giovedì 29 aprile 2010

தமிழர்களின் உரிமையும், உயிரும் பரிட்சித்துப்பார்ப்பதற்கு, விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்களல்ல!!! ஆயிரம் பரிட்சயத்தில் இரு முடிவினைக் கண்டெடுக்க

நாடு கடந்த “அரசு” என்பது ஒரு  அமைப்பேயன்றி அரசாகமுடியாது!

04-01-2010-2-24-19-pm_Tamil copy பல் தேசத்தில் உருவாக்கப்படும் அமைப்புக்களின் ஒன்றியமாகத் தலைமைச் செயலகம் செயற்படலாமே ஒழிய ஒரு அரசாகச் செயற்பட முடியாது. இதற்கு எந்த நாட்டிலும், எந்த மனித உரிமை சட்டத்திலும், அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பிலும் இடம் இல்லை! இப்படிப்பார்க்கும் போது தமிழ் அரசுக்கட்சி என்றால் தமிழர்களுடைய அரசு கொண்ட கட்சி என்று பொருள்படுமா?

தேசிய, சர்வதேச மட்டங்களில் மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் பெற்றக் கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையிலும், பிறருடன் இணைந்தும் முயற்சிகளைச் செய்ய உரிமை உண்டு. அமைப்புக்களை உருவாக்க அனுமதியுண்டு. அந்த வகையில் யார் எதுவேண்டுமானாலும் செய்யலாம் அனால் அது “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் பிரகடனத்தின்  உறுப்புரை 11ன்படி நடத்தை அல்லது ஒழுக்கம் தொடர்பான தேசிய, சர்வதேச நியமங்களுக்கு இணங்கி ஒழுகல் வேண்டும்.

ஒரு அமைப்பு தீவிர வாதமற்ற செயலையோ, அல்லது தனது யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கத்தவர்களைக் கொண்ட அசைவுகளையோ மற்றவர்களின் உரிமையினைப்பாதிக்காதவகையில் மேற்கொள்வதில் தவறில்லை. அதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் பிரகடனம் வெளிப்படுத்துவதாவது, “பொதுச்சபை தீர்மானம் 53-144 உறுப்புரை 11 ஒவ்வொருவருக்கும், தனிப்பட்ட முறையிலும் பிறருடன் இணைந்த முறையிலும் தனது தொழிலை சட்டப்படி செய்ய உரிமையுடையவராவர். ஒவ்வொருவரும் தனது தொழில் காரணமாக பிறரின் மனித கௌரவம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்பவற்றைப் பாதிக்கும் சந்தர்பங்களில் அவ்வுரிமைகளையும் சுதந்திரங்களையும் மதித்து நடத்த வேண்டும். அத்துடன் நடத்தை அல்லது ஒழுக்கம் தொடர்பான தேசிய, சர்வதேச நியமங்களுக்கு இணங்கி ஒழுகல் வேண்டும்”.   எனவும், “உறுப்புரை 7 ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையிலும் புதிய மனித உரிமை சிந்தனைகள், தத்துவங்கள் என்பவற்றை உருவாக்கி, விருத்தி செய்து  கலந்துரையாடும் உரிமைகளை உடையவர்கள்; அத்துடன் அவற்றை ஏற்கும் வண்ணம் வாதிடும் உரிமையும் உடையவர்கள்” எனவே மனித உரிமைகள் தொடர்பாக அமைப்பொன்றின்மூலம் போராட (உறுப்புரை 11) உரித்துண்டு. ஆனால் எந்த சட்டத்திலும் இடமில்லாத ஒரு விடயம் “குழுக்களோ, அமைப்புக்களோ, மக்களின் ஆணையுடன் ஒரு அரசை அமைக்கக்கூடும்” என. இது இப்படியிருக்க 1945க்கு முன்னர் இருந்த காலகட்டத்தை வைத்து உதாரணங்காட்டி தமிழர்களை தவறான வழிக்குள் கொண்டு செல்வது நீதியானதல்ல. தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்கவேண்டும் அது சரியான முறையில் கிடைக்கவேண்டும். தமிழர்களின் உரிமையும், உயிரும்  பரிட்சித்துப்பார்ப்பதற்கு, விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்களல்ல!!! ஆயிரம் பரிட்சயத்தில் இரு முடிவினைக் கண்டெடுக்க...

