இந்தப்பகுதியுடன் வீண் விவாதங்களையும், அருகனை பற்றிய அலட்டல்களையும் விடுத்து, அடிகள் அனைத்தும் இடிகளாக விழும்படியும், மடியும் எங்கள் உரிமைகளின் விடிவு தெரியும்படியும், ஆழமாகச் சிந்திக்கும் பகுத்தாற்றல் தொடரும்படியும் அடியெடுத்து வைப்போமா??? கடந்த கலங்கள் அனைத்தும் அறிமுகங்கள் என்றே வைத்துக் கொள்வோம். எனினும் பலர் தொடர்ச்சியாக ஒரே விடயத்தை பல ஆக்கத்திற்கு விமர்சித்திருந்தார்கள். எனவே அவ்வாறான பொழுது போக்குகளை விடுத்து, தமிழர்களுக்கு நல்லதொரு தேசத்தை திடமாகக் கட்டியெழுப்ப எம்மாலும் முடியும் என்ன நம்பிக்கையினைக் கொள்வோம். புலிகள் மட்டுமே பலிகளுக்குச் சொந்தக்காரர்கள்… ஆனால், தமிழர்களின் விடிவிற்கு யார் வேண்டுமென்றாலும் சொந்தக்காரர்கள் ஆகலாம். நீயோ இல்லை நானோ சாதாரணமானவர்கள் என்று யார் சொன்னது? உன்னை நீயே தாழ்த்தி கேவலப்படுத்துகின்றாய்! ஊன்னில் உள்ள அரிய பொக்கிஷத்தை எப்போதாவது தூசிதட்டியது உண்டா?!!!!
venerdì 30 aprile 2010
அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -9) –அருகன்
giovedì 29 aprile 2010
தமிழர்களின் உரிமையும், உயிரும் பரிட்சித்துப்பார்ப்பதற்கு, விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்களல்ல!!! ஆயிரம் பரிட்சயத்தில் இரு முடிவினைக் கண்டெடுக்க
நாடு கடந்த “அரசு” என்பது ஒரு அமைப்பேயன்றி அரசாகமுடியாது!
பல் தேசத்தில் உருவாக்கப்படும் அமைப்புக்களின் ஒன்றியமாகத் தலைமைச் செயலகம் செயற்படலாமே ஒழிய ஒரு அரசாகச் செயற்பட முடியாது. இதற்கு எந்த நாட்டிலும், எந்த மனித உரிமை சட்டத்திலும், அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பிலும் இடம் இல்லை! இப்படிப்பார்க்கும் போது தமிழ் அரசுக்கட்சி என்றால் தமிழர்களுடைய அரசு கொண்ட கட்சி என்று பொருள்படுமா?
martedì 27 aprile 2010
"சிறுதுளி பெருவெள்ளம்" ஆதரவு கரம் கொடுங்கள்தமிழ் உறவுகளே!...
இத்தாலியில் மரணமடைந்த பெண்தொடர்பக மீண்டும் ஒரு பணிவான வேண்டுதல்!!!
"சிறுதுளி பெருவெள்ளம்" ஆதரவு கரம் கொடுங்கள்தமிழ் உறவுகளே!...
“தமிழீழ” அமைப்புக்களிடமிருந்தும், தமிழ் அமைப்புக்களிடம் இருந்தும், தமிழர்களிடம் இருந்தும், மற்றும் நிறுவன உரிமையாளர்களிடம் இருந்தும் நிதி உதவி கோரப்படுகின்றது!!! - உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தை இதனூடாகவும் காட்டவேண்டிநிற்கின்றோம். அதுவாகில், கடந்த காலத்தில் உலகத்தின் அதைத்து தமிழ் இணையங்களிலும் வெளியிடப்பட்ட "இராமர் விஜயலக்ஷ்மியின்" மரணம் (கொலை) தொடர்பாக அனைவரும் அறிந்ததே! குடும் உறவினை தொடர்பு கொள்ள ஆதரவாக இருந்த இணைய மற்றும் இணைய வாசகர்கள்அனைவருக்கும் எமது நன்றிகள்.
அந்த பெண்ணின் உடலத்தை எதிர்பார்த்து, இலங்கை - வவுனியாவில் அவருடைய கணவனும,; 17 வயதையுடைய மகளும் எதிர்பார்த்திருக்கின்றனர். இவர்கள் சிதம்பர புரம் என்னும் இடத்தில் கற்குளத்தில் வசித்துவருகின்றனர். தற்போது உள்ள சூழலில் அவர்களால் பொருளாதார நிலைகளுக்கு முகங்கொடுக்க முடியாது என்பதனை யாரும் சொல்லித் தெரியத் தேவையிருக்காது.
எனவே, அந்த அம்மையாரின் பூதவுடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை இத்தாலியில் இருந்து மேற்கொள்ள “ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம்” UNGA சம்மதம் தெரிவித்திருந்ததையும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை இத்தாலி மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நாம் இணையங்கள் மூலம் ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தோம். எனவே, அதற்கு ஏற்படும் செலவினத்தை விருப்புடைய அன்பர்கள் தந்து உதவுமாறும், செலவு போக மேலதிக பணத்தை அந்த குடும்ப நலனுக்காக கையளிக்க ஆவணசெய்யுமாறும் தமிழ் உறவுகளை வேண்டிநிற்கின்றேன்.
இதில் மக்களால் வழங்கப்படும் எந்த உதவித்தொகையிலும் யாரும் சந்தேகப்படத்தேவையில்லை காரணம் அனைத்துத்தகவலும் இணையவாயிலாக சமர்ப்பிக்கப்படும். அதுபோலவே மீதியாக வருகின்ற பணத்தின் விபரங்களும் இணையவாயிலாக வெளியிடப்படும்.
கடந்த காலங்களில் தமிழர்களுக்காக குரல்கொடுத்து, எமது ஒற்றுமையினைக்காட்டிய உறவுகள் இதற்கும் ஆதரவு வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இது தொடர்பாக நிதி ஆதரவு வழங்க முன்வருவோர் தேவைஏற்படின் கணவனுடனோ, அல்லது மகளுடனோ தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் நிதி அன்பளிப்பினை வழங்கவும், அதற்குத்தேவையான தொடர்பு இலக்கங்களையும் இதில் இணைக்கின்றேன். நேரடியாக அவர்களுக்கு உதவ முன்வருவோருக்கும் எமது நன்றிகள்!!! ஆனால் தற்போது, அந்த பெண்ணின் உடலை இலங்கைக்கு அனுபக்புவது தொடர்பான செலவினை இத்தாலியில் மேற்கொள்வதற்கான உதவியை, உறவுகள் தீர்த்துவைக்க பணிவுடன் வேண்டுகின்றோம்.
