giovedì 25 marzo 2010

நாடுகடந்த தமிழீழம். - நாடுகடத்தப்பட்ட தமிழீழம் (3) Nanri Thesiyam

புலிகளின் தலைவர் கட்டிக்காத்த கூட்டினை “பயம்” என்ற கட்டுக்கோப்பை…

 Sellvaமுக்கியமான ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை செல்வா றே;கொண்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத்தூக்கிப் பிடிப்போர்கள் ஏன் அவர் மேற்கொண்ட அதே வழியில் செல்வோரை புறந்தள்ளுகின்றனர் என்று புரியவில்லை!!!

தந்தை செல்வா திழீழம் தேவை என்றாரே ஒழிய தனிமையாகவுமில்லை தனிமைப்படவும் இல்லை!!! எமது தேசமாகிய இலங்கைத்தீவை சிங்கள அரசிடம் ஒப்படைத்து விட்டு இப்போது தேசத்தை விட்டு தேசங்கடந்து எமது கோரிக்கையினை நடத்துவது தகுந்த செயலாகத்தெரியவில்லை எமது போராட்டம் அடிப்படை எமது தேசத்திலேயே இருக்க வேண்டும் மாற்று செயற்பாடுகள் மட்டுமே புலத்தில் அனுசரணையாக அமையவேண்டும். ஆனால் இன்று நடப்பதென்ன???

காலம் காலமாக செயற்பட்ட காங்கிரஸ், தமிழர் கூட்டனி, புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு, மேலதிக தமிழ்க்கட்சிகள், மலையக தமிழ்கட்சிகள்... தமிழ் தலைவர்கள் அறிஞர்கள் அரசியல் லோசகர்கள் போன்ற ஏராளம் பேரை ஒதுக்கிவிட்டு, புலத்தில் மட்டும் தமது மற்றும் தமக்கு தேவையானவர்களை மட்டும் வைத்துக்கொண்டு முழுத்தமிழ் மக்களின் ஆணை என்று சொல்வதோடு, ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டுள்ள எந்த அமைப்புடனும் தொடர்வில்லாது, தாமே அமைப்புக்களை உருசவாக்கி அவற்றை அனைத்து அமைப்புக்களின் ஒத்துளைப்புடன் மேற்கொள்கின்றோம் என்று கூறுவது எவ்வகையில் ஜனநாயகம் என்று எனக்குப்புரியவில்லை.

அண்மையில் நடைபெற்றுவரும் நாடுகடந்த தேர்தலில், கட்சிகளுக்குப்பதிலாக அமைப்புக்கள் தம்மை ஈடுபடுத்தியிருந்தால் ஓரளவிற்கேனும் வரவேற்கத்தக்கது. ஆனால் அமைப்புக்கள் சேர்ந்து கலந்துரையாடப்பட்டே இத்தேர்தல் நடைபெற்றது என்பது அப்பட்டமாபன பொய்ச்சாட்டு.
ஊதாரணமாக இத்தாலியில் ஒரு அமைப்பு, இத்தாலி அரசுடன் இணைந்து பல செயற்திட்டங்களை கடந்த பத்துவருடங்களாக மேற்கொண்டு வருகின்றது, அதுமட்டுமல்லாது புலம்பெயர்ந்த தமிழர்களின் நலன்கருதி இலங்கை அரசுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு புலத்தில் தமிழர்களுக்குத்தேவையான ஆவணகுறைபாட்டை பூர்த்தி செய்து வருகின்றதோடு, மேலதிக பல அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதோடு, அவ்வமைப்பில் பதிவிற்குட்பட்ட பல செயற்பாடுகள் இன்றுவரை நடைபெற்று வந்தபோதிலும் அவ்வமைப்பினை எந்த வகையிலும் உத்தியோக பூர்வமாக தொடர்பு கொள்ளாது, எல்லா தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து இத்தேர்தல் நடைபெற்றது என்பது நியாயமான வாக்குமூலமல்ல. இதுபொல எல்லா நாடுகளிலும் இவ்வாறே அமைந்திருக்கும் என்பதில் கடந்த காலத்தில் வெளியிட்ட கனேடிய அன்பரின் ஆக்கம் தெளிவு படுத்தியிருக்கும்.

