sabato 16 aprile 2011

புலிகளின் இழப்பை, புலத்திலிருந்தே தமிழீழ அரசியல் வாதிகள் மீட்டுக்கொள்ள வேண்டும்… அருகன் –மீள் வெளியீடு…

01vvcகடந்த முப்பது வருடத்தில் இலங்கை அரசு கைக்கொள்ளாத தந்திரங்களை இப்போது கைக்கொண்டு வருகின்றது. அதுவாகில், இத்தனை வருடமும் அரசியல் வாதிகளுக்கும் சமூகத்தில் அந்தஸ்து உடையவர்கள் என்று கருதப்படுவோருக்குமே (கல்வி, சேவை, அறிவு) அவைகளில் முன்னிருப்புக்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுக்காலத்தில், புலிகள் அங்கத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. பிரதம விருந்தினராக தளபதிகள் என்று அழைக்கப்பட்டவர்களே இருத்தப்பட்டனர். சீருடை தரிக்காலிட்டாலும் இது ஒரு இராணுவ அதாவது ஆயுதக்கட்டமைப்பிலேயே கட்டப்பட்டிருந்தது. அதே போக்கை இன்று இலங்கை அரசும் கைக்கொண்டு எந்த நிகழ்ச்சியானாலும் அது இராணுவ தலையீடில்லாமலும் பௌத்த தலையீடு இல்லாதமலும் இடம்பெற மாட்டாது என்றாகிவிட்டது. இந்த “படிப்பினையினை சிங்களவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகளே???” இதன் காரணமே இராணுவத்தினர் இன்னும் தமிழழ்ப்பிரதேசங்களில் இருந்து அகற்றப்படவில்லை.

இராணுவத்தினரை தமிழ்ப்பிரதேசங்களில் இருந்து அகற்றுவதற்கு ஆயுதப்பலமும், அரசியல்ப்பலமும் போதாது… அதற்கு அறிவுப்பலம்தான் சிறந்த கருவி… அப்படியென்றால்? அரசியலில் இருப்பவர்களுக்கு அறிவு இல்லையென்றா சொல்கின்றீர்கள் என்று கேட்பது புரிகின்றது!!!

கடந்த நாட்களில் புலத்தில் வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் இன்னுமா உங்களுக்குப்புரியவைக்கவில்லை? பாராளுமன்றத்தில் கன்னிப்பேச்சில் வீராவேசம் பேசியதாக இணையங்கள் வெளியிட்ட திரு சிறீதரன் அவர்கள் தமிழீழம் தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு தான் கட்டுநாயக்காவில் கால்வைக்க முடியுமா என்கின்றார்!!!, புலம்பெயர் தமிழர்களையும், துடிப்பான இளைஞர்களையும் உள்வாங்கி செயற்படுக! தமிழ் தலைமைக்கு மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் ஆலோசனை  … என்ற தலைப்புக்கள் மிகப்பலமாக இணையத்தளங்கள் வெளியிடுகின்றன. இவ்வாறே மற்றையவர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்து மக்களிடம் கைதட்டை வாங்கிச் செல்கின்றார்களே ஒழிய, ஒரு கட்டுக்கோப்பான செயற்பாட்டிற்கு யாரும் முன்வரவில்லை. திரு மாவை சேனாதி இராஜ போராட்டத்தில் ஈடுபடும் போது அவருக்கு வயதென்ன? தலைவர் பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபடும் போது அவருக்கு வயதென்ன… ஆனால் இப்போது இளைய சமுதாயத்தை கைக்கூலிபோல் பாவிக்கின்றார்களே ஒழிய பொறுப்பாகச்செயற்பட யார் ஆதரவு தருகின்றார்கள்? கூட்டமைப்பில் எத்தனை இளைஞர்கள் கடந்த தேர்தலில் போட்டியிட்டார்கள்? சும்மந்தன் ஐயாவைவிட பிரபாகரன் அரசியல் அனுபவம் குறைந்தவராயினும் பிரபாகரனிலும் பார்க்க சம்மந்தன் அவர்கள் நன்கு வயது முதிந்தவர்தானே!!!! ஆனால் அவர் தேசியத்தலைவராக மக்களால் ஏற்றுக்கொள்ளப் படவில்லையே!!!

