lunedì 8 febbraio 2010

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரிலேயே இலங்கை அரசியல் நடக்கிறது…

LTTE - DEAD_PIRABA புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரிலேயே இலங்கை அரசியல் நடக்கிறது…
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்குக்கிடைக்கவிருந்த தேர்தல் சக்கியை முறியடித்த கூட்டமைப்பினர் இந்தமுறையாவது சரியான சாணக்கியத்துடன் செயற்படுவார்களா என்று பார்க்கலாம்… என்று விட்டுவிட முடியாது. இம்முறை எடுக்கும் முடிவு மிகச்சரியானதாகவும் துல்லியமானதாகவும் எடுக்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும்.
ஊண்மையான நிலை எதுவென்றால் தமிழர்கள் யாருக்கும் தமிழீழம் என்ற ஒரு தேசம் கிடைப்பதிலோ அல்லது தமிழர்கள் நிலையான நிம்மதியான வாழ்வை வழங்க எத்தணிப்பதையோ முற்றாக விரும்பவில்லை என்றே தெரிகின்றது.


ஆரசியல் சாணக்கியம் தெரிந்த எத்தனையோ பேர் இன்னும் உயிருடனும் செயற்பாட்டுடனும் இருக்கத்தான் செய்கின்றனர். அரசியலுக்கு நரைவிழுந்தால் மட்டும் போதாது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புpரபாகரன் போராட்டத்தில் ஈடுபடும் போது அவருக்கு எத்தனை வயது என்பதனை சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்… மட்டுமல்லாது, அவருடைய அரசியல் தொடர்போ அல்லது, இராணுவத்தொடர்போ மிக நெருக்கமாகவும் இருந்ததில்லை என்பதனையும் புரிநஇது கொள்ள வேண்டும்.
எனவே இன்று நடக்கவிருக்கும் தேர்தலை தமிழ் (புலத்திலுஞ்சரி, அகத்திலுஞ்சரி) மக்கள் எவ்வாறு கையாளவேண்டும்???? இதற்கு 2008ல் வெளியிட்ட “மலரும் மா தமிழீழம்” என்ற நாவல் தக்க பதிலைத்தருகின்றது. அதன் ஒரு பகுதி கீழே…


தமிழீழப் போராட்டம் யார் தலைமையிலாயினும் எவ்வாறாயினும் நடக்கட்டும். தமிழர்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற அரசியல் வாதிகள் உதவட்டும். இதில் தமிழ் அரசியல் வாதிகள் தலையிட்டால் நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகக்குறைந்த சாதாரண கோரிக்கைகள். அதனை நிறைவேற்ற முன்வரும் அரசில் அங்கம்வகிக்கும் அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உண்மையில் உதவ முன்வந்தால், இங்குகாட்டப்பட்டுள்ள அஞ்சல் தொடர்புமூலம் மக்களுக்கு உதவமுடியும் என்பதை, இத்தாலியில் வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்புள்ளவன் என்ற வகையில் உறுதிப்படுத்துகிறேன்.

