martedì 9 febbraio 2010

தீவிர வாதச் சிந்தனைகள் சீர்திருத்தப் படட்டும். - Arugan

Arugan.comபோர்க் கருவிகள் மண்ணுக்குள் புதைக்கப்பட வேண்டிய அத்தியாயம். உலகத்து இராணுவ வீரர்கள் புதிய இராகம் இசைக்கட்டும். அவர்கள் உடுதுணிகள் பூமணம் வீசட்டும். தீவிர வாதச் சிந்தனைகள் சீர்திருத்தப் படட்டும்.

ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட சில வரிகள் இப்போது மீண்டுஞ் ஞாபகத்துக்கு வருகிறது...

 

யார் நடத்திய வேள்வியிது?
வேரோடு வெள்ளம் கொண்ட தாகத்துக்குப் -பல
நூறாயிரம் பேர் மண்ணோடு போராட்;டம்.
இயற்கையின் சமநிலை சீர் கெட்டதோ!!
மரணத்தின் வழியாலே பகிர்வுண்டதோ!!!

ஓ இயற்கையே!!
உன்சீற்றத்தைக் காட்டென்று
யார் கேட்டார்??!!
உன் தோற்றதை காட்டென்று
யார் கேட்டார்??!!
யார் நடத்திய வேள்விக்கு
நாமிங்கு பலியானோம்!!

இத்தோடு உங்கள் போர் கொடிகளை
குளிருக்குப் போர்வை ஆக்குங்கள்.
ஆயுதங்களை விளைநிலத்தில் களை பிடுங்கும்
கருவிகள் ஆக்குங்கள.;
இயற்கையின் அகோரத்திலும் பார்க்க
உங்கள் “பற்று” ஒன்றும் பெரிதல்ல!!!!
ஒரு நொடியில் அழித்துவிடக்கூடிய
அனர்தத்திலும் பார்க்க – உங்கள்
ஆணவ அதிகாரம் ஒன்றும் பெரிதல்ல!!!!

இயற்கையின் சமநிலை பற்றாக் குறைதனை
சீர் செய்யும் அதிகாரம் அதனிடம் உண்டு,
அழிவுக்குக் காரணமான அமைப்புகளுக்கு
இயற்கைவிடும் எச்சரிக்கை தான் இந்த சமிஞ்சை.
போர்க் கொடிகளால் பூமியில்
ஏற்படும் கொதிப்பின் விளைவை
பெருங்கடல் கூட தணித்துக் கொள்ளமுடியவில்லை!!!!
உங்கள் பூஜைகளுங்கூட!!!...
உலகத்தின் ஆதிக்க அதிகார வெறியின் விளைவு
இயற்கையின் அற்ப தும்மலுக்கும் ஒப்பாகாது.
ஆக்கத்தை மட்டும் பொறுப்பெடுங்கள்
அழிவின் பொறுப்பு அனர்தத்திடம் …

“ இதுதானா மில்லெனிய மாற்றம்?”  2004ம் ஆண்டு வெளியிட்ட நாவலில் இருந்து   …

Nessun commento:

Posta un commento