venerdì 30 aprile 2010

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -9) –அருகன்

hai இந்தப்பகுதியுடன் வீண் விவாதங்களையும், அருகனை பற்றிய அலட்டல்களையும் விடுத்து, அடிகள் அனைத்தும் இடிகளாக விழும்படியும், மடியும் எங்கள் உரிமைகளின் விடிவு தெரியும்படியும், ஆழமாகச் சிந்திக்கும் பகுத்தாற்றல் தொடரும்படியும் அடியெடுத்து வைப்போமா??? கடந்த கலங்கள் அனைத்தும் அறிமுகங்கள் என்றே வைத்துக் கொள்வோம். எனினும் பலர் தொடர்ச்சியாக ஒரே விடயத்தை பல ஆக்கத்திற்கு விமர்சித்திருந்தார்கள். எனவே அவ்வாறான பொழுது போக்குகளை விடுத்து, தமிழர்களுக்கு நல்லதொரு தேசத்தை திடமாகக் கட்டியெழுப்ப எம்மாலும் முடியும் என்ன நம்பிக்கையினைக் கொள்வோம். புலிகள் மட்டுமே பலிகளுக்குச் சொந்தக்காரர்கள்… ஆனால், தமிழர்களின் விடிவிற்கு யார் வேண்டுமென்றாலும் சொந்தக்காரர்கள் ஆகலாம். நீயோ இல்லை நானோ சாதாரணமானவர்கள் என்று யார் சொன்னது? உன்னை நீயே தாழ்த்தி கேவலப்படுத்துகின்றாய்! ஊன்னில் உள்ள அரிய பொக்கிஷத்தை எப்போதாவது தூசிதட்டியது உண்டா?!!!!

கடந்த நாட்களில் இடம்பெற்ற ஒரு அற்புத அனுபவத்தை,… அனைத்த மனித உயிரினங்களும் அனுபவிக்க வேண்டிய ஒரு வலுக்கட்டாய கடப்பாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விளைகின்றேன். இது தொடர்பாக பிறிதொடு நாவலை வெளியிடும் நோக்கம் எனக்கிருந்தாலும், இந்த தொடருக்கு இது கைகொடுக்கும் என்பதனால் அதனை மேலோட்டமாக மீட்டுக்கொள்ள வினைகின்றேன்… அது என்ன???

இதோ அந்த அனுபவம்…
வேவ்வேறு நாட்டு மக்களுடன் மட்டுமல்லாது எமது தமிழ் மக்களுடனும் நெருங்கிய தொடர்பினை கொண்ட தொழிலைக்கொண்டுள்ளேன் என்பது என்னை அறிந்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு, அந்தவகையில், வைத்திய காரணங்களுக்காக வைத்தியர்கள் என்னுடன் தொடர்பு கொள்வதும், உளவியல் சம்மந்தமாக தொடர்புகளைக்கொள்வதும் கடந்த 5வருடங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வருகின்ற போதிலும் என்னுடைய அனுபவத்தில் காணாத ஒரு விடயத்தை அனுபவித்தேன்! குற்கையின் போதும், கேள்விஞானத்தின் போதும், பகுத்தறிவின் துணையாலும் அந்த விடயத்தைப் பற்றித் தெரிந்திருந்தாலும், அதனை உணர முடியவில்லை… ஆனால்,!!! …

அன்று நடுராத்திரி பன்னிரண்டைத் தாண்டுகின்றது கடிகாரம் திடீர் அலறல் … அது கைத்தொலைபேசி தான்… அவ்வப்போது நேரங்கெட்ட நேரத்தில் அலறுவது எனக்குச் சாதாரணமே… காரணம் பல தேசங்களில் இருந்து எனது ஆலோசனைகள் வேண்டியும் வேறு விடயங்களுக்காகவும் அவ்வாறு அழைப்பு வருவது சாதாரணமே … ஒவ்வொரு தேசத்திலும் நேர மாற்றங்கள் இதற்குக்காரணம் என்பது புலத்தில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் தெரியும்… இருந்தும் பல இராத்திரிகள் தூக்கத்தை கலைத்து தமிழர்களின் அவசரத்தேவைக்காக வைத்திய சாலைகளுக்குச் சென்றிருந்திருக்கின்றேன். அதுபோலவே அன்றும் ஒரு அழைப்பு … அது வழமையான அழைப்பென்றே எடுத்தேன்… அவசரமாக வைத்திய சாலைக்கு வரும்படி அழைத்தார்கள்… வழமைபோல் நானும் அவசரமாகவே சென்று அவ்விடத்தை அடைந்தேன்…

