sabato 9 aprile 2011

சரித்திரத்தின் சந்தியில் எம் தலைவனுக்காய்…

எம் தலைவனுக்காய் எனது குரல் … !

PKஅவதாரம் முடிந்ததென்று யார் சொன்னார் -தே
வாலையங்கள் போது மென்று யார் சொன்னார்,
வேதனைகள் தீர்த்துக் கொள்ள வேதங்கள் வந்ததென்றால்-பெருஞ்
சோதனைக் காலத்தில் சாதனை சாதித்தவரே தேவர்கள்!

காவியங்கள் போது மென்று யார் சொன்னார் -சில
கல்லறைகள் போலியென்று யார் சொன்னார் ,
சோகப் பெருமூச்சுக்குள் சுகந்தம் வீசுவதற்காய் -வீர
யாகப்புரட்சி செய்த யதார்த்த நாயகர்கள் எங்கள் தேவதைகள்!

அதிகாரப் போட்டிக்குள்ளும் சதிகாரக் கூட்டுக்குள்ளும் -தின
மகதிப்பூக்களுக்காய் ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்டவர் நீர்,
அன்னைமடி மறந்து, கன்னி மடி துறந்தெம் கண்ணீருக்த் தடை -போடு
மணைக்கட்டின் படிக்கட்டுக்கள் உங்கள் பாதப்படிகள்!

மோட்ச வீட்டுக்கு முகாமிட்ட முனிவர்கள் நீவீர் –அதில்
நாசச் செய்கைக்கு நரகவாசல் காட்டிய நாயகர்நீர் ,
பூக்கள் பூக்கின்றன உங்கள் பூசைக்குக் காணிக்கை யாவதற்கு -தொடர்
பாக்கள் இசைக்கின்றன உங்கள் பாரங்களைக் குறைப்பதற்கு !

ப10ஜிக்கப்பட வேண்டிய உங்கள் வீரத்திற்கும் -நீர்
தாயகமீது கொண்ட தாகத்திற்கும் அடித்தளமிட்டவர் யார்…!
அற்பமா பூச்சிகளை ஆண்டவர் ஆக்கியகி – இன்று
சொற்மமான மக்களுக்கு நாளை சொற்கத்தைத் தேடியவர் யார்…!

புதைந்து புதைந்து கிடந்த தாமரை வேர்களுக்கும் -மனம்
புலம்பிப் புலம்பி த்திரிந்த கண்ணீர்ப் பூக்களுக்கும்,
போராடப் புது வழிகாட்டிப் புத்துணரூட்டிய புதுமைத் தலைவனை -பார்
பாராட்டிப் பாட்டிசைக்க பாவலருக்கினிப் பஞ்சந்தான் நேருமோ!

பல களங்கண்ட சிங்களக்காளையரும் -பெரும்
பலங்கொண்ட பிரபாவின் படைக்கஞ்சி,
பதுங்கிய காலம் இன்னும் பழமையாகவில்லை –திகிலாற்
பதறிய கால்கள் இன்னும் சரிநிலைக்கு வரவில்லை

உலகக் கண்களுக்கு உணர்வினைப் புரியவைத்து –முழு
அகிலம் வியக்கும் உன்னதப்போருக்கு வித்திட்டான்
அவன் தலைமையில் நடப்பது யுத்தமல்ல-இறை
ஆணையிட்டதால் நடாத்தும் தியாகத்தின் யாகமது!

அதோ, விடிவை நோக்கி ஒரு பெரும் வீதி தெரிகிறது -அங்கே
கார்மேகம் இரைத்துவிடும் புனலால் வீதியின்குருதிச் சாயம்,
கண்படாமல் கரைந்து புதைகுழிக்குள் போய்ச் சேரும் -அப்போது
பார் வியக்கும், போர் ஓயும் , புத்தொழி வீசும் ,நறுமணங்கமழும்!

அப்போது, அப்பேர் புகழ் யாவும்
யதார்த்த நாயகரின் காலடிக்கும்,
“பிரகிருதி!”எனத் தலைவனின் கிரீடத்திலும்,
புதுமலர் தெளிக்கக் காத்திருப்போம்-காலங்காலமாய் !!

அருகன்
இத்தாலி

குறிப்பு- “பிரகிருதி”அரசாட்சிக்குரிய உறுப்பேழு உடையவன், படைப்புக்கு முதலானவன்…

Nessun commento:

Posta un commento