sabato 13 febbraio 2010

திட்டமிட்ட வரலாற்றுச்சிதைவு - Arugan

2008ல் வெளியான அருகனின் "மலரும் மா தமிழீழம்" என்ற நூலில் இருந்து

“அடிதடி 12”
திட்டமிட்ட வரலாற்றுச்சிதைவு

clip_image002பிந்திய வரலாறுகள்: தமிழ் அரசர்கள் யாழ்ப்பாணத்து அரசர்கள் இலங்கை அரசர்கள் என்று பார்க்கும் போது, இந்தியாவின் பங்களிப்பு தற்போதண்றி ஆரம்ப காலத்தில் இருந்தே பிரிக்கமுடியாததாக இருக்கிறது.

விஜயனின் வருகைக்கு முன் ஒரு பாரியச் சிதைவொன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. அச் சிதைவினால் இலங்கைப் பழங்குடி தமிழர்களின் அடியான நாகர், இயக்கர், கின்னரர் போன்றோர் சிதைவடைந்தும் சிறு அளவிலும் குறைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் தொகையில் சிறுமைப்பட்டிருந்த பழங்குடியினர் பெரும்பாலானோருடைய தாக்கத்திற்கு முகங் கொடுக்கமுடியாது அவர்கள் வரலாறு புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது, அச்சமுகத்தில் இருந்து விலகியிருக்கப்பட்டிருக்க வேண்டும்.

இலங்கையில் யாழ் ஆட்சியாளரின் ஆரம்பம் பொதுவா “கூழாங்கைச் சக்கரவர்த்தி” என்பவனோடு ஆரம்பிக்கிறது. ஆனால், அதற்குமுன் இலங்கை அரசாட்சியில்லை என்று சொல்வதற்கில்லை. வரலாற்றில் வெளிப்படவில்லை என்பதற்கான ஆதாரம் மேலே தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், பெரும்பாலும் தமிழர்கள் பழங்குடியினராகக் காணப்பட்டமையும் சிதைவுக்குள்ளாக்கப்பட்டமையுமாகும்.

இவரசனுடைய ஆட்சி தொடர்பாக  சில கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது. அதற்குமுதல் யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பாக சிலவிடையத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆழமாகத்தெரிந்து கொள்ள அதனைப் பிறிதொரு இடத்தில் பார்ப்போம் யாழ்ப்பாணம் என்னும் இடத்திற்கு ஆரம்பத்தில், “மணல்த்திடர்” என்றும் “மணற்றிடர்” என்றும் அழைக்கப்பட்டது. பின்னர், யாழ்ப்பாணன் என்பவனுக்குரியதாக மாறியதன் காரணத்தால் அது யாழ்ப்பாணம் என்று பரினாமமானது. இதனுடைய உரிமையாளரான யாழ்ப்பாணன் இந்தியாவில் இருந்து அரச பரம்பரையில் உள்ள ஒருவரை அழைத்து அதனை ஆளவைத்தாராம்.

மேற்சொன்ன இந்தக் கருத்தில்  எனக்கு உடன்பாடில்லை. காரணம் அக்காலத்தில் ஒருவருக்கு ஒரு இடம் சொந்தமென்றால் அதற்குச் செந்தக்காரனே அரசன். அப்படியிருக்க இன்னொரு அரசனை உருவாக்க அவசியமென்ன? மேலும் இன்று சொல்வது போலல்லாமல், இந்தியத் தொடர்புடைய அரசு மேலும் இந்தியாவை உறவுள்ளதாக மாற்றியிருக்குமே தவிர, குறைத்திருக்காது.

இன்னொரு விடையத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான தமிழ் வரலாறு (இலங்கைத்தமிழ்) பிற மொழிகள் மூலமே விபரிக்கப்பட்டது. அதன் விம்பமே பெயர்கள் மாற்றப்பட்டும் வரலாறு மறைக்கப்பட்டும் உள்ளது. உதாரணம் “இயேசுக் கிறீஸ்து” “ஜீசஸ் கிறைஸ்ட்”  “யேசு நாதர்” என்பன ஒரே ஆளைக் குறிக்கிறது. பெயர் எக்காரணங் கொண்டும் மொழிமாற்றத்திற் குட்படக்கூடாது அது போலவே இடமும்.

உண்மையிலே ஒரு சம்பவம்,  “ஒருவருடைய பெயர் தமிழில் “செபமாலை” அவர் தனது பெயரை வெளிநாடு சென்றதும் தன்னை “றொசாறியோ” என்று அறிமுகப்படுத்தினார் இப்போது அவரை முன்பு அறிந்தவர் பின்பு அறிந்தவர் என்று இருபகுதி காணப்படுகிறது. பாவனையில் இருக்கும் இருபெயரும் கருத்தில் ஒன்று என்பதற்காக அது சரி என்று ஒப்புக்கொள்ளலாமா?

இவ்வாறான சிக்கல்களே வரலாறு மங்கியதற்கும் பிறிதாக்கப்பட்டதற்கும் காரணமாகும். தற்போது சிங்களவர் என்று சொல்வோர் கூட தனிச் சிங்களவர் இல்லையே இணைப்புச் சிங்களவர். எனது ஒன்று விட்ட சகோதரிகள் யாழ்ப்பாணத்தில் எம்முடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த போது அசல் தமிழர்கள். பின்னர் இடம்பெயர்ந்த காலத்தில் வவுனியாவில் அவர்கள் அசல் சிங்களவர்கள் காரணம் அவர்களுடைய தந்தை தமிழ் நன்றாய்ப்பேசக்கூடிய அசல்ச் சிங்களவர் எனவே அவர்கள் பச்சோந்தியிலும் மேலானமுறையில் காணப்பட்டனர்.

இது இப்படியிருக்க பல்லாயிரம் ஆண்டு கடந்த வரலாறு????...

வரலாறு பல்வேறு இடங்களில் ஒன்றுக்கொன்று, முன்னுக்குப்பின் முறனான விடையங்களைச் சுட்டுகிறது, அதாவது யாழ்ப்பாண மன்னனான இவனுடைய ஆட்சியின் தொடகுகம் “சாலிவாகன் காலம் ???”  கி.மு. 101 என்று ஒருசிலரும், 13ம் நூற்றாண்டு என்றும் தொடர்பு அறுந்து காணப்படுவதால் அக்காலத்திற்கும் தற்காலத்திற்கும் கணிப்பிடும் கால அளவிலும் மாற்றங்கள் இருந்திருகவேண்டும். அதன் காரணமும் இதற்குத்தடையாக அமைந்திருக்கலாம்.