ஒரு பெண் … தனிமையானவள் ஆனால் முதுமையாக கர்ப்பவதியாக இருந்தாள்!மொழிச் சிக்கலுக்காகவும், உளவியல் தொடர்பாகவும் அங்கு அழைக்கப்பட்டேன் என்பதனை வைத்திய நிபுனர்கள் தெரிவித்தனர். ஏனக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம் பல வருடங்களாக இவ்வாறான செயற்பாட்டைச் செய்தபோதிலும், உண்மையில் இது தான் எனக்கு முதல் அனுபவமாக இருந்தது… இருந்தும் எனது தொழில் காரணமாக அதனை ஏற்று மெற்கொண்டேன்.

அந்தப் பெண் தன்னால் ஒரு குழந்தையினைப் பெறமுடியுமா? ஏன்ற வினாவை அழமாக தனது மனதில் பதித்ததனால் அந்தப்பெண்ணுடைய உடல் குழந்தையினைப் பெறுவதற்கான காலம் வந்தும் மனம் இடங்கொடுக்காததினால் குழந்தை தடைப்பட்டு பல மணித்தியாலயங்களாக பொறுத்திருந்தனர். எனினும் இந்த பெண் பல மணித்தியாலயங்களாக குழந்தையினைப் பெற்றெடுப்பதில் காலதாமதத்தை அடைந்திருந்ததால், வைத்தியர்கள் மேலதிக செயற்பாட்டை செய்ய இயலாதவர்களாக இருந்தனர். எனவே குழந்தையினையும் தாயையும் காக்கவேண்டிய கடப்பாட்டில், வைத்தியர்கள் இருந்தார்கள். இதற்கிடையில் அந்தப்பெண்ணுடன் முடிந்தளவு எனது உளவியலைப் பணன்படுத்தி விடலாம் என்று அந்தப் பெண்ணுடன் அருகிருந்தேன்… ஒவ்வொரு ஆணும் பெண்களைப்போல் பல்வேறு துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவிக்காது தப்பிக் கொள்கின்றமை ஒரு சமநிலையைக்காட்டவில்லை என்ற கணிப்பை எடுக்கும் அளவிற்கு அந்த பெண் அவ்வப்பொது வலியால் துடித்தாள்…

துடித்தாள்.. என்று வார்த்தையால் முடித்துவிட்டேன் ஆனால் அவர் மரணித்து மரணித்த ஜெனித்துக் கொண்டிருந்தாள்… ஒவ்வொரு பெண்ணும் கரும்புலிகள்தான் என்பதனை அந்த நிலையில் உணரக்கூடியதாக இருந்தது. அது மட்டுமல்லாது, ஒரு ஆணுக்கு இருக்கக்கூடிய தைரியத்திலும் பார்க்க வைராக்கியத்திலும்பார்க்க பெண்களுக்குத்தான் எத்தனை வைராக்கியம். “பெண்மை” என்ற அந்தத்தன்மைக்கு வேறு அர்த்தமும் இருக்குமோ என்று எண்ணினேன். ஆத்தனை தூரம் அந்தப்பெண் வலியை ஒவ்வொரு முறையும் வெண்றெடுத்துக்கொண்டிருந்தாள்… எனக்கேகா!!! ஓவ்வொரு தடவையும் நெஞ்சிலிருக்கும் நீர் வற்றிவற்றி உயிரின் வேதனையினை அறிவித்துக்கொண்டிருந்தது.

