sabato 17 aprile 2010

பிரித்தானிய கட்சிகளுடன் புலிக்கட்சிகள் போட்டி… தமிழர்களின் உரிமை புலத்தில் விலைபோகின்றன…அருகன்

 

pflt பிரித்தானிய கட்சிகளுடன் புலிக்கட்சிகள் போட்டி… தமிழர்களின் உரிமை புலத்தில் விலைபோகின்றன…இதுதானா புது நகர்வுகள்?... என்ன புரியவில்லையா? பிரித்தாதனியாவின் தேர்தல் களத்தையும் பிரித்தானிய அரசியல் கட்சியின் சொதசொதப்பும்…

பிரித்தானியாவில், அண்ணளவாக 3லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் வாழ்கின்றார்கள். அத்தோடு தற்போதைய தமிழர்களின் துன்பவியல் சம்பவத்தால் மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியா நோக்கி நகர்ந்தோர் தொகையும் சேர்த்துப்பார்த்தால் இன்னும் அதிகம். இது இப்படி இருக்க, பிரித்தானிய அரசியல் கட்சிகள் தமிழர்கள் பக்கம் தமது பார்வையினைத்திருப்பியுள்ளார்கள்.

அவர்கள் பார்வையைத்திருப்பியதை தமிழர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக தமது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்களின் சிக்கலான பிணக்கை தொக்கலாக தூக்கிகாட்டியுள்ளார்கள். இதனை அறிந்த தமிழர்கள் ஏன் மற்றவனிடம் வாக்குகளைப்போடவேண்டும் நாமே அரசியல் கட்சியை ஆரம்பிப்போம் என்று தொடங்கிய கட்சிதான் தற்போதைய தமிழ்க்கட்சி.

இதில் ஒரு முக்கிய விடயத்தை கவனிக்க வேண்டும். உண்மையிலேயே தமிழர்கள் தேர்தல் காலத்தில் எப்படியெல்லாம் நகர்வைமேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டார்கள். ஆரம்பத்தில் எமது ஆட்சியையே சொதப்பியவர்கள் இப்போது ஆயுளையே சொதப்பப்போகின்றார்கள்.

வாக்குறுதிகளை யார்வேண்டுமென்றாலும் வழங்கலாம். அதனை நிறைவேற்றமுடியுமா? என்பதனை முதலில் பார்க்க வேண்டும். வலு முன்மூரமாக தமிழ் அழிவு நடந்த போது வேடிக்கை பார்த்த பிரித்தானியா, இப்போது தேர்தல் காலத்தில் கத்துகின்ற கத்தலில் தமிழர்களுக்கு தமிழீழம் கிடைக்கப்போகின்றதாம்.

வெள்ளைத்தோல் இங்கிலீசு கதைத்தால் அவன் அறிவாளியாம், அரசியல் வாதியாம்… தமிழர்கள் தமிழில் அதே கருத்தை தெரிவித்தால் அவர்கள் முட்டாள்களாம். நல்ல அறிவுடைய தலைமைகளைக்கொண்ட அமைப்பை வளர்த்துவைத்திருக்கின்றோம்.

கடந்த காலத்தில் தமிழர்கள் ஒன்றுகூடிய விதமும், தொகையும்… மற்றும் உண்ணாவிரத போக்கும் மட்டுமல்லாது, வீதி வழியே காவல்அதிகாரிகள் இழுத்துச்செல்லும் போதுகூட அஞ்சாத தன்மையுடைய அடங்காத்தமிழனை பக்கமாக அணைத்துவைத்திருக்க தற்போது அங்குள்ள கட்சிகள் போடும் “கானல் நீரே”  இவ்வறிக்கைகள், மற்றும் புதிக கட்சிகளின் lon-in-1உருவாக்கம்.

உங்களுக்கு நினைவிருக்கா, கடந்த காலத்தில் Mr.தொல் திருமாவளவன் போட்ட போடெல்லாம் தனது பாராளுமன்ன அவைக்கென்று, பலதடவை ஆக்கங்களை எழுதியிருந்தேன். அதுபோலவே சீமானுடைய போக்கும், அவருடைய புதிய கட்சி நகர்வும். அது இப்போது தமிழர்களுக்குப்புரிந்திருக்கும்.

ஒவ்வொரு புதிய அனுகுமுறையினையும் தமிழர்கள் இதுதான் சரியானதென்று எண்ணி எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள். நாளை நாடுகடந்த அரசிற்கெதிராக ஏதும் அசம்பாவிதம் இடம்பெற்றால் அனைவரையும் அதே வீதிப்போராட்டத்தில் தள்ளவே இப்போதைய நகர்வுகள்.

