sabato 13 febbraio 2010

சிங்களம்

2008ல் வெளியான அருகனின் "மலரும் மா தமிழீழம்" என்ற நூலில் இருந்து

சிங்களம்

Thiravidarஇம்மொழியானது தற்போது இலங்கையில் மட்டும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் தனிமொழியாகும் எனினும் இதன் அடிப்படை ஆரிய, பாழி மொழிகளுடன் தமிழ்மொழியின் ஒரு சில இணைப்புக்களும் இணைந்ததாகும். சமயம் என்ற ரீதியில் புத்த சமயத்தைப் பார்க்கும் போது மட்டுமே, பௌத்தம் இலங்கை தவிர்ந்த ஏனைய பிரதேசத்திலும் காணப்படுகிறது. இதில் பௌத்தசமயத்திற்கும், சிங்கள மொழிக்கும் முடிச்சுப்போடமுடியாது. சிங்களவர் பௌத்தத்தைத்தழுவிக் கொண்டார்கள் அவ்வளவுதான்.

ஆரியரின் பக்கம் பார்க்கும் போது, அவர்கள் தற்போது இந்தியாவின் பெரும் பகுதியில் வாழ்கின்றனர். ஆரியர், திராவிடர் என்று பகுத்துப் பார்க்கும் போது, அதற்கு முற்பட்டநிலையில் இவர்கள் சிந்து வழிநாகரீகத் தோன்றல் என்று தெரிகிறது. மற்றப்படி பல கேள்விகள் இன்னும் விடைகாணாமல் இருக்கின்றது. பழமையான நாகரீகம் இப்பகுதிகளில் இருந்தே தேற்றம் பெற்றதாக எடுத்துக்காட்டுகள் விளக்குகிறது. அதனைப்படங்கள் காட்டுகிறது. அக்காலத்தில் இருந்தே ஆரிய திராவிடர்களுக்குள் தகராறுகள் இருந்து வந்ததென்று வரலாறு தெளிவாகக்காட்டுகிறது. அது இன்றுவரை தொடர்ந்து, தமிழ்த் திராவிடர்களுக்கும் சிங்கள ஆரியர்களுக்கும் பிணக்கை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

Ariyar(விஜயனுடைய வருகையும், அவன் வளர்ச்சியும் வரலாற்று மாற்றமும், அமேரிக்காவையும் இங்கிலாந்தையும் பற்றிய வரலாறைச் சிந்திக்க வைக்கவில்லையா? இவர்களுடைய குடியேற்றம் ஆதிக்குடியான செவ்விந்தியரை எத்தகையோராக்கியது என்பதை நினைவு படுத்தவில்லையா.)

படங்கள் காட்டும் பகுதிகளையும் அதன் மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் பல விடையங்களை நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள்.

இந்த ஆரியர் கி.மு. 1500 காலப்பகுதியில் இந்தியாவுக்குட்பட்ட பகுதிக்குள் குடியேறினார்கள் என்று வாலாறு தெரிவிக்கிறது. ஆனால் ஆரிய வருகைக்கு முன் திராவிடரே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சிதறிக்கிடந்தனர்.

தற்காலத்தை நோக்கும் போது அவரவர் குழுமத்திற்கேற்ப, நாடும் பிளவு பட்டுக் காணப்படுகிறது.

சிந்து வழிநாகரீகத்தின் அடிப்படை திராவிடத்தின் வேர் என்றும் சொல்வோர் உண்டு. எனினும், அவற்றை தெளிவுற இன்னமும் ஆராட்சி முடிவுகள் வெளியிடவில்லை. காரணம் வாசிக்க முடியாத பல சுவடிகள் கண்டெடுக்கப்பட்டும், வாசிப்பதில் சிரமத்தை புதைபொருளாராட்சிக்குக் கொடுத்திருக்கிறது.  திராவிட மொழிகள் 73ற்கும் மேலான பிரிவுகளைக் கொண்டதாகவும், இதில் தமிழ் அடிப்படைப் பழம் பெரும் மொழியாகவும் காணப்படுகிறது.

சிந்து வழிநாகரீகத்திலிருந்தே இவ்வினப் பிரிவுகள் அக்காலத்தில் இருந்தே பிளவு பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் ஒரு முக்கிய விடயம் எதுவென்றால், இலங்கை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே வரலாற்றில் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் தென்படுவதாக ஆராட்சியாளர்கள் தற்போது கண்டுள்ளனர் என்பது.

