கடந்த முப்பது வருடத்தில் நடைபெற்ற போரில் ஒருவர் இறப்பது என்பது வேறு, போர் முடிந்த பின்ர் அதுசார்ந்த சதிகளால் மரணிப்பது என்பது வேறு, இதில் இரண்டாவது தன்மைவாய்ந்து இரு குடும்பத்தில் மரணம் நிகழ்ந்துள்ளது. இதற்கு யார் இந்த மனிதாபிமானமற்ற வேலையினைச் செய்தார்களோ இறைவனுக்கே வெளிச்சம். இதில் ஒரு குடும்பத்தில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. எனவே அவர்களுடைய முழுத்தகவல்களும் இங்கு காட்டப்படுகின்றது. தமிழ் உறவுகள் அவர்களுக்கு உதவ நினைத்தால் நேரடியாக தாங்களே மனமுவந்து அக்குடும்பத்திற்கு ஆதரவு வழங்கும்படி எமது இணையம் வினாவிநிற்கின்றது.
Name : T. Ramsing Father Name : Tharmaruban
Address : 147/16, A.V Road, Arijalai, Jaffna
Age : 12
Mother Name : T. Suki
School Name : Kolumputhurai Hindu School (கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம்)
யாழ்ப்பாணம் இலந்தைக்குளம் பிரதேசத்தில் வெடிக்காத நிலையில் இருந்த எறிகணையொன்றை
எடுத்து விளையாடியதாகக் கூறப்படும் கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், அது வெடித்ததால் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் இலந்தைக்குளம் புளியடிச்சந்தி பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையை விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்கள் இந்த பிரதேசத்தில் கிடந்ததாக கூறப்படும் எறிகணையை எடுத்தவேளையிலேயே அது வெடித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அரியாலை ஏ.வி. பாதையைச் சேர்ந்த 9 வயதான ஏ.லக்ஷன், 10 வயதான ஆர்.ராம்சிங் என இனங்காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மேலும் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் மூவர் நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Nessun commento:
Posta un commento