sabato 27 agosto 2011

“அசை போடுவதற்கு ஒரு செய்தி கிடைச்சாச்சு”… அருகன்….

Blind_Justice_svg_medஈழத் தமிழர்களுக்கு இதுவே ஒரு பொழுது போக்காகிவிட்டது…. அதுவாகில் அவ்வப்போது சிலர் ஊளையிடும் போது தாமும் சேர்ந்து ஊளையிடுவது, அது சரியோ பிழையோ என்று கூட எண்ணிப்பார்ப்பதில்லை. “ஊரோடு சேர்ந்து ஓடு” என்பது பழமொழியே தவிர நடைமுறையல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
ஜே. அம்மையார் வந்தால் தமிழர்களுக்கு என்ன நடக்கும் என்பதனைப்புரிந்து கொள்ளாமலே முன்னாள் முதல்வரை வீட்டுக்கு அனுப்பினர் தமிழகத்தாரும், சீமான் குழுவினரும்…


இப்போது அம்மையார் இலகுவாகச் செய்யக்கூடிய விடையத்தை உலகம்முழுதும் கூட்டுச்சேர்ந்து தமிழர்கள் செய்ய வேண்டிய அவசியம் எதற்கு? அம்மையார் தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி விசேட கட்டளையினை சமர்ப்பித்து இன்று தூக்குத்தண்டனையில் இருக்கும் மூவரை மட்டுமல்ல இன்னும் சிறையில் இருக்கும் மற்றும் பலரையும் விடுதலை செய்து விடலாமே??? இதற்கென்னத்திற்கு சலசலப்பு….


இதே விடயத்தை கருணாநிதி இருக்கும் போது செய்திருந்தால் அவர்மீது ஏறிப்பாய்ந்திருப்பார்கள், இப்போது அவர் இல்லாத இடத்தில் மட்டும் அப்பதவியில் இருக்கும் அம்மையாரை இரந்து கேட்கின்றார்கள் என்ன கூத்தப்பா இது…


எங்கள் ஊரில் காலத்திற்குக் காலம் நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோம், சிலகாலம் மாபிள் அடி, சிலகாலம் பேணியடி, அதன்பின்னர் கிளித்தட்டு, எட்டுக்கோடு, தாயம், தும்பிபிடித்தல், உதைபந்தாட்டம், கரைப்பந்தாட்டம், வலைபந்தாட்டம்,… இப்படி அவ்வப்போது மாற்றி மாற்றி வளையாடுவோம் அது போலவே இப்போதும் தமிழர்களின் புலத்துப்போக்கிலும் விம்பங்கள் தெரிகின்றது அதற்கு ஊடகங்களை பணன்படுத்தி இல்லாத விடயத்தையும் பெரிது படுத்துகின்றார்கள். மரண தண்டனை வழங்கப்பட்ட மூவருக்காகவும் புலத்தில் அங்காங்கே போராட்டங்கள் நடப்பதாகவும் பெரும் ஆதரவு இருப்பதாகவும், தேசியத்தின் போர்வையில் உள்ள ஒரு கூடகத்தில் சொல்லக்கேட்டேன்… ஆனால் அவ்வாறான எந்த ஆரவாரங்களும் இங்கு இல்லை  என்பதே உண்மை. 6கோடி மக்களின் தொகையிலும் பார்க்க புலத்தில் இருப்பவர்களின் தொகை அதிகமல்ல, மிகப்பெரும்பாண்மையோடு வெண்ற அம்மையார் மக்களின் பிரதி நிதிதானே அவர் அதற்கு மிகச் சுலபமாக முடிவுகட்டலாம் என்றிருக்கின்ற போது ஏன் தேவையற்ற முறையில் பிரசாரங்கள்?


ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் தலைமைகளுக்கு ஆடும் வரை ஈழத்தமிழர்களின் உயர்நிலை வெளிப்படப்போவதில்லை. ஏற்கனவே எம்மிடையே பிரிந்து சிதைந்து கிடக்கின்ற தலைமைகளை இணைக்க வழிதெரியாத நாம் எம்மிடையே உள்ள குறைகளுக்ககப்போராடாமல் எமது போக்கின் திசையினைத்திருப்ப மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு தாளம் போட்டுக்கொண்டிருக்கின்றோம்.