உதாரணம், ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர் நமது கணிப்பீடுகள் போத்தல், றாத்தல், கட்டை, சாண், அதற்குமுன்னர் ஒருபாதம் இருபாதம், ஒருகாததொலைவு, இவ்வாறான கணிப்புகள் இருந்தன அவற்றின் கணிப்பிற்கும், தற்போதைய கி.மீ, லீற்றர், கி.கி., மீற்றர், போன்ற கணிப்பிற்கும் பாரிய மாற்றங்கள் உள்ளன.

மேலும் அக்கால எழுத்தாளர்கள், தமது எழுத்துக்களில் ஒருசிலரைக் உருவாக்கியும், தேவைப்படும் இடத்தில் தாமே அந்த சம்பவத்தில் புகுந்தும் (ராமாயணத்தில்-வேதவியாசர், வசிஷ்டர்) வரலாற்றைப்புனைவதற்கு இலக்கணம்  இடங்கொடுத்தது. எனவே வரலாற்று ஆவணங்களையும், ஆதாரங்களையும் சற்று எமது எண்ணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இலங்கையின் சரித்திரம் என்று பார்க்கும் பொது,

முற்காலத்தில்
மயன்,
சுரேந்திரன்,
அசுரேந்திரன்,
இச்சயம்பன்,
யாளிமுகன்,
ஏதி,
வித்துகேசன்,
சுகேசன்,
மாலியவான், (இலங்காபுரி என்னும் பெயர் இவன்காலத்தில் உதயமானதெனலாம்),
சுமாலி, (சூரியப் பிரகாசம் விமானம் இருந்த காலம்) ,
வச்சிரவாகு,
வைச்சிரவாணன்(குபேரன் புட்பக விமனமம் வைத்திருந்தான்), 
குபேரன்
இராவணன்
விபீஷணன் (பசுபதி)
இந்திரஜித்
ஆதிசகாயன்
போன்ற வரலாற்று  நபர்களையும் புரட்டிப்பார்க்க வேண்டும். இவர்கள் வெறும் கதாபாத்திரமல்ல.

அத்தோடு எல்லாளன் சரித்திரம் கி.மு. 205- 161 என சிங்கள மிகப்பெரிய வரலாற்றுப் புத்தகமான மகாவம்சம்  எடுத்துக்காட்டும் வரலாறு எங்கே போனது? 
துட்டகைமுனு என்னும் மன்னனால் எல்லாளன் கொல்லப்பட்டதும் எல்லாளனுடைய சமாதியின் இடத்தை (தகனம்செய்த) மரியாதைக்குரிய இடமாக தூபி அமைத்து, அனுசரித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது ஆனால் காலப்போக்கில் சிங்கள இனவாத சமுகம் அதனை மாற்றி nமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(ஆதாரம் மகாவம்சம், "வுhந Pயடi டுவைநசயவரசந ழக ஊநலடழn"p.34  )   

யாழ்ப்பாணத்துச் சரித்திரம் என்று பார்க்கும் போது சரித்திரத்தில், கூழாங்கைச் சக்கரவர்த்தி என்பவனில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆனால் அது முற்றுமுழுதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அதற்குமுதல் வரலாறுகள் (மேற்குறிப்பிட்டவர்கள்) வெளிவராமல் போனதும், மக்கள் தொடர்பு குறைந்து காணப்பட்டதும், பலங்குறைந்து காணப்பட்டதும் காரணமாக இருந்திருக்கலாம். அதன் விபரங்கள் புராணங்கள் மூலம் நாம் புடம்போட்டுக் காட்டக்கூடியதொன்றாகும்.

இந்த இலங்கையானது, “இராவணனின் இராஜதானியாக விளங்கியது. விசுவ கர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டது. இது தென் சமுத்திரத்திலே திரிகூட பர்வதத்திலே அமைக்கப்பட்ட பட்டணமாகும்” என்று வரலாற்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார் என்பதை மேலே எடுத்துக்காட்டினேன்.

இந்த அரசானது ஆரம்பத்தில் “மால்யவானுக்கு” இராஜதானியாக இருந்தது. காலப்போக்கில் பெரும் செல்வந்தராக விளங்கிய குபேரனுக்கு இராஜதானியாக அமைந்து அதன்பின், பெரும் பலம் கொண்டவனும், வரம் பெற்றவனுமான இராவணனால் அபகரிக்கப்பட்டது.
இந்த இராவணனின் தம்பிகளுள் ஒருவன் விபீசனன். வசிர வசுவுக்கு கையேசியிடத்தில் பிறந்த மூன்றாவது புதல்வன். இந்த விபீசனன், இராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது, சீதையை மீண்டும் இராமனிடத்தில் கொண்டு போய் விடும்படி பலமுறை பலவகையில் எடுத்து உரைத்தவன். ஆனால் இவனுடைய எந்தப் பேச்சுக்களுக்கும் தமையனான இராவணன் செவி கொடுக்கவில்லை!
இராவணனின் தவறைச் சுட்டிக் காட்டி எந்தப் பிரதிபலிப்பையும் அறியாத விபீஷனன், தன் தமையனை விட்டு விட்டு, இராமனிடம் போய்ச் சரணாகதி அடைந்தான். இராமனும் அவனுக்கு அபயம் அளித்தான்.

இராவணனைச் சங்காரம் செய்து அழித்தபின்னர் இந்த விபீஷணனுக்கு இராவணனின் அரசாக இருந்த இந்த இலங்காபுரி என்னும் ஈழமண்டலத்தை உரிமையாக்கி, அவனை அரசாளச் செய்தார் இராமர். (இது தொடர்பாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் தொடர்பு கருதி மீட்டுள்ளேன்)

இந்த விபீஷணன் (சிலர் வேறு அரசனைக் காட்டுகின்றனர்) அரசாண்ட காலத்தில் அவனது சபையில் யாழ்வாசித்து அவனை மகிழ்வித்த யாழ்பாணன் ஒருவனுக்கு தனது அன்பளிப்பாக  “மணற்தீடை” என்ற பரப்பை வழங்கினான்.

அது காடு நிறைந்த பகுதியாகக் காணப்பட்டது அதன்பின்னர் அப்பகுதி யாழ்ப்பாணம் எனப்பெயர்பெற்றது. இதன்கால வரைகள் நிற்சயித்துக்கூறமுயாது உள்ளது. எனினும் இக்காலத்தில் மக்கள் இந்தியாவில் இருந்தும் சிலர் விஸ்தரிப்புக் காரணமாக வந்து குடியமற்றப்பட்டார்கள் என்பது வரலாறு. மக்கள் அதிகரிப்பின் பின்னர் பதிவுகள் வரலாற்றில் வெளிப்படதொடங்கியது. அதன்படி வெளிப்பட்ட அரச வம்சங்களாக...

