domenica 18 aprile 2010

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) – Arugan (18/04/2010)

அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) – Arugan

  
a-post இதுவரைக்கும் சில கருத்துக்களுக்கு பதிலோ அல்லது, பக்கச்சார்போ கொடுக்கமுடியாதவர்கள் தாம் பேச வருவதை நிதானமின்றி பேசுவதாலும், எப்படியும் எழுதலாம் என்று விளக்கமற்ற முறையிலும் விமர்சனங்களை எழுதுவது தகுந்ததல்ல. எனவே அன்பர்கள் தாம் எழுதும் கருத்தை திடமாகவும் முறையாகவும் எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இது சாதாரண விடயமாகக்கருத வேண்டாம், இந்த ஆக்கங்களை பல அரசியல் வாதிகளும் அமைப்பாளர்களும் எடுத்துக் கையாண்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதனை நினைவில்வைத்துக்கொள்ளுங்கள் அன்பர்களே!!!

முன்னைய பகுதிகளில்,
•    பிரபாகரன் மனத்திடமுள்ள ஒருமனிதன் ஆனால் அரசியல்திட்டத்தில் கோட்டைவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தோம்…
•    பிரபாகரனைப் பாராட்டிப் பாடல்கள் புனையப்பட்டபோதும், மற்றைய தலைசிறந்த போராளிகளுக்கோ, தந்தை

செல்வாவிற்கோ, அகிம்சைவழியில் போராடிக்காட்டிய அண்ணன்திலீபனுக்கோ எந்த வித பாராட்டுக்களும் பெரிதாக வரவில்லையே… என்ற உண்மையினை வெளிக்காட்டியிருந்தோம்,…

•    போராளிகள் பட்டியலில் அதாவது, மாவீரர்கள் பெயர்களில் அனைத்துத் தமிழர்களுமேயன்றி, தனிய விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அல்லது புலிகளால் தெரிவு செய்யப்பட்ட ஒருசில வேறு அமைப்பைச்சார்ந்த தமிழர்கள் மட்டும் காட்டப்படுவது முறையற்றது என்பதனை உட்கொண்டிருந்தோம்…

•    தமிழீழம் கிடைத்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய பல அபிவிருத்தித்திட்டங்களை போராட்டகாலத்தில் மேற்கொண்டு, இப்போராட்டத்தின் காலத்தில் அழிக்கப்பட்ட ஒரு சொத்தாக ஆக்கியமை தகுந்ததல்ல என்பதனை அலசியிருந்தோம்,…

•    தலைவரின் மழலைகள் வாழும் வசதிக்கேற்பவே மற்றைய சாதாரண குடிமக்களும் வாழவேண்டும் என்பதனை, சமஉரிமை கோரிக்கையினை நிலைநாட்ட போராடவேண்டும் என்பதனை எடுத்துப்பார்த்தோம்…

•    எங்களுடைய தவறை வெளிநாட்டவர்களுக்கு மறைக்கலாமேயொழிய, எம்மக்களிடையே மறைக்குக்கூடாது. அதுபோலவே, சுட்டிக்காட்டப்படும் தவறை நிவர்த்திசெய்யவேண்டுமேயொழிய, தவறுகளைச் சுட்டிக்காட்டுவோரை தாழ்த்தியோ அல்லது, அவதூறாக்கி அவமானப்படுத்தி மாற்றுக்கருத்துக்காரர் என்ற ஒரு பிறிதான பார்வையினைச்செலுத்தி பெரும் சந்தர்ப்பங்களை ஒதுக்கக்கூடாது என்பதனை விரிவு படுத்தியிருந்தோம்….

