத்தைப் பயன்படுத்தி, தக்க விதமாக கையாண்டு அதே அரசியல் சாணக்கியத்தால் நாம் இலங்கை அரசை எமது பக்கம் சாய்த்து, சர்வதேசத்தில் எமது பங்களிப்பைக் காத்துக்கொள்ள ஏன் முன்வரக்கூடாது.

இவ்வாறான சந்தர்ப்பம் தொராது... திடீரென எல்லாம் ஓய்ந்து விடும். எமது தலைவர் எவ்வாறு தமிழ் தேசியத்தைக் கட்டியெழுப்பினாரோ அதே வழியைத்தான் மகிந்தவும் செயற்படுத்தி வருகின்றார் என்பதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தலைவரின் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் தலைவர் எவ்வாறு அரசிலை நடத்தினாரோ, அதே பாடத்தைக் கற்றுத்தான் மகிந்தவும் தனது காய்களை நகர்த்துகின்றார்.

காலப்போக்கில் எதிர்க்கட்சிகள் என்ற நிலை மாற்றப்பட்டு, ஒரே "வெத்திலை" கூட்டமைப்பின் பாகமே எதிர்க் கட்சியாக வேண்டும் என்ற அற்ப ஆசையிலேயே தனது அனைத்து காய்களையும் நகர்த்துகின்றார். அதன் அடிப்படையிலேயே முதலில், எதிர்க்கட்சியின் பலவருட யானைச்சின்னத்தை பறக்கும் பட்சியாக்கினார். பட்சி பறந்தே போய்விட்டது!

தற்போது மகிந்தவும் எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து கொள்வார்கள்… அதன்பிறகு அவர்கள் இணைந்து பிரிந்து தமிழர்களைப் பேக்காட்டுவார்கள்… இதில் எமது போராட்டங்களும் தலைவரின் எண்ணங்களும் மண்ணோடு மண்ணாக கரைந்து போய்விடும் என்பதே சிங்கள இனவாதிகளின் எண்ணம்.

தமிழ் அமைப்புக்களும் "வெத்திலை" சின்னத்தில் போட்டியிடுவோர்கள் மட்டும் அமைச்சராகக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். மற்றவர்கள் வெறும் எம்.பி.யாக இருக்க வேண்டியதுதான். காரணம் தற்போதைய அதிபரின் காலம் இன்னும் எட்டு வருடங்கள் நிலைத்திருக்கப் போகின்றது என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஈழப்போராட்டத்தில் எமது தலைவர் எத்தை முக்கியமானவரோ, அதுபோலவே இலங்கை வரலாற்றில் மகிந்த முக்கியமானவராக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணுகின்றார்.

என்ன தலைவர் தமிழர்கள் மத்தியில் சர்வசே அதிகாரமற்ற வழியில் மேற்கொண்ட உள் ஊர் விடயங்களை, மகிந்த சட்ட அங்கிகாரப்பதவியுடன் சர்வதேசத்தினையும் இணைத்து செயற்படுகின்றார். காரணம் அவருக்கிருக்கும் முழு சர்வதேச அதிகாரம் கொண்ட ஆட்சி நிலை.

இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் கொஞ்ச நாட்களின் பின்னர் சரத்திற்கு கிடைக்கப்போகும் அமைச்சுப்பதவிபற்றியும் இப்போதே இதில் எடுத்துக்காட்டுகின்றேன். அப்போது தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் வாயைப்பிளந்து மகிந்தவைப்பார்ப்பார்கள்.

தற்போதைய அமைச்சர் கருணாவை வைத்து சர்வதேசத்திற்கு புலிகளின் நிலையை எடுத்துக்காட்டிய மிக முக்கிய ஆதாரமாக்கியது போல், சரத்தை வைத்துத்தான் தமிழர்களுக் கெதிராகவும், புலிகளுக் கெதிராகவும் நடாத்திய போரில் ஏற்பட்ட குற்றச் செயல்களை இல்லாதொழிக்கப்போகின்றார் இலங்கை அதிபர்.