புலிகளின் தலைவர் அரசியல் அமைப்பை இலங்கை அரசின் சார்பில் உருவாக்கும்போது எல்லா அமைப்புகளுக்கும் அறைகூவல் விடுத்தே அதனை கட்டியமைத்தார் ஆனால் இங்கு நடந்தது என்ன???

இவ்வாறு அமையும் போது அது எவ்வாறு தமிழர்களுக்கு உரிமையினை வழங்கும் என்று நம்ப முடியும். மேலும் இவ்வாறான காரணங்கள் போதும் இத்தேர்தலை நிராகரிப்பதற்கு. எனினும் இலங்கை தேர்தலில் தற்போது, பாராளுமன்ற தேர்தல்முடிவடைந்த பின்னர் எடுக்கப்படவிருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையில் புலத்திலவ் வாழும் இலங்கை தேசியத்தை உடையோருக்கு இவ்வாறான செயற்பாட்டால் பாதிப்பு ஏற்படும் போது இந்றநாடுகடந்த அரசு எத்தகைய நடவடிக்கையினை எடுத்து அவர்களைக்காக்கப்போகின்றது.

தமிழர்களுக்காகவும் புலிகளுக்காகவும் தன்னை ஈடுபடுத்திய கேபி சிறைப்பட்ட போது அவருக்காக வாதாடாத நாடுகடந்த அரசின் முக்கியஸ்தர் திரு. உருத்திரகுமார்,

தமிழர்களின் ஏக பிரதிநிதியாக இராணுவத்திலும் அரசியலிலும் இருந்த புலிகளின் சர்வதேச தடையினை நீக்கமுடியாத திரு உருத்திர குமார் சட்டதரணி,

இன்னும் பல தமிழர்கள் சட்ட சிக்கலில் இருக்கும் போது, அவர்களுக்காக வாதாடாத சட்டத்தரணி திரு உருத்திரகுமார் எப்படி அடிமட்ட தமிழர்களுக்கு நிகழும் குறைகளுக்காக உதவப்போகின்றார். ஆந்தந்ந நாட்டில் தெரிவு செய்யப்பட்ட தேர்வுக்குழுக்களிலும் அங்கம் வகிக்கின்றவர்களே தமது சிக்கல்களை பிறரிடம் சென்று தீர்த்துக்கொள்வோர் எப்படி பிறருடைய தேவைகளை பூர்த்தி செய்யப்போகின்றார்கள்.

ஆழுமை என்பதும் பிணக்குகளைத் தீர்ப்பது என்பதும் கல்வி அறிவில் கிடைப்பதிலும் பார்க்க அனுபவத்தில் கிடைக்கும் அறிவே செயற்திறனுடையது. ஆதாவது நாட்டை நிர்வகிக்கும் முன்னர் ஒருவர் தன்னை நிர்வபகித்துப்பழக்கப்படுத்தவேண்டும் அதன்பின்னர், வீட்டுடை நிர்வகித்துப்பழகவேண்டும், அதன்பின்னர் தன்னுடைய சமூகத்தில் தன்னை ஈடுபடுத்தி பழக்கப்படுத்தப்படவேண்டும். அதன்பின்னர் அமைப்புக்களில் பொறுப்புக்களை நிர்வகிக்கவேண்டும், அதன்பின்னர் இன்னும் பல அறிவினைப் பெற்றபின்னரே நாட்டை ஆழுமை செய்வதில் இறங்க வேண்டும். இதை விட்டு எடுத்த எடுப்பிலேயே நாட்டை உருவாக்கும் பணியில் இறக்கிவிட்டால் அந்த நாட்டின் கதி என்ன வாகும்???

ஒரு அமைப்பிலேயே பல பொறுப்புள்ள விடயங்கள் தொடர்பாக விழங்கிக் கொள்வதற்கே காலங்கள் தேவைப்படுகின்ற போது, உலக அரசியலில் பொறுப்புள்ள விடயங்களை மேற்கொள்ள எஉத்தகைய அனுபவம் வேண்டும் என்று அமைப்பாளர்கள் எண்ணிப்பார்த்ததுண்டா??? ஆமையும் முயலும் கதை தெரியும்தானே என்று சாக்குச் சொல்ல வேண்டாம் இது கதையல்ல நிஜம் இப்படி போனால் முயலுக்கு சினம் வரராமல் என்ன செய்யும். வேல்லும் வெல்லும் பார்ப்பதற்குள் பல யுகங்கள் கடந்துவிடும். குண்மூடித்திறப்பதற்குள் எமது பலமான போராட்டம் சிதறடிக்கப்பட்டு பல மாற்றங்களும் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால் எம்மால் இன்னும் ஒரு அரசை அமைகக்க முடியவில்லை என்றால் அதில் பல பின்னடைவு இருக்கின்றது என்பதனை ஏன் உணர மறுக்கின்றோம் அமைப்பாளர்களே???!!! தொடரும் அருகன்.