கூழாங்கைச் சக்கரவர்த்தி (கோளுறு கரத்துக் குரிசில், கூ.ஆரியச்சக்கரவர்த்தி )

இலங்கையில் பொதுவாக பலசிற்றர்கள் இருந்தும் யாழ்ப்பாணத்தை பெற்ற யாழ்ப்பாணனின் காலமுடிவில் அவன் தனக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆழ பிரபல்யாமன வரலாறுகளின் தோற்றப்படி, இவ்வரசன் இந்தியாவில் இருந்த அழைக்கப்பட்டதாகவும், தசரதனின் மைத்தினனின் வம்சாவழித்தோன்றலில் ஒருவன் என்றும், சோழ வம்சத்தில் ஒருவன் என்றும்,  சிக்கல்ப் படுத்துகின்றனர்.

இன்னும் சிலர் 11ம் நூற்றாண்டளவில் இரஜேந்திர சோழனின் படையெடுப்பில் ஆரம்பித்தது என்றும், 13ம் நூற்றாண்டில் கலிங்கச் சக்கரவர்த்தியின் போரெடுப்பில் உதயமானதென்று சிலரும், மட்டுமல்லாது, “பாண்டிவளவன்” என்றொருவன் யாழ்ப்பாணப்பகுதி தகுந்த அரசாட்சி இல்லாததால் அண்மையில் உள்ள பெருந்தேசத்தில் இருந்து ஒருஅரசனை அழைத்ததாகவும், இன்னொரு பக்கம்  செல்லப் படுகிறது.

மேலும், தமிழ்ப் படைகளின் உதவியுடன், பெருங்கூட்டு ஆட்சிநடத்திய சிங்களவருடன் அப்போதைய தலைநகரான பொலநறுவையை கலிங்கத்து சக்கரவர்த்தி போர் செய்து, அவன்மூலம் தனி ஆட்சி நடத்தப்பட்டதாகவும், தனது பெயரை யாழ்ப்பாணத்தின் ஆட்சிக்காக   “கூழாங்கைச் சக்கரவர்த்த2p என்று பெயரிட்டு ஆண்டதாகவும் சுவாமி ஞானப்பிரகாசர், மற்றும் செ.இராசநாயகம் போன்ற அறிஞர்கள் கருதுகிறார்கள்.

எனினும் அக்காலத்திற்கு முன்னிருந்தே ஆட்சிகள் நிலவியது என்பது இதில் இருந்து தெரிகிறது.  இவனது காலக்கணக்கு 13ம் நூற்றாண்டுகள் என்பதே தற்பொதைய கணிப்பீடாகும். இக்காலப்பகுதியில்தான் நல்லூர் இராசதானி கட்டப்பட்டதனால், இவ்வரசனே அனைத்து அரச திட்டங்களையும் யாழ்ப்பாணத்துக்கென அமைத்திருக்கிறான் என்று எடுத்துக்கொள்ள முடிகிறது. எனினும் நல்லூர் மேலும் மெருகுபடுத்தப்பட்டது 15 நூற்றாண்டுகளுக்கப்பின்னரே. காரணம் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள் பொதுவாக இப்பிரதேசத்திற்கு பெரும் முக்கியத்துவம் பொடுத்தமையாகும்.

இவ்வரசனின் பின்னர் “குலசேகர சிங்கையாரியன்”  10 வருடகாலமாக அதாவது கி.பி 1246ல் இருந்து 1256 வரை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான் இவன் கூழாங்கைச் சக்கரவர்த்தியின் மகனாவான். இவன் நாட்டில் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை ஏற்படுத்தி அபிவிருத்தியைத் தூண்டுவிக்கும் பொருட்டு விவசாயத்தைப் பெருக்கினான்.

பின்னர் இவனுடைய குமாரனான “குலோத்துங்கசிங்கையாரியன்” ஆட்சியமர்ந்து தந்தை வழியில் நாட்டை விருத்தி செய்தான். இவனுடைய ஆட்சி 1256- 1279 ஆகும். இவன் பயன்படாது கிடந்த நிலங்களைப் பண்படுத்தி 23ஆண்டு காலம் ஆட்சிசெய்தான்.

இவனைத்தொடர்ந்து இவனுடைய வாரிசாக விக்ரம சிங்கையாரியன் ஆட்சிக்கு வந்தான். 1279- 1302 வரை 23 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவனுடையகாலத்திலிருந்தே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கம் தகராறுகள் இடம்பெற்றிருக்கின்றன. இக்காலத்தில் தமிழர்களைக் கொன்ற குற்றத்திற்காக, இவ்வரசன் சிங்களர் 18 பெயரை மரணதண்டனைக்கும் இன்னும்பலருக்கு சிறைதண்டனையும் கொடுத்ததாக யாழ்ப்பாண சரித்திரத்தைக்காட்டும் ஆவணங்கள் வெளிக்காட்டுகின்றன. இக்காலத்தில் புத்தசமயச் சிங்களவரும், இந்து சமயத் தமிழர்களும் இனவாரியாகவும் சமயவாரியாகவும் பிரிக்கப்பட்டதனால் பல புத்தசமயச் சிங்களவர் யாழ்ப்பாணப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசத்தில் குடியேறினர்.  இக்காலத்தில் இருந்தே சிங்களவர்கள் யாழ்ப்பாhணத்து அரசிற்கு தொல்லை கொடுத்தே வந்தனர்.

இம்மன்னனுடைய இறப்பின் பின்னர், அவனுடைய புதல்வன் வரோதய சிங்கையாரியன் முடிசூட்டப்பட்டான்.  இவன் மிகுந்த அறிவுடைய இறைமையுடைய அரனாவான். 1302- 1325 காலப்பகுதியில் இவன் காலம் இமைந்ததாகக்கருதப்படுகிறது. இவன் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த சச்சரவுகனை சீர்செய்த பெருமையுடையவன்.

இவனைத்தெடர்ந்து இவன்மரபில் அமர்ந்தவன் ”மாத்தாண்ட சிங்கையாரியன்” 1325-1348 இவனுடைய காலத்தில் யாழ்ப்பாணந்தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஆட்கிகள் நடத்திவந்த தலைமைத் துவங்களால் கலகங்கள் ஏற்பட்டது. இக்காலங்களில் யாழ்ப்பாண அரசு மிகப்பலம் பொருந்தியதாக காணப்பட்டது. வன்னியர்கள் பலவழிகளில் கலகங்களை ஏற்படுத்தியும் அதனை அடக்கி ஆட்சியில் அமைதி காணக்கூடிய நிலையில் யாழ்ப்பாணம் திகழ்ந்தது. இவன் அரசாட்சியில் மகிழ்ந்திருந்த மக்கள் இவனடைய மரணத்தில் மனம் நெகுழ்ந்தனர்.

