domenica 8 maggio 2011

இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு…

Patente Italianoஇத்தாலி வாழ் தமிழ் மக்களின் தேவைகள் கருதியும், பொருளாதார நிலை கருதியும் காலத்திற்குக்காலம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நாம் தற்போது, இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த முறைதயார்ப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றோம்.
சாரதி கல்வி நிலையத்தில் கற்றுக்கொள்வதற்கு மக்கள் மொழிச்சிக்கல் மற்றும் பணவிரயம், நேரச்சிக்கல் போன்ற பல நெருக்கடிகளைச்சந்திக்கின்றார்கள். இவ்வாறான சிரமங்களிற்குள்ளாகும் பலருக்காகவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை நாம் எடுத்துள்ளோம்.


சாரதி கல்வி நிலையத்தில் 600€க்களுக்கும் மேலான கட்டணத்தைச்செலுத்துவதோடு பலர் தோல்வியையும் கண்டுள்ளார்கள். அதையும் தாண்டி ஒவ்வொரு குறிப்பிட்ட பயிற்சிக்கும்அண்ணளவாக 26€ செலவிட வேண்டியும் உள்ளது.
வாகனம் ஓட்டும் முறையிலும் பலர் தவறான முறையினைக்கையாழ்வதால் தேவையற்ற ரீதியில் தமக்கு வழங்கப்பட்ட புள்ளிகளையும் இழந்து வருகின்றனர். எனவே முறையாகக்கற்கவேண்டிய அவசியம் இருப்பதையும் இதில் நாம் தெளிவுபடுத்தியும், பரிட்சைக்கும் சரியான முறையில் ஆயத்தம் செய்து கொடுத்து வரும் வகையில் இந்தவருடத்தில் இருந்து ஆரம்பித்துள்ளோம்.
எனவே இது தொடர்பாக தேவை இருப்போர்கள் எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டப்படுகின்றீர்கள்.
இதனால் நீங்கள் அடையும் நன்மை அண்ணளவாக சாரதி கல்வி நிலையத்தில் கட்டவிருக்கும் செலவினை முற்றாக தவிர்த்துக் கொள்ளலாம்.   

Nessun commento:

Posta un commento