போலித்தமிழ் அமைப்புக்கள், போலித்தமிழ் அமைச்சர்கள் இதற்கு ஒத்துவரமாட்டார்கள். அவர்களுடைய பதவிகள் அடுத்த தெரிவில் சின்னாபின்னமாக்கப்பட்டு, அவ்வமைப்பும் சீர்குலைக்கப்பட வேண்டும். அதற்கு பலம் பொருந்திய விடுதலைப்புலிகள் தலைமை பீடம் ஒத்துளைக்க (முன்னைய பதிப்பு)  வேண்டும்.  துணைக் காரியாலயங்கள் இவ்வாறான செயற்பாட்டினைச் சிந்திக்கக் கூட முடியாது என்பதனை  நன்கு அறிவேன். எனவே, தலைமைப்பீடம் இதற்கு உந்துதல் கொடுத்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் தேவைகளுக்கும் சிரமங்களுக்கும் தீர்வுகாணக்கருத்தெடுக்கவும், இதன் மூலம் ஈழத்தில்  உள்ள மற்றைய உறவுகளுக்கு மேலும் உதவமுடியும் என்பதனையும், தமிழர்களின் தாயகத்தையும் திடப்படுத்தமுடியும் என்பதனையும் உறுதிப்படுத்துகிறேன்.
சிங்கள அரசு பல வரலாற்றூடாக, பெயர்களையெல்லாம் சாதூர்யமாக மாற்றுகிறது. அதாவது, செல் இறுதியில் அசைவினை மாற்றித் தமிழ்ப் பெயரையும், வேற்று மொழிப் பெயரையுங்கூட சிங்கள மொழிப்பெயராக மாற்றிவிடுகின்றனர். வவுனிய, பண்டாராவன்னிய, யாழ்ப்பாணய, என்று… பிரபாகரனின் செயற்பாடு சிறப்பாக இருந்தால், காலப்போக்கில் “பிரபாகரணய” என்று வி.பு.ன் தலைவரைக்கூட சிங்களவராக வரலாற்றில் மாற்றிவிடுவார்களோ? ஏன்று கூட எண்ணத் தோன்றுகிறது.  
இலங்கை அரசு, அரசியல் காய்களை மிகத்திறனாக நகர்த்திவருகிறது, மாகானங்களுக்கு ஜனநாயக தேர்தல் மூலம் முதல் அமைச்சர்களை நிர்ணகித்து, தனது அரசியல் திறனை உலகிற்குக்காட்டி, வி.பு. கட்டுப்பாட்டில் உள்ள பகுதியினை தீவிரவாத நடவடிக்கை என உறுதிப்படுத்த முனைகிறது.

எனவே விரைவில் அரசு, அரச சார்பில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரிகள், வி.பு., உலகச் சமாதான அக்கறையாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றோர் இதில் அக்கறை காட்டவேண்டும் என்று விரும்புகிறேன். விரைவில் இச்சின்னஞ்சிறு தீவு, உலகின் அறிவும் திறமையும் போட்டிபோடும் இடங்களிலெல்லாம் இடம்பெறவேண்டும்.

இதற்கு “மலருமா?”, என்ற வினாவா, அல்லது “மலரும் மா!” என்ற மாபெரும் தமிழீழமாய் மிழிருமா,  அல்லது இருக்கும் வழங்களும் அழிக்கப்பட்டு மேலும் உயிர்கள் இழக்கப்பட்டு சுடுகாடாகுமா?...

காலம் என்றும் எங்கள் கையில் மட்டுமே!...
என்று இந்த நாவல் முடிவடைகின்றமை இன்றும் பொருந்தக்கூடிய தீர்க்க தரிசன நூலாகக்காணப்படுகின்றது. இத்தோடு அந்த நூலின் ஆசிரியரின் பக்கத்தகவலையும் தருகின்றேன்…

என் பக்கங்கள்

பொங்கு மலை எங்கிருந்து பொருமி வந்தாலும்
அங்கெல்லா மெங்கள் தமிழ் மணங் கமழுமையா!

கடந்த கால நடைமுறைகள் எமக்குக் கற்றுத்தந்த பாடம்தான் என்ன? இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வுகள், வெறுங்கனவுகளோ?!... என்று, எண்ணத்தோன்றுகின்றது.

இலங்கையில் தமிழர்களின் உயிர்ச் சேதத்தையோ, வாழ்க்கைச் சிதைவினையோ யாரும் எண்ணிப்பார்த்ததாக இல்லை.

அவரவர் தமது தேவைகளையும், இலாபத்தையும் காத்துக்கொள்வதோடு, தமக்கு முக்காடும் போட்டுக்கொள்கின்றனர்.

இலங்கை அன்னையின் இரத்தக்கறையும், வியர்வைத்துளியும் துடைக்கப்பட வேண்டுமென்றால், இரு பிரிவினரும் ஒரேயொரு கட்டமைப்புக்குள் வந்தாலொழிய பிளவுகள் தீர்க்கப்படப் போவதில்லை.

