domenica 3 gennaio 2010

சர்வதேச நீதிமன்றத்திலேயே இந்த செய்மதிப் படங்களைச் சமர்ப்பித்து விசாரணை நடத்தும் திட்டத்திலுள்ளது

ltte%20dead செய்மதிப் படங்களைப் பயன்படுத்தி போர்க்குற்ற விசாரணை

இலங்கையின் போர்க்குற்ற மீறல்களைச் சுட்டிக்காட்டும் செய்மதிப் படங்களைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு இறங்கியுள்ளது. எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் டப்ளினில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்திலேயே இந்த செய்மதிப் படங்களைச் சமர்ப்பித்து விசாரணை நடத்தும் திட்டத்திலுள்ளது இந்த அமைப்பு. கடந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பொதுமக்கள் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைகளின் மீது அரசபடைகள் மேற்கொண்ட ஷெல் தாக்குதல்களைக் காண்பிக்கும் நான்கு வேறுபட்ட செய்மதிப்படங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.


இன அழிப்புக்கெதிரான தமிழர் அமைப்பானது, 1907 ஆம் ஆண்டின் ஹேக் உடன்படிக்கை 1948 ஆம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கை ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேயே தமது குற்றச்சாட்டைப் பதிவு செய்யவுள்ளது. இந்தச் சட்டத்தின் பிரகாரம், மருத்துவமனைகள் மீது சர்வதேச மற்றும் உள்நாட்டு எந்த ஆயுதக்குழுக்கள் என்றாலும் தாக்குதல் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Nessun commento:

Posta un commento