இந்த நாடுகடந்த அமைப்பு அல்லது நிறுவனம் எப்போது ஒரு அரசின் கீழ் பதியப்பட்ட அரசியல் கட்சியாகின்றதோ, அதன்மூலம் அரச உள்நாட்டுச்சட்டங்களுக்கு அமைவாக தேர்தலில் ஜனநாயகமுறையில் ஆட்சியைப்பிடிக்கின்றதோ அப்போதோ, அப்போதே அது சர்வதேச செவிகளுக்கு அதன் கூக்குரல் கேட்கும். மேலும் இந்த கூத்தெல்லாம் தம்மை பலமுள்ளவர்களாக்குவதற்கான வழிவகைகள் என்று எடுத்துக்கொண்டாலும்,   பகுதி 8ல் குறிப்பிட்டது போல் இவர்கள் இலங்கையின் அரசியல் கட்சியில் தம்மை ஈடுபடுத்தத்தான் போகின்றார்கள். இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாத தமிழர்கள் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் தம்முடைய புலத்துச்செயற்பாடுகளை நகர்த்திவருகின்றனர். உறுப்புரை 14 (1. அரசின் சட்ட வரம்பின் கீழ்வரும் சகல குடியியல், அரசியல், சமூக பொருளாதார உரிமைகள் பற்றிய புரிந்துணர்வை மேலும் மேம்படுத்திக் கொள்ளத் தேவையான சட்ட, நீதி, நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அரசுக்கு
உண்டு. (2. இத்தகைய நடவடிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும் (அதுவாகில்),

அ. தேசிய சட்டங்கள், பிரமாணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அடிப்படையான சர்வதேச மனித உரிமைக் கருவிகள் என்பனவற்றைப் பிரசுரித்தலும் அவை பரந்த முறையில் கிடைக்குமாறு செய்தலும்.

ஆ.  அரசானது சர்வதேச மனித உரிமை ஒழுங்கு விதிகளின்படி செயற்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு காலத்துக்குக் காலம் சமர்ப்பிக்கும் அறிக்கைகள், இவ்வமைப்புக்களின் அதிகாரசபை அறிக்கைகள், இது தொடர்பான கலந்துரையாடல்கள் பற்றிய ஆவணங்கள் உட்பட மனித உரிமைகள் தொடார்பான சர்வதேச ஆவணங்களை முழுமையாகவும் சமத்துவ அடிப்படையிலும் பெற்றுக்கொள்ளும் உரிமை.

இ. அரசானது தனது சட்ட வரம்புக்குள் வரும் பிரதேசத்துக்குள் மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தேவையான சுதந்திரமான தேசிய நிறுவனங்களை உருவாக்கும் விடயத்தில் அரசானது தனது முழு ஆதரவையும் உறுதி செய்யும்.

இத்தகைய நிறுவனங்கள் குறைகேள் அதிகாரியாகவும், மனித உரிமைகள் ஆணைக் குமுக்களாகவும், வேறு எவ்வகையான தேசிய நிறுவனமானவும் அமையலாம்”. என்பதோடு மட்டுமல்லாது, இவ்வாறான செயற்பாடுகளுக்கு எத்தகைய அனுமதியும் உரிமையும் இருக்கின்றதோ அதே வேளை “உறுப்புரை 19 -  தற்போதைய பிரகடனத்தில் சொல்லப்பட்ட உரிமைகளையும் சுதந்திரங்களையும் அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையில் ஈடுபடும் உரிமை தனியாளுக்கோ, குழுவுக்கோ அல்லது சமூகத்தின் ஏதேனும் உறுப்புக்கோ அல்லது அரசுக்கோ இருப்பதாகத் தற்போதைய பிரகடனத்தின் அம்சங்கள் எவையேனும் வியாக்கியானப் படுத்தப்படக் (பொருள்கோடல் கொள்ள) கூடாது”. என்றும்

உறுப்புரை 20 ஐக்கிய நாடுகள் சாசனத்தின் செயற்பாடுகளுக்கு மாறான முறையில் தனியாட்களும்  குழுக்களும் நிறுவனங்களும் அல்லது அரசார்பற்ற அமைப்புக்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசுகள் ஆதரவளிப்பதை அனுமதிக்கும் முறையில் தற்போதைய பிரகடனத்தில் உள்ள எவையும் பொருள்கோடற்படலாகாது.” இதையும் தெளிவாக அறிக்கை குறிப்பிடுகின்றது.  இதில் இருந்து இந்த நாடுகடந்த செயற்பாடு அரசிற்கோ அல்லது அரசாங்கங்களுக்கோ ஏதாவது ஓர் வகையில் அச்சுறுத்தல் ஏற்படும் Nபுhது, அது தடைசெய்யப்படுவதோடு, தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும்.