இத்தேர்தலில் தம்மை ஈடுபடுத்தும் ஒவ்வொருவேட்பாளரும் தம்முடைய தனித் திறனையும், மக்கள் தொடர்பினையும், குறித்த நாட்டில் அவர்களுக்கு இருக்கும் அந்நாட்டுடனான சட்டங்கள் தொடர்பான ஈடுபாடுட்டினையும், சட்டப்படி செயற்பாட்டில் இருக்கும் அமைப்புக்களுடனான தொடர்புகளிலும், ஏதாவதொன்றிலாவது அங்கத்தவராகவும் இருத்தல் மிக முக்கியமாக ஒரு தகுதியாகக்கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை அரசு தமிழர்களுக்கு தகுந்த உரிமை வழங்கப்படவில்லை என்பதற்காகவே நாம் எமது போராட்டத்தை ஆயதப்போராட்டமாக்கும் அளவிற்கு கடந்த காலங்களில் விஸ்தரித்தமை குறிப்பிடத்தக்கது. அதே தவறினை நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்கள் தம்மின மக்களிடையே மேற்கொள்வார்களாயின் இத்திட்டத்தினால் தமிழர்கள் என்ன பலனை, என்ன உரிமையினை பெற்றுக்கொள்ளப்போகின்றார்கள்?

புலிகளின் தலைவர் கட்டிக்காத்த கூட்டினை “பயம்” என்ற கட்டுக்கோப்பை 5ம் மாதம் 2009ல் இருந்து யாரிடமும் கண்டதாகத்தெரியவில்லை. இத்தனை காலமும் எத்தைனை காரியங்கள் இடம்பெற்றாலும் அது புலிகளின் தலைவரின் பெயரே வெளியில் பிரசன்னமாகிவந்ததும் அவரைத்தவிர வேறு எவருடைய பெயரும் பிரபல்யதமாக வெளிவராததும் அவ்வாறு வெளிவரும் பட்ஷத்தில் அவருடைய ஆயள் குறகிவிடும் என்ற எச்சரிக்கையும் அதனை மீறும்பட்ஷத்தில் காற்றோடு காற்றாக பறந்து போவது அவருடைய பெயர் மட்டுமல்ல அவருடைய உயிரும் என்பதும் யாவருக்கும் தெரிந்த விடயமே. ஆனால் தற்போது புலிகளின் முன்னாள் விழையாட்டுத்துறைப் பொறுப்பாளர், புலிகளின் சர்வதேச இணைப்பாளர், புலிகளின் சட்ட ஆலோசகர் என்று ஆளாளுக்கு கொடிகட்டிப்பறக்கின்றனர். புறப்பதோடு அவர்களுக்கான பதவிப் பெயர்களும் மாற்றமடைந்தே செல்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வேளையில் நாடுகடந்த அரசினை எமது சொந்த நாட்டில் இருக்கும் எந்த மக்களின் விருப்பினையும் கருத்திரல் கொள்ளாது, புலத்தில் இருக்கும் ஒரு சிலரை மட்டும் வைத்துக்கொண்டு, நாடுகடந்த அரசினை அமைப்புகளின் ஒத்துளைப்புடனும் மக்களின் ஒத்துளைப்புடனும் மேற்கொள்கின்றோம் என்பது எத்தைனை தூரம் வரவேற்கக்கூடியது என்று புரியவில்லை.

தேர்தலில் தம்மை ஈடுபடுத்துபவர்கள் யார்? ஆவர்களுக்கு எமது போராட்டத்தைப்பற்றிய அடிப்படை எவ்வளவிற்குத்தெரியும்? ஏமது வரலாறு என்ன? ஏமது இழப்புக்கள் எத்தகையது? இப்படி எத்தைனையோ கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லத்தயாராக இருக்க வேண்டாமா???