•    “அறிவு” என்பது ஆதரவு, எதிர்ப்பு என்பதில் இல்லை!!! அறிவு, எங்கிருந்தாலும் அதனை தேவைப்படுவோர் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்பதே இயற்கையின் நியதி என்பதனை நிரூபித்திருந்தோம்,…

•    நாம் சொல்வது மட்டுமே நீதியானது, நாம் சொல்பவர்கள் மட்டுமே நல்லவர்கள், நாம் செய்வது மட்டுமே முறையானதும் சரியானதும்,… …. …. …. என்ற  வறட்டுக்கௌரவத்தை கைவிடவேண்டும் என்பதோடு, அரச அதிகாரம் கட்டுப்பாடற்ற இயக்க அதிகாரத்திற்குப் புறம்பானது என்பதனை உணர்ந்து, எமது கோரிக்கைகளையும் வசைபாடல்களையும் வெளியிடவேண்டும் என்பதனை நாசுக்காவ அறிவுறுத்தியிருந்தோம்…

•    புலிகள் … புலிகள்… என்று பலிகளாக்கிய தொகையினை எடுத்துப்பார்த்து, அறிவுக்கு வேலைகொடுப்பதைவிட்டு, டக்ளஸ்… கருணா… பிள்ளையான்… வரதன்… ஒட்டுக்குழு… துரோகிகள்… என்ற வார்த்தைப்பதத்தை விட்டு, ஆக்கபூர்வமான செயலை யார் செய்கின்றார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்க கைகோர்க்க வேண்டும் என்பதனை கோரியிருந்தோம்…

•    பிரபாகரனின் பெயரை வைத்தும், புலிகளின் பெயரை வைத்தும், உலகம் முழுதும் தம்மையும் தம்குடும்பத்தையும் பலப்படுத்தியவர்கள் இப்போது தேசத்துரோகிகளாகி, நாடுவிட்டு நாடுபோய் ஒழிந்திருக்கின்றோரும், “நாடுகடந்த” என்ற பெயரில் பொறுப்புகளை மற்றவரிடம் கைமாத்திவிட்டு தாம் தப்பும் வழிதேடும்…அறிவுறுத்தியிருந்தோம்

•    வெள்ளைத்தோலிலும் பார்க்க எமது தமிழர்களுக்கு அறிவும், சூழ்ச்சியும், ஆர்வமும், திறனும்,… இன்னும் பலவிடயங்கள் சிறப்பானது என்பதனையும் வலியுறுத்தியிருந்தேன்….

•    இந்திய குறிப்பாக தமிழ்நாட்டு தலைவர்கள் ஆட்டும் ஆட்டத்திற்கு ஆடவேண்டிய அவசியப்பாடு ஏன் என்ற வினாக்கள் பலமாக அழுத்தியிருந்தேன்…

•    தமிழர்களின் சேதத்தை அல்பிரட் துரையப்பாவிடம் இருந்து ஆரம்பித்து பார்க்க வேண்டும், என்பதனையும் இழப்பு அல்லது, உரிமை மாற்றானிடம் இருந்து மட்டுமல்ல எமது தலைமைகளிடமிருந்தும் கிடைக்கவேண்டும் என்பதனையும் அறிவுறுத்தியிருந்தேன்…

•    தந்தை செல்வாவின் போக்கினை ஆதரிக்கும் நாடுகடந்த அரசு ஏன் அவரின் வழியை பின்பற்ற பின்நிற்கின்றது போன்ற பல வினாக்களையும் புதைத்திருந்தேன்

•    … …. …. ….

இவைபோன்ற பல விடயங்களை தமிழர்களின் விடிவு நோக்கிய தடங்கள் எப்படி அமையவேண்டும் என்று பார்த்தும், விமர்சனங்கள் குறுகிய வட்டத்தில் அதாவது, பிரபாகரன்… பிரபாகரன்… பிரபாகரன், புலிகள்… புலிகள்… புலிகள்… என்று நிற்கின்றபோதிலும், அதனை வெளிப்படையாக அல்லது தெளிவாக எழுத முடியாத போக்கினையும் காணக்கூடியதாக இருக்கின்றமையும், வரலாற்றில் நடந்த பல விடயங்கள் வாசகர்களுக்கு மழுங்கடிக்கப்பட்ட முறையில் அடிமனதில் படிந்திருப்பதும் தெரியவருகின்றது.