ஆரிய மொழிகளில் இருந்து தோற்றம் பெற்ற “சிங்கள” மொழியானது, ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததும், வங்காளம், சமஸ்கிருதம், பாளி, போன்ற மொழிகளுடைய இணைப்பும்,  திராவிட மொழியான தமிழின் பல்வேறு சொற்களின் இனைப்பும் சேர்த்து, இலங்கையில் குடியேறிய விஜயனின் ஆரம்பத்தில் இருந்து திரிபினால் உதயமான மொழியாகும். இதில் இருந்து சிங்கள இனத்தின் மொழி கி.மு. சேப்பட்டபோதிலும் எழுத்து முறையானது கி.மு. 3ம் நூற்றாண்டுகளில் பல்வேறு மாற்று இணைப்புக்களுடன் அமைக்கப்பாட்ட மொழியாகும். அதனால்தான் மகாவம்சம் கி.பி. 3ம் நூற்றாண்டிலும் சிங்கள மொழியில் எழுதப்படாமல் பாளி மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழ் மொழி அகத்திய முனியின் காலத்திற்கு மன்பே உதயமானதாகச் சொல்லப்படுகிறது இருந்தும் உண்மை உதயம் தெளிவில்லை. பின்னர் அகத்தியரின் மாணவனான தொல்காப்பியர் என்போர் தமிழுக்கு இலக்கணத்தினை வகுத்து, அதற்கு தொல்காப்பியம் என்று பெயரிட்டதாகவும் அதுவே தமிழ் மொழிக்கு முதல் இலக்கண ஏடாகவும் கருதப்படுகிறது. இதன்காலம் கி.மு.700க்கும் முற்பட்டது என வரையறுக்கப்படுகிறது.

கி.மு 5ம் நூற்காண்டில் இலங்கையில் குடியேறிய ஆரிய இனத்தவரின் மொழியான சிங்கள மொழியில் தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறதென்றால் தமிழ் அவர்களுக்கு முதலில் இருந்திருக்க வேண்டும். இல்லையேல் தமிழ் அதற்குள் இலக்கணக்கலப்பில் அல்லது சொற்கலப்பில் இணைந்திருக்க நியாயமில்லை.

தமிழ் மொழி தற்போது திரிபடைந்து இருக்கிற போதிலும் அது பெருமளவில் எழுத்துச் சீர்திருத்தங்களுக்கு உட்பட்டிருக்கிறது. ஏனென்றால் முன்னைய ஏடுகள் இன்றும் சாதாரண தமிழர்களால் வாசிக்கமுடியாதுள்ளதைக் காண்க.

சிங்களத்தைப் பொறுத்தவரையில் 12ம் நூற்றாண்டளவில்த்தான் புதிய சிங்கள முறை அதாவது, தனி மொழிச்சிங்களமாக திருத்தம் பெற்றது. இன்னமும் நாடோடி, வேடுவச்சிங்களவர் பேசும் தன்மைக்கும் சொற்களுக்கும் புதிய சிங்களத்திற்கும் பலத்த வேறுபாடுகள் காணப்படுகிறதை அவதானிக்கலாம்.
மேலும் திராவிட மொழிகளுடன் ஒப்பிடும் போது,
எண்    தமிழ்
தெலுங்கு
கன்னடம்
துளு
மலையாளம்
குறுக்
கோலமி
பிராகுயி
மூலத் திராவிடம்

1    ஒன்று    ஒக்கட்டி    ஒந்து    ழதெi    ழnரெ ஒந்நு    ழṇṭய    ழமமழன    யளiṭ    ழூழசர(1)
2    இரண்டு    ரெண்டு    எரடு    சயṇனர    சயனெர ரண்டு    ஐனெiŋ    சைāṭ    சைāṭ    ழூசைர(2)
3    மூன்று    மூடு    மூரு    அūதi    அūnரெ மூந்நு    ஆūனெ    அūனெiŋ    அரளiṭ    ழூஅரஊ
4    நான்கு    நாலுகு    நாலக்கு    nāடர    nāடர நாலு    Nāமா    Nāடiŋ    čāச (ஐஐ)    ழூnāட
5    ஐந்து    ஐது    ஐது    யiரெ    யñஉர அண்சு    pயnஉē (ஐஐ)    யலன(3)    pயnč (ஐஐ)    ழூஉயலN
6    ஆறு    ஆறு    ஆறு    āதi    āசர ஆறு    ளழலலē (ஐஐ)    āச(3)    šயš (ஐஐ)    ழூஉயசர
7    ஏழு    ஏடு    Ēடர    ēடர    ēணார ஏழு    ளயவவē (ஐஐ)    ēḍ(3)    hயகவ (ஐஐ)    ழூநẓர
8    எட்டு    எணிமிதி    எண்ட்டு    ēṇஅய    நṭṭர எட்டு    யṭṭhē (ஐஐ)    நரெஅயனī (3)    hயšவ (ஐஐ)    ழூநṭṭர
9    ஒன்பது    தொம்மிதி    ஒம்பத்து    ழசஅடிய    ழnடியவர ஒன்பது    யெiṃலē (ஐஐ)    வழஅனī (3)    nōh (ஐஐ)    ழூவழḷ
10    பத்து    பதி    ஹத்து    pயவவர    pயவார பத்து    னயளளē (ஐஐ)    pயனī (3)    னயா (ஐஐ)    ழூpயவ(வர)