30வருடத்திற்கு முற்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப்பற்றிப் பேசுகின்றோமே, அதன் அடித்தளம் எந்தக்கட்சியினுடையது.... அந்த கட்சிகளுடைய பங்களிப்பு தற்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எந்த நிலையில் உள்ளது. வுட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும், நாடுகடந்த அரசினையும், தெளிவுபடுத்தத்தெரியாதவர்களை வைத்து நாடு கடந்த அரசை அமைத்தால் அது நாடுகடத்தப்பட்ட அரசின் கோரிக்கையாக இருக்குமே யொழிய அதனால் மக்களுக்கு எந்த விடிவையும் பெற்றுக்கொடுக்க முடியாது.

புலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது அவர் ஒரு தமிழன் என்றும் பாராமல் அவருக்கு வாக்கை வழங்காது,  30வருடமாக தமிழர்களின் அழிவிற்காக கொலைத்தெழிலில் ஈடுபட்டிருந்த மிஸ்டர் சரத்திற்கு வாக்குகளை வழங்க புலத்தின் தொலைக்காட்சிஊடகங்களும் புலிகளால் கட்டிவைக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு தமிழர்களின் ஒற்றுமையினைக் குலைத்தபோது நாடுகடந்த அரசின் சார்பில் விடப்பட்ட அறிக்கை என்ன???

எல்லா தமிழ் மக்களும் சேர்ந்து திரு சிவாஜிலிங்கத்திற்கு வாக்குகளைப் போட்டிருந்தாலும் அவர் இலங்கை நாட்டில் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது, ஆனால் தமிழர்கள் தம்முடைய ஒற்றுமையினை மகிந்த அரசிநற்கு விழக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். இது ஒருபக்க சிந்தையாக இருந்தாலும், பெரும்பாண்மை தமிழர்களின் வாக்குகள் சிவாஜிலிங்கத்திற்கு விழுந்திருந்தால் சிவாஜிலிங்கத்தின் மௌசு உலகரீதியில் கொடிகட்டிப்பறந்திருக்கும் என்பதனை நாடுகடந்த அரசின் அமைப்பாளர்களும் தற்போது தமிழர்களின் பிரதிநிதி என்று தலைகாட்டும் பல தமிழர்களுக்கும் சொல்லி விழங்கப்படுத்தத் தேவையில்லை. எனவே தான் தமிழன் ஒருவன்         தேர்தலில் நின்றும் அவருக்கு வாக்கைவழங்காத தமிழர்கள் தமிழர் அல்லாத ஒருவரை மதிக்கும் அளவிநற்கு தமிழனை மதிப்பதில்லை என்பது புலனாகின்றது.
ஒவ்வொரு தமிழனும் உரிமையுடன் இதற்கான தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். அது தகுந்த முறையில் இடம்பெற்றால்!!! தமிழர்களின் தேசியம் சுயநிர்ணயம் தனிநாடு போன்ற விடயங்களைப் பேசுகின்ற தமிழ் அரசியல் வாதிகளே இந்த நாடுகடந்த அரசில் மௌனம் சாதிக்கும் போது, மக்கள்மட்டும் ஆணை வழங்கிவருகின்றார்கள் என்ற கருத்தை ஏற்க முடியுமா என்ற வினாவும் எழுகின்றது.

கூட்டமைப்பே தற்போதைய ஏகபிரதிநிதி என்ற பார்வையில் அவர்களுடைய ஒத்துளைப்பு இல்லாது நாடுகடந்த அரசு அமைப்பதென்பது எத்தனை சாத்தியமானது? முன்னால் புலிகளின் பொறுப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருக்கின்றபோதிலும் அரசியல் நன்கு தெரிந்த ஆசான்கள் இருக்கின்றபோதிலும், தகுந்த ஆலொசகர்கள் இருக்கின்ற போதிலும் முட்டைக்குள் முழத்தேங்காயை உடைப்பதென்பது சாத்தியமா???