ஏற்கனவே சொன்னது போல், பலமான அறிவுக்கட்டமைப்பினை ஏற்படுத்த “ பாலமாக” அமைத்து அதிரடி இணையம் பல கோணங்களை உருவாக்கியுள்ளது, அதிரடி யாருக்கும் சார்பாகவோ, ஆதரவாகவோ எழுதியது கிடையாது, என்பதனை முன்னைய தகவல்கள் வெளிப்படுத்துகின்றது. இத்தளத்தை யார் அமைத்தாலும் அது தமிழர்களின் விடிவிற்கு வழிவகுக்குமா என்பதே முக்கியம். விமர்சகர்கள் நன்கு ஒரு விடயத்தை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று சொல்லப்படுவோரே இப்போது அரசிடம் தஞ்சமடைந்திருக்கின்றார்கள்… தமிழர்கள் சார்பாக எழுத்துக்கள் மூலம் அல்லது செயற்பாடுகள் மூலம் நகர்வுகளை மேற்கொள்வோருக்கு அரசுடன் எந்த தொடர்பும் இல்லை என்பது உண்மையே!!!

புலிகளுடன் தொடர்பு உடையோர் என்று சொல்லப்படுவோர்கள் புலத்தின் “தமிழர்களுக்கு” நிதி சேகரிப்பது அன்றி வேறு விடயத்தை மேற்கொண்டார்கள் என்று விமர்சகர்கள் உறுதிப்படுத்தமுடிந்தால் அது வரவேற்கப்படுகின்றது.

மேலும் விரிவாகச்சொல்லப்போனால், புலத்தில் தமிழர்களுக்கு ஆயிரம் சிக்கல்கள் இருக்கின்றது… விசா சிக்கல், முதலீட்டுச்சிக்கல், குழந்தை வளர்ப்பு, குடும்பச்சிக்கல், காதல்பிணக்கு, கல்விச்சிக்கல், மொழி பெயர்ப்புச்சிக்கல், வைத்தியம்தொடர்பான சிக்கல், தமிழ் மொழிதொடர்பான சிக்கல், வரலாறு தொடர்பான சிக்கல், ஆவணங்கள் தொடர்பான சிக்கல், கலை கலாசார அபிவிருத்தி தொடர்பான சிக்கல், இடம்பெயர்ந்த உறவுகளின் தகவல்தொடர்பு சிக்கல், வியாபார விருத்தி தொடர்பான சிக்கல், புதிதாக புலத்தில் கால்பதிப்போர்களுக்கு அந்தந்த நாட்டின் சட்டமுறைகள் தொடர்பான சிக்கல், புலத்துச் சிறைகளில் (சரியோ, தவறோ)சிறைப்பட்டிருக்கும் தமிழர் தொடர்பான சிக்கல், புலிகளுக்கென தமது சேவைகளை மேற்கொண்டு சட்டச்சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளவர்கள் தொடர்பான சிக்கல், தமிழ் பாரம்பரியத்தை வரலாற்றை உலகரீதியில் வெளிக்காட்டுதலில் ஏற்பட்டுள்ள சிக்கல்… … இப்படி ஆயிரம் ஆயிரம் சிக்கல்கள் இருக்கின்ற போதிலும் யார் எதில் தலையிட்டுள்ளார்கள்… இவ்வாறான கேள்விகள் கேட்க இருக்கின்றபோது மீண்டும்… மீண்டும்… ஒரே விடயத்தை விமர்சிப்பதும் எமது தவறை மூடிமறைப்பதும் முறையற்றது.

புலிகள் தொடர்பற்ற வேறு தனி அமைப்புக்கள் இவற்றை மேற்கொள்கின்றபோதிலும் அவற்றை தமிழ் ஊடகங்களோ, புலிகள் அமைப்பின் சார்பான ஊடகங்களோ இலங்கை அரசில் அங்கம்வகிக்கும் தமிழத்தலைவர்களோ பெரிதாக நினைத்ததாகஇல்லை, இந்நிலை மாறவேண்டும்.

புலிகளின் தலைவர் இறந்ததற்கான ஆதாரம் தெளிவில்லை என்று சொல்லும் ஊடகங்களும் சரி எழுத்தாளர்களும் சரி புலிகளின் ஆதரவாளர்கள் என்று தம்மை அறிமுகப்படுத்துவோரும் சரி தலைவர் இருக்கின்றார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்ட முன்வரவில்லையே!!! மேலும் அவர் தொடர்பாக அவர்களின் ஆதரவாக செயற்பட்ட நபர்களே தாமாகவே மூடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் இருக்கின்றார்கள்… அதனை கேட்க வக்கில்லாத சிலர் தவறான பாதைக்கு தம்மை கொண்டு செல்கின்றனர்.