தமிழ்ப்பிரதேசத்தில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்பை அகற்ற என்ன சாணக்கியத்தைச் செய்ய வேண்டும் தொடருங்கள் இதன் பகுதிகளை…

புலிகளின் போராட்டத்தின் போது, ஆயுதத்தின் முனையில் அடங்கியிருந்தவர்கள் இன்று ஆளாளுக்கு வாலாட்டினாலும் மக்கள் ஏதும் பேசாது எதையோ காத்திருக்கின்றனர். ரணிலை தலைவர் கொஞ்சம் நம்பித்தான் இருந்தார்… ஆனால் தலைவரைச்சாய்ந்திருந்த யாரும் ரணில் பக்கம் சாயவில்லையே!!! தேர்தலின் ஆரம்பத்தில் பச்சைக்கட்சிக்கு ஆதரவு அளித்த கூட்மைப்பு இப்போது நீலக்கட்சியின் சேலைக்கும் புகுந்து கொள்வது சரியோ? தமிழர்களுக்கு இருக்கும் பலத்தை கடந்த காலத்து புலிகளின் பலத்தைவைத்து எடைபோட முடியாதா??? அப்படியிருந்தும் இன்று எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய தமிழ்க்கட்சிகள் ஏதும் இயலாதவர்களாக வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்… சிலர் அதுசுட இல்லை… ஆயுதம் தூக்கி தமிழர்களின் விடுதலைக்காகப்போராடியவர்கள் இப்போது இசைக்கருவிகளில் இங்கிதம் பேசுகின்றார்கள். இப்போது உள்ள தமிழர்களின் பிரிவுகள் போராட்ட இயக்கங்களின் காலத்தில் கூட இருந்ததில்லை.

இனி நாம் செய்ய வேண்டியவைகள்தான் என்ன… இதற்கான பதிலை பலவருடங்களுக்கு முன்னரே எழுதியிருந்தும் இன்னுவரை அதன் கருத்திலோ திட்டத்திலோ மாற்றமில்லாது இருக்கின்றமையிலிருந்தே அத்திட்டத்தில் வல்லமை புரிந்து கொள்ள முடிகின்றது.

ஏற்கனவே 2002- 2008வரை வெளியிட்ட திட்டங்களையும், நாவல்களையும் எடுத்துப்பார்க்கச் சொல்கின்றேன். தவறே அதாவது ஏற்றுக்கொள்ளாமையே விடுதலைப்புலிகளின் தோல்வி என்பதனை புலத்தில் உள்ள போராட்ட ஆதரவாளர்களுக்குத்தெரிவித்தும் அதை உதார்சீனப்படுத்தினர்.

தமிழர்களின் விடிவிற்கும் நிரந்தரவாழ்விற்கும் சில திட்டங்களை சுருங்க எடுத்துக்காட்டுகின்றேன் அதிலிருந்து மேலதிகச்சிந்தனைக்கு இடங்கொடுக்கின்றேன். இவைபோன்ற கருத்து தங்களிடம் ஏற்கனவே இருந்தாலும் அதில் பல மாறுபாடுகளும் விரிவுகளும் இருக்க வாய்ப்புண்டு. இவை உதாரணங்களே!!!

•    வெளிநாட்டில் தமிழர்களுக்கான் அலுவலகங்கள்  (இது எப்படி அமைய வேண்டும், யார்யார் அதில் பங்கு கொள்ள வேண்டும் அது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், எங்கெல்லாம் அமையவேண்டும், அவர்களின் செயற்பாடுகள் என்ன…)

•    வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் பட்டியலும், வாக்குரிமைகளும் (மொழி விஸ்தரிப்பு, உரிமை, உதவி, செயற்பாடு, இறப்பு, பிறப்பு, கல்வியறிவு, போக்கும் நடவடிக்கைகளும், உலக மயமாக்கல்…)

•    இலங்கை அரசுடன் மக்களின் நேரடித் தொடர்பு ( மக்கள் குறை, தீர்க்கப்படும் முறை, பிரதிநிதித்துவம், தூதராலயங்களின் விஸ்தரிப்பு, எதிர்காலத் திடமான திட்டம், மீண்டும் அழிவுகளுக்குத் தடையும் மடிவுகளுக்கு முடிவும்…)

•    ஆவணங்களும் கையாள்கையும் (கையூட்டு, கப்பம், கறுப்புப்பணம், ஒருகை ஆழுமை, ஆவணச்சிக்கலைத்தீர்க்கும்முறை, பொய்சாட்சிகள், உண்மை மறைப்பு, சட்டத்தின்பெயரில் மனிதநேயமிதிப்பு…)