வைத்தியர்கள் அந்தப்பெண்ணை இயற்கையாக பிரசவிக்கவைக்க பல மணித்தியாலங்களாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் அதற்காக பல ஊசிகளை அடிக்கடி ஏற்றியும் தொடர்ச்சியாக பெவதற்கான வலியை அதிகரிக்கும் மருந்தினையும் தொடர்ச்சியாக “சேலான்” ஏற்றுவது போல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள் … இரவிலிருந்து அந்தப்பெண்ணை உணவருந்தவோ, நீரருந்தவோ, வேறு சிற்றுண்டிகளை அருந்தவோ விடவிலஇலை. அடுத்த நாள் ஆதவன் தன்னுடைய கதிர்களைக்காட்டியும் அந்தப் பெண்ணின் உடல் நிலை கருணைகாட்டவில்லை. அதனால் அவள் தொடர்ச்சியாக மரண வேதனையினை அனுபவித்துக்கொண்டே இருந்தாள்.அப்போது எனது மனதில் ஓடிய எண்ணத்தை என்னவென்பது … இத்தனையினையும் பார்த்தபின்னரும் அடுத்த பிள்ளையினைப்பெறுவதற்கு அந்தக்கணவனும் மனைவியும் எப்படி சம்மதிக்கின்றார்கள் என்று குறுக்கு நெடுக்காக எண்ண அலை படர்ந்துகொண்டிருந்தது.

அடுத்த நாள் மதியமானதும் வைத்தியர்கள் என்னிடம் கருத்தைக் கேட்டபோது, அந்தப்பெண்னின் மன நிலையினை எடுத்துரைத்த பின்னர் வைத்தியர்கள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். குழந்தையினையும், தாயையும் காக்க வேண்டுமென்றால் சத்திர சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்கள். தற்போது, குழந்தையும் நலமாக இருக்கின்றது, தாயும் நலமாக இருக்கின்றாள்… ஆனால் காலதாமதம் ஆகின் இருவருக்கும் ஆபத்து நேரலாம் என்று வைத்திய நிபுனர்கள் முடிவெடுத்தார்கள். அந்தப் பெண்ணின் வேதனையினை வர்ணித்தெடுக்க வார்த்தைகள் போதாது என்பதனை உணர்ந்து கொண்டேன்.

இறுதியாக அந்தப் பெண்ணுடைய சம்மதத்துடன் சத்திர சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். சுpல நிமிடங்களின் பின்னர், அந்தப்பெண்ணின் அடிவயிற்றை கத்தரித்து குழந்தையினை வைத்தியர்கள் மீட்டெடுத்தார்கள். பூஸ்பரிசத்தின் போது ஏற்படுகின்ற அந்த மகிழ்ச்சியின் போது அந்த தாயானவள் தனது மரண வேதனையைக்கூட துச்சமாக தூக்கியெறிந்து ஆனந்தக்கண்ணீர் சொரிகின்றாள். இப்போது புரிந்தது ஏன் தொடர்ச்சியாக குழந்தைகளை இத்தனை வேதனையின் பின்னரும் பெற்றெடுக்கின்றார்கள் என்று, ஏற்கனவே எழுந்த வினாவிற்கு விடைகிடைத்தது. துன்பத்தில் ஏற்படுகின்ற இன்பத்தினால்தான் உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது… மீட்கமுடியாத ஒரு துன்பம் என்று உலகத்தில் ஒன்றுமே இருக்கமுடியாது என்ற எண்ணத்தை அத்தால் உறுதிப்படுத்துpக் கொண்டேன்.

இப்பேது அந்தப்பெண்ணைப்பார்க்கும் போது, அழுவதா சிரிப்பதா என்று புரியாத புதிராக இருந்தது. அவள் மரண வேதனையினை தாங்க முடியாது தவித்திருந்த போதிலே பலத்த சங்கடத்தை அனுபவித்த எனது உள்ளத் அடிவயிற்றில் வலது பக்கத்தில் இருந்து இடதுபக்கம்வரை ஒரு சாணுக்கும் மேற்கட்ட வெட்டுக்காயத்தைப் பார்த்து, தலைவிறைத்துப்போனேன்.

