sabato 13 febbraio 2010

ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும் - Arugan

2008ல் வெளியான அருகனின் "மலரும் மா தமிழீழம்" என்ற நூலில் இருந்து

ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும்

clip_image001இலங்கையின் வரலாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஏராளம் சான்றுகள் ஏலவே கிடக்கின்றன, இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது வரலாற்றில் மாற்றப்படாமல் இருப்பதற்கு நாம் முயலவேண்டும் இதற்கான படிகளில் இதுவும் ஒன்று.

கிட்டத்தட்ட ஆறு தசாப்தமாக, (1948ல் இருந்து) அண்ணளவாக ஒரு தலைமுறையாக, இலங்கை அரசிடம் இருந்து அந்நாட்டு மக்களில் “சட்டத்துக்கு உட்பட்ட” சமத்துவம் வழங்கப்படாமைக்கான காரணக்குரலாக ஒலித்ததன் விம்பம், இன்று உலகத்துக்கு அம்மக்களின் வதனத்தையே காட்டியுள்ளது.

இதன் பிரதிபலிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு உலகத்தமிழர்களின் ஏக  பிரதிநிதிகளாகனது. இப்பிரதிநிதிகள், இலங்கை அரசுடன் தமிழர்களுக்கான சமவுரிமை கோரி ஆயுதம் ஏந்த நேரிட்டுள்ளது. இதற்குத் தக்கபதிலோ அல்லது வழங்கப்படாத உரிமைகளைக் கொடுக்கவோ மறுக்கும் சிங்கள ஆதிக்கத்துக்குள் பிடிபட்டிருக்கும் அரசானது, இவ்வமைப்பைப் பயங்கரவாதக்கும்பல் என்றும் சிறுவர் துஷ்பிரயோகிகள் என்றும் உலகிற்கு அறிமுகஞ்செய்ய எத்தணித்தது. அதுவே, தமிழர்கள் பக்கமான பார்வையினை உலகத்தின் கண்களுக்குத் திருப்பிய பெரிய விளம்பரமாகும்.

கிட்டத்தட்ட ஒருமுழுத் தலைமுறையினையே ஆட்கொண்டுவிட்டது இப்போராட்டம். அடுத்த தலைமுறைக்கும் இப்போராட்ட நோய் தொடருமாயின், இன்னும் ஏராளம் தமிழர்களின் உயிரைக்குடித்து, உலகத்தமிழர் தொகையில் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு தமிழீழ மக்கள் சனத்தொகையில், தற்போது சாதாரணமாகவே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, முன்பு போல் அதிகமான குழந்தைகளைப் பெறும் நிலமைகள் குறைந்து போய்விட்டது. இரு பிள்ளைகளுக்குமேல் பெறும் காலகட்டம் மாற்றமடைந்துள்ளது. அதற்கு குடும்பச்சூழல், பொருளாதாரம், வயதுமுதிர்ந்த திருமணம் போன்ற பலகாரணிகள் காரணமாகிறது. 

தமிழீழ எல்லையின் அளவோடு ஒப்பிடும் போது இப்போராட்டகால நீடிப்பும், இழக்கப்பட்ட மக்கள் தொகையும், சேதமான பொருட்களும், ஈடுசெய்ய முடியாத மன உழைச்சலும் பன்மடங்கு அதிகம் என்றே சொல்லவேண்டும். இந்த வேளையில் இப்போராட்டத்திற்காக அதாவது, தமிழீழக் கொள்கைக்கென ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் என்று தமது உயிரினை அர்ப்பணித்தது மட்டுமல்லாமல், தமது தனிப்பட்ட ஆசைகள், எதிர்பார்ப்புக்கள், எதிர்காலங்கள் என்பவற்றை மண்ணுக்குள் புதைத்த ஈழமாதாவின் புதல்வர்களை கண்ணீரோடு நினைவுகூருகிறேன்.