கணவனின் தொடர்புகளுக்கு
பொன்னுசாமி இராமர் (0094-0244906650 , 0094- 0779195134)
வீட்டிலக்கம் 76 கற்குளம்- 3
சிதம்பர புரம்
வவுனியா - இலங்கை
ஒன்றியத்தின் அனுமதியுடன்-நிதியை வழங்க வேண்டிய விபரம் (வழங்குவோர் தயவு செய்து தங்கள் விபரங்களை arugan@hotmail.it or arugan@hotmail.com மெயில் மூலம் அனுபக்பிவைக்குமாறும் வேண்டப்படுகின்றீர்கள்)
வங்கிவிபரம்
குறிப்பு-அனைத்து ஊடகங்களும் இத்தால் தெரிவிப்பது, தங்களுடைய வாசகர்களின் அணைவுடன் இதற்கும் ஆதரவு தருமாறு மிகப்பணிவுடன் வேண்டப்படுகின்றீர்கள்- அன்பன், அருகன்.
martedì 20 aprile 2010
lunedì 19 aprile 2010
நடந்து முடிந்த தேர்தலும் தமிழீழ தேசத்தின் எதிர்பார்ப்பும் அனலை நிதிஸ் ச. குமாரன்
நடந்து முடிந்த தேர்தலும் தமிழீழ தேசத்தின் எதிர்பார்ப்பும்
அனலை நிதிஸ் ச. குமாரன்
கடந்த மே மாதத்துடன் முப்பது வருட ஈழத் தமிழரின் ஆயுதவழிப் போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்த சிறிலங்கா, ஜனாதிபதிக்கான தேர்தலை ஜனவரி நடாத்தினார்கள். மகிந்தா மீண்டும் அமோக வெற்றிபெற்ற கையுடன் நாடாளுமன்றத்திற்கான தேர்தலையும் இந்த ஆண்டே நடாத்தி நாடாளுமன்றத்தையும் தனது வசம் கொண்டுவரவேண்டும் என்ற ஆதங்கத்துடன் இந்த தேர்தலையும் ஏப்ரல் 8-ஆம் திகதி நடாத்தி அதிலும் மகிந்தாவின் கூட்டணி வெற்றிபெற்று புதிய நாடாளுமன்ற அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
domenica 18 aprile 2010
ஆழுமை இல்லாத இடத்தில் அதிகாரம் இருப்பது பொருந்தாது
அரசனை நம்பி புருசனைக்கைவிட்டமாதிரி இருக்கின்றது கூட்டமைப்பினரின் செயல். மேலும் மீசையில மண்ஒட்டாதது மாதிரி “மக்களாணை” … மக்களாணை என்கின்றார்களே, 22 பாராளுமன்ற உறுப்பினர்களை விட 13 பாராளமன்ற உறுப்பினர் அதிகமோ????
இராஜதந்திரமற்ற கூட்டமைப்பினர், எதிரியின்கையைக் குலுக்காமல் , துரோகியின் காலில் விழாசென்றார்கள். ஆனால் பேச்சு நடத்து தயாராகும் கூட்டமைப்பினருக்கு ஒரு தகவலை “ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்ல வெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார். “ தெரிவித்திருக்கும் இந்த கட்சித்தலைவரின் வார்த்தையில் அடையாளம் காட்டப்பட்ட பகுதியை கூட்டமைப்பினர் நன்கு உணரவேண்டும். பிரபாவுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, கடைசிவரை அரசுடன் மற்றும் எதிர்க்கட்சியுடன் இணைந்திருந்தவர்கள் இப்போது எது செய்தாலும் என்ன கிடைக்கப்போகின்றது. கூட்டமைப்பினருக்கு இன்னும் அறிவு தெளியவில்லை… விரைவில் கூட்டமைப்பின் தலைமை மாற்றப்படவேண்டும். அப்போதுதான் தகுதியான அறிவுகள் செயற்படும். "ஆழுமை இல்லாத இடத்தில் அதிகாரம் இருப்பது பொருந்தாது."
அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) – Arugan (18/04/2010)
அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்குக் கொடுத்து அவரைப் பப்பாவில் ஏற்றி விட்டார்கள்..!! (பகுதி -4) – Arugan
இதுவரைக்கும் சில கருத்துக்களுக்கு பதிலோ அல்லது, பக்கச்சார்போ கொடுக்கமுடியாதவர்கள் தாம் பேச வருவதை நிதானமின்றி பேசுவதாலும், எப்படியும் எழுதலாம் என்று விளக்கமற்ற முறையிலும் விமர்சனங்களை எழுதுவது தகுந்ததல்ல. எனவே அன்பர்கள் தாம் எழுதும் கருத்தை திடமாகவும் முறையாகவும் எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இது சாதாரண விடயமாகக்கருத வேண்டாம், இந்த ஆக்கங்களை பல அரசியல் வாதிகளும் அமைப்பாளர்களும் எடுத்துக் கையாண்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதனை நினைவில்வைத்துக்கொள்ளுங்கள் அன்பர்களே!!!
முன்னைய பகுதிகளில்,
• பிரபாகரன் மனத்திடமுள்ள ஒருமனிதன் ஆனால் அரசியல்திட்டத்தில் கோட்டைவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தோம்…
• பிரபாகரனைப் பாராட்டிப் பாடல்கள் புனையப்பட்டபோதும், மற்றைய தலைசிறந்த போராளிகளுக்கோ, தந்தை
sabato 17 aprile 2010
பிரித்தானிய கட்சிகளுடன் புலிக்கட்சிகள் போட்டி… தமிழர்களின் உரிமை புலத்தில் விலைபோகின்றன…அருகன்
பிரித்தானிய கட்சிகளுடன் புலிக்கட்சிகள் போட்டி… தமிழர்களின் உரிமை புலத்தில் விலைபோகின்றன…இதுதானா புது நகர்வுகள்?... என்ன புரியவில்லையா? பிரித்தாதனியாவின் தேர்தல் களத்தையும் பிரித்தானிய அரசியல் கட்சியின் சொதசொதப்பும்…
பிரித்தானியாவில், அண்ணளவாக 3லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் வாழ்கின்றார்கள். அத்தோடு தற்போதைய தமிழர்களின் துன்பவியல் சம்பவத்தால் மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியா நோக்கி நகர்ந்தோர் தொகையும் சேர்த்துப்பார்த்தால் இன்னும் அதிகம். இது இப்படி இருக்க, பிரித்தானிய அரசியல் கட்சிகள் தமிழர்கள் பக்கம் தமது பார்வையினைத்திருப்பியுள்ளார்கள்.
