lunedì 24 maggio 2010

இத்தாலி றெஜியோ மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உணர்வுபூர்வ நினைவு… - Windows Live

இத்தாலி றெஜியோ மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உணர்வுபூர்வ நினைவு… - Windows Live

தாம் செய்தவை அனைத்தையும் நியாயப்படுத்த இலங்கை அரசு நாடுநாடாக ஓடித்திரிகின்றது. ஆனால் தமிழர்கள் நாம் ஆயிரம் ஆதாரத்தைக்காட்டியும் உலகம் மௌனித்து இருப்பது ஏனோ?ஆண்டாண்டு காலமாக ஆண்டபரம்பரையாக இருந்த நாம் இன்று அடிமைப்பட்டு சிங்களவனின் காலில் மிதிபட்டே காலத்தைக்கடத்த வேண்டுமா? தமிழ் இராணுவக்கட்டமைப்பு (விடுதலைப் புலிகள்) எந்த இராணுவ சிப்பாய்களையும் போர்ச்சட்டத்திற்கு முரணாக கொடுமைப்படுத்தியதாகவோ, அல்லது தகாத முறையில் அணுகியதாகவோ சரித்திரத்தில் இடமில்லை… சிறைப்படுத்தப்பட்ட இராணுவத்தினரை தகுந்தமுறையில் சர்வதேச நிறுவனங்கள் ஊடாக அரசிடம் மீண்டும் கையளித்தமை இன்னும் வரலாற்றில் இருந்து அகலவில்லை. ஆனால் பொதுமக்களையும் விடுதலைப்புலிகள் என்று “கொஞ்சம் வாட்டசாட்டமாக இருந்தால் போதும்” தகாதமுறையில் போர்க்குற்றத்தை இலங்கை அரசு மனிதாபிமானமற்ற முறையில் கையாண்டிருக்கின்றது. போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, பொது அமைப்புக்களையும் சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் போர்ப்பிரதேசங்களில் இருந்து வெளியேற்றியமையிலிருந்தே சிங்கள அரசின் கபடத்தனம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்டப்பட்டும் அனைத்து நாடுகளும் மௌனித்திருந்தது ஏன்? இன்று வெளிக்காட்டப்படும் கோர கொடுமைவாய்ந்த படுகொலையினை மனிதஉரிமை அமைப்பின் சட்டபூர்வ இணையத்தில் பிரசுரித்திருந்தும் இலங்கை அரசு தமிழர்களின் பால் தொடர்ந்தும் அடக்குமுறையினைக்கையாழ்வது தமிழர்களின் கண்ணீருக்குப்பதிலாக இரத்தத்தையே வரவழைக்கின்றது. பிஞ்சென்றும், பூவென்றும், காயென்றும், காய்ந்த சருகென்றும் பார்க்காமல் கொடுரமான முறையில் வெட்டியும் சூட்டும் கொல்லப்பட்ட தமிழர்களிற்கு சாட்சியம் இருந்தும், வல்லரசுகளின் துணையுடன் நடைபெற்ற அனைத்துக்கொடுமைகளையும் மூடீயே மறைக்கப்பார்க்கின்றன. யாரிடம் போவோம், யாரை நம்புவோம், நம்பியோரெல்லாம் நம்மை நயவஞ்சகத்தால் எமது வரலாற்றையே நாசமாக்கிவிட்டார்களே!!! எம்மிடம் இப்போது இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் “நாடுகடந்த அரசே” அதற்கும் பலவழிகளில் சூழ்ச்சிகளையும் உட்புpசல்களையும் ஏற்படுத்தி சிதைக்கப்பார்க்கின்றனர். தமிழீழம் கிடைப்பது உறுதி…!!! அதன் தேவைக்கும் மேலான அதிக உயிரை நாம் கொடுத்துவிட்டோம். இனி இருக்கும் உயிரில் சிறு பயிரைக்கூட நாம் இழக்காது எமது தமிழீழத்தை பெற்றெடுக்கவேண்டும். எமது தமிழர்களின் ஒற்றுமையின்மையே எமது பலவீனமேஒழிய தமிழர்கள் எந்தவகையிலும் பலத்தை இழக்கவில்லை!!! நம்பி எமது தலைமைத்துவம் இழந்த