venerdì 6 agosto 2010

தமிழன் என்கிற காரணத்தால் பிணமாக ஆக்கப்பட்டேன் ! குற்றுயிர் போல் வாழும் ஒரு அப்பாவியின் குமுறல்

 

”தமிழனாக பிறந்த ஒரே ஒரு காரணத்தாலேயே நான் கடந்த இருபது வருட காலமாக குறை உடலும் குற்றுயிரும் உடையவர் போல் வாழ்ந்து வருகின்றேன்.

” இப்படிக் கண்ணீரும் கம்பலையுமாக கூறினார் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிப் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட 11 ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிப்பிள்ளை பிள்ளையான் தம்பி (வயது 35 ). நான்கு பக்கமும் முற்புதர்கள் சுற்றியிருக்க நடுவில் சிறிய குடிசையில் வயதான தாயுடன் ஏதோ வாழ்ந்து வருகிறார் இவர்.

15 வயதுச் சிறுவனாக 1990 ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையின் வசந்தம் தொலைந்து போனது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தில் இராணுவத்தினர் அவரை இடுப்புக்கு கீழ் சுட்டார்கள். அவர் சிகிச்சைக்காக அம்பாறை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டார். அவரது உயிர்தான் காப்பாற்றப்பட்டது.

ஆனால் இடுப்புக்கு கீழ் அவருக்கு உணர்வு இல்லாத நிலை. இரண்டு கால்களும் இயக்கம் இழந்து விட்டன. அவர் கிட்டத்தட்ட வாழ்க்கையில் எல்லாவற்றையுமே இழந்து விட்டார். வாழ்க்கையையே தெலைத்து விட்டார். அன்று முதல் இன்று வரை அம்மாவில்தான் தங்கி வாழ்கின்றார். மலசலத்தைக் கூடக் கட்டிலில் படுத்திருந்தவாறே கழிக்க வேண்டியவராக உள்ளார்.

வயது போன தாயார்.... தாயாரை பராமரிக்க வேண்டிய வயதில் மகன். ஆனால் தாயார் தொட்டாட்டு வேலைகளைச் செய்தும், பிச்சை எடுத்தும் மகனைக் காப்பாற்றி வருகின்றார் இவருக்கு பெரிய அபிலாஷை எதுவும் இல்லை. ஒரு இடத்தில் அமர்ந்து இருந்து நிரந்தர தொழில் செய்து அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

ஆனால் எமது சமுதாயமும், சட்டமும் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. சுயதொழில் செய்ய வேண்டும் என்கிற உந்துதலால் நிறுவனம் ஒன்றின் மூலமாக மூன்று டயர் மோட்டார் சைக்கிள் ஒன்றை பெற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராசா இவரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்துகொண்டு சுயதொழில் முயற்சி ஒன்றை இவர் ஆரம்பிக்கும் வகையில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்து உதவினார்.

புஷ்பராசாவின் ஆசிர்வாதத்துடன் ஐஸ்பழம் விற்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால் இவரால் சுத்தமாக இருக்க முடியாது என்று காரணம் காட்டி அதிகாரிகள் இத்தொழிலில் ஈடுபட விடாமல் தடை போட்டு விட்டனர். பக்கத்து ஊர் சந்தை ஒன்றில் புகையிலை வியாபாரத்தைத் தொடங்கினார்.

ஆனால் அவ்வியாபாரத்தில் ஈடுபடுகின்றமைக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. இவர் மூன்று டயர் மோட்டார் வண்டியில் வீதியால் பயணிக்கும்போதெல்லாம் பொலிஸார் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் கேட்கின்றார்கள். வாகன அனுமதிப் பத்திரம் இல்லை என்று காரணம் காட்டி இவரை ஒரு முறை நீதிமன்றம் வரை இவரைக் கொண்டு போனார்கள்.

தமிழன் என்கிற காரணத்தால் பிணமாக ஆக்கப்பட்டேன் ! குற்றுயிர் போல் வாழும் ஒரு அப்பாவியின் குமுறல்

NANRI - TAMILCNN

Nessun commento:

Posta un commento