martedì 24 agosto 2010

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்தது எவ்வாறு? சிங்கள இணையம் பரபரப்புத் தகவல் tamil.cnn

 

 

புதன், 25 ஆகஸ்ட் 2010 04:53

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்தது எவ்வாறு? சிங்கள இணையம் பரபரப்புத் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்திற்கு தனது எதிரணியினரான கஸ்ரோ குழுவினரே காரணம் என கே.பி.என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கூறிய போதிலும் கே.பியின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டு பிடிக்க முடிந்ததாக இராணுவத்தின் உயர் மட்டத் தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரபாகரன் உயிரிழந்து விட்டதாகவும் இதனால் யுத்தம் முடிவடைந்து விட்டது என 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இராணுவத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தனர்.

மே 16ஆம் திகதி அதிகாலை இராணுவப் பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு செல்லும் நோக்கில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, தீப்பற்றி எரிந்த அம்புலன்ஸ் வண்டியில் இருந்த சடலம் பிரபாகரனுடையது என படையினர் எண்ணியதே படையினர் யுத்தம் முடிபடைந்து விட்டதாக அறிவித்ததற்கு காரணமாகும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை நிராகரித்த கே.பி.17ஆம் திகதி பிரபாகரன் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட புலனாய்வுத்துறையினர் அன்றை தினம் மேற்கொள்ளப்பட்ட செய்மதி தொலைபேசி உரையாடல் குறித்து விசாரணை நடத்தியதுடன் பிரபாகரனின் தொலைபேசி இருந்த இடத்தை கண்டறிந்தனர்.

இதன் பின்னரே பிரபாகரன் மறைந்திருந்ததாகக் கூறப்படும் நந்திக்கடல் பகுதி மீது படையினர் தாக்குதல் நடத்தினர். செய்மதி தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அமெரிக்காவினால் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருப்பதை விடுதலைப்புலிகள் அறிந்திருக்கவில்லை.

கே.பி., பிரபாகரனுடன் தனக்கு தொலைபேசி தொடர்பிருப்பதாக காட்டி தலைமைத்துவப் பதவியை பெற முயற்சித்துள்ளதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவித்தன. என்று அந்த இணையம் தெரிவித்துள்ளது.

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்தது எவ்வாறு? சிங்கள இணையம் பரபரப்புத் தகவல்

Nessun commento:

Posta un commento