எல்லா வளமும் நிறைந்த எமது ஈழத்தில், போர்மட்டுமே நிரந்தரம் போல் குறிப்பாக கடந்த முப்பது வருடமாக கார்மேகம் சூழ்ந்து காணப்படுகிறது.

இன்றைய பொழுதில் தமிழர்கள் எல்லாரும் சரி, தமிழ்மற்றும் தமிழ் சார்ந்த அமைப்புக்களுஞ்சரி புதியதொரு வரலாற்றுக்கட்டத்தில் அமுக்கப்பட்டுள்ளோம் என்பதனை வாழ்க்கையின் பாதை காட்டிச்செல்கிறது.

1917ம் ஆண்டுகளில் சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் சிங்களவருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதன் பிரதிபலிப்பே, இன்றைய இலங்கைச் சட்டவமைப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. ஆணால் தமிழர்களின் துர்ரதிஷ்டம் இலங்கை, சிங்களவரின் பிடிக்குள்ளும்,  ஆரம்பத்தமிழர்கள் பதவிகளின் மற்றும் பட்டங்களின் பிடிக்குள்ளும் மட்டும் சிக்குண்டமை.

அப்போதிருந்தே, தமிழர்களுக்கும், சிங்களவருக்கும் என்ற பிரிவு காட்டப்பட்டிருந்தால் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளைப்போல் காணப்பட்டிருக்கும். மாறாக முன்னுள்ளவரின் எண்ணம் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதில் இருந்தமையால் சிறுபான்மையாக இருந்த மக்களின் உரிமைகளை பிற்காலத்தில் சிங்களவர்கள் மறுத்து ஒதுக்குவார்கள் என்று நினைக்கவில்லை.

எனினும் ஆரம்பச்சட்டம், தமிழ் அரசியல் கட்சிகூட அரசாங்கத்தை அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததையிட்டுச் சாதுர்யமாகச் சட்டத்தை, சிங்களவர் மாற்றியமைக்கும் போதுகூட தமிழர்கள் அமைதிகாட்டியதன் காரணமே இன்றைய இச் சூழ்நிலை.

ஏற்கனவே கரும்புலிகளின் இரும்பொலிகள் என்ற ஆக்கத்தினுடன் பகிர்ந்து கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன் “மொழி ரீதியிலும், இனரீதியிலும் சிங்களவர் காட்டிய வேற்றுமைகள், இன்றைய கரும்புலிகளைத் தோற்றுவிக்கச் செய்தது. மூன்று பெரும் பிரிவுகளாக ஆரம்பகாலத்தில் இருந்த இலங்கையின் ஆளும் அரசுரிமை பெரும் பகுதி தமிழருக்கே உரியதும், தமிழர்களே ஆண்டு வந்ததும் மறைக்கப்பட்ட உண்மைகள்.
பிரித்தானியரின் மீழுகையின் போதாவது, இரு அரசுகளாக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். அப்பேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்திய பிரித்தானியா இப்போது கூட இதில் சிரத்தை காட்டாமல் இருப்பது சினத்திற்குரியதே.
ஆதிக்க வல்லரசின் அதிருப்தியான முடிவு, இன்று ஏராளம் எம்முயிரினை இழந்து வேதனைப்பட்டும், மரணத்தறுவாயில் சொந்தங்களைப் பார்க்கப் பொறுக்காமல் பலியாகும் மக்கள் புலி வீரராயும், புலிவீரர் புடம் போடப்பட்டுத் தரையில் கரும்புலி வீரரெனவும், கடலில் கடற் கரும்புலி வீரர் என்றும் பலம் பெற்றுத் தனக்கெனத் தாபிக்கத் துடிக்கும், தாய் மண்ணை மீட்கத் துடிக்கும், தாகத்தவர்களானதுதான் நடைமுறையில் கண்டுவிட்ட நிஜங்கள்.
வரலாறு கடந்து விட்டபோதிலும், கடந்த காலங்களைப்பார்த்தால், அங்கும் தமிழர்களுக்கிருக்கும் சாதகத்தினை தட்டிப்பறித்துக் கொண்டே இருந்தனர் சிங்களவர்.
1978ற்கு முன்னர் இருந்த தேர்தல் முறையினால் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனத் திட்டமறப்புரிந்து கொண்ட பெரும் பாண்மை சிங்களவர் அங்கும் தமக்குச் சாதகமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தினர்.
அதாவது, 1977 பொதுத் தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி.8 வேட்பாளர்களைப் பெற்றிருந்தது மொத்த வாக்குகளில் 29.7வீதத்தையும்,ஐக்கிய தேசியக்கட்சி 140 வேட்பாளர்களைப் பெற்றபோது,50.9வாக்குகளும் பெற்றிருந்தது. இதில் முக்கிய விடையம் என்னவென்றால் 6.4வீதமான வாக்குகளைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு 18 வேட்பாளர்களைக் கொண்ட காரணத்தால் எதிர்க் கட்சியாகுந் தகுதி கிடைக்கப் பெற்றது. இந்த நிலையினைக் கண்டு திடம் இழந்த சிங்களவர் அவசர அவசரமாக வீதாசார முறையைக்கையாளச் சட்டத்தை அமுல்ப்படுத்தி தமிழர்களுக்கு இருக்கும் சாதகமான சட்டத்தையே சாய்த்துவிட்டனர் இனி எந்தக் காரணத்தை வைத்துக் கொண்டும் தமிழர்கள் தலைநிமிர மாட்டார்கள் என்று இருந்தபோதுதான் தமிழர்களின் தனிப் பெரும் பிரதிநிதி தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதனை கரும்புலிகள் மூலம் உலகறியச் செய்தனர் தமிழர்.”