சாவதேசம் தலையிடும் என்று தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க, சர்வதேசத்தையே ஏங்க வைத்துக் கொண்டிருக்கின்றார் மகிந்த. அதாவது, சரத் தேசத்தையே காட்டிக் கொடுக்க முனைந்ததாக மக்களுக்கு விளக்கம் கொடுத்தாலும், நீதிமன்றத்தில் வேறு விதமாகவே காய்கள் நகர்த்தப்படும்.

அதாவது, மகிந்தவின் உத்தரவின் பேரில் போர் நடந்தாலும் அதனை தவறாக கையாண்டு, போர்குற்றங்களை மேற்கொண்டது சரத் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். அதன் அடிப்படையில் போர்க்குற்ற பேச்சுக்கள் சர்வதேசத்தில் இருந்து அழிந்து விடும்.

அதன்பிறகு தமிழர்கள் எத்தனை குத்தாட்டம் போட்டாலும், எத்தனை ஆதாரத்தை கொணர்ந்தாலும்… ஏன் தலைவரே நேரில்வந்து சொன்னாலும் எடுபடாது. காரணம், அதற்கான தண்டனையினை சரத் ஏற்றுக் கொண்டுவிட்டார். குற்றத்திற்கான தண்டனை முடிந்ததும் அல்லது குறைக்கப்பட்ட காலத்தில் அதாவர், தேசத்தை காப்பதற்கான பெரும் பணியில் ஈடுபட்டதற்காக காலகன்குறைப்பு என்ற அடிப்படையில் வெளிவந்த பின்னர் சரத் விரும்பிய எம்.பி. பதவியல்ல மினிஸ்டர் பதவியே கிடைக்கும்!!! ஏன் பிரதம மநற்திரி பதவிகிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவையெல்லாவற்றையும் புரிந்து கொள்ளாமல் தமிழர்கள் தமது காய்களை தாமே பெருமைப்படுத்திக் கொண்டு நகர்த்திவருகின்றனர். தலைவர் அந்த காலத்தில் பகலில் நடமாடுவதிலும் பார்க்க இரவிலே அதிகம் நடமாடியதற்குக் காரணம், மற்றவரின் தூக்கத்திலேயே எமது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக.

எமது தூக்கத்தில் சிங்களம் விழிதர்துக்கொள்கின்றது. ஆங்காங்கே நிகழ்வுகளை நடாத்திவிட்டு நாம் இன்னும் செயற்படுகின்றோம் என்று மக்களுக்கும் இலங்கை அரசிற்கும் படம் காட்டிக் கொண்டிருக்கின்றோம். சிங்களம் விழித்துக்கொண்டிருந்தாலும் அது இப்போது அன்ன நடைதான் போடுகின்றது… அது வேக நடைக்கு வரும்போது புலத்தின் போராட்டம் முடிவுக்குகொண்டுவா முயற்சியை ஓங்கி அழுத்தும். அப்போது எமது தலைமையை நம்பிய மக்கள் கைவிடப்பட்டுவிடுவார்கள்.

இப்போது நிம்மதியாக சிங்களம் அரசை நடத்திக்கொண்டிருக்கின்றது. காரணம் தமிழர்களின் போராட்டத்தையே நாடுகடத்திவிட்டதால், அதற்கு ஆதாரமே நாடுகடந்த தமிழீழ அரசு. ஏற்கனவே என்னால் குறிப்பிட்ட விடயம் நாடுகடந்த அரசை அமைப்பதற்கு முன்னர், தேர்தலை நடாத்துவதற்கு முன்னர், புலத்தில் இருக்கும் அணைத்து தமிழ், முஸ்லீம், மற்றும் புலம்வெயர் தேசத்தில் பிரஜையாகியுள்ள தமிழர்களின் வாரிசுகள் அனைவருக்கும் ஒரு தேசிய அடையாளம் இருக்க வேண்டும்.

அதனை எவ்வாறு அமைப்ப வேண்டும் என்று மாதிரியைக்கூட வெளியிட்டேன் அதன்பிறகே தேர்தல், அரசு என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். தற்போதைய அமைச்சர்களான கருணா, பிள்ளையான், டக்ளஸ்… போன்றோர் கூட தமிழீழத்திற்கு எதிராக வாக்குப்போடமாட்டார்கள். அனால் அது கிடைக்கும் பட்சத்தில். அனால் இவர்களைபற்றி பேச்சை எடுத்தாலே எமது தலைமை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்ற ஐயப்பாடும் இல்லாமலில்லை!!!