இவனுக்குப்பின்னர், அவனது தனையன் அரியணைக்கு அமர்த்தப்பட்டான் அவன் குணப+ஷண சிங்கயாரியன் என்னும் பெயருடன் ஆட்சிசெய்தான்  தனது தந்தையிலும் பார்க்கச் சிறப்புடன் நாட்டின் பலதுறைகளையும் பெருக்கி ஆட்சிசெய்தான்.

இவனுக்கடுத்து இவன்மகன் ”வீரோதய சிங்கயாரியன்” ஆட்சிக்குவந்தான். இவ்வரசன் காலத்தில் வன்னியர்கள் சிங்களவர்களைத் தூண்டிவிட்டு ஆட்சியைக் குழப்ப எத்தணித்தனர். எனினும் இவ்வரசிடம் அது பலிக்கவில்லை இவன் வெற்றி கொண்டான். பின்னர் வன்னியர்களையும் எதிர்த்து அவர்களைத்தண்டித்தான்  வீரோதய சிங்கராயரின் காலத்தில் பாண்டியருக்கும் யாழ்ப்பாணத்தினருக்கும் நட்பு ஏற்பட்டது.

அதுவாகில், தமிழ்நாட்டில் பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்த சந்திர சேகரபாண்டியனனை எதிர்படைகள் போராடி கைப்பற்றியதால் அவன் யாழ்ப்பாணத்திற்குத் தப்பி ஓடிவந்து தஞ்சமடைந்தான். எனவே, யாழ்ப்பாணத்து அரசனான வீரோதயன் தமிழகத்திற்கு போர் தொடுத்து பகையினை விரட்டி அதனை மீண்டும் பாண்டியனுக்கு ஒப்படைத்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் இது தொடர்பாக தமிழகத்தில் ஆதாரமு சரியாகக் கிடைக்கவில்லை. இருந்தும் அக்காலத்தில் பாண்டியர்களுக்கு மாலிக் கப+ர் என்போரால் கலகம் ஏறஇபட்டதற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆசிரியர் இராசநாயகம் தெரிவிக்கிறார்.

இவனுக்குப்பின்னர் சிறுவயதுடைய ஜெயவீர சிங்கையாரியன் முடிசூட்டப்பட்டான். இவ்வரசன் காலத்தில் கண்டியை ஆண்ட சிங்கள மன்னனான புவனேகபாகு என்பவனுக்கெதிராகப்போர்தொடுத்து, அவனை வென்றான். இக்காலத்தில் பின்வந்த பராக்கிரமபாகு என்பவன் வரிசெலுத்துவதாகச் சொல்லி அரசை மீண்டும் பெற்றுக்கொண்டான். ஜேயவீரன் இறக்கும்வரையில் யாழ்ப்பாண அரசிற்கு அவர்கள் வரிசெலுத்திவந்தனர்.

இவனுக்குப்பின்வந்தவன் குணவீரன் இவன்பற்றிய தகவல் பெரிதாகத் திரட்ட முடியவில்லை எனினும் இவனுடைய காலம் 1414- 1417 என்பது வரலாறு.

இவனுக்கடுத்து கணகசூரியன் ஆட்சிக்கு வந்தான்.   இவன் காலத்தில் தான் யாழ்ப்பாணம் சிதைவிற்குள்ளானது. இவன் காலம் 1440ல் தொடங்குகிறது. இக்காலத்தில் கண்டி ஆட்சியைவிட கோட்டைஅரசு மிகப்பலம் பொருந்தியதாகக் காணப்பட்டது. அக்கோட்டை அரசின் உதவியுடன் சண்பகப்பெருமாள் (சப்புமால் குமாரயா) என்பவன் படையெடுத்து வந்து  கனகசூரியனுக்கு எதிராகப் போரிட்டு அவனைத் தோற்கடித்தனர் இதனால் இவன் தனது புதவ்வர்களோடு இந்தியாவுக்குத் தப்பியோடினான். இவனைத்தொடர்ந்து 17 வருடங்கள் யாழ்ப்பாணத்தை சண்பகப் பெருமாள் ஆட்சிசெய்தான். இக்காலத்தில் நல்லூர் கந்த சாமிகோவிலை இவன்தான் அமைத்தான் என்றும் இவன் சைவசமயத்தான் என்றும் வரலாறு கூறும். அப்பிரதேசத்தை மேலும் சிறப்புறச்செய்தவன் இவன்தான் என்றும் பலர் கூறுகின்றனர்.

இவன் இனத்தால் மலையாளி இவனுடைய தந்தை 6ம் பராக்கிரமபாகுவிடத்தில் நன்மதிப்புப்பெற்ற போர்த்திறனுடைய வீரன். இவளுடைய தந்தைக்கு அரசபரம்பரைப்பெண்ணைக் கண்டிய மன்னன் மணம்முடித்துவைத்தான். அவனுக்கப்பிறந்த இருவரில் ஒருவனே சென்பகப் பெருமாள்(சப்புமால்) இதனால் யாழ்ப்பாணம் கோட்டை அரசிற்குக் கீழ் வந்தது. 1467 ல் கோட்டை அரசன் இறந்த போது, அப்பதவியில் பெரும் வாஞ்சையுடைய இவன் 6ம் புவனேகபாகு என்ற பெயரில் கோட்டையை ஆள அங்கு சென்றான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கனகசூரியன் படைகளைத் திரட்டி, யாழ்ப்பாணத்தை தன்வசப்படுத்திக் கொண்டான். இவன் 1478வரை 11ஆண்டுகள் ஆட்சிசெய்தான்.

இதற்கிடையில் சிங்கைநகர், நல்லூர் என்ற இரு பெயரும் மாறியாறி சரித்திரத்தில் வருவதால், நல்லூர்ப்பிரதேசம் திட்டவட்டமாகத்தெரிகிறது ஆனால் சிங்கைநகர் நல்லூரைக்குறிப்பதா அல்லது வேறு இடத்தைக்குறிக்கிறதா என்ற வினாக்கள் உள. வல்லிபுரப்பகுதி இதையே குறிக்கின்றது என்றும் ஒருசிலர் கருத்து. நுல்லூர்ப்பகுதியில் சிதைவடைந்து கிடந்த மந்திரி மனை என்னும் வாயிற்படி இப்படத்தின் தோற்றம். இது 2000ற்கு முன்னர் இருந்த தோற்றம் இப்போது எப்படியுள்ளது என்பது கேள்விகளாகும்.