இலங்கை அரசின் புத்திசாலித்தனத்தையும் பலத்தையும் வெல்ல முடியாத தமிழர்களாகிய நாம், அதனை சாதூர்யமாக வெல்ல முயற்சிக்கும் தமிழர்களின் செயற்பாட்டையும் ஏழனஞ்செய்து, நாம் மட்டுமே புத்திசாலிகள், நாம் செய்வது மட்டுமே அறிவுடைய செயல் என்பது எமது முகத்தில் நாமே கரியைப்பூசுவதாக அமையாதா???

TamilEela Card ஒரு வாகனத்தை ஓட்டுவதற்கே ஒரு தகுதியும் வயதும் தேவை என்கின்ற போது ஒரு நாட்டை ஆழமை செய்வதற்கு, அதற்காகத்தெரியப்படுகின்ற அதிகாரிகள் தமது தகுதியினை நிரூபித்துக்காட்ட வேண்டாமா????

கல்வியில் இலங்கை அரசு வேறுபாட்டினைக்காட்டுகின்றது என்ற காரணமும் எமது போராட்டத்தின் விம்பமாக உள்ளபோது, எத்தனையோ தகுதியுடையோர் இருக்கின்ற போது அவர்களை விடுத்து  தாமாகவே இவர்கள்தான் தகுதியுடையவர்கள் என்று நிர்ணயிப்பது எத்தனைய ஆட்சியை நடத்தப்போகின்றார்கள் என்பதனைக்காட்டவில்லையா???

ஆரம்பத்திலேயே எனது கருத்தினைத் தெரிவித்திருந்தேன்! அதாவது, தமிழீழம் தொடர்பாக அரசை அமைக்கும் முன்பு நாடுகடந்த தமிழீழ அடையாள அட்டை ஒன்றை உருவாக்க வேண்டும், அதுபோலவே தேர்தலில் போட்டியிடுவோர்களும் ஏற்கனவே பதியப்பட்ட அமைப்புக்களில் இருந்து தெரியப்படல் வேண்டும்.  …  தொடரும் – அருகன்

தமிழர்கள் மத்தியில், புலிகளின் அடுத்த பரிமானமே நாடுகடந்த அரசு என்பதனை புகுத்துவதில் பலர் முனைவதும், இணையங்களை பட்டும்படாமலும் ஆக்கிரமிப்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு முக்கிய விடயத்தைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.புலிகளின் தலைவர்  பிரபாகரன்   உயிருடன் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரம் கிடைப்பதற்கு முன்னர் நாடுகடந்த தமிழீழத்தின் பரிநாமத்தை நிலைப்படுத்த அதாவது பலப்படுத்த முடியாவிட்டால், பிரபாகரனிடம் இருந்து உருத்திரகுமாரும் தப்ப முடியாது, கேபியும் தப்பமுடியாது என்பதனால் பிரபாகரனின் ஆணையின் பேரிலேயே நாடுகடந்த அரசை அமைக்க எத்தணிப்பதாக பாசாங்கு காட்டிக்கொள்கின்றனர். ஒருவேளை நாடுகடந்த அரசு பலமாக அமையும் இடத்தில் பிரபாகரன் ஒரு வேளை அப்படியே அதை ஏற்றுக் கொண்டாலும் தாம் தப்பிவிடலாம் மட்டுமல்லாது பாராட்டும் பெறலாம் என்பதில் திடமாக இருக்கின்றனர். பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது திடமாகும் பட்ஷத்தில் தாமே தமது வாழ்வை புலத்திலேயே கடத்திவிடலாம் என்பதே இதன் ஆழ்ந்த நோக்கம்.
இன்னொரு கேள்வி கேட்கவேண்டும், நாடுகடந்த அரசின் அரசவை எந்த மொழியில் சட்டமொழியாகப்பயன்படுத்தப்போகின்றது என்பதனை யாரும் இதுவரை சிந்திக்கவில்லை. அப்படி சிந்தித்திருந்தால் முதலில் வேட்பாளர்கள் தமிழில் உரையாடத்தகுதியுடையவர்களா என்பதனை முக்கிய தகுதியாக்கியிருக்கவேண்டும். ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட விடயமே, அதாவது, மொழிதெரியுமத் என்பதற்காக சிறுவர்களை ஐ.நா விற்கு பேச்சுவார்த்தைக்கு அனுப்பியவர்கள் அல்லவா எமது பெரியோர்கள். ஏத்தனையோ அனுபவசாலிகள், எத்தனையோ அரசியல் வல்லுனர்கள், எத்தனையோ தத்துவவாதிகள், எத்தனையோ அரசியல் வாதிகள் இருக்கின்ற தேசத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களை அனுப்பினார்கள் என்றால் பார்க்க வேண்டியதுதானே!!!
ஆந்த ஆக்கம் வரையப்படுவதற்கு முக்கிய காரணம் குறைகூறுவதோ, அல்லது ஏழனஞ்செய்வதோ அல்ல ஒவ்வொரு அடியும் தமிழர்களின் நிரந்தர விடுதலையை நோக்கி இருக்க வேண்டுமேயொழிய தமிழனை மிதித்து, தமது குடும்ப நலனுக்காகவும் ஜீவனத்தின் பெருமைக்காகவும் அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே!!!
புள்ளிவிபரக்கணிப்புகளை எடுக்கும்போது, ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் விடயத்தை மறுபடியும் மேற்கொள்வதற்கு, வாக்கு அளித்தவர்களின் தொகையில் வீதாசாரத்தை கணிப்பிடலாம். ஆனால், ஒரு விடயத்தையே மேற்கொள்வதற்கு மக்களின் முழுத்தொகையில் வாக்களித்தோரின் வீதாசாரத்தை ஒப்பிட வேண்டுமேயொழிய வாக்களித்தவரின் வீதத்தை வைத்து ஒப்பிடமுடியாது. ஆவ்வாறு ஒப்பிடும் போது அது சர்வதேச ரீதியில் நிராகரிக்கப்படுவதற்கான அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதனை ஏன் எமது அறிவாளிகள் உணரவில்லை. இதில் இருந்து எமக்குத் தெரிய வேண்டிய பலவிடயத்தில் ஒரு விடயம் இந்த நாடுகடந்த அரசின் விளக்கம் தமிழர்கள் மத்தியில் ஒரு தெளிவின்மையினைக்காட்டுகின்றது. எனவே அதனை விளக்க விஸ்தரிப்பிற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அபட்சகர்களுக்கே நாடுகடந்த அரசின் தெளிவு இல்லாத போது, மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும் என்பது எனது முட்டாள்தனமே!!!

