mercoledì 20 aprile 2011

ஐ.நா. நிபுனர் அறிக்கை ஒருபோதும் புலிகளுக்க (தமிழர்களுக்கு) ஆதரவாக அமையாது… அருகன்.

untitledஅதிகார வர்க்கத்தின் பிடிக்குள் சிக்கித்தவிக்கும் “மனிதாபிமானமும்”, “மனித நேயமும்” மூச்சுவிட முடியாத நிலையில், இருக்கும் போது எம் தேச விடுதலைக்காகவும் எம் இனத்தின் உரிமைகளுக்காகவும் போராடிய எம் தமிழர்களுக்கெதிராக செயற்பட்ட ஆதிக்க வெறிகொண்ட இலங்கை அரசிற்கு எதிராகவா அறிக்கை அமைந்துவிடப்போகின்றது???...

 

சர்வதேசமே புகழ் காலை சூட்டிக்கொண்டிருக்கின்றது மகிந்தவிற்கு, ஜி15 நாடுகளின் தலைமைப்பதவி, ரஷ்சியாவின் சிறப்பு விருது, பிரித்தானிய பிரபல்ய பல்கலைக்கழக சிறப்பு அழைப்பு, இந்தியாவின் ஆதரவு, சீனாவின் பங்களிப்பு… இப்படியே போய்க்கொண்டிருக்கின்றது.

இந்த அறிக்கைத்தயாரிப்பே, மகிந்தவிற்கு எதிரான தகவல்களை சேகரிப்பதற்கே ஒழிய அதற்கான தீர்வு காண்பதல்ல! ஏன்பதனைப்புரிந்து கொள்ளாத பல தமிழ்த்தலைவர்களும் ஜ.நா.வின் ஆட்டத்தை ஆதரித்துப்பேசுவது சிரிப்பிற்கிடமாக இருக்கின்றது. தமிழர்களுக்குத் தனித்தமிழீழத்தைக் கொடுப்பதற்கு ஆயிரம் பக்கச்சாய்வுகள் கைகூடுகின்ற போதிலும், மகிந்தாவைக்கூண்டில் ஏற்றுவோம் என்ற தொணியிலேயே பல விடயங்களை கோட்டை விட்டு விடுகின்ற தமிழர்கள்நாம்.

இலங்கை அரசிற்கு எதிராக எவ்வளவிற்கு எவ்வளவு ஆதாரங்கள் திரட்டப்படுகின்றனவோ அவ்வளவிற்கு அவ்வளவு புலிகளுக்கெதிரான ஆதாரங்களும் திரட்டப்படும் என்பது பொதுஅறிவு! லிபியாவில் கடாபிக்கு எதிராக கிழற்சியைத்தூண்டுவித்த மறைமுக வல்லரசின் பின்னணி சில நாட்களிலேயே தற்காலிக அரசாங்கம் அமையக்காரணமாகியது. ஆனால் தமிழீழத்தில் கடந்த 15 வருடத்திற்கு மேல் தொடர்ச்சியான ஆட்சியை நடாத்திய புலிகளுக்காக எந்த வல்லரசும் வக்காளத்து வாங்கவில்லையே??? நோர்வேயை தப்புச்சொல்ல முடியாது, இறுதிவரை செயற்பட்டார்கள் அதற்கு தலைவணங்கத்தான் வேண்டும். ஆனால் தனி அரசிற்கான கோரிக்கைக்கு எந்த ஆதரவும் வழங்கப்படவில்லை, புலிகளின் கோரிக்கை இலங்கை அரசால் மட்டுமே நிவர்த்தி செய்து வைக்கக்கூடியதே என்பதில் மாற்றமில்லை! ஆனால், தமிழர்களே அவ்வப்போது குத்துக்கரணம் அடிக்கும் போது எப்படி தமிழர்களுக்கான உரிமைகள் கிடைக்கும்?