இதற்கிடையில் யாழ்ப்புகழ் பெற்ற கோட்டையின் தன்மை இப்போது அறவே அழிந்து விட்டபோதிலும், அது தொடர்புடைய வடிவத்தைக் காட்ட விரும்புகிறேன். யாழ்கோட்டை சிதைவடைந்து விட்டதால் இல்லை, இல்லை சிதைக்கப்பட்டதால் அவற்றின் விம்பங்கள் தற்போது என்னால் எடுக்கமுடியவில்லை எனினும் பொதுவாக பெயர்பெற்ற நட்சத்திர வடிவிலே யாழ்க்கோட்டையும் காணப்பட்டது குறிப்பிடத்ததக்கது.

இந்தக் கோட்டைக்கும், நல்லூர்ப்பகுதிக்கும் கீரிமலைப்பகுதிக்கும் இன்னும் பல்வேறு இடங்களுக்கும் சுரங்கவழிப்பாதைகள் இருந்ததாகவும் சில கருத்துகள் இருந்த போதிலும் இது அவ்வளவாகத்தெளிவு படவில்லை. யாழ் கோட்டைக்கு அருகாமையில் காணப்பட்ட குகைவழிப்பாதையினை தவறுதலாக விளக்கும் பொருட்டுக்கூட இக்கருத்து எழுந்திருக்கலாம்.

இங்கு காட்டப்படுவது மட்டமன்றி சிறிய சிறிய பிரதேசத்தில் ஆழுமைசெலுத்திய சிற்றரசுகள் அல்லது சிற்றாட்சியாளர்களும் இருந்திருக்கக்கூடும் என்பது சரித்திரத்தகவலில் இருந்து காணக்கூடியதாக இருக்கிறது. சரியாக நிர்ணகிக்கமுடியாத பகுதிகளாக இருந்தாலும் யாழ்ப்பாண அரசு பெரும்சுற்றளவில் இருந்திருக்கிறது.

கனகசூரியன் 1478 வரை ஆட்சிசெய்தான் இவனுக்குப்பின் ஆட்சிசெய்தவனுடைய பெயர் எனக்கு இன்னமும் கிட்டவில்லை என்றாலும் 1478-1519 வரை குறிப்பிட்ட ------கயாரியன் ஆண்டான்.

இவனுக்கடுத்து சங்கிலிமன்னன் 1519-1560வரையில் ஆட்சிசெய்தான் இவன் ஆட்சிக்காலத்தில் போத்துக்கீசியர் ஆதிக்கம் அதிகரித்து இருந்தமையால் அவர்களின் ஏடுகளில் சங்கிலியன் தொடர்பாக தரங்குறைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஒரு ஆதிக்கம் உடைய குழுமத்தின் முன்னர் சிறு பலமுள்ள குழுமத்தின் செயல் எதிர்த் தர்க்கத்தின்போது அக்குழுக்களிடையே நல்லபிப்பிராயம் சொல்லப்பட்டதாகச் சரித்திரத்தில் பதிவுகள் குறைவாகவே காணப்படுகிறது.

இலங்கை அரசு த.வி.பு அமைப்பின் செயல் சரியென்று அவர்களைப்பாராட்டுமா? திரு.கருனாவின் செயல் சரியென்று வி.பு.தரப்புத்தான் பாராட்டுமா? கருனா த.வி.பு. இருக்கும்வரையில் அவர் அம்மான் என்றும் அவர் செயல் சிறந்தது என்றும்பாராட்டியவர்கள், 2004ற்குப்பின் அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் பிரிவான ”தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்” என்ற அமைப்பின்மூலம் பங்குபெற்றி பிள்ளையான் என்ற நபரை கிழக்குமாகானத்தின் முதல்அமைச்சராக வந்தும் அவரை ஏற்றுக்கொள்ளாமல், முஸ்லீம் மக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில், அவர் பிளவை ஏற்படுத்துகிறார். என்று, சுமைகள் சாத்தப்படவில்லையா? பிள்ளையான் பதவிக்கு வந்து எந்த எவ்வித நற்காரியமும் செய்யவில்லையா? அவை ஏன் வெளிவரவில்லை?

இல்லை, பிள்ளையான் மூலம் தமிழர்களுக்கு ஒரு சந்தர்ப்பங்கிட்டியுள்ளது அவருக்கும் ஊக்கம் கொடுத்துப்பாத்தால் என்ன? என்று, சந்தர்ப்பம் வழங்கினால் தப்பாய்ப் போய்விடுமா?

அது எப்படி?
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குக் கிடைக்காத பதவி இன்னொரு தமிழருக்குக்கிடைத்துள்ளது?!!!

இத்தனை வருட காலமாக போட்டியிடும் கூட்டணிக்குக்கிடைக்காத பதவி பிள்ளையானுக்குக்கிடைத்துள்ளதே. ஏன் மகிழ்ச்சி வரவில்லை ஏன் ஊடகச் சாதனங்கள் பாராட்டவில்லை?

அப்படிப் பாராட்ட மறுப்பது சரியேயென்றால் தமிழர்கள் யாரும் தேர்தலில் நிற்காது, இருக்கும் பதவியில் இருந்து விலகியிருக்கலாமே! உங்களுக்குக்கிடைத்தால் இனிக்கும் மற்றவருக்குக்கிடைத்தால் கசக்னுகுமா?

கருணாவிற்கு ஐக்கிய ராச்சியத்தில் தண்டணை கிடைக்க வேண்டும் என்று எல்லாரும் கங்கணங்கட்டினீர்களே கருணா யார்? கடந்த காலங்களில் அவரின் பங்களிப்புத்தான் என்ன?

ஆரம்பத்தில் த.வி.பு தவறாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தோர், தற்போது கருணாவைச் சாடினர். இறுதியான அறிக்கைகளில் இலங்கை அரசே இதற்கு உடந்தையாக இருக்கிறது என்ற முடிவு எழுந்துள்ளது. இப்போது, முன்பு சாட்டப்பட்ட குற்றங்கள் என்ன ஆச்சு? இது தொடர்பாக மனித நேய அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்;

மீளத் தலைதூக்கும் பயங்கரம்: இலங்கையில் ‘காணாமல் போதல்கள்’ மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு

என்ற தலைப்பில்,

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் அதற்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கமானது அதன் மோசமான இயலாமையையே வெளிக்காட்டி இருக்கின்றது. கடத்தப்பட்ட அல்லது “காணாமல் போன" தமது உறவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம் கடமையைச் செய்வதில் தவறியுள்ளனர் என்றே மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் நேர் காணப்பட்ட பல குடும்பங்கள் தெரிவிக்கின்றன. 
என்றும்,
இலங்கையில் “காணாமல் போதல்கள்" என்பது மிக நீண்டகாலமாக ஆயுத மோதல் செயற்பாட்டுடன் இணைந்தே நடைபெற்று வந்துள்ளது. 1987 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் இடதுசாரி சிங்கள தேசியவாத அமைப்பான ஜனதா விமுத்தி பெரமுன மேற்கொண்ட குறுகியகால ஆனால் மிக வன்முறையான எழுச்சியின்போதும், தமிழ் தேசியவாத அமைப்பான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்@ர் யுத்தத்தின் போதும் ஏற்;பட்ட ஆயிரக்கணக்கான “காணாமல் போதல்களுக்கு” அரசாங்கப் படைகளே பொறுப்பு என்று நம்பப்படுகின்றது.