•    சாதி இன மாத மொழி வேறுபாடுகள் (தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள், ஜனநாயக போக்கு, குற்றச்செயல்களுக்கான தீர்வுகளின் காலதாமதம், பாராட்டுக்களுக்கும் கௌரவத்திற்கும் மதிப்பளித்தல்…)

•    அரசும், கட்சிகளின் ஒருங்கமைப்பும் (இலங்கையில் தமிழ் கட்சிகளின் பிளவுகளைத்தீர்ப்பதற்கான வழிகள், இலங்கையின் அரசில் தமிழர்களுக்கான உரிமையினைப் பெறுவதற்கான வழிகள், கட்சிப்பிளவுகளுக்கான தடை, அரசியல் யாப்பில் மாற்றங்கள், மீண்டும் அழிவுநோக்கிய தடங்களை அடியோடு தடுத்தல், தமிழர்களுக்குச் செந்தமான இலங்கையில் தமிழர்களும் ஆளக்கூடிய நிலையினை ஏற்படுத்தல்…)

•    அறிவுக்கூடம் (தமிழ் அறிவுடையோரையும், அரசியல் அறிவாளிகளையும் இனங்கண்டு, மன்றங்கள் அமைத்தல், மொழியின் போராட்டம் இன்றுவரை போரில் ஈடுபட்ட அதே வேகம் மொழியாளர்களை வளர்ப்பதில் அமைய வேண்டும், இழக்கப்பட்ட நாவல்கள் சுவடிகள் சேர்க்கப்பட வேண்டும், புதிய வடிவில் அறிவூட்டல்கள் கவர்ச்சிகரமாக மக்களைச்சேரவேண்டும்…)

•    இழப்பினை நிரந்தரமாக நிவர்த்தி செய்தல் (போரின் பெயரில் நாசமானோர், ஊனமடைந்தோர், ஆதரவற்றோர், மனநோய்க்குத்தள்ளப்பட்டோர், நிரந்தரப்பாதிப்புக்குள்ளானோர், …போன்றோருக்கான செயற்திட்டும் -ஒரே வழி-)

•    பதவியும் மீள்பதவியும் (அதிகாரங்கள், பயன்பாடு, பகிரப்படும் முறை, மீண்டும் பதவிக்குவரல், பதவிகள் பகிரப்படவேண்டிய முறைகள், அந்தரங்கங்கள், தொடர்புச்சாதனங்களைக்கையாளும் முறை, நீதியும் உறுதியும், மனிதநேயத்திற்கும் பதவிக்கும் இடையிலான தொடர்பு, பதவிகளின் பயன்பாடு நிகழ்காலத்தில் பாராட்டும் எதிர்காலத்தில் பயன்பாடும்…)

•    சர்வதேச தகவல் தீர்ப்பகம் (நீதிகளையும் நேர்மைகளையும் பாதுகாத்தல், மனுதாரர்களின் பாதுகாப்பு, சகல நடவடிக்கைகளின் விடயங்களும் பதியப்படல், ஒரேஒரு பதிவிற்குள் அனைத்தும் உள்ளடக்கப்படல், குற்றச்செயல்களின் ஆரம்பத்தில் முற்றுப்புள்ளி…)

•    வரவேற்க வேண்டிய எதிர்ரடிகள் (எமக்கு எதிராக யார் உள்ளனர், அவர்களின்குறை என்ன, காரணம் என்ன, நாமே நமக்கு எதிர், பிரச்சார உத்திகள்…)

•    இலங்கை அரசிடம் இருந்து பதவிக்காலங்களுக்குள் பெறவேண்டியவை (நிலையானதும் உறுதியானதும், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், எதிர்கால நடவடிக்கைகள்…)

•    வருமானங்களும் செலவினங்களும் (…)

இவற்றால், ஜனநாயகத்தை மீறாமல் உலக அங்கிகாரம், நன்மைகள் தீன்மைகள், நாட்டின் இறைமை பாதுகாப்பு தலைமைத்துவத்தின் கட்டுக்கோப்பு மக்கள்நலம் உரிமைபாதுகாப்பு, அந்நிய நாட்டின்தலையீடு (தமிழகத்தின் கைக்கூலி), அனைவருக்கும் தொழில்வாய்ப்பு, தேவையற்ற சிந்தனைகளைச் செலுத்துவதன்மூலமே சிதைக்கப்படும் சிந்தைகளை ஒன்று சேர்க்க முடியும் என்பதனைத் திடமாக செயற்படுத்தியவன். எனவே இவை ஒரு துளி நீராகவும், மேலதிகமாக தொடர காத்திருங்கள்… அருகன் 

Nessun commento:

Posta un commento