2003ல் வெளியிடப்பட்ட “அநுபூதி” என்னும் நூலில் குறிப்பிடும் “சாகடிக்கப்படும் சரித்திரம்” என்ற பகுதியில் தமிழரின் வரலாறு பற்றிச் சற்றுச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.

மழுங்கடிக்கப்பட்ட சரித்திரத்தை மீட்டெடுக்கவேண்டிய கடப்பாடு யாருக்குண்டு? அநுப+தித்தனமான எழுத்தாளரை எப்படி இனங்கண்டு கொள்வது? இவையெல்லாம் தொடுக்கப்பட வேண்டிய வினாக்களல்ல செயற்பட வேண்டிய அனர்த்தங்கள்.

2006ல் நின்று பார்க்கும் பொழுது, இலங்கை அரசியல் வாதிகள் அரசியல் அறிவில் அநுபவம் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர் என்பது ஐயமில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளோ தாம்தான் அரசியலை நன்றாய்க் கற்றவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலத்தை அதிகரித்ததும், உலகிற்கு வெளிக்காட்டியதும் சிங்கள இனவாதிகள் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கவ்வளவு உண்மை, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரசியலைக் கற்றுக்கொடுத்த மேதாவிகளும் அவர்களென்பது.

ஆனால், தமிழீழவிடுதலைப்புலிகள் இராணுவ நடவடிக்கையில் அதிகம் பாராட்டக் கூடியவர்களாகவுள்ளார்கள். எனினும், அரசியலில், சிங்கள அரசியல் வாதிகள் தற்போது மாமேதைகளாகிவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் அரசியல், முஸ்லீம் அரசியல் மட்டுமல்லாது சிங்கள அரசியலிலும் பாடத்தைக் கற்பிக்கிறார்களே!!!

தமிழர்கள் பக்கம் ஒருவிடயத்தைப் பதித்தாகவேண்டும். அதாவது, தமிழீழ ஆதரவாளர்கள்-விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், இவற்றிற்கிடையில் வேறுபாடு உண்டா இல்லையா???

இந்த நூல் பலருடைய சிரசில் பாரத்தை ஏற்றப்போகிறது என்பது ஒருபுறம் இருக்க, எதிர்கால வரலாற்றுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஒரு சரித்திரக் கையேடாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழர்கள், ஈழம், வரலாறு, எதிர்காலம்... என்று பார்க்கும் போது, நிர்மாணத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் தமிழீழச் சமுகத்திற்கு, “எதிர்காலம்” எட்டிப்பார்க்கக்கூடிய ஆழத்தில் தென்படக்கூடாது என்பதிலும், நையாண்டித்தனமுடையதாக அமைந்து விடக்கூடாது என்பதிலும் கருத்தாய் இருக்க வேண்டும்.

இதில் தமிழ் நிலை தொடர்பாக பல்வேறு சிந்திக்கும் சிதறல்கள் திணிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், தமிழோ அல்லது அத்தமிழர்களோ, சரித்திரத்தில் புதியவர்களல்ல என்பதனை விளக்குவதற்கே!

விடுதலைப் புலிகளுடைய ஆரம்பகாலத்துப் போக்கும், அத்தலைமைத்துவத்தின் எண்ணத்திற்கும்,  தற்காலத்தில் அவர்கள் பெயரில் உலகநாடுகளில் ஈடுபடுபவர்களுடைய போக்கும் மீள்பரிசீலனை ஒன்றை  அவ்வமைப்பின் தலைமைத்துவத்தால் எடுக்கப்பட வேண்டும் என்பதனை இவ்வேடு  குறிப்பிட்டுக் காட்டுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து அவர்களின் பலத்தைக் குறைத்தும், அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களுக்கும் இதன்மூலம் கோரிக்கை விடப்படுகிறது. அவர்கள் எத்தகைய பங்களிப்பினை தமிழர்களின் நிரந்தர நிம்மதிக்காகச் செலுத்தப்போகிறார்கள் என்றும், தற்போதை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதுதொடர்பான தகவல் வினாவப்படுகிறது.