இளந்தலைமுறைகள் பலர் புலத்தில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள் அதனை சீர்திருத்த ஒரு அமைப்பில்லை, ஆனால் கொடிபிடிக்கவும், வீதியில் முறையற்ற போராட்டத்தை மேற்கொள்ளவும் அவர்களைப்பயன்படுத்தி சட்டச்சிக்கலில் மாட்டிவிட்டு கைகழுவி விட்டார்கள் போராட்டத்தை நடாத்தியவர்கள். புலத்தில் ஒரு முறை இருக்கின்றது “சிறுவர்” பல விடயங்களில் சட்டச்சிக்கலில் இருந்து தப்பிவிடுவார்கள் என்பதால் அவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றது யார்குற்றம். இன்று பலர் தமது விசாவை நிரந்தர விசாவிற்கோ அல்லது மாற்று தேசியத்தை அடைவதற்கோ இந்த போராட்ட சிக்கல் தடையாக இருக்கின்றதென்பது பல தமிழர்களுக்குத்தெரியாது. இதனை எந்த தமிழ்ச் சட்டதரனி தீர்த்துவைக்கப்போகின்றார். பொறுத்திருப்போம் நாடுகடந்த அரசு இவையெல்லாவற்றையும் தீர்த்து நீதி வழங்கித்தரும் என்று…

ஏற்கனவே நாடுகடந்த அரசினை நடாத்துவோருக்கு அனுப்பி வைத்த ஒரு தகவலை தங்களுக்கு அறிவிக்க விரும்புகின்றேன். அதாவது, நாடுகடந்த தேர்தலை நடாத்துமுன்னர், உலகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களும் சரி, நாடுகடந்த அரசை ஏற்கின்ற தமிழர்களும் சரி, தமிழ் சார்ந்த உறவுகளும் சரி தம்மை இணையத்தின்மூலம் அல்லது அவர்களால் அமைக்கப்பட்டு “அலுவலகம்” குறிப்பிடுகின்ற இடத்தில் பதியப்பட்டு, அதற்கான ஒரு அடையாளச்சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அதைவைத்தே தேர்தலில் வாக்குப்போட அனுமதிக்கப்படவேண்டும். அதற்கான மாதிரி அடையாள அட்டையினையும் தயாரித்து அனுப்பியிருந்தேன்…

TamilEela Card ஆனால் அவ்வாறான செயற்பாடுகளைச் செய்வதற்கு தனிய கணனி அறிவு மட்டும் போதாது, தொடர்ந்து செயற்படுத்துவதற்கு மேலதிக பெரும் செயற்திறனுடைய ஆற்றல் வேண்டும். அதனால் அந்த செயற்பாடு அவர்களால் நடைமுறைப்படுத்தவேயில்லை!!! இதிலிருந்து புரிந்து கொள்ளக்கூடிய விடயம் என்னவென்றால் நாடுகடந்த அரசை முறையாக மேற்கொள்வதல்ல இதனுடைய குறிக்கோள் என்பதே முடிவு!!!

நீங்கள் யார் அதை அனுப்ப என்று கேட்பது தெரிகின்றது… பதில் தருகின்றேன்….

உங்களுக்குத் தெரியுமா இந்த நாடுகடந்த அரசு தொடர்பான தகவல்கள் எப்போது வெளிப்படுத்தப்பட்டது என்று??? நான் அதற்கான ஆதாரத்தைத்தருகின்றேன்…

என்னால்2008ல் வெளியிடப்பட்ட நாவலில் 222, மற்றும் 223ம் பகுதியில் வெளியிட்ட கருத்து அப்படியே 2009ல்
பட இணைப்புக்கள்…. (  image

 

 

 

 

 

 

 

http://www.calameo.com/books/000094812bfac40ba4b2a

 

image

 

 

 

 

 

 

 