இப்போது இருக்கும் தமிழ் அரசியல்க் கட்சிகளும் த.ஈ.வி.பு இலங்கை அரசின், அரசியல்லாட்டத்தை தற்போதைய அரசாங்கத்துடன் இணந்து செய்யாவிடின் இலங்கையின் நிலை அதோகதிதான்! மட்டுமல்லாமல், தமிழர்களின் சுதந்திரம் தமிழர்களாலே நசுக்கப்பட்டுத் திண்டாடும் என்பதும் நிஜம்.

தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு முக்கிய ஆலோசனை ஒன்றை சொல்லமுனைகின்றேன், இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தொகையினை சற்றுக் கவனிக்கவேண்டும். இது அரசிற்கும், இலங்கை அரசியல் கட்சிகளுக்கும்தான். அதாவது, ஒவ்வொரு முறை நடைபெறும் வாக்கெடுப்புக்களில் புலம் பெயர்ந்தவர்களை கைவிடுவதால் ஏராளம் வாக்குககளை இழந்து விடுகிறார்கள். இதனால் இங்குள்ள தமிழர்களை இலங்கை அரசும், தமிழீழ விடுதலை புலிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் எம்பிக்களும், தமிழ் மந்திரிகளும் கைவிட்டுவிடுகின்றனர். மாறாக இங்குள்ளவர்களுக்கும் எப்போது வாக்கெடுப்பு நடைபெறுகிறதோ அப்போது இங்குள்ளவர்களுக்கும் பூரண உரிமைகள் கிடைக்க வாய்ப்புண்டு. 

“தமிழீழம்” என்றொரு சுயநிர்ணயப்பிரகண்டணம் செய்யப்படுமாயின், ஆகக்குறைந்த 10 வருடங்கள் தேவை தமிழீழத்தை அரசியல், பொருளாதார, நிதி, அபிவிருத்திக் சட்டக்கட்டமைப்புக்குள் கொண்டுவருவது என்பது சாதாரண மக்களால் உணரமுடியாததொன்று. இப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்திலும் திறம்பட இருக்கிறார்கள், அவர்கள் இப்போதிருந்தே தனிஆட்சிதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளும் சொல்லுவார்களேயானால் அது அவர்களுடைய அரசியல் சதுரங்கத்தைக் குறைத்து விடும். இவை பலமான அத்திவாரம் மட்டுமே.

இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் எந்த அரசியல் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கவில்லை, எந்த ஆவணங்களும் உலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இல்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்த உறுப்பினரும் தமிழீழ கடவுச் சீட்டுடன் உலகத்தை வலம் வருவதில்லை, எந்த அரசியல் அதிகாரிகளுக்குமாக ஓய்வூதியப் பணம் ஒதுக்கவில்லை, தம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், தமக்கும் பாதுகாப்பைத் தேடியுள்ளார்களே யொழிய வேறில்லை. இதுவல்ல அரசாங்கம்!. இதுவே இலங்கை அரசியல் வாதிகளின் வெற்றிப்பிடிகள். இதில் தமிழ் அரசியல் வாதிகளின் குளிர்காயல்.

அரசிற்கு நிதி மட்டும் போதாது ஆட்சிநடாத்துவதற்கு உலக அங்கிகாரம் வெளியுலகப்போக்கு, உலகரீதியிலான அரசியல் மற்றங்களும் பிரச்சனைக்கான தீர்வுகளும், நாடுகளின் நல்லுறவுகள், சிங்கள அரசுடன் ஒத்துப்போதல், ஆவண இயந்திரங்கள் போன்று பல்வேறு விடையங்கள் அவசியம்.

முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதன் மூலம் தமிழீழத்தை, இலங்கை அரசு போல் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  

இதற்கு...
எமது தமிழ் அமைப்புக்கள் முட்டைக்குள் கோட்டைகட்டிப்பழகியவர்கள். இன்று ஒரு குடும்ப வாழ்க்கையே நாடு விட்டு உலகு என்று மாறும் போது நம்மவர்கள் மட்டும் கிணற்றுத்தவளைபோல் திட்டமிட்டால் தகாது. எம்மைச் சுற்றியே போராட்டம், எம்மைச்சுற்றியே விமர்சனமும் விளக்மும், எம்மைச்சுற்றியே சர்ச்சைகளும் எதிர்ப்புக்களும், எம்மைச்சுற்றியே பாராட்டுக்கள். என்ன திட்டம் இது?

முட்டையை உடைத்துக்கொண்டு காலத்திற்கு ஏற்ப பறக்க வேண்டாமா?

“அடிதடி 14”
நாம் என்ன செய்ய வேண்டும்

இலங்கை அரசிடம் இருந்து, தமிழர்களுக்குக் கிடைக்காத உரிமைகளிற் சிலவற்றை உலகு அறியும் வகையில், இங்கு விபரிக்க முனைகிறேன்.

இப்போதெல்லாம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே போசிறது. எனினும் வாசிப்புத்தன்மையுடையோர் இன்னும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்த போதிலும் இலங்கையின் இணையத்தள நுளைவாயிலைத் திறக்கும் போது அங்கோ மும்மொழிப் பிரயோகம் இருக்கும் என்று என்னி, தமிழுக்கு தக்க நிலையினை அரசு கொடுக்கிறது என்று எண்ணிக் கொண்டு அப்பக்கத்தினைத் திறந்தேன்... தலைப்புக்களைத்தவிர மற்றையதெல்லாம் ஆங்கிலத்திலும் பெரும்பாலும் சிங்களத்திலுமே காணப்பட்டது. மூக்குடைந்து கீழே விழுந்தது போல் இருந்தது. மனதைச் சமாதானப்படுத்திப் பார்த்து தமிழ் அமைப்புக்களின் இணையத்தைத் திறந்து பார்த்தேன் தலையே உடைந்து விழுந்தது. காரணம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் காணப்பட்டன.      

