sabato 1 maggio 2010

“புலிகளின் பெயரைக் கறைப்படுத்துவதாக எண்ணி, தேசத்திற்காக மாண்ட தமிழர்களின் தியாகத்தை மறந்து விடாதீர்கள்”

தமிழ் அமைச்சாகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைததுத் தமிழ் அரச ஊழியர்கள், மேலும்  தமிழ் அரசியற் கட்சிகள் போனறவற்றின் கவனத்திற்கு…!!

தமிழர்களுக்காக கட்டப்பட்ட இராணுவக்கட்டமைப்பு, அழிக்கப்பட் நிலையில், அப்பிரதேசங்கள் அனைத்திலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதையும், ஒரேதேசத்திற்குள் அதாவது சிங்கள பிரதேசங்களில் தமிழ் பதாகைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் பிரதேசத்தில் வலுக் கட்டாய உட்செலுத்தல்கள் இடம் பெறுகின்றமையும், தமிழர்களின் நிலத்தில் தேவையற்ற “புத்தர்” சிலைகளை அமைப்பதும், தமிழ் சரித்திரத்தை ஒதுக்கி புதிய நினைவுச்சின்னங்களை அரசுசார்பில் அதிலும், சிங்கள பண்பாட்டில் அமைப்பது போன்றன முறையற்றது என்று தமிழர்களாகிய தங்களுக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியவையல்ல!!!

இதற்கு “நாங்கள் என்ன செய்ய???”  என்று தகுதியுடையோர்களாகத் தெரிவாகியுள்ள தாங்கள் கையை விரிக்காதீர்கள்!!! …  தமிழ்ப்பிரதேசங்களில் சிங்கள சின்னம் ஒன்று அமைக்கப்பட்டால், சிங்கள அரசையும், சிங்கள அதிகாரிகளையும் குறைகூறுவதை விட்டுவிட்டு,… போலி அறிக்கைகளை மட்டும் விடுவதை ஓரங்கட்டிவிட்டு,… நிறைவேறாத வாக்குறுதிகளால் காலம் கடத்துவதைவிடுத்து,… தங்களுக்குரிய  அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளைப் பயன்படுத்தி, அதனை எதிர்ப்பதற்கு வீண் விரயத்தைச் செலவழிப்பதிலும் பார்க்க, தமிழ்ப் பிரதேசங்களிலும் சிங்கள பிரதேசங்களிலும் தமிழ் சரித்திரச்சின்னத்தை ஒன்றிற்கு மேல் அமையுங்கள்!!! ஆப்போது சிங்கள மக்கள் அல்லது அரசு எதிர்ப்புத்தெரிவித்தால் அதன் காரணம் தமிழ்ப்பிரதேச ஆக்கிரபிப்புக்கள் நிறுத்தப்படுவது சட்டமாக்கப்படும்.
யாழில் இருக்கும் மணிக்கூட்டுக்கோபுரத்தை புணரமைப்பதோடு மட்டும் நின்றுவிடாது, இன்னும் பல தமிழர்களின் சாதனைகளையும், சரித்திரத்தையும் நிலைநாட்ட புதிய வடிவங்களை அமையுங்கள். இதற்கு அரச நிதி போதவில்லை என்றால், புலத்தில் பல தேசப்பற்றாளர்கள், தொழில் அதிபர்கள் போன்றோருடைய உதவிதவியை நாடலாமே!

“புலிகளின் பெயரைக் கறைப்படுத்துவதாக எண்ணி, தேசத்திற்காக மாண்ட தமிழர்களின் தியாகத்தை மறந்து விடாதீர்கள்” என்பதனை இத்தால் வலியுறுத்த விரும்புகின்றோம்.

எமது உரிமைகளை சிங்கள அரசிடம் போராடி வெல்ல முடியாது என்பதற்காக, அரசியல் அணுகுமுறையிலும் கோட்டைவிட்டுவிடாதீர்கள். எனவே எமது மண்மீட்பின் நோக்கத்திற்காகப் போராடிய ஏராளம் தியாகிகள் வரலாற்றில் பதியவேண்டியவர்களாக இருக்கின்றபோது, அவ்வாறான “தேவர்களை” சரித்திரத்தில் இருந்து நீக்க தமிழர்களாகிய நீங்களே காரணிகளாக அமைந்து விடக்கூடாது மதிப்பிற்குரியவர்களே!

மதிப்பின் இலங்கை அதிபர் தகுந்த முறையில் சர்வதேசப்போக்கில் தனது இராஜதந்திரத்தைக்
கையாள்வதை  வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்காமல், இத்தனைகால அனுபவமே தங்களுக்கு (தமிழ் அரசியல்வாதிகளாக) ஏராளம் அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றதே!!! அது போதுமானதாக இருக்கின்றபோது, பதவிகள் காலாவதியாவதற்குள் தாங்கள் நிலைநாட்டக்கூடியதை நிலைநாட்டுங்கள் என்பதனை இத்தால் வலியுறுத்தப்படுகின்றீர்கள்.

நன்றிகள்

இப்படிக்கு
இத்தாலியில் பல செயற்பாடுகளை மேற்கொண்டு சட்டப்படி பதிவுக்குள்ளாகியிருக்கும் தமிழ் ஒன்றியம்
“ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம்” – UNGA
பதிவிலக்கம் P.IVA/C.F:91138190359 -

தொடர்புகளுக்கு அருகன்- 0039 3204031624

இத்தாலி மணிமனை
இத்தாலி.

 

 

image

Nessun commento:

Posta un commento