அவர்கள் பார்வையைத்திருப்பியதை தமிழர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக தமது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்களின் சிக்கலான பிணக்கை தொக்கலாக தூக்கிகாட்டியுள்ளார்கள். இதனை அறிந்த தமிழர்கள் ஏன் மற்றவனிடம் வாக்குகளைப்போடவேண்டும் நாமே அரசியல் கட்சியை ஆரம்பிப்போம் என்று தொடங்கிய கட்சிதான் தற்போதைய தமிழ்க்கட்சி.
இதில் ஒரு முக்கிய விடயத்தை கவனிக்க வேண்டும். உண்மையிலேயே தமிழர்கள் தேர்தல் காலத்தில் எப்படியெல்லாம் நகர்வைமேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டார்கள். ஆரம்பத்தில் எமது ஆட்சியையே சொதப்பியவர்கள் இப்போது ஆயுளையே சொதப்பப்போகின்றார்கள்.
வாக்குறுதிகளை யார்வேண்டுமென்றாலும் வழங்கலாம். அதனை நிறைவேற்றமுடியுமா? என்பதனை முதலில் பார்க்க வேண்டும். வலு முன்மூரமாக தமிழ் அழிவு நடந்த போது வேடிக்கை பார்த்த பிரித்தானியா, இப்போது தேர்தல் காலத்தில் கத்துகின்ற கத்தலில் தமிழர்களுக்கு தமிழீழம் கிடைக்கப்போகின்றதாம்.
வெள்ளைத்தோல் இங்கிலீசு கதைத்தால் அவன் அறிவாளியாம், அரசியல் வாதியாம்… தமிழர்கள் தமிழில் அதே கருத்தை தெரிவித்தால் அவர்கள் முட்டாள்களாம். நல்ல அறிவுடைய தலைமைகளைக்கொண்ட அமைப்பை வளர்த்துவைத்திருக்கின்றோம்.
கடந்த காலத்தில் தமிழர்கள் ஒன்றுகூடிய விதமும், தொகையும்… மற்றும் உண்ணாவிரத போக்கும் மட்டுமல்லாது, வீதி வழியே காவல்அதிகாரிகள் இழுத்துச்செல்லும் போதுகூட அஞ்சாத தன்மையுடைய அடங்காத்தமிழனை பக்கமாக அணைத்துவைத்திருக்க தற்போது அங்குள்ள கட்சிகள் போடும் “கானல் நீரே” இவ்வறிக்கைகள், மற்றும் புதிக கட்சிகளின் உருவாக்கம்.
உங்களுக்கு நினைவிருக்கா, கடந்த காலத்தில் Mr.தொல் திருமாவளவன் போட்ட போடெல்லாம் தனது பாராளுமன்ன அவைக்கென்று, பலதடவை ஆக்கங்களை எழுதியிருந்தேன். அதுபோலவே சீமானுடைய போக்கும், அவருடைய புதிய கட்சி நகர்வும். அது இப்போது தமிழர்களுக்குப்புரிந்திருக்கும்.
ஒவ்வொரு புதிய அனுகுமுறையினையும் தமிழர்கள் இதுதான் சரியானதென்று எண்ணி எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள். நாளை நாடுகடந்த அரசிற்கெதிராக ஏதும் அசம்பாவிதம் இடம்பெற்றால் அனைவரையும் அதே வீதிப்போராட்டத்தில் தள்ளவே இப்போதைய நகர்வுகள்.
இனி அடுத்த கட்ட நகர்வு எது தெரியுமா? தமிழர்களிடம் இருந்து எவ்வாறு நிதிகளைத்திரட்டலாம் என்பதே!!! ஆதற்கு நேரடி வழிகளைப்பயன்படுத்த முடியாது, ஆயுத முனையினைக்காட்டி மிரட்ட முடியாது, ஊர்விலாசத்தைத்தாருங்கள் என்று அச்சுறுத்தமுடியாது, வேறு வழிகளை கையாளவேண்டும்.
எனவே மக்கள் கவனமாக தமது பார்வைகளை செலுத்த வேண்டும். உண்மையில் எத்தனையோ அமைப்புக்கள் தமிழர்களின் தேசிய மற்றும் அவர்களின் உரிமையினையும் வளர்ச்சியையும் நோக்கி செயற்படுகின்றது. அவ்வமைப்புக்களை ஓரங்கட்டி புதிய அமைப்புக்களை உருவாக்கி அதனூடாக தமிழர்களுக்கு விடிவு தரப்போவதாக பல அணுகுமுறைகள் நடக்கின்றதை மக்கள் அறிவார்கள்.
தமிழர்களைத் தமிழர்கள் ஓரங்கட்டுவதென்பது இன்றல்ல ஆரம்ப காலத்திலிருந்தே இடம்பெறுகின்றது. மேலும் ஒரு அமைப்பு நன்மைகருதிய செயற்பாடுகளையும் திறனுள்ள அணுகுமுறையினையும் மேற்கொண்டால் அதனை சிதைக்கச்செய்வதில் பலத்த அக்கறை காட்டுவதும் தமிழ் அமைப்புக்களே!!!