இது இப்படி இருக்க தமிழர்களிடம் தமிழீழத்திற்காக வாக்குக்கேட்பது முறையாகத் தெரியவில்லை. எமக்கு எமத்மை நாமே ஆண்டு கொள்ள ஒரு தேசம் வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை அதனை எவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்தான் சிக்கலிருக்கின்றது.

எனவேதான் முதலில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு தமிழீழ தேசிய அடையாள சான்றிதழ் தேவைப்படுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்

TamilEela Cardநாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அதற்கான அடையாளங்களை நாம் நிர்ணயித்தாக வேண்டாமா???

தவறித்த வறுவது தவறல்ல, தவறியபின் தவறியதே தவறு…

ஏதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஆவணத்துடன், தமிழீழ அரசிற்கான ஆவணத்தைத்தயார்படுத்தியிருக்க வேண்டும். அது “நாடுகடந்த தமிழீழ அரசின் அடையாளச்சான்றிதழ்” என்றொன்று (http://govtamileelam.org/gov/) இணையத்தின் மூலம் முன்கூட்டியே பதியப்பட்டு அது வாக்காளர் பட்டியலாக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இருக்கும் நாட்டில் அங்கிகரிக்கப்பட்ட ஆவணம் அல்லது வேறு அங்கிகரிக்கக்கூடிய ஆவணத்தினூடாக இவற்றை உறுதி செய்தபின்னர்… இச்சான்றுதழ் தற்காலிகமாக வழங்கப்படல் வேண்டும். அதனை தேர்தல் கண்காணிப்பாளர்கள் இனங்காணக்கூடியதாக

Tamil_Eela_Card

அடையாளக்குறியீட்டுடன் Barcod ( TamilEelam -  )உருவாக்கப்படல் வேண்டும். இணையத்தின் மூலம் விண்ணப்பங்களை நிரப்பி விண்ணப்பதாரி (தமிழீழ பிரஜை) பதிலுக்கு இச்சான்றிதழை பெற்றுக்கொள்ளும்படி அமைத்திருக்க வேண்டும.

மாதிரி அடையாளச் சான்றிதழ்

அதன் பின்னரே இத்தேர்தல்கள் நடைபெறல் வரவேற்கத்தக்கது. இலங்கை அரசு மேற்கொண்ட தவறுகளை நாமும் விடலாமா???-   )

2009- 5ம் மாதத்தில் இருந்து மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கை இன்னமும் முற்றுப் பெறவில்லை என்பதிலிருந்தே இதன் பின்னடைவுகள் தெரிகின்றது.

எமது தலைவர் தன் தலைமையி; இதனை மேற்கொள்ள எத்தணித்தால், இதில் அத்தனை திடமும், வைராக்கியமும், வேகமும், அதற்கான முடிவும் தெளிவாகத்தெரிந்திருக்கும்.

மீண்டும் ஒன்றை தெளிவாகப் புரியவேண்டும். தமிழர்களின் அயர்வில் சிங்களம் தனது காய்களை சர்வதேசம் நோக்கி பலமாகப்பதித்து வருகின்றது. –தொடரும்.

martedì 9 febbraio 2010

தீவிர வாதச் சிந்தனைகள் சீர்திருத்தப் படட்டும். - Arugan

Arugan.comபோர்க் கருவிகள் மண்ணுக்குள் புதைக்கப்பட வேண்டிய அத்தியாயம். உலகத்து இராணுவ வீரர்கள் புதிய இராகம் இசைக்கட்டும். அவர்கள் உடுதுணிகள் பூமணம் வீசட்டும். தீவிர வாதச் சிந்தனைகள் சீர்திருத்தப் படட்டும்.

ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட சில வரிகள் இப்போது மீண்டுஞ் ஞாபகத்துக்கு வருகிறது...