எல்லா பெண்களும் சாதாரண பிரசவத்தின் போது மரண வேதனை படுகின்றார்கள் தான் இருந்தும், சத்திர சிகிச்சை மூலம் மகப்பேறை அனுபவிக்கும் பெண்கள் மரண வேதனையினை அனுபவிப்பதோடு, வெட்டுக்காயத்திற்கான தொடர் வேதனையினையும் அனுபவிக்கின்றாள்.

இத்தனை வேதனைப்பட்டு பூஸ்பரிசம் அடையவைக்கும் தாயானவள் தனது சிசுவை மரணத்தில் தள்ள எத்தணிப்பாளா? ஆம் தமிழ்ப்பெண்கள் அதைச் செய்தாள் என்றால் அது மிகையில்லை! எனவேதான் ஒவ்வொரு ஈழப்பெண்ணும் கரும்புலிகளே!!! இந்த வேதனையினை புலிகளின் தலைவர் உணர்ந்திருப்பாரா என்ற ஐயப்பாடு என்னிடம் எளாமல் இல்லை!!! காரணம் போராட்டத்தில் மரணிப்பது வாழ்க்கைப் போராட்டத்தோடு கூட ஒப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் கரும்புலிகளாக உரவாக்கப்பட்ட இளைஞர்கள் தங்களுடைய உயிர் இன்னநாள் போகும் என்று தெரிந்தே போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்திருந்தார்கள் என்றால், … … …

எனது எழுத்துக்களில் தாங்கள் இன்னுமா என் வேதனையினைப் புரிந்து கொள்ள முடியவில்லை, எம்மால் இழக்கப்பட்ட சொத்துக்களின் விதைகள் ஈழப்பெறுமதியிலும் அதிகமாக கொடுத்து விட்டோம் என்பதை இன்னுமா உணர மறுக்கின்றீர்கள்!!!????
தமிழீழம் வேண்டாம் என்று யார் சொன்னது… தேசியம் வேஈண்டாம் என்று யார் சொன்னது,… சுயநிர்ணய உரிமை வேண்டாம் என்று யார்சொன்னது?… நீங்கள் சொல்லும் வழியில் வேண்டாம் என்று தானே நான் சொல்கின்றேன். சிங்கள பெரும்பாண்மையிடம் இருந்து கிடைக்காத உரிமையை இனி நாம் தமிழ்ப் பெரும்பாண்மையிடம் இருந்து மீட்கவேண்டிய கடப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம். ஆதனால் தான் அறிவாளிகளை ஒதுக்கியே புலத்தில் ஏராளம் அலுவல்கள் முறைகேடாக நடக்கின்றது. ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்விலும் ஆயிரம் இரத்தக்குருதிகள் படிந்திருக்கியதே!!!

“ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின் உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும் . .
குருதியிட்ட கோரத்தின்
வேதனையால்
அருவி விட்ட கண்ணீரால்
வேயப்பட்ட
கவிதையிலும் காயமிருக்கும். . .
ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . .
சட்டைகள் இல்லை அங்கே
தோட்டாச்
சன்னங்களை ஆடையாக்கினோம்
உணவுகள் இல்லை விசச்
சைனட்
குப்பிகளை அன்னமாக்கினோம்!!
ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . .
வீடுகளில்லை எலிகளின்
வளைகளைக்
கூடுகளாக்கினோம்!!
ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். .. .
களுத்துகளில் பொன்னகையில்லை
எழுத்துக்களின்
பதாகைகளை அணிகலமாக்கினோம்!!
ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . . .
உதடுகளில் புன்னகையில்லை
எம் உடல்களில்
புண் நகைகள் கொண்டோம்!!
ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . . .
செங்கரத்தால் வைக்கவேண்டிய
பொட்டுக்களை
பெண்களின் நெற்றியில்
சுடுகலத்தால் சூட்டிக் கொண்டோம்!!
ஈழத் தமிழர்களின் எழுத்துக்களின்
உடலத்திலும்
ஈரம் படிந்த கோரப் பிடிகளின்
குருதி அங்கே உறைந் திருக்கும். . .”
ஒரு தலைவன் தனது போராளிகளை இழக்காத வகையில் போராட்டத்தை நடாத்த வேண்டும் அவனே நல்ல போராட்டத்தலைவன். ஆனால் எமது போராட்டத்தில் எத்தனை இளைய தலைமுறைகளின் அபிலாஷைகளை அடியோடு அழித்துவிட்டு, எதுகும் பெறமுடியாத சூழலுக்குள் நாம் தள்ளப்படுஇடதற்குக்காரணம், எது வென்று சிந்தித்தால், தமிழர்களின் உயிரின் மதிப்பு தமிழர்களுக்கே தெரியாது போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஒரு தாய் குழந்தையினைப் பெறுவதற்குள் அவள் படும் பாட்டை ஒவ்வொரு போராட்ட தலைவனும் மிகத்துல்லியமாக பார்க்க வேண்டும். “உயிரைக் கொல்லுவதற்கே பொறுமை இல்லாத போது, எப்படி உயிரை பெறும் போது பார்க்கும் பொறுமை இருக்கும்!!!” என்று பலர் வினாவுவதும், “எங்கள் தலைவனும் மூன்று குழந்தைகளைப் பெற்றவர்தான், அவர் தனது மனைவி பெறுகாலத்தில் இல்லாமலா போயிருப்பார்!!!” என்று சிலர் பேசிக் கொள்வதும் புரிகின்றது. ஒரு நல்ல தலைவன் எத்தனை எதிரியைக் கொண்றான் என்றிருப்பதிலும் பார்க்க எத்தனை தனது போராளியைக்காத்தான் என்பதிலேயே திறன் தங்கியிருக்கின்றது.

அதைவிட ஒரு குறித் விடயத்திற்காக எத்தனை காலம் போராடினோம் என்பதிலும் பார்க்க, எப்படிப்போராடினோம் என்பதிலும் பார்க்க… எவ்வளவு காலத்தில் போராட்டத்திற்கான பலனை அனுபவித்தோம் என்பதில் பெரும் சூட்சுமமே தங்கியிருக்கின்றது.

புலிகளின் தலைவர் என்று சொல்லப்படுவோராலே அந்தத் தலைமைக்குக் கீழ் கட்டப்பட்டவர்களே, கருணா, பிள்ளையான், கேபி, மற்றும் பல தளபதிகள், … பிரித்தனியாவில் ஒரு தலை, நோர்வேயில் பலதலைகள், கனடாவில் தலையோ தலைகள்… இப்படியும் அப்படியும் இன்று எத்தனையோ பேர் புலத்தில் மாறுபட்ட கருத்தில் இருக்கின்ற போது, தொண்டர்களில் தவறில்லை, தலைமையில் ஏற்பட்ட ஏதோ ஒரு ஒவ்வாமையே தலைமையைப் பிரித்து கொள்வதோடு, சிதைத்து இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளதென்பது வெளிச்சம். ஆனால் இன்றும் இவர்களால் ஆட்கொண்ட பலர் பழைய பல்லவியிலேயே, “ தலைவர் வருவார்…அவர் சிரஞ்சீவி, … …” என்றெல்லாம் இன்னமும் அவரைத் தூக்கிச் சுமக்கின்றனரே ஒழிய, அவருடைய எண்ணத்தை அதாவது, ஒரு கட்டுக்கோப்பில் இயங்கும் திட்டத்தை உடைத்தது யார்? தலைவர் தலைவராக இருந்திருந்தால், இவர்கள் ஆளாளுக்கு வாலாட்டுவார்களா என்று அவரது அடிவருடிகள் நினைத்ததுண்டா?

இனியாவது அந்த மனுசனை பப்பாவில் ஏற்றுவதை விட்டுவிட்டு, தமிழர்களின் விமோசனத்திற்கும், தாய்தேசத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றத்திற்கும், தமிழர்களின் எதிர்கால உரிமைகளைக் கட்டிக்காப்பதற்கும் ஒரு புதிய வழியினை பின்பற்ற வேண்டும்…..

