lunedì 25 luglio 2011

“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ, அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…” – அருகன்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சாம்…

sellva1“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…”

சபாஸ்… தமிழரசுக்கட்சி அமோக வெற்றி… கேட்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கின்றது. அதிகாரத்தைக்கையில் எடுக்கும் முன் சற்றுச் சிந்திக்க வேண்டியப ல விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றது என்பதனை ஐயா சம்மந்தன் அவர்களும் மற்றும் தமிழ் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது முன்னைய எழுத்துக்களில் அழுத்தம் திருத்தமாகச் சொன்ன விடயங்களைக் கூட மேலோட்டமாகச் செய்வதில் சிரமங்காட்டுவோர் எப்படி தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கப்போகின்றார்கள் என்று புரியவில்லை.

எப்போது, “ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது உயர்மட்ட அரசியல் வாதிக்கு மண்டை வலிக்கின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…” எனக்கு இப்போது வயிறு வலிக்கிறது யாராவது அரசியல் வாதிகளுக்கு பாதங்களாவது எரிகின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.

கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சி வெண்றது ஒன்றும் புதினமல்லவே!!! தமிழரசுக்கட்சி தோத்திருந்தால்தான் புதினம். அதுதான் கடந்த காலங்களில் உயர் தேர்தல்களில் நடந்தேறியதே!!!

தமிழர்களின் பிரதேசங்களில் தமிழர்கள் வெல்வது ஒன்றும் புதினமல்லவே!!! அதை ஊடகங்கள் அறிவிக்கும் போது மிகவும் அழுத்தமாகச் சொல்லும் போது எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. சிங்கள பிரதேசத்தில் தமிழரசுக்கட்சி போட்டியிட்டு வெண்றிருந்தாலோ அல்லது அமோக வெற்றி பெற்றிருந்தாலோ அது அதிசயம், பெருமை…

இது தொடர்பாக முன்னைய தேர்தல்களிலும் அடித்துக்கூறியிருக்கின்றேன்.  ஆனால் அதற்கு ஒரு தமிழனுக்குத் துணிவு வேண்டும் அந்தத்துணிவு சிங்களவனுக்கு அதிகமாகவே இருக்கின்றது. அதனால்தான் அந்த சிங்களவனை எமது தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகள்  செயற்படுத்துகின்றார்கள். இல்லையென்றால் பிரித்தானியாவுக்கு மாவீரர் திணத்தை முன்னிட்டு ஒரு சிங்களவனை பிரதமவிருந்தினராக அழைத்திருப்பார்களா? இல்லை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முப்பது வருடமாகத்தமிழர்களைக் கொண்ற ஒருவருக்கு ஆதரவு கொடுக்கத் தூண்டியிருப்பார்களா?...  …

சரி நடந்ததை விடுவோம்…

இப்போது உள்ள நிலையில் தமிழ் தலைவர்கள் சீர்தூக்கிப்பார்க்க வேண்டிய விடயம் தமக்குக்கிடைக்கின்ற பதவிகளை வைத்து இத்தனைகாலமும் என்ன வகையான சேவைகளையும் உரிமைகளையும் தமிழர்களுக்குக் கொடுத்துள்ளார்கள் என்ற பட்டியலைத் தயாரிப்பதோடு, இனிகிடைக்கப்போகும் பதவிகளைவைத்து என்ன உரிமைகளைப் பெற்றுத்தரப்போகிழன்றார்கள் என்ற பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இலங்கை அரசு போடும் பட்டிவலினைக் குறைகூறும் பட்டியலே பல தமிழ்த்தலைவர்களிடம் காணப்படுகின்றதே ஒழிய அவர்கள் தமிழர்களுக்குச் செய்த சேவைகளின் பட்டியல் சுருங்கிக் கொண்டே போகின்றது.

இனிவரும் காலங்களில் ஊடகங்களும் மக்களும் தலைவர்களுக்கு “ஜால்ரா” அடிப்பதை விட்டு கேள்வி கேட்டுப்பழகினாலே உரிமைகள் இன்னும் சிலா காலத்தில் கிடைத்துவிடும். அது தனிநாடாகக்கூட மலரலாம்.

ஏதோ தமிழர்களின் கட்சி இன்றுதான் புதிதாக முழைத்தது போன்றும், இத்தனைகாலமும் இந்தத்தலைவர்கள் வேறு உலகத்தில் இருந்து குதித்தவர்கள் போதும் துள்ளலிடுவது எனக்கு வேடிக்கையாக இருக்கின்றது. காரணம், பெரிய தேர்தல்களில் கோட்டை விட்டு இப்போது சின்னத் தேர்தல்களைக் கைப்பற்றி விட்டோம் என்று மார்தட்டுகின்றார்கள்.

ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல்களைக் கோட்டை விட்டார்கள், பின்னர் பாராளுமன்றத் தேர்தல்களைக் கோட்டை விட்டார்கள் இப்போது இதில் மட்டும் வெண்று இலங்கையின் ஆட்சியையே பிடித்துவிட்டது போல் குதூகலிப்பது அறிவுள்ளவர்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும்.

ஆரம்ப காலத்தில் (1976) ஒருமுறை எதிர்க்கட்சியாகக்கூட இருந்த தமிழ்க்கட்சி இப்போது அமைச்சுப்பதவிகளே இல்லாத கேவலத்தை முன்னிட்டு எந்த தமிழ் அரசியல் வாதிகளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தற்போதைய சூழலில் ஜனாதிபதித் தேர்தலைமட்டும் கோட்டை விடாதிருந்தால் இன்று தமிழ்க்கட்சியே எதிர்க்கட்சியாக அமைந்திருக்கும் என்பதழைனக்கூட ஊகிக்காது, உள்ள தமிழர்களையும் பிரித்து பிரித்து புதிய கட்சிகளை வழர்த்து தமிழர்களின் வாக்குகளைப் சிதறடித்தது யார்கூற்றம்?

தமிழரசுக்கட்சி அதிக இடத்தைப்பிடித்துள்ளது… மிக்க மகிழ்ச்சி வரப்போகின்ற காலத்தில் எத்தனை மக்களின் மனதில் இந்த அதிகாரிகள் இடத்தைப்பிடிக்கப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் புலிகள் இயக்கத்தால் அதிவேகமாக அழிக்கப்பட்ட மற்றைய இயக்கங்கள் இன்றும் இயங்கிவருகின்ற போதிலும், புலிகள்  வளர்ந்த வேகத்திலும் பார்க்க புலிகள் இயக்கம் அழிந்து சிதைந்த வேகம் மிக மிக அதிகம். அதனிலும் வேகம் மக்கள் மனதில் இருந்த எண்ணங்களும், நம்பிக்கையும் சிதைந்ததே!!!

அதுபோலவே இப்போது உள்ள ஆரவாரங்கள் மிக விரைவில் கலைந்து போகாத வண்ணம் தமது சேவைகளை வழங்க முன்வர வேண்டும் என்று தமிழர்கள் சார்பில் வேண்டிக்கொள்ளும் அன்பன் அருகன். 

Nessun commento:

Posta un commento