எல்லா மொழிக்காரரும் தமது மொழியினை மேன்படுத்த முற்படுகின்றனர் ஆனால் தமக்குள் அது பற்றி பறைசாற்றுவதில்லை உதாரணம் மொறோக்கோ இனத்தவர், ஆனால் தமிழர்களோ தமக்குள் தமது மொழியைப் பற்றி பலமாகப் பறைசாற்றுவர் பிறநாட்டவரிடத்திலுஞ்சரி பிற மொழிக்காரரிடத்திலும் ஒதுங்கிச் செல்கின்றனர்.

இணயத்தளத்தைப்பற்றியே மேலும் முறையிட விரும்புகிறேன். அதாவது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் பல்வேறு பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்கள் எதனைப் பார்ப்பதென்றே புரியவில்லை யாருடைய தகவல் உண்மை என்று உணர முடிவதில்லை. சிறிது காலத்தின் பின்னர்   தொடங்கப்படுகின்ற இணையத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது படிப்படியாகக் குறைந்து பின்நிலைக்குச் சென்று விடுகிறது. ஒளி,ஒலி பரப்புக்களும் அவ்வாறே அமைகின்றன இவையெல்லாம் எமது ஆளுமைப்பின்னடைவையே காட்டுகிறது. இதற்கும் ஆழுமைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்க வேண்டாம் நிறையவே இருக்கிறது ஆழமாகவே கிடக்கிறது. அதாவது இலாப நோக்கத்தை முதலில் நிறுத்தி மக்களின் நன்மையினைக் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அரசு அமைக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அரச சேவைகளும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, இவையனைத்தும் முதலில் ஒரு கட்டமைப்பிற்குள் வரவேண்டும் அதனுள் எத்தனை பிரிவுகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அது தொடர்புச் சாதனமாக இருந்தாலுஞ்சரி, இணையத்தளமாக இருந்தாலுஞ்சரி, அமைப்பாக இருந்தாலுஞ்சரி, ஏன் அரசாக இருந்தாலுஞ்சரி.

இதில் யாரிடம் மக்கள் தொடர்பு மற்றும் சேவைஎண்ணம் மேலும் மக்கள் நலம் புதைந்து கிடக்கிறதோ அவற்றைத் தேடி அதிகாரப் பலமுள்ளோர், ஆயுதப்பலமுள்ளோர், பணபலமுள்ளோர் மட்டுமல்லாது ஆட்சிப்பலமுள்ளோர் கூட கைகோத்துக்கொண்டால் தப்பென்ன இருக்கிநது. இதில் மானப்பிரச்சினைக்கு இடமில்லை தந்திரத்திற்குத்தான் இடம்.

இவைபோன்று விடையங்களையும் அரச பீடத்தில் அமர்வோர் முதலில் சீர்செய்தால் தான் ஆட்சி மக்களைச் சென்றடையக்கூடியதாக இருக்கும் இல்லா விட்டால் மக்களுக்குச் சேரவேண்டியவை அனைத்தும் ஒருசில அதிகாரிகளிடம் புதைக்கப்பட்டுவிடுமல்லவா?     