“முதலில் சேவை பிறகு வாக்கு”; இதை மக்கள் எப்போது தோதல் காலத்தில் உணர்கின்றார்களே அப்போது அபேட்சகர்கள் தம்மை தமிழர்களின் பார்வைக்கேற்றவகையில் நகர்த்துவார்கள் என்பதே உண்மை. புலிகள் இயக்கத்தின் காலத்திலேயே, பேச்சுக்களை முஸ்லீம் கட்சியுடன் தலைவர் பேச்சை நடத்திவிட்டார். பிறகு என்ன சம்மந்தன் புதிதாக ஒன்றைக்கதைக்கப்போகின்றார். பிரிந்த தமிழ்க்கட்சியை மதிக்கத்தெரியாத ஐயா அவர்கள் முஸ்லீம் கட்சியுடன் பேச்சுக்களை நாடவேண்டும். காரணம் அவர்களிடம் சில பாராளுமன்ற அங்கத்தவர்கள் இருக்கின்றார்களே!!! இது தமிழ்த் தேசத்துரோகமாகப்படவில்லையோ? ஏதோ இன்றுதான் தமிழர்களின் பிரச்சனை உருவாகியது போலும், அதை பற்றி தற்போது பேசிதீர்க்கப்போவதாகவும் உள்ளது இந்த செயற்பாடுகள். தேர்தலுக்கு முதல் நடந்த அனைத்தையும் தமிழர்கள் சற்று பின்நோக்கி நினைவுபடுத்த வேண்டும். சம்மந்தன் ஐயா அவர்கள் தனக்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து தமிழர்களுக்கு என்ன செய்யப்போகின்றார் என்பதனைப்பற்றி எந்தவித அறிக்கையும் இல்லை… பேச்சுக்களை நடத்தப்போவதாக பாசாங்குகாட்டுகின்றார். அதுபோலவே பிரித்தானிய நகர்வுகளும் அமைகின்றது. புதிதாக ஒரு கட்சியை உருவாக்கி தம்மை வெளிப்படுத்துவதிலும்பார்க்க ஏன் நாடுகடந்த அரசின் ஒரு பகுதி அல்லது அதன் பிரிவு ஒவ்வொரு நாடுகளிலும் தமது கட்சியை அமைத்து தேர்தலில் பங்குபெறக்கூடாது??? இருக்கின்ற அமைப்புப் போதாது என்று மேலும், மேலும் அமைப்புக்கள்!!! ஆனால் அதனால் தமிழர்கள் அடைந்த நன்மைகள் என்ன??? - அருகன்
martedì 13 aprile 2010
இதழ் ஒன்றுக்கு உருத்திரகுமாரன் நேர்காணல்
தமிழர்கள் தோற்றுவிடவில்லை – இதழ் ஒன்றுக்கு உருத்திரகுமாரன் நேர்காணல்
[ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2010, 07:25.49 AM GMT +05:30 ]
நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கத்தின் இணைப்பாளர் உருத்திரகுமாரன் அவர்கள் இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் இது. 2009 மே 17ன் பின்னரான தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட பரிமாணம், புதிதாய் பிறப்பெடுத்திருக்கும் நாடு கடந்த அரச உருவாக்கம், கே.பி மற்றும் உருத்திரகுமாரன் மீதான தனிமனித வசைபாடல்கள் என பல்வேறு வினாக்களோடும் பயணிக்கிறது இச் சிறப்பு நேர்காணல்.
கேள்வி: 2009 மே மாதத்திற்குப் பிறகு உருவான நாடு கடந்த தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
பதில்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதனை உருவாக்குவதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து இவ் அரசாங்கத்தினை அமைக்கும் பணி முன்னேற்றமடைந்து வருகிறது. இவ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பதனை ஆய்வு செய்து இதனை அமைக்கும் வழிவகைகள் தொடர்பான அறிக்கையினை மதியுரைக்குழு தைத்திருநாளன்று மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தது. 15.02.2010 வரை மக்கள் கருத்துக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மீளமைக்கப்பட்ட அறிக்கை 15.03.2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் இடம் பெறுவர். இவர்களில் 115 பேர் மக்கள் மத்தியிலிருந்து இதற்கென நடாத்தப்படும் தேர்தல்கள் மூலமாக ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தல்கள் உடனடியாக நடாத்துவதற்கு கடினமான இடங்களில் 20 பேராளர்கள் முதலாவது அரசவையால் தெரிந்தெடுக்கப்படுவார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான நேரடித் தேர்தல்கள் மே மதம் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் நடாத்தப்படுகிறது. அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் இலங்கை அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவது ஈழத் தமிழ் மக்களிடம் புதியயொரு நம்பிக்கையையும் நாம் தோற்றுப் போய்விடவில்லை என்ற உணர்வையும் கொடுத்து வருகிறது.
கேள்வி: கே.பி. பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள். குறிப்பாக அவர் இலங்கை அரசோடு பேசிக் கொண்டு தானாக முன் வந்து கைதாகி கொழும்பில் அரசு அரவணைப்பில் இருக்கிறார் என்பது பிரதான குற்றச்சாட்டு இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: திரு செ. பத்மநாதன் அவர்கள் (கே.பி.) மலேசியா கோலாலம்பூரில் வைத்து மலேசிய இராணுவப் புலனாய்வுத்துறையால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான நம்பகரமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட இக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம். அவர் தானாக முன்வந்து கைதாகியது என்று கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. 30 வருடங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்தில் இயங்கிய ஒரு போராளி குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமானதும் அல்ல.
இவர் இலங்கையின் கைதியாகிய பின்னர் பல்வேறுவகையான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதில் இருந்து வசதியாக வைக்கப்பட்டள்ளார் என்பது வரையிலான செய்திகள் வரை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் உண்மை பொய் குறித்த விடயங்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இருந்த போதும், இலங்கை தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று. எனவே அவர் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப்புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக்கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முதல் அறிவிப்பினை இவரே விடுத்திருந்தபடியால் எத்தயை ஏற்பாட்டின் அடிப்படையில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை இச் சந்தர்பத்தில் வெளிப்படுத்தல் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப் பொறுத்த வரையில் நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப்பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம். இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 15.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தான் விடுத்திருந்த அறிவிப்பில் இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம்.
இதற்கிடையில், திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.
இவை மட்டுமன்றி, நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப்போகிறவர்கள் திரு கே.பி யோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல. இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்ட, சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத் தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.
கேள்வி: எல்லா தரப்புக் குழுக்களையும் ஒருங்கிணைத்து பரந்து பட்ட ஒரு தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியாதா?
பதில்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு இத்தகைய நோக்கமும் உண்டு. இத் திட்டம் தொடர்பாக நாம் 16.06.2009 அன்று விடுத்த முதலாவது முன்மொழிவில், ”1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய – தமிழர் ஓர் தேசிய இனம் – வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம் – ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது” என்பதனை இம் முயற்சியின் அடிப்படைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தோம்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் தமிழர் சமூகத்தின் மத்தியில் இயங்கி வரும் உருவாகி வரும் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்குரிய திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் உருவாக்கும் போது நீங்கள் குறிப்பிடும் வகையிலான இணைவு நடந்தேறும் என்றே நான் கருதுகிறேன்.
