giovedì 4 febbraio 2010

வே.பிரபாகரன் அவர்களைப்பற்றிய ஒரு கட்டுரைதொடர்பான, தொலைக்காட்சி விமர்சனத்தில் தகவல்கள் தவறுதலாகப்…

ஈழம் மலரும் போது தமிழ் வாடிவிட்டால்? என்ன செய்வது….!!!

Arugan 2008ல் அருகனின் “மலருமா தமிழீழம்” நாவலின் எழுதப்பட்ட குறைபாடுகள் அதிபர் மகிந்தவால் படிப்படியாக நிவர்த்திசெய்யப்படுகின்றன….

“அடிதடி 15”
முப்பது வருடப் போராட்டம்

தமிழர்களின் “சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலீச குடியரசு” நோக்கிய பேராட்டத்தின் தன்மையினைப்பார்க்கும் போது, பல்வேறு கேள்விகள் உதயமாகின்றது.

போராட்டம்
ஈழ மண்ணுக்காகவா?
ஈழ மண்ணின் மைந்தர்களுக்காகவா?
ஈழ விடுதலைக்காகவா?
த.ஈ.வி.பு. அமைப்பிற்காகவா?
தமிழ் மொழிக்காகவா?

ஈழம் மலரும் போது தமிழ் வாடிவிட்டால்? என்ன செய்வது.

மேலே காட்டப்பட்ட மனித உரிமை தொடர்பான விடையத்தைப் பாருங்கள் அது படிவம் எடுக்கப்பட்டு வாசிப்பதற்கு கடினமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. யார் சீர்செய்வார்?. உலகத்தில் தமிழ் சிறகடித்துப் பறக்கிறது. ஆனால் தமிழர்கள் அதன் சிறகிற்கு பலங்கொடுக்க முன்னரவில்லை. பேருக்கு தமிழ்ப் போராட்டம். இப்படி எடுத்துரைக்கும் என்மீது கோபப்படுவதற்குப் பதிலாக தவறுகளைச் சீர் செய்யுங்கள். சீர் செய்வோருக்கு ஆதரவு அளியுங்கள் முரட்டுப் பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

“இதற்கிடையில் மாபெரும் தமிழ் விடுதலைப் போராட்டத்தின் தலைவராக (இன்று) 2008வரையில் மதிக்கப்படுகிற திரு வே.பிரபாகரன் அவர்களைப்பற்றிய ஒரு கட்டுரைதொடர்பான, தொலைக்காட்சி விமர்சனத்தில் தகவல்கள் தவறுதலாகப் புனையப்பட்டிருந்தது. இவை வரலாற்றில் உண்மைகளையும் பொய்களாக மாற்றிவிடக்கூடியன. அவர் பல்கலைக்கழகப்பட்டதாரி என்றும் வேறு சிலவிடையங்களும் தவறுதலாகப் பரினாமித்தது. அவர் கடைசியாகக்கற்ற கல்வி 10 வரைதான். ஆனால் அவர் பட்டதாரிக்குமேலான அனுபவத்தை அனர்த்த அறிவிலிருந்து கற்றுக்கொண்டார். என்றால், அது மிகையாகாது. மேலும் வாசிக்க »

Nessun commento:

Posta un commento