 

யார் நடத்திய வேள்வியிது?
வேரோடு வெள்ளம் கொண்ட தாகத்துக்குப் -பல
நூறாயிரம் பேர் மண்ணோடு போராட்;டம்.
இயற்கையின் சமநிலை சீர் கெட்டதோ!!
மரணத்தின் வழியாலே பகிர்வுண்டதோ!!!

ஓ இயற்கையே!!
உன்சீற்றத்தைக் காட்டென்று
யார் கேட்டார்??!!
உன் தோற்றதை காட்டென்று
யார் கேட்டார்??!!
யார் நடத்திய வேள்விக்கு
நாமிங்கு பலியானோம்!!

இத்தோடு உங்கள் போர் கொடிகளை
குளிருக்குப் போர்வை ஆக்குங்கள்.
ஆயுதங்களை விளைநிலத்தில் களை பிடுங்கும்
கருவிகள் ஆக்குங்கள.;
இயற்கையின் அகோரத்திலும் பார்க்க
உங்கள் “பற்று” ஒன்றும் பெரிதல்ல!!!!
ஒரு நொடியில் அழித்துவிடக்கூடிய
அனர்தத்திலும் பார்க்க – உங்கள்
ஆணவ அதிகாரம் ஒன்றும் பெரிதல்ல!!!!

இயற்கையின் சமநிலை பற்றாக் குறைதனை
சீர் செய்யும் அதிகாரம் அதனிடம் உண்டு,
அழிவுக்குக் காரணமான அமைப்புகளுக்கு
இயற்கைவிடும் எச்சரிக்கை தான் இந்த சமிஞ்சை.
போர்க் கொடிகளால் பூமியில்
ஏற்படும் கொதிப்பின் விளைவை
பெருங்கடல் கூட தணித்துக் கொள்ளமுடியவில்லை!!!!
உங்கள் பூஜைகளுங்கூட!!!...
உலகத்தின் ஆதிக்க அதிகார வெறியின் விளைவு
இயற்கையின் அற்ப தும்மலுக்கும் ஒப்பாகாது.
ஆக்கத்தை மட்டும் பொறுப்பெடுங்கள்
அழிவின் பொறுப்பு அனர்தத்திடம் …

“ இதுதானா மில்லெனிய மாற்றம்?”  2004ம் ஆண்டு வெளியிட்ட நாவலில் இருந்து   …

யாருக்காக, யாரிடம் இருந்து தமிழீழம்- அருகன்.

tn_sarath-ltte “ஆத்தில வச்சிட்டு குழத்தில தேடுறமாதிரி” … என்று ஒரு பழமொழி உண்டு, அது போலவே “குளத்துடன் கோவிச்சுக்கொண்டு…” என்று இன்னொன்றும் உண்டு… இது மிகச்சரியாக தமிழர்களுக்குப்பொருந்தும்.

யாரெல்லாம் குற்றவாளியாகத் தேடப்படுகின்றார்களோ?, யாரெல்லாம் தமிழர்களை படுகுழிக்குள் தள்ளுகின்றார்களோ அவர்களை யெல்லாம் தமிழர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளார்கள்.

lunedì 8 febbraio 2010

அருகனின் நாவல்களில் சில!!!!!!!!







புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரிலேயே இலங்கை அரசியல் நடக்கிறது…

LTTE - DEAD_PIRABA புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரிலேயே இலங்கை அரசியல் நடக்கிறது…
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்குக்கிடைக்கவிருந்த தேர்தல் சக்கியை முறியடித்த கூட்டமைப்பினர் இந்தமுறையாவது சரியான சாணக்கியத்துடன் செயற்படுவார்களா என்று பார்க்கலாம்… என்று விட்டுவிட முடியாது. இம்முறை எடுக்கும் முடிவு மிகச்சரியானதாகவும் துல்லியமானதாகவும் எடுக்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும்.
ஊண்மையான நிலை எதுவென்றால் தமிழர்கள் யாருக்கும் தமிழீழம் என்ற ஒரு தேசம் கிடைப்பதிலோ அல்லது தமிழர்கள் நிலையான நிம்மதியான வாழ்வை வழங்க எத்தணிப்பதையோ முற்றாக விரும்பவில்லை என்றே தெரிகின்றது.