கேள்வி: புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா?
பதில்: மே மாத நடுப்பகுதி வரை நாளாந்தம் பெருந்தொகையான மக்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை.
நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே.
கேள்வி: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் உலங்கிலும் உள்ள தமிழர்கள் தலைமை ரீதியாக பிளவு பட்டிருக்கிறார்கள். இது பெருங்குறை இல்லையா?
பதில்: முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டம்வரை இருந்த சூழலும் தற்போதய சூழலும் முற்றிலும் வேறுபட்டது. இப் புதிய சூழலில், புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டுள்ளதாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை இவற்றின் குறிக்கோள் ஒன்றுதான். ஆனால் அவற்றை அடையும் மூலோபாயங்களில் தான் வித்தியாசம்.
வித்தியாசமான மூலோபாயங்களைக் கொண்டு ஒரே குறிக்கோளை நோக்கி இயங்குவது நன்மை பயக்கக்கூடியதே. இதற்கு இம் முயற்சிகளிடையே ஏதோ ஓரு வகையான ஒருங்கிணைவு இருத்தல் அவசியம். இவ் ஒருங்கிணைவு ஒரு ஒருமைப்பாடு என்ற வடிவத்தில், வேற்றுமையிலும் உடன்பாடுகாணக்கூடிய ஒரு தளத்தில் இருந்தாலே போதுமானது. இத்தகைய புரிந்துணர்வு செயற்பாடுகளுக்குள்ளால் எட்டப்படக்கூடியது என்பதனை நான் திடமாக நம்புகிறேன். தற்போதைய இடைமாறு காலகட்டத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் எல்லாம் செயற்பாடு எனும் தளத்தில் இணையும்போது தெளிந்து விடும்.
கேள்வி: நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய உலகச் சூழலில் உலக நாடுகளின் கவனத்தை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை தன்பால் ஈர்க்குமா?
பதில்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முழுக்க முழுக்க ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக அமைக்கப்படுகிறது. இதன் செயற்பாடுகளும் முழுமையாய் அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கமைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஜரோப்பிய மற்றும் மேற்குலக மக்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகுந்த மதிப்புக் கொடுப்பவர்கள். இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை இந் நாடுகளால் நிராகரிக்கமுடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இலங்கை அரசு தனது ஆரவாரத்தால் உலக நாடுகளின் கவனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது திருப்பி விட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து இலங்கை அரசு அச்சமடைந்துள்ளது என்பதனை இதன் ஊடாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவது, அது ஜரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய உலக நாடுகளாக இருந்தாலும் சரி – இந் நாடுகளின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்போதுதான் முழுமையாக வெற்றியளிக்கும்.
தற்போது இலங்கை அரசின் போக்கில் ஜரோப்பிய நாடுகள் உள்ளடங்கலான மேற்குலகம் அதிர்ப்தியடைந்திருப்பதனை உணரமுடிகிறது. இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பக்குத் துணைபுரியக்கூடிய சாதகமான ஒரு அம்சமே.
கேள்வி: உலகின் எந்த ஒரு நாடுமே ஒரு இன விடுதலைப் போராட்டம் என்கிற அளவில் கூட ஈழ மக்களின் இறையாண்மை உணர்வுகளை புரிந்து கொள்ள வில்லையே?
பதில்: இங்கு நாடுகள் எனும்போது அரசுகளையும் அந் நாட்டு மக்களையும் நாம் பிரித்து பார்த்தல் நல்லது. ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கு போராடும் போது அவ் இறையாண்மையின் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசம் தனிஅரசினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குரிய சூத்திரம் அரசுகளைப் பொறுத்த வகையில் நலன்கள் என்ற மந்திரக்கோலில்தான் தங்கியுள்ளது.
அதற்குரிய சமன்பாடு மிக எளிதானது. இலங்கைத்தீவு ஒரு நாடாக இருப்பதா அல்லது இரு நாடுகளாக இருப்பதா தமது நலன்களுக்கு நல்லது என்ற கணக்கிலிருந்துதான் அரசுகளின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதனால் ஈழத்தமிழ் மக்களின் இறையாண்மை உணர்வினை உலக நாடுகள் புரிந்து கொள்ள முயலவில்லை. இவ் விடயத்தில் இந்தியாவின் நிலையும் உலக நாடுகளின் நிலைப்பாட்டிற்கு காரணமாகவிருந்திருக்கிறது.
ஆனால் மக்களைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கான நியாயப்பாடுகள் உரியமுறையில் அவர்களைச் சென்றடையும் போது எமது கோரிக்கையின் நியாயத்தன்மையினைப் புரிந்து கொளகிறார்கள். ஆதரவினைத் தருகிறார்கள்.
கேள்வி: வன்னி மீதான போரில் இந்தியாவின் பங்களிப்பு வெளிப்படையானது. தமிழர்களுக்கு எதிரான இந்தியத் தலையீடு தமிழகத்திலும் புலத்திலும் இந்தியாவின் மீது கடும் விசனத்தை உண்டு பண்ணியிருக்கும் நிலையில் இந்தியா உங்களின் கோரிக்கைக்காக உதவும் என்று நம்புகிறீர்களா?
பதில்: ஈழத் தமிழர் தேசத்திற்கு இந்திய அரசு உதவுவது என்பது அதன் நலன்களோடு தொடர்புபட்டது. முற்றி வரும் உலக ஒழுங்கில் இந்தியாவின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திப்பதற்கான வாய்ப்பக்கள் உண்டு எனறே நாம் கருதுகிறோம். இலங்கை அரசினைத் தனது செல்வாக்கிற்கு உட்படுத்தி வைத்திருத்தல் தனது பிராந்திய மற்றும் ப+கோள நலன்களுக்கு அவசியம் என இந்தியா கருதுகிறது. அதற்காக இலங்கை அரசுக்கு உதவியளித்து – அதனைத் தனது செல்வாக்கிற்குட்படுத்தி வைத்திருக்கும் கொள்கையை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தான் வன்னிப்போரிலும் எதிரொலித்தது.