உலக நாடுகளில் தமிழர்களுக்கு ஒரு தரத்தை நிர்மாணித்துள்ள போதிலும் அவற்றை மறைத்து வட்டம் ஒன்றைப் போட்டுவிட்டு அதற்குள் குத்துக்கரணம் போடுகின்றனர் சிலர். இவ்வாறான பல்வேறுபட்ட விடிவு நோக்கிய கருத்துக்கள் உட்திணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களால், தற்போது கோரப்படும் தமிழீழப்பகுதிக்குமட்டுமல்ல இலங்கை முழுவதிற்குமே உரியவர்கள் என்பதனையும் இது எடுத்துக்காட்டத் தவறவில்லை. விஜயனின் காலத்தின்பின்னரே ஆரியரின் ஆதிக்கம் ஏற்பட்டது என்பதனையும், தமிழ் எத்தகைய சிறப்புடையது என்பதனையும் தமிழர்களின் - திராவிடனின் ஆரம்பகால நிலைக்கும் இந்நூல் கொண்டு சென்று விடுகிறது.

இவ்வாறான வரலாற்றுத்தகவல் அடங்கிய நூல் ஒன்றைப்புனைவதன் சிரமம் எவ்வளவு என்பதனை கற்றோரும் விமர்சகரும் அறிவர். எனினும் வாசகர்களுக்கும் எதிர்காலச்சந்ததிக்கும் இது ஒரு சிறந்த தகவலாக அமையவேண்டும் என்று விரும்புகிறேன்.

தமிழர்களுக்கு நிலையான வாழ்வு நோக்கிய பாதையின் கடினம், தமிழர்களின் எதிர்காலச் சந்ததியினரைப் பாதிப்புக்குள்ளாக்கி விடக்கூடாது என்பதனையும் அணுகுண்டின் பாதிப்போடு ஒப்பிட்டு எச்சரிக்கையும் செய்கிறது. இதன்மூலம் விரைவில் நிம்மதிப்பெருமூச்சினை நோக்கி ஓடவேண்டுவே இவ்வேடு எச்சரிக்கை செய்கிறது.

இவ்வேடு புனையப்படுவதற்கு 2005காலப்பகுதி தொட்டு 2008வரையிலான காலப்பகுதி தேவைப்பட்டது. அரசில் அங்கம் வகிப்போரோஇ பலமாக இருக்கும் அமைப்புகளோஇ தனிநபர்களோஇ நிதி ஆதரவிலும் சரிஇ அல்லது இலக்கிய ரீதியில் வெளியீட்டு ஆதரவிலுஞ்சரி முன்னுரிமை வழங்காமையும் இதன் வெளியீட்டுப்பின்வாங்கலுக்கு முக்கிய காரணம் எனலாம். எனினும் பிரதி செய்வதற்கும் வெளியிடுவதற்கும் போதிய நிதி இல்லாமையால் இணையத்தின் மூலமே பெரும்பாலும் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டது.

தற்காலத்தில் இதற்கு ஆதரவு, அறிவுடையோரிடையே முன்நிலை வகிக்கும் என்பது திண்ணமே! இலக்கியம், இலக்கணம் என்றும், சங்ககாலம் சங்கம் மருவிய காலம் என்றும் மக்களைக் குழப்பாமலும், புணரியல் வாக்கியங்களை அமைக்காமலும் சாதாரண மக்கள் தொட்டு கற்றோர்வரை வாசிக்கக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இது பயனுள்ள கையேடாக அமையும் என்று நம்புகிறேன்.     

இதற்கு வித்திட்ட அடிப்படைத் தொன்மையான நூல்களுக்கும், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் நன்றிகலந்த வணக்கம்.

அடுத்த வெளியீட்டில் சந்திக்கும் சந்தர்ப்பத்தில்...
மேலும் இதுதொடர்பான ஆக்கங்கள் தொடரும்!!!

Nessun commento:

Posta un commento