)
வெளிவந்ததே இந்த நாடுகடந்த அரசு அதிலும் 2009ல் திரு “உ” அமைப்பாளர் வெளியிட்ட கருத்தையும் அதற்கு முன்னர் என்னால் வெளியிடப்பட்ட கருத்தினையும் ஒப்பிட்ட ஆதாரபூர்வமாக தமிழ் மக்களுக்குத் தர முயல்கின்றேன். பல கலாநிதிகளை வைத்து எனது கருத்தினை கொப்பிபண்ணி அலுவல்களை மேற்கொள்வதற்கு எதற்குத் தேர்தல், தெரிவு… இதற்கிடையில் கலாநிதிகளாம், சட்டத்தரணிகளாம்… ஆதாரத்தை இங்கு காட்டியும் முட்டாள் தனமாக விமர்சிப்பதை விட்டு ஆக்கபூர்வமாக விமர்சித்து ஒரு பலமான அறிவு கூட்டத்தை இனியாவது கட்டியெழுப்புங்கள்.  ( ( http://arugan.spaces.live.com/blog/cns!2D4751275AC842ED!1894.entry ) ) அருகனின் திட்ட அறிக்கை அவருடைய இணையத்தில் வெளியிடப்பட்ட நாள் 15-04-2009 ல் ((http://arugan.spaces.live.com/blog/cns!2D4751275AC842ED!1608.entry ) )
நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம்  - புதன்கிழமை 17 யூன் 2009 இரா.பார்த்தீபன்  “ இதனை உறுதிப்படுத்த மேற்குறிப்பிட்ட இணையத்தை பரிட்சித்துப்பார்க்கலாம்.

திட்டத்தை வெளிப்படுத்தியதுமட்டுமல்லாது, அறிக்கையினையும் அப்படியே கொப்பியடித்துள்ள செயற்பாடென்பது, வரவேற்கத்தக்கதே!!!!! இருந்தும், அடுத்த கட்டத்திலும் அதனைச் செயற்படுத்துவதிலும் தவறான முறையினைக்கையாள்வது வரவேற்கத்தக்கதோ??? இந்த பந்திகள் அருகனைப் பெருமைப்படுத்தவோ அல்லது பிரபல்யப்படுத்தவோ இல்லை என்பதனை தமிழர்கள் நன்கு தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும்.         

இதனை இங்கு குறிப்பிடுவதற்குக்காரணம் உண்மைகள் மறைக்கப்படக்கூடாது என்பதற்காகவும், திறமைகள் மழுங்கடிக்கப்படக்கூடாது என்பதற்காகவுமே... இதுபோன்று உலகின் பலபாகங்களிலும் உள்ள சிறப்புமிக்க கருத்துக்களை உள்வாங்க வேண்டாமா????

இதில் ஒவ்வொரு நாட்டிலும் தான்தோன்றித்தனமாகவும், முறையற்ற வீதாசாரத்தையும் வெளியிடுகின்ற போதிலும் மக்கள் அது தொடர்பாக பேசாமல் இருப்பது சரியானதோ என்ற ஐயப்பாடு எழாமல் இல்லை! ஏதொசெய்கின்றார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்று இருப்பதே எமது தவறு. இன்றைய தமிழர்களின் இந்த நிலையே அதுதான். தேர்தல் நடாத்துகின்றார்கள்… வட்டுக்கோட்டை, மக்கள் அவை, நாடுகடந்த அரசவை, … இப்படி மாறிமாறி அறிக்கைகள்… யாருடைய தலைமையில் இவை நடக்கின்றது… ஆரம்பத்தில் சுவிசில் நடந்த ஒரு தேர்தலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றார் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்… அறிக்கையுடன் இணையத்தில் வெளியிட்டிருந்தார், ஆனால் அத்தேர்தல் முறைப்படி(…) நடைபெற்றதும் அது மழுப்பியடிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோல் சீர்செய்யப்பட்டிருக்கின்றது… இதென்ன செயற்பாடு, தேர்தல் கமிசன் ஒன்றே ஒன்றுதான் இருக்கவேண்டும். அதுபல நாடுகளில் துணைக்காரியாலயத்தை வைத்திருக்கலாமேஒழிய செயற்படுத்திய ஒவ்வொரு விடயத்திற்கும் நாமாகவே பதில்களைத் தேடிக்கொள்ளக்கூடாது!!!!