இலங்கைத்தீவினை சீனமயப்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசு தற்போது ஈடுபட்டிருப்பதானது தற்செயலானதல்ல. அல்லது உதவி செய்யும் சீனாவின் விருப்பத்திற்கிணங்க மட்டும் நடைபெறுமொன்றுமல்ல. இந்தியாவின் தன் மீதான ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை அரசு தனது நலனின் அடிப்படையிலும்தான் சீனாவுக்குக் கதவு திறந்து விட்டுள்ளது. காலவோட்டத்தில் சீனா இந்தியாவின் செல்வாக்கினையும் மீறி இலங்கைத் தீவினை விழுங்கத்தான் முயலும். இவ்விடத்திலிருந்து இந்திய நலன்களும் ஈழத் தமிழர் நலன்களும் இணையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
கேள்வி: இன்னமும் முகாம்களுக்குள் ஒன்றரை லட்சம் மக்கள் அடைபட்டிருக்கிறார்கள். பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் வதை முகாம்களில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களின் உயிர் பாதுகாப்பு… விடுதலை குறித்தெல்லாம் முன்னெடுப்புகளை உங்களால் செய்ய முடியாதா?
பதில்: இவை குறித்து தற்போது எமது மதியுரைக்குழு உறுப்பினர்கள் தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் போது இவ் அரசாங்கம் இவை குறித்த நடவடிக்கைக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படும் என்பது எமது நம்பிக்கை.
புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அஞ்சி நாம் எமது வெளிநாட்டுப் பயணங்களை கைவிட மாட்டோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறதே?இது பற்றி என்ன நினைகிறீர்கள்?
சிறிலங்கா அரசு இவ்வாறு கூறுவதே புலம் பெயர் தமிழ் மக்கள் தொடர்பான அச்சம் அவர்களுக்கு உண்டு என்பதனை வெளிப்படுத்துகிறது. மேலும், புலம் பெயர் தமிழ் மக்கள் முக்கியமான அரசியல் சக்தியாக பரிமாணம் அடைந்துள்ளனர் என்பதனையும் இது காட்டுகிறது.
கேள்வி: புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா?
பதில்: மே மாத நடுப்பகுதி வரை நாளாந்தம் பெருந்தொகையான மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை. நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே.
கேள்வி: இனக்கொலை, தடுப்பு முகாம்களில் மக்கள், அரசியல் கைதிகள், இதற்கெல்லாம் என்ன வேலைத் திட்டம் உங்களிடம் இருகிறது?
பதில்: இத்தகைய விடயங்களை கையாள்வது குறித்து தொடர்பான சில விபரங்கள் மதியுரைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை குறித்த விரிவான திட்டங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டவுடன் வகுத்துச் செய்யப்படவேண்டியவை.
கேள்வி: அமெரிக்க நீதிமன்றத்தில் நீங்கள் வாதாடும் பயங்கரவாதம் தொடர்பான வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?
பதில்: அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புக்களாக பிரகனடப்படுத்தப்பட்ட அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒன்றாகும். அமெரிக்கச் சட்டப்படி இவ் அமைப்புக்களுக்கு பொருண்மிய உதவி வழங்குதல் குற்றமாகும். ஆயினும் இவ் அமைப்புக்களின் அரசியல் கொள்கைகளுக்கு சுயாதீனமான முறையில் ஆதரவு வழங்குவது சட்டத்திற்கு ஏற்புடையது. விளக்கமாக கூறுவதாயின், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் குறிக்கோளை, அரசியல் வேலைத்திட்டத்தை சுயாதீனமான முறையில் எடுத்துச் செல்லலாம், அமெரிக்க உச்ச நீதி மன்றத்தில் எடுத்துக்கொண்ட சாரம் என்னவெனில், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம் தொடர்பாக அவர்களுடன் இணைந்து செயல்படும் உரிமையை மறுப்பது அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரத்திற்கு முரணானது என்பதாகும். உச்ச நீதிமன்றதின் தீர்ப்பு ஜுன் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கேள்வி: புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்றீர்களே? அவர்கள் ஈழப் போராட்டத்தில் அரசியல் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்களா?
பதில்: ’புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ நம் மத்தியில் உள்ள பழமொழி அல்லவா!
அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள் Nanri - arugan.com
திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போரை நிரந்தர மேலுலகிற்கு அனுப்பிய பிரபாகரனிலும் பார்க்க, அதே திறனும், முயற்சியும், ஆர்வமும் இருப்போர்களுக்கு தகுந்த தகுதியை வழங்கும் மகிந்த எவ்வளவோ மேல். அளவுக்கு மீறிய பாராட்டுக்களை பிரபாகரனுக்கு கொடுத்து அவரை பப்பாவில் ஏற்றிவிட்டார்கள் ஒரு சில பணபலமுடைய தமிழர்கள். இதனால் பப்பாமரம் முறிவடையும் என்றுகூட எண்ணாமல் பப்பாவின் உச்சிக்கே போய்விட்டார் அவர் அதனால் அவர் உச்சியே சிதைவடைந்து போய்விட்டது. ஆனால் மகிந்த எத்தனையோ நல்லகாரியத்தை தமிழர்களுக்கும் நாட்டுநலனுக்கும் மேற்கொண்டிருந்த போதிலும் அதனை பாராட்டவோ செய்தியாக வெளியிடவோ அதே தமிழ் மக்கள் விரும்பவேயில்லை.
lunedì 12 aprile 2010
domenica 11 aprile 2010
venerdì 9 aprile 2010
பிரபாகரனுடைய போராட்ட அனுபவத்திலும் பார்க்க மகிந்தவுடைய அரசியல் மற்றும் வரலாற்று அனுபவம் அதிகம்…!!!! Nanri arugan.com
இலங்கையில் 2010ன் பாராளுமன்றத் தேர்தலும், தமிழர்களின் (கட்சிகளின்) எதிர்காலமும்…
பிரபாகரனின் ஆயுதபலத்தால் மட்டும் தமிழீழ வல்லரசை அமைத்துவிடலாம், அதிலும் கண்மூடித்திறக்கும் போது ஈழம் மலர்ந்து விடும் என்று பிரச்சாரங்களும் பலருடைய போக்குகளும் நடந்த காலம் இன்னும் கண்முன்நின்று அகலவில்லை!!!
இயேசு “அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 42. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; 43. மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 44. அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.(மாற்கு 6:41-44) என்றால் அதன் உள் அர்த்தத்தையும் உண்மையினையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மக்கள் இருக்கும்வரையில் எதுகும் மாறப்போவதில்லை!!!