இழப்புகளையெல்லாம் ஒன்றிணைந்து புலத்தில் வாழும் தமிழர்கள் கட்டியெழுப்பவேண்டும். இந்த நம்பிக்கைத்துரோகங்களால், உண்மையான தமிழ் ஈழப்பற்றாளரையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கவைத்த கேவலமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை மாறவேண்டும். இனி சிங்கள இனவெறியர்களால் ஒரு தமிழனும் கொல்லப்படாத வகையில் எமது போக்கு அமையவேண்டும். புலிகள் இருந்த காலத்தில், தமிழர்களைக் கண்டு உயர் சிங்களச்சிப்பாய்களே அஞ்சிய காலம்போய், சாதாரண சிங்களவர்களே ஏழனமாய்ப்பார்க்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோமே இதை யாரிடம் சொல்லி தீர்ப்பது?போதும் போதும் சிங்களக்காடையரின் சித்திரவதைகள்… கண்களில் அணல் பறக்கும் கொடுமையினை மேற்கொண்டிருக்கின்றது சிங்களம் என்பதனைத்தெரிந்தும் அரசுடன் இணைந்திருக்கும் எந்தத்தமிழ் அரசியல் சில்வண்டுகளும் ஆடியதாகவோ, அசைந்ததாகவோ, இரைந்ததாகவோ காணவில்லை! தமிழ் அரசியல் வாதிகள் எந்த ஒரு சிறு பகுதியைக்கூட அசைக்கமுடியாதளவிற்கு அங்கும் பலத்த பிளவுகளைக் கொண்டிருக்கின்றபோது, எப்படி இலங்கை அரசு தமிழர்களை தரத்தோடு பார்க்கக்கூடும். எமது தமிழ்க்கட்டமைப்புக்குலைந்து விட்டதென்று சிங்கள காடையரிலும் பார்க்க, தமிழ் அரசியல் வாதிகளே பெரிதும் மகிழ்ச்சிகொண்டுள்ளார்கள் போலிருக்கின்றது. தாயகத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் இணைந்து பாரிய உரிமைப்போராட்டத்தை காலதாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும். போர் நிறைவு பெற்றாச்சு, ஆனால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைப்பதில் எந்த தமிழ் அரசியல் வாதிகளுக்கும் அதிகாரம் இல்லை. இதில் அரச தலைவர் எப்படி தமிழர்களை சமமாகன மதிக்கப்போகிழன்றார்?. அமைக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்குழுவில் எத்தனை தமிழர்கள் நியமிக்கப்பட்டார்கள்? இலங்கை அரச அதிகாரத்தில் எந்த தமிழன் சர்வதேசத்தில் எங்கள் நிலையினை எடுத்துக்காட்டக்கூடிய நிலையில் இருக்கின்றனர்??? இவ்வாறான தகாத நிலையினை நிச்சயம் நாடுகடந்த அரசு சர்வதேசத்திற்கு எடுத்துகாட்டியே ஆகவேண்டும். இப்பொது வெளிவந்திருக்கும் தமிழினக்கொடுமைக்கான புகைப்படமானது தமிpழர்களின் உள்ளக்கொதிப்பை மேலும் அதிகரித்திருக்கின்றது என்றால் அதுமிகையில்லை. எழுதும் போதே இரத்தம் கொதிப்பதனால் வருகின்ற வார்த்தைகளை இணையத்தில் போடமுடியாத அளவிற்கு மேலோங்கி வருகின்றபோதிலும் மக்கள் அதன் பிரதிபலிப்பு எது என்பதனை நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள். தமிழர்களுக்கு இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகளுக்க நீதிவேண்டும்… இலங்கை அரசிற்கு எதிராக அரசில் அங்கம் வகிக்கும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் முழங்கியே ஆகவேண்டும்…. – அருகன்

Nessun commento:

Posta un commento