domenica 21 marzo 2010

நாடுகடந்த தமிழீழம். - நாடுகடத்தப்பட்ட தமிழீழம் - Arugan

நாடுகடந்த தமிழீழம். - நாடுகடத்தப்பட்ட தமிழீழம்

tamileelaarasu_01 இத்தேர்தலில் தம்மை ஈடுபடுத்தும் ஒவ்வொருவேட்பாளரும் தம்முடைய தனித் திறனையும், மக்கள் தொடர்பினையும், குறித்த நாட்டில் அவர்களுக்கு இருக்கும் அந்நாட்டுடனான சட்டங்கள் தொடர்பான ஈடுபாடுட்டினையும், சட்டப்படி செயற்பாட்டில் இருக்கும் அமைப்புக்களுடனான தொடர்புகளிலும், ஏதாவதொன்றிலாவது அங்கத்தவராகவும் இருத்தல் மிக முக்கியமாக ஒரு தகுதியாகக்கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை அரசு தமிழர்களுக்கு தகுந்த உரிமை வழங்கப்படவில்லை என்பதற்காகவே நாம் எமது போராட்டத்தை ஆயதப்போராட்டமாக்கும் அளவிற்கு கடந்த காலங்களில் விஸ்தரித்தமை குறிப்பிடத்தக்கது. அதே தவறினை நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்கள் தம்மின மக்களிடையே மேற்கொள்வார்களாயின் இத்திட்டத்தினால் தமிழர்கள் என்ன பலனை, என்ன உரிமையினை பெற்றுக்கொள்ளப்போகின்றார்கள்?

புலிகளின் தலைவர் கட்டிக்காத்த கூட்டினை “பயம்” என்ற கட்டுக்கோப்பை 5ம் மாதம் 2009ல் இருந்து யாரிடமும் கண்டதாகத்தெரியவில்லை. இத்தனை காலமும் எத்தைனை காரியங்கள் இடம்பெற்றாலும் அது புலிகளின் தலைவரின் பெயரே வெளியில் பிரசன்னமாகிவந்ததும் அவரைத்தவிர வேறு எவருடைய பெயரும் பிரபல்யதமாக வெளிவராததும் அவ்வாறு வெளிவரும் பட்ஷத்தில் அவருடைய ஆயள் குறகிவிடும் என்ற எச்சரிக்கையும் அதனை மீறும்பட்ஷத்தில் காற்றோடு காற்றாக பறந்து போவது அவருடைய பெயர் மட்டுமல்ல அவருடைய உயிரும் என்பதும் யாவருக்கும் தெரிந்த விடயமே. ஆனால் தற்போது புலிகளின் முன்னாள் விழையாட்டுத்துறைப் பொறுப்பாளர், புலிகளின் சர்வதேச இணைப்பாளர், புலிகளின் சட்ட ஆலோசகர் என்று ஆளாளுக்கு கொடிகட்டிப்பறக்கின்றனர். புறப்பதோடு அவர்களுக்கான பதவிப் பெயர்களும் மாற்றமடைந்தே செல்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வேளையில் நாடுகடந்த அரசினை எமது சொந்த நாட்டில் இருக்கும் எந்த மக்களின் விருப்பினையும் கருத்திரல் கொள்ளாது, புலத்தில் இருக்கும் ஒரு சிலரை மட்டும் வைத்துக்கொண்டு, நாடுகடந்த அரசினை அமைப்புகளின் ஒத்துளைப்புடனும் மக்களின் ஒத்துளைப்புடனும் மேற்கொள்கின்றோம் என்பது எத்தைனை தூரம் வரவேற்கக்கூடியது என்று புரியவில்லை.

தேர்தலில் தம்மை ஈடுபடுத்துபவர்கள் யார்? ஆவர்களுக்கு எமது போராட்டத்தைப்பற்றிய அடிப்படை எவ்வளவிற்குத்தெரியும்? ஏமது வரலாறு என்ன? ஏமது இழப்புக்கள் எத்தகையது? இப்படி எத்தைனையோ கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லத்தயாராக இருக்க வேண்டாமா???

30வருடத்திற்கு முற்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப்பற்றிப் பேசுகின்றோமே, அதன் அடித்தளம் எந்தக்கட்சியினுடையது.... அந்த கட்சிகளுடைய பங்களிப்பு தற்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எந்த நிலையில் உள்ளது. வுட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும், நாடுகடந்த அரசினையும், தெளிவுபடுத்தத்தெரியாதவர்களை வைத்து நாடு கடந்த அரசை அமைத்தால் அது நாடுகடத்தப்பட்ட அரசின் கோரிக்கையாக இருக்குமே யொழிய அதனால் மக்களுக்கு எந்த விடிவையும் பெற்றுக்கொடுக்க முடியாது.

புலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது அவர் ஒரு தமிழன் என்றும் பாராமல் அவருக்கு வாக்கை வழங்காது,  30வருடமாக தமிழர்களின் அழிவிற்காக கொலைத்தெழிலில் ஈடுபட்டிருந்த மிஸ்டர் சரத்திற்கு வாக்குகளை வழங்க புலத்தின் தொலைக்காட்சிஊடகங்களும் புலிகளால் கட்டிவைக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு தமிழர்களின் ஒற்றுமையினைக் குலைத்தபோது நாடுகடந்த அரசின் சார்பில் விடப்பட்ட அறிக்கை என்ன???

எல்லா தமிழ் மக்களும் சேர்ந்து திரு சிவாஜிலிங்கத்திற்கு வாக்குகளைப் போட்டிருந்தாலும் அவர் இலங்கை நாட்டில் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது, ஆனால் தமிழர்கள் தம்முடைய ஒற்றுமையினை மகிந்த அரசிநற்கு விழக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். இது ஒருபக்க சிந்தையாக இருந்தாலும், பெரும்பாண்மை தமிழர்களின் வாக்குகள் சிவாஜிலிங்கத்திற்கு விழுந்திருந்தால் சிவாஜிலிங்கத்தின் மௌசு உலகரீதியில் கொடிகட்டிப்பறந்திருக்கும் என்பதனை நாடுகடந்த அரசின் அமைப்பாளர்களும் தற்போது தமிழர்களின் பிரதிநிதி என்று தலைகாட்டும் பல தமிழர்களுக்கும் சொல்லி விழங்கப்படுத்தத் தேவையில்லை. எனவே தான் தமிழன் ஒருவன்         தேர்தலில் நின்றும் அவருக்கு வாக்கைவழங்காத தமிழர்கள் தமிழர் அல்லாத ஒருவரை மதிக்கும் அளவிநற்கு தமிழனை மதிப்பதில்லை என்பது புலனாகின்றது.
ஒவ்வொரு தமிழனும் உரிமையுடன் இதற்கான தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். அது தகுந்த முறையில் இடம்பெற்றால்!!! தமிழர்களின் தேசியம் சுயநிர்ணயம் தனிநாடு போன்ற விடயங்களைப் பேசுகின்ற தமிழ் அரசியல் வாதிகளே இந்த நாடுகடந்த அரசில் மௌனம் சாதிக்கும் போது, மக்கள்மட்டும் ஆணை வழங்கிவருகின்றார்கள் என்ற கருத்தை ஏற்க முடியுமா என்ற வினாவும் எழுகின்றது.

கூட்டமைப்பே தற்போதைய ஏகபிரதிநிதி என்ற பார்வையில் அவர்களுடைய ஒத்துளைப்பு இல்லாது நாடுகடந்த அரசு அமைப்பதென்பது எத்தனை சாத்தியமானது? முன்னால் புலிகளின் பொறுப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருக்கின்றபோதிலும் அரசியல் நன்கு தெரிந்த ஆசான்கள் இருக்கின்றபோதிலும், தகுந்த ஆலொசகர்கள் இருக்கின்ற போதிலும் முட்டைக்குள் முழத்தேங்காயை உடைப்பதென்பது சாத்தியமா???

இலங்கை அரசின் புத்திசாலித்தனத்தையும் பலத்தையும் வெல்ல முடியாத தமிழர்களாகிய நாம், அதனை சாதூர்யமாக வெல்ல முயற்சிக்கும் தமிழர்களின் செயற்பாட்டையும் ஏழனஞ்செய்து, நாம் மட்டுமே புத்திசாலிகள், நாம் செய்வது மட்டுமே அறிவுடைய செயல் என்பது எமது முகத்தில் நாமே கரியைப்பூசுவதாக அமையாதா???

ஒரு வாகனத்தை ஓட்டுவதற்கே ஒரு தகுதியும் வயதும் தேவை என்கின்ற போது ஒரு நாட்டை ஆழமை செய்வதற்கு, அதற்காகத்தெரியப்படுகின்ற அதிகாரிகள் தமது தகுதியினை நிரூபித்துக்காட்ட வேண்டாமா????

கல்வியில் இலங்கை அரசு வேறுபாட்டினைக்காட்டுகின்றது என்ற காரணமும் எமது போராட்டத்தின் விம்பமாக உள்ளபோது, எத்தனையோ தகுதியுடையோர் இருக்கின்ற போது அவர்களை விடுத்து  தாமாகவே இவர்கள்தான் தகுதியுடையவர்கள் என்று நிர்ணயிப்பது எத்தனைய ஆட்சியை நடத்தப்போகின்றார்கள் என்பதனைக்காட்டவில்லையா???

ஆரம்பத்திலேயே எனது கருத்தினைத் தெரிவித்திருந்தேன்! அதாவது, தமிழீழம் தொடர்பாக அரசை அமைக்கும் முன்பு நாடுகடந்த தமிழீழ அடையாள அட்டை ஒன்றை உருவாக்க வேண்டும், அதுபோலவே தேர்தலில் போட்டியிடுவோர்களும் ஏற்கனவே பதியப்பட்ட அமைப்புக்களில் இருந்து தெரியப்படல் வேண்டும்.  …  தொடரும் - அருகன்

Nessun commento:

Posta un commento