கடந்த நாடுகடந்த தேர்தல்கள்தமக்கு வெற்றியைத்தந்திருக்கின்றன என்று கருதுகின்றார்களேயொழிய, அதன் தோல்வியை கூட மிக பெருமையாக புரட்டியடித்துள்ளார்கள். இலங்கைத்தேர்தலில் நடக்கின்ற ஜனநாயகம் ஒப்பீட்டளவில் தவறு என இணையங்களில் விமர்சிக்கும் அளவிற்கு நாடுகடந்த அரசின் விமர்சனம் மறைக்கப்பட்டிருக்கின்றது. அதாவது தேர்தல் கணிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்றால்,  

  • மொத்த தகுதியுடைய வாக்காளர் தொகை 100%

  • வாக்களித்தவர்களின் தொகை                            xx%

  • செல்லுபடியாகும் தொகை                                    xx%

  • நிராகரிக்கப்பட்ட தொகை                                      xx% 

என்ற வீதத்திலேயே கருத்துக்கணிப்புக்கள் அடம்பெறவேண்டும் ஆனால் புலத்தில் நடந்த தேர்தல்களில் வெளியிடப்படுகின்ற முடிவுகள் தெளிவின்மையினைக் காட்டுகின்றது. இதற்குக்காரணம் தேர்தலை நிராகரிப்பதாக கருத்தல்ல, தேர்தலின் வடிவமைப்பும் அதன் அமைப்பாளர்களின் ஆழுமையிலும் திடமற்ற முடிவுகளிலுமே தங்கியிருக்கின்றது. (xxx)

இப்போது இத்தேர்தலில் எந்த அமைப்புக்களோ அல்லது, முதலில் கட்சிகளை உருவாக்கியோ இந்தத்தேர்தல் நடைபெறவில்லை, தேர்தலுக்கான பரிட்சையே ஆங்காங்கு வட்டுக்கோட்டை, பேரவை என்ற போர்வையில் இடம்பெற்றது… மேலும் சில நாடுகளில் ஏற்கனவே நடந்த தேர்தலை வைத்தே முடிவுகள் வெளியிடப்படுமேஒழிய மீண்டும் நாடுகடந்த அரசிந்கான தேர்தலை நடாத்த அமைப்பாளர்கள் முன்வரவில்லை. இதனை மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும, இதற்குக்காரணம் யாதென்று மக்கள் உணரமாட்டார்கள் ஆனால் எம்மைப்போன்ற அரசியல் ஆய்வாளர்களால் இவற்றை உணர்வது அவ்வளவு கடினமான விடயமல்ல!

அடிப்படை அமைப்பாளர்களின் பலத்தை அதிகரிப்பதற்காகவே சில இடங்களில் தேர்தலை நடாத்துவதில் அசகுபுசகு இடம்பெறுகின்றன. இதனால் ஒரு நாட்டில் சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தம்மைச்சாராதவர்களாக இருந்தாலும் அவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளாத வகையில் தம்முடைய அங்கத்துவ பலத்தை அதிகரிப்பதற்காகளே பல நாடுகளில் சீரற்ற முறையில் தேர்தல் நடந்தாலும் அதனை ஏற்று அமைப்பை நடத்த முனைகின்றனர். இதில் சிங்கள அரசிற்கும், நாடுகடந்த அரசிற்கும் ஜனநாயக ரீதியில் எந்த மாற்றத்தையும் என்னால் காணமுடியவில்லை… அதே போல் சிங்கள அரசின் வண்போக்கிற்கும் தமிழ் அமைப்பாளர்களின் வண்போக்கிற்கும் எவ்வித வேறுபாடும் அமையவில்லை! இதை பலதடவை மக்கள் பார்வைக்குமஇ அமைப்புக்களின் பார்வைக்கும் கொணர்ந்த போதிலும் ஏதோ நடப்பவை நடக்கட்டும் என்று ஒவ்வொரு பக்கத்தினரும் பாதங்களை நகர்த்துகின்றனர்.