அதே வேதாகமத்தில் “ரோமர் 7:6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
என்றும், “ Iபேதுரு 4:12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,” குறிப்பிட்டிருக்கின்றது. இதிலிருந்து எடுத்துரைக்க முயல்வது எதுவாகில்,, யாரிடம் எது கேட்டால் அது எவ்வாறு நடக்கும் என்பதனை ஓரளவிற்கேனும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, சிங்களவர்கள் பெரும் பகுதியானவர்களாக இருந்த போதிலும், வீதாசாரத்தில் பார்க்கும் போது, சிங்கள கட்சிகளிலும் பார்க்க தமிழ் கட்சிகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. கடந்த காலத்தில் தமிழ் கட்சிகளில் தலைவர்கள் இரகசியம் இரகசியமாக ஒரு வெளிநாட்டு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள் அதன் விளைவு மேலும் தமிழர்களை சின்னாபின்னமாக்கியது. இதில் அரசியல் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள்போல், டக்ளசும், கருணாவும் பங்கு பெறவேயில்லை… அதற்கு புலிகளின் ஆதரவாளர்களால் தமக்கு ஏதாவது ஆபத்துவரலாம் என்ற ஐயப்பாட்டை மக்களுக்கு வெளியிட்டாலும் அது எத்தனை தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் பார்க்க வேண்டும். குhரணம் அவர்கள் அக்காலத்தில் இலங்கை அமைச்சர்களாக இருந்ததால் சர்வதேச அரசு பார்காப்பு வழங்கியிருக்கும் என்பதும், அதில் ஏதும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் புலிகளுக்கான பின்னடைவு புலத்தில் மேலும் அதிகரிக்குமேயொழிய, அதன்மூலம் எந்த சிக்கலும் தீர்ந்திருக்காது என்பதனையும் புரிற்து கொள்ளவேண்டும்.
giovedì 8 aprile 2010
புலிகளின் தலைவர்கள் தாடர்பாக எழுதும் அருகனின் தகவல்களை உறுதிப்படுத்தும் பிரபல்ய இணையங்கள். Nanri arugan
6ம் திகதி ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பல தடவைகள் அருகன் தளத்தில், புலிகளின் கடந்த காலத்தில் நடந்த துன்பவியல் சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட நிலைதொடர்பாக வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக பலர் வினாக்களை எழுப்பியிருந்தனர். அதன் விளைவு பல இணையங்களில் தற்போது வெளிவருகின்றன.உதாரணம் அதிர்வு இணையம் பெரும்பான்மை மக்களால்
பார்க்கப்படுகின்ற தளத்தில் ஒன்று என்பது உண்மையே, அவ்வாறான தளத்தில் இது தொடர்பான தகவல்கள் கசிவது, அருகனின் தளத்தில் வெளிவருகின்ற தகவல்களை ஊர்ஜிதப்படுத்துகின்றதாக இஅருக்கின்றது. இதைக்கவனியுங்கள்….
“குறிப்பாகச் சொல்லப் போனால், இராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் பல மூத்த தளபதிகள் சிறையில் உயிருடன் இருக்கின்றனர், சிலர் காடுகளில் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும்.” xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இதோ அருகன் தளத்தில் ஏற்கனவே எழுதிய பகுதிகளில் சில…
புலிகளின் தலைவர்
பற்றிய அதிரடித்தகவல்கள்…
புலிகளின் தலைவர் பற்றிய அதிரடித்தகவல்கள்…
புலிகளின் தலைவர் இலங்கை இராணுவத்திலோ அல்லது அரசின் சிறப்புக்கண்காணிப்பிலோ இருக்கலாம் என நான் சந்தேகப்படுகின்றேன் என்று பல தடவைகள் எனது ஆக்கத்தில் குறிப்பிடடேன். எனினும் இதனை ஊர்ஜிதப்படுத்த முடியாததால் வெறும் சந்தேகத்தைமட்டும் வைத்து தகவலை வெளியிடமுடியாது என்பதால் இப்போதும் சந்தேகத்தின் பெயரிலேயே தகவலை வெளியிடுகின்றேன். அதாவது, தலைவரின் தாயும், தந்தையும் இலங்கை இராணுவத்தில் சிறைப்பட்டிருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தையோ, அல்லது தகவலையோ புலிகளின் ஆதரவான எவரும் தெரிவிக்கவில்லை மாறாக தலைவரின் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கின்றார்கள் என்று தகவல் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, புலிகளின் தலைவர் மரணமானார் என்ற விடயத்தில் இலங்கை அரசும் எவ்வித ஸ்திர நிலையினையும் வெளியிடவில்லை ஆனால் தலைவர் இல்லாதது போல் சாதாரணமாக செயற்படுகின்றனர் என்றால் எப்போது வேண்டும் என்றாலும் அதனை நிரூபிக்கத்தாயாராக இருக்கின்றார்கள் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. மேலும் தலைவரின் தேடப்படும் பட்டியலில் சர்வதேச புலணாய்வினரின் போக்கில் மாற்றம் மற்றும் இந்திய புலணாய்வினரின் போக்கில் மாற்றங்கள் ஆனால் இலங்கைப்புலனா ய்வினரின் போக்கில் முற்றிலும் மாறுபட்ட தன்மை இவை அனைத்தையும் பார்க்கும்போது தலைவர் இலங்கை அரசின் பாதுகாப்பில் இன்னமும் உயிருடன் இருக்கின்றார் என்றே எண்ணத்தோன்றுகின்றது… இது உண்மையா அல்லது சந்தேகமா பொறுத்திருங்கள் அடுத்த பகுதியில்…
என்று வெளியிட்ட இந்த தகவல் இலங்கை இராணுவத்தையே திகைக்க வைத்துள்ளது. அதாவது, சரத்பொன்செகாவே இதுதொடர்பாக எந்தத்தேர்தல் களத்திலும் வெளியிடவில்லை, நாடுகடந்த அரசின் செயற்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை, புலிகளால் கட்டப்பட்ட கூட்டமைப்பினர் இதுதொடர்பாக எந்தத்தகவலையும் வெளியிடவில்லை, புலிகளின் ஆதரவாக இயங்கிய தளங்கள் உதாரணமாக தமிழ் நேசன் ஒரு பாரிய வரபிரகாசமாக செயற்படஇடுவந்ததும் அத்தளம் 2009ம் ஆண்டு 6ம்மாதத்திற்குப்பின்னர் படிப்படியாகச்செயலற்றுப்போனதோடு, தலைவரின் வீரமர செய்தியையும் வெளியிட்டிருந்தது. இதுபோன்று பல இணையங்கள் தலைவரின் இறப்புச்செய்திளை வெளியிட்டுபின்னர் அது செயலற்றுப்போய்விட்டது. ஆனால் இப்போது, ஆயிரம் இணையங்கள் முளைத்து தலையாட்டுகின்றன. இவையெல்லாம் ஒரு காரணமல்ல, தலைவரின் பெரும் நம்பிக்கை தமிழக தலைவர்களையே தங்கியிருந்தது. அவர்களே பட்டுமஇபடாமல் சுட்டும் சுடாமல் தகவலை கசியவிட்டனர் எப்படி தலைவர் இறந்தது பற்றியல்ல அவர் தொடர்பான தகவல்கள் தமக்குக்கிடைக்காது போனதையே!!!