ஆரசியல் சாணக்கியம் தெரிந்த எத்தனையோ பேர் இன்னும் உயிருடனும் செயற்பாட்டுடனும் இருக்கத்தான் செய்கின்றனர். அரசியலுக்கு நரைவிழுந்தால் மட்டும் போதாது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புpரபாகரன் போராட்டத்தில் ஈடுபடும் போது அவருக்கு எத்தனை வயது என்பதனை சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்… மட்டுமல்லாது, அவருடைய அரசியல் தொடர்போ அல்லது, இராணுவத்தொடர்போ மிக நெருக்கமாகவும் இருந்ததில்லை என்பதனையும் புரிநஇது கொள்ள வேண்டும்.
எனவே இன்று நடக்கவிருக்கும் தேர்தலை தமிழ் (புலத்திலுஞ்சரி, அகத்திலுஞ்சரி) மக்கள் எவ்வாறு கையாளவேண்டும்???? இதற்கு 2008ல் வெளியிட்ட “மலரும் மா தமிழீழம்” என்ற நாவல் தக்க பதிலைத்தருகின்றது. அதன் ஒரு பகுதி கீழே…


தமிழீழப் போராட்டம் யார் தலைமையிலாயினும் எவ்வாறாயினும் நடக்கட்டும். தமிழர்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற அரசியல் வாதிகள் உதவட்டும். இதில் தமிழ் அரசியல் வாதிகள் தலையிட்டால் நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகக்குறைந்த சாதாரண கோரிக்கைகள். அதனை நிறைவேற்ற முன்வரும் அரசில் அங்கம்வகிக்கும் அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உண்மையில் உதவ முன்வந்தால், இங்குகாட்டப்பட்டுள்ள அஞ்சல் தொடர்புமூலம் மக்களுக்கு உதவமுடியும் என்பதை, இத்தாலியில் வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்புள்ளவன் என்ற வகையில் உறுதிப்படுத்துகிறேன்.

போலித்தமிழ் அமைப்புக்கள், போலித்தமிழ் அமைச்சர்கள் இதற்கு ஒத்துவரமாட்டார்கள். அவர்களுடைய பதவிகள் அடுத்த தெரிவில் சின்னாபின்னமாக்கப்பட்டு, அவ்வமைப்பும் சீர்குலைக்கப்பட வேண்டும். அதற்கு பலம் பொருந்திய விடுதலைப்புலிகள் தலைமை பீடம் ஒத்துளைக்க (முன்னைய பதிப்பு)  வேண்டும்.  துணைக் காரியாலயங்கள் இவ்வாறான செயற்பாட்டினைச் சிந்திக்கக் கூட முடியாது என்பதனை  நன்கு அறிவேன். எனவே, தலைமைப்பீடம் இதற்கு உந்துதல் கொடுத்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் தேவைகளுக்கும் சிரமங்களுக்கும் தீர்வுகாணக்கருத்தெடுக்கவும், இதன் மூலம் ஈழத்தில்  உள்ள மற்றைய உறவுகளுக்கு மேலும் உதவமுடியும் என்பதனையும், தமிழர்களின் தாயகத்தையும் திடப்படுத்தமுடியும் என்பதனையும் உறுதிப்படுத்துகிறேன்.
சிங்கள அரசு பல வரலாற்றூடாக, பெயர்களையெல்லாம் சாதூர்யமாக மாற்றுகிறது. அதாவது, செல் இறுதியில் அசைவினை மாற்றித் தமிழ்ப் பெயரையும், வேற்று மொழிப் பெயரையுங்கூட சிங்கள மொழிப்பெயராக மாற்றிவிடுகின்றனர். வவுனிய, பண்டாராவன்னிய, யாழ்ப்பாணய, என்று… பிரபாகரனின் செயற்பாடு சிறப்பாக இருந்தால், காலப்போக்கில் “பிரபாகரணய” என்று வி.பு.ன் தலைவரைக்கூட சிங்களவராக வரலாற்றில் மாற்றிவிடுவார்களோ? ஏன்று கூட எண்ணத் தோன்றுகிறது.  
இலங்கை அரசு, அரசியல் காய்களை மிகத்திறனாக நகர்த்திவருகிறது, மாகானங்களுக்கு ஜனநாயக தேர்தல் மூலம் முதல் அமைச்சர்களை நிர்ணகித்து, தனது அரசியல் திறனை உலகிற்குக்காட்டி, வி.பு. கட்டுப்பாட்டில் உள்ள பகுதியினை தீவிரவாத நடவடிக்கை என உறுதிப்படுத்த முனைகிறது.

