domenica 31 luglio 2011

ஊளையிடும் தமிழ் அரசியல் வாதிகளளே!!!

ஊளையிடும் தமிழ் அரசியல் வாதிகளளே!!!

“சாணக்கியம் என்பது, அரசியலின் ஆணிவேர், முற்போக்கென்பது ஆட்சியின் அத்திவாரம்…” – அருகன்

pim2பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஊளையிடுவதை விடுத்து, புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழர்கள் இலங்கைப் பிரஜைகளே என்பதனைக் கருத்தில் கொண்டு அவர்களும் வாக்குப் போடும் உரிமையினையும் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தாலே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருப்பதைவிட கூடுதலாகப்போடவேண்டிய கட்டாயம் அரசிற்கு ஏற்படும் அல்லாவா? மக்கள் தொகையினை வைத்து  பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்க எத்தணிக்கும் அரசின் வழியிலேயே மக்கள் தொகையினை அதிகரித்துக்காட்டி மக்களின் பிரதிநிதிகளை வெளிப்படுத்தலவாமே!

 

எப்போதும் சாகண்கியத்தோடே சிந்திக்க வேண்டும். அரசின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் எதிர் குரல் கொடுப்பதை விடுத்து, சாணக்கியத்தோடே செயற்படுங்கள். ஆரசின் அதிகாரச் அச்செயற்பாட்டிற்கு முக்கியத்துவம் அற்ற விடயங்களை தமிழர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வதனால் ஒன்றும் நிகழப்போவதில்லை.

போர்குற்றம் பற்றி பேசிக் கொண்டு இருக்கின்றோம், அவ்வளவு ஆதாரத்தையும் தமிழர்களுக்கு எதிராக அரசு திருப்பி விடவும் வாய்ப்பிருக்கின்றது… கவனமாக காய்களை நகர்த்த வேண்டும். இது இப்படி ருக்க முன்னாள் தளபதிகளும், அவர்களின் உறவினர்களும், முன்னாள் போராளிகளும் கொடுத்திருக்கும் வாக்குமூலங்கள் இருக்கும் வரை எமது கோர தாண்டவம் ஒன்றும் பலிக்கப்போவதில்லை என்பதனை புரிந்து சாணக்கியமாகச் செயற்பட வேண்டும்.

அரசின் செயற்பாடுகளை  விமர்சிப்பதே எதிர்க்கட்சியின் முக்கிய பணியாக வேண்டும். ஆனால் இலங்கையினைப் பொறுத்தவரையில் ஆழுங்கட்சியின் முக்கிய பங்குதாரராக ஐ.தே.கட்சி செயற்பட்டு வருகின்றது.

தம்மை பிரபல்யப்படுத்துவதற்காக மற்றக்கட்சிகள், நபர்களின்  தேவைய கூக்குரல்களை எமது ஊடகங்களும் தூக்கிப்பிடிக்கின்றன…

எமது சாணக்கியத்தை மற்றவர்கள் விலைகொடுத்து பயன்படுத்தினார்கள் நாமோ அவற்றை கேலிசெய்து இருக்கும் உரிமைகளையும் இழந்து கொண்டு செல்கின்றோம்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் இலங்கையில் வாழும் அனைத்துத்தமிழர்களைப்போல் முழு உரிமையும் உடையவர்களே! அவர்களுக்கும் வாக்கு வழங்குவதற்கான உரித்து உண்டு என்பதனை வெளிக்காட்டி தமது பிரதி நிதிகளைத் தெரிவு செய்ய வேண்டிய கடப்பாடு அவர்களுக்கும் உண்டு என்பதனை முன்நிறுத்தி தமிழர்களின் தொகையினை அதிகரித்து சட்டத்தின் வழியில் போராடுங்கள். – அருகன்.  

Nessun commento:

Posta un commento