இதை சிங்கள மொழியுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது,
ஏக்காய் -ஒன்று
தேக்காய்- இரண்டு
துணாய் -மூன்று
குத்தறாய்- நான்கு
பகாய்- ஐந்து
கயாய்- ஆறு
கத்தாய்- ஏழு
அட்டாய்- எட்டு
நமயாய்- ஒன்பது
தகயாய்- பத்து

சிங்களம் பெரும்பாலும் சமஸ்கிருதத்துடன் தொடர்புடையது தெளிவாகிறது. சுமஸ்கிருதம் இந்து சமயத்துடன் பொருந்தியது. இந்து சமயம் தமிழுடன் பின்னிப் பிணைந்தது. 

1.    ஏக
2.    துவி
3.    திரி
4.    சதுர்
5.    பஞ்ச
6.    சட்ட
7.    சப்த
8.    அட்ட
9.    நவா
10.    தச 
எனவே இவையெல்லாம் அடிப்படைத் திராவிடத் தமிழ்ச் சொற்களுடன் தொடர்பு கொள்கிறது.
எனினும் சிங்களம் வரையறுக்கப்பட்ட கட்டுக்குள் இலங்கையில் தற்போது இருக்கின்ற போதிலும் தமிழ் அவற்றையுந் தாண்டி,  பல்வேறு பிரதேசங்களிலும் பல்வேறு மொழிகளுடனும் தொடர்புடைய பழம்பெரும் மொழியாகக்காணப்படுகிறது என்பது மாபெரும் உண்மையே!.

அது போல இலங்கையில் தமிழர்கள் தொன்று தொட்டவர்கள் என்பதும், யாழ்ப்பாணனைத் தொடர்ந்து, மேலும் இந்தியாவில் இருந்து குடியேற்றப்பட்டவர்கள் என்பதும், பல்வேறு அரச பரம்பரைகள் ஆட்சி நடத்தியுள்ளார்கள் என்பதும், இப்போது நன்கு புரிந்திருக்கும்.

இலங்கையானது, சிங்கள அரசு வெளிஉலகிற்குக் காட்டுவது போல், தமிழர்கள் பின்வந்து குடியேறிய மக்கள் கூட்டமல்ல என்பது, இப்போது தெளிவாக்கப்பட்டிருக்கும். மேலும் பின்னுள்ள பகுதி யாழ் அரச வம்சத்தினைத் தெளிவு படுத்தும்.
இலங்கையை ஆண்ட அரசர்களும் ஈழத்தை ஆண்ட அரசர்களும் என்று பார்க்கும் போது, ஈழத்தில் யாழ்ப்பிரதேசத்தையே இதில் தற்போது மிகச் சிறப்பாய்க் குறிப்பிட விரும்புகிறேன். சந்தர்ப்பங்கள் இடங்கொடுத்தால், வரும் வெளியீடுகள் மற்றைய அரச வம்சத்தை விபரிக்கும்.
விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்சையில் இயக்கர்,அரக்கர், நாகர்,கின்னரர்,…(தமிழ் அடிகள்) இருந்ததற்கான சுவடுகளை மேலே பார்த்தோமல்லவா?.

யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தைப் பார்க்கும் போது “வையா பாடல்”, “கைலாய மாலை”, “இராசமுறை”, “பரராசசேகரனுலா”
“யாழ்ப்பாண வைபவ மாலை”,“ யாழ்ப்பாண வைபவமாலை விமர்சகம்”, (சுவாமி ஞானப்பிரகாசர் 1928-நல்லூர் ) போன்ற தமிழ் நூற்களோடு வேறு சில தேசத்து ஆதாரங்களும் உள.

ஏற்கனவே நான் சொன்னது போல், சீன தேசத்திற்கும் தமிழ் முன்னோடிகளுக்கும் பல்வேறு தொடர்புகள் இருந்திருக்கின்றன. மொழிழிகளுள் சீன மொழியும் பண்டைய மொழியாகும். சீனாவிற்கு அருகில் உள்ள தேசத்தில் பேசப்படும் சீனம் சார்ந்த மொழிக்கு, சீன மொழியே அடிப்படை. அதுபோல் தமிழ் மொழிசார்ந்த அயல் மொழிக்குத் தமிழ் மொழியே அடிப்படை.