எனவே விரைவில் அரசு, அரச சார்பில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரிகள், வி.பு., உலகச் சமாதான அக்கறையாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றோர் இதில் அக்கறை காட்டவேண்டும் என்று விரும்புகிறேன். விரைவில் இச்சின்னஞ்சிறு தீவு, உலகின் அறிவும் திறமையும் போட்டிபோடும் இடங்களிலெல்லாம் இடம்பெறவேண்டும்.

இதற்கு “மலருமா?”, என்ற வினாவா, அல்லது “மலரும் மா!” என்ற மாபெரும் தமிழீழமாய் மிழிருமா,  அல்லது இருக்கும் வழங்களும் அழிக்கப்பட்டு மேலும் உயிர்கள் இழக்கப்பட்டு சுடுகாடாகுமா?...

காலம் என்றும் எங்கள் கையில் மட்டுமே!...
என்று இந்த நாவல் முடிவடைகின்றமை இன்றும் பொருந்தக்கூடிய தீர்க்க தரிசன நூலாகக்காணப்படுகின்றது. இத்தோடு அந்த நூலின் ஆசிரியரின் பக்கத்தகவலையும் தருகின்றேன்…

என் பக்கங்கள்

பொங்கு மலை எங்கிருந்து பொருமி வந்தாலும்
அங்கெல்லா மெங்கள் தமிழ் மணங் கமழுமையா!

கடந்த கால நடைமுறைகள் எமக்குக் கற்றுத்தந்த பாடம்தான் என்ன? இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வுகள், வெறுங்கனவுகளோ?!... என்று, எண்ணத்தோன்றுகின்றது.

இலங்கையில் தமிழர்களின் உயிர்ச் சேதத்தையோ, வாழ்க்கைச் சிதைவினையோ யாரும் எண்ணிப்பார்த்ததாக இல்லை.

அவரவர் தமது தேவைகளையும், இலாபத்தையும் காத்துக்கொள்வதோடு, தமக்கு முக்காடும் போட்டுக்கொள்கின்றனர்.

இலங்கை அன்னையின் இரத்தக்கறையும், வியர்வைத்துளியும் துடைக்கப்பட வேண்டுமென்றால், இரு பிரிவினரும் ஒரேயொரு கட்டமைப்புக்குள் வந்தாலொழிய பிளவுகள் தீர்க்கப்படப் போவதில்லை.

2003ல் வெளியிடப்பட்ட “அநுபூதி” என்னும் நூலில் குறிப்பிடும் “சாகடிக்கப்படும் சரித்திரம்” என்ற பகுதியில் தமிழரின் வரலாறு பற்றிச் சற்றுச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.

மழுங்கடிக்கப்பட்ட சரித்திரத்தை மீட்டெடுக்கவேண்டிய கடப்பாடு யாருக்குண்டு? அநுப+தித்தனமான எழுத்தாளரை எப்படி இனங்கண்டு கொள்வது? இவையெல்லாம் தொடுக்கப்பட வேண்டிய வினாக்களல்ல செயற்பட வேண்டிய அனர்த்தங்கள்.

2006ல் நின்று பார்க்கும் பொழுது, இலங்கை அரசியல் வாதிகள் அரசியல் அறிவில் அநுபவம் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர் என்பது ஐயமில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளோ தாம்தான் அரசியலை நன்றாய்க் கற்றவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலத்தை அதிகரித்ததும், உலகிற்கு வெளிக்காட்டியதும் சிங்கள இனவாதிகள் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கவ்வளவு உண்மை, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரசியலைக் கற்றுக்கொடுத்த மேதாவிகளும் அவர்களென்பது.