இன்று மகிந்தவின் பலம் தனிய இலங்கையில் மட்டுமல்ல, “சாக்” மற்றும் “ஜி15ன்” ஆட்சியும் மகிந்தவின் கைகளுக்குப்போகய்க்கொண்டு இருக்கின்றன. இந்தநிலையில் தமிழர்களின் வேகம் மட்டும் போதுதாது தூல்லியமான நுட்ப அணுகுமுறை அவசியம் அது தற்போதைய தமிழ்த்தலைவர்களிடத்தில் இல்லை, எனினும் இருப்போராவைத்து திட்டங்களை வகுக்கலாம் என்றால் அதுக்கு ஒத்துவருவதற்கும் தமிழர்களால் முடியாது இருக்கின்றன… இதற்கிடையில் தாயகம், தன்னாட்சி, சுணநிர்ணயம், தேசியம் … என்று ஏலம் போட்டுக்கொண்டிருக்கின்றனர் கட்சிக்காரர்களும் அமைப்பாளர்களும் புலிகள் ஆதரவாளார்களும். இதன் போக்கு தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்போகும் முடிவுகள்தான் என்ன?

மகிந்தாவின் பக்கமோ அல்லது இலங்கை அரசின் பக்கமோ நின்று பார்க்குமிடத்து, படிப்படியாக இலங்கை அரசிற்குச்சாதகமான சர்வதேசப்போக்கே காணப்படுகின்றது. ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில், மகிந்த தும்மினாலும் குற்றம், இருமினாலும் குற்றம் என்று குறைகளைத்தேடவிருக்கும் அளவிற்கு அங்குள்ள தமிழ் கட்சிகளுடனான கறைகளைப்போக்கவோ,  இலங்கை அரசால் தமிழர்களுக்கு ஏற்படும் கறைகளை வெளிக்காட்டவோ முன்வரவில்லை என்பது அப்பட்டமான உண்மை. ஒரு சிரிப்பான விடயம் என்னவென்றால் மகிந்தவின் காலடியில் ஒருவர் தடக்கிவிழுந்த தகவலை புகைப்படத்தோடு கிண்டலாக வெளியிட அது உண்மையென்று பல இணையங்கள் தொடர்ச்சியாக அதனை மீழ்பிரசுரித்திருந்தனர்… இதனால் தமிழர்களுக்கோ, தமிழ்க்கட்சிகளுக்கோ ஏதும் வரப்போகின்றதா என்றால் அது பூச்சியமே!!! ஆக்கபூர்வமாகச்செயற்படவேண்டும் தற்போது இணையங்கள். இன்னும் சில காலத்தில் இலங்கை அரசிற்கெதிராக செயற்படுகின்ற இணையங்கள்கூட செயலற்றுப்போகலாம்… இல்லை சட்டத்தின்முன் நிறுத்தப்படலாம். இவ்வாறு செய்யப்படுமாயின் அதன்பின்னர் உண்மைச் செய்திகளையும் புலத்தின் தமிழர்கள் அறிந்து கொள்ள இணையங்கள் உதவியாக இல்லாது போய்விடும். மகிந்தவை குறைசொல்வதாக நினைத்து எம்மைநாமே குறைத்து மதிப்பிட்டுக்கொள்கின்றோம்.

முழு அதிகாரத்தை மகிந்த வைத்திருந்த போதிலும், சர்வதேசத்திற்கான ஆதாரம ஜனநாயகத்தைக்காட்டும் ஒரே காரணம் தமிழர்களுடைய கோரஅழுகைகூட சர்வதேசத்தின் செவிகளையும் மனங்களையும் மந்தமாக்குகின்றன. இந்தவகையில் தான் தற்போது வழங்கப்பட்ட அமைச்சரவைகள் தொடர்பாக ஏற்கனவே பலதடவைகள் வெவ்வேறு ஆக்கங்கள் ஊடாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தற்போதை அமைச்சர்களாகவுள்ள தமிழர்கள், மற்றும் பல பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்டிருந்த போதிலும் கூட்டமைப்பினர்களுக்கு அதற்கேற்ற அமைச்சின் அங்கத்துவமின்மை போன்றவற்றையும் அடுத்த பகுதியில் உற்று நோக்குவோம். அன்பன் அருகன்.     (29/04/2010)

Nessun commento:

Posta un commento