அரச அதிகாரம் உடையதும் வல்லரனின் பக்கபலமும், ஆசிய நாடுகளின் அரச ஆதரவுகளுடனும் இருக்கும் இலங்கைக்கு எதிராக நா.க.அரசு ஒருபுறமும், தமிழர்பேரவை என்று இன்னொருபுறமும், ஜனநாயக அணிஎன்று மறுபுறமும், போட்டித்தன்மையில் செயற்பட, தலைவருடைய நம்பிக்கையாகவும், ஆரம்பகால போராளியாகவும் இருந்த கேபி இன்று உள்ள பிறிதொரு நிலை, புலிகளில் வடக்குப்புலி, கிழக்குப்புலி என்று தமிழர்கள்போராட்டம் பிரிக்கப்பட்டும், புலிகள் அல்லாத மற்றைய இயக்கஅமைப்புக்கள்மற்றும் கட்சிகள் என்று ஆயிரம் பிரிவுகள் தமிழர்களுக்குள் எதிரியாக பலமாக இயங்கிவரும் போது, எந்த அறிக்கையும் முடிவுகளும் தமிழர்களை என்ன செய்ய முடியும், இல்லை மகிந்தாவைத்தான் என்ன செய்ய முடியும்? இதுமட்டுமல்லாது, இணையங்கள் ஒவ்வொன்றும், கிளைவிட்டு முளைத்தவண்ம் இருக்கின்றன எது தமிழர்களுக்கு ஆதரவு, எது தமிழர்களுக்கு எதிர் என்றே புரியாத வகையில் இயங்கிவருகின்றது. முகிந்தவிற்கு ஆதரவாக செயற்படும் சில தமிழ் இணையங்களே மற்றவர்களை துரோகிகள், கைக்கூலி என்ற பெயர்சூட்டு விழாவை நடாத்திவருகின்றன. இது இவ்வாறிருக்க யார் தமிழர்களுக்காகப்போராடுகின்றார்கள் யார் தமிழர்களின் அறியாமையில் குளிர்காய்கின்றார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது, மக்கள் இன்று சீமானை நிமிர்ந்து பார்ப்பதும் சீமானே பெரும் தலைவன் என்று பிரமிப்பதும் வேடிக்கையாக இருக்கின்றது.       

இவ்வாறான கருத்துக்களைச் சகித்துக்கொள்ளாத ஒன்று இரண்டு தமிழர்கள் (பிரபாகரன்) தலைவருக்குப்பாடம் படிப்பிக்க வந்த எழுத்துக்கள் இவைஎன்று உதார்சீனம் செய்கின்றனர். இரவில் தெரியும் நட்சத்திரங்களுக்காக இருட்டில் கூத்தடிப்பவர்களுக்கு பகலின் வெளிப்படைத் தன்மை புரிந்து கொள்வது கடினமாகத்தான் இருக்கும். ஜ.நா விற்காக தமிழர்களால் அனுப்பப்பட்ட ஆதாரங்கள் மகிந்தவிற்காகச்சேகரிக்கப்பட்ட கவசங்கள்!

எமக்கு வேண்டியது அறிக்கைகள் அல்ல ஆக்கபூர்வமான முடிவுகள்… போதியளவு அறிக்கைகள் பல ஆண்டுகளாக வெளியிடப்பட்டுவிட்டன, போதியளவு போராட்டங்கள் பலவருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவிட்டன, அளவிற்கு மீறிய இழப்புக்கள் பலிகொடுக்கப்பட்டும் விட்டன!!! இன்னும் என்ன அறிக்கை?... ஏற்கனவே பல ஆக்கங்களில் குறிப்பிட்டு விடயம்… எத்தகைய ஆதாரத்தை தமிழர்கள் இலங்கை அரசிற்கு எதிராகத்தொடுத்தாலும், தற்காலிக அரசிற்கு ஆதரவாக வாக்குமூலம் கொடுக்கக்கூடிய பல தலைகள் இப்போது மகிந்தவிடம் இருக்கின்றன என்பது எப்போதும் நாம் மறந்துவிடக்கூடாது!

இலங்கை அரசிற்கெதிராக எடுக்கப்படுகின்ற முடிவுகள் தற்போதைய வெளிப்படையான செயற்பாடுகளால் எந்த மாற்றத்தையும் தமிழர்களுக்குக்கொடுக்கப்போவதில்லை!

Nessun commento:

Posta un commento