venerdì 15 aprile 2011

மகிந்தவிற்காகப்போராடும் தமிழ் செயற்பாட்டாளர்கள்...

imageசும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்” ... என்ற கதையாச்ச எம் தமிழர்களின் செயற்பாடுகள்.

எதை எப்படிச்செய்ய வேண்டும்…, எப்போது செய்ய வேண்டும்…, என்ற சில முறைகள் இருக்கின்றது என்பதனை நாம் தொடர்ந்து மறந்தே வருகின்றோம். நான் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் விடயம் “வாசகர்கள் ஊடகவியலாளராவதால்” வருகின்ற தொல்லைதான் இவை!

 

இன்று உலகத்தின் அனைத்து மூலைமுடுக்குகளிலும் மகிந்தவின் வரலாறு, சாதனை என்ன என்பதனை மகிந்தவிற்குச் சாதகமாக சிங்களர் செய்தார்களோ இல்லையோ எம் தமிழ் ஊடகங்கள் செய்து விட்டார்கள்.

புலிகளின் போராட்டம் தோல்வியில் முடிந்ததில் இருந்து, யார் என்ன செய்வதென்று தெரியாது செயற்படுகின்றார்கள்.

ஒருவரின் பிரபல்யம் ஆம் என்று போடுவதால் மட்டும் அல்ல, இல்லை என்று குறிப்பிடுவதாலும் உதயமாகும் என்ற அடிப்படைத்தத்துவம் தெரியாது இல்லை என்று போடுங்கள்... இல்லை என்று போடுங்கள் என்று மகிந்தவிற்கான குறிப்பு வாக்குகளை அதிகரித்துவிட்டனர் தமிழர்கள். எந்த இலங்கை அதிபருக்கும் இல்லாத பெருமையினை மகிந்தவிற்கு ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர் தமிழர்கள். இப்படி இருக்க யார் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ன வினா எழுகின்றது?????!!!!!

“பகுத்தறிவான கருத்துக்களைத் தெரிவிப்போரை” இலங்கை உளவாளிகள் என்றும், மாற்றுக்கருத்து உள்ளோர்கள் என்றும் இன்னும் பல பெயர்களைக்கொண்டும் களங்கப்படுத்தும் நபர்கள் தாமே அறிந்தும் அறியாமலும் இந்தவிடயங்களை ஆணித்தனமாகச்செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை இப்போதாவது அவர்கள் உணர்ந்து ஒரு தமிழர்களின் உரிமைக்காக செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, வெளியிடுவதற்கு ஆயிரம் தகவல்கள் இருக்க சிங்களர்களின் தகவல்களையே தூக்கித்தூக்கி அவர்களை பிரபல்யப்படுத்தி கொள்வதனை நிறுத்தி தமிழர்களின் அனைத்துப்பாகங்களிலும் நடக்கும் நன்மை தீன்மை, மற்றும் நாடுகடந்த அரசின் செயற்பாடுகள், தமிழர்பேரவையின் சிறப்புக்கள், இளையோரின் முயற்சிழகள் என்பதனைப்பெருமைப்படுத்துங்களேன்!!!! 

The 2011 TIME 100 Poll

Cast your votes for the leaders, artists, innovators, icons and heroes that you think are the most influential people in the world. Though official voting for inclusion on the TIME 100 list has now closed, with Rain having won the honor, users can continue to vote for their favorites until the list is revealed on Thursday, April 21st

Read more: http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2061021_2061023,00.html #ixzz1JaBZ8H8D

 

இது இன்றைய பிரபல்ய ஊடகங்களிலும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.  … ….

உலகில் மகிந்தர் சக்திமிக்க மனிதரா? வாக்கெடுப்பு!

14 April, 2011 by admin

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1443

உலகில் சக்திமிக்க மனிதர்களில் மகிந்தரும் ஒருவர் எனத் தெரிவாகும் கருத்துக்கணிப்பு ஒன்று ரைம்ஸ் மகசீனால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள மனிதர்கள் வாக்களிப்பதன் மூலம் ஒருவரைத் தேர்ந்து எடுக்க அந்த இணையம் முடிவு எடுத்துள்ளது. அதனை பொதுமக்களின் கவனத்துக்கும் அது விட்டுள்ளது. மகிந்தரை ஆதரித்து சுமார் 6000 வாக்குகள் இடப்பட்டுள்ள நிலையில், எதிர்த்து சுமார் 2001 வாக்குகள் இடப்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்குமானால் மகிந்தர் வெற்றி பெறும் நிலை தோன்றலாம். எனவே தமிழர்கள் உடனே செயல்படவேண்டிய நிலை தற்போது தோன்றியுள்ளது.
கீழ் காணும் முகவரியை அழுத்தி உங்கள் வாக்குகளை பதிவுசெய்து கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களுக்கு மகிந்த ராஜபக்ஷவை பிடிக்கவில்லை என்றால் அதற்கான வாக்குகளை நீங்கள் போடலாம்.
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=20790:2011-04-15-06-30-18&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

Nessun commento:

Posta un commento