இந்த நாடுகடந்த அரசு தொடர்பில் இன்றுவரை தலைவர், தேசியத்தலைவர், தமிழர்களின் ஏகபிரதிநிதித்தலைவர் தொடர்பாக எந்த அறிக்கைளும் விடக்காணவில்லையே !!! ஏன் இதுதொடர்பாக அவர்களிடம் மக்கள் வினாவ பின்வாங்குகின்றார்கள். பதில் தருவார்கள்… எப்போது தெரியுமா… நடந்த சம்பவம் தெரியாத ஒரு தலைமை ஏற்படும் போது அவர்கள் தமக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை அது எமக்கு முன்பிருந்தவர்களிடம் கேட்கவேண்டிய விடயம் என்று எல்லா கேள்விகளுக்கும் முழுக்குப்போட்டுவிடுவார்கள்… அப்போது தமிழர்களின் நிலை??????.......!!!!!!! ……

இத்தேர்தலில் விடுதலை புலிகளின் முக்கிய புலத்து உறுப்பினர்கள் பின்வாங்கியுள்ளார்கள்… மேலும் அவர்களையுந்தாண்டி சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரச அங்கிகாரமுடைய அரச தமிழ்ப்பிரதிநிதிகள் ஒதுக்கப்பட்டுளள்ளார்கள்… ஈழத்தின் அனைத்துத்தொல்லைகளையும் தாங்கிய தமிழர்களின் பிரதிநிதித்துவம் நிராகரிக்கப்பட்டுள்ளது….  இதில் ஒரு விடயத்தை குறிப்பிடத் தயங்கக்கூடாதென்பதற்காக வெளியிடுகின்றேன்… அதுவாகில் “கனடாவின் மேற்கு மாநிலத்தின் British Columbia, Alberta, Saskatchewan, Manitoba பகுதிகளுக்கான நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளிலிருந்து மொத்தம் 5 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட இருந்த நிலையில் ஐந்து பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்தே இவர்கள் ஐவரும் வெற்றி பெற்றுள்ளனர்.” இப்படி இணையத்தின் மூலம் தகவல் வெளிவந்திருக்கின்றது. இதில் ஒருவருக்கு குறிப்பிட்ட வாக்கு இருக்க வேண்டும் என்ற நியதி இன்றி நேரடியாகத்தெரிவு செய்யப்படுவது பொருத்தமானதா? என்ற ஒரு கேள்வி இருக்கின்றது!!!  சர்வதேசத்தின் கணிப்பின்படி இத்தேர்தலில் அபேட்சகராக நிற்க வேறு எவரும் விரும்பவில்லை என்றால், இறுதியாக கேட்கப்பட்ட அபேட்சகரில் திகமைக்கேற்ப தெரிவாகின்ற தலைவர் தனது அதிகாரத்தைப்பயன்படுத்தியே தெரிவு செய்யவேண்டும். போட்டி இன்றி தெரிவு செய்ய இது ஒன்றும் விழையாட்டல்ல, ... ஏன் மேலதிகமானோர் இதில் அக்கறை கொள்ளவில்லை, ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு முதலில் ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும். இப்படி பல விடயங்கள் இருக்கின்றபோது, போட்டியின்றி எப்படி தெரிவு செய்யமுடியும். அவர்களுக்கு அதற்கான தகுதியிருக்கின்றதா என்பதனை எவ்வாறு உறுதி செய்து கொள்வது . இதுதான் ஜனநாயக தேர்தலா???…

நாம்  இலங்கை அரசில் இருக்கின்ற தமிழர்களுக்கெதிரான போக்கினை எதிர்த்தே எமது போராட்டத்தை தொடங்கினோம். அதே போராட்டத்தை தமிழர்களிடம் இருந்து நிறுத்தவே, பிரபாகரன் மற்றைய அமைப்புக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்... இந்த வகையில் நாளை எமது உரிமைகளுக்காக ஒரு நாட்டில் அல்ல பலநாட்டில் தமிழர்களிடம் போரடும் நிலைக்குத்தள்ளப்படுகின்றோம் என்பதே இன்றுள்ள நிலை...  தொடரும்

Nessun commento:

Posta un commento