குற்றவாளியாகக்கருதப்பட்டவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு மனம் திரும்பும் பட்சத்தில் மட்டுமே கருணை காட்டப்படுமே ஒழிய மக்கள் விண்ணப்பிப்பதாலோ அல்லது, ஆர்ப்பாட்டங்கள் செய்வதாலோ கருணை காட்டமுடியாது வேண்டுமென்றால் நடக்கவிருக்கும் சம்பவத்தை ஒத்திவைக்கலாம்… அதனை முதலில் நாம் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் பின்னணியைப்பற்றியோ எமது மக்களுக்கு என்ன தெரியும்? பலருக்கு அவர்கள் ஏன் தண்டனை அனுபவித்தார்கள் என்றே தெரியாத போது திடீரென்று போராடுங்கள் என்றால் … ???!!! எமது தமிழர்கள் ஆரம்பத்தில் இருந்தே பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பதனை முன்னைய போராட்டங்கள் இப்போதும் எனக்கு நினைவு படுத்துகின்றது.  


மனித நேய   அமைப்புக்களும் நீதிபதிகளும் மக்கள் அதிகமாக கேட்டுக்கொள்வதற்காகச் செயற்படுபவர்கள் அல்ல!  அப்படிச் செயற்படவும் முடியாது.  அது பஞ்சாயத்துப்படங்களில் வேண்டுமென்னால் சாத்தியப்படலாம், சர்வதேசத்திற்கு காட்டும்  செயல்களில் பிரயோகிக்க முடியாது. இதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மனித நேய அமைப்பிற்கு மக்கள் மனிதத்தைக் கற்றுக் கொடுக்க முடியாது, உயர் நீதிபதிக்கு மக்கள் நீதி எது என்பதனை விபரிக்க முடியாது, இவ்வாறான அறியாமையினை மக்களுக்கு புகுத்தி தம்மை வெளிக்காட்டுகின்றனர் சில அதிகார வர்கர்கள்.


அப்படி என்றால் இதற்கு  என்ன வழி, கருணை அடிப்படையில் என்ன செய்யாலம், என்ற கேள்விகள் இருக்கின்றதல்லாவா? இந்த கேள்விகள் மக்கள் பலரிடம் இருந்தாலும்,  முதலில் சர்வதேசத்திற்கு உண்மைகளை வெளிக்காட்ட வேண்டிய சிலருடைய செயற்பாடே இந்த ஆர்ப்பரிப்பு என்பதனை புரிந்து கொள்ளாத தமிழ் ஊடகங்களும் தம்மை இவ்விடயத்தில் ஈடுபடுத்தி இருக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையாக உள்ளது. இந்த சலசலப்பை ஏற்படுத்தி தமிழர்களின் மன நிலையினை மாற்றி செயலிழக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர் தமிழத்தலைவர்கள் என்று தம்மை வெளிப்படுத்துவோர். ஒரு விடயம் கிடைத்தால் போதும் அதைவைத்து வித்தை காட்டுவதற்கு!!!


தமிழர்களின் புலத்துப்போராட்டம் தமது கொள்கையில் இருந்து இன்னமும் நிலைகொள்ளவில்லை, அதாவது ஒரு சர்வதேச அமைப்பாக இல்லாவிட்டாலும் சாதாரண அமைப்பாகக்கூட செயற்பட முடியவில்லையே! இதில் நாடுகடந்த அரசுங்குட விதிவிலக்கில்லை. ஏற்கனவே நான் எழுதிய விடையம், இந்த அமைப்பு நாடுகடந்த அரசென்பதிலும் பார்க்க “நாடுகடத்தப்பட்ட அரசு” என்பதே பொருத்தமாகும். எந்த விடயத்திலுமே சிந்திக்கமாட்டோம் என்கின்றார்களே, கலந்து ஆலோசிக்கமாட்டோம் என்கின்றார்களே! முற்போக்காளரின் கருத்துக்களை கேட்கமாட்டோம் என்கின்றார்களே! எப்படி விடியப்போகின்றதோ, எப்போது முடியப்போகின்றதோ????....  

Nessun commento:

Posta un commento