ஆனால், தமிழீழவிடுதலைப்புலிகள் இராணுவ நடவடிக்கையில் அதிகம் பாராட்டக் கூடியவர்களாகவுள்ளார்கள். எனினும், அரசியலில், சிங்கள அரசியல் வாதிகள் தற்போது மாமேதைகளாகிவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் அரசியல், முஸ்லீம் அரசியல் மட்டுமல்லாது சிங்கள அரசியலிலும் பாடத்தைக் கற்பிக்கிறார்களே!!!

தமிழர்கள் பக்கம் ஒருவிடயத்தைப் பதித்தாகவேண்டும். அதாவது, தமிழீழ ஆதரவாளர்கள்-விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், இவற்றிற்கிடையில் வேறுபாடு உண்டா இல்லையா???

இந்த நூல் பலருடைய சிரசில் பாரத்தை ஏற்றப்போகிறது என்பது ஒருபுறம் இருக்க, எதிர்கால வரலாற்றுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஒரு சரித்திரக் கையேடாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழர்கள், ஈழம், வரலாறு, எதிர்காலம்... என்று பார்க்கும் போது, நிர்மாணத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் தமிழீழச் சமுகத்திற்கு, “எதிர்காலம்” எட்டிப்பார்க்கக்கூடிய ஆழத்தில் தென்படக்கூடாது என்பதிலும், நையாண்டித்தனமுடையதாக அமைந்து விடக்கூடாது என்பதிலும் கருத்தாய் இருக்க வேண்டும்.

இதில் தமிழ் நிலை தொடர்பாக பல்வேறு சிந்திக்கும் சிதறல்கள் திணிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், தமிழோ அல்லது அத்தமிழர்களோ, சரித்திரத்தில் புதியவர்களல்ல என்பதனை விளக்குவதற்கே!

விடுதலைப் புலிகளுடைய ஆரம்பகாலத்துப் போக்கும், அத்தலைமைத்துவத்தின் எண்ணத்திற்கும்,  தற்காலத்தில் அவர்கள் பெயரில் உலகநாடுகளில் ஈடுபடுபவர்களுடைய போக்கும் மீள்பரிசீலனை ஒன்றை  அவ்வமைப்பின் தலைமைத்துவத்தால் எடுக்கப்பட வேண்டும் என்பதனை இவ்வேடு  குறிப்பிட்டுக் காட்டுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து அவர்களின் பலத்தைக் குறைத்தும், அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களுக்கும் இதன்மூலம் கோரிக்கை விடப்படுகிறது. அவர்கள் எத்தகைய பங்களிப்பினை தமிழர்களின் நிரந்தர நிம்மதிக்காகச் செலுத்தப்போகிறார்கள் என்றும், தற்போதை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதுதொடர்பான தகவல் வினாவப்படுகிறது.

உலக நாடுகளில் தமிழர்களுக்கு ஒரு தரத்தை நிர்மாணித்துள்ள போதிலும் அவற்றை மறைத்து வட்டம் ஒன்றைப் போட்டுவிட்டு அதற்குள் குத்துக்கரணம் போடுகின்றனர் சிலர். இவ்வாறான பல்வேறுபட்ட விடிவு நோக்கிய கருத்துக்கள் உட்திணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களால், தற்போது கோரப்படும் தமிழீழப்பகுதிக்குமட்டுமல்ல இலங்கை முழுவதிற்குமே உரியவர்கள் என்பதனையும் இது எடுத்துக்காட்டத் தவறவில்லை. விஜயனின் காலத்தின்பின்னரே ஆரியரின் ஆதிக்கம் ஏற்பட்டது என்பதனையும், தமிழ் எத்தகைய சிறப்புடையது என்பதனையும் தமிழர்களின் - திராவிடனின் ஆரம்பகால நிலைக்கும் இந்நூல் கொண்டு சென்று விடுகிறது.

இவ்வாறான வரலாற்றுத்தகவல் அடங்கிய நூல் ஒன்றைப்புனைவதன் சிரமம் எவ்வளவு என்பதனை கற்றோரும் விமர்சகரும் அறிவர். எனினும் வாசகர்களுக்கும் எதிர்காலச்சந்ததிக்கும் இது ஒரு சிறந்த தகவலாக அமையவேண்டும் என்று விரும்புகிறேன்.