ஈழத்hதின் பாதை திறக்கிறது…
17 ம் திகதி இரண்டாம் மாதம் 2008ம் ஆண்டு நல்லதொரு பாடத்தினை விடுதலைப்பொராட்டத்திற்குக் காட்டியுள்ளது. அதாவது, முழளழஎழ  தனது தனிநாட்டுப்பிரகண்டனத்தைபலம் பொருந்திய நாடுகளின் பின்னணைவுடன்  வெளிக்காட்டியது. இதில் தமிழர்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அலங்கை அரசிற்க்கும் நல்ல தொரு பட்டப்படிப்பை  கொடுக்கத்தவறவில்லை.
எனினும் நாம் ஒன்றைக்கவனத்தில் கொள்ளவேண்டும், அவ்வமைப்புக்கள் உலகரீதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்குள் இடம்பெறவில்லை. மேலும் அங்கு உலகப்படையின் ஈடுபாடு இருந்து வந்தது என்பது குறிப்பரிடத்தக்கது, இது தொடர்பாக மேலும் தொடரசந்தர்ப்பம் கிடைக்கும்…
எமது தாயகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது விடுதலைப்போராட்டமா அல்லது  தீவிரவாதமா என்ற கோள்விக்கு முதலில் விடைகாணவேண்டும். இந்த விடையம்பற்றி எனது ஒவ்வொரு ஆக்கத்திலும் தெளிவுபடுத்திக் கொண்டே வருகின்றேன்.
விடுதலைப்போராட்டம் என்றால் அதற்காகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடைய செயற்பாட்டை பயங்கரவாத செயல் என்னும் பட்டியலில் இருந்து களையவேண்டும்.அது உலக அளவில் இடம்பெறவேண்டும். முக்கியம் அமேரிக்காவின் பார்வை கூர்மையாக ஈழத்தை தொடவேண்டும்.
பயங்கரவாதம் என்றால்  எப்போதுமே தீர்க்க முடியாத அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கநேரிடும் அதாவது இலங்கை அரசிடம் மட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபடுகின்ற பலம் பொருந்திய அமைப்பிடமும் தான்.
புதியதொரு நாட்டுப் பிரகண்டனத்தை ஐ.ந ஏற்றுக்கொள்ளுமாயின் ஈழநாட்டுப்பிரகண்டனத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஆனால் எப்போது?, எப்போது அங்கிகாரம் உலகநாடுகளிடம் இருந்து “விடுதலைப் புலிகளுக்குக்” கிடைக்கிறதோ அதன்பின்னர் அவர்களுடைய செயற்பாடு எவ்வாறு மாற்றப்படுகிறது என்னதனைப்பொறுத்த நிர்ணயிக்கப்படும்.
எங்களுடைய மக்களின் எண்ணத்தில், தமிழீழ வி.பு. மிகப்பலம் பொருந்தியவர்கள் என்ற எண்ணம் பதிந்துள்ளது, அவர்களால் தற்போதே ஈழம் ஆளப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்ற கருத்தும் பலமாகவே இருக்கிறது. ஆனால் ஒருவிடையத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தமிழீழ வி.பு. ஆட்சிஎன்பது தமிழர்களிடம் இருந்து பெறப்படும் தொகையில் இருந்தும் பல்வேறு இலாபகரமான தொழிற்பாட்டில் இருந்தும் பல்வேறு சேவை அமைப்புக்களிடம் இருந்தும் தமது தேவைகளைப் ப+ர்த்தி செய்கின்றனர். எனினும், ஒரு அரசு பெற்றுக்கொள்ளும் வரிவீதம் இவர்களுடைய வரிவீதத்தை தனிமைப்படுத்திக்காட்டுகிறது.