தமிழ் வரலாற்றில் இலக்கியத்தில் மட்டும்தான் தமிழர்கள் நல்லவர் போலும். ஏன் இக்கருனாவின் செயல் விடுதலைப்புலிகளின் ஒரு அரசியல் திட்டமாக இருந்திருக்கக்கூடாது? அத் திட்டப்பாதை சறுகியதன் காரணத்தால் தவறு ஏற்பட்டிருந்தால்? இதை எப்படி எடுத்துக்கொள்வீர்! 35 வருடங்கள் பெறுத்த மக்களால் ஒரு சிலவருட மாற்றுப்பாதையை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?.

அவர்கள்தானே த.விபு.ளுடன் இருந்து பல வருடங்கள் செயற்பட்டவர்கள். பல பாராட்டுப்பெற்றவர்கள் நடந்ததை மறந்து விட்டீர்களா?

நமக்குள்ளே இத்தனை தாக்கங்கள் இருக்கும் போது, அன்னியனா சங்கிலியனை நல்லவன் என்று எழுதப்போகிறான் சரித்திரத்தில்?.

அன்னியன் என்று சொல்லும் போது, தமிழர்களுக்கு சிங்கள இனவாதிகள், மற்றும் அமைதி விருப்பற்ற அமைப்பும் உட்படத்தான் சொல்கிறேன்.   

சங்கிலியன், போத்துக் கேயருக்கு எதிராகச் செயற்பட்ட மன்னன். அவர்கள் வருகையினையும் ஆதிக்கத்தையுங் கொஞ்சங்கூட விரும்பாமல் எதிர்த்து நின்றவன். அது மட்டுமல்லாமல்,  போத்துக் கேயர் அரசியலில் தலையிடுவதுமல்லாமல் கத்தோலிக்க மதத்தினைப் பரப்புவதிலும் மிகுந்த அக்கறைகாட்டினர். இதனால் மன்னார்ப்பகுதியில் பெருமளவிலான மதமாற்றம் இடம் பெற்றது. இக்காலத்தில்தான் புனித சவேரியார் சமயப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

எனவே சங்கிலிமன்னன் கிறீஸ்தவமதத்திற்கு மாறியவர்களையெல்லாம் வெட்டிக் கொன்றான்.  இப்படி கிறிஸ்தவர்களை வெட்டிக்கொன்றதினால் கோபமடைந்த போத்துக்கேயர் சிங்களவரின் உதவியுடன் சங்கிலி மன்னனுக்கெதிராகப் போர்தொடுத்தது. இப்போர் 1560 ஆண்டில் நடந்தது.

பலமும், அனுபவமும் கொண்ட போத்துக்கேயர், நல்லூரைக்கைப்பற்றினர். அவ்வேளையில் சங்கிலியன் வன்னிப்பகுதிக்குத் தப்பி யோடினான். பின்னர் அவனைப் பிடிப்பதற்கு பல முயற்சிகள் செய்தும் முடியாது போகுங்காலத்தில், தான் போத்துக்கேசிய ஆளனருக்கு வரி செலுத்துவதாகச் சொல்லித் தகவல் அனுப்பினான். அதனை ஏற்றுக் கொண்டார் ஆளுனர்.

இச்சமயத்தில் மீண்டும் தனது தேசத்திற்குத்திரும்பிய மன்னளன் வரி கொடுக்காமல் அவர்களைத் துரத்திவிடுவதிலே கருத்தாய் இருந்து தக்கசந்தர்ப்பத்தில் மக்கள் புரட்சியைத் தொடக்கி அதன்மூலம் போதுதுக் கேயர் இருந்த இடத்தையெல்லாம் முற்றுகையிட்டும் கொலைசெய்தும் பழிவாங்கினான். போத்துக்கேயரின் தகவலின் படி சங்கிலியன் மக்களால் விலக்கப்பட்டவன் என்று இருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகத் தெரியவில்லை. (இவ்வாறான தகவல்கள் தற்போதுந்தானே இடம்பெறுகிறது.)

இதன் பின்னர் பெரியபிள்ளை எனப்பட்டவன் அரசனானான். ஜேகராஜசேகரன் என்ற அரச பட்டப் பெயருடன் ஆட்சியமர்ந்தான். (சரித்திரத் தெளிவு குறைவாகக் காணப்படுகிறது). 1570வரை  இவருடைய தகவல் குறைவாகக் காணப்படுகிற போதிலும் இவன் மகன் ஆட்சிசெய்தமையால் அவருக்குமுன் இவர் ஆட்சிசெய்திருக்க வேண்டும்.

இதன் பின்னர் புவிராஜபண்டாரம் என்பவன் 1580-1591 வரை யாழ்ப்பாண ஆட்சியில் இருந்தான். இவன் ஆட்சியை விரும்பாத போத்துக்கேயர் பலவழிகளிலும் இடைய+று செய்தனர். பின்னுள்ள அடைப்புப் பகுதி வரலாற்றுப்பக்கங்களில் உள்ள பகுதி
(கண்டி அரச மரபினரின் வரலாற்றோடு தொடர்புள்ள சில நிகழ்வுகள் மூலமே புவிராஜ பண்டாரம் முதன் முதலாக அறியப்படுகிறான். 1582 ஆம் ஆண்டையொட்டிய காலப்பகுதியில் சீதாவாக்கை அரசன்இ கண்டி மீது படையெடுக்கவேஇ கண்டி அரசன் குடும்பத்தோடு திருகோணமலைக்கு ஓடுகிறான். அங்கே அரசனும் அரசியும் இறக்கஇ அவர்களுடைய சிறுவயது மகளும்இ மருமகனான இளவரசன் யமசிங்கனும் யாழ்ப்பாணத்துக்கு வந்து புவிராஜ பண்டாரத்திடம் அடைக்கலம் புகுகின்றனர். இந்தச் சிறுமியே பிற்காலத்தில் கண்டியரசனான விமலதர்மசூரியனை மணந்து கண்டி அரசியான டோனா கத்தறீனா என்பவளாகும்.)