இனி அடுத்த கட்ட நகர்வு எது தெரியுமா? தமிழர்களிடம் இருந்து எவ்வாறு நிதிகளைத்திரட்டலாம் என்பதே!!! ஆதற்கு நேரடி வழிகளைப்பயன்படுத்த முடியாது, ஆயுத முனையினைக்காட்டி மிரட்ட முடியாது, ஊர்விலாசத்தைத்தாருங்கள் என்று அச்சுறுத்தமுடியாது, வேறு வழிகளை கையாளவேண்டும்.

எனவே மக்கள் கவனமாக தமது பார்வைகளை செலுத்த வேண்டும். உண்மையில் எத்தனையோ அமைப்புக்கள் தமிழர்களின் தேசிய மற்றும் அவர்களின் உரிமையினையும் வளர்ச்சியையும் நோக்கி செயற்படுகின்றது. அவ்வமைப்புக்களை ஓரங்கட்டி புதிய அமைப்புக்களை உருவாக்கி அதனூடாக தமிழர்களுக்கு விடிவு தரப்போவதாக பல அணுகுமுறைகள் நடக்கின்றதை மக்கள் அறிவார்கள்.

தமிழர்களைத் தமிழர்கள் ஓரங்கட்டுவதென்பது இன்றல்ல ஆரம்ப காலத்திலிருந்தே இடம்பெறுகின்றது. மேலும் ஒரு அமைப்பு நன்மைகருதிய செயற்பாடுகளையும் திறனுள்ள அணுகுமுறையினையும் மேற்கொண்டால் அதனை சிதைக்கச்செய்வதில் பலத்த அக்கறை காட்டுவதும் தமிழ் அமைப்புக்களே!!!

“முதலில் சேவை பிறகு வாக்கு”; இதை மக்கள் எப்போது தோதல் காலத்தில் உணர்கின்றார்களே அப்போது அபேட்சகர்கள் தம்மை தமிழர்களின் பார்வைக்கேற்றவகையில் நகர்த்துவார்கள் என்பதே உண்மை. புலிகள் இயக்கத்தின் காலத்திலேயே, பேச்சுக்களை முஸ்லீம் கட்சியுடன் தலைவர் பேச்சை நடத்திவிட்டார். பிறகு என்ன சம்மந்தன் புதிதாக ஒன்றைக்கதைக்கப்போகின்றார். பிரிந்த தமிழ்க்கட்சியை மதிக்கத்தெரியாத ஐயா அவர்கள் முஸ்லீம் கட்சியுடன் பேச்சுக்களை நாடவேண்டும். காரணம் அவர்களிடம் சில பாராளுமன்ற அங்கத்தவர்கள் இருக்கின்றார்களே!!! இது தமிழ்த் தேசத்துரோகமாகப்படவில்லையோ? ஏதோ இன்றுதான் தமிழர்களின் பிரச்சனை உருவாகியது போலும், அதை பற்றி தற்போது பேசிதீர்க்கப்போவதாகவும் உள்ளது இந்த செயற்பாடுகள். தேர்தலுக்கு முதல் நடந்த அனைத்தையும் தமிழர்கள் சற்று பின்நோக்கி நினைவுபடுத்த வேண்டும். சம்மந்தன் ஐயா அவர்கள் தனக்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து தமிழர்களுக்கு என்ன செய்யப்போகின்றார் என்பதனைப்பற்றி எந்தவித அறிக்கையும் இல்லை… பேச்சுக்களை நடத்தப்போவதாக பாசாங்குகாட்டுகின்றார். அதுபோலவே பிரித்தானிய நகர்வுகளும் அமைகின்றது. புதிதாக ஒரு கட்சியை உருவாக்கி தம்மை வெளிப்படுத்துவதிலும்பார்க்க ஏன் நாடுகடந்த அரசின் ஒரு பகுதி அல்லது அதன் பிரிவு ஒவ்வொரு நாடுகளிலும் தமது கட்சியை அமைத்து தேர்தலில் பங்குபெறக்கூடாது???  இருக்கின்ற அமைப்புப் போதாது என்று மேலும், மேலும் அமைப்புக்கள்!!! ஆனால் அதனால் தமிழர்கள் அடைந்த நன்மைகள் என்ன??? - அருகன்

Nessun commento:

Posta un commento