ஈழத்தின் வரலாறைப் பார்க்கும் போது, ஏற்கனவே குறிப்பிட்டது போல், இரமாயணத்துடன் பெரும் தொடர்பு கொண்டுள்ளது. மகா வம்சம், மற்றும் சூழவம்சம் போன்றன இல்லாதவிடத்து, இராமாயணத்ததகவல் எமக்குக் கைகொடுக்கிறது.

அக்காலத்தில் தமிழ் மொழியானது, அரசர்களை மகிழ்விப்பதற்கும், பாராசீக மொழியைப்போல் சூட்சுமம் நிறைந்திருப்பதால், சிலேடைப் பேச்சிற்கும், இலக்கியப்போக்கிற்கும், ஆழமான கருத்துள்ள மொழியாக கற்றோர்கள் அறிந்த மொழியாக மட்டும் இருந்து வந்த தேயொழிய அது ஒரு இனத்தின் மொழியல்!? காலப்போக்கில்,  அவ்வறிவு ஜீவிகளின் குழுமமே தமிழர்கள் குழாமானது. பொதுவாகத் தமிழானது ஆரிய, திராவிடரிடையே அறிவு ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொழி. அதன் கடின நிலை காரணமாக அதிருபிற்குள்ளாகி கைவிடப்பட்டதனாலும், அரசமைக்கும் அரசர்கள் கலையில் ஈடுபாடு குறைந்ததனாலும் தமிழ் ஓரங்கட்டப்பட்டு பேச்சு வழக்குத்தமிழ் மட்டும் மிஞ்சியது. இன்னும் சொல்லப்போனால், மிகப்பிரபல்யமான இரஜராஜசோழன் கட்டிய தஞ்சாவ+ர்ப் பெரிய கோவிலில் முழுக்க முழுக்க தனது சரித்திரத்தைப் பொறித்து வைத்தான்.

அது தமிழ் மொழியே! ஏன் எம்மால் அவற்றை வாசிக்க முடியவில்லை? ஏன்னென்னால் எழுத்துத்தமிழ், அறிவுக்காகப் பயன்படுத்திய “தேவபாஷை”. இந்தியாவில் தமிழ் அரசர்கள், மூவேந்தர்கள் என்று சொல்லப்படுகின்ற சேர, சோழ, பாண்டியர் என்போர் தமிழ் மரபினரே! இன்னு அது குறிப்பிடும் தேசங்கள் தனித்தமிழ் பேசவில்லையே! எமுத்துக்கள் நாம் பாவிக்கும் தமிழ் எழுத்துக்களாகவில்லையே! ஏன்???.

பிளவுக்குள்ளான சமுகத்தில் பண்பாடு கலை கலாசாரம் மொழி போன்றனவும் படிப்படியாகத் திரிபுக்குள்ளானது. அது போலவே இலங்கைச் சரித்திரத்திலும் சிங்களம், தமிழ் என்று மொழியால் பிரித்து, தமிழ் இனத்தை வேறுபடுத்துவது தகாதது.

தற்போது சிங்களம் தமிழ் என்று இனங்காணப்படுகிறபோதிலும், சிங்களத்தில் கலந்துள்ள ஆயிரக்கணக்கான பச்சோந்தித்தமிழ் இருக்கத்தானே செய்கிறது.


ஆக்காலத்தில் இந்தியாவில் இருந்து பல நாயக்கர் வம்சத்தினர் இலங்கையில் ஆட்சி செய்ய தலைப்பட்டனர் என்பது வரலாறுகள்….

இலங்கையில் உலகந்தின் பலபாகத்தாரும் கண்வைத்ததற்குக் காரணம், அக்காலத்தில் இங்கு செல்வம் குவிந்து கிடந்தன. ஏற்கனவே சாகடிக்கப்பாடும் சரித்திரத்தில் குறிப்பிட்டது போல் குபேரன், செல்வந்தன் என்பதும் அவன் இந்திரனுக்கே கடன் கொடுத்தவன் என்றும் கதையுண்டு.

எனவே, அனைவரும் இலங்கையில் உள்ள செல்வத்தில் கண்வைத்தனர். இதனால் பறங்கியினத்தவர் செல்வங்களை அபகரிக்கும் நோக்குடன் இலங்கையில் போர்செய்த காலமும் உண்டு. கொள்ளையர்கள் இலங்கையை ஆண்ட காலமும் உண்டு. அடிமைகளைக் கொணர்ந்த காலமும் உண்டு. அரசர்களைக் கொணர்ந்த காலமுமுண்டு. காலப்போக்கில் இவர்கள் நிரந்தர இலங்கைப் பிரஜையானார்கள். 

“அடிதடி 12”

2008ல் வெளியான அருகனின் "மலரும் மா தமிழீழம்" என்ற நூலில் இருந்து

Nessun commento:

Posta un commento