அடிக்கடி என்னால் எழுதப்படுகின்ற எழுத்துக்களில் அழுத்தமாகக்குறிப்பிடுவது, மகிந்த ஒரு முட்டாள் அல்ல!!! அரசியலுக்குப்புதிதானவரும் அல்ல. எனவே டகைவi எழிதாக எடைபோடவேண்டாம் என்று. திரு உருத்திர குமாரின் செய்தியினை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்… அதாவது, நாடுகடந்த தமிழீழம் அமைப்பது தொடர்பாக பல கட்டுரைகளை 2007ம் ஆண்டிலிருந்து வெளியிட்டும் தகவல்களை அறிவித்தும் வந்தேன். ஆனால் கலாநிதிகள் போதும் என்ற வகையில் சல்லடைபோட்டு சில கலாநிதிகளை கட்டிவைத்து அமைப்பை நடத்த எத்தணிக்கின்றார். ஒரு அமைப்பை நடத்துவதற்கே பல ஆதரவுகள் தேவைப்படும்போது பிற நாடுகளின் ஆதரவின் அநாவசியத்தை வலியுறித்தியிருந்தார். முட்டுமல்லாது, தலைவர் பட்டம்பெற்ற பட்டதாரியல்ல ஆனால் திரு அன்ரன் பாலசிங்கம் அவருக்கு லோசகராக இருந்தாரேஒழிய அவர் தலைவராக இருக்கவில்லை!!! எனவே ஒரு அமைப்பை நடாத்துவதற்கு கற்றோர் அவசியமில்லை வேகமும் விவேகமுமே அவசியம். அத்துடன் அரசியலை நகர்த்துவதற்கு சாணக்கியம் மிக முக்கியம். அந்தச்சாணக்கியமும் வேகமும் உள்ள தமிழர்கள் தலைவருக்கு ஆதரவாக இருந்த காரணத்தாலேதான் புலிகள் இயக்கம் நிலைநின்றது.
தற்போது தலைவரின் தகவல்கள் இல்லாததால் பல தலைவர்கள் வாலாட்டுகின்றார்கள். தலைவர் இருக்கும் போது புலிகளின் பலம் வெளியில் தெரியுமோ இல்லையோ தலைவரின் பெருமைமட்டுமே வெளிவரும். ஆனால் இப்போது பல தலைவர்கள் திறனற்றிருந்தும் பிரபல்யமாக முனைகின்றனர். தலைவர் இருக்கும் போது வாலாட்டாதவர்கள் இப்போது தலையே ஆட்டுகின்றார்கள் என்றால் பாருங்களேன்.
புலிகளுடன் தொடர்புடையோர்கள் அனைவரும் இப்போது குத்துக்கருணம் அடித்துவிட்டார்கள், புலிகளை நம்பினோர்களை வைத்து தாமும் தம்முடைய வாழ்வையும் அலங்கரிக்க கங்கணம் கட்டுகின்றார்கள் இதுவே அப்பட்டமான உண்மை.
எனக்கு என்ன ஆதங்கம் என்றால், புலத்தின் தலைமைகளுக்கெல்லாம் தலைவர் இல்லை என்பது தெளிவாகத்தெரிந்தும் அதை மறைத்தே தம் வண்டியை ஓட்டப்பார்க்கின்றார்கள். அப்பேற்பட்ட தலைவனுக்கு ஒரு அஞ்சலியை செலுத்தக்கூட நல்ல தலைமை இல்லையே என்ற தாக்கம் அழுத்திக்கொண்டே இருக்கின்றது.
கிறீஸ்தவ மதத்தில், இயேசுவை இறந்ததாக எவரும் அந்நாட்களில் சொல்லவில்லை அவர் உயிர்த்துவிட்டார் நம்மிடையே வாழுகின்றார் என்றே, இன்றுள்ள மதம் ஸ்தாபிக்கப்பட்டது. அதுபோலவே தலைவரின் பெயரை வைத்து அவர் இறந்தாரோ இருந்தாரோ தம்மை திடப்படுத்தியோரின் செயற்பாடே இந்த அமைப்புக்களும் செயலற்ற செயற்பாடுகளும்.
தலைவரின் எண்ணம் தமிழீழத்தை ஒரு வல்லரசின் ஸ்தானத்திற்குக்கொண்டு செல்வதே, ஆனால் மற்றைய முதளைகளின் எண்ணமோ தலைவரின் பெயரை வைத்து தம்மை வல்லவராக்கிக் கொள்வதே…
முக்கிய விடயம் இந்த நாடுகடந்த அரசு சின்னாபின்னமாகக்கூடாது என்றால் ஏற்கனவே எம்மால் வெளியிட்ட அறிவுறுத்தல்களை தட்டிக்கழிக்காது கடைப்பிடிக்க எத்தணிக்க வேண்டும். … … …
இவ்வாறான தகவல்களை ஏற்கனவே கடும் போர் நடந்த சந்தர்ப்பத்திலேயே பல விடயங்களை வெளியிட்ட அருகன் தளத்தில் பல உண்மை இருப்பதை பின்னோக்கி பார்த்தீர்களேயானால் நன்கு விழங்கும். இது அருகனின் தளத்திற்கான விளம்பரமல்ல ஆனால் இவ்வாறு அருகன் தளத்தைப்போல், பல தளங்கள் உண்மைத்தளத்தை மக்கள் பார்வையிடுவதேயில்லை என்பதே வருத்தத்திற்குரிய செயல். இன்னும் வரும்…