martedì 9 febbraio 2010

யாருக்காக, யாரிடம் இருந்து தமிழீழம்- அருகன்.

tn_sarath-ltte “ஆத்தில வச்சிட்டு குழத்தில தேடுறமாதிரி” … என்று ஒரு பழமொழி உண்டு, அது போலவே “குளத்துடன் கோவிச்சுக்கொண்டு…” என்று இன்னொன்றும் உண்டு… இது மிகச்சரியாக தமிழர்களுக்குப்பொருந்தும்.

யாரெல்லாம் குற்றவாளியாகத் தேடப்படுகின்றார்களோ?, யாரெல்லாம் தமிழர்களை படுகுழிக்குள் தள்ளுகின்றார்களோ அவர்களை யெல்லாம் தமிழர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளார்கள்.

கேபியை தலைவர் என்றார்கள்… அவர் ஏற்கனவே சர்வதேச குற்றவாளியாகப் பட்டியலிடப்பட்டவர். பொட்டம்மானை அடுத்த தலைவர் என்றார்கள் … இவரும் தேடப்படுபவரே!!! சரி இதையெல்லாம் விடுங்கள் இவர்கள் தமிழர்கள்!!! தமிழர்களுக்காகப்பாடுபட்டவர்கள். தமிழர்களின் விடிவிற்காகத் தம்முயிரையே துச்சமென அர்ப்பணித்தவர்கள். கடினமான பாதைகளை பல வருடங்களாக கடந்தவர்கள்…

இவர்கள் சர்வதேசத்திற்கு வேண்டும் என்றால் குற்றவாளியாகட்டும் எமக்கெல்லாம் தேசத்தைக்காக்கா போராடிய தெய்வங்களே!!!

தெய்வங்களாக இருந்து தவறுசெய்தவர்களே சாத்தான்களாகவும் இருக்கின்றார்கள். அது போகட்டும்.

ஆனால் இந்த சரத் பொன்செக்காவை ஆதரவளித்த முட்டாள் செயல் இருக்கே!!! அந்நார்ந்து பார்த்து வணத்தில் எச்சிலைத்துப்பினால் என்ன நடக்கும் அது திரும்பிவந்து துப்பியவர் முகத்தில்தான் படியும் அது போலவே கூட்டமைப்பின் வழியில் தமிழர்களின் முகத்தில் எச்சிலையும், கரியையும் பூசி தமிழர்களுக்கு பெரும் களங்கத்தையே ஏற்படுத்திவிட்டனர்.

மகிந்த நாலுவருடமே புலிகளுக்கு எதிராகப்போராடினார் என்றால், மிஸ்டர் சரத் 25வருடங்களாக தமிழர்களுக்கு எதிராக வண்முறையினைக் கட்டவிழ்த்துவிட்டவர்!!! இப்போது அவரை சிறைப்பிடித்தது என்பது அவருக்குக் கொடுத்த சாட்டையடியல்ல! தமிழர்களுக்குக் கொடுத்த சாட்டையடி!!! எமது போக்கில் மாற்றம் வேண்டும் என்று அன்றில் இருந்து இன்று வரை எழுதிக்கொண்டே வருகின்றேன்.

எமக்கு சாணக்கியம் போதாது, எப்போதும் முரட்டுத்தனமும், முன்கோபமும். எம்மையே நாம் கோமாளியாக்கி மகிழ்ந்து கொள்கின்றோம். எப்போது நாம் சாணக்கியத்தைப் பயன்படுத்தப் போகின்றோம்??? ஒவ்வொரு தமிழனும் சுயமாகச் சிந்திக்க வேண்டும்.

புரையோடிய வார்த்தைகளைப் பேலிப் புகளாரஞ்செய்யாதீர்கள். கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சாம்பலாக்கிவிட்டு “சிங்களவன் தாறானில்லை, சிங்களவன் தாறானில்லை” – என்று கூப்பாடு போடாதீர்கள். பெரும் அதிஸ்டமாக ஜனாதிபதி தேர்தல் வந்தது அதை அப்படியே கோட்டைவிட்டனர். இப்போது பாராளுமன்றத் தேர்தல் வரப்போகின்றது அதையும் தவிடு பொடியாக்குவார்கள் என்பாதில் எந்த சந்தேகமும் இல்லை.

அது முடிந்ததும் மகிந்தவுடைய அடுத்த திட்டமாக சர்வதேச புலிகள் ஆதரவுச் செயற்பாடுகளை முறியடிப்பதே!!! அப்போது, “நாடுகடந்த அரசு” காத்தில பறந்து விடும் அதை நம்பிய மக்கள் அதன் தலைவர்களை தேடுவார்கள். இது தீர்க்கதரிசனமாக நடைபெறும். அப்போது என்ன செய்வதென்று தெரியாதவர்கள் மீண்டும் மீண்டும் முறையற்ற வண்செயல்களை மேற்கொள்ள தூண்டப்படுவார்கள். புலத்து ஊடகங்கள் எல்லாம் வழிமாறிப்போகும் இதற்கு மாற்று வழியை அனர்த்தத்திற்கேற்ப எடுக்காவிட்டால் இது நடந்தே தீரும். அருகன் தொடரும்.    

K.P - Ltte

 Pottu Amman

Nessun commento:

Posta un commento