தமிழர்களுக்கு நிலையான வாழ்வு நோக்கிய பாதையின் கடினம், தமிழர்களின் எதிர்காலச் சந்ததியினரைப் பாதிப்புக்குள்ளாக்கி விடக்கூடாது என்பதனையும் அணுகுண்டின் பாதிப்போடு ஒப்பிட்டு எச்சரிக்கையும் செய்கிறது. இதன்மூலம் விரைவில் நிம்மதிப்பெருமூச்சினை நோக்கி ஓடவேண்டுவே இவ்வேடு எச்சரிக்கை செய்கிறது.

இவ்வேடு புனையப்படுவதற்கு 2005காலப்பகுதி தொட்டு 2008வரையிலான காலப்பகுதி தேவைப்பட்டது. அரசில் அங்கம் வகிப்போரோஇ பலமாக இருக்கும் அமைப்புகளோஇ தனிநபர்களோஇ நிதி ஆதரவிலும் சரிஇ அல்லது இலக்கிய ரீதியில் வெளியீட்டு ஆதரவிலுஞ்சரி முன்னுரிமை வழங்காமையும் இதன் வெளியீட்டுப்பின்வாங்கலுக்கு முக்கிய காரணம் எனலாம். எனினும் பிரதி செய்வதற்கும் வெளியிடுவதற்கும் போதிய நிதி இல்லாமையால் இணையத்தின் மூலமே பெரும்பாலும் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டது.

தற்காலத்தில் இதற்கு ஆதரவு, அறிவுடையோரிடையே முன்நிலை வகிக்கும் என்பது திண்ணமே! இலக்கியம், இலக்கணம் என்றும், சங்ககாலம் சங்கம் மருவிய காலம் என்றும் மக்களைக் குழப்பாமலும், புணரியல் வாக்கியங்களை அமைக்காமலும் சாதாரண மக்கள் தொட்டு கற்றோர்வரை வாசிக்கக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இது பயனுள்ள கையேடாக அமையும் என்று நம்புகிறேன்.     

இதற்கு வித்திட்ட அடிப்படைத் தொன்மையான நூல்களுக்கும், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் நன்றிகலந்த வணக்கம்.

அடுத்த வெளியீட்டில் சந்திக்கும் சந்தர்ப்பத்தில்...
மேலும் இதுதொடர்பான ஆக்கங்கள் தொடரும்!!!

domenica 7 febbraio 2010

முக்கிய செய்திகள் 08/02/2010

முக்கிய செய்திகள்

ஆளும் கட்சியிலோ,எதிர்கட்சியிலோ போட்டியிடும் எண்ணம் இல்லை:சிவாஜிலிங்கம்
2/8/2010 11:48:36 AM
Full story
/ விரிவாக

ம.ம.முன்னணிக்குள் பிளவு : ஜ.ம.முன்னணியில் பாரதிதாசன் இணைவு
2/8/2010 11:20:21 AM
Full story
/ விரிவாக

எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி:மொஸ்கோவில் ஜனாதிபதி
2/8/2010 10:33:03 AM
Full story
/ விரிவாக

தேர்தல் குறித்து வார இறுதியில் ததேகூ கலந்தாலோசனை
2/8/2010 10:18:55 AM
Full story
/ விரிவாக

ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பியதும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்?
2/8/2010 9:43:23 AM
Full story
/ விரிவாக

ஒரு லட்சம் தொழிலாளரின் தொழிலை பாதுகாக்க அரசின் மாற்றுத் திட்டம் என்ன?
2/8/2010 9:38:07 AM
Full story
/ விரிவாக

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு
2/8/2010 9:29:33 AM
Full story
/ விரிவாக

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே கட்சிகளுக்கிடையிலான தேர்தல் பணிகள் சூடுபிடிப்பு
2/8/2010 9:20:35 AM
Full story
/ விரிவாக

நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏபரல் 8 இல் தேர்தல்:அமைச்சர் ராஜித சேனாரட்ண தகவல்
2/8/2010 9:07:09 AM
Full story
/ விரிவாக

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கம்
2/7/2010 5:59:36 PM
Full story
/ விரிவாக

Read News in English

மேலும் செய்திகள்