lunedì 2 maggio 2011

இத்தாலிய தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான நடவடிக்கைகள்.

cartaidentitapic29தற்போதைய இத்தாலிய அரசின் ஆட்சியால் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு மிக இறுக்கமான நடவடிக்கைகள்.

கடந்த காலங்களில் வழங்கிவந்த இத்தாலி அடையாள அட்டை 5வருடம் என்றும் சில காலத்திற்கு முன்னரிருந்து சில பிரதேசங்களில் 10 வருடமாகவும் செல்லுபடியாகும் காலம் வழங்கப்பட்டு வந்தது. இது இத்தாலி மக்களுக்கும் பொருந்தும். ஆனால் தற்போது நடவடிக்கை மாற்றமடையவுள்ளது. அதுவாகில், இத்தாலியின் விசாக்களுக்கு ஏற்ப ஒரு வருடமோ அல்லது 2 வருடமோ சாதாரண விசாக்களின் அடிப்படையில் வழங்கப்படுவதோடு நிரந்தர விசாக்களையுடையோருக்கு 5வருடமாகவும் வழங்கப்படவுள்ளது.

இது எவ்வாறு தமிழர்களைப்பாதிக்கும்?

காலத்திற்குக்காலம் விசாக்களுக்கு ஏற்ப இருப்பிடப்பதிவை உறுதிப்படுத்தும் அலுவலகத்தில் தம்முடைய விசாக்கள் சரிதம் தம்மை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தல் அவசியம் அவ்வாறு உறுதிப்படுத்ததோர்களின் இருப்பிட பதிவு நிராகரிக்கப்பட்டு காவல் அலுவலகங்களுக்கு அந்நபர் வதிவிடப்பதிவு அற்றவராக அறிவிக்கப்படும். இதனால் பிற்காலத்தில் பாரதூரமான பல சிக்கல்களுக்கு தமிழர்கள் ஆளாக நேரிடும். மேலதிக தொடர்புகளுக்கு வழமைபோல் எமது மின்னஞ்சல் மூலம் தமது சந்தேகங்களைத் தொடரலாம். 

Nessun commento:

Posta un commento