martedì 7 giugno 2011

“போர்க் குற்றம், இனவழிப்பு இலங்கையினை ஆண்ட அனைத்து சிங்களத் தலைவர்ளுக்கும் பொருந்தும்..."- Arugan

125px-Coat_of_arms_of_Sri_Lanka_svgதலைப்புகளை வைத்தே பிழைப்புகளை நடாத்தும் செய்தியாளர்களை நம்பி உண்மைத்தகவல்களை தமிழ் மக்கள் படிப்படியாக இழந்து வருகின்றனர்.

தமிழன் தனக்கே உள்ள பல சிறப்பு அம்சங்களை தூக்கி எறிந்து விட்டு, மற்றவர்கள் மீதுள்ள கறைகளைமட்டுமே தனது அத்தியாவசியத் தேவையாகக் கருதும் அளவிற்கு இன்றைய தமிழர்களின் வாழ்க்கைத்தரம் மாறிவிட்டது.

குறிக்குகோள் தமிழீழம் (சுதந்திரமான முழு உரிமையுடைய அதிகாரங்கள்)

image_thumb3

இங்கே காட்டப்படுகின்ற வழிமுறைகளை சற்று உற்றுப்பாருங்கள்…

இங்கு காட்டப்படுகின்ற குறிக்கோளை அடைவதற்கு பல வட்டத்தின் வழிமுறைகள் கைகொடுக்கலாம். அதில் ஒன்று இன்னொரு வட்டத்தில் எந்த தொடர்பும் அற்ற வகையில் நேரடியாக குறிக்கோளின் வட்டத்தை மட்டுமே தொடர்பு படுகின்றது. இதிலிருப்பதுபோலவே எமது போராட்ட வழிமுறைகளும் அமையவேண்டுமே ஒழிய, குறிக்கோளை விட்டு பக்கத்து வழிமுறை வட்டங்களை “குத்திக்குடைவது” பொருத்தமற்றது.

தேவைப்பட்டால் மற்றைய வழிமுறைகளுக்கு எவ்வாறான ஆதரவை வழங்கமுடியுமோ அவ்வாறான ஆதரவை வழங்குவதே சாலச்சிறந்தது. அதுவே விடிவான பாதைக்கு வழிவகுக்கும்.

அதைவிடுத்து, நான்போடும் திட்டப்படி செய்யவேண்டும்; மற்றவர்கள் எல்லாம் “மாற்றுக்கருத்துக்காறர்” என்றோ “துரோகிகள்” என்றோ மற்றும் வேவ்வேறு “XXX”  பெயர்களில் சோடினை செய்வதோ முட்டாள் செய்யும் கோளைத்தனமான செயற்பாடுகளே!

பொங்குதமிழ் மேற்கொண்ட காலத்திலேயே எனது ஆக்கங்கள் “புலிகளின் தடையை நீக்கப்போராடுங்கள்” என்று கோசம் போட்டபோது, எனது கருத்துக்களை அனைவரும் உதார்சீனம் செய்தார்கள்… இப்போது தமிழர்களின் பலம் இழக்கப்பட்டும், தலைமைகள் பிரிக்கப்பட்டும் இருக்கும் நிலையில் இதனை இப்போது தொடர்கின்றார்கள்… சிரிப்புத்தான் வருகின்றது… எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போது செய்யாது, தேவையற்றதை தூக்கிப்பிடிக்கின்றனர் எமது தலைமைகள்!!!

• சிங்களவர்களில் அதி உயர் நீதிபதிகள் இருக்கின்றார்களே தமிழில் அவ்வாறான நீதிபதிகளை யாருக்குத் தெரியும்???
• எத்தனை தமிழர்கள் ஒலிம்பிக் நோக்கி தமது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளார்கள்?
• தமிழர்களின் சிறப்பை புலிகள் மூலம் எடுத்துக்காட்டிய போது இருந்த சிறப்புகள் இப்போது எங்கே???
• உலகசாதனைகள் படைக்கும் பட்டியலில் தமிழர்களின் பட்டியலின் தொடர்கள் எங்கே???
• தமிழ் சர்வதேச சட்டதரணிகளின் சிறப்பு வாதாட்டப்பட்டியல் எங்கே?
• புலிகளின் காலத்தில் பல சேவை அமைப்புக்கள் இருந்ததென்று யாவருக்கும் தெரியும் அவ்வமைப்புக்களின் தற்போதைய செயற்பாடுகள் எங்கே?
• புலிகளின் காலத்தில் புலிகளைத்தவிர வேறு யாரையுமே மக்கள் அறிந்ததில்லை, தற்போது மற்றவர்களைத்தவிர முன்னாள் புலிகளை மக்கள் அறிந்ததே இல்லையே???

இவ்வாறான பல குறைபாடுகளை நாம் நிவர்த்திசெய்ய வேண்டியிருக்கின்றது என்று யாரும் புரிந்து கொள்வதாய் இல்லை!

இவற்றைப் புரிந்து செயற்படுவோரை தொடர்ந்து செயற்படவும் பல தடைகளை தமிழர்களே மேற்கொண்டும் வருகின்றமை வேதனையினைத்தருகின்றது.

எமக்கென்றொரு நாடு அமையட்டும்; அதற்குப்பின்னர் மகிந்தவை தூக்கிலென்ன பரம்பரைக்கே தாக்குதல் கொடுக்கலாம்… இப்போது நாம் செய்ய வேண்டியவை தமிழர்களுக்கான தமிழீழத்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான்.

போர்குற்றத்தை மகிந்த மட்டும் நிகழ்த்தவில்லையே!!!இலங்கையினை ஆட்சி செய்த அனைத்து சிங்கள தலைவர்களும் செய்தார்களே! மகிந்தவைமட்டும் தூக்கிப்பிடிப்பதால் மற்றவர்கள் குற்றத்தில் இருந்து தப்பிவிடுவார்களே???

குற்றம் மகிந்தவிற்கு மட்டும் என்று இருப்பதால்தான் சிங்களவர்கள் பயப்படாமல் இருக்கின்றார்கள் “போர்க் குற்றம் இலங்கையினை ஆண்ட அனைத்து சிங்களத் தலைவர்களுக்கும்” என்றிருந்தால்தான் எமது பாதை தமிழீழத்தை நோக்கி நகரும்…

  • எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா போர்குற்றம் செய்யவில்லையா?…
  • சிறிமாவோ பண்டாரநாயக்கா போர்குற்றம் செய்யவில்லையா?
  • வில்லியம் கொபல்லாவ போர்குற்றம் செய்யவில்லையா?
  • ஜே. ஆர். ஜெயவர்த்தனா போர்குற்றம் செய்யவில்லையா?
  • ரணசிங்க பிரேமதாசா (போர்குற்றம் செய்யவில்லையா?
  • டிங்கிரி பண்டா விஜயதுங்க (போர்குற்றம் செய்யவில்லையா?
  • சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க போர்குற்றம் செய்யவில்லையா?
  • மகிந்த ராஜபக்ச போர்குற்றம் செய்யவில்லையா?

இவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிராகப்போர்க்குற்றம் செய்தவர்களே இவர்கள் அனைவரும் குற்றவாளிகளே???

“யாழ் நுhலக இன அழிப்பின் பொது மகிந்தவா பதவியில் இருந்தார்???”

முள்ளிவாய்க்கால் மட்டும் எமது இனம் அழிக்கப்பட்ட இடம் என்று குறுக்குப்பட்டு உண்மை பல மறைக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கக்கூடாதா??? – தொடரும்… அருகன்.

Nessun commento:

Posta un commento