புலத்தில் இருக்கும் முழு தமிழர்களில் 16வயதிற்கு மேற்பட்ட ஈழவர்கள் 100வீதம் இருக்கும் பட்சத்தில் 100க்கு 100வீதம் அல்லது ஆகக்குறைந்தது 75வீதமாவது வாக்குகள் வழங்கப்படும் பட்ஷத்தில் மட்டுமே நாடுகடந்த அரசின் அங்கிகாரம் வெற்றி பெற்றதாகவும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் எடுத்துக்கொள்ள வாய்ப்புண்டு. மாறாக, 100வீதத்தில் வாக்களித்தவர்கள் 20வீதமாக இருக்கும் போது அந்த 20 வீதத்தை 100வீதமாகக்கருதுவது சர்வதேசத்தில் இருந்து அத்தேர்தலை புறந்தள்ளுவதற்கு ஏதுவாக அமைந்துவிடாதா??? எனவே இத்தேர்தலில் விளக்கவிரிவு அறிவுடையோரால், பரிசீலிக்கப்படவேண்டும். ஆதன் அணுகுமுறை திறனுடையோரால் ஆழப்படவேண்டும். நாடு கடந்த அரசுவேறு வட்டுக்கோட்டைத்தீர்மானம் வேறு என்பதனை மக்கள் மத்தியில் குழப்பியடித்து இரண்டும் ஒன்றே என்று முட்டாளாக்கி வருகின்றனர் சில புத்திசாலிகள்.
வட்டுக்கோட்டைத்தீர்மானம் என்பது அதனை தற்போது வெளிக்கொணர்ந்த அமைப்பாளர்களே குழம்பிப்போயுள்ளனர்.
அதுபோல் நாடுகடந்த அரசின் அமைப்பாளர்கள் வட்டுக்கோட்டைத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாலேயே நாடுகடந்த அரசை அமைக்கின்றோம் என்று சாக்குப்போக்கு சொல்கின்றனர்… இதன் சரியான விளக்கம் அடுத்த பகுதியில் வரும்…. தொடரும். அருகன்.

Nessun commento:

Posta un commento