புவிராஜபண்டதரத்தை போத்துக்கேயர் கொலைசெய்து அரச வாரிசானா பெரிய பிள்ளையின் மகனை பதவியில் ஏற்றினர். இது தொடர்பான இப்போரில்  எதிர்மன்ன சிங்கனும் பங்கு கொண்டதால், அரசியலில் பாரதூரமான உட்பிளவுகள் வெளியில் தெரியவில்லை.

பின் எதிர்மன்ன சிங்கன் என்பவன் பதவிக்கு வந்தான். இவன் தந்தை முன்னைய அரசரான பெரியபிள்ளை, எட்டாம் பரராஜசேகரன் என்னும் பட்டப்பெயருடன் முடிசூட்டப்பட்டான். இவன் இருந்த போதிலும் எதற்காக புவிராஜபண்டாரம் பதவியிலிருந்தார் என்பது வினாவாக இருக்கிறது. வயது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  ( 1591 – 1616) இவர் மரணத்தறுவாயில் அரசராகப் பதவியேற்றவர் ”அரசகேசரி” என்றொரு புலவராவார்.

தனது மகன் சிறுவனாக இருந்தமையால் ஆட்சிப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் அரசன். எனினும் சங்கிலி குமாரனால் இவர் கொல்லப்பட்டார். அரசகேசரி, தமிழ், சமஸ்கிருதம் போன்றவற்றில் வல்லவர்.

சங்கிலி குமாரன் 1615 -1619வரை காலப்பகுதியாகும். இவன்தான் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி அரசனாவான் இவ்வரசனுக்குப் பின் போத்துக்கேயரின் பலமான அதிகாரத்திற்குட்ட தேசம் சின்னாபின்னமாகச் சிதைவடைந்தது. இங்கு இரு சங்கிலி மன்னர்கள் காட்டப்படுகின்றனர். இவனோ மிகச்சிறு வயதுடையவன்.

போத்துக்கல் (லிஸ்பன்-தலைநகர்)  தேசத்தவர் இலங்கையில் 1620ல் பலமாகக்காலூண்றியிருந்தனர். இவ்வேளையில் அரசிற்கெதிராகப் போர்தெடுத்து அரசனைப்பிடித்து தலையை யெட்டிக் கொன்றனர். இவர்கள் 1505ல் தொடங்கி 16590இல் இருந்து அதிகாரஞ்செய்யத் தொடங்கினாலும,; யாழ்ப்பாண ஆட்சியில்  1619 தொக்கம் 1658வரை பலமாகச் சிக்கியது.

இதன்பின்னர் அப்பதவிக்கு, காசிநயினார் அமர்த்தப்பட்டார். இவன் நிச்சயமாக சதிமூலமே பதவியேற்றிருப்பான் காரணம் இவன் அரச வாரீசுக்கு உரிமையில்லாதவன். எனினும் மன்னார் போத்துக்கேயரிடம் முழுதாகச் சிக்கியிருந்தது.

யாழ்ப்பிரதேசத்திற்கு ஏற்பட்ட சாபக்கேடு அப்போதும் இருக்கத்தான் செய்தது. பதவிக்குரியவனில்லாததால் அவனை அகற்றி வேறு ஒருவனை அரசனாக்கி காசிநயிநாரைச் சிறைவைக்க இவனுடைய ஆதரவாளர்கள் புதிய அரசனைக் கொன்று மீண்டும் இவனை விடுவித்து அரசனாக்கினர். இதனால் அவனை அழிப்பதற்கு வகைதேடிய போத்துக்கேயருக்கு ஒருவர் கிடைக்காமலா போய்விடுவார்.

நம்நாட்டில் பணமும் பயமும்தானே பேர்போனது. வேலையாள் ஒருவருக்குப்பணங் கொடுத்து அரசனை நஞ்சுவைத்துக் கொன்றனர்.

இதனைத்தொடர்ந்து ஒல்லாந்தர் காலம் திணிக்கப்பட்டது இது 1658-1796 வரையாகும். அண்ணளவாக ஒவ்வொரு அன்னியரும் 100 வருடத்திற்கு இலங்கையினை வறுகிக்கொண்டு போனர்கள். இப்படியே யாழ்ப்பாண அரசுமட்டுமன்றி, இலங்கையின் இறைமையே சிதைவடைந்து சின்னாபின்னமாகியது. இறுதியாக பிரித்தானியர் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கும் காலத்தில், இலங்கைக்கும் சுதந்திரத்தைக் கொடுத்து விட்டுச் சென்றனர். கொடுத்தவர் அக்காலத்தில் ஏற்பட்ட கருத்துக்குக்கூட முன்னுரிமை காட்டவில்லை. பலர் இரு இனத்திற்கும் தனி ஆட்சியை அமைக்கக்கோரியும் அதை நிலைப்படுத்தாமல் சென்றனர்.

அக்காலத்து ஒல்லாந்தர் என்போர், தற்காலத்து நெதர்லாந்தாகும். இதனை கொலண்ட் என்றும் அழைப்பர்.
இது, 1992 ல் ஆரம்பித்த ஐரோப்பிய
ஒன்னிய நாடுகளில் ஒன்றாகும் (ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்ரஸ், செக்குடியரசு, டென்மார்க், எசுதோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிறீஸ், அயர்லாந்து, இத்தாலி, லித்வியா, லித்துவெனியா, லக்ஸம்ப+ர்க், மால்த்தா, நெதர்லாந்து, போலந்து, பேர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சுலொவேனியா, ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய இராச்சியம்) போன்ற 27 நாடுகள் தற்போதைக்கு (2008) இதனுள் அடங்கும்.

1796 தொடக்கம் 1948வரை  பிரித்தானியர்கள் யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்தனர்.

பிரித்தானியர் என்று செல்லப்படுவது தற்போதைய ஐகியஇராட்சியம் ஆகும்.  இதன் தலைநகரம் லண்டன்.

இதில், டைசியாக ஆண்ட ஆங்கிலேயரின் போக்கில்தான், இலங்கையின் இரு இனத்தவருடைய அடிப்படைநிலையும் தங்கியது.

இவர்கள் இலங்கையில் இருக்கக்கூடிய சொத்துக்களைமட்டும் பறித்துக்கொண்டு போகவில்லை, தமிழர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறிகொடுத்துப் போய்விட்டார்கள். போனவர்கள் எத்தகைய பிரச்சினை இலங்கைக்கு அரசியல் ரீதியில் வந்தாலும், நல்லபிள்ளைக்கு நடித்து பேசாமல் இருந்துவிடுகிறார்கள்.

நோர்வே அரசிற்கு எழுந்திருக்கும் இரக்கங்கூட இங்கிலாந்து அரசிற்கு எழுவதில்லை. தமிழ் ஈழப்போராட்ட தகராறில் தலையிடக்கூடிய நடுத்தரம் நிற்கக்கூடிய ஒரேயொரு நாடு, உரிமையும் அதிகாரமும் கடமையும் உள்ள ஒரேயொரு நாடு பிரித்தானியா மட்டுமே!.

