sabato 16 aprile 2011

எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே புலிகளை அழித்தார்கள் - அருகன்

இன்று சோனியா காந்தியைப்பற்றிய தகவல்கள் அதிகமாகக்காணப்படுகின்றது, ஏனென்றால் தமிழகத்தின் காலம்!!! தேர்தல்மகிந்தவைப்பற்றிய தகவல்கள் தற்போது அப்படியும் இப்படியும் இருக்கின்றது, காரணம் தேர்தல் களம் இலங்கையில் இல்லை!!!

தமிழர்களுக்கு எதிரான அல்லது எதிரிகள் என்று சொல்லப்படுகின்ற சோனியாகாந்தியின் தலைமையிலான இந்திய காங்கிரசும், இலங்கையினை தற்போது ஆண்டு கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷவும் என்று தமிழகத்தின் கூச்சல் போடும் ஒருசில தலைமைத்துவத்தை கையாள நினைப்பவர்கள் வெளிக்காட்டி வருகின்றார்கள்… இவர்களுடைய எதிர்ப்பென்பது புலிகள் அறியாததல்ல! ஆனால் புலிகள் அறிந்து கொள்ளாத வகையில் தமிழ்த்துரோகிகள் செயற்பட்டமை இன்றைய புலிகளின் இழப்பிற்குக்காரணம். தமிழ்த்துரோகிகள் என்றதும் எம்மவர்கள் சிலர் மற்றைய இயக்கங்களையே கருத்தில் கொள்கின்ற போதிலும், உண்மைத்தன்மை என்பது அதுவல்ல என்பது தமிழகத்தின் தேர்தலின் பின்னர் புரிந்து கொள்ளத்தான் போகின்றார்கள்.

புலிகளின் பெயரில் தம்மை திடப்படுத்துவதற்காக எம் ஈழத்தமிழர்களின் உயிரை ஏலம்போட்டுக்கொண்டும், பெண்சகோதரர்களின் வெற்றுடலை உலகம் அனைத்தும் பார்க்கும்படியும் கேவலப்படுத்தியும் தம் பாதைகளை திடப்படுத்தி வருகின்றனர்.

தொல்திருமாவளவன் பேசிய பேச்சுக்காக அவருக்கு தமிழகச்சட்டமன்றத்தில் இடம் கிடைத்தது… ஆனால் பேச்சுக்கள் காற்றோடு காற்றானது… இன்று சீமானின் குரல் அதிகமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது … நல்லம்.. நாளை அவர் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன். ஏன்தெரியுமா? எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் முழு அதிகாரமும் தமிழக முதல்வராகும் தலைவனுக்குத்தான் இருக்கின்றது என்ற முட்டாள்தனமான போக்கை திடமாகப்பிடித்துள்ளமையினை இட்டே… அவர் தனக்குக்கிடைக்கப்போகும் பலத்தை வைத்து தமிழீழத்தை பெற்றுக்கொடுத்துவிடுவார் என்றே பல ஈழத்தமிழர்களும் நினைத்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது. தமிழக அரசு ஒரு மானில சுயாட்சியுடைய அரசே ஒழிய தனிநாடல்ல! ஆவேசமாகப்பேசுவதால் மட்டும் ஒரு விடயம் சரியாகிவிடாது! இது முறையானதாகவும் சட்டத்திற்கு ஒப்பானதாகவும் இருக்க வேண்டும். சீமானிடம் நல்ல பேச்சுத்திறன் உள்ளது. அதை பாராட்டத்தான் வேண்டும். அதற்காக அவரிடம் திறமை உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கின்றது. காரணம் ஜெயலலிதா அம்மையார் புலிகளை எதிர்த்து எத்தனையோ விடயங்களை மேற்கொண்ட ஒரு நபர். இருந்தும் அவர் தொடர்பாக எதிர் தாக்குதல் இடம் பெறுவதிலும் பார்க்க ஆயிரக்கணக்கான தாக்குதல் முதல்வர் கருணாநிதிக்கெதிராக இடம்பெறுகின்றமை, சந்திரிக்கா ஆட்சியில் பலத்த இழப்பு தமிழர்களுக்கு ஏற்பட்டமை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை ஆனால் மகிந்தவிடயத்தில் குறுகிய காலத்தில் போர் முடித்துவைக்கப்பட்டது தொடர்பாக எதிர்ப்பு காட்டும் இவ்வாறானவர்கள் முதலில் இடம்பெற்ற செம்மணிப்புதைகுழி சிக்கலுக்கும் தமிழர்கள் அழிவிற்குக்காரணமாகவும் இருந்த சந்திரிக்கா அம்மையாருக்கு எதிராக இன்னும் வழக்குத் தொடராதது ஏன்????

புதவியில் இருப்போர்களை எதிர்ப்பதன் மூலமே தம்மை முதன்மைப்படுத்த முடியும் என்ற உளவியல் தந்திரமே இது என்பதனை என்னைப்போன்றோர்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.  அருகன்

Nessun commento:

Posta un commento