domenica 28 agosto 2011

“எனது கால் என்பதற்காக, அது சேற்றில் மிதிபட்டால் வாசமா அடிக்கும்…”

800PX-~1சட்டத்தரணிகள் சட்டத்தைப்பயன்படுத்துவதை விடுத்து உயிரை பறித்துவருகின்றார்கள். மூவரின் உயிரைக்காக்கவென்று பலரின் உயிரை பலிகொடுக்க முன்வந்துள்ளார்கள் தமிழகத்துத்தமிழர்களும் புலத்தில் சில தமிழர்களும். என்ன கொடுமையப்பா?  தமிழகத்தின் முதல்வரின் வாசலில் போய்க்கேட்கவேண்டிய விடயத்தை உலகம் கேட்கப் பேசினால் தம்மை திடப்படுத்தலாம் என்ற நோக்கில் பலரின் உயிரை பலிகொடுத்துவருகின்றார்கள். சட்டத்தரணிகளும், நீதிபதிகளும், இணைந்து நாட்டில் இல்லாதொழிக்க வேண்டியசட்டதீர்மானத்தை மக்கள் பலிப் போராட்டமாக வெளிக்காட்டுகின்றனர். இப்போதெல்லாம் மக்கள் போராட்டத்திற்கும், உண்ணா போராட்டத்திற்கும் மதிப்பில்லாது ஆக்கிவிட்டார்கள். நிகழ் வரலாற்றில் போராட்டங்கள் வெண்றதிலும் பார்க்க தேல்வி கண்டமையே அதிகம். அதன் கருத்து போராட்டம் செயலிழந்தது என்றல்ல போராட்ட முறைகளும் அதை நடாத்துபவர்களும் முறையற்றுச் செயற்படுகின்றார்கள் என்பதே!
ஒரு போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்றால் அதன் போக்குகள் சரியான முறையில் அமையவேண்டும். ஆனால் இப்போது நடக்கின்ற போராட்டங்கள் எல்லாம் நிதியடிப்படையினைக் கொண்டும் பதவி அடிப்படையினைக் கொண்டுமே இடம்பெறுகின்றது. இதில் நீதிக்கும் நேர்மைக்கும் இடம் எங்கே இருக்கப்போகின்றது. இப்போது இந்த மூவருக்காகவும் தனது உயிரை தீக்கிரையாக்கிய பெண்மணிக்கு என்ன பின்னணியில் என்ன நடந்ததோ என்ற விடயங்கள் பற்றியும் அறிந்தாகவேண்டும்.
எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை, அதுவாகில் “எனது கால் என்பதற்காக, அது சேற்றில் மிதிபட்டால் வாசமா அடிக்கும்…”  அமேரிக்கா சதாமிற்கு மரணதண்டனை வழங்கும் போது சரி என்று பட்ட ஒரு விடயம் பலருக்கு தவறாகவே பட்டது. அதற்காக சதாமிற்காக எமது இரத்தம் கொதிக்கவில்லையே! அப்போது துக்குக்கு எதிரான எமது போராட்டம் எங்கே போய்த் தொலைந்தது?
மிருக வதைச்சட்டத்திற்கு இடமுண்டு அதுவே மனிதனுக்கு நடக்கும் போது, எமக்கு வேண்டியவர்கள் என்றால் அது தவறாகக்காணப்படுகின்றது. ஏன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! இத்தனை வழக்கறிஞர்களும் இணைந்து தமது சிறப்பம்சத்தால் விடுவிக்கப்பட வேண்டிய தூக்குதண்டனை சட்டத்தை மக்களிடம் திசை திருப்புவதன் நோக்கமாவது, தவறான விடயத்தையும் மக்கள் போராட்டத்தால் சரியாக்கி விடலாம் என்ற கட்டத்திற்கு தள்ளப்பட்டு விடாதா? இம்மூவரின் குற்றங்கள் நிரூபிக்கப்படா விட்டால் எவ்வாறு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக்கூடும் என்று எனக்குப்புரியவில்லை? சட்டத்தால் எடுத்த முடிவை மக்களால் மாற்ற முடியுமானால், சட்டத்தரணி எதற்கு நீதிபதி எதற்கு அரசாங்கம் எதற்கு தீர்ப்புகள்தான் எதற்கு???...
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களே! நீங்கள் செய்ய வேண்டியது போராட்டமல்ல அம்மையாரின் அலுவலகத்தின் விடுக்கப்படும் கோரிக்கையும் அம்மையாரின் பதிலிலுமே தங்கியிருக்கின்றது. இது இப்படி இருக்க எதற்கு இந்த மறைமுக விளையாட்டுக்கள். இதைப்புரிந்து கொள்ளாத மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகின்றார்கள். இதில் மனித நேயம், கருணை ம னுஎன்ற போர்வையில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களும் விதிவிலக்கல்ல!!!         

Nessun commento:

Posta un commento