அவர்கள் எமக்கு மீழத் தரவேண்டிய சொத்துக்களுக்காகத்தான் இலங்கையரை அகதி அந்தஸ்து கொடுத்தும், வாழும் வதிவிட வசதி கொடுத்தும் பராமரிக்கின்றனர். சும்மா மனிதாபிமான ரீதியில் உதவிசெய்யவில்லை. 

இப்போது இலங்கை தனிநாடாக இருந்த போதிலும், 60 வருடங்களுக்கு முன்னர் அதன்னிலை என்ன? ஆட்சி அதிகாரங்களை இலங்கையிடம் ஒப்படைக்கும் போது, அரச அறிவுடைய பிரித்தானியர்கள், அதிகாரங்கள் பறிபோய் 300வருடங்களுக்கமேல் அடிமைப்பட்டுச் சின்னாபின்னமாகியுள்ள நாட்டினை எப்படிச்சீர்செய்திருக்க வேண்டும்?  ஏற்கனவே அரசாண்ட மூன்று பெரும் பிரிவுகளும், இரண்டு பெரும் இனப்பிரிவுகளுமுள்ள தேசமாய் இருக்கும் போது, அவற்றை எப்படி இனவேற்றுமையினைக்கருத்திற் கொள்ளாது விட்டனர்?.

ஆரம்பகாலத்தில் தனிய சிங்களவர் சுதந்திரஅரசிற்கு வித்திடவில்லை, தமிழர்களும் முன்மூச்சாகச் செயற்பட்டனர். 1917ல் சேர் பட்டம் பெற்ற திரு.பொன்னம்பலம் அருணாட்சலம், தலைமையில் பிரித்தானியரின்  ஆட்சிக்கெதிராக புதிய அரசியல் சீர்திருத்தத்தை கோரி பாபெரும் கிழற்சியைத் தெடுத்தார். 

clip_image002[6]பிரித்தானிய ஆட்சியாளரால் நியமிக்கப்பட்ட “டொனமூர்” விசாரணைக் குழவினர், 1928ல் சமர்ப்பித்த அறிக்கையில், அப்போதிருந்த மானிங் சேனாதிபதி கூறியது போல் இல்லாமல் மாற்றுக்கருத்தினையே தெரிவித்தமையே, இப்போதுள்ள நிலைக்குக்காரணம்.

“வகுப்பு முறைப்படியே சமூக நடை அமைந்திருக்கிற படியால், வகுப்புப்பிரதிநிதித்துவமே ஏற்றது” இப்படி வரலாற்றில் சேனாதிபதி மானிங் 1920 காலப்பகுதியில் எடுத்துக்காட்டினார். ஆனால் வகுப்புப்பிரதிநிதித்துவம் வழங்கப்படாது, தற்போதைய இனப்போராட்டத்தில் தமிழர்களைத்தள்ளி, சுதந்திரத்தின் பின் நாடுகள் முன்னிலைக்குச் சென்றிருக்க இலங்கைமட்டும் பின்தங்கிய நிலையிலும் அதிக இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

clip_image002[8]2லட்சம் பேருக்குமேல் நாசத்துக்குள்ளாக்கிய செயல் கடந்த காலத்தில், இரண்டாம் உலகப் போரில் இடம் பெற்றதை மறந்தா போனீர்கள்? அதில் இழக்கப்பட்டதிலும் அதிகத்தையோ நீங்கள் இழந்தீர்கள்? இன்றும் அதன்பாதிப்பு இல்லாமல் இல்லை, கண்ணீர் பெருக்கெடுத்து ஓடக்கூடிய மனித நேயமற்ற செயலது. அதைப்பார்த்தும், இன்னும் அழிவுப்பாதை மனிதனுக்குத் தேவைதானா என்ற கேள்வி யாருக்கும் எழுந்ததாக இல்லை!.

இப்படியே போகுமானால் எமது இலங்கையில் பிறக்கும் ஈழத்தவருக்குஞ்சரி சிங்களவருக்குஞ்சரி எதிர்காலச் சந்ததியினரின் உடல் நலம் மற்றும் மனநலம் போன்றன முற்றாகப் பாதிக்கப்பட்டு, காலங்காலமாக அழியாத இழிவைத் தேடிக் கொடுத்துவிடுவோம்.  போரின் காரணமாகப்பயன்படுத்தும் ஆயதவெடிப்புகளினால் குழந்தைகளின் மற்றும் பெரியவர்களின் இரத்தத்தில் நஞ்சு கலந்து தீர்க்கமுடியாத வியாதிகள் தேன்றி எமது எதிர்கால ஆயுளினைக்குறைத்துவிடும்.

சின்னஞ்சிறு இலங்கைத்தீவு, அது சொர்க்க ப+மியாவதற்கு என்ன தடை? ஏன் இந்த உயிர்ச் சேதம்? உலக வரலாறு அவ்வப்போது ஆயிரம் ஆயிரம் படிப்பினையினைத் தந்தும் இலங்கை மாதாவின் கண்ணீரைத் துடைக்க ஏன் இலங்கை அரசு தயாரில்லை? செக்கோ, செலாவோக்கியா! இஸ்ரேல்!  கோசோவே! இந்தியா! அமேரிக்கா போன்ற அசரசியலில் இடம்பெற்றதென்ன?

clip_image002[4]தொஒரு காரணத்தால் நாடு பிரிக்கப்பட்டுமாயின், இப்போது வரை இழந்த சிங்களச் செல்வங்களை எப்படி மீட்பது? நாட்டின் சூழல் மாசினை எப்படித்தவிர்ப்பது?. வரலாற்றில், கடந்த காலத்தில் இருந்து எப்படி மீழுவது?.

இன்னும் காலம் பிந்தவில்லை. இனியிருக்கும் காலத்தையும் காத்துக்கொள்ள வழியிருக்கிறதே!
06-08-1945 யப்பானில் அணுகுண்டு போடப்பட்ட கிரோசிமா, நாகசாகி பிரதேசங்களைக்கொண்ட நாடே முன்னுக்கு வந்துவிட்டன. ஆனால் இலங்கை???

எனினும், ஆரம்பத்தில் அரசியலில் ஏற்பட்ட தவறுகளுக்கும், தற்கால இலங்கையின்தேசத்தில் மக்கள், பொருட்கள், சூழல்மாசு, பாரம்பரியச்சிதைவு, உலகத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கத்திற்கும் யார் பொறுப்பெடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?...

Nessun commento:

Posta un commento