தலைவர் வருவார்… வருவார்… என்று பொறுத்திருந்தீர்களேயென்றால் அவர் வந்து பார்க்கும் போது தமிழர்கள் வடக்குக் கிழக்கில் எல்லாம் “மொனவத கத்தாகரணுவா” என்று கேட்கத் தொடங்கி விடுவார்கள். அவர் திரும்பி வரும்போது அவரிடத்தில் தமீழீழத்தைக் காட்டும் அளவிற்கு திட்டத்தை போட வேண்டும். நீங்கள் காட்டிய வழியில் தமிழீழம்…. …. …. ஆனால் “இரத்தம் சிந்தாமல், இழப்பு நிகழாமல்” என்ற தத்துவத்தை அந்த மனுசனுககு கொடுக்க வேண்டும். ஆதை விட்டுவிட்டு அண்ணன் வந்தால் தெரியும் தம்பி வந்தால் தெரியும் என்று தம்மைத்தாமே முட்டாள்பட்டம் கட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

ஏற்கனவே நான் தொட்ட விடயம் என்னவென்றால் உயிரின் மதிப்பு, அந்த உயிரிலும் மனிதனின் சிறப்பு, அதனிலும் தமிழர்களின் உயர்வு … தோளனே!… … நில் உனக்காய் எனது குரலை ஒருமுறை கேட்பாயா???….
உன் வார்த்தைகளின் வல்லமை
உனக்குப் புரியுமா – அவற்றால்
வானத்தையும் வளைக்க முடியும்
வரலாற்றையும் பிரிக்கமுடியும்
உனக்குப் புத்தி சொல்ல
எனக்குத் தெரியாது – ஏன்னெறால்
நீதான் உலகத்தில் மேலானவன்
நீதான் உலகத்தின் மாமேதை
உன்அயர்வு நேரத்தில்
அறிவித்தல் தரும் அற்ப தொண்டன் நான்
நீ ஆண்டவனுக்குச் சமமானவன் – எனவே
உன்னை வணங்குகிறேன்
வெகுநாளாய் யாரையோ தேடுகிறாய்
விடிவு என்னவோ ஏமாற்றந்தான்
உனக்குப் புரியவில்லை – ஆயினும்
எனக்குத் தெரிகிறது ஏனென்றால்
நான் உன் தொண்டன்
யாரைத் தேடுகிறாய்
கண்ணாடி முன் நின்று உன்கண்களைத்
திறந்து பார் உன்னால் தேடப்பட்ட
திரவியம் அதுதான்
போலிப் பெயருக்குப் புகழ்
மாலை சூட்டுவதால் – நீமட்டும்
காலியாகிக் காணப்படுகிறாய்
அதனால் தான்
கானல் நீரை கண்டும் – உன்னால்
கண்ணீர் வடிக்கமுடிகிறது
கண்ணாடியில் தெரிவதுதான் நீ
கண்ணாடி முன்னாடி தெரிவது ||நான்||
நான் என்ற ஆணவம்
இப்போது நான்தான் உனக்குக் கண்ணாடி
என்னைப் பார் அங்கு தெரிவது
நீயாயிருப்பாய்
ஏனென்றால் நான் உன் தொண்டன்.
உனக்குப் புத்தி சொல்ல
எனக்குத் தெரியாது – ஏன்னெறால்
நீதான் உலகத்தில் மேலானவன்
நீதான் உலகத்தின் மாமேதை
உனக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறேன்
ஏனென்றால் நான் உன் தொண்டன்.”

உறவுகளே! இத்தனைநாழும் மற்றவர்களின் செய்திகளை நம்பிய அளவிற்கு, உங்களுடைய மனச்சாட்சியையும் பகுத்தறிவையும் நம்ப மறுத்துவிட்டீர்கள் என்பது இப்போதாவது புரிகின்றதா???
இப்போது எமக்குத் தேவை புதிய நம்பிக்கை, அது இன்னாரால் வரும் என்று காத்திருக்கத்தேவையில்லை அந்த நம்பிக்கை நீயாகவும் இருக்கலாம்.- (தொடரும்) அன்பன் அருகன்.

Nessun commento:

Posta un commento