மேலும், உலகளவில் இருப்போர் தேவைப்படும் நேரங்களில் ஸ்தம்பித்து நிற்பதும், எமது ஈழவிடுதலைக்கு தடைக்கற்களாக அமைகிறது. பொதுவாக எமது மக்களின் பழக்கம் எதுவென்றால், தமது பெருமைகளையும் சிறப்பென்று அவர்கள் கருதுவதையும் தமக்குள்ளே பெருமைப்படுத்திக்கொண்டே இருப்பது. வெளியுலகிற்கோ அல்லது பிற மொழியினத்தவருக்கோ தெரிவிப்பதில் பின்னடைவது. இன்னொரு வகையில் சொல்லப் போனால், இத்தாலி தேசத்தை எடுத்துக்காட்டுகிறேன். இங்கு “மொறோக்கோ” நாட்டவர் தமது மொழியினையும் தமது தேசத்தவரையும் உலகளவில் உயர்த்துவதில் பின்தங்கியதில்லை. இத்தாலியின் சட்டங்கள் இத்தாலிமொழியில் வெளியிடுவதுபோல் அவர்கள் மொழியிலும் வெளியிடப்படுகிறது. இதற்கு அவர்களுடைய மக்கள் தொகை ஒருகாரணமாக இருந்தாலும் முயற்சியும் தம்மைப் பெருமைப்படுத்தும் தன்மையுமே முன்னிற்கிறது. மாறாக எம்மவர் மத்தியில் இச்செயற்பாடு மாறுபட்டுக்காணப்படுகிறது. துமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதில் பெருமைப்படுகின்றார்களேயொழிய தமிழ் மொழி தெரியாது என்பதில் சிறுமைப்படுவதில்லை. மொழி மட்டுமே எம்மை பிரித்துக்காட்டக்கூடியது. எமது போராட்டத்தின் வெற்றி தமிழின் விரிவு படுத்தலிலே பெரிதும் தங்கியுள்ளது.
இந்த முயற்கியினை எழுத்து முறைமூலம் மட்டும் நான் வினாவவில்லை, செயற்பாட்டு மூலம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனினும், … அதன்பலனை அனுபவிப்போர் தமக்குள்ளே அது பற்றி பகிர்ந்து கொள்வதனைத் தவிர்த்துக் கொள்கின்றனர்.
த.வி.பு. தமது செயற்பாட்டில் ஒருசில உலகளவிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் உலகம் தனது பார்வையினை அவர்கள் பக்கம் திருப்பவேண்டும் அதற்கு இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தத்தேவையில்லை. என்ன செய்யவேண்டும் என்பதனை அடுத்த வரிகள் தெளிவுபடுத்தும்.
இதோ ஒரு சிறு கதை
ஒரு தேசத்திற்காக அம்மக்கள் கூட்டம் சேர்ந்து போராட்டத்திற்கு என்று அமைப்பினை உருவாக்கினர். அவ்வமைப்பும் அந்நாட்டை ஆளும் கொடியவருக்கு எதிராகத் தம்மை இழந்து போராடினர்.
பலவருடங்களாகப் போராடினர்…
உடமைகளை இழந்து போராடினர்…
உறவுகளை இழந்து போராடினர்…
உயிரினையும் இழந்து போராடினர்… முடிவு வருவதாய்த் தெரியவில்லை, அவ்வமைப்பும் பலம்பொருந்திய அரசுடன் போராடக்கூடிய அளவிற்கு வளர்ந்து விட்டது, உலகில் ஆங்காங்கே அமைப்புகளை உருவாக்கி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஊடுருவிச் சென்றது…
விடிவு வரவில்லை…
ஆரம்ப காலத்தில் ஆழும் அரசிடம் இருந்த கிடைக்காத உரிமைகளை உடைத்தெறிவதற்காக தலைமுறை தலைமுறையாக தம்மை அடைவுவைத்தனர். இப்போது ஆரம்பத்தில் இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டது. தம்மால் உருவாக்கிய அமைப்பிடம் இருந்து தம்மை விடுவிக்கத் தடயந்தேடினர், அவ்வமைப்பு பலத்திலும் பணத்திலும் பதவியிலும் பட்டத்திலும் மிதந்து கொண்டிருந்தது. மக்களோ அகதிகளாயினர் அநாதைகளாயினர் ஆதரவற்றனர்…
பணபலத்தைக் கொண்டு இவ்வமைப்பு தம்மைத் திடப்படுத்தத் தொடங்கி மிகப்பெரிய வல்லரசிடம் இருந்து உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தீவொன்றை விலைகொடுத்து வாங்கினர்
அத் தீவினை ஒரு சிற்றரசாக்கினர் அதனை தமது ஆட்சிப்பரப்பாகப் பிரகண்டனப் படுத்தினர் தம்முடைய புதிய தேசத்திற்காக அவ்வமைப்பின் தலைமைப்பீடம் தன்னுடைய சந்ததிக்காக ஒரு பிரகண்டனத்தையே ஏற்படுத்தியத.
இப்போது முன்னைய போராட்ட மக்கள் இன்னும் அவ்வமைப்பினை நம்பிக் கொண்டிருக்கின்றனர் அப்பாவிகள் வெளியுலகநடப்புத் தெரியாமல் அவ்வமைப்பினை பூஜிக்கின்றனர்.
முன்னைய காலத்தில் விஜயன் எவ்வாறு இலங்கையில் தன்னுடைய தோழர்கள் 700 பேருடன் வந்தடைந்தானோ அவ்வாறு இவ்வமைப்பும் 5000பேருடன் இத்தீவில் குடிபுகுந்தனர். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை, அவர்களுக்கென்று ஒருதேசம், அவர்களுக்கென்று ஒரு சட்டம், அவர்களுக்கென்று ஒரு சரித்திரம்.
ஏமாந்த மக்களுக்குத் தெரியும் போது இப்படித் தூபங்காட்டினர்,“ அங்கிருந்துதான் எமது படையினைத் தயாரித்து உங்களுக்கு விடுதலை அளிக்கப்போகிறோம்”
மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள்தான் உனமாகிவிட்டார்களே!!!
இம்மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணங்கள் தம்முடைய புதிய தேசத்திற்கு வருமானமகியது, இம்மக்களுக்கு தண்டணை வழங்குவதாகச் சொல்லி புதிய நாட்டின் புனரமைப்பிற்கு பணயக்கைதிகளாயினர்.
உலகநாடுகளில் புலம் பெயர்ந்த தம்முடைய அப்பாவி மக்களிடம் இருந்து தண்டப்பணம், அப்பணத்தின்மூலம் ஆங்காங்கே பல்வேறு தொழிலகங்கள், சேவை அமைப்புக்கள் என்ற பேரில் நிதிமையங்கள், ஆயுதத்தால் மக்களின் வாய்களுக்குப் பூட்டு, …
இவ்வாறு அவ்வமைப்பு விழுது விட்ட ஆலமரமாகியது அழிக்கமுடியாத ஆணிவேராகியது.
தமக்காகப் போராடிய விரர்களை அப்பாவி மக்கள் இன்னும் பூஜிக்கிறார்கள்… இது வெறும் கற்பனையல்ல பலமுள்ள அரசுகள் காலத்தை இப்படியும் மாற்றக்கூடும். (உதாரணம் கிட்லர் வரலாறு)
இது இப்படிஇருக்க “சே” என்றொரு மனிததெய்வம் நினைவிற்கு வருகிறது…
அடிமைத் தனத்திலிருக்கும் மக்களின் விடுதலைக்காக தனது உயிரைப் பணயம்வைத்து  “கூபா” தேசத்தின் காரணகர்த்தாவாகியது…
அதன் விம்பம் இன்றுவரை  “பிடெல் காஸ்றோவை” உலக கட்டுமாணத்திற்கு மாறாக நிரந்தர முதலமைச்சராக்கியது. இப்போது அவருடைய சகோதரர்…
இங்கு ஐ.நா. சபையின் விம்பத்தைப் பிரதிபலிக்க முனைகிறேன்.
தமிழர்களுடைய போhரட்டத்தின்  வெளிப்பாடு தெரிவதிலும் பார்க்க, உலகிற்கு தமிழர்களுடைய உரிமைப்பின்னடைவு தெரிய வேண்டும்  அதற்காகத்தான் இது போன்ற ஆக்கங்கள் …

இலங்கை அரசு தொடர்புடைய தமிழர்கள், இனி அக்கறையுடன் செயற்படவேண்டும். அரசால் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் தமிழிலும் இருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்கான பொறுப்பு அரசுடையதல்ல, அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்களுடையதே!  இதுதொடர்பாக மேலும் பலவிடையங்கள் தொடர்